Wednesday, July 22, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 13

எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருந்தான் என்று கார்த்திக்கு தெரியவில்லை. ஒரு வழியாக தன் கண்களை துடைத்து விட்டு "ஜனனி,அம்மா அப்பாவுக்கு, மோகனுக்கு நாம அம்மா அப்பா ஆக போறோம்கிற இந்த விஷயத்தை சொல்லணும்" என்று சொல்ல ஜனனி சரிஎன்று தலை அசைத்தாள். 

கடந்த ரெண்டு மாதங்களாய் நடந்த ஷூட்டிங் காரணமாக நேகாவும் ஜனனியுடன் நெருக்கமாகி விட அவளுக்கும் விஷயம் தெரியவேண்டும் என்று சொன்னாள். பிறகு அவனுக்கு அவள் சாப்பாடு போட, சாப்பிட பிடிக்காமல் அவன் சோற்றை பிசைந்து கொண்டுஇருந்தான், இரண்டு வாய் வைத்த அவனால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. 

கை கழுவி விட்டு அவளையும் சாப்பிட சொல்லி விட்டு தங்களது படுக்கை அறைக்கு வந்தான். கார்த்திக்கு இன்று நடந்த சம்பவங்கள்இன்னும் நம்ப முடியவில்லை. ஜனனிக்கு தன் மேல் கோபம் இருக்கும் என்று எதிர்பார்த்தது தான். ஆனால் அதுவே கருவை கலைக்கும்அளவுக்கு போகும் என்று அவன் எதிர் பார்கவில்லை. 

அவன் அப்படியே உறங்கி விட கொஞ்ச நேரத்தில் தனது சாப்பாடை முடித்து வந்த ஜனனி குழந்தை போல் தன் கால்களை சுருக்கி கொண்டு அவன் தூங்குவதை கண் கொட்டாமல் பார்த்தாள். 

அவன் சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்த்தாள். கார்த்திக் சொன்னது போல் அந்த ஒரு தவறை தவிர அவன் எதுவும்பண்ணவில்லை என்பது உண்மை தான். அவன் செய்த தவற்றில் தனக்கும் பங்கு உண்டு என்பதை அறிந்த ஜனனி, ஆனால் அந்த தவறேஇன்று குழந்தையாக வளர்ந்து நிற்கும் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.

அவன் அருகில் படுத்து கொண்டு அவன் சுருண்ட முடிகளை தன் விரல்களால் சுருட்டு விட்டு கொண்டே இருந்த அவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.

காலை எழுந்த உடன் கார்த்திக், ஜனனியின் அம்மா அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்ல, அவர்களுக்கு ஒரே சந்தோஷம்.ஜனனியிடம் பேச வேண்டும் என்று சொல்ல போனை கொடுத்தான். 

அம்மா அப்பா வாழ்த்து தெரிவிக்க ஜனனியும் சந்தோசமாக பதிலளிக்க வேண்டியதாக இருந்தது. பூரணியோ "ஏண்டி என்னமோ கல்யாணமே பிடிக்காதுன்னு சொல்லி கிட்டு இருந்த இப்ப பாத்தியா, நீ அம்மாவாஆக போற, ஒரு பொண்ணோட வாழ்க்கைல மறக்க முடியாத தருணம் இது. சந்தோசமா இரு. எதுக்கும் கவலை படதே, அலட்டிக்காதே, இப்போ மாப்ளை கிட்ட கொடு" என்று சொல்ல "சரி அம்மா" என்று தலை அசைத்து கார்த்திக்கிடம் "இந்தாங்க உங்க மாமியார், அதான் உங்களோட அக்கா, உங்க கிட்ட பேசணுமாம்", என்று போனை கொடுக்க, கார்த்திக் பேசினான்.

பூரணி ஏதோ பல விஷயங்களை சொல்ல சரி என்று தலை ஆட்டிய கார்த்திக் மீண்டும் பிறகு அழைப்பதாக சொல்லி விட்டு போனை வைத்தான்.



எட்டு மணிக்கு மோகன் வர அவனுக்கு விபரம் தெரிந்து ரொம்ப சந்தோஷம் ஆனான். "ஹாய் என்னால நம்பவே முடியலை. நான் மாமாஆக போறேன்" என்று குதிக்க, விபரம் அறிந்த வேலைக்காரர்கள், தோட்டக்காரன், அவன் இளம் மனைவி, செக்யூரிட்டி என்ற அனைவரும்அந்த சந்தோசத்தில் கலந்து கொண்டனர். அன்று அனைவருக்கும் கார்த்திக் வீட்டில் விருந்து கொடுக்க பட்டது.

யவன ராணி படத்தின்அடுத்த schedule வெளிநாடுகளில் இருப்பதால், அடுத்த வாரம் கிரீஸ், அரேபியா, ஆப்ரிக்கா நாடுகளுக்கு ஒரு மாதம்சுற்று பயணம் என்று முடிவு செய்யபட்டது. பூவழகி வேடம் சம்பந்தபட்ட வேலைகள் முடிந்து விட்டதால், ஜனனிக்கு ஷூட்டிங் கிடையாதுஎன்று தெரிவிக்க பட, ஜனனிக்கு ஓய்வு அளிக்க பட்டது.

இது ஒரு மாதம் சுற்று பயணம் என்பதால் கார்த்திக் ஜனனியை எப்படி விட்டு விட்டு போவதென்று யோசித்தான். அவன் யோசிப்பதைஅறிந்த ஜனனி "கவலைபட வேண்டாம்" என்றும் , "அம்மா அப்பாவை கோவைல இருந்து வர சொல்லலாம்" என்றும் யோசனை சொல்ல,கார்த்திக்கு மன நிம்மதி பரவ அந்த ஏற்பாட்டுக்கு ஒத்து கொண்டான். 

பூரணிசதானந்தன் தம்பதி இருவரிடம் போனில் பேசி விஷயத்தை சொல்ல, அவர்களும் சந்தோசமாக வருவதாக சொன்னார்கள். 

பட பிடிப்பு குழுவினர் வெளி நாடு சொல்ல, அதை தொடர்ந்த ஒரு மாதம் எப்படி போனதே என்று ஜனனிக்கு தெரியவில்லை. 

ஜனனிக்கு கடந்த ஒரு மாதமாக சரியாக சாப்பிடுவதில்லை. மேலும் வாந்தி அதிகமாக இருந்ததால் மிகவும் இளைத்து விட்டாள்.தினமும் கார்த்திக் ஜனனியிடம் குறைந்தது மூன்று தடவை - காலை, மதியம், இரவு பேசி விடுவது வழக்கம். 

ஜனனிக்கு கார்த்திக் கூப்பிடுவது பிடித்திருந்தாலும் "எதுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவ கூப்பிட்டா போதாதா? மூணு தடவகூப்பிடனுமா?" என்று கேட்க கார்த்திக் பதில் சொல்லாமல் மழுப்பி விடுவான். 

வெளி நாட்டு பயணத்தில் இருந்து திரும்பிய கார்த்திக் படபிடிப்பு குழுவினர்க்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் பாண்டியன் கார்த்திக்கை அழைத்திருந்தார். இதுவரை 500 கோடிக்கு மேல் செலவழிந்து விட்டதாகவும்அவர்களின் பட்ஜெட் முடிந்து விட்டது என்று சொல்ல, கார்த்திக்கு அதிர்ச்சி இன்னும் கிட்டதட்ட 50 கோடி அளவுக்கு டப்பிங், விளம்பரம்,துணை நடிகர் நடிகைகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். இன்னும்இரண்டு நாட்களில் சென்னை வருவதாக அவர் சொல்லி இருந்ததால், அவரிடம் மேலும் விபரங்களை பேசி கொள்ளலாம் என்று முடிவுசெய்து இருந்தான்.


வீடு திரும்பிய கார்த்திக் தன்னிடம் சரியாக பேசாததால் ஜனனிக்கு என்ன காரணம் புரியாமல் குழம்பினாள். அதற்குள் மோகன் வீட்டுக்குவர அவனிடம் "என்ன அண்ணா அவர் ஏதோ கவலைல இருக்க மாதிரி தெரியுது, ஷூட்டிங்ல எதாவது பிரச்சனையா?" என்று கேட்க, "ஷூட்டிங்ல பிரச்னைனா சமாளிச்சு விடலாம். ஆனா ஷூட்டிங்கே பிரச்சனைனா என்ன பண்றது?" என்று வேதனையோடு சொல்ல, அவளுக்கு புரியவில்லை. "அண்ணா கொஞ்சம் விபரமா சொல்லுங்க" என்று கேட்க, நடந்த விஷயத்தை மோகன் சொல்ல ஜனனி யோசனையில் ஆழ்ந்தாள்.

சரி எப்படியும் பாண்டியன் இன்னும் இரண்டு நாட்களில் வர இருப்பதால் ஒரு வேளை ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று நினைத்துகார்த்திக்கிடம் "இங்க பாருங்க கார்த்திக் 500 கோடி செலவளிச்ச அவங்க இனிமே படத்தை கை விட வாய்ப்பில்ல. அதால கவலை பட வேண்டாம்" என்று ஆறுதல் சொன்னாள்.

சொன்னது போல் சிங்கப்பூர் பாண்டியன் ரெண்டாவது நாள் சென்னை வர, கன்னிமரா ஹோட்டலில் டிஸ்கஷன் நடந்தது. உலகளாவியகுளோபல் recession வந்ததால் வார்னர் பிரதர்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு பணம் புரட்ட முடியவில்லை. யவனராணி படத்தில் ஏற்கனவே 500கோடி செலவு செய்ததால் இன்னும் பணம் கொடுக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால்அதிகபட்சம் 25 கோடி தர ஏற்பாடுசெய்வதாகவும், அதற்கு ஒரு வாரம் பொறுக்க வேண்டும் என்று சொல்ல கார்த்திக் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

இன்னும் 25 கோடிக்கு என்ன செய்வது என்று விழிக்க, மோகன் பாண்டியனிடம் பேச ஆரம்பித்தான். "சார் நீங்க இந்த படத்ல இருந்துஎன்ன லாபம் எதிர்பார்குரிங்க" என்று கேட்க"எனக்கு 20 % லாபம்கிடைத்தால்போதும்" என்று சொல்ல

"சரி சார் நாங்க எப்படியாவது வெளியில மீதி 25 கோடியை புரட்ட முயற்சி செய்றோம். அடுத்த வாரம் நீங்க திரும்பி வரும் போது மீதிவிஷயங்களை பேசி கொள்ளலாம்" என்று சொல்ல, "ரி" என்று சம்மதம் தெரிவித்த பாண்டியன் இரவு ப்ளைட்டில் சிங்கப்பூர்திரும்பினார்.

வீட்டுக்கு வந்த கார்த்திக் ஜனனியிடம் இந்த விஷயம் சொல்ல, அவளோ கார்த்திக்கிடம் "மோகன் அண்ணா சொன்ன மாதிரி வெளியிலவேணா ட்ரை பண்ணலாம்" என்று சொன்னாள். 

குறுக்கே புகுந்து பேசிய மோகன் "கட்டாயம் நாம வெளியில கடன் வாங்கலாம். ஆனா அதுக்கு சொத்து ஏதாவது கேப்பாங்க, கூட நல்லாதெரிஞ்சவர் சூரிட்டி போட வேண்டும். நம்ம கிட்ட இருக்கிற சொத்து மதிப்பு 30 கோடி தான் வரும், அதை வச்சு நாம கடன் கேட்டா ஒரு 20கோடி கிடைக்கும். மீதி 5 கோடி எப்படி சமாளிக்கிறது" என்று கேட்க, அதற்கு கார்த்திக் "சொத்தை அடமானம் வைக்க வேண்டாம்" என்றுமறுத்தான்.




ஜனனிக்கு புரியவில்லை. "கார்த்திக் இதை நாம அடமானம் தான வைக்க போறோம். விக்கலையே. படம் ரிலீஸ் ஆனா உடனேமீட்டுடலாம்" என்று சொல்ல, "இல்லை ஜானு இந்த சொத்து உனக்கும் குழந்தைக்கும் தான். நான் அத அடமானம் வைக்க மாட்டேன்"என்று சொல்ல, "என்ன புரியாம குழந்தை மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க. நான் சொன்னா நீங்க கட்டாயம் கேட்பிங்கல்ல" என்று கேட்க அதற்கு பதில் சொல்லாமல் கார்த்திக் அவளை பார்க்க, அவளோ மோகனிடம்

"அண்ணா அவர் கிட்ட கையெழுத்து வாங்க வேண்டிய வேலைகளை செய்ங்க, நான் நடிகர் அக்ரம் வீட்டுக்கு போயிட்டு வரேன்" சொல்லி விட்டு கார்த்திக்கிடம், "நீங்களும் என்னோட வாங்க" என்று அழைத்து கொண்டு கிளம்பினாள்.

அங்கே அக்ரம் வீட்டில் அவர் மனைவி வரவேற்று ஜனனியை பார்த்து உடல் நலம் விசாரிக்க, பேசி விட்டு உள்ளே அழைத்து செல்ல,ஜனனி கார்த்திக்குடன் அக்ரமை சந்தித்தாள். நடந்த எல்லா விஷயமும் சொல்ல, "கவலைபட வேண்டாம் எனக்கு பைனான்சியர் மதுரை அறிவு நல்லா தெரியும். மோகன் சொன்ன மாதிரி 20 கோடி கிடைக்கும், மீதி அஞ்சு கோடி என்னோட சம்பளம் தான், அதை இப்போ கொடுக்க வேண்டாம். படம் ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில கொடுத்தா போதும். நான் கார்த்திக்கு சூரிட்டி சைன் பண்ணுறேன்" என்றுசொல்ல கார்த்திக் நன்றியோடு அவர் கையை பிடித்து கண்களில் ஒற்றி கொண்டு "சார் உங்களோட இந்த உதவியை நான் மறக்கமாட்டேன்", என்று சொன்னான். 

"நீங்க நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்ல உங்களோட மனைவிக்கு" என்று அக்ரம் சொல்ல, ஜனனியை திரும்பி ஒரு பெருமிதத்தோடு பார்க்க அவள் அவனை அன்பு பொங்க பார்த்தாள்

அகரம் மனைவி சொன்னதற்காக சிறுது நேரம் தங்கி விட்டு ஜனனி, கார்த்திக் விடை பெற்றனர். மோகன் நடந்ததை கேட்டு பெரு மகிழ்ச்சிஅடைய, அடுத்த வாரம் வரும் பாண்டியனுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

இதற்குள் நேகா விபரம் தெரிந்து ஜனனியை பார்க்க வந்தாள். அவர்கள் இருவரும் சிரித்து பேசி கொண்டு இருக்க, அந்த சிரிப்பொலிகேட்டு கார்த்திக்கும் உள்ளே வந்தான். என்ன என்பது போல் பார்க்க, "ஒண்ணுமில்லை, ஜனனி பாலக்காடு பொண்ணு, அவள்கிட்டபாலக்காடு மக்களோட சிறப்பு என்னனு கேட்டேன். அதுக்கு அவள் பதில் கேட்டு சிரிச்சுகிட்டிருக்கேன்". 

ஜனனி இடைமறித்து கார்த்திக்கிடம் "இப்போ நீங்க சொல்லுங்க பார்க்கலாம், எங்க பாலக்காடு மக்களோட 3 speciality என்னன்னுதெரியுமா? கார்த்திக் சிரித்து கொண்டே "எனக்கு மூணு இல்லை நாலு சிறப்புகள் தெரியும்" என்று சொல்ல, ஆச்சர்யத்துடன்" சரி முதல்லஅந்த மூணு விஷயம் சொல்லுங்க, அப்புறம் நாலாவது என்னன்னு நான் கேக்குறேன்" என்று சொன்னாள்.


"இந்தா நோட் பண்ணிக்கோ. ஒன்னு சங்கீதம், ரெண்டாவது படிப்பு, மூன்றாவது சமையல்"

"எக்ஸ்செலேன்ட்" என்று ஜனனி கை தட்ட, "நாலாவது எனக்கு உன்னை பார்த்த பின்னால தான் தெரிஞ்சுது". 

"என்ன" என்பது போல ஜனனி பார்க்க, "அழகு தான்" என்று சொல்ல, ஜனனி வெட்கத்தில் தலை குனிய, "யப்பா ரொமான்ச பாரு"ன்னுநேகா கிண்டல் செய்ய, அந்த இடத்தில் சிரிப்பொலி பரவியது

நேகா திரும்பி செல்ல, சிறிது நேரத்தில் கார்த்திக் செல்போன் அலற ஆரம்பித்தது. வழக்கமான ரிங்டோன் இல்லாமல் அது பாட்டாகஒலிக்க, அந்த பாட்டை கூர்ந்து கவனித்தாள் ஜனனி. "மன்னிக்கமாட்டாயா" என்று ஆரம்பித்த அந்த பாடலை கேட்டு "இது என்னபாட்டு" என்று கேட்க, "நேத்து காலைல FM ல யேசுதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு எவர்கிரீன் மெலடி பாடல்கள் போட்டார்கள். இந்தபாட்டு எனக்கு பிடிச்சிருந்தது". 

"ஓஹோ, பாட்டு சேவ் பண்ணி இருக்கிங்களா?"

"ஆமா". 

"எனக்கு ப்ளூ டூத் ல அனுப்ப முடியுமா?" 

"சரி" என்று சொல்லி கொண்டே போனை எடுக்க மறு முனையில் பாண்டியன், "கார்த்திக் நாளைக்கு காலைல நான் வரேன் இந்த தடவ உங்க வீட்ல சந்திக்கலாம், பகல் 12 மணிக்கு" என்று சொல்ல, "அப்பிடின்னா நீங்க எங்க வீட்ல லஞ்ச் கட்டாயம் சாப்பிடனும்னு" என்று கார்த்திக் சொல்ல "சரி" என்று சொல்லி விட்டு பாண்டியன் போனை வைத்தார்.

அடுத்த நாள் நடந்த பேச்சு வார்த்தையில் பாண்டியனுடன் லீ என்ற டைரக்டர் கலந்து கொள்ள, புதிய அக்ரிமென்ட் போடப்பட்டது. அதன்படி வரும் லாபத்தில் முதல் 100 கோடி வார்னர் பிரதர்ஸ் சேர வேண்டும் என்றும், மீதி வரும் லாபத்தில் 75 % வார்னர் பிரதர்ஸ் எடுத்து கொள்வது, மீதி 25 % கார்த்திக் எடுத்து கொள்வது என்று முடிவு செய்யப்பட அனைவரும் கையெழுத்து இட்டனர்.

முதலில் கார்த்திக்கு 10 % என்று முடிவு செய்ய, கையில் இருந்து 20 கோடி பணம் போட்டு சொந்த பணத்தில் ரிஸ்க் எடுப்பதால் அதிகம் கொடுக்க வேண்டும் என்று மோகன் வாதிட, இறுதியில் 25 % என்று முடிவு செய்ய பட்டதில் கார்த்திக் சந்தோஷம் அடைந்தான். 

அடுத்த அறையில் இருந்த ஜனனி செய்தி தெரிந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தாள். அவளுக்கு தெரியும் இந்த படம் ஓடவில்லை என்றால் கார்த்திக் திரைப் பட வாழ்க்கை முடிந்து விடும் என்று.


விஷயம் அறிந்த அக்ரம் மகிழ்ச்சி தெரிவித்து, மீதி பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். இன்னும் மூன்று மாத வேலை - டப்பிங், இசை கோர்ப்பு, பின்னணி இசை, விளம்பரங்கள் - பாக்கி இருப்பதால், மே மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸ் தேதி நிர்ணயிக்க பட்டது. 

இப்போது நடப்பதோ ஏழாவது மாதம், ஜனனிக்கு நடக்கும் போது மூச்சு வாங்குவதை தவிர்க்க முடியவில்லை. கார்த்திக் அடிக்கடி நடக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவள் கேட்கவில்லை. வளை காப்பு கோவையில் வைக்கலாம் என்று பூரணி சொன்னபோது வேண்டாம் என்று மறுத்து சென்னையிலேயே வைத்து கொள்ளலாம் என்று சொன்னான். 

சென்னையில் இருக்கும் வசதிகளை மனதில் கொண்டு பூரணி, சதானந்தன் ஒத்து கொள்ள ஒரு நல்ல முகூர்த்த நாளில் வளை காப்பும் அரங்கேறியது. வளை காப்புக்கு வந்த நண்பர்கள் மற்றும் பாலக்காடை உறவினர்கள் வந்து கார்த்திக் ஜனனியை கிண்டல் செய்ய ஜனனியின் ஏற்கனவே சிவந்த முகம் இன்னும் சிகப்பேரியது. 

தாய்மையில் பூரித்த அவள் அழகில் மயங்கி போனான் கார்த்திக். என்ன செய்வது அவள் தன்னை தொடகூட விடவில்லையே என்று நெஞ்சுருகி போனான். அடிக்கடி அவனை பார்த்து வெட்க சிரிப்பை உதிர்த்த ஜனனியை கண்டு பித்து பிடித்தவன் போல் ஆனான். 

இதை ஓரக் கண்ணால் கவனித்த மோகன் கார்த்திக்கை பார்த்து "என்னடா மேடம் உன்னை பார்த்து பார்த்து சிரிக்கிறாங்க" என்று கிண்டல் செய்ய, "ஆமாம் என் பொழப்பு சிரிப்பா தான் சிரிக்குது" என்று வெறுப்புடன் பதில் சொன்னான். உண்மையிலே ஜனனிக்கு கார்த்திக் தன் கணவன் ஆனபோது இருந்ததை விட, இப்போ அப்பா ஆக போகும் போது பொறுப்பு அதிகமாக ஆகி விட்டதையும், பிறக்க போகும் குழந்தைக்காக எல்லா பொருள்களையும் ஜஸ்ட் பார்ன் கடையிருந்து ஏற்கனவே வாங்கி விட்டதையும் அறிவாள். 

வளை காப்பு முடிந்த உடன் எல்லோரும் கிளம்ப, ஜனனி அம்மா அப்பா மட்டும் தங்கி இருக்க, ஜனனி மெதுவாக தனது படுக்கை அறைக்கு வந்தாள். அவள் காலையில் இருந்து சரியாக சாப்பிடாமல் முகம் வாடி இருந்ததை கவனித்த கார்த்திக், வேலைக்கார அம்மாவிடம் சொல்லி ஜனனிக்கு தயிர் சாதமும் மாவடும் கொண்டு வர சொல்லி படுக்கை அறைக்கு வந்தான். 

அவனை கண்ட ஜனனிக்கு மனம் துள்ளி ஆட்டம் போட, அவனோடு இன்னும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. முகத்தை பாவமாக வைத்து கொண்டு "கார்த்திக் உங்களால் ஏழு மாசமா கவனிச்சு கிட்டு இருக்கேன். நீங்க சொன்ன வார்த்தையை காப்பாத்தி கிட்டு இருக்குக்கிங்க. உங்களை வேற நான் பட்டினி போட்டுட்டேன். சாரி. அதால நாளைல இருந்து உங்களுக்கு ஒரு surprise கிப்ட் உண்டு".


கார்த்திக்கு முகம் மகிழ்ச்சியில் மலர தொடங்கியது. என்னவோ நல்லது நடக்க போகிறது என்று அவன் மனம் தாளம் போட தொடங்கியது. "என்ன ஜனனி என்ன அந்த ஸ்பெஷல் கிப்ட் கொஞ்சம் இப்போ சொல்ல கூடாதா?" என்று கேட்க, உங்களுக்கு பிடிச்சதுதான் என்று சொல்ல, கார்த்திக் "ஒரு வேளை ஜனனி மனம் மாறி விட்டால் நல்லதாக இருக்கும்" என்று தோன்றியது."கட்டாயம் ஜனனியால் என்னை விட்டு நீண்ட நாள் இருக்க முடியாது என்று நினைத்தேன். அந்த நாள் வந்து விட்டது" என்று குதூகலம் அடைந்தான்.

பலமுறை அவளுக்கு நன்றி சொல்லி விட்டு தனது நூலக அறைக்கு சென்று புத்தக குறிப்புகளை புரட்ட சென்ற அவனுக்கு, அடுத்த நாள் ஏப்ரல் முதல் நாள் என்பதை கவனிக்க மறந்து விட்டான்.

அடுத்த நாள் எழுந்த முதல் கார்த்திக்கு ஒரே சந்தோஷம். விசில் அடித்து கொண்டே பல் விளக்கி குளித்து வந்தவனை கண்ட ஜனனிக்கு சிரிப்பு தாங்கவில்லை. வாயை மூடி கொண்டு சிரித்த அவளுக்கு ஒரு புறம் கார்த்திக்கை நினைத்து பாவமாக இருந்தது. சரி இன்று ஏப்ரல் முதல் தேதிஅதனால் கொஞ்சம் விளையாடி பார்ப்பதில் தப்பில்லை என்று முடிவு செய்தாள். காலை உணவு சாப்பிடும் போது அவள் பார்த்து அவன் அடிக்கடி புன்னகை செய்ய, அவள் அவன் பார்ப்பதை தவிர்க்க தலையை குனிந்து கொண்டாள். 

காலை உணவை முடித்து திரும்பவும் அறைக்குள் திரும்பி ஒரு கழித்து சாய்ந்து உட்கார, கார்த்திக் அவளை நெருங்கி தொண்டையை செரும, ஜனனி கார்த்திக்கை பார்த்து "என்ன சார் குட்டி போட்ட பூனை மாதிரி திரிஞ்சுகிட்டு இருக்கீங்க" என்று கேட்க, கார்த்திக் அவளிடம் "ஏதோ ஒரு ஸ்பெஷல் கிப்ட் இருக்கிறதா சொன்னியே அது என்ன?" என்று கேட்க "கிப்டா, நானா, எப்போ சொன்னேன்"
"நீதானே நேத்து வளை காப்பு முடிஞ்சா உடனே சொல்றேன்னு சொன்ன", அப்போதான் நினைவுக்கு வந்தது போல் நடித்த ஜனனி,"அதுவா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு, முட்டாள் தினம் இல்லையா அதினால தான்", என்று சொல்லி விட்டு சிரிக்க, கார்த்திக்கு கோபம் தலைக்கு ஏறியது. 

"என்ன என்னைய பார்த்த கிறுக்கன் மாதிரி தெரியுதா? உனக்கு என்னோட நிலைய பார்த்து ரொம்ப தான் நக்கலா போச்சு. இதுக்கு மேல உன் கிட்ட பேச நான் என்ன இளிச்ச வாயனா?" என்று குரலை உயர்த்தி கத்த ஜனனிக்கு ஒன்னும் புரியவில்லை. "இல்லை கார்த்திக் சும்மா கிண்டலுக்கு தான் அப்படி சொன்னேன்" என்று அவனை அருகில் வந்து சமாதானபடுத்த முயல, கார்த்திக் கோபமாகவிலகினான். 

"கர்ப்ப காலத்தில பொண்ணுங்களுக்கு கணவனோட அருகாமை தேவைப்படும்னு நான் எங்கயோ படிச்சு இருக்கேன். உனக்கு அந்த ஆசை கொஞ்சம் கூட இல்லையா?. அது மாதிரி எனக்கும் என்னோட குழந்தை அசையிரத தொட்டு அனுபவிக்கனும்னு ஆசை. ஒவ்வொரு தடவ உன்கிட்ட வரும்போது எனக்கு நம்ம குழந்தைய தொட்டு பார்க்கணும், உன் வயிற்றில வளர்ற குழந்தையோட அசைவுகள உணரனும்னு எனக்கு ஆசை உண்டு, ஆனா நீ எங்க மறுத்துடுவியோன்னு நான் இது வரைக்கும் அந்த ஆசைய என் மனசில குழி தோண்டி புதைச்சு வச்சு இருந்தேன்"

"ஏதோ gift தர போறேன்னு சொன்னப்ப நேத்து நீ சொன்னப்ப என் மனசில திரும்பஅந்த ஆசை வந்தது. ஒரு வேளை நீ மாறிட்டியோன்னு நான் தப்பா நினைச்சுட்டேன். ஆனாநீ மாறலை. இனிமேயும் நீ மாறுவன்னு எனக்கு நம்பிக்கை போய்டுச்சு. என் மேல உனக்கு கோபம் இருந்தாலும், ஏதோ ஒரு ஓரத்ல என் மேல காதல் இருக்கும்னு நினைச்சேன். அது பொய்ன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு".

"என்ன கிண்டல் செஞ்சு, மனச புண்படுதுரதுல இருக்கிற ஆர்வம், உனக்கு என் மனச புரிசுக்கிரதுள்ள இல்லாம போச்சு. ".


"சாரி கார்த்திக், என்ன மன்னிச்சுடுங்க, நீங்க கட்டாயம் நம்ம குழந்தையோட அசைவை தொட்டு பார்க்கலாம், உங்களுக்கு இல்லாத உரிமையா" என்று கெஞ்சி, அவனை அவள் நிமிர்ந்து பார்க்க கோபத்தில் சிவந்திருரிந்த அவன் கண்கள் அவளுக்கு பல சேதிகளை சொன்னது.

அறையை விட்டு வெளியேறிய அவனை "கார்த்திக் கார்த்திக்" என்று அழைத்து கொண்டு அவன் பின் ஜனனி வர, அதை கண்டு கொள்ளாமல் வெளியேறி தன் பென்ஸ் காரை வேகமாக கிளப்பி விட்டு வெளியேறினான். 

வாசலுக்கு வந்த ஜனனி கண்களில் அந்த கார் கிளப்பிய தூசி மட்டும் கண்ணை மறைக்க, கண்கள் கலங்க நெடு நேரம் நின்று கொண்டுரிந்தாள்.
 
மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி, 
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை. 
நீ தரும் சோதனை நான் படும் வேதனை, போதும், போதும். 
மன்னிக்க மாட்டாயா? (மன்னிக்க மாட்டாயா)
 
என் விழிகள் தீபங்களாய் உனக்கென ஏற்றி வைத்தேன். 
பொன்னழகு தேவி உந்தன் தரிசனம் பார்க்க வந்தேன். (என் விழிகள்)
 
உன்னடிமை உன் அருளை பெற ஒரு வழி இல்லையா? 
உன்னருகில் வாழ எந்தன் நிழலுக்கு இடம் இல்லையா? (மன்னிக்க மாட்டாயா)
 
என் மனதில் நாள் முழுதும் இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய் ஒலிப்பதும் உன் மூச்சல்லவா (என் மனதில்)

என் இதயம் உன் உடமை உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால் உனக்கது வலிக்காதா (மன்னிக்க மாட்டாயா)





No comments:

Post a Comment