Tuesday, July 21, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 11

கார்த்திக், ஜனனி இருவரும் இரவு உணவை முடித்து விட்டு மொட்டை மாடிக்கு சென்று பேசி கொண்டிருந்தனர். "கார்த்திக் நேத்து ஒரு திட்டம் சொன்னிங்களே அது என்ன அச்சு" என்று கேட்க, 

"அது சர்ப்ரைசா இருக்கட்டும். நீ ஏற்கனவே சொன்ன மாதிரி அடுத்த வீதில இருக்குற மேபிளவர் அபார்ட்மென்ட்ல ஒரு 3BHK பிளாட் இருக்கு. இப்போதான் கட்டி ஆறு மாசம் ஆகுது, சொந்தக்காரர் சென்னைல தான் இருக்கார். நேத்து சாய்ந்தரம் போய் மோகன் பாத்துட்டு வந்துட்டான். இந்த பாரு MMS அனுப்பி இருக்கான். போட்டோ பாரு" என்று அவன் செல்போனில் காட்ட, 

"வீடு நல்லாதான் இருக்கு. இப்போ உங்க பிளான் என்ன?".

"நாளைக்கு காலைல ஒரு எட்டு மணிக்கு முன்னால அம்மா அப்பாவையும் கூட்டிகிட்டு பாத்துட்டு வந்துடலாம். சென்னைக்கு போன உடனே விலை பேசி முடிச்சுட்டா, அவங்க கோவை திரும்பி வரப்ப மோகனை கூட அனுப்பி ரெஜிஸ்ட்ரேசன் பண்ணி முடிச்சுடலாம்". 

"

சரி விலை எவ்வளவு வரும்
."

"ஒரு 40 - 45 லட்சம் வரும். இப்போ இருக்கிற இந்த வீட்டை வித்து பணத்தை அவங்களோட பெயர்ல பாங்க்ல போட்டுடலாம். நாமளும் ஒரு பத்து லட்சம் பேங்க் அக்கௌன்ட்ல போட்டு அக்கா கைல ATM கார்டு குடுத்திட்டா போதும். அவங்களோட மாத செலவு மற்றும் மருத்துவ செலவு போன்ற எமெர்ஜென்சி செலவுகளுக்கு உதவியாக இருக்கும். நாமளும் மாதம் ஒரு முறை வந்து அவங்க ரெண்டு பேர் கூடயும் ஒரு ரெண்டு நாள் தங்கி நலம் விசாரிச்சுட்டு போகலாம்" என்று சொல்ல, ஜனனிக்கு சொல்ல முடியாத அளவு சந்தோஷம் வந்தது.

"நமக்கு அவங்கள விட்டா யாரு இருக்கா, பாவம் அவங்களுக்கும் நம்மளை விட்டா ஆள் இல்லை" என்று கார்த்திக் வருத்தப்பட அவன் மனம் அவளுக்கு புரிந்தது. அதற்குள் கீழே இருந்து பூரணி "ஜனனி" என்று குரல் கொடுக்க, "இதோ அம்மா வந்துட்டேன்" என்று சொல்லியபடி துள்ளி குதித்து ஓடி சென்றாள்.

"என்னடி அவர்கிட்ட பேசிகிட்டே இருக்க, அவரை முதல்ல உள்ளே கூப்பிடு. இன்னைக்கு உங்க முதல் இரவு. நல்லநேரம் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்குது" என்று சொல்ல "என்னம்மா இதுக்கு எல்லாமா நல்ல நேரம் பாப்பாங்க" என்று சிரித்து கொண்டே கேட்க, "நீ சின்ன பொண்ணு, உனக்கு இந்த விபரம் புரியாது" என்றுசொல்ல, "சரி அம்மா நீங்க போய் படுத்துகங்க" என்று சொல்லி விட்டு. "வாங்க மாஸ்டர். வாங்க முதலிரவு கொண்டாடலாம்" என்று கிண்டலுடன் அழைத்து முதல் இரவு அறைக்கு அழைத்து சென்றாள்."ஜானு நாம முதல்ல சில விஷயங்கள தெளிவா பேசலாம்". 


ஜனனி அவனை பார்த்து "பரவா இல்லையே இப்பவாது தோணுச்சே?" என்று கேட்க அவள் வார்த்தையில் இருந்த பரிகாசத்தைஉணர்ந்தான்.

"நீ சொல்றது சரி தான் ஜானு. நான் பண்ணுனது மன்னிக்க முடியாத தப்பு. சொல்ல போனா நீ என்னை மன்னிப்பேன்னு எனக்குநம்பிக்கையே இல்லை. எது உன்னை மாற்றியது. கொஞ்சம் சொல்ல முடியுமா?" என்று அவள் முகத்தை பார்த்து ஆவலுடன் கேட்க,ஜனனி பேச ஆரம்பித்தாள். 

"கார்த்திக் கிட்ட தட்ட அஞ்சரை வருஷங்களுக்கு முன்னால் நடந்த அந்த சம்பவங்கள் எனக்கு ஞாபகம் வருது. நீங்க பூச்சி மருந்தைகுடித்து தற் கொலை செய்து கொள்ள முயற்சி செய்தீர்களே அந்த தினம் ஞாபகம் இருக்கா?" என்று கேட்க, கார்த்திக் முகம் பாறையாகமாறியது. 

"எப்படி மறக்க முடியும்? என் வாழ்க்கையை புரட்டி போட்ட நாள் ஆயிற்றே?" 

"அந்த நாள் தான் என் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாள். எனக்கு 15 வயது அப்போது" என்று சொல்ல, 
உடனேகார்த்திக்

"ஆமா ஆனால் உனக்கு அப்போதே அந்த வயதை மீறிய முதிர்ச்சியும், அறிவும் இருந்தன". 

தலை அசைத்து ஆமோதித்து தொடர்ந்தாள் ஜனனி. "நீங்க கதறி அழுததும், ஹாஸ்பிடலில் இருந்து திரும்பி வந்து பலநாட்கள்யாரிடமும் பேசாமல் வெறித்து பார்த்து கொண்டிருந்ததும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. சில நேரங்களில் ஓடிவந்துஉங்களை கட்டி அணைத்து உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் அடிக்கடி என்னை நீங்க 'வயசுசுக்குமீறிய பேச்சு பேசுற' என்று கண்டித்து இருந்ததால் உங்களோடு பேச பயமாக இருந்தது".

" நான் ஸ்கூல் முடிச்சு காலேஜ் போனேன். காலேஜ் பஸ் ஸ்டாப்ல இருந்த ரோட்டோர ரோமியோக்கள் எனக்கு காதல் கடிதம் குடுக்கமுயற்சி செய்தனர். அப்போதெல்லாம் என் மனதில் நீங்க தான் எனக்கு கணவரா வர போறவர். அதனால யார் கிட்டயும் என் மனதை பறிகொடுக்க மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன்". 

"நீங்க திரை உலகத்தில் பெரிய டைரக்டர் ஆக உருவெடுத்த உடன் உங்களை பத்தி பேப்பர் மற்றும் பத்திரிகைகளில் வந்த செய்திகளைகட் செய்து என்னோட நோட் புக் கில் ஒட்டி வைத்திருந்தேன். கொஞ்ச கொஞ்சமாக தமிழ் திரை உலகத்தின் பெர்ய டைரக்டர் களில்ஒருவராக மாறியவுடன் எனக்கு பயம் வந்தது, ஒரு வேளை நீங்க யாரையாவது கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிடுவிங்கன்னு.நிச்சயம் சினிமா உலகத்தில நுழைகிற யாருமே அந்த மாய உலகத்தில மயங்கி போய்டுவாங்கன்னு எனக்கு தெரிஞ்ச விஷயம்தான்."

"உங்களை நான் பல வருஷம் பார்க்கலை, ஆனால் உங்களை தவிர யாரையும் எனக்கு ஏறெடுத்து பார்க்க விருப்பம் இல்லை. இந்தநேரத்ல நீங்க சென்னைக்கு கூப்பிட்ட உடன் நான் ஓடோடி வந்துட்டேன். நீங்க ஒரு வார்த்தை பேசுனா எனக்கு அன்னைக்கு முழுக்கசொல்ல முடியாத சந்தோசம்தான். நீங்க ஒரு முறை சிரிச்சாலே எனக்கு தனி உற்சாகம் தான். "

"மோகன் அண்ணா உங்களோட ஆபீஸ் அறைல உட்கார சொன்னபோது, உங்களோட பக்கத்திலே இருக்க போறேங்கிற சந்தோசம்எனக்கு இருந்தது. மொத்ததில நீங்க எனக்கு தாலி கட்டல, ஆனா உங்களோட மனைவி நான் என்ற நினைப்பில வாழ்ந்து கொண்டுஇருந்தேன்". 

"பார்ட்டி முடிஞ்ச இரவு கூட நீங்க குடி மயக்கத்தில என் கிட்ட தவறா நடக்க முயற்சி பண்ணுனப்ப உங்களை நான் வேண்டாம்னுசொல்லலை. ஆனா எனக்கு முதல் இரவுன்னா சில கனவுகள் இருந்தன. எனக்கு நிறைய ஆசைகள். உங்கள கல்யாணம்பண்ணிக்கணும். முதல் இரவு அன்று நீங்க என்னிடம் மென்மையாக நடந்துக்கணும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுஆரம்பிக்கணும். நான் என்னை உங்க கிட்ட என்னை ஒப்படைக்கனும்னு ஏகப்பட்ட ஆசைகள்."

" ஆனா நீங்க குடி வெறில மிருகமா இருந்திங்க. அப்போ எப்படி என்னோட உணர்வுகள் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்?. நான் சத்தம்போட்டு கூப்பிட்டு இருந்த வாசல்ல இருக்குற செக்யூரிட்டி, தோட்டத்தில் அவுட் ஹவுஸ்ல இருக்கிற வேலைக்காரன் எல்லாரும்வந்திருப்பாங்க நாம் ஏன் பண்ணலை தெரியுமா?"



கண்கள்
கலங்கிஇருந்தகார்த்திக் "ஏன்" என்றுகேட்க, 
"நாந்தான் உங்களை என்னோட புருஷனா நினைசிட்டேனே. இவ்வளவு கடுமையாக என்னை ஆட் கொண்ட நீங்க, என்னை பார்த்து I Love you ன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் என்னை கொடுத்துருப்பேன்" என்று சொல்லி அழ, கார்த்திக் தன் முகத்தைஅடித்து கொண்டு கதறி அழுதான். 

ஒரு வழியாக தன்னை தேற்றி கொண்டு 'நான் எந்த அளவு கொடுமைக்காரனா இருந்தால் பூவை விட மென்மையான மனம் உள்ளஜனனி மனதை இந்த அளவுக்கு புண் படுத்தி இருக்க முடியும்'. அவனால் ஜனனியின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது". ஜனனிகைகளை பிடித்து அவன் ஆறுதல் படுத்த, வறண்ட சிரிப்பை உதிர்த்த ஜனனி," இதை விட கொடுமை என்னன்னா, காலைல என்ன கட்டிபுடிச்சு முத்தம் கொடுத்து நேகான்னு சொன்னிங்களே? எனக்கு எப்படி இருந்துருக்கும்."
"இப்போ கூட உங்கள நான் மன்னிச்சு கல்யாணாம் பண்ணினதே,    உங்கள பழி வாங்கனும்னு தான்".

"எக்காரணத்த முன்னிட்டும் இனிமே என்னை நீங்க தொட கூடாது, எல்லார் கண்ணுக்கும் நான் உங்களோட மனைவி. ஒரு மனைவியாஎன்ன என்ன கடமைகள் இருக்கோ நான் அதை பண்ணுவேன் , படுக்கை அறை தவிர. இதுக்கெல்லாம் ஒத்துகிட்டா நான் உங்களோடசென்னை வருவேன். இல்லேன்னா நான் இங்கயே இருந்து கொள்வேன். என் அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணா". 

"இதுக்கு நீ என்னை கல்யாணம் பண்ணிக்கமா இருக்கலாமே". 

"ஏன் என்னை எச்சி படுத்திட்டு வேற யாரவது பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாத்திங்களா. நான் விட மாட்டேன். எந்தஅளவுக்கு உங்க மேல நான் காதலோட இருந்தேனோ அந்த அளவுக்கு இப்போ உங்க மேல வெறுப்போட இருக்கேன். இப்போ நான்சொன்ன இந்த விஷயத்தை வெளியே சொன்னிங்கன்னா என்னை உயிரோட பார்க்க முடியாது"

கார்த்திக் கண்களில் இருந்து வந்த கண்ணீர் கன்னத்தில் தேங்கி நின்றது. அவன் செய்தது தவறு தான். ஆனால் அதற்கு இந்த அளவுகடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்கவில்லை.

"ஜானு நான் செய்தது பெரிய மன்னிக்க முடியாத தவறா இருக்கலாம். ஆனா அதுக்கு பரிகாரம் இல்லையா. தூக்கு தண்டனைகுற்றவாளிக்கு கூட வாய்ப்பு கொடுத்து தான் கடைசியில தீர்மானம் செய்யிராங்க, நீ என்னோட தரப்ப ஒரு தடவ கூட கேக்கலையே.நேகா என்னை தூண்டி விட்டதால, ஒரு வேளை நீ என்னை விட்டு போய்டுவியோ அப்படிங்கற பயம் தான் என்னை அந்த தப்பு செய்யதூண்டியது."

"குடி மயக்கத்தில நான் நேகா பெயர சொன்னேன். எல்லாம் என் தப்பு தான், இதுக்கெல்லாம் என்னை நீ பளார்னு அறைஞ்சுஇருக்கலாம்",

"ஆனா நீ இப்போ பண்றது, என்னை உயிரோட வச்சு பொதைச்ச மாதிரி இருக்கு. இனிமே நான் நடை பிணம்தான்". 

"முதல்ல காதலுக்கு மதிப்பு தெரியாத பெண்ணை காதலிச்சேன், ஆனா இப்போ என்னை உயிருக்கு உயிரா காதலிச்ச பெண்ணோட நல்லமனசை இழந்து நிக்கிறேன்." ஜனனிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

பிறகு படுக்கையில் அவன் அப்படியே உட்கார்ந்துஇருக்க, அவளும் அவன் அருகில் படுக்க இருவருக்கும் சிறிய இடைவெளிஇருந்தாலும் இனி சேர முடியாத அளவுக்கு பெரிய இடைவெளியாக அவனுக்கு தெரிந்தது. 

இனி வரும் நாட்கள் இன்பமாக இருக்க போவதில்லை என்று அவன் மனம் சொல்லியது.






No comments:

Post a Comment