Thursday, July 23, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 15

மோகன் காரை ஓட்ட அவன் அருகில் இருந்த கார்த்திக்கு மனம் பதறியது. வேலைக்காரி சொன்னது பாதிதான் என்றாலும், ஜனனிக்கு என்ன நடந்திருக்கும் என்று அவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அவன் அடிக்கடி செல்லும் திருவேற்காடு மாரியம்மன் நினைவுதான் அவனுக்கு வந்தது. மோகனிடம் கொஞ்சம் வேகமாக ஓட்ட சொல்ல, அவன் மனநிலை அறிந்த மோகனும் காரின் வேகத்தை கூட்டினான். 

வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கை பதட்டம் தொற்றி கொண்டது. வண்டியை மோகன் நிறுத்தும் வரையில் பொறுக்காமல் காரின் கதவை திறந்து கொண்டு ஓட அவன் அவசரத்தை புரிந்த மோகனும் காரை நிறுத்தி அவனுக்கு வழி விட்டான். உள்ளே அவர்களது படுக்கை அறையில் படுத்திருந்த ஜனனியை பார்த்த உடன், அவன் மனதில் நிம்மதி பரவியது. அவனை பார்த்த ஜனனி முகத்தில் சந்தோஷ புன்னகை. 

அருகில் இருந்த டாக்டர் ஹேமாவதியை கவனிக்காமல், "

ஜனனி என்ன ஆச்சுமா? தங்கம்மா பேசுனப்போ நீ பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டதா சொன்னாங்க. அடி எதாவது பட்டுதா, குழந்தைக்கு ஒன்னும் ஆகலையே"
 என்று கவலையுடன் கேட்க, அருகில் இருந்த டாக்டர் "என்ன கார்த்திக் இப்படிதொடர்ச்சியா கேள்வி கேட்டா உங்க மனைவி என்ன பேசுவாங்க. அவங்க கொஞ்சம் அதிர்ச்சில இருக்காங்க. நான் பதில் சொல்லுறேன்" என்று சொல்லி விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த அக்கறையை கவனித்த கார்த்திக் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து டாக்டர் பேசுவதை கவனித்தான். 

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஜனனி பாத்ரூம் போன போது அங்கே கீழ கொட்டி இருந்த தண்ணீரையும், கீழ விழுந்து கிடந்த சோப்பையும் சரியா கவனிக்கவில்லை. தெரியாம கால் வச்ச உடனே சோப்பு அவ காலை சருக்கிடுச்சு. எங்க கீழ விழுந்தா வயித்தில இருக்கிறகுழந்தைய பாதிக்குமோ அப்படிங்கிற பதட்டத்துல தன இடது கையை கீழே வைக்க மணி கட்டுக்கு அருகில் ஒரு சிறிய எலும்பு முறிவு, கால் பிரண்டதுனால பாதத்திலையும் அடி பட்ருக்கு. நல்ல வேளை பெரிய அடி ஒன்னும் படலை, குழந்தைக்கு ஒன்னும் ஆகலை"

"இந்த காயத்துக்கு என்னால heavy ஆண்டி பயொடிக்ஸ் கொடுக்க முடியாது, அப்படி கொடுத்தா குழந்தைய பாதிக்கும். இப்போதைக்குPOP கட்டு போட்டுருக்கேன், கொஞ்சம் அசையாம இருந்தா ஒரு வாரத்ல அவங்களால எழுந்து நடக்க முடியும் அது வரைக்கும் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கும்" என்று சொல்ல, கார்த்திக் நிம்மதி பெருமூச்சு விட்டான். 

டாக்டர் "நான் வேணா நர்ஸ் அரேஞ் பண்ணி தரட்டுமா?" என்று கேட்க, "தேவை இல்லை டாக்டர் நான் பாத்துக்கிறேன். உதவிக்கு தான் இங்கே தங்கம்மா இருக்காங்களே" என்று சொன்னான். 

"சரி நான் கிளம்புறேன்" என்று டாக்டர் விடைபெற மோகன் டாக்டர் பீஸ் கொடுத்து அனுப்பினான்.

கார்த்திக் ஜனனி அமர்ந்திருந்த கட்டிலில் அமர்ந்து "என்னடா ஆச்சு?" என்று கேட்க, ஜனனி கண் கலங்கி "ஒரு வேளை குழந்தைக்கு எதாவது ஆகி இருந்தா?"என்று கேட்க, "அதான் ஒன்னும் ஆகலைல. வருத்த படாதே" என்று சொல்லி விட்டு தங்கம்மாவை பார்த்து"நீங்க கொஞ்சம் பக்கத்ல இருந்து பாத்துக்க மாட்டிங்களா" என்று சத்தம் போட, 

"கார்த்திக் அவங்கள ஒன்னும் சொல்லாதிங்க. நான் சோப்பை சரியாய் கவனிக்கல. அதுஎன்னோட தவறுதான்" என்று சொல்ல, அவள் கையை பிடித்து தன இரண்டு கரங்களுக்கு இடையில் வைத்து கொண்டு "சாரிடா கண்ணம்மா" என்றான்.

அருகில் இருந்து எல்லாவற்றையும் கவனித்த மோகன் "அப்பாடா தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சு", என்று நிம்மதி பெரு மூச்சு விட்டான். 

"கார்த்திக் நம்ம வேலை எல்லாம் முடிஞ்சுது. நாளைக்கு trailer போட சொல்லியாச்சு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் மொழிகளில் எல்லாமே சாட்டிலைட் மூலமா டிஜிட்டல் பிரிண்ட் ஒளி பரப்ப போறோம். ஒரே நேரத்ல மே 5 தேதி உலக அளவுல ரிலீஸ் தான்"என்று சந்தோசமா சொல்லி விட்டு, "நீ தங்கச்சிய பாத்துக்க, அம்மா ஜனனி ரொம்ப அலையாம ரெஸ்ட் எடு" என்று சொல்ல, ஜனனி "சரி அண்ணா இவர் என் கூட இருந்தா போதும்" என்று பதில் அளிக்க, மோகன் விடை பெற்றான்.

தங்கம்மாவை "நீங்க வீட்டு வேலைபாருங்க. நான் ஜனனியை பார்த்து கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு 5 நிமிடத்தில் கார்த்திக் இரவு உடைக்கு மாறி அவள் அருகில் வந்து அமர்ந்தான். 

அவள் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க "ஜானு என்ன அப்பிடி பாக்கிற"

"இந்த எட்டு மாசத்ல இப்படி நீங்க என் கூட அமர்ந்து ரிலாக்ஸாபேசுறது இது தான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்" என்று சொல்ல அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையை கண்டு தலை குனிந்தான். 

அவனை கண்டு பரிதாபபட்ட ஜனனி, "நீங்களும் என்னதான் பண்ணுவிங்க யவன ராணி ப்ராஜெக்ட் உங்களோட நேரம் எல்லாத்தையும் எடுத்துகிச்சு. உங்க நேரமே உங்க கைல இல்லைங்கறபோது, நீங்க எப்படி என் கூட நிறைய நேரம் செலவழிக்க முடியும்" என்று சமாதானம் கூறினாள்.

தங்கம்மா வழக்கம் போல் ஏழு மணிக்கு கிளம்ப, அதுவரை ஜனனியுடன் பேசி கொண்டுறிந்த கார்த்திக், "நீ டிவி பாக்கிறியா" என்று கேட்க, 

"எனக்கு விருப்பம் இல்லை. கொஞ்சம் பாத் ரூம் போகணும், என்னை கொஞ்சம் தூக்க முடியுமா" என்று கேட்க, அவளுக்கு எழுந்து செல்ல உதவியாக தன் இரண்டு கைகளையும் அவள் தோளுக்கு அடியில் கொடுத்து தூக்க முயற்சி செய்தான். கால் வலி அதிகமாக இருக்க துடித்தாள் ஜனனி.


என்ன செய்வதென்று யோசித்த கார்த்திக் "ஜானு உனக்கு ஒன் பாத் ரூம் போகனுமா இல்லை" என்று ஆரம்பிக்க "எனக்கு ஒன் பாத் ரூம் தான் போகணும்"அப்படின்னா கட்டிலுக்கு கீழ bed pan இருக்கு அத வேணா உனக்கு எடுத்து பெட்ல வைக்கட்டுமா" என்று கேட்க 

"அய்யோ அதல்லாம் நீங்க பண்ண கூடாது. தங்கம்மா இல்லேன்னா, நர்ஸ் யாராவது பண்ணனும்"என்று சொல்ல, 

"ஆபத்துக்கு பாவம் இல்லை, நீ சும்மா படு, எனக்கு உடம்பு சரியில்லைனா நீ பாத்துக்க மாட்டியா" என்று அவளை வலு கட்டாயமாக உட்கார வைத்து, கீழே இருந்த அந்த பெட் பேனை எடுத்து வைத்தான். ஜனனி சொல்ல முடியாத அளவுக்கு துக்கம் தொண்டை அடைத்தது. 

"கார்த்திக் ஏன் இதை எல்லாம் செய்ய வேண்டும்" என்று மனம் பொருமினாள். கார்த்திக்கோ அவளை கண்டு கொள்ளாமல் பாத்ரூம் சென்று bed pan ட்ரேயை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு பெட்டுக்கு அடியில் வைத்தான்.

அவனையே பார்த்து ஜனனி அவனை அருகில் அழைக்க கார்த்திக் அவள் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்து அவள் தலையை "தடவி என்னடா எதாவது வேணுமா" என்று கனிவாக கேட்க, பதில் சொல்லாமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். 

இரவு உணவு தங்கம்மா ஏற்கனவே செய்து வைத்து போயிருந்தாள். அதை அவளுக்கு கொடுக்க கையில் அடிபட்டு இருந்ததால் ஜனனியால் சரியாக சாப்பிட முடியாததை அறிந்த கார்த்திக் அவனே ஊட்டி விட, ஜனனி நெகிழ்ந்து போனாள். 

அவள் அருகிலே அமர்ந்திருந்த கார்த்திக் அவள் என்ன கேட்டாலும் உடனே கொடுத்து வந்தான். இரவு அவளுக்கு மருந்து கொடுத்து அவள் உறங்கிய பின், கீழே பாயை விரித்து உறங்கினான். 

காலை சீக்கிரமே எழுந்து பிரிட்ஜில் இருந்த இட்லி மாவை எடுத்து இட்லி ஊற்றி வைத்து, சட்னி சாம்பார் ரெடி செய்தான். வலி அதிகமாக இருந்ததால் இரவு சரியாக உறங்காத ஜனனி காலை எட்டு மணி அளவில் சாம்பார் வாசனை மூக்கை துளைக்க எழுந்தாள். 

அவள் எழுந்ததை கண்ட கார்த்திக் அவள் அருகே ஓடி வந்து "நீ ஒன்னும் இறங்க வேண்டாம், நான் பேஸ்ட், பிரஷ், கப், பக்கெட் கொண்டு வரேன். நீ பல் விளக்கி முகம் கழுவி ரெடியாக இரு" என்று சொல்ல, 

"என்னங்க சாம்பார் வாசனை வருதே, தங்கம்மா வந்தாச்சா" என்று கேட்க 

"அவ எங்க எட்டு மணிக்கு வந்துருக்கா, எல்லாம் சார் சமையல் தான்"என்று காலரை உயர்த்தி பெருமையாக சொன்னான். 

அவள் ஆச்சர்யத்துடன் அவனை பார்க்க "என்ன சந்தேகமா இருக்கா. எனக்கு தான் சின்ன வயசில இருந்து சொந்தமா சமையல் செஞ்சு பழக்கமாச்சே" என்று சொல்ல, ஜனனி அவன் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தாள்.


அவள் பல் விளக்கி ரெடி ஆக, இட்லி உடன் சூடான சாம்பார் ஊற்றி அவளுக்கு ஊட்டி விட அதை சாப்பிட்ட அவள் அசந்து போனாள். 

"என்னங்க இவ்வளவு சூப்பரா இருக்கு. எப்படி?" என்று ஆச்சர்யத்துடன் கேட்க, "இதல்லாம் என் ரத்தத்தில ஊறினது" என்று சிரித்து கொண்டே பதில் சொன்னான்.

யோசனையில் ஆழ்ந்த ஜனனியை பார்த்து என்ன என்று கேட்க "எங்க அம்மா அப்பாவை நாம திரும்ப அழைச்சா என்ன"

"ச்சே ச்சே கூடாது. புனித யாத்திரை போயிருக்காங்க. வரும் போது வரட்டும். ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா" என்று கேட்க, 

அவன் கண்களில் தன் கண்களை கலக்க விட்ட ஜனனி "என் அம்மாவை விட நல்ல பாத்துக்கிரிங்க" என்று கண்கள் பனிக்க சொன்னாள்.

தொடர்ந்த ஏழு நாட்களும் எப்படி போனது என்றே ஜனனிக்கு தெரியவில்லை. இப்போது அவளால் மெல்ல எழுந்து கார்த்திக் உதவியுடன் பாத்ரூம் செல்ல முடிந்தது. 

திரும்ப வந்த டாக்டர் ஹேமாவதி இன்னும் இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொல்ல, வட இந்திய சுற்றுலா சென்ற சதானந்தன் தம்பதி திரும்பி வந்தனர். பூரணி ஜனனியை பார்த்து அதிர்ச்சி அடைய, கார்த்திக் நடந்த விஷயத்தை சொல்லி சமாதான படுத்தினான்.

யவன ராணி படம் வெளியிட வேண்டிய நாளுக்கு முதல் நாள் இரவு preview ஷோ விற்கு வந்திருந்த தமிழ் திரை உலக ஜாம்பவான்கள் கார்த்திக்கை கட்டி அணைத்து "இந்த படம் உலக அளவு சாதனை செய்யும். தமிழன் பெருமை எங்கும் பரவும்" என்று பெருமை பட்டனர். 

அவன் குருநாதர் முனி ரத்னமோ ஒரு படி மேல் சென்று "இந்த படம் வெள்ளி விழா கொண்டாட வில்லை என்றால் தான் இனி படம் டைரக்ட் செய்வதையே நிறுத்தி விடுவதாக" சொல்ல கார்த்திக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தான். ஜனனியும் வந்திருக்க, அவளை கண்ட நேகா நலம் விசாரித்தாள்.

வீடு திரும்ப இரவு 12 மணியை தாண்டி விட, அனைவரும் உறங்க சென்ற போது மணி 1 ஆகி விட்டது. 

மே ஐந்தாம் தேதி காலை ஐந்து அளவில் "அய்யோ அம்மா" என்று ஜனனி கத்தும் ஓசை கேட்டு கார்த்திக் முழித்து "என்ன செய்து ஜானு?"என்று கேட்க, "எனக்கு வயித்து வலி அதிகமா இருக்கு. தாங்க முடியலை" என்று அரற்ற ஆரம்பித்தாள். 

பூரணியும் அடுத்த அறையில் இருந்து வர, கார்த்திக் டாக்டருக்கு போன் செய்தான். ஹேமாவதியும் உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய சொல்ல, எல்லாரும் காரில் கிளம்பினர்.




டாக்டர் ஜனனியை லேபர் வார்டுக்கு அழைத்து செல்ல இரண்டு மணி நேரம் ஆகியும் டாக்டர் வெளி வரவில்லை. நர்ஸ் வந்து கார்த்திக் மற்றும் பூரணியை "டாக்டர் வர சொன்னார்" அழைக்க, டாக்டரை சந்திக்க வார்டுக்கு சென்றனர். 

உள்ளே பாதி மயங்கிய நிலையில் ஜனனி இருக்க, டாக்டர் மெல்லிய குரலில் "நாங்க நார்மல் டெலிவரி தான் முயற்சி பண்றோம். ஆனா குழந்தை கொஞ்சம் ஜனனி வயித்துக்குள்ள காம்ப்ளிகேட் ஆக இருக்கு, நாங்க தாய் சேய் ரெண்டு பேரையும் காப்பாத்த முயற்சி பண்றோம் ஒரு வேளை யாராவது ஒருத்தர் தான் காப்பாத்த முடியும்னா..."என்று டாக்டர் நிறுத்த கார்த்திக்கு புரிந்து போனது, 

"நீங்க ஜனனி உயிரை காப்பாத்துங்க டாக்டர் அதுவே எனக்கு போதும்" என்று சொல்லி விட்டு, குரல் உடைய தனது முகத்தை திருப்பி கொண்டான். பாதி மயக்கத்தில் இருந்த ஜனனி காதில் அந்த வார்த்தைகள் விழ, அவள் கண்கள் கலங்கின 

"கவலைபடாதிங்க கார்த்திக், நாங்க ரெண்டு பேரையும் காப்பாத்த முயற்சி பண்றோம்"என்று டாக்டர் சொல்லி விட்டு அங்கே இருந்த declaration form-ல் கையெழுத்து போட சொன்னார். கூட வந்த paediatric டாக்டர் உடன்திரும்ப லேபர் வார்டுக்குள் நுழைந்தார். 

சரியாக 9 மணிக்கு குழந்தை அழு குரல் கேட்க, சந்தோசபடுவதற்கு பதில் பதட்டமானான் கார்த்திக், ஜனனிக்கு என்ன ஆயிருக்குமோ என்று பரிதவிக்க, நர்ஸ் குழந்தையுடன் வெளிய வர தொடர்ந்து டாக்டர் வந்தார். 

"கார்த்திக் Congrats. உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு, தாயும் சேயும் நலம்" என்று சொல்ல, அந்த இரண்டாவது வார்த்தை அவன் காதில் விழுந்தவுடன் சுய நினைவுக்கு வந்தான் கார்த்திக். "தேங்க்ஸ் டாக்டர். இதை நான் என் வாழ் நாள் முழுக்க மறக்க மாட்டேன்"என்று சொல்லி "நான் ஜானுவை பார்க்கலாமா?" என்று கேட்க, இப்போ தான் சிசரியன் ஆபரேஷன் நடந்து இருக்கு. ஒரு மணி நேரத்ல ரூமுக்கு மாத்திடுவோம் நீங்க அங்கே பாத்துக்கலாம்" என்று சொல்ல கார்த்திக் அப்போது தான் குழந்தை நியாபகம் வந்தது. 

பூரணி கையில் சிரித்து கொண்டிருந்த அந்த ஆண் குழந்தையை கண்டு வியந்து போனான். அப்படியே ஜனனியை உரிச்சு வைத்து இருந்த குழந்தைக்கு தலையில் ஜனனியை போலவே அடர்த்தியான முடி. 

"தம்பி குழந்தை அப்படியே ஜனனி மாதிரி இல்லை" என்று கேட்க, தலை அசைத்து கொண்டே குழந்தையை தன் கையில் வாங்கி கொண்டான்.குழந்தையின் அழகில் மயங்கி போனான்.


கொஞ்ச நேரத்தில் மோகன் வர இன்னும் சிறிது நேரத்தில் படம் ரிலீஸ் ஆக போகும் செய்தியை கார்த்திக்கிடம் தெரிவித்தான்"எனக்கு தெரியும் மோகன், என்னால இப்போ எங்கயும் வர முடியாது. ஜனனி ரூமுக்கு வந்த பின்னே, சாயங்காலம் வர பார்க்கிறேன். நீ தான் என்னோட வேலைகளை பார்க்க வேண்டும். அந்த தைர்யத்தில தான் நான் இங்கே வந்து உக்கார்ந்து இருக்கேன்" என்று சொல்ல,"கவலை படாதே" என்று மோகன் அவனை சமாதான படுத்தி விட்டு குழந்தையை பார்த்து கொஞ்சி விட்டு கிளம்பினான். 

சிறிது நேரத்தில் ரூமுக்கு ஜனனியை stretcher ரில் கொண்டு வர அவளுக்கு ஓரளவு மயக்கம் தெளிந்திருந்தது. அவனை பார்த்து "குழந்தை எப்படி?" என்று கை அசைத்து கேட்க "உன்னை மாதிரி அழகா இருக்கு" என்று சொன்னான். ஜனனி மனதில் நிம்மதி. 

ஆனால் கார்த்திக் முகத்தில் நிம்மதி பறி போனது"ஜனனிக்கு ஆரம்பத்தில் இருந்தே குழந்தை பிடிக்காமல் இருந்தது. இப்போ அவள் மனம் மாறி இருக்க வேண்டும்" என்று ஆண்டவனை வேண்டினான்

இதை எல்லாம் அறியாமல் ஜனனி குழந்தையுடன் விளையாடி கொண்டுருந்தாள். குழந்தை திடீர் என்று அழ ஆரம்பிக்க பூரணிக்கு புரிந்தது. "ஜானு குழந்தைக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன்அதான் அழறான். கொஞ்சம் பால் கொடுக்குறியா" என்று கேட்க, 

"சரி அம்மா இப்போ நான் தரேன்" என்று குழந்தையை அம்மா தூக்கி தர சொல்லி சரிந்து கொண்டு தன் வலது மார்பை எடுத்து குழந்தை வாயில் வைக்க குழந்தை தலை அசைத்து தட்டி விட்டான். ஜனனிக்கு ஒன்றும் புரியவில்லை. 

"என்ன அம்மா குடிக்க மாட்டேங்கிறான்" என்று வருத்ததோடு தெரிவிக்க"அது ஒன்னும் இல்லைடி. பிறந்த குழந்தைக்கு முதல்ல பால் குடிக்க தெரியாது. கொஞ்சம் நேரம் போனா, அது தானா குடிக்கும். கவலைபடாதே" என்று சொல்ல, ஜனனிக்கு மன நிம்மதியானது.

மதிய உணவு காண்டீனில் இருந்து வரஅந்த நேரத்தில் மோகனிடம் இருந்து கார்த்திக்கு கால் வந்தது."கார்த்திக் முதல் ஷோ இப்போதாண்டா முடிஞ்சுது. படம் பார்த்த எல்லாரும் ஒரு பிரமிப்போட இருக்காங்க. நான் உதயம் தியேட்டர் வாசல்ல இருந்து தான் பேசுறேன். படம் பார்த்த ஒருத்தர் வெளியே வர்றார். அவர்கிட்ட நான் பேசுறதை கேளு. இப்போ ஸ்பீக்கர்ல போடுறேன்" என்று சொல்லி போனை ஸ்பீக்கருக்கு மாற்றினான் மோகன். 

"சார் நீங்க யவன ராணி படம் பாத்திங்கல்ல. படத்தை பத்தி உங்களோட ஒபினியன் என்ன?"


"படம் சூப்பர்நான் சாண்டில்யனோட கதையும் படிச்சு இருக்கேன். அப்படியே கதையை கண் முன்னால கொடு வந்துட்டார் டைரக்டர்.எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க. முக்கியமா இளஞ் செழியன் கார்த்திக், யவன ராணியா வர்ற அயல் நாட்டு நடிகை, பூவழகி ஜனனி,டைபீரியஸ் மெல் கிப்சன் எல்லோரும் அசத்திட்டாங்க".

"ஒரு படத்தில ஒருத்தர் ரெண்டு பேரு நல்லா நடிச்சா அது அந்த நடிகரோட திறமை. ஆனா எல்லாரும் நல்லா நடிச்ச அந்த பெருமை டைரக்டருக்கு தான் போகணும்"

"என்னடா கேட்டுச்சா?"என்று மோகன் கேட்க, சந்தோசத்தில் தொண்டை அடைக்க நின்றான் கார்த்திக். 

"ஹலோ ஹலோ" என்று மோகன் தொடர்ந்து அழைக்க சுய நினைவுக்கு வந்த கார்த்திக் இந்த சந்தோசத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோணியது. "ஒரு நிமிஷம்டா"என்று சொல்லி ஜனனியிடம் போனை கொடுத்தான். 

"யார்" என்று கேட்க"மோகன்" என்று சொல்ல "ஹலோ சொல்லுங்க அண்ணா" என்றாள் ஜனனி. போனில் நடந்த விஷயத்தை ஒன்று விடாமல் மோகன் சொல்ல, அதை கேள்வி பட்ட ஜனனி "அண்ணா இவர் இரவு பகலா கஷ்டப்பட்டது வீண் ஆகலை" என்று சொல்லி விட்டு, "கார்த்திக் நீங்க ஏன் மோகன் அண்ணா கூட போய் சேர்ந்து கொள்ள கூடாது" என்று கேட்டாள். 

கார்த்திக் போனை திரும்பி வாங்கி"மோகன் நான் சத்யம் தியேட்டர் பக்கம் எப்படி ரெஸ்பான்ஸ் இருக்குன்னு பார்க்கிறேன். அங்கே இருந்து உன்னை கூப்பிடுறேன்" என்று சொல்லி விட்டு, கிளம்பினான். 

ஜனனியிடம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு செல்லும் வழியில் இருந்த அனைத்து திரை அரங்குகளிலும் ரஷ் பார்த்து விட்டு சத்யம் சேரஅதற்குள் முனி ரத்தினம் அவனை போனில் அழைத்தார். காரை நிறுத்தி விட்டு போனை எடுத்து "சொல்லுங்க சார்" என்றான். 

"கார்த்திக் நான் சொன்னேன் பார்த்தியாஉண்மை ஆகிருச்சு. தமிழ்நாடு மட்டும் இல்லை தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு அப்பிடின்னு செய்திகள் வர ஆரம்பிச்சுடுச்சு. இந்த படம் பாருட இது வரைக்கும் வந்த எல்லா ரெகார்ட்ஸ் எல்லாத்தையும் நொறுக்க போகுது" என்று வாழ்த்தி தெரிவிக்க, கண்கள் குளமாக "நன்றி சார். எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்" என்று நன்றி தெரிவித்தான்.

 


அடுத்த லைனில் பாண்டியன்"கார்த்திக் தமிழ் நாட்டையே ஸ்தம்பிக்க வச்சுடிங்க. இங்கே சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு. என் கணிப்புப்படி ஒரு வாரத்ல நம்ம போட்ட காசு வந்துடும்" என்று சந்தோஷம் பொங்க தெரிவித்தார்.



No comments:

Post a Comment