Friday, July 17, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 3

அதற்குள் பக்கத்துக்கு வீடு, தெருவில் சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து கதவை அடித்து உடைக்க, உள்ளே கார்த்திக் மயங்கி கிடந்தான். கீழே உருண்டு கிடந்த பூச்சி கொல்லி மருந்து நடந்த சேதியை சொல்லியது. உடனே ஆட்டோவில் அவனை KTVRமருத்துவமனைக்கு தூக்கி செல்ல, அதற்குள் தன் வீட்டுக்கு வந்து ஜனனி அம்மா அப்பாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல, ஜனனியின் அம்மா பூரணி, அப்பா சதானந்தன் இருவரும் ஜனனியுடன் மருத்துவமனை விரைந்தனர். 

கார்த்திக்கை அட்மிட் செய்து விட்டு டாக்டர் சொல்லியபடி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க விஜய் கிளம்பிய போது அவன் அக்கா பூரணி, சதானந்தன், ஜனனி வந்து சேர, அவர்களிடம் எமெர்ஜென்சி வார்டுக்கு வெளியே காத்திருக்க சொல்லி விட்டு, கிளம்பினான். 

ஜனனிக்கு மாஸ்டர் செய்த காரியம் அதிர்ச்சியாக இருந்தது. "படித்த பண்புள்ள அவர் ஏன் எப்படி தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும்.இவர் காதலை தூக்கி போட்ட அவளை தூக்கி எறிய வேண்டாமா? கடுமையாக உழைத்து அவள் முன்னால் உயர்ந்து காட்ட வேண்டாமா?" என்று மனதுக்குள் நொந்தாள். 

ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் "நீங்க சீக்கிரம் கூட்டி வந்ததால பூச்சி மருந்த வயித்தில இருந்து எடுத்தாச்சு, ஆjனா இதோட பக்க விளைவுகள் இன்னும் ஒரு மாதத்துக்கு கட்டாயம் இருக்கும். இன்னும் ரெண்டுநாள் இங்கயே இருக்கட்டும், அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம், அது சரி, போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சா", என்று கேட்க, அங்கிருந்த விஜய் "கொடுத்தாச்சு டாக்டர் என்று" உறுதி செய்தான். 



பணத்தை கட்டி விட்டு விஜய் அங்கேயே இருக்க மற்ற மூன்று பேரும் கிளம்பினர். அதற்குள் விஷயம் பரவி கார்த்திக்கின் மாணவ மாணவிகள் அன்றைய தினம் இரவே அவனை பார்க்க கூட்டமாக வந்து சென்றனர். ஆனால் பானு மட்டும் வரவில்லை. 

அடுத்த நாள் காலை விஜய்யை ஹாஸ்பிடல்லில் இருந்து வீட்டுக்கு சென்று குளித்து வர வேண்டும் என்பதால் போனில் ஜனனியை அழைக்க, அவள் வந்தவுடன் வீட்டுக்கு கிளம்பினான். கார்த்திக் ஏப்பம் இட்ட போது பூச்சிமருந்து வாடையாக வந்தது. அவனுக்கு எதுவும் குடிக்க பிடிக்கவில்லை. 

அவன் ஹாஸ்பிடலில் இருந்த அறைக்குள் நுழைந்த ஜனனி "என்ன மாஸ்டர் என்ன காரியம் பண்ணுனிங்க, அவ உங்கள தூக்கி போட்டா, பதிலுக்கு நீங்க அவளை தூக்கி போட வேண்டியது தானே", என்று வேதனையோடு கேட்டாள். 

அவளை பார்த்து "காதலிச்சா தான் அந்த வேதனை தெரியும். உனக்கு அது புரியாது, எடுத்து சொன்னாலும் புரியிற வயசில்ல" என்று கவலையுடன் பதில் உரைத்தான். மாமா "நீங்க சொல்லுறத உணர்ந்துக்க வயசு முக்கியமில்ல, மனசு தான் முக்கியம்".

"நீங்க இந்த பிரச்சனைல இருந்து சீக்கிரம் வெளி வரணும். மீண்டும் பழைய கார்த்திக் மாஸ்டரை நாங்க எல்லாரும் பாக்கணும்" என்று சொல்ல," அதுக்கு வாய்ப்பில்லை, என் மனசு என்கிட்ட இல்ல" என்று சொல்லி விட்டு அயர்ச்சியுடன் படுக்கையில் சரிந்தான்.
ஜனனிக்கு பானு மேல் கோபமாக வந்தது. "என்ன பெண் இவள் நல்ல மனசுள்ள கார்த்திக் மாமாவை விட்டு விட்டு சொத்து உள்ள சொந்தக்காரனை கல்யாணம் செய்ய போகிறாள். இவளுக்கு காதல் ஒரு பொழுது போக்கு" என்று மனம் குமுறினாள்.

ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த கார்த்திக்கு இன்னும் பானுவை மறக்க முடியவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் விஜய் அவனுடன் நாள் முழுக்க இருக்க இடையில் உணவு கொண்டு வருவது ஜனனியின் வேலை ஆகி விட்டது. இதற்கு இடையில் விஜய், அவன் நண்பன் மோகனிடம் பேசி சென்னையில் கார்த்திக்கு பிரபல பத்திரிகை ஆபீஸ்-ல் வேலைக்கு ஏற்பாடு செய்தான். 

சென்னையில் இருப்பது கார்த்திக் மனமாற்றத்துக்கு நல்லது, மற்றும் அவன் கதை எழுதும் திறமை மூலம் பத்திரிகை வாழ்க்கை மாற்றங்கள் தரும் என்று நம்பினான். கார்த்திக் இடம் பேசி அவனை திரும்ப தற்கொலை முயற்சி செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கினான். 
கார்த்திக் தன்னிடம் இருந்த அனைத்து கதை புத்தகங்களையும் ஜனனியிடம் அன்பளிப்பாக கொடுத்தான். 

அவன் சென்னை கிளம்பும் நாள் வந்தது, மதியம் கிளம்பும் கோவை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் அவன் கிளம்ப வேண்டும். லக்ஷ்மி மில்லில் வேலை செய்யும் ஜனனி அப்பா சதானந்தன் வர முடியாததால், மேலும் அவள் அம்மா உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டதால், விஜய், ஜனனி மட்டுமே ரயில் நிலையம் வந்தனர். 

தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் வாங்க விஜய் செல்ல, ஜனனி மட்டும் பேசி கொண்டு இருந்தாள். "மாமா எங்கள விட்டு ஏன் போறீங்க". 

"எனக்கு ஒரு மாறுதல் தேவை. விஜய் பண்ணி இருக்கிற ஏற்பாடு ஒத்து வரும்னு நினைக்கிறேன். பார்க்கலாம். நீ நல்லா படி. இது மாதிரி தேவை இல்லாத விஷயங்கள்ல தலை இடாதே". அவள் ஏதோ பதில் சொல்ல வர, அதற்குள் விஜய் வந்து விட்டான்
.
கோவை எக்ஸ்பிரஸ் மெதுவாகநகர, கண்கள் கலங்க விஜய் மற்றும் ஜனனி கை அசைக்க, கார்த்திக்கை கோவை மாநகரம் சென்று வா என்று அன்புடன் வழி அனுப்பியது.

கோவை எக்ஸ்பிரஸ் இரவுக்கு சுமார் பத்துமணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நாலாவது தளத்தில் வந்து நிற்க,கார்த்திக் தனது இரண்டு trolly -களையும் எடுத்து கொண்டு இறங்கினான். 

விஜய் தனக்கு ஏற்கனவே கொடுத்திருந்த மோகனின் செல்நம்பரில் அழைக்க போனை எடுத்த மோகன் "ஹலோ சொல்லுங்க கார்த்திக் எங்கே இருக்கீங்க?நான் எஞ்சின் கிட்ட இருக்கேன்" என்று சொல்ல, நடந்து கொண்டே அவனிடம் பேசியபடி என்ஜினை நெருங்கினான் கார்த்திக்

"ஹாய் நீங்க தானே மோகன்

"ஆமா நான் தான் மோகன், நீங்க கார்த்திக் தான, எப்பிடி என்னை சரியா கண்டு பிடிச்சிங்க

"விஜய் உங்க போட்டோவை அவன் மொபைல்ல காண்பிச்சு இருக்கான். அதுனால உங்களை கண்டு பிடிக்கிறது சுலபமா இருந்தது. பை தி வே, நாம இப்போ எங்க போகணும்." 


"நாம ரெண்டு பேரும் இப்போ திருவல்லிக்கேணி போகணும். உங்களுக்கு லக்கேஜ் நிறைய இருக்கும் அப்பிடின்னு எனக்கு தெரிஞ்சுது.அதுனால டூவீலர் எடுக்காம பஸ்ல வந்தேன். நாம ரெண்டு பேரும் ஆட்டோல போகலாம், 40 - 50 ரூபா கேப்பான்."


இருவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து ஆட்டோவுக்காக காத்துருக்க ஆரம்பித்தனர். இரவு மணி 10 தாண்டி விட்டதால் ஆட்டோ எண்ணிக்கை குறைவாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு ஆட்டோ வர, அதை கைஆட்டி மோகன் நிறுத்த,இருவரும் ஏறி திருவல்லிகேணி மான்சன் வந்து சேர்ந்தனர். 

பேசி கொண்டே இறங்கி ஆட்டோ டிரைவரிடம் பைசா கொடுத்து விட்டு, மோகன் ஒரு ட்ராலியை எடுத்து கொள்ள கார்த்திக் இன்னொரு ட்ராலியை தள்ளி கொண்டே இருவரும் பேசியபடி மான்சனுக்குள் நுழைந்தனர்

"கார்த்திக் என்னபத்தி விஜய் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். நான் டைரக்டர் முனிரத்தினம் கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டராக ஒரு வருஷமா வேலை பார்த்து வருகிறேன். அஞ்சு வருஷமா திரை உலகத்தில முயற்சி பண்ணி இப்பதான் ஒருஇடத்தில செட்டில் ஆகி இருக்கேன். இப்போ நான் தங்கி இருக்கிற ரூம்ல ரெண்டு பேர் இருக்கலாம். மாத வாடகை 3000 ருபாய். இதுக்கு முன்னால என்கூட ரூம்மேட் ஒருத்தன் இருந்தான். போன மாசம் US போக வேண்டி அவன் காலி பண்ணிட்டான். இப்போ நான் மட்டும் தான் இருக்கேன். நீ என் கூட தங்கிக்கலாம்." 

"நான் அஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு வாரபத்திரிகைல மாணவ நிருபரா வேலை பார்த்தேன் . அப்போ அந்த பத்திரிகையின் ஆசிரியர் எனக்கு கொஞ்சம் பழக்கம் உண்டு. அவர் கிட்ட பேசி இருக்கேன். நீ அவங்களோட Free lance ரிப்போட்டராக வேலை பார்க்கலாம். மாத சம்பளம் கிடைக்காது. நீ கொடுக்கிற செய்திகளை பொறுத்து உனக்கு சன்மானம் உண்டு. நான் திரைபட தொழிலில் இருப்பதால் உனக்கு கொஞ்சம் திரைபட சம்பந்தமான செய்திகளுக்கு உதவி செய்கிறேன்"

"தங்குறதுக்கு, காலை, இரவு சாப்பாடு என் கூட சாப்பிட்டுக்கலாம். மதிய சாப்பாடு மட்டும் நீ கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கணும்" என்றுசொல்ல, தன்னை விட இரண்டு வயது மூத்த மோகனை பார்த்து, "இந்த உதவியே பெரிய உதவி. கட்டாயம் நான் கடுமையாகஉழைப்பேன்" என்று சொல்ல, 

"நாளைக்கு காலைல 9 மணிக்கு டிவிஎஸ் பஸ் ஸ்டாப் ல இருக்கிற பத்திரிகை ஆபீஸ் போக வேண்டும். இப்போ கை கால் கழுவிட்டு,நான் ரெண்டு வாழ பழம் வாங்கி வச்சிருக்கேன் சாப்பிட்டுவிட்டு, நாம படுக்கலாம்" என்று சொல்ல, கார்த்திக் தலை ஆட்டி விட்டு முகம்கைகள் கழுவி விட்டு வந்து படுத்தான

காலை ஆறு மணிக்கு மோகன் எழுப்பி விட இருவரும் மரினா பீச் சென்று வாக்கிங் சென்று வந்து அருகில் இருந்த நாயர் கடையில்டீ குடித்து விட்டு ரெடி ஆக, தனது ஹீரோ ஹோண்டா பைக்கில் மோகன் கார்த்திக்கை அழைத்து கொண்டு 9 மணிக்கு பத்திரிகைஅலுவலகம் அடைந்தான். 

வரவேற்பு அறையில் காத்து இருந்த இருவரும் ஆசிரியர் பாலசந்தர் அழைக்க, அவர் அறைக்குள் நுழைந்தனர். 
60 வயது, எளிமையான உடை, சிவந்த நிறம், கொஞ்சம் குண்டான உருவம், முகத்தில் அரும்பும் சிரிப்பு இவர்தான் ஆசிரியர் பாலாஎன்று அன்புடன் அழைக்கப்படும் பாலசந்தர்.

200 கோடி மதிப்புள்ள பத்திரிகை குழுமத்தின் சொந்தக்காரர். இருவரையும் வரவேற்று,மோகன் பக்கம் திரும்பி "என்ன மோகன் இயக்குனர் வேலை எப்படி இருக்கு" என்று கேட்க, 


"சார் நல்லபடியா ஓடிகிட்டு இருக்கு. போன வாரம் உங்க கிட்ட போன்ல பேசினேன், அந்த பையன் இவர்தான். கொஞ்சம் கதை எழுததெரியும், நம்ம பத்திரிகைல கூட இரண்டு சிறு கதைகள் வந்து இருக்கு" என்று சொல்ல, 

"கதையோட தலைப்பு சொல்லுங்க" என்று கேட்ட ஆசிரியர் பாலா, கார்த்திக் அவன் எழுதிய கதைகளின் பெயரை சொன்ன உடன் "நீங்கஎழுத்தாளர் எஸ் கே தான" என்று கேட்க, கார்த்திக் (S .K ) என்ற புனை பெயரில் கதை எழுதியது ஞாபகம் வர, ஆசிரியரின் ஞாபகசக்தியை மெச்சியபடி "ஆமா சார்" என்று சொல்ல, "நீங்க எதுக்கு ப்ரீலான்ஸ் ரிபோர்ட்டர் வேலை பார்க்கணும், கொஞ்சம் வெயிட்பண்ணுங்க" என்று சொல்லி தனது காலிங்பெல் லை அழுத்தி உள்ளே வந்த ஆபீஸ் பாயிடம் "எடிட்டர் எகம்பரத்தை வர சொல்லுங்க"என்று சொல்ல, ஆபீஸ் பாய் தலை அசைத்து விட்டு வெளியே சென்றவுடன், மோகனிடம், 

"என்ன மோகன், உங்களுக்கு தெரியாதா? இப்போ பத்திரிகை உலகத்தில நல்ல எழுத்தாளர் கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. நீங்கசொல்றத பார்த்தா கார்த்திக்கு எழுதும் திறமை இயல்பா இருக்குன்னு நினைக்கிறேன்". அதற்குள் ஏகாம்பரம் உள்ளே வர, "எடிட்டர் சார்இவர்தான் கார்த்திக் இவரை நம்ம கதை எழுதும் குரூப்ல சேர்த்து விடுங்க. எல்லாம் கத்துகட்டும், இடையே சிறு கதையும் எழுதட்டும்"என்று சொல்ல, 

எடிட்டர் தலை அசைத்து "சார் நீங்க சொல்றது நல்ல யோசனை. இப்பவே சேர்த்துக்கலாம்" என்று பச்சை கொடி காட்டினார்.

"ஆரம்பத்தில trainee, சம்பளம் 10000 . ஆறு மாதம் கழித்து உங்களோட பணி உறுதி செய்யப்பட்டவுடன் சம்பளம் 20000 ஆகஉயர்த்தப்படும், என்று சொல்ல கார்த்திக் என்ன சொல்வது என்று அறியாமல் "ரொம்ப நன்றி சார். கட்டாயம் உங்களுக்கு பிடிச்சமாதிரிவேலை செய்வேன்" என்று சொல்ல, பதிலுக்கு சிறிது கொண்டே பாலா "என்னைக்கு join பண்ண போறீங்க?" என்று கேட்க "இப்போவேரெடி சார்" என்று பதில் சொன்ன கார்த்திகை ஆசிரியருக்கு பிடித்து போனது. "பையன் நான் சின்ன வயசில இருந்த மாதிரி ரொம்பதுடிப்பா, ஈடுபாட்டோட இருக்கான்" என்று பெருமிதம் கொண்டார்.

மோகனுக்கு இவ்வளவு சுலபமாக வேலை முடியும் என்று எதிர்பார்க்காததால், ஆசிரியருக்கு "சார் ரொம்ப நன்றி" என்று சொல்லிவிட்டு, கார்த்திகை தனியாக கூப்பிட்டு "ஒழுங்கா வேலை பாரு. இங்க நீ கத்துகிறது உன்னோட பிறகால வாழ்க்கைல உபயோகமாஇருக்கும்" என்று எச்சரித்து விட்டு, வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றான். 

சேர்ந்த மூன்று மாதங்களில் கார்த்திக்கின் திறமையை கண்டு வியந்த ஆசிரியர் மற்றும் எடிட்டர் அவனுக்கு இரண்டு சிறுகதைஎழுதும் வாய்ப்பு கொடுக்க, அந்த இரண்டு கதைகளும் வாசகர்களால் புகழப்பட்டது. அவனிடம் எழுதும் திறமை ஒளிந்து இருப்பதைஅறிந்த ஆசிரியர் பாலா அவன் கதை எழுதும் போது திருத்தங்களை சொல்லி எப்படி மக்களுக்கு பிடித்த மாதிரி திருப்பங்கள்வைப்பது என்று கத்து கொடுத்தார். சீக்கிரத்திலே அவனை சிறிய தொடர்கதை என்ற பெயரில் நான்கு வாரங்கள் மட்டுமே வர கூடியதொடர்கதைகளை எழுத சொன்னார். முதல் கதையான "கல்லூரி பருவத்தில்" என்ற கதை பரவலாக பாராட்டப்பட, தொடர்ந்து மூன்றுகதைகளை எழுதி வார பத்திரிகையின் செல்ல பிள்ளை என்று பெயர் எடுத்தான். பெண்கள் மனதை படிக்கும் கதைகள் என்றுஎழுத்தாளர் வட்டாரம் புகழ் கொடிசூட்ட அவன் பெயர் அனைவருக்கும் தெரிந்த பெயராக பரவியது.

சென்னை வந்த புதிதில் பானுவை மறக்க முடியாமல் தவித்த கார்த்திக் குடிக்க துவங்கினான். மாலை நேரத்தில் பத்திரிகை ஆபீசில்இருந்து திரும்பியவுடன் தண்ணி அடிப்பது வழக்கம். ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த அந்த பழக்கம் நாளாக எல்லை மீறி விட்டது.பசிமறந்து முந்தைய இரவு அடித்த சரக்கால் அடுத்த நாள் தாமதமாக ஆபீஸ் செல்ல ஆசிரியர் பாலா கூப்பிட்டு கண்டிக்கும் அளவுசென்றது. அவனைபற்றி கவலைபட்ட மோகன் இதுபற்றி விஜயிடம் சொல்ல அவன் உடனே கார்த்திக்கை கூப்பிட்டு கண்டித்தான்.

ஒருநாள் திநகர் ரங்கநாதன் தெருவில் மோகனுடன் ஷாப்பிங் சென்ற போது பானுவை அவள் கணவனுடன் சந்தித்தான். யாரைசந்திக்க கூடாது என்று நினைத்தானோ அவளை சந்தித்ததும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. களைந்த தலையுடன்இடுக்கிய கண்களும் மெலிந்த உருவமாய் இருந்த கார்த்திக் அவளுக்கு கேலிபொருள் ஆனான். தன் கணவன் ரவீந்தரிடம்"கார்த்திக்கை தன் தம்பியின் கணக்கு ஆசிரியர்" என்று அறிமுகபடுத்தினாள். 

ரவீந்தர் இன்போசிஸ் சென்னையில் வேலை செய்வதாகவும் மாதம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குவதாகவும் பெருமையாகசொன்னாள். அவள் பேசிய பத்து நிமிடத்தில் ஒன்பது நிமிடங்கள் அவளை பற்றியும் அவள் கணவன் பெருமை பேசுவதற்கே சரியாகஇருந்தது.


அதற்கு மேல் பேச பிடிக்காமல் கார்த்திக், கூட இருந்த மோகனை அறிமுகபடுத்தி விட்டு கிளம்ப இருந்தவனை, "சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க. உங்க சம்பளத்துக்கு ஏத்த மாதிரி ஒரு சாந்தியோ தேவியோ கிடைக்காமலா போய்டுவாங்க" என்று கிண்டல் செய்தவளை ஒரு நிமிடம் பரிதாபமாக பார்க்க, ஏற்கனவே சரியான தூக்கம் இல்லாததால் கருவளையம் படிந்த அவன் கண்கள் குளமாகின. 

மோகன் அவள் செய்த கிண்டலை பொறுக்க முடியாமல் "எல்லா பொண்ணுங்களுமே காசுக்கு அலைய மாட்டாங்க. அவனோட நல்ல மனசை புரிஞ்ச, அவனை அவனுக்காக மட்டும் விரும்பற பொண்ணு தேடி வர போறா. கட்டாயம் அவள் வருவா, எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று சூடாக பதில் சொல்லி விட்டு, "இன்னைக்கு ஒண்ணும் வாங்க வேணாம் வாடா போகலாம்" என்று கார்த்திக்கை இழுத்து கொண்டு திருவல்லிக்கேணி மான்சனுக்கு திரும்பினர். 

போகும் வழி எல்லாம் மோகன், அவனை திட்டி கொண்டே வந்தான். "ஏன்டா அவகிட்ட எப்படி விழுந்த? சிகப்பு தோலை பார்த்த உடனே மயங்கிட்டியா? எத்தனைநாள் இந்த அழகு எல்லாம் கூட வரும்னு நினைக்கிற? இந்த இளம்வயசுல கழுதகூட அழகாதான் இருக்கும்.
படித்த பல பேரோட பழக கூடிய நீ ஏன்டா இவள் கிட்ட விழுந்த? உன்னை பார்த்து கிண்டல் பண்ணுறா? எனக்கு ரத்தம் கொதிக்குது.இப்படி மோசமா இருக்கியே, ஒரு வார்த்த நல்லா இருக்கியா கேட்டாளா? ஒரு மனிதாபிமானம் கூட இல்ல. ஒருவேளை நீ அவளை கல்யாணம் பண்ணி இருந்தா கூட, உன்னை அவள் படாத பாடுபடுத்தி இருப்பா. அவள் உன்னை நிராகரிச்சது கூட நல்லது தான், உனக்கு நடந்த கெட்டதிலேயும் ஒரு நல்லது நடந்து இருக்கு அப்படின்னு நினைச்சுக்க வேண்டியது தான்".

"இல்லை மோகன் நான் அவளை சின்சியரா காதலிச்சேன், இன்னும் அவள் என் மனசுல இருக்காடா"

"ஏன்டா காதல் அப்பிடிங்கிறது ஒன் வே டிராபிக் கிடையாது, ரெண்டு மனசும் சேர்ந்தது தாண்டா காதல். கதை எழுதுற, நிறைய புஸ்தகங்கள் படிக்கிற உனக்கு நான் விளக்கமா சொல்லனும்கிற அவசியம் இல்லை." 

"அப்படி இல்லை மோகன், காதல் அப்படிங்கிறது ஒரு உணர்வு. அவள் என்ன காதலிச்சாலா, அப்படின்னு எனக்கு கவலை இல்லை. நான் அவளை சின்சியரா காதலிச்சேன்".

"உன்னை திருத்த முடியாது. சரி, அவள் சந்தோசமா இருக்கா, புருஷன் மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கிறான், நீ ஏன்டா இப்படி பிச்சைகாரன் மாதிரி இருக்க. நான் உன் இடத்தில இருந்தேன்னா இத ஒரு சவாலா எடுத்துகிட்டு சம்பாதிச்சு அவ முன்னால, இப்ப பாருடி உன் புருஷன விட பல மடங்கு சம்பாதிக்கிறேன், அப்பிடின்னு ஜெயிச்சு காட்டுவேன். டேய் கார்த்திக் அவ புருஷன பாருடா. ஆம்பள அப்படிங்கிற தகுதிய தவிர வேற, என்னடா இருக்கு, உன்னோட அழகுக்கும் கம்பீரத்துக்கும் கால்தூசி அளவுகூட வர மாட்டான். முதல்ல அவளை உன் மனசில இருந்து தூக்கி எறிடா" என்று குமுறினான்.

கார்த்திக் அவன் சொன்னதில் இருந்த உண்மைகளை உணர்ந்தாலும், அவனால் பானுமேல் இருந்த காதலை மறக்க முடியுமா என்று தெரியவில்லை.

மோகன் அவனிடம் "டேய் முதல்ல குடிக்கிறத நிப்பாட்டு. அப்பதான் உன்னால சிந்திக்க முடியும்".

மோகன் வார்த்தைகளில் இருந்த உண்மை மற்றும் அக்கறையை உணர்ந்த கார்த்திக் இவன் நண்பனாக கிடைக்க என்ன தவம் செய்திருக்கிறேன் என்று கண் கலங்கினான்.

"மோகன் எனக்கு குடியை உடன நிறுத்த முடியுமான்னு தெரியலை. ஆனா கொஞ்ச கொஞ்சமா குறைக்க முயற்சி பண்ணுறேன்.பத்திரிகை வேலை குறைவா இருக்கிறதால மனசு அலை பாயுது, அதனால வேற எதாவது வேலை கிடைக்குமான்னு முயற்சி செய்யணும்"

"நீ சொல்றது சரிதான். ஒரு வேளை நீ வேலை அதிகமா செய்தால் அவளை நினைக்கிற வாய்ப்பு குறையும். சரி நான் அசிஸ்டன்ட் டைரக்டரா முனிரத்தினம்கிட்ட வேலை பாக்கிறதால அவர்கிட்ட உனக்கு கதை எழுதிற திறமைய சொல்லி நான் சேர்த்து விடறேன்"என்று சொல்ல, அவன் யோசனைக்கு கார்த்திக் தலை ஆட்டினான்.

சொன்னது மட்டும் இல்லாமல் டைரக்டரிடம் பேசி அனுமதி வாங்கி விட்டு அடுத்த நாளே அழைத்து சென்றான். கார்த்திக் ஏற்கனவே வாரபத்திரிகையில் பலகதைகள் எழுதி இருந்ததால் அவற்றை பற்றி சொல்ல, டைரக்டர் ரொம்ப சந்தோஷமானார்.

 


அவருக்கு பத்துக்கு மேற்பட்ட உதவி இயக்குனர்கள் இருந்தாலும் கதை எழுதும் திறன் படைத்தவர்கள் குறைவு. அவனிடம் ஒரு புதிய கதை சொல்ல சொன்னார்

"லிவிங் டுகதர் என்ற கான்செப்டில் இப்போது IT கம்பெனி வேலை பார்க்கிறவங்க பத்திய கதை எழுதி இருக்கேன். படிச்சு பாருங்க" என்று சொல்லி தன்னிடம் இருந்த அந்த நோட்டு புத்தகத்தை தர, டைரக்டர் அதை படித்து பார்த்தார். 

"அற்புதமா எழுதி இருக்கீங்க, உங்களுக்கு நல்ல கதை சொல்லும் திறன் இருக்கு" என்று பாராட்டினார்.
மேலும் அவர் சொல்லியது போல் சில இடங்களில் மாறுதல் செய்து கதையை மாற்றி அமைக்க, டைரக்டர் திரைகதை அமைத்து, வசனம் எழுதும் பணியை அவனிடம் கொடுத்தார். பொதுவாக இரண்டு வருடங்கள் படம் எடுக்கும் அவர் இந்தபடத்தை ஒரு வருடத்துக்குள் முடிக்க முடிவு செய்திருந்தார். அவரது ஆஸ்தான இசை அமைப்பாளர் இசை அமைக்க படம் கடகடவென்று வளர்ந்தது. 

கிளைமாக்ஸ் காட்சியில் தமிழ்கலாச்சாரத்துக்கு அதிர்ச்சி வைத்யம் செய்வது போல் லிவிங்டுகதர் மூலம் வரக் கூடிய பிரச்சனையான உடைந்து வரும் திருமண உறவுகள் பற்றி ஆணித்தரமான காட்சிகள் அமைத்தார். அவருடன் வேலை செய்யும் ஒவ்வொரு நாளும் கார்த்திக்கு புதுஅனுபவமாக இருந்தது. இப்போதெல்லாம் 24 மணி நேரமும் கார்த்திக்கு பத்தவில்லை. அதனால் அவன் குடிப்பது குறைந்து விட்டது. தினமும் குடிப்பது குறைந்து வாரம் இரண்டு அல்லது மூன்றுநாட்கள் என்றானது.




No comments:

Post a Comment