Tuesday, July 28, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 5

அதன்பிறகு இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்தனர், அதற்க்குள் பரிமளா சமையலை முடித்திருக்க, தம்பதிகள் சத்யனை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர்

டியூசனில் இருந்து பிள்ளைகள் இருவரும் வர, உதயகுமார் அம்மூவின் பையையும் சேர்த்து சுமந்து கொண்டு வந்தான், அவனுக்கு பின்னால் இடது கால் பாதத்தை தரையில் ஊன்றி, அளவு குறைந்த வலதுகாலின் விரல்களை தரையில் அழுத்தி குதிங்காலை உயர்த்தியவாறு எக்கி எக்கி நடந்து வந்தாள் அம்மு, சிறியதாக செய்யப்பட்ட அம்மன் சிலைப்போல இருந்தாள் அம்மூ
அவளின் குறைபாடு ரொம்ப சிறியதுதான், ஆனால் அதனால் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மையால் அம்மு யாரிடமும் அதிகமாக பேசமாட்டாள், அவள் பேச்செல்லாம் அம்மா அப்பா அண்ணன் இவர்களுடன் தான், சத்யன் எப்போதாவது வீட்டுக்கு வந்தால் “நல்லாருக்கியா மாமா” என்பதோடு உள்ளே போய்விடுவாள்



சத்யனை பார்த்ததும் உதயன் பையை போட்டுவிட்டு ஓடி வந்து சத்யன் தோளை கட்டிக்கொண்டான் “ எப்ப மாமா வந்த, பைக்ல ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம் மாமா வா” என்று அன்பு தொல்லை செய்ய,

“டேய் உதயா மாமாவை விடு அவனுக்கு நேரமாகுது” என்று பாண்டியன் மகனை அதட்டினார்

“விடுங்க மாமா என்கிட்ட தான கேட்கிறான்” என்ற சத்யன் அம்முவிடம் திரும்பி ‘’ என்ன அம்மு நீயும் வர்றியா” என்று கேட்க... ம்ஹூம் என்று தலையசைத்து விட்டு உள்ளே போய்விட்டாள் அம்மு

சத்யன் உதயனை பைக்கில் ஒரு ரவுண்டு அழைத்து சென்று பிறகு இறக்கிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்

வீட்டில் போய் படுத்தவனுக்கு, பகலில் தேவியுடன் நடந்த உறவு ஞாபகம் வரவில்லை, மாறாக இப்படி நடந்த பிறகு சீக்கிரம் திருமணம் நடக்கவேண்டும் என்பதை பற்றிய சிந்தனைகள் தான் அதிகமாக இருந்தது..

அதன்பிறகு சத்யன் மறுநாள் தேவியை சந்தித்தபோது, இருவரிடமும் முன்பு இருந்த அவசரமும் பார்வை பறிமாற்றமும் இல்லை, எதையோ தீவிரமாக சிந்திக்கும் முகபாவமே இருந்தது

இருவரும் தினமும் சந்தித்தனர் ஆனால் முன்புபோல் நிழலும் மறைவும் கிடைக்கும் இடத்தில் ஒதுங்கி வெட்டியாக கதைபேசி, பொழுதை போக்கவில்லை, மாறாக குறைவாக பேசி அதிகமாக புரிந்துகொண்டனர்

சத்யனுக்கு தேவி புதியவளாக தெரிந்தாள், அவளிடம் பேசும் விளையாட்டு பேச்சு போய், தேவிக்கும் திருமணம் நடக்க என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்
ஆனால் தேவியிடம் ஒரு பதட்டம் இருந்தது, அதிகம் பேசாமல் மணிக்கணக்காக சத்யன் கைகளை பற்றிக்கொண்டு அமர்ந்திருப்பாள், அவன் கண்களை பார்த்து கதை பேசினாள்,

முன்பெல்லாம் சந்திக்கும் இடத்தை சொல்லி இருவரும் சந்தித்து கொள்வார்கள், இப்போது சத்யனே காத்திருந்து அவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு போனான்,, முன்பெல்லாம் எங்காவது பார்க் சினிமா என்று சுற்றியவர்கள், இப்போது நிறைய கோயில்களுக்கு போனார்கள், கண்மூடி தெய்வத்திடம் முறையிட்டார்கள்
ஒவ்வொரு நாளும் அவர்களின் நெருக்கம் அதிகமானது, முதலில் சந்தித்த திருப்பரங்குன்றம் மலைக்கு போய் எதுவுமே பேசாமல் மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்தனர்

தவறு செய்துவிட்டோமோ என்ற உறுத்தல் இருவருக்கும் இல்லை, மாறாக செய்த தவறை நியாயப்படுத்தும் திருமணம் சரியாக நடக்கவேண்டுமே என்ற கவலைதான் அதிகமாக இருந்தது

தேவிக்கு கல்லூரி முடிய இன்னும் இரண்டுநாள் இருக்க, சத்யன் அன்று மதியம் ஒரு மணிக்கு தேவியை சந்திக்க வந்தபோது “ நாம ரெண்டு பேரும் விரகனூர் டேம் போய்ட்டு கொஞ்சநேரம் இருந்துட்டு வரலாம்” என்று தேவி தலைகுனிந்தவாறு கேட்க

அவளின் தலைகுனிவு சத்யனுக்கு வித்தியாசமாக இருந்தாலும் அவளிடம் எதுவுமே கேட்காமல் “ சரி வா போகலாம்” என்று பைக்கில் ஏற்றிக்கொண்டு விரகனூர் டேம்க்கு அழைத்துச் சென்றான்

அங்கேயிருந்த மரநிழலில் இருவரும் அமர்ந்தனர், “ என்னாச்சு தேவி ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்று சத்யன் கேட்க

தரையிலிருந்த புற்களை பிடுங்கி அதை சிறு சிறு துண்டுகளாக கிள்ளியெறிந்த தேவி வெகுநேர அமைதிக்கு பிறகு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “ நாம நாளைக்கே ஏதாவது கோயில் வச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று மெல்லிய குரலில் கேட்டாள்

திடீரென அவள் கேட்டதும் கொஞ்சம் தடுமாறிய சத்யன் “ ஏன் தேவி என்னாச்சு, இன்னும் பத்துநாள் பொருத்துக்க பாண்டி மாமாவை அம்மாகிட்ட பேச சொல்லிருக்கேன் அவர் பேசி அம்மாகிட்ட சம்மதம் வாங்கின பிறகு, திருப்பரங்குன்றம் கோயில்ல கல்யாணத்தை பண்ணலாம்னு பாண்டி மாமா சொல்லிருக்காரு” என்று சத்யன் சொல்ல

மறுபடியும் அமையாக இருந்த தேவி “ அம்மா சம்மதிக்கலைன்னா என்ன பண்றது” என்று கேட்டாள்

“கவலைப்படாதே அம்மா நிச்சயம் சம்மதிப்பாங்க, அவங்களுக்கு நான்னா ரொம்ப உசுரு, ஆமா நீ ஏன் திடீர்னு இவ்வளவு அவசரப்படுற ” என்றான்

அவன் முகத்தையே உற்று பார்த்த தேவி “அவசரப்பட வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டு போச்சு, எனக்கு இந்த மாசம் பீரியட்ஸ் வரலை” என்று சொல்ல


சிந்தனையுடன் தனது புருவத்தை சுருக்கிய சத்யன் “ பீரியட்ஸா அப்படின்னா என்ன” என்று அவளை கேட்க.... அவள் பதில் சொல்லாமல் முறைத்து பார்த்தாள்

கொஞ்சமாக சத்யனுக்கு ஏதோ புரிய “ தேவி” என்று ஆச்சர்யத்தில் விழி விரித்து வாய் பிளந்து அவளை பார்த்தான்

அவன் பார்வையை தவிர்த்து தலைகுனிந்த தேவி ஆமாம் என்பது போல தலையசைத்து “ பத்துநாள் லேட்டாயிருச்சு சத்யா, நானும் இன்னிக்கு வந்துரும் நாளைக்கு வந்துரும்னு எதிர்பார்த்து இருந்தேன் வரவேயில்லை, இன்னிக்கு காலையில பல்விளக்கும் போது ஒரே வாந்தி, எங்கம்மா என்னாடி ஏன் வாந்தியெடுக்குறேன்னு கேட்டாங்க, நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன், ஆனா இப்படியே எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் எனக்கு பயமாயிருக்கு சத்யா” என்று கண்களில் பயத்துடன் குரலில் கலக்கத்துடன் தேவி கூறியதும்

சத்யனுக்கு ஒன்றுமே புரியாமல் தலையில் கைவைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான் , தன்னுடைய காதலியின் வயிற்றில் தனது வாரிசு உருவாகியிருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை அந்த வாரிசு உருவாக்கியிருக்கும் நெருக்கடியை நினைத்து கலங்குவதா என்று அவனுக்கு புரியவில்லை

சிறிதுநேரம் அமைதியாக இருந்தவன் பிறகு “ சரி நீ எதுக்கும் பயப்படாதே, ரெண்டு நாள்ல எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிடலாம், நீ எதை நினைச்சும் கலங்காதே” என்று ஆறுதல் படுத்தியவன், அவளை நெருங்கி அமர்ந்து அவள் கையை பற்றி “ ஏன் தேவி இந்த நேரத்தில் இப்படி ஆயிருச்சேன்னு உனக்கு வருத்தமா இருக்கா, இதை நீ வெறுக்குறியா” என்று சுடிதாருக்கு மேலே அவள் அடிவயிற்றில் கைவைத்து கேட்க

அவன் கையை அழுத்தி பற்றிக்கொண்ட தேவி “ ஏய் என்ன இப்படி சொல்லிட்ட, இது நம்மளோடது, யாருக்காகவும் எதுக்காகவும், நான் இதை விட்டுக்கொடுக்க மாட்டேன், இது எப்படிப்பட்ட காதலோட உருவாச்சுன்னு தெரியும்ல அப்புறமா நீயே இப்படி ஒரு கேள்வியை கேட்குறியே” என்று கண்ணீருடன் தேவி சொன்னாள்

அவளுடைய பதிலில் முகம் மலர்ந்த சத்யன் " சரி இனிமேல் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், நீ எதை பத்தியும் கலங்காதே, வா போகலாம் நேரமாச்சு" என்று அவனும் எழுந்து அவளுக்கும் கைகொடுத்து எழுப்பினான்

அவன் கைப்பற்றி எழுந்த தேவி அவன் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்து அவளுக்கும் பயம் போய் கொஞ்சம் தெளிவு வந்தது, அவனுடைய தோளில் சாய்ந்தபடியே தான் வெளியே வந்தாள்

பைக்கில் ஏறி உட்கார்ந்தவள் உரிமையோடு அவன் இடுப்பில் கைப்போட்டு வளைத்துக்கொண்டு ஆதரவாக அவன் முதுகில் சாய்ந்துகொண்டாள்,

சத்யனுக்கு எங்கோ பறப்பது போல இருந்தது, இருபது வயதில் தனக்கு அப்பா ஸ்தானத்தை கொடுத்த கடவுளை மனதில் கும்பிட்டான், சூழ்நிலையின் அவசரம் புரிந்து சீக்கிரமே எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்று நினைத்தான்

தேவியை கோரிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டவன் அவள் இருந்த நிலைமையில் அவளைவிட்டு போகவே மனமின்றி தவித்தான், தேவியும் பற்றியிருந்த அவன் கைகளை விடாமல் கலங்கிய கண்களுடன் தவித்தாள்


சத்யனுக்கு என்ன செய்வது என்று தோன்றாமல் நிற்க்க,... அந்த வழியாக போன ஒரு மாருதிவேன் சிறிது தயங்கி நின்று இருவரையும் கவனித்து விட்டு போனதை இருவருமே அறியவில்லை

தேவி செல்லும் பஸ் வந்ததும் அவளை தோளைத் தட்டி ஆறுதல் படுத்திவிட்டு, பஸ் ஏத்திவிட்டான்

பஸ் போன பிறகும் கூட சிறிதுநேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தவன் பிறகு கடைக்கு கிளம்பினான்

மறுநாள் தேவிக்காக கல்லூரியின் வாசலில் காத்திருந்த சத்யன் அவள் வராமல் போகவே, தேவியுடன் வரும் அவள் தோழியிடம் தேவியை பற்றி கேட்டான்

" தேவி இன்னிக்கு காலேஜுக்கு வரலைங்க, இன்னிக்கு எக்ஸாம் வேற இருந்துச்சு ஆனாலும் வரலை என்னாச்சுன்னு தெரியலை" என்று வருத்தமான குரலில் அந்த பெண் சொன்னதும்

சத்யனுக்கு ஒன்றும் புரியவில்லை, அவனுடைய இளவயது அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கவில்லை, நாளை கடைசி எக்ஸாமுக்கு கண்டிப்பா வருவா என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிகொண்டு கடைக்கு கிளம்பினான்

அவன் கடைக்கு கிளம்பிய அதேநேரம் பாண்டியன் சத்யனின் வீட்டில் அவன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்,, அவர் சொன்ன விஷயங்களின் பயங்கரம் சத்யனின் அம்மா முகத்தில் தெரிந்தது

" என்ன தம்பி சொல்றீங்க, இப்போ என்னப் பண்றது, எனக்கு ஒன்னுமே புரியலையே" என்று தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்

"அய்யோ அம்மா அழுவுறதுக்கு இப்போ நேரமில்லை, சத்யன் கடையிலே இருந்து வந்ததும் நீங்க மூனுபேரும் உடனே ஊருக்கு கிளம்புங்க இங்கே சூழ்நிலை சரியானதும் நானே உங்களுக்கு போன் பண்றேன், அதுவரைக்கும் அங்கயே இருங்க, சத்யனுக்கு எந்த விஷயமும் தெரியவேண்டாம், இளவயசு பின்னால் வர்றதை பத்தி யோசிக்காம எதையாவது செஞ்சுருவான், அவங்களுக்கு இதே பொழப்பு அதனால எதை இழந்தாலும் அது பெரிசா தெரியாது ஆனா நாம அப்படியில்லை சின்ன இழப்பும் அதிக வலியை தரும், நீங்க ஊருக்கு போனதும் மொதல் வேலையா சத்யனுக்கு ஒரு செல்போன் வாங்கி குடுங்க நான் போன் பண்றேன்" என்று பாண்டியன் பதட்டமாக சொன்னார்

அவர் சொன்னதின் முழு அர்த்தமும் புரிய, தன் மகனின் உயிர் முக்கியம் என்று நினைத்த சத்யனின் அம்மா ஊருக்கு போவதற்கு தேவையான துணிகளை எடுத்து அடுக்கிக்கொண்டே " கடவுள் மாதிரி வந்து விஷயத்தை சொன்னீங்க உங்களுக்கு யாரு தம்பி சொன்னது" என்று கண்ணீருடன் கேட்க

" அந்த புள்ளயோட அண்ணனுங்க சத்யனை போடச்சொல்லி பணம் கொடுத்த ஆளுங்கல்ல ஒருத்தன் எனக்கு ரொம்ப பழக்கம், அவன்தான் வந்து என்கிட்ட சொன்னான், சத்யனை நாளைக்கு நைட்டு ஆத்து பாலத்துக்கு கீழ வரும்போது போட்டுத் தள்ள சொல்லி ஒரு லட்சம் குடுத்திருக்கானுங்க போல, என் சிநேகிதன் வந்து மொத்த தகவலையும் சொல்லிட்டான், அம்மா தயவுசெய்து சத்யன் கிட்ட எதையும் இப்போ சொல்லவேண்டாம், அப்புறமா சொல்லிக்கலாம், மொதல்ல அவன் வர்றதுக்குள்ள நான் கிளம்புறேன் " என்ற பாண்டியன் அவசரமாக வெளியேறினார்

அன்று இரவு எட்டு மணிக்கெல்லாம் தம்பியுடன் வந்த சத்யன் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்த அம்மாவை பார்த்து பதட்டத்துடன் விசாரிக்க

மகனுக்காக வந்த கண்ணீரை மாற்றி " சத்யா உங்க சித்தப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லையாம் உன் சித்தி நம்ம பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணா" என்று கூறிவிட்டு ஓவென்று அழ

தாயின் கண்ணீரை பார்த்ததும் அணைத்தும் மறந்து போய்விட " சரி வாம்மா போகலாம் " என்று வீட்டை பூட்டிக்கொண்டு மூவரும் கிளம்பி விட்டனர்

" கொஞ்சம் இருப்பா பக்கத்து வீட்டுல சொல்லிட்டு வந்துர்றேன்" என்று பக்கத்து வீட்டு கதவை தட்டி வெளியே வந்த பெண்ணிடம் " நாங்க ஊருக்கு போறோம் அக்கா யாராவது எங்களை தேடி வந்தா நாங்க வீட்டை காலி பண்ணிகிட்டு கேரளாவுக்கு போய்ட்டதா சொல்லுங்கக்கா" என்று மகனை பாதுகாக்க முன்யோசனையாக சொன்னாள் சத்யனின் அம்மா

மூவரும் வால்பாறை வழியாக திருச்சூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர், சத்யனுக்கு தேவியிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போகிறோமே என்று உறுத்தலாக இருந்தது 


தேவியின் வீட்டில் தேவி அவள் அறையில் கட்டிலில் கவிழ்ந்து தேவி அழுதுகொண்டு இருக்க, அவள் கன்னங்கள் அறை வாங்கி சிவந்து கன்றிப்போயிருந்தது, கண்கள் கண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது

அவளுடைய பெரியண்ணன் மனைவி கையில் காபியுடன் “ நேத்துலேருந்து ஒன்னுமே சாப்பிடலை இதையாவது குடி, குடிச்சுட்டு உக்காந்து அழு யாரு வேனாம்னு சொன்னா” என்று அதிகாரமாக சொல்ல

அப்போது உள்ளே வந்த தேவியின் அப்பா “ அந்த நாயை விடு சாகட்டும், உலகத்துல ஆம்பளையே இல்லாத மாதிரி மார்க்கெட்ல மூட்டை தூக்குறவனோட போய் கூட்டு சேர்ந்திருக்கா பாரு, இது எவ்வளவு நாளா நடக்குதுன்னு தெரியலை, நம்ம சாதிக்காரன் எவன் எவனெல்லாம் பாத்தானோ,” என்று மேலே ஏதோ சத்யனை கேவலமாக திட்டியபடி அவளை நெருங்க

வெடுக்கென்று திரும்பிய தேவி “அப்பா என்னை என்ன வேனும்னாலும் திட்டு சத்யனை ஏதாவது திட்டின, அவ்வளவுதான் ஆமா” என்று ஆத்திரத்துடன் கத்தினாள்

“ஓ அவனை திட்டுனா உனக்கு வலிக்குமா, மொதல்ல உன்னை ஒழிச்சு கட்டினா எல்லாம் சரியாயிருக்கும் ” என்றவர் தேவியின் முடியை கொத்தாக பற்றிக்கொண்டு கன்னத்தில் மாறி மாறி அறைய, தேவியின் அண்ணி அவரை தடுக்க முயன்றாள்

தேவி சுருண்டு போய் கட்டிலில் விழ “ அய்யோ விடுங்க மாமா செத்து கித்து போயிறப்போறா, மொதல்ல அவனை காலி பண்ற வழியபாருங்க, அப்புறம் இவளை இப்பவே ஊருக்கு கூட்டிக்கிட்டு போயிரலாம்” என்று மாமனாருக்கு உத்தரவிட்டாள்

“ ம் சரி நீ இவளுக்கு தேவையானதை எடுத்து வை, நான் கிளம்புறதுக்கு ஏற்பாடு பண்றேன், அதுக்குள்ள பயலுகளும் வந்துரட்டும்” என்று சொல்லிவிட்டு வெளியே போனார்

ஹாலின் மூளையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவியைப் பார்த்து, “ நீ ஏன்டி எளவு வீட்டுல அழுவுறமாதிரி அழுவுற, எல்லாரும் ஊருக்குப் போறோம் சீக்கிரம் கிளம்பு” என்று அதிகாரம் செய்தவரை பார்த்து..........

“ நம்மகிட்ட இல்லாத காசு பணமா, தேவிய அந்த பயலுக்கே குடுத்துரலாம், ஏன் இப்படி சாதி சாதின்னு பிடிவாதம் பண்றீங்க, ” என்று தேவியின் அம்மா கண்ணீர் விட

“வாயை மூடுடி எல்லாம் உன்னால் வந்தது, பொண்ணு எங்கப்போறா எப்ப வீட்டுக்கு வர்றான்னு கவனிக்காம, இப்போ பொண்ண அவனுக்கே கூட்டிவிட சொல்றியா, மரியாதையா ஊருக்கு போக ஏற்பாடு செய் ” என்று மனைவிக்கு ஒரு அறைவிட்டுவிட்டு வெளியே போனார்

தேவியின் அன்று இரவோடு இரவாக இரண்டு காரில் அனைவரும் சொந்த ஊர் சோழவந்தானுக்கு கிளம்பினார்கள் , அனைவரும் ரகசியமாக ஏதோ பேசிக்கொள்ள, தேவிக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை

சத்யன் திருச்சூர் சென்ற அதேவேளை தேவி சோழவந்தான் அழைத்துச்செல்லப்பட்டாள், அங்கே இருந்த அவர்களின் பூர்வீக வீட்டுக்கு வந்தவர்கள், தேவியை ஒரு அறையில் வைத்து பூட்டிய அவள் அண்ணன்கள் இரண்டுபேரும், தேவிக்கு காவலாக அவளின் பெரிய அண்ணியை வைத்துவிட்டு வெளியே போனார்கள்

தேவியின் பெரிய அண்ணிக்கும் சொந்த ஊர்தான் அதேதான் என்பதால் எல்லோரும் அங்கே கூடிப்பேசி, பெரிய அண்ணியின் தம்பிக்கு தேவியை கல்யாணம் செய்து கொடுப்பது என்று முடிவு செய்தனர் , கல்யாணம் அதிகாலை ஊர் கோவில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்


பேசிமுடித்து விட்டு அவர்களின் வீட்டுக்கு வரும்போது இரவு மணி பனிரெண்டு ஆகிவிட்டது, பெரியண்ணியிடம் விஷயத்தை சொல்ல, அவளுக்கு ரொம்ப சந்தோஷம், சொத்து வெளியே போகாமல் அவள் வீட்டுக்கே வருவது ரொம்ப சந்தோஷமாக இருந்தது

கதவில் காது வைத்து வெளியே நடக்கும் உரையாடலை கேட்ட தேவிக்கு, அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை, கட்டிலில் வந்து அமர்ந்தாள், இந்த வீட்டில் அவள் பேச்சு எடுபடாது என்பது மட்டுமல்ல, யாரும் உதவக்கூட வரமாட்டார்கள் என்பது தெளிவாக புரிந்தது

ரொம்ப நிதானமாக யோசித்தாள் தேவி, சத்யன் தொட்ட உடலை வேறு யாருடைய விரல் நுனிக்கூட படவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள், தன் வயிற்றில் இருக்கும் சத்யனின் கருவுக்கு வேறு ஒருவன் அப்பாவாக கூடாது என்பதை திடமாக எண்ணினாள்

தேவியை பொருத்தவரை சத்யன்தான் எல்லாமே, அந்த எல்லாமே இல்லாத வாழ்க்கை ஒன்றுமேயில்லை, சத்யன் குழந்தை பிறந்தால் சத்யனுக்கு மகனாக பிறக்க வேண்டும், இல்லையேல் என்னுடனே சேர்ந்து அழியவேண்டும் என்று மட்டும் உறுதியாக இருந்தாள்

ஆனால் சத்யனிடம் எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதும் புரிந்தது, சத்யனின் கரு தன் வயிற்றில் வளருவது தெரிந்தால் இரவோடு இரவாக தன்னை கொன்றுவிடுவார்கள் என்று கலங்கினாள்

அந்த அறையை ஆராய்ந்தாள், அறையின் ஒருபக்கம் சாமி அலமாரி ஒன்று இருந்தது, அதை திறந்து பார்த்தாள்,, நிறைய சாமிப்படங்கள் மாட்டியிருக்க ஒரு சிறிய மரப்பெட்டியில் மஞ்சள் துணியில் சாமிக்கு முடிந்து வைத்திருந்த காணிக்கை பணம் நிறைய இருந்தது, 


தேவி ஒரு காணிக்கை முடிச்சை அவிழ்த்து பார்த்தாள், உள்ளே பதினொரு ரூபாய் இருந்தது, உடனே கடகடவென சில முடிச்சுகளை அவிழ்த்து தனது முந்தானையில் முடிந்து கொண்டாள்

அன்று அதிகாலை மூன்று மணிக்கு தான் இருந்த கதவை தட்டினாள் தேவி, வெளியே இருந்து “ என்ன வேனும்” என்று தேவியின் அண்ணி கேட்க

“ அண்ணி வயிறு வலிக்குது தோட்டத்துக்கு போகனும் கதவை திறங்க,” என்று சிரமமாக குரல் கொடுக்க .. அடுத்த நிமிடம் கதவு திறக்கப்பட்டது

“ ரெண்டு நாளாதான் ஒன்னுமே தின்னலையே அப்புறம் ஏன் வயிறு வலிக்குது தோட்டத்துக்கு போகனும்னு சொல்ற” என்று நம்பாமல் கேட்டாள் அண்ணி
தேவி எதுவுமே பேசாமல் தலைகுனிந்து நிற்க்க, “ சரி வா போகலாம்” என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்

வீட்டு ஆண்களிடம் “ இவளை கம்மாய் கரைக்கு கூட்டிட்டு போய்ட்டு வர்றேன் நீங்க ஆகவேண்டியதை பாருங்க” என்று சொல்லிவிட்டு தேவியுடன் கண்மாய்க்கு போனாள்

கண்மாயின் கரையோரம் இருந்த முள்ளு மரங்களுக்கு நடுவே இருந்த பாதையில் சிறிதுதூரம் நடந்தவள் “ ம் இப்படியே எங்கயாவது உட்காரு” என்று சொல்லிவிட்டு சிறிதுதூரம் தள்ளி இருந்த மரத்தின் பின்னால் போய் மறைந்தாள் பெரியண்ணி

தேவி சுற்றுமுற்றும் பார்த்து உட்காருவது போல் நடித்து, உட்கார்ந்த நிலையில் கால்கொலுசை கழட்டி அங்கேயே விட்டுவிட்டு மெதுவாக எழுந்து இருட்டுக்கு கண்களை பழக்கிக்கொண்டு ஊருக்குள் செல்லும் பாதையின் எதிர் திசையில் ஓட ஆரம்பித்தாள்

தனது உடலின் மொத்த பலத்தையும் தன் கால்களுக்கு கொடுத்து பின்னால் திரும்பி பார்க்காமல் ஓடினாள் , அவள் அண்ணி கத்தும் குரல் பின்னால் தேய்ந்து மறைந்தது, தேவிக்கு தெரியும் தனது பருத்த உடலை தூக்கிக்கொண்டு அண்ணியால் ஓடி வரமுடியாது என்று

அந்த பாதை முடியும் இடத்தில் ரயில்வே தண்டவாளம் இருக்க தண்டவாளத்தின் ஓரமே ஓடினாள் , சிறிது நேரத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் வர அங்கே சிக்னலுக்காக மதுரை செல்லும் ஏதோவொரு ரயில் நிற்க்க, தேவி திறந்திருந்த கதவின் வழியாக ரயிலில் ஏறிவிட்டாள்

அவள் ஏறிய சிறிது நேரத்தில் ரயில் கிளம்பிவிட்டது, பொழுது விடிய ரயில் மதுரையை அடைந்தது, உடனே இறங்கிய தேவி ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்து, வெளியே ஆட்டோ பிடித்து சத்யனின் வீட்டு முகவரி சொன்னாள்

ஆட்டோ சத்யனின் வீட்டை அடைந்த போது மணி ஏழாகிவிட்டது, ஆட்டோவில் இருந்து அவசரமாக இறங்கி சத்யன் வீட்டைப் பார்க்க, வீடு பூட்டியிருந்தது, தேவியின் கருவுற்ற வயிறு கலங்கி தவிக்க,

பக்கத்து வீட்டில் வெளியே தண்ணீர் தெளித்து கொண்டிருந்த பெண்ணிடம் விசாரித்தாள் “ அவங்க நேத்து நைட்டே வீட்டை காலி பண்ணிட்டு கேரளாவுக்கு போய்ட்டாங்கம்மா” என்று அந்த பெண்மணி சத்யன் அம்மா சொன்னதை அச்சரம் பிசகாமல் அப்படியே சொன்னாள்

அடுத்து என்ன செய்வது எங்கே போவது என்று புரியாமல் நின்றவளை ஆட்டோ டிரைவரின் குரல் கலைத்தது, “ ஏம்மா காசு குடுத்தா நான் கிளம்புவேன்” என்று கூற

தேவி மறுபடியும் ஆட்டோவில் ஏறினாள் “ அண்ணே ஏதாவது கடைகிட்ட நிறுத்துங்க ஒரு பேப்பரும் பேனாவும் வாங்கனும்" என்று சொன்னாள்

ஆட்டோ சிறிதுதூரத்தில் இருந்த கடையறுகே நிறுத்த , தேவி ஓடிப்போய் ஒரு பேப்பரும் பேனாவும் ஒரு காக்கி கவரும் வாங்கினாள், அதில் கடகடவென எதையோ எழுதியவள் மடித்து கவருக்குள் போட்டாள்

"அண்ணே சென்ட்ரல் மார்க்கெட் போங்க" என்று தேவி சொல்ல, ஆட்டோ சென்ட்ரல் மார்க்கெட் போனது, அங்கே முருகனை தேடினாள், அவன் ஏதோவொரு லாரியில் லோடு இறக்குவதாக கணக்குப்பிள்ளை சொன்னார்

இன்னும் கொஞ்சநேரத்தில் அவள் வீட்டு ஆளுங்க வந்து மதுரையையே சல்லடைப் போட்டு தேடுவார்கள் என்பதால் ,முருகனை தேட முடியாது என்று நினைத்து " இந்த கவரை முருகன் அண்ணன் கிட்ட குடுத்து சத்யன் கிட்ட குடுக்கச்சொல்லுங்க" என்று கவரை கணக்குப்பிள்ளையிடம் கொடுத்தாள்

பிறகு மறுபடியும் ஆட்டோவில் ஏறி தனது வீட்டின் முகவரி சொல்லிவிட்டு கண்ணீருடன் இருக்கையில் சாய்ந்துகொண்டாள் ,

அவளுக்கு அவள் வீட்டு ஆட்களின் மிரட்டலால் சத்யன் பயந்து ஊருக்கு போய்விட்டதாக தோன்றினாலும், உள்மனதில் இல்லை என் சத்யன் அப்படிப்பட்டவன் இல்லை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது

ஆட்டோ நின்று டிரைவர் திரும்பி குரல் கொடுக்கவும் கண்திறந்த தேவி தன்னிடம் இருந்த பணத்தில் ஆட்டோவுக்கு கொடுத்துவிட்டு பெரிய இரும்பு கேட்டை திறந்து கொண்டு உள்ளே போனாள்

வீடு பூட்டியிருந்தது இன்னும் யாரும் வரவில்லை என்று தெரிய சிறிது தயங்கி அங்கேயே நின்றாள், பிறகு வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்துக்கு போனாள், அப்போது கார் வந்து நிற்க்கும் ஓசை கேட்க திரும்பி பார்த்தாள்

மொத்த குடும்பமும் வந்து காரில் வந்து இறங்கியது, கூடவே ஊர் சொந்தங்கள் சிலரும் வந்திருந்தார்கள்,... தேவி அவசரமாக அங்கே இருந்த பாத்ரூமுக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டாள்

பாத்ரூமுக்குள் நுழைந்த தேவிக்கு அதிகமாக வியர்த்து, உடல் நடுங்கியது, அவர்கள் கையில் தான் கிடைத்தால் தன்னுடைய கதியென்னாகும் என்று நினைத்து கலங்கினாள்

கண்ணீரும் வியர்வையும் ஒன்றாக கலந்து அவள் மார்புச் சேலையை நனைக்க, வயிற்றில் சத்யனின் கருவுடன் வேறு ஒருவனுக்கு பொண்டாட்டியாவதை விட உயிரை விடுவது மேல் என நினைத்தாள்

இன்னும் உருவமாகாமல் சதை துணுக்காக இருக்கும் தன் வயிற்று கருவை தடவி பார்த்து கண்ணீர் விட்டாள், பிறகு கட்டியிருந்த புடவையை சரசரவென உருவினாள், அதை மாட்ட இடம் தேடினாள், அவளுக்கு வசதியாக தலைக்கு மேலே ஒரு வளையம் இருக்க,..

பாத்ரூமில் இருந்த இரும்பு வாளியை கவிழ்த்து அதில் ஏறினாள், கையில் இருந்த புடவையை கொக்கியில் மாட்டினாள் , பிறகு அதன் மறுமுனையை முடிந்து தனது கழுத்தில் மாட்டினாள், சத்யனை மனதில் கொண்டு வந்தாள்,

சத்யனது நினைவில் முகம் மலர , பிறகு வாளியின் மீதிருந்த கீழே தாவினாள், கழுத்தில் மாட்டிய சுருக்கு இறுக்கிப் பிடிக்க, கால்கள் துடித்து தனது இன்னுயிரை சத்யன் எனும் முட்டாளுக்காக விட்டாள்

பூத்து குழுங்க வேண்டிய அவளுடைய காதல் வாழ்க்கை, அந்த புடவையின் முடிச்சில் அந்தரத்தில் ஊசலாடியது





"ஒரு தனி மனிதனின் மோக வேட்கையால் ..

" இரு உயிர் போனது"

" இங்கே கற்பு ஜெயித்தாலும்..

" முறையற்ற காமம் தோற்றது!!

No comments:

Post a Comment