Saturday, July 11, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 15

அவன் செயல்களையே பார்த்துக்கொண்டிருந்த மான்சியிடம் வந்து “ ஏய் பசிக்குது போய் சாப்பாட்டை இங்க எடுத்துகிட்டு வா சாப்பிடலாம்” என்று சத்யன் சொல்ல, மான்சி திகைப்புடன் அவனை பார்த்து “ நீங்க உள்ள வேற டிரஸ் போட்டுக்கலையா ” என்று கேட்டாள்

அவளின் திகைப்பும் கேள்வியும் சத்யனுக்கு சிரிப்பை வரவழைக்க வாய்விட்டு சிரித்தவன் “ஏய் உள்ள எதுவும் போடாததுக்கும் சாப்பாடு சாப்பிடுறதுக்கும் என்ன சம்மந்தம் மான்சி” என்று சிரிப்பினூடே சத்யன் கேட்க

“ அதுவந்து அது எப்படி சாப்பிடமுடியும், நீங்க வேட்டியில்ல கட்டியிருக்கீங்க” என்று பதில் கேள்வி கேட்டாள் மான்சி

சத்யனுக்கு அவள் பயம் புரிந்தது, நல்லவேளை இவ எதையும் பார்க்கறதுக்கு முன்னாடி கிணத்துக்குள்ள குதிச்சுட்டோம் என்று நினைத்தவன் “ இப்போ நீ என்ன சொல்ல வர்ற அந்த டவுசர் காய்ஞ்சு நான் அதை போட்டுகிட்டு வந்தாதான் சாப்பாடு போடுவேன்னு சொல்றியா” என்று கிண்டலாக கேட்டான்

“அதுக்கில்ல” என்று மான்சி இழுக்கும்போது “ ஏலேய் ராசு வந்து இந்த சாப்பாட்ட எடுத்துட்டு போய் சாப்புடுய்யா நேரமாவுதுல்ல” என்று தனலட்சுமியின் குரல் கேட்டது



“இதோ வர்றேன்ம்மா” என்று ஓடிய சத்யன் சிறிதுநேரத்தில் கையில் இரண்டு தூக்குசட்டியும் இரண்டு தேக்கு இலையும் ஒரு சொம்பும் எடுத்துவந்தான், பாயில் எல்லாவற்றையும் வைத்தவன், சொம்பில் தொட்டியிலிருந்து தண்ணீரை மொண்டு எடுத்துவந்து வைத்துவிட்டு பாயில் உட்கார்ந்து

“ என்னங்க மேடம் இப்பவாவது சாப்பாடு எடுத்து வைப்பீங்களா இல்ல அதுவும் நானே போட்டு சாப்பிடவா” என்று அவளைப்பார்த்து கூற

“ஸாரிங்க இதோ எடத்து வைக்கிறேன்,” என்ற மான்சி அவனுக்கு ஒரு இலையை வைத்து தூக்கில் இருந்த இட்டிலியை எடுத்து இலையில் வைத்து மற்றொரு தூக்கில் இருந்த சாம்பாரை ஊற்றினாள்

சத்யன் ஒரு இட்லியை விண்டு சாம்பாரில் தொட்டு மான்சியின் வாயருகில் எடுத்துச் சொல்ல, சற்று பின்வாங்கிய மான்சி “அய்யே நீங்கதானே பசிக்குதுன்னு சொன்னீங்க மொதல்ல நீங்க சாப்பிடுங்க” என்று மெல்லிய குரலில் அதட்ட

சத்யன் எதுவும் பேசாமல் கையை நீட்டியபடியே இருந்தான், அவனுடைய பிடிவாதம் உணர்ந்து மான்சி வாயைத்திறந்து அவன் விரல்களில் இருந்த இட்லியை வாங்கிக்கொள்ள, சத்யன் முகம் மலர மறுபடியும் ஒரு வில்லையை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டு, இவன் வாயை திறக்க, மான்சி புரிந்துகொண்டு இட்லியை எடுத்து அவனுக்கு ஊட்டினாள், இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டு கிட்டத்தட்ட பத்து இட்லியை காலி செய்தார்கள்

நாமளா இவ்வளவு சாப்பிட்டோம் என்று மான்சிக்கே ஆச்சிரியமாக இருந்தது, சத்யன் எழுந்து வாய்க்காலில் கைகழுவிவிட்டு பாத்திரங்களை கழுவினான், மான்சியும் கைகழுவிவிட்டு “ குடுங்க நான் கழுவுறேன், எப்படி கழுவுறதுன்னு பூங்கொடிகிட்ட கத்துக்கிட்டேன்” என்றவள் பாத்திரங்களை கழுவி எடுக்க

அதையெல்லாம் வாங்கிய சத்யன் “ நீ இங்கயே இரு நான் போய் இதையெல்லாம் வச்சுட்டு அறுப்பு வேலை ஆச்சான்னு பார்த்துட்டு வர்றேன்” என்று மான்சியிடம் கூறிவிட்டு வரப்பில் ஏறி அங்கே ஓரளவுக்கு காய்ந்திருந்த டவுசரை எடுத்து போட்டுக்கொண்டு மோட்டர் ரூமுக்குள் போய் பாத்திரங்களை வைத்துவிட்டு அறுப்பு அறுக்கும் வயலை நோக்கி நடந்தான்

கால்வாசி வயல் கதிரறுப்பு முடிந்திருக்க பெண்கள் அனைவரும் அங்காங்கே வரப்பில் உட்கார்ந்து அவர்கள் எடுத்து வந்திருந்த உணவை சாப்பிட்டு கொண்டிருக்க, கௌசல்யா பூங்கொடி தனலட்சுமி சரவணன் எல்லோரும் ஒரு வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்


சத்யன் அவர்களின் அருகில் போய் உட்கார “ என்னாண்ணே சாப்பிட்டயா, மதினி சாப்புட்டுச்ச,” என்று பூங்கொடி கேட்டதும் “ ம் ரெண்டு பேரும் சாப்ட்டோம்மா” என்றவன் தனலட்சுமியை பார்த்து

“ ஏம்மா வானத்தை பார்த்தா ஒரு மந்தாரமா இருக்கு எதுக்கும் மழை வர்றதுக்குள்ள தார்பாய் எடுத்துட்டு போய் கதிரு கட்டையெல்லாம் மூடி வச்சிரவா” என்று கேட்க

“ ஆமாம் ராசு நானும் அதத்தான் நெனைச்சுகிட்டு இருந்தேன், உங்கப்பா சரவணன் பம்புசெட்ல இருந்து அவனோட தார்பாயை எடுத்துட்டு வரப்போயிருக்காக, ரெண்டு பாயையும் ரெடியா வச்சுக்கலாம் மழை வந்தா கதிர் கட்டை எல்லாம் போட்டு மூடிப்புடுவோம், அதுசரி அந்த புள்ளய எங்க தனியா விட்டுட்டு வந்த நீ மொதல்ல அங்க போ ராசு, இங்க இருக்கிற வேலையை நாங்க பார்த்துக்கிடுவோம்ல” என்று தனலட்சுமி சொன்னாள்

“ ம் மாமரத்துகிட்ட உட்கார்ந்திருக்காம்மா இதோ போறேன் ”, என்றவன் இட்லியை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்த கௌசல்யாவை பார்த்து “ என்ன மதினி எங்களுக்கெல்லாம் சீம்பால் இல்லையா” என்று கேட்க

அதுவரை அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த கௌசல்யா நிமிர்ந்து சத்யனை பார்த்து “ ஏன் மாமா நான்தான் புள்ள பெத்து மூனு வருஷமாகுதே இப்பவந்து சீம்பால் கேட்டா நா எங்க மாமா போறது” என்று வருத்தப்படுவது போல் நக்கலாக கேட்க

அவள் வார்த்தைகளின் அர்த்தம் சத்யனுக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது, கௌசல்யா பக்கத்தில் இருந்த சரவணன் வாயிலிருந்த இட்லியை விழுங்கிவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க, தனலட்சுமி கௌசல்யாவின் தலையில் தட்டி “ஏன்டி உன் வாய் சும்மாவே இருக்காதா” என்று சிரிக்க

“ அய்யோ கடவுளே, உன்னைய எங்க அத்தையும் மாமனும் பெத்தாங்களா இல்ல தவுட்க்க வாங்கிட்டு வந்தாங்களா, என்னா வாய்டா ஆண்டவா” என்று சத்யன் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகரந்தான்

“ போ மாமா போ சீக்கிரமா சீம்பால் வேனும்னு என் தங்கச்சிகிட்ட கேளு அவ ரெடி பண்ணுவா,” என்று அவன் முதுகுக்கு பின்னால் கௌசல்யா ஏளனம் பேச, சத்யன் யாரோ துரத்துவது போல வரப்பில் வேகமாக போனான்

அவன் மாமரத்தின் அருகே போன போது மான்சி கையை மடித்து தலைக்கு கீழே வைத்துக்கொண்டு பாயில் உறங்கிக்கொண்டிருந்தாள்,

அவளருகே போய் மெதுவாக அமர்ந்த சத்யனுக்கு, அவளை பார்க்கவே சங்கடமாக இருந்தது, எவ்வளவு பெரிய கோடீஸ்வரி இப்படி வயக்காட்டில் பொத்தலான பாயில் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்குறாளே, இதுக்காகத்தான் நான் பயந்து இவளைவிட்டு ஒதுங்கியது, கடைசியில் நான் பயந்ததுபோலவே நடந்துருச்சே என வருந்தியவன் மெதுவாக அவள் தலையை அலுங்காமல் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டான்

ஆனால் அவன் மடியில் தலைவைத்த மறுநிமிடமே மான்சி விழித்துக்கொண்டாள், அவனை பார்த்து சிரித்து “ ஸாரிங்க நல்லா காத்து வந்துச்சா அதான் தூங்கிட்டேன்” என்று கூறிக்கொண்டே எழுந்து அமர்ந்தவளை மறுபடியும் தன் மடியில் சாய்த்துக்கொண்டான் சத்யன்

சத்யனுக்கு கண்கள் கலங்கியது. அவள் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “ மான்சி எல்லாம் என்னாலதான ஏஸி ரூம்ல பெட்ல படுக்க வேண்டியவ, இப்படி இங்கவந்து படுத்துருக்க, இதுக்குத்தான் மான்சி நான் பயந்தேன், என்னிக்கு நைட்ல ஜன்னல்கிட்ட நின்னு என்னை சாப்பிட்டு வரச்சொல்லிட்டு, நான் வரவரைக்கும் நீ அங்கயே ஜன்னல் கம்பியை பிடிச்சுகிட்டு நின்னப்பாரு அந்த நிமிஷமே என்னோட மனசு உன் காலடியில விழுந்துருச்சு,”என்றவன் கலங்கிய தன் கண்களை அவள் கையாலேயே துடைத்துக்கொண்டு மறுபடியும் சொன்னான்

“ மான்சி உன்மேல் அளவுகடந்த காதல் இருந்தும். உன்னை எப்படியும் என்னால அதேபோல சொகுசா வாழவைக்க முடியாதுன்னு நெனைச்சிதான் நான் பயந்தேன் மான்சி, தேவதை மாதிரியிருக்கும் உன்னைய கொண்டு வந்து இந்த வயக்காட்டுல வச்சு கஷ்டப்படுத்த மனசில்லாம தான் மான்சி நான் உன்னைவிட்டு ஒதுங்கி ஒதுங்கி போனேன்., ஆனா நீ மட்டும் ஒரு ஏழை வீட்டு பொண்ணா பிறந்திருந்தா உன்னை பார்த்த மறுநிமிடமே தாலியை கட்டி தூக்கிட்டு வந்திருப்பேன் மான்சி, இப்போ பாரு இந்தமாதிரி பாய்ல படுத்துருக்க, நீ என் உயிர் மான்சி ஆனா அந்து உயிரை சரியான இடத்துல வச்சி என்னால பாதுக்க முடியுமான்னு தான் இத்தனை நாளா பயந்தேன் மான்சி ” என்று வேதனை குரலில் சத்யன் தன் மனதில் இருந்த காதலையெல்லாம் வார்தைகளாக கொட்டிவிட்டு அவள் கைகளில் தன் முகத்தை வைத்துக்கொண்டு குமுறி கண்ணீர் விட்டான்

அவன் பேசும் வரை எதுவுமே குறுக்கிட்டு பேசாத மான்சி அவனிடமிருந்து தன் கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு , அவன் முகத்தை இழுத்து தன் மார்போடு வைத்து அணைத்து அவன் கண்களில் வழிந்த கண்ணீரை தன் சேலை தலைப்பால் துடைத்துவிட்டு, அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டு, பிறகு அவன் தலையை தன் மடியில் வைத்து கொண்டு மறுபடியும் குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள்

பிறகு அவன் நெஞ்சில் இருந்த முடிகளை தன் விரல்களால் பற்றியிழுக்க,.. அவன் வலியால் 'ஆவ்வ்வ்வ்' என்று மெதுவாக கத்திக்கொண்டே " ஏய் ஏன்டி இப்படி புடிச்சு இழுக்குற வலிக்குது," என்று கூற


அவன் தன்னை முதன்முறையாக டி போட்டு பேசியதில் உள்ளம் உற்சாகமடைய " ம் வலிக்குதா, நல்லா வலிக்கட்டும், பின்ன என்னா, நெஞ்சுல இவ்வளவு முடியை வச்சுகிட்டு அழுதா அது ஆம்பிளைக்கு அழகா, கொஞ்சம்கூட பொருந்தலை" என்றவள் குனிந்து அவன் காதருகில் தனது இதழ்களை வைத்து " டேய் அழுமூஞ்சி பையா உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லட்டுமா" என்று கிசுகிசுப்பாய் கேட்க

" என்னது டேய்யா, நான் டி போட்டதுக்கு பதிலா, சரி இதுவும் நல்லாத்தான் இருக்கு, ஆனா இது மாதிரி மடியில படுத்திருக்கும் போது மட்டும்தான் சொல்லனும், சரி என்ன முக்கியமான விஷயம் சொல்லு" என்று சத்யன் அவசரப்படுத்த

ஒரு நிமிடம் மவுனமாக அவனையே பார்த்தவள் " நீங்க சொன்னீங்களே ஏஸி ரூம் பெட் எல்லாமே, எப்போ நான் உங்களை ஜன்னல் வழியா பார்த்தேனோ அந்த நிமிஷத்தில் இருந்து நான் உபயோகிக்கிறது இல்லைங்க, நான் உங்களை விரும்புறேன்னு எனக்கு புரிஞ்சது, என்னிக்கு இருந்தாலும் உங்ககூட தான் என் வாழ்க்கைன்னு என் மனசுல முடிவு பண்ணிட்டேன், நீங்க ஏழை விவசாயின்னு தெரியும், அதுக்கு ஏத்த மாதிரி நானும் இருக்கனும்னு நெனைச்சேன், அன்னிலேருந்து பெட்ல படுக்கிறது இல்ல தரையில பெட்சீட்டை விரிச்சு அதுலதான் படுத்துக்குவேன், ஏஸி போட்டுக்க மாட்டேன், வெறும் பேன் மட்டும்தான் வச்சுகிட்டு தூங்குவேன், ரொம்ப காஸ்ட்லியான சாப்பாடு டிரஸ் எல்லாத்தையும் கூட கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிட்டேன், இது எல்லாமே உங்களுக்காக உங்கமேல இருந்த தீவிரமான காதலுக்காக, இதுக்கும் மேல நீங்க கிடைக்கறதுக்காக நான் என் உயிரைவிட சொன்னாக்கூட விட்டுருப்பேன் சத்யா" என்று மான்சி கண்களில் வழிந்த கண்ணீருடன் சொல்லிக்கொண்டே போக

சத்யன் அவள் மடியிலிருந்து எழுந்து அமர்ந்து அவளை முரட்டுத்தனமாக இழுத்து எங்கெங்கு என்று தோன்றாமல் அவள் முகம் முழுவதும் வெறித்தனமாக மாறி மாறி முத்தமிட்டு " ஏன்டி இதெல்லாம், எதுக்காக, அப்பிடி என்னடி என்கிட்ட இருக்கு, நான் இதுக்கெல்லாம் என்ன கை மாறுடி செய்யப்போறேன்மான்சி, உன்னை எப்படி வச்சு பாதுகாக்கப் போறேன் மான்சி, நீ யாருடி எங்கருந்து வந்த மான்சி, என் மான்சி என் மான்சி மான்சி" என்று சத்யன் என்ன பேசுகிறோம் என்று எதுவுமே புரியாமல் புலம்பி கண்ணீர் விட, ... அவன் கைகளில் இருந்த மான்சியோ தன் கண்ணீராலேயே அவனுக்கு பதில் சொன்னாள் 




சத்யனும் மான்சி இறுக்கி அணைத்துக்கொண்டு தங்களின் காதலை கண்ணீராக வெளிப்படுத்த. சத்யன் மான்சியின் மார்பில் தன் முகத்தை வைத்துக்கொண்டு குமுறிக்கொண்டிருந்தான், மான்சியோ அவன் உச்சந்தலையில் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்

அப்போது மரத்தில் மாட்டியிருந்த தொரட்டி கிளையை வளைத்துக்கொண்டு கீழே விழுந்து இருவரையும் நிதானத்துக்கு கொண்டு வந்தது, சத்யன் மெதுவாக மான்சியிடம் இருந்து விலகி அமர்ந்து தன் முகத்தை தோளில் இருந்த துண்டால் துடைத்துக்கொண்டு, மான்சியை இழுத்து தன் மார்பில் சாய்த்து அவள் முகத்தையும் துடைத்துவிட்டான்

அவன் மார்பில் இருந்த மான்சி மெதுவாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “ என்மேல நீங்க இவ்வளவு அன்பு வச்சிருப்பீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கலைங்க, எனக்கு இப்படியே உன் நெஞ்சுலயே செத்துடலாம் போல இருக்கு சத்யன்” என்றதும் சத்யன் பட்டென்று அவள் உதட்டில் அடித்து

“ ஏய் என்ன லூசுத்தனமா பேசுற, இன்னும் நாம வாழவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள சாவை பத்தி பேசுற, நீயும் எனக்காக இப்படியெல்லாம் இருந்திருப்பேன்னு நான் நெனைச்சுக்கூட பார்க்கலை மான்சி, ஆனா மான்சி உன் மேல் இருந்த அளவுகடந்த காதல்தான் அன்னைக்கு காருக்குள்ள உன்கிட்ட அப்படி நடந்துக்க தூண்டுச்சு. ஆனா நீ அழுததும் என் மனசு எப்படி கலங்கி போச்சு தெரியுமா, ஒரு நிமிஷம் இந்த உலகமே வெறுத்துபோச்சு, இவ்வளவுக்கு அப்புறம் நான் ஏன் உயிரோட இருக்கேன்னு தோணுச்சு, உன்மேல உண்மையான காதல் இருந்திருந்தா உன்னை நான் நம்பியிருக்கனும்”,

“ ஆனா நம்பாமல் உன் கன்னத்தில் அறைஞ்சு. உன்கிட்ட எவ்வளவு கேவலமா நடக்கமுடியுமோ அவ்வளவு மோசமா நடந்துகிட்டது இதெல்லாம் உண்மை காதல் இல்லைன்னு நெனைச்சு தான் அன்னிக்கு நான் வேலையைவிட்டு வந்தது, ஆனா பஸ்ஸில் வரும்போது உன்னை கைநீட்டி அறைஞ்சதுக்காக நான் அழுதேன் தெரியுமா” என்ற சத்யன் அப்போது அறைந்ததற்காக இப்போது அவள் கன்னத்தில் தன் உதடுகளால் வைத்தியம் செய்தான்

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை விண்ணில் பறக்கவிட “ ஆனா சத்யன் அன்னிக்கு என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே வேலையைவிட்டு வந்துட்டீங்க, மறுநாள் காலையில உங்ககிட்ட நடந்ததை சொல்லனும்னு நெனைச்சேன் ஆனா அதுக்குள்ள நீங்க இங்க வந்துட்டீங்க, அப்போ என் மனசுல தோனுனது எல்லாம் ஒரு விஷயம்தான்,”

“ உடனே உங்ககிட்ட வந்து சேரலைன்னா நிச்சயமா இனிமேல் உங்களை எப்பவுமே பார்க்க முடியாதுன்னு தான் மறுபடியும் மறுபடியும் தோணுச்சு அதான் உடனே கிளம்பி வந்துட்டேன், ஆனா வந்ததுக்கு அப்பறம் உங்களோட நடவடிக்கைகளை பார்த்துட்டு உங்களுக்கு என்மேல அன்பு இல்லையோன்னு நெனைச்சேன், ஆனா அன்பே இல்லேன்னாலும் பரவாயில்லை உங்களைவிட்டு போகக்கூடாதுங்குற முடிவில் மட்டும் ரொம்ப உறுதியா இருந்தேன், அதுல ஜெயிச்சும் காட்டிட்டேன்” என்ற மான்சி அவனை இறுக்கி அணைக்க

“ இல்ல மான்சி எப்படியிருந்தாலும் உன் அம்மா அப்பாவை நீ நெனைச்சு பார்த்திருக்கனும், அவங்களை நெனைச்சால என் மனசு குற்ற உணர்வில் தவிக்குது மான்சி, நான் தயங்கினதே அதனாலதான் மத்தபடி உன்னை மேரேஜ் பண்ணிக்க எனக்கு கசக்குமா” என்று அவளை அணைத்தவன் “ ஏன் மான்சி உன் அப்பா அம்மா உன்னை மன்னிச்சு ஏத்துக்குவாங்களா?” என்று சத்யன் கேட்க

“ அதென்ன என்னை மன்னிச்சு ஏத்துக்குவாங்களா, நம்மலைன்னு சொல்லுங்க,..... அதெல்லாம் ஏத்துக்குவாங்க என்மேல் இருக்குற பாசம் அவங்களை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திரும், ஆனா சத்யன் அன்னிக்கு என்ன நடந்ததுன்னு நீங்க இன்னும் கேட்கலை,.. அன்னிக்கு அந்த ரோஹித்” என்று ஆரம்பித்தவளின் வாயை சத்யன் மூடிவிட்டு

“ வேனாம் மான்சி எதுவுமே சொல்லாதே என்ன நடந்திருக்கும்னு என்னால யூகிக்க முடியுது, நீ எதுவும் சொல்ல வேண்டாம், எனக்கு எதுவும் தெரியவும் வேண்டாம்” என்று சத்யன் சொல்ல

தன் வாயை பொத்தியிருந்த அவன் கைகளை விலக்கிய மான்சி “ இல்ல சத்யன் என் மன நிம்மதிக்காவது நீங்க கேட்டுத்தான் ஆகனும் அவன் பேரு ரோஹித், என்கூட படிச்சவன், பர்ஸ்ட் இயர்லயே அவன் எனக்கு லவ் லட்டர் கொடுத்து நான் அதை பிரின்ஸிபால் கிட்ட குடுத்து ரொம்ப பிரச்சனை ஆயிருச்சு, அதுக்கப்புறம் அவன் என்னை தொந்தரவு பண்ணலை, ஆனா அன்னிக்கு பர்த்டே பார்ட்டியில் அவன்தான் எனக்கு கோக் எடுத்துட்டு வந்து குடுத்தான், நானும் சரி இவனால இந்த ரெண்டு வருஷமா எந்த தொந்தரவும் இல்லையேன்னு நெனைச்சு நட்பாகத்தான் அதை வாங்கி குடிச்சேன், குடிக்கும் போதே ஏதோ வித்தியாசம் தெரிஞ்சுது”,

“ஆனா எல்லார் முன்னாடியும் அவன் ரொம்ப நட்பா சிரிச்சு குடுத்ததால எதுவும் தப்பாயிருக்காதுன்னு நெனைச்சுத்தான் குடிச்சேன் சத்யா, அதுக்கப்புறம் கொஞ்சம் தடுமாற்றமா இருந்தது, அவன் என்னை எங்கயோ கூட்டிட்டு போறான்னு மட்டும் தெரிஞ்சுது ஆனா அவனை என்னால தடுக்க முடியலை, மனசுக்குள்ள மட்டும் நீங்க வரனும்னு கடவுளை வேண்டிகிட்டே இருந்தேன், அதேமாதிரி நீங்க வந்து என்னை காப்பாத்தினீங்க, ஆனா நீங்க என்னை நம்பலைன்னதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு, இப்போ என்னை நம்புறீங்க தானே சத்யன்” என்று மான்சி கேட்க

அவளை இறுக்கி அணைத்து அவள் உச்சியில் தனது உதடு ஒற்றிய சத்யன் “ மான்சி நீ இப்படி கேட்கிறது எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு, உன்னை நம்பலைன்னா நான் என்னையே நம்பாத மாதிரி, இனிமேல் இப்படி கேட்காதே மான்சி ” என்று வருத்ததுடன் கூறியவன்

“ ஏய் நமக்கு கல்யாணம் ஆகி இது மூனாவது நாள், அதுக்குள்ள இப்படி கண்ணைக் கசக்குனா எப்புடி, இன்னியோட அழுகைக்கான கோட்டா முடிஞ்சுபோச்சு இனிமேல் சந்தோஷமும் சிரிப்பும் மட்டும்தான் உன் முகத்தில் இருக்கனும்,” என்று அவள் இதழ்களை விரலால் வருடிக்கொண்டே சொல்ல

சரியென்று தலையசைத்த மான்சி " ஏங்க நீங்க இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கயேதான் இருப்பீங்களா சாப்பிட கூட வீட்டுக்கு வரமாட்டீங்களா" என்று ஏக்கத்துடன் கேட்க

அவளுடைய ஏக்கம் சத்யனை என்னவோ செய்தது " ஆமா மான்சி நெல்லு வீட்டுக்கு வர்ற வரைக்கும் ஒரு ஆள் இங்கயே இருக்கனும், ஆனா எனக்கு ஒரு ஐடியா இருக்கு, தினமும் எனக்கு சாப்பாடு எடுத்துகிட்டு நீ இங்க வந்துரு, அப்புறமா நீ மெதுவா வீட்டுக்கு போகலாம், என்ன மான்சி வருவியா" என்று சத்யன் தாபத்துடன் கேட்டான்


" ம் கண்டிப்பா நான் தினமும் வருவேன், இப்போ எத்தனை மணிக்கு வீட்டுக்கு போகனும், நீங்க போய் வேலையை பார்க்கலையா, இங்கயே என்கூட பேசிகிட்டு இருக்கீங்க" என்று மான்சி கேட்டாள்

" அங்கபோன போய் பொண்டாட்டி கூட இருடா இங்க ஏன் வந்தேன்னு விரட்டுறாங்க, நீ என்னடான்னா அங்க போகச்சொல்லுற, ஆனா என் மனசு என்ன சொல்லுதுன்னா, எப்பத்தான் எல்லாமே முழுசா நடக்கும்னு உன்கிட்ட கேட்க சொல்லுது," என்ற சத்யன் அவளை தன் மடியில் சாய்த்து " மான்சி ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால கட்டுபடுத்திக்கவே முடியலை, என்னோட நிலைமை உனக்கு புரியுதா மான்சி" என்று ஏக்கமும் தாபமுமான குரலில் கேட்க

அவன் மடியில் படுத்திருந்த மான்சி வெட்கத்தில் விழிமூடி " ம் எனக்கு மட்டும் இதெல்லாம் இல்லையா என்ன.... ஆனா எங்க எப்படின்னு நீங்கதான் சொல்லனும், எனக்கென்ன தெரியும் " என்று மயக்கும் குரலில் சொன்னாள்

" அவ்வளவு தானே இதுபோதும் மான்சி எனக்கு ... இரு அதுக்கு இன்னிக்கே சந்தர்ப்பம் அமைக்கிறேன்" என்ற உற்சாகமாக கூறிய சத்யன் தன் மடியில் கிடந்த மனைவியின் இதழ் நோக்கி குனிந்தான்






" காத்திருந்து தவிப்பதே இனிமைதான்....

" அதனினும் அதை நினைத்து நினைத்து...

" ஏங்கித் தவிப்பது அதைவிட இனிமைதான் ....

" அந்த இரவின் உறவை நினைத்து நினைத்து..

" மனம் சருகானாலும் அதிலும் இனிமைதான்....

" இதோ இன்று இன்று என நினைத்து நினைத்து...

" தாபத்துடன் காத்திருப்பதும் இனிமைதான்....

" வரப்போகும் தேன் நிலவை நினைத்து நினைத்து..

" விண்ணில் காயும் நிலவை பார்த்து ஏங்குவதும் இனிமைதான்....

" அவளை தொடப் போகிறேன் என்று நினைத்து நினைத்து

" தலையனையை கட்டிக்கொள்வதும் இனிமைதான்!


No comments:

Post a Comment