Saturday, July 18, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 6

பூரணியால் இன்னும் தன் கண்களை தானே நம்ப முடியவில்லை. விஜய் வாசலில் நிற்க அவனை ஒட்டி அருகில் ஒரு 25 வயது அழகிய பெண் நிற்க, அவளுக்கு புரிந்தது. "என்னடா யாரு இந்த பொண்ணு?" என்று கேட்க, "அக்கா வாசல்ல வச்சு கேக்காதே, வீடுக்குள்ள போயி பேசலாம்" என்று உள்ளே நுழைய அந்த பெண்ணுக்கு இருவரும் பேசியது புரியாதது போல் பார்த்தாள். ஜனனிக்கு புரிந்தது. அந்த பெண்தான் விஜய் மாமாவின் காதலியாக இருக்க வேண்டும் என்று புரிந்து, அவளை அழைத்து கொண்டு உள்ளே செல்ல, மாமாவை பார்க்க வேண்டும் என்று சதானந்தனின் அறைக்குள் நுழைந்தான் விஜய். 



அவனை பின்பற்றி வந்த பூரணி, அவனிடம் "என்னடா ஒன்னும் சொல்லாம போற" என்று கேட்க, அவளை கையை காட்டி பேசாமல் இருக்க சொல்லி விட்டு சதானந்தனின் நலம் விசாரித்தான். 


பிறகு சேரில் அமர்ந்து "என்ன அக்கா யார் அந்த பொண்ணு அப்படின்னு தெரியனும்? அவ்வளவு தானே, அவ வேற யாரும் இல்லை,என்னோட ஆபீஸ் கலீக், ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மென்ட். பேரு லக்ஷ்மி பிரியா. சொந்த ஊரு குண்டூர், அப்பா மிளகாய் பிசினஸ் பண்ணுறார். ரெண்டு பேரும் கடந்த ஆறு மாதமா காதலிச்சு வரோம். அவள் வீட்டில இந்த விஷயம் தெரிஞ்சதால அவசரமா ரெஜிஸ்டர் மரேஜ் பண்ணிட்டோம். கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகுது. உன்கிட்ட சொல்லலாம்னு பார்த்தா, மாமாவுக்கு வேற ஆக்சிடென்ட் ஆகி உடம்பு சரியில்லாம போச்சு. அதுனாலதான் போன்ல சொல்லாம நேர்ல சொல்லலாம்னு வந்தோம்." அவன் பேச்சை முடிக்கும் முன்னே அவனை கன்னா பின்னாவென்று திட்ட ஆரம்பித்தாள்

"ஏன்டா, உனக்கு நன்றி இருக்காடா. உனக்கு சோறு போட்டு, படிப்பு சொல்லி குடுத்த எங்களுக்கு நீ காட்டுற நன்றி இதுதானா. என் பொண்ணை, ஜனனியை நீ கல்யாணம் பண்ணிக்கிவன்னு இருந்தா இப்படி எங்க தலைல கல்ல தூக்கி போட்டுட்டியே. நீ நல்லா இருப்பியா. உங்க மாமா நெலமைய பாருடா. எங்களுக்கு யாருடா இருக்கா. உன்னோட சுயநலத்தால எத்தனை பேரு பாதிக்கபடுறாங்க,பாருடா" என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க, 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜனனி உள்ளே நுழைந்து "அம்மா நீ பேசாம இருக்க மாட்ட. நம்ம வீட்டுக்கு மஹாலக்ஷ்மி மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி மாமா கூட்டி வந்துருக்காரு. அதை நெனைச்சு சந்தோசபடுவியா. இப்படி சாபம் கொடுக்க கூடாது.ரெண்டு பேரும் மனசு ஒத்து கல்யாணம் பண்ணி இருக்காங்க. உனக்கு மனசு இருந்தா வாழ்த்து, இல்லேன்னா ஒதுங்கி நில்லு. 
அந்த பொண்ணு பாவம். அதுக்காக நாம விட்டு கொடுக்கனும்மா. அதோட எனக்கு மாமாவை கல்யாணம் பண்ணிக்க ஆரம்பத்திலே இருந்து இஷ்டம். இல்லை, அவங்க கல்யாணம் ஆண்டவன் போட்ட முடிச்சு. நாம வாழ்த்தி அனுப்புறது தான் முறை" என்று சொல்ல, "இல்லைடி எனக்கு மனசு ஆறலை" என்று கண்ணீர் விட்டு புலம்ப ஆரம்பித்த பூரணியை "ஏய் கொஞ்சம் சும்மா இரு" என்று சதானந்தன் சத்தம் போட்டு அடக்க, வேறு வழி இல்லாமல், புலம்பலை நிறுத்தினாள்

"அப்பறம் என்னாச்சு" என்று சதானந்தன் கேட்க, "இப்போ அவங்க வீட்டில ஒத்துகிட்டாங்க. ஆரம்பத்தில் இருந்த கோபம் இப்போ குறைந்து விட்டது. இதுக்கு இடையில் எங்க ரெண்டு பேருக்கும் ஹைதராபாத் பிரான்ச் ஆபீசுக்கு ட்ரான்ஸ்பர் கேட்டுரிந்தோம். நேத்து தான் ஆர்டர் வந்தது, உடனே உங்க எல்லாரையும் பார்க்கலாம்னு நாங்க ரெண்டு பேரும் வந்துட்டோம்" என்று விஜய் சொன்னான்.

உள்ளே அமர்ந்திருந்த ஜனனி ப்ரியாவிடம் பேசி கொண்டு இருக்க, அவர்களுக்கு இடையில் வந்து அமர்ந்த பூரணி மன்னிச்சுடும்மா என்று சொல்லி பேச ஆரம்பித்தாள். 

ப்ரியாவுக்கு பூரணி சொன்னது புரிந்தாலும் அவளுக்கு மொழி புரியாத காரணத்தால் ஜனனி இருவருக்கும் இடையில் பேச்சை மொழி பெயர்த்து கொடுத்தாள். உரையாடல் ஆங்கிலத்தில் தொடர நிறைய விஷயங்கள் அந்த மூன்று பெண்களும் பேசி கொண்டிருந்தனர். 

கொஞ்சநேரத்தில்அனைவரும்சமாதானம்ஆக, மதியஉணவுவீட்டிலேசாப்பிட, அடுத்த நாள் ஆபீஸ் வேலை இருப்பதால் இன்று மாலை திரும்ப செல்ல வேண்டும் என்று விஜய் சொன்னான். 

பூரணி புது சேலை மற்றும் வேஷ்டி எடுத்து கொடுக்க, புது மணமக்கள் சதானந்தன் பூரணி தம்பதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி ஹைதராபாத் திரும்பினர்.

அதை தொடர்ந்த இரண்டு நாட்கள் பூரணி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வேதனைபட்ட அவள் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று ஜனனியும், சதானந்தனும் முடிவு செய்து அவளை தொந்தரவு செய்யவில்லை. இதற்கு இடையில் விஜய் போனில் ஜனனியிடம் பேசினான். அவனுக்கு அவன் அக்கா மனது புரிந்தாலும் என்ன செய்வது என்று தெரியவில்லை. மனம் வருந்தினான்.இன்னும் எதாவது பண உதவி வேண்டும் என்றால் தயங்காமல் கேட்க சொன்னான். இந்த விஷயம் அக்காவுக்கு தெரிய வேண்டாம் என்று அவளிடம் வேண்டி கொண்டான்.

ஜனனிக்கு அவள் மாமாவின் மனது புரிந்தது. "கொஞ்சம் அக்காவிடம் கொடுங்க" என்று சொல்லி போனில் ப்ரியாவிடம் பேசினாள்.ப்ரியாவிடம் வீட்டில் அம்மா நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்க, ப்ரியாவும் "எனக்கு அவங்க மனசு புரிகிறது. கொஞ்சம் நாள் பொறுத்தா அவங்க மனசு மாறும். நாங்க திரும்ப ஒரு ரெண்டு மாதம் கழித்து வருகிறோம் என்று சொல்ல, ஜனனி சந்தோசத்துடன் கொஞ்ச நேரம் பேசி விட்டு போனை வைத்தாள். அக்காவுக்கு எவ்வளவு நல்ல மனசு என்று நினைத்து கொண்டே, அப்பாவிடம் நடந்த விஷயங்களை தெரிவித்தாள். 

ஒரு வாரம் கடகட வென்று ஓட, ஜனனி எவ்வளவு நாள் தான் சும்மா வீட்டில் இருப்பது என்று நினைத்து " அப்பா உங்க மில்லில ஏதோ ஒரு வேலை போட்டு தரேன்னு சொல்லி இருக்காங்க. அதால நான் இப்போ போய் உங்க ஜெனரல் மேனேஜர்ரை பார்த்து பேசி விட்டு வரேன்" என்று சொல்ல, சதானந்தன் யோசித்து பார்த்து, "நீ சொல்றதும் சரிதான், நானும் கூட போன்ல பேசுறேன். கட்டாயம் adminஆபீஸ்ல ஏதாவது வேலை கிடைக்கும்" என்று சொன்னார். சொன்னபடி G M வேலை போட்டு வேலை நேரம் காலை 8 முதல் மாலை 4மணி வரை என்றும் மாத சம்பளம் 5000 என்றும் சொல்ல, சரி என்று ஒத்து கொண்டு வீட்டுக்கு திரும்பினாள் ஜனனி. 

ஜனனி வேலைக்கு போக ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன, அவளுக்கு தட்டெழுத்து, சுருக்கெழுத்து நன்றாக வரும். ஆதலால் வேலை சுலபமாக இருந்தது. அவள் அம்மா பூரணியும் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு விஜய் உடன் வாரம் ஒரு முறை பேசி வந்தாள். இடையே ஒரு முறை விஜய் அவன் மனைவியுடன் கோவை வந்து செல்ல ஜனனிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. 

நடந்த விபரங்களை அறிந்த கார்த்திக் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து அவர்களை ஹைதராபாத் வரும் போது சந்திப்பதாக உறுதி அளித்தான்.

அடுத்த படம் எடுக்க வேண்டி சிங்கப்பூரில் இருந்து பாண்டியன் இரு முறை வந்து செல்ல, பல தடவை நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, சாண்டில்யனின் யவன ராணி கதை தேர்வு செய்யப்பட்டது. எழுத்தாளர் சாண்டில்யன் குடும்பத்தினரிடம் பேசி கதையின் உரிமையை மோகன் பெற்று தர ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. படத்தில் சில நடிகர்களை தவிர மற்ற எல்லாரும் புதிய நடிகர்களாக தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்தனர். படத்தின் பட்ஜெட் 300 கோடிமுதல் 500 கோடி வரை என்று முடிவு செய்யப்பட்டது.படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் எடுக்க கார்த்திக் முடிவு செய்ய, இசை அமைப்பாளர் திலீப் இசை அமைக்கஒப்பு கொண்டார். 


இதற்கு இடையில் நடிகை நேகா கார்த்திக் உடன் மீண்டும் பார்ட்டியில் சேர, மாமாவின் ஆடிசன் ஒருபுறம் நடந்து வந்தது. நேகாசொன்னதற்காக மாமாவிடம் பழகுவதை தவிர்த்து வந்தான். ஒருநாள் காலை மோகன் அவனிடம் முந்தையநாள் இரவு சினிமாவில்நடிக்க வந்த பெண்ணை ஏமாற்றியதாக நடந்த தகராறில் மாமா கத்தியால் குத்தபட்டதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில்அபோல்லோவில் சேர்த்திருப்பதாக சொல்ல, அவரை சென்று பார்த்தான். அங்கே வந்த நேகாவும் கார்த்திக்குடன் பேசி கொண்டு"கத்தி குத்து பலமாக இருப்பதாகவும், இனிமேல் மாமா உயிர் பிழைக்கும் வாய்ப்பு இல்லை" என்று சொல்ல, அவள் கணித்தது உண்மையானது. அன்று மாலை மாமா என்ற MA மாணிக்கம் உயிர் துறந்தார். பல பெண்கள் வாழ்கையை சீரழித்த அவர் சாவுஅனைவருக்கும் பாடம் என்று திரை உலகமே பேசி கொண்டது.



யவனராணி படத்துக்கு எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஆள் தெரிவு செய்து விட்ட கார்த்திக்கினால் இளஞ்செழியன் என்றகதாநாயகன் பாத்திரத்துக்கு ஆள் தேடியும் கிடைக்கவில்லை. நடிகர் அக்ரம் சரியாக இருப்பார் என்று அவர் கால்சீட்டுக்காககாத்திருந்தான். அவரும் அட்ஜஸ்ட் செய்து கொடுப்பதாக சொன்னதால் படத்தின் மற்ற காட்சிகளை எடுக்க ஆரம்பித்து விட்டான். 



இந்திய திரைபட வரலாற்றில் மிக பெரிய பட்ஜெட் படம் என்று அறிவிக்கப்பட்ட படத்தின் வேலைகள் தென்இந்திய, சவுதி அரேபியா,ஆப்பிரிக்கா, எகிப்து, கிரீஸ் போன்ற நாடுகளில் தொடங்கியது. 

பட வேலைகள் அதிகமானதால் மோகனால் எல்லா வேலைகளும் சமாளிக்க முடியாததால், கார்த்திக்கு புதிய காரியதரிசி வேண்டும்என்று பேப்பரில் விளம்பரம் கொடுத்தான். காலை 8 முதல்இரவு 8 மணி வரை வேலை இருக்கும், சில நேரங்களில் ஞாயிறு அன்று கூடவேலை இருக்கும். ஆரம்ப சம்பளம் 25000 , ஆறு மாதம் கழித்து சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவித்து இருக்க, ஆயிரக்கணக்கானவிண்ணப்பங்கள் வந்து சேர அதை கண்டு மலைத்த மோகன் அதற்குள் தலையை விட்டு ஒரு பத்து பேரை செலக்ட் செய்துஇண்டர்வியூ வர சொன்னான்.


பேப்பரில் விளம்பரத்தை பார்த்த ஜனனி உடனே விஜய்க்கு போன் செய்து பேசினாள். "மாமா எனக்கு இந்த வேலை கிடைச்சா நல்லா இருக்கும். போதாததுக்கு கார்த்திக் மாமாவை எனக்கு நல்லா தெரியும், நல்ல சம்பளம். என் செலவுக்கு 5000 ருபாய் ஆனா கூட மீதி 20000நான் வீட்டுக்கு அனுப்பலாம். தெரிஞ்ச இடம்கிறதலா பாதுகாப்பு பிரச்னை இருக்காது".

ஏன் உனக்கு மில்ல வேலை இருக்கே", 

"அந்த வேலைக்கு 5000 ரூபாதான் தராங்க. வீட்டு செலவுக்கே அது பத்த மாட்டேங்குது". 

"நான் வேணாஅனுப்பட்டா" . 

"வேணாம் மாமா. நீங்க எவ்வளவு நாள்தான் உதவி செய்விங்க. உங்களால முடிஞ்சா அவர் கிட்ட பேசுங்க. என்னைய கட்டாயம் ஞாபகம் வச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, ஒரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுவதாக சொல்லி போனை கட் செய்தான் விஜய். 

கார்த்திக் போன் அடிக்க யார் கூப்பிடுவது என்று டிஸ்ப்ளே பார்க்க, விஜய் என்று வந்தது. உடனே போன் எடுத்து, "டேய் விஜய் என்னடா புது மாப்பிள்ளை திடீர்னு, என் ஞாபகம் கூட இருக்கா" என்று கிண்டல் செய்ய

"போடா நீ வேற. ஒரு முக்கியமான விஷயம். அதுனால தான் உன்னை கூப்பிட்டேன்".

"சரி சொல்லு. என்ன விஷயம்"

"நீ பேப்பர்ல விளம்பரம் கொடுத்து இருந்தியே. அதாண்டா secretary வேலை, அதுக்கு ஆள் போட்டுட்டியா". 

"இல்லைடா. இன்னும் செலக்சன் முடியலை"

"சரி நான் ரெகமன்ட் பண்ணின ஆளை எடுத்துக்குவியா. உனக்கு நல்லா தெரிஞ்ச ஆளு". 

"என்னடா பெரிய பில்ட் அப்பா இருக்கு, சரி நீ யார் சொன்னாலும் எனக்கு ஓகே. யார்னு நீ சொல்லு" என்று கேட்க

"நம்ம ஜனனி தாண்டா". 

"டேய் அந்த அறுந்த வாலா" என்று கிண்டல் செய்து, "அவளை பார்த்து பல வருஷம் ஆச்சே, சரி அவ நம்பர் குடு நான் பேசினா அவளுக்கு சர்ப்ரைசாக இருக்கும்" என்று சொல்லி அவள் நம்பரை விஜயிடம் இருந்து பெற்று அவள் எண்ணை டயல் செய்தான்.


ஜனனி தன் செல்போனில் வந்த புதிய எண்ணை தயக்கத்தோடு பார்த்தாள். கடைசி ஐந்து எண்கள் 11111 என்று முடிய, ஆச்சர்யபட்டு கொண்டே யார் நம்பராக இருக்கும், கட்டாயம் இந்த மாதிரி நம்பர் ஒரு VIP நம்பரதான் இருக்கணும் என்று எண்ணி போனை எடுத்தாள்.

"ச்சே என்ன இந்த ஜனனி போனை எடுக்க இப்படி யோசிக்கிறாள்" என்று பொறுமை இழந்தான் கார்த்திக். போன் அடுத்த முனையில் ஆன் செய்யப்பட்டு ஹல்லோ என்று குயில் போன்ற கேட்க, அந்த குரலின் சொந்தக்காரி ஜனனிதான் என்பதை அறிந்து, கிண்டலுடன் "ஏன் மேடமுக்கு என்கிட்ட பேச கசக்குதோ, மாமா விஜய் தூது விடனுமோ" என்று கேட்க, புரிந்த கொண்ட ஜனனி ஆச்சர்யத்துடன் "மாஸ்டர் நீங்களா, உங்க நம்பர் பலதடவ ட்ரை பண்ணினேன், சுவிட்ச் ஆப் அப்படின்னு வந்தது. சரி அந்த நம்பர் சொல்லு" என்று கேட்டு, "இது என்னோட பழைய நம்பர் ஆச்சே, சரி இதுதான் என்னோட புது நம்பர். உனக்கு வேலை கிடைச்சாச்சு. இன்னும் ஒரு வாரத்ல சேரணும்.சீக்கிரம் வந்து சேரு. நீ வந்த உடனே மத்த விபரங்கள் பேசலாம். உன் நம்பர நாம் சேவ் செய்து வச்சுக்கிறேன். எப்ப வேணும்னாலும் நீ கூப்பிடலாம்" என்று சொல்லி போனை வைத்தான்.

ஜனனிக்கு தாங்க முடியாத அளவுக்கு சந்தோஷம். வீட்டுக்குள் ஓடி விஷயத்தை சொல்ல, பூரணிக்கு அப்பாடா இனிமே நமக்கு விடிவு காலம்தான்ன்னு சந்தோசபட்டாள். அனால் சதானந்தனோ "அவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா, சினிமா சம்பந்தபட்ட இடம் ஆயிற்றே.பிரச்சனைகள் வருமே" என்று யோசிக்க, ஜனனிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

உடனே கார்த்திக் நம்பரை அடித்து பேச, உடனே அவன் போனை அவள் அப்பாவிடம் குடுக்க சொன்னான். "என்ன மாமா நீங்க இப்படி யோசிக்கிறிங்க. தைர்யமா அனுப்புங்க. உங்க பொண்ணு பாதுகாப்புக்கு நான் பொறுப்பு". என்று உறுதி தர, அடுத்த ஆறாவது நாள் மில்வேலையை ராஜினாமா செய்துவிட்டு இண்டர்சிட்டி ட்ரெயினில் சென்னை கிளம்பினாள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கார்த்திக் மாமாவை வழி அனுப்ப வந்தது ஞாபகம் வந்தது. அம்மா பூரணி வழி அனுப்ப, சென்னையை நோக்கி பயணமானாள்.





No comments:

Post a Comment