Thursday, July 9, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 9

பூங்கொடி தன் கண்ணால் காண்பது நிஜமா என்பதுபோல விழிவிரித்து வாய்திறந்து மான்சியை பார்த்துக்கொண்டு இருந்தாள்,.. சத்யனுக்கு சங்கடமாக இருந்தது. ச்சே இவள் ஏன் வந்தாள் என்று நினைத்தவனாய் மான்சியிடம் திரும்பினான்

அவள் விழிகளில் கண்ணீர் குளமாக தேங்கியிருக்க, அவள் இமைகளை மூடியதால் விழிநீர் வழிந்து கன்னங்களில் உருண்டோடியது, நேற்று போலவே இன்றும் மான்சியின் கண்ணீர் சத்யனின் நெஞ்சை சுட்டது

ஆனாலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து “உன்னை இங்கே யாரு வரச்சொன்னது, ஏன் வந்த, மொதல்ல கிளம்பு” என்று சத்யன் கோபமாக கூற

“ போக முடியாது” என்று ஒற்றை வார்த்தையில் அவனுக்கு பதில் சொன்னால் மான்சி

“ ஏய் என்ன விளையாடுறியா, யாரை பார்க்க இங்க வந்த, இதெல்லாம் வெளியே தெரிஞ்ச எவ்வளவு அசிங்கம்னு உனக்கு புரியலையா, தயவுசெய்து வெளிய யாருக்கும் தெரியறதுக்கு முன்னே கிளம்பு மான்சி” என்று சத்யன் அவளை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக கெஞ்ச

“ நான் என் புருஷனை பார்க்க வந்தேன் சத்யன், புருஷன் இருக்கிற இடத்தில் தானே பொண்டாட்டியும் இருக்கனும் அதான் வந்துட்டேன்” என்று மான்சி நிதானமாக சொல்லவும்



அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து விதிர்த்துப் போன சத்யன் வயிறு தடதடக்க கால் பூமியில் வேரோட, செய்வதறியாது நிற்க்க,

அவனை ஒட்டி நின்ற பூங்கொடிக்கோ கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, ‘அய்யோ இவுக என்ன சொல்றாக, அப்படின்னா அண்ணனுக்கு கல்யாணம் ஆயிருச்சா’ என எண்ணி கலங்கியவள் சத்யனை திரும்பி பார்த்து

“ அண்ணே இவுக என்ன சொல்றாக, உனக்கும் இவுகளுக்கும் கல்யாணமாயிடுச்சா” என உதறலாக கேட்க

சத்யன் வாய் திறந்து பதில் சொல்ல தோன்றாமல் இல்லையென்பது போல் தலையை மட்டும் அசைத்தான்

“ அப்போ ஏன் இவுக அப்படி சொல்றாக,” என்றவள் மான்சியிடம் திரும்பி “நீங்க யாரு ஏன் இப்படியெல்லாம் பேசுறீக” என்று கேட்க

மான்சி பூங்கொடியை நேருக்கு நேராக பார்த்து ஒரு கண்ணீர் புன்னகையுடன் “ நான் யாருன்னு உங்க அண்ணன் கிட்டயே கேளுங்க சொல்வாறு” என்றவள் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு “ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் தண்ணீ தர்றீங்களா நெஞ்சை வரட்டுது” என்று பூங்கொடியிடம் கேட்டாள்

ச்சே வந்தவங்களுக்கு தண்ணீ கூட குடுக்கலையே என்று வருந்திய பூங்கொடி “ இதோ கொண்டு வர்றேன்” என்று உள்ளே ஓடினாள்

தங்கை நகர்ந்ததும் சத்யன் இருகைகளாலும் பட்டென மான்சியின் தோளை பற்றி உலுக்கி “ ஏய் இது என்ன விளையாட்டு நீ விளையாட நான்தான் கிடைச்சேனா, இன்னும் கொஞ்சநேரத்தில் என் அப்பாவும் அம்மாவும் வந்துருவாங்க தயவுசெய்து கிளம்பு” என்று அவளின் தோள்களை பற்றியவாறே தூக்கினான்

அதற்க்குள் தண்ணீருடன் பூங்கொடி வர, சட்டென்று கைகளை எடுத்துவிட்டு திரும்பி கொண்டான்,.. ஆனால் அவன் மான்சியின் தோள்களை பற்றியிருந்ததை பூங்கொடி கவனித்துவிட்டாள், இப்போது அவளுடைய கண்ணீர் மாறி முகத்தில் லேசானதொரு மலர்ச்சி தெரிய தண்ணீரை மான்சியிடம் நீட்டினாள்

தண்ணீரை வாங்கிய மான்சி சொம்பு தண்ணீரையும் மடமடவென்று தொண்டையில். சரித்துவிட்டு சொம்பை பூங்கொடியிடம் கொடுத்துவிட்டு “தாங்க்ஸ்” என்றவள் ஏதோ நினைத்துக்கொண்டு தனது நெற்றியில் தட்டியவாறு

“ச்சே சொந்த வீட்டில் போய் யாராவது தாங்க்ஸ் சொல்லுவாங்களா. என்னோட தாங்க்ஸ்ஸை வாபஸ் வாங்கிக்கிறேன்” என்று ஒரு மயக்கும் புன்னகையுடன் சொல்லி அந்த வீட்டின் இன்னொரு விக்கெட்டையும் வீழ்த்தினாள் மான்சி


மான்சி அந்த சிரிப்பில் மயங்கிய பூங்கொடி சொம்பை வைக்க உள்ளே போக, சத்யன் மான்சியை வெறித்துப் பார்த்தான் ...மான்சியின் பேச்சும் சிரிப்பும் சத்யனுக்குள் எரிந்துகொண்டிருந்த தீயில் எண்ணெய் வார்த்திருந்தது

சத்யன் மறுபடியும் மான்சியின் தோளை பற்றி தூக்கி தெருக்கதவு வரை தள்ளிக்கொண்டு போக, மான்சி அவனுடைய முரட்டு பிடியிலிருந்து விடுபட போராடியவாறு “ என்னை விடுங்க சத்யன் நான் இங்கருந்து போகமாட்டேன்” என்று கத்தியபடி அவன் பிடியிலிருந்து விடுபட நினைக்க

சத்யன் அவளை முரட்டுத்தனமாக வாசலை நோக்கி இழுத்துக்கொண்டு போனான்... அங்கே வந்த பூங்கொடி அவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க

சத்யன் மான்சியின் கையை ஒருகையால் பற்றிக்கொண்டு மறுகையால் கதவை திறந்து அவளை வெளியே தள்ள, அதேநேரத்தில் சரியா உள்ளே நுழைந்த தனலட்சுமியின் மீது விழுந்தாள் மான்சி

மான்சியை தாங்கிபிடித்த தனலட்சுமி திகைப்புடன் சத்யனை பார்த்து “ என்னடா ஆச்சி யாரு இந்த புள்ள, ஏன் வெளிய புடிச்சு தள்ளுற” என்று கேட்க

அதற்க்குள் வெளியே வந்த பூங்கொடி தனது அம்மாவின் கையைப்பிடித்து உள்ளே இழுத்து “யம்மாவ் நீ உள்ளாற வந்து பேசு அவுகளையும் கூட்டியாம்மா, என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லுறேன்” என்றதும்

தனலட்சுமி மான்சியை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு உள்ளே வர, பூங்கொடி அதுவரையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் படபடவென்று பொரிந்து கொட்டினாள்

தனலட்சுமி உறைந்துபோய் கட்டிலில் தொப்பென்று உட்கார. அப்போதுதான் மதிய உணவுக்காக துரையும் வீட்டுக்கு வந்தார்,.. வந்தவர் மான்சியை பார்த்ததும் அடையாளம் தெரிந்து திகைத்து பிறகு சுதாரித்து “வாங்கம்மா எப்ப வந்தீங்க, நல்லாருக்கீங்களா ” என்று பணிவுடன் விசாரித்தார்

மகன் வேலைவிட்டு விட்டு வந்ததை பற்றி தனலட்சுமி வயக்காட்டில் சொல்லியிருந்தபடியால்,.. மான்சி சத்யனை மறுபடியும் வேலைக்கு அழைத்துப்போகத்தான் வந்திருக்கிறாள் என்று துரை நினைக்க

“ ம் நல்லாருக்கேன் அங்கிள் இப்பத்தான் வந்தேன், உங்கவீட்டை கண்டுபிடிக்க சிரமமா இல்லை உங்க மகன் பேரைச்சொல்லி கேட்டதுமே கரெக்டா வழி சொன்னாங்க” என்று மான்சி சரளமாக பேசினாள்

ஆனால் வீட்டிலிருந்த மற்ற மூவரின் முகத்தையும் பார்த்த துரை என்னவோ தவறு நடந்திருக்கு என்பதை நிமிடத்தில் உணர்ந்துகொண்டு மகளை பார்க்க,, பூங்கொடி மறுபடியும் ஒரு ரவுண்டு படபடவென்று ஊசி மத்தாப்பூவாய் பொரிந்து தள்ளி.. துரைக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்தாள்

இப்போது சத்யனின் நிலைதான் தர்மசங்கடமாக இருந்தது, தனது அப்பாவின் முகத்தை பார்க்கமுடியாது தலைகவிழ்ந்து நின்றான்...

அவனை ஏறெடுத்துப் பார்த்த துரை “என்னய்யா மவனே இந்த புள்ள இப்படி சொல்லுது, என்னாய்யா விஷயம், எதுவாயிருந்தாலும் நாங்க வந்த பொறகு விசாரிச்சு பேசியிருக்கலாம்ல, பொட்டப்புள்ளய போய் கழுத்தை புடிச்சு வெளியே தள்ளிப்போட்டியே மவனே,.. நாலுபேருக்கு தெரிஞ்சா பொம்பளைப் புள்ள வாழ்க்கை கெட்டு போயிடும்ய்யா” என்று சத்யனுக்கு எடுத்துக்கூறிவிட்டு மான்சியின் பக்கம் திரும்பினார்


“ என்ன தாயி விஷயம் ஏதுக்கு இங்கிட்டு வந்திருக்கீ” என்று நிதானமாக கேட்க

“ நானும் உங்க மகனும் காதலிக்கிறோம் அங்கிள், அவரில்லாம என்னால வாழமுடியாது அங்கிள், உங்க மகனுக்கும் என்னை ரொம்ப புடிக்கும் .. ஆனா அவரு அதை ஒத்துகிட்டு என்னை ஏத்துக்க மாட்டேங்குறாரு, வெளிய போகச்சொல்றாரு, நான் அவரைவிட்டுட்டு இங்கருந்து போகமாட்டேன், அப்படி போகச்சொன்னா என்னோட பிணம்தான் இந்த ஊரைவிட்டு போகும்” என்று தீர்மானமாக மான்சி கூறியதும்

அவள் கடைசியாக கூறிய வார்த்தை அங்கிருந்த நால்வருக்கும் கரண்ட் ஷாக் வைத்தது போல் விரைக்க சொய்தது,.. அதிர்ந்துபோய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள,,

சத்யன் மட்டும் மான்சியின் தோளை பற்றி தன்பக்கமாக திருப்பி “ஏய் என்ன மிரட்டுறியா இப்போ சொல்றேன் கேட்டுக்க எனக்கு உன்னை பிடிக்காம தான் வேலையைவிட்டு வந்தேன், மறுபடியும் ஏன் என்னை தொந்தரவு பண்ற மரியாதையா இங்கருந்து போயிடு” என்று இரைந்து கத்த

மான்சி அவன் என்னவெல்லாம் சொல்வான் என்று ஏற்கனவே யூகித்து வந்திருந்ததால் அவன் கத்தலுக்கெல்லாம் அசராமல் “ என்னை புடிக்கலைன்னு யார்கிட்ட கதை சொல்றீங்க, பிடிக்காமத்தான் அன்னிக்கு பாத்ரூமில் வச்சு அந்தமாதிரி நடந்துகிட்டீங்களா, அப்புறமா நேத்து கார்ல ஏன் அந்தபோல பண்ணீங்க” என்று சரமாரியாக எடுத்துவிட

சத்யன் அதற்க்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழிக்க,, பேச்சு திசைமாறிவிட்டதை உணர்ந்த தனலட்சுமி " பூங்கொடி நீ உள்ளாரப்போ " என்று அதட்டிவிட்டு " என்னாங்க நீங்க போய் ஊர் சேர்மனையும் நாலு பெரியவுகளையும் கூட்டியாங்க .. அவுக வந்த என்னா ஏதுன்னு வெசாரனை பண்ணட்டும், இந்தப்புள்ள ஒன்னு சொல்லுது, நம்ம மவன் ஒன்னு சொல்லுதான், ஊர் பெரியவுக எல்லாம் வந்து வெசாரிச்சாதான் வெவகாரம் தீரும்" என்று ஒரே முடிவாக சொல்ல

" அதுதா சரி தனம் நா போயி எல்லாரையும் கூட்டியாறேன், அதுவரைக்கும் இந்தப்புள்ள கிட்ட நம்ம மவன் தகராறு பண்ணாத பாத்துக்க" என்று வெளியே ஓடினார்

மான்சியின் முகத்தில் டியூப் லைட் போட்டதுபோல் வெளிச்சமாக, சத்யனின் முகம் அம்மாவாசை இரவாக இருண்டு விட்டிருந்தது... வெகுநேரமாக நின்றதால் கால் வலிக்க மான்சி தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டாள்

தனலட்சுமிக்கு மான்சியை பார்க்க பரிதாபமாக இருநதது, பெரிய கோடிஸ்வரனின் மகள் இப்படி வந்து உட்கார்ந்துகிட்டு பிடிவாதம் புடிக்குதே, என்று வருந்தினாலும், மான்சியின் அழகும் துடிப்பான பேச்சும் தனலட்சுமியை பெரிதும் கவர்ந்துவிட்டிருந்தது,

" ம்ம் என் மவனுக்கு ஏத்த சோடி தான், ரெண்டு பேரும் சோடியா வெளிய போனா ஊரு கண்ணு மொத்தமும் இவுக ரெண்டு பேர் மேலயும் தா இருக்கும் என்று ஒரு தாயாக அவள் மனம் மருமகளை நினைத்து கணக்கு போட ஆரம்பித்தது

சத்யன் தலையில் கைவைத்துக்கொண்டு கட்டில் உட்கார்ந்து விட.. நாலுபேரை கூப்பிட போன துரை ஊரை ஒன்றாக திரட்டிக்கொண்டு வந்தார்

சற்று நேரத்தில் துரையின் வீட்டில் எள் போட்டால் கீழே விழ முடியாதளவுக்கு கூட்டம் நிரம்பி விட்டது, அதிலிருந்த பெண்கள் மான்சியின் அழகை பார்த்து வாயை பிளக்க, சில இளவட்ட ஆண்களுக்கு சத்யனின் மீது புசுபுசுவென்று பொறாமை பொங்கி வழிந்தது

சத்யன் எழுந்த மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு தலைகவிழ்ந்து நிற்க,.. மான்சி எழுந்து வந்து சத்யனருகே நின்று நிமிர்ந்த தலையுடன் கூர்ந்த பார்வையால் கூட்டத்தினரை அளவிட்டாள்... அவளுக்கு அவர்களின் பார்வை வித்தியாசமாக இருந்தது

கூட்டம் குசுகுசுவென தங்களின் கருத்துகளை கண்டபடி காது மூக்கு வைத்து வீச ஆரம்பிக்க ... அப்போது வயதான பெரியவர் கூட்டத்தை விலக்கி முன்வந்து கட்டிலில் அமர்ந்து தொண்டையை கனைத்துக் கொண்டு ஆலமரமும் சொம்பும் இல்லாமலே பஞ்சாயத்தை ஆரம்பித்தார்



பெரியவர் தொண்டையை கனைத்துக்கொண்டு துரையை பார்த்து “ என்னலே தொரை யாரு இந்த புள்ள, எதுக்காக வருந்துருகாகலாம்” என்று ஆரம்பித்து வைக்க

துரை அவர் அருகே போய் “ சித்தப்போய் இவுக எம்மவன் வேல பார்த்த முதலாளியோட மவ, இன்னைக்கு திடுக்குன்னு கெளம்பி வந்துருக்காக, இங்கருந்து போகமாட்டேன்னு சொல்லுறாக, நீங்கதான் என்னா ஏதுன்னு வெசாரிக்கனும்” என்று பணிவுடன் கூறினார்

பெரியவர் சத்யனை பார்த்து “ என்னலே பேரான்டி என்ன வெஷயம், எதுக்கு இந்த புள்ள வந்திருக்காக” என்று கேட்க

சத்யனை ஒதுக்கிவிட்டு முன்னால் வந்த மான்சி “ நான் எதுக்கு வந்தேன்னு என்னை கேட்டா தானே தெரியும்” என்றவள் கூட்டத்தின் பக்கமாக திரும்பி “ எல்லாருக்கும் வணக்கம்,. என் பேரு மான்சி, நான் மதுரை, சத்யன் எங்க வீட்லதான் டிரைவரா ஒருமாசம் வேலை பார்த்தார், அப்போ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சு போய் லவ் பண்ணோம், இன்னிக்கு காலையில திடீர்னு இவரு வேலைவிட்டுட்டு வந்துட்டாரு, அதனால நானும் கிளம்பி வந்துட்டேன், என்னால இவரு இல்லாம ஒரு நிமிஷங்கூட வாழமுடியாது, நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை அவர்கிட்ட சேர்த்து வைக்கனும்” என்று மான்சி தனது கோரிக்கையை வைத்துவிட்டு திரும்பி சத்யனை பார்க்க அவனோ இவளை பார்வையாலேயே எரித்துவிடுவது போல பார்த்தான்

யாரும் கவனியாத வாறு தனது நாக்கை துருத்தி காட்டிவிட்டு நல்லபிள்ளையாக தலையை கவிழ்ந்து கொண்டாள் மான்சி

மான்சி சொன்னதை கேட்டு கூட்டத்தில் பலத்த சலசலப்பு எழ,.. சத்யன் இதற்க்கு மவுனமாக இருந்தால் சரியாகது என்ற முடிவு செய்து அந்த பெரியவரிடம் வந்து நின்றான், கூட்டம் மொத்தமும் சத்யன் என்ன சொல்லப்போகிறான் என்று வாயை திறந்துகொண்டு பார்த்தனர்

“ தாத்தா நா சும்மாதா இந்த பொண்ணுகூட பழகுனேன், அதையே சாக்கு வச்சிகிட்டு இங்க வந்துருச்சு, அவங்க வீட்ல தேடுறதுக்கு முன்னால அனுப்பி வச்சுருங்க தாத்தா” என்று வேண்டிக் கேட்டான்

அவன் சொன்னதை கேட்ட மான்சிக்கு கோபம் கண்மண் தெரியாமல் வர, அதை அடக்கிக்கொண்டு மறுபடியும் முன்னால் வந்து அந்த பெரியவரை பார்த்து “ இதோ பாருங்க தாத்தா இவர் சொல்றதை நீங்க நம்பாதீங்க, இருக்கு என்னை ரொம்ப புடிக்கும், ஆனா நான் பணக்கார பொண்ணுங்கறதால ஏத்துக்க மாட்டேங்கறாரு, நீங்களே சொல்லுங்க தாத்தா பணக்காரியா இருக்குறது என் தப்பா, இப்பக்கூட நான் எதையுமே கொண்டு வரலை நான் மட்டும்தான் வந்திருக்கேன்” என்று விளக்கமாக மான்சி சொல்ல

பெரியவர் எதுவும் சொல்லாமல் சத்யன் முகத்தை பார்த்தார் ,.. சிறிதுநேரம் மவுனமாக இருந்த சத்யன் பிறகு “ எனக்கும் இவளை புடிக்கும் தாத்தா ஆனா அதுக்காக இவளை கல்யாணம் பண்ணிக்கலாம் முடியாது,.. இவளோட அப்பா அம்மாவை நெனைச்சு பாருங்க, அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க தாத்தா, அவங்க இவ வாழ்க்கையை பத்தி என்னவெல்லாம் கற்பனை பண்ணி வச்சுருப்பாங்க, அவங்களுக்கு என்னால துரோகம் பண்ணமுடியாது” என்று சத்யன் கூறியதும்

“ அப்போ எனக்கு மட்டும் துரோகம் பண்ணலாமா, நீங்களே சொல்றீங்க என்னோட பேரன்ட்ஸ் ரொம்ப நல்லவங்கன்னு, அப்போ நாம கல்யாணம் பண்ணிகிட்டா கண்டிப்பா ஏத்துக்குவாங்க சத்யா, ப்ளீஸ் கொஞ்சம் என்னோட நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க, என்னால உங்களை பார்க்காம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது” என்று சத்யனிடம் மன்றாடியவள் சட்டென ஏதோவொரு முடிவுடன் கூட்டத்தினர் பக்கம் திரும்பினாள்,

“ இங்க பாருங்க நான் இவரை என் உயிரா விரும்புறேன், இவருக்காக என்னை உயிரா வளர்த்த என்னோட பேரன்ட்ஸையே விட்டுட்டு வந்துட்டேன், இது ரொம்ப தப்புதான் எனக்கு தெரியும் ஆனா என் வாழ்க்கையை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை, மொதல்ல அவங்க வருத்தப்படத்தான் செய்வாங்க ஆனா என்மேல உள்ள பாசம் என்னை மன்னிக்க வச்சுரும், அதனால என் பேரன்ட்ஸை காரணம் காட்டி யாராவது என்னை வெளியே அனுப்பனும் நெனைச்சா, இந்த ஊருல எது ரொம்ப ஆழமான கிணறுன்னு நீங்களே எனக்கு சொல்லுங்க,” என்ற மான்சி மறுபடியும் பெரியவரிடம் வந்தாள்

அவள் கண்கள் கண்ணீரை கொட்டிவிட தயாராக இருந்தது, இதுவரை இருந்த தைரியம் இப்போது அவள் பேச்சில் இல்லை, விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரை வழித்தெரிந்துவிட்டு “ தாத்தா நான் இப்போ சொல் போறதை மனசுல வச்சு நீங்க என்ன முடிவுவேனா எடுங்க” என்றவள் திரும்பி சத்யனை பார்க்க
அவன் பார்வை அவளை துளைத்தது. சொல்லாதே என்பதுபோல் எச்சரிக்கை பார்வை பார்த்தான், ஆனால் சொல்லாவிட்டால் இன்னும் சிறிதுநேரத்தில் இங்கிருந்து துரத்தப்படுவோம் தன் வாழ்க்கையே போய்விடும் என்று மான்சிக்கு நன்றாக புரிந்தது

அவனுக்கு முடியாது என்பது போல மறுப்பாக தலையசைத்துவிட்டு திரும்பினாள். இவ்வளவு நேரம் தலைநிமிர்ந்து பேசியவள் இப்போது தலைகவிழ்ந்து “ எந்த பொண்ணும் இந்த மாதிரி சொல்லமாட்டா ஆனா எனக்கு வேறவழி இல்லாம இதை உங்ககிட்ட சொல்றேன், நேத்து எங்க கார்ல வச்சு எனக்கும் இவருக்கும் கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்ச மாதிரிதான், இவரு கடைசி நிமிஷத்தில் நிதானத்துக்கு வந்ததால எதுவும் நடக்காம தப்பிச்சேன், இல்லேன்னா இன்னும் பத்து மாசத்துல இவரு குழந்தையோடதான் நான் இங்க வந்திருக்கனும், இவ்வளவு நடந்த பிறகு நான் எப்படி இவரைவிட்டு பிரியமுடியும், என்னோட வாழ்வோ சாவோ இனிமேல் இவர்கூடத்தான், நீங்க எல்லாரும் என்னை புரிஞ்சு எனக்கு வாழ வழிசொல்லுங்கு” என்று கூட்டத்தினரை பார்த்துக் கண்ணீர் வழிய கைக்கூப்பி வேண்டி கேட்டாள்

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தனலட்சுமிக்கு மான்சியின் பேச்சும் கண்ணீரும் அவளுடைய மூன்று பிள்ளைகளை ஈன்ற வயிறை கலங்க செய்தது, வேகமாக வந்து மான்சியின் கூப்பிய கைகளை பற்றிக்கொண்டு “ என்னம்மா நீ எதுக்கு இப்புடி அழுதுகிட்டு கேட்கிற எல்லாம் நா பார்த்துக்கிறேன்” என்று மான்சிக்கு ஆறுதல் கூறியவள் அந்த பெரியவரிடம் வந்தாள்

“ மாமாவ் இந்த புள்ள இம்புட்டு சொன்ன பொறவு நாம சும்மா இருந்தா நல்லதில்லே மாமா, நீங்க என்ன சொல்லுதே” என்று யோசனை கேட்க
அவர் சிறிதுநேரம் தனது நெற்றியைத் தட்டி தனது பேட்டரியை ரீசார்ஜ் செய்துவிட்டு “ நானு அதான் தனம் யோசிக்குதேன், இவுக ரெண்டு பேருக்கும் கலியாணத்தை பண்ணி வச்சுபுடுறதுதா கரிக்ட், ஆனாக்க நம்ம பிரசிடென்ட்டு வேற வெளியூர் போயிருக்காக, இந்த புள்ளயோட அப்பாரு நம்ம மேல ஏதாவது தாக்கு கொடுத்துப்புட்டு தானாக்காரன் எவனையாச்சும் கூட்டியாந்தா யாரு பதில் சொல்றதுன்னுதா யோசிக்குதேன் புள்ள” என்று யோசனையோடு கூற
மான்சிக்கு அவர் கூறியது புரிய சிறிதுநேரமானது, தானாக்காரன் என்றால் போலீஸ்க்காரர் என்று புரிய வேகமாக முன்வந்து “ தாத்தா எனக்கு இருபத்தியொரு வயசு ஆகுது அதனால எந்த கம்ப்ளைண்ட் யார் மேல குடுத்தாலும் செல்லாது” என்று சொல்ல

அப்போது கூட்டத்தின் பின்னால் இருந்து “ஏலேய் கொஞ்ச அங்கிட்டு நகருங்களே, நா உள்ளார போயிக்குறேன் ” என்று சரவணனின் குரல் கேட்டது

கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே வந்த சரவணன் பெரியவரை பார்த்து “ தாத்தா அதான் அந்த புள்ள எல்லாத்தையும் கரெக்டா சொல்லுதுல்ல, பொறவு என்ன தயங்குறீக, அப்படியே போலீஸ்காரனுங்க வந்துட்டா நாங்கல்லாம் என்னத்துக்கு இருக்கோம். எல்லாம் நாங்க பார்த்துக்குவோம்ல, என்றவன்

கூட்டத்தின் பக்கம் திரும்பி “ ஏம்லே எல்லாரும் என்ன சொல்லுறீக” என்றான்

அதற்க்குள் கூட்டத்தில் இருந்த சில இளவட்டங்கள் “ அதானே யாருவந்து என்ன பண்ண முடியும் இந்த புள்ளதான் இம்புட்டு ஸ்ட்ராங்கா இருக்குதே,"என்றான்

இன்னொருவன் “ஆனாக்கா கலியாணத்தை உடனே முடிச்சுப்புடனும் கழுத்துல தாலியில்லாம இந்த புள்ளய நம்ம ஊருக்குள்ள வச்சிருந்தா ஆபத்துதா”

மற்றொருவனோ “ அப்போ நாளத்தள்ளாம இன்னிக்கே கலியாணத்தை முடிச்சுப்புடுனும் ” என்று ஆள்மாற்றி ஆள் ஒரு கருத்து சொல்ல
சரவணன் தனலட்சுமியிடம் வந்தான் “ நீங்க என்ன சின்னம்மா சொல்றீக” என்று கேட்க

தனலட்சுமி கண்பார்வையால் துரையை அழைக்க அவரும் அருகில் வந்து “என்ன தனம் என்ன செய்யலாம்ங்குற” என்று மனைவியை கேட்க... தனம் சத்யனை திரும்பி பார்த்தாள்

அவனோ மான்சி கடைசியாக பேசிய வார்த்தைகளின் தாக்கம் இன்னும் விலகாமல் அப்படியே நின்றுகொண்டு இருந்தான்

“ தம்பிய ஏன் பார்க்குறீங்க சின்னம்மா நாம எதுனாச்சும் முடிவெடுக்க வேண்டியதுதான்” என்று சரவணன் கூற

தனலட்சுமி ஒரு நீண்ட பெருமூச்சை வெளியே விட்டுவிட்டு “ நம்மகைல என்ன இருக்கு சரவணா எல்லாம் அந்த ஆண்டவன் எழுதி வச்சது, நீ போயி நம்ம பூக்கார மாயிகிட்ட இருக்குற பூவை வச்சு ரெண்டு மாலை கட்டியாராச் சொல்லு,” என்று சரவணனுக்கு உத்தரவிட்ட தனம் தனது கணவரிடம் திரும்பி

“ நீங்கபோய் நம்ம செல்லத்தம்மன் கோயில் பூசாரிகிட்ட தகவல் சொல்லி கோயிலை தொரந்து சுத்தம் பண்ணி வைக்கச்சொல்லுங்க, இப்போ அவசரத்துக்கு தங்கத்துல தாலி செய்ய முடியாது, நா போயி செட்டியார் கடையில நல்லதா பார்த்து ஒரு கொம்பு மஞ்சள் வாங்கிட்டு வர்றேன், அதையே மஞ்சக்கயித்துல முடிஞ்சு கட்டிரலாம் என்று தீர்மானமாக சொன்னாள் சத்யனின் தாய்

மறுபடியும் ஏதோ யோசனை வர கூட்டத்தை பார்த்து “ நான் அப்புடியே செட்டியார்கிட்ட சொல்லி சாப்பாட்டு தேவப்பட்ட அரசலுவ சாமானை குடுக்க சொல்றே யாராச்சும் போய் வாங்கிட்டு வந்து கோயில் மண்டபத்துல வச்சு சமையலை பாருங்க. எல்லாரு ஆளுக்கு ஒரு வேளையா பாருங்க புள்ளைகலா, நமக்கு நேரம் ரொம்ப கொறவாத்தான் இருக்கு” என்று கூட்டத்தை பார்த்து சொல்ல

“ ஏலா மதினி உங்க வீட்ட இருக்குதே அந்த பெரிய ஈயச்சட்டி அதை எடுத்துட்டு வா கொளம்பை அதுல வைக்கலாம்”... என்று ஒரு பெண்ணும்,.. சோறு ஆக்க எங்க வீட்டுல இருக்குற நெல்லு அவிக்கிற ட்ரம்மை எடுத்துட்டு வர்றேன் என்று ஒரு பெண்ணும் என ஆளாலுக்கு ஒரு வேலையை ஏற்றுக்கொள்ள கூட்டம் அப்போதே கலைந்தது

கூட்டம் கலைந்ததும் சத்யன் சரவணனை நெருங்கி “ அண்ணே கொஞ்சம் யோசிச்சு பாருண்ணே, இவ அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க அவங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம், அவங்க வந்து என்ன முடிவு சொல்லுறாங்கன்னு பார்த்துக்கிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்ணே” என்று சத்யன் கெஞ்ச



“ ஏலேய் தம்பி உனக்கு என்னவே லூசா புடிச்சிருக்கு, அவங்க எப்புடிடா ஒத்துக்குவாங்க, மொதல்ல நீ இந்த புள்ள கழுத்துல தாலியை கட்டு பொறகு நானே அவுகளுக்கு தகவல் சொல்றேன், அதுவரைக்கும் சும்மா அப்புடி போய் உட்காரு எனக்கு நிறைய வேலையிருக்கு, இன்னும் உன் மதினிக்கு வேற விஷயம் தெரியாது, யாரையாவது வயக்காட்டுக்கு அனுப்பி தகவல் சொல்லி வரச்சொல்லனும்” என்ற சரவணன் அவசரமாக வெளியே போனவன் மறுபடியும் திரும்பி வந்து பூங்கொடியை அழைத்தான்

பூங்கொடி உடனே ஓடி வந்தாள் சரவணன் அவளிடம் “ பூங்கொடி நாங்கப் போய் எல்லா ஏற்பாடும் பண்ணுறோம், நீ இந்த புள்ளய ஜாக்கிரதையா பார்த்துக்க இந்த பய ஏதாவது தகராறு பண்ணப் போறான், நா போயி யாரையாவது அனுப்பி உன் மதினியை அனுப்பச் சொல்லுறேன், ரெண்டு பேருமா இந்த புள்ளைக்கு சீலை கட்டி ரெடி பண்ணுங்க" என்று கூறிவிட்டு அவசரமாக மறுபடியும் வெளியே போய்விட்டான்


" கண்ணாளனே ஒருமுறையாவது....

" என் விடியல் உன் மடியில்...

" என்று இருக்கவேண்டும்...

" நான் செய்த புண்ணியம்...

" உன்னை சந்தித்தது...

" நான் செய்த பாவம்...

" என் நினைவுகள் உன் மனதில்...

" ஆழப் பதியாமல் போனது...

" இப்போதும் நான் சாகத் தயார்....

" நீ என்னை கட்டியணைத்து...

" கதறுவதாக இருந்தால்!


No comments:

Post a Comment