Wednesday, July 15, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 18

“என்ன மாமா உள்ள நல்லா தூங்குதா” என்று கௌசல்யா மான்சியின் காதில் ரகசியமாக கேட்க, மான்சி அளவிலாத வெட்கத்தில் தலைகுனிந்து ஆமாம் என்பது போல் தலையசைக்க கௌசல்யாவுக்கு மான்சி முன்பு பார்த்ததைவிட இப்போது இன்னும் அழகாகிவிட்டாள் போல இருந்தது

“ என்ன பண்றது ஆம்பளைங்க அப்புடித்தான் அவுகளுக்கு நேரங்காலமே கெடையாது, நாமதான் அனுசரிச்சு போகோணும், ஆனா ஒன்னு தங்கச்சி ஆம்பளைகல அவங்க இஷ்டத்துக்கு நடந்து எப்பவும் நம்ம கைக்குள்ள வச்சுக்கனும், இல்லாங்காட்டி ரொம்ப செரமமா போயிரும்,” என்று தனது அனுபவத்தை அளந்த கௌசல்யா “ சரி நாம வீட்டுக்கு கெளம்புவமா மழ உட்டுபோச்சு,” என்று மான்சியிடம் கேட்க

அதற்க்கும் மான்சி தலையை மட்டுமே அசைக்க,.. “ சரி நீ மாமன் கிட்ட சொல்லிட்டு, சாப்பாட்டு ஏனத்தை எல்லாம் எடுத்து வை நான் ஆட்டை அவுத்து ஓட்டிக்கிட்டு வர்றேன்” என்று கௌசல்யா அங்கிருந்து கிளம்ப, மான்சி மறுபடியும் அறைக்குள் போனாள்

சத்யன் இன்னும் உறங்கிக்கொண்டிருக்க அவனருகில் மண்டியிட்டு அமர்ந்து அவன் முகத்தையே பார்த்தாள், இவன் என் புருஷன் என்ற நினைப்பே அவள் மனதில் தென்றலாய் தாலாட்ட, இவனிடம் எது என்னை வீழ்த்தியது என்று யோசித்தாள்



இவன் அழகா. இல்லை கம்பீரமான உயரமா. அல்லது எல்லோரையும் மதிக்கும் அந்த உயர்ந்த குணமா, எப்படியிருந்தாலும் இன்றுமுதல் ஒரு முழுமையான கணவன் மனைவி என்று ஆகிவிட்டது, இதற்க்குமேல் அப்பாவும் அம்மாவும் இவரை மருமகனா ஏத்துக்கணுமே, ஏன் ஏத்துக்க மாட்டாங்க இவருடைய உயர்ந்த குணங்கள் அவங்களுக்கும் தெரியுமே அதை மனசளவில் உணரும்போது நிச்சயமா அவங்களே இவரை தேடி வருவாங்க, என்று நினைத்த மான்சிக்கு அந்த நினைவின் தாக்கமே கண்களில் நீரை வரவழைத்தது

குனிந்து சத்யனின் கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டு தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு, இன்னோரு கையால் அவன் தோளைத் தொட்டு உலுக்கி எழுப்ப, சிலநிமிடங்களில் கண்விழித்த சத்யன் தன் கண்ணெதிரே இருந்த மான்சியின் அழகு முகத்தை பார்த்ததும் அவ்வளவு தூக்கக்கலக்கத்திலும் பளிச்சென்று சிரித்தான்

“ என்னம்மா குளிச்சிட்டயா, எப்படி குளிச்ச, மழை விட்டுருச்சா என்ன ” என்றபடி எழுந்து அமர்ந்தான்

அவன்மேல் மான்சி போர்த்திய போர்வை மிகவும் ஆபத்தான நிலையில் விலகியிருக்க, மான்சி தன் பார்வையை திருப்பிக்கொண்டு “ மழை விட்டுருச்சு, தொட்டியில் இறங்கி குளிச்சேன் கௌசல்யா அக்கா வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு ஆட்டுக்குட்டியை அவுத்துகிட்டு வரப்போயிருக்காங்க, நான் வீட்டுக்கு கிளம்பவா” என்று மான்சி கேட்டதும்

அதுவரை சிரித்துக்கொண்டிருந்த சத்யனின் முகம் பட்டென்று வாட “ ஆமால்ல நீ வீட்டுக்கு போகனுமே, சரி கெளம்பு, நானும் ஒரு குளியல் போட்டுர்றேன்” என்று சத்யன் போர்வையை உதறிவிட்டு எழுந்து நிற்க்க, மான்சி பட்டென கண்களை மூடிக்கொண்டாள்

அவள் கண்களை மூடியதை பார்த்ததும் சத்யன் சிரித்துக்கொண்டே “ ம்ம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்தமாதிரி கண்ணை மூடிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்” என்றவன் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, மோட்டார் சுவிட்சை தட்டிவிட, மோட்டார் உறுமிக்கொண்டு தண்ணீரை இழுத்து தொட்டியில் கொட்டும் சத்தம் கேட்டது, சத்யன் வெளியே வர மான்சியும் அவன் பின்னாலேயே வந்தாள்,

ஏழு ஆஸ்பவர் மோட்டாரில் தண்ணீர் தமதமவென கொட்ட சத்யன் தொட்டிக்குள் இறங்கி தண்ணீர் விழும் பைப்புக்கு கீழே நின்றுகொண்டு மான்சியை பார்த்து சிரித்து “ நீயும் இதுமாதிரி குளிச்சிருக்கலாம்ல, சரி இப்ப வாயேன் ரெண்டுபேரும் சார்ந்து குளிப்போம்” என்று மோட்டார் சத்தத்தில் அவளுக்கு தெளிவாக கேட்கவேண்டும் என்று சத்யன் சத்தமாக சொல்ல, மான்சி வேண்டாம் என்று அவசரமாக தலையசைத்தாள்


சிறிதுநேரம் கொட்டும் தண்ணீரில் நின்றவன் பிறகு வெளியே வந்து உடம்பை தேய்த்துக் கொண்டே “ மான்சி உள்ள மாடத்துல சோப் இருக்கும் எடுத்துட்டு வாயேன்” என்று கூறிய சிலநிமிடங்களில் மான்சி சோப்பை அவனிடம் நீட்டினாள்

“ என்ன புருஷனுக்கு சோப் தேய்ச்சு குளிப்பாட்டி விடமாட்டீங்களா மேடம்” என்று குறும்புடன் கேட்க, ,ம்ஹூம்’ என்று மான்சி வெட்கமாக தலையசைத்து அங்கிருந்து நகர்ந்து செல்ல, சத்யன் எட்டி அவள் கையை பிடித்துக்கொண்டு “ ஏய் முதுகுக்கு மட்டும் சோப் போட்டுவிடு மான்சி, எங்கம்மா இன்னமும் எங்கப்பாவுக்கு முதுகு தேய்ச்சு விடுவாங்க தெரியுமா” என்று சத்யன் கேலி பேச

மான்சி அவன் கையில் இருந்து சோப்பை வாங்கி “ ம் திரும்புங்க போட்டுவிடுறேன்” என்றதும் சத்யன் அவளுக்கு முதுகுகாட்டி நிற்க்க, மான்சி மெதுவாக அவனின் சிவந்து பரந்த முதுகில் தனது மென் விரல்களால் தேய்க்க, அவன் உடல் சிலிர்ப்பதை அவள் விரல்கள் உணர்ந்தன

சத்யனின் அடங்கிப்போயிருந்த உணர்ச்சியெல்லாம் மறுபடியும் சிலிர்தெலுந்தது.சட்டென்று திரும்பி அவளை இழுத்து அணைத்து அவள் இதழ்களை கவ்விக்கொண்டு அவள் இடுப்பை சுற்றி வளைக்க, மான்சி சோப்பை தொட்டியில் தவறவிட்டு அவன்மேல் சரிந்தாள்

அவள் இதழ்களை சுவைத்தவாறு இடுப்போடு சேர்த்து அவளை தூக்கிய சத்யன் தொட்டியில் இறக்கி நீரில் நனைய நனைய அவள் இதழ் ரசத்தை உறிஞ்சினான், மான்சி உடையோடு கொட்டும் நீரில் நனைந்துகொண்டே தன் கணவனின் முத்தத்தை கண்மூடி ரசித்தாள்

சத்யன் ஒரேநாளில் முத்தமிடுவதில் முதுகலை பட்டம் பெற்றிருந்தான், ஒருகை அவள் இடுப்பை வளைக்க மறுகை அவள் புட்டத்தில் வைத்து அவன் உயரத்திற்கு அவளை உயர்த்தி பிடிக்க தனது முரட்டு நெஞ்சில் அவளை தாங்கியவாறு அவன் கொடுத்த முத்தத்தை காமன் பார்த்தால் அவனுக்கும் சத்யன் மேல் பொறாமை வரும்

அப்படி ஒரு அற்புதமான முத்தத்தை அந்த கொட்டும் நீரின் வேகத்தோடு இனைந்து போட்டி போட்டு கொடுத்தான் சத்யன், மான்சியின் ஒரு கை அவன் தலை முடியை கொத்தாக பற்றி தன் முகத்தோடு வைத்து அழுத்த, மறுகை அவன் முதுகில் தனது தடங்களை பதித்தது

நீரின் வேகத்தில் நின்று பழக்கம் இல்லாத மான்சிக்கு மூச்சு திணற ஆரம்பிக்க, சத்யன் கொஞ்சம் கொஞ்சமாக அணைப்பை இலகுவாக்கினான், அவனைவிட்டு விலகி தடித்துப் போன தன் உதடுகளை தடவியவாறு சுவர் ஓரமாக ஒதுங்கி நின்ற மான்சி அவனை பொய்க் கோபத்தோடு பார்க்க

அழகிய முத்தத்தை அனுபவித்த சத்யன் முகம் சந்தோஷ சிரிப்போடு மறுபடியும் அவளை நெருங்கி " என்ன மான்சி எப்படியிருந்துச்சு" என்று குரலில் குறும்பு வழிய கேட்க

அந்த முத்தத்தின் மயக்கத்தில் இருந்து இன்னும் விடுபடாத மான்சி " ம்ம்ம் டிரஸெல்லாம் நனைஞ்சு போச்சு இப்போ நான் எப்புடி அக்கா கூட வீட்டுக்கு போறது" என்று சினுங்கினாள்


" வீட்டுக்கு போகத இங்கயே இரு" என்றவாறு அவளை நெருங்கி நின்ற சத்யன் நனைந்து திமிறிய அவளின் பொற் கலசங்களை பார்த்து எச்சில் விழுங்கியபடி குனிந்து அங்கே முகம் பதிக்க, மான்சிக்கு அவனின் ஆசைகள் புரிந்தாலும் சூழ்நிலையை சபித்தவாறு அவன் தலையை விலக்கி நிமிர்த்தி

" வேண்டாங்க அக்கா வந்துடுவாங்க அப்புறம் ரொம்ப சங்கடமா போயிரும், நான் நாளைக்கு காலையிலேயே வந்துடுவேன் அப்புறமா நீங்க என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் உங்க இஷ்டம் தான்" என்று மான்சி கலங்கிய குரலில் சொன்னதும்

அவளையே சிறிதுநேரம் உற்று பார்த்த சத்யன் " சரி நீ கிளம்பு போறபோக்குல காத்துல துணியெல்லாம் காஞ்சு போயிரும்" என்றவன் அவளை தூக்கி தொட்டிக்கு வெளியே இறக்கிவிட்டு மறுபடியும் இழுத்து அணைத்து ஒரு முத்தத்தை அவசரமாக பதித்து " நாளைக்கு சீக்கிரமா வா மான்சி" என்று ஏக்கமாய் கேட்க

மான்சி அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி "ம் சீக்கிரமா வர்றேன் நீங்க ஜாக்கிரதையா இருங்க" என்று கூறிவிட்டு விலகி நின்று தனது சேலையை பாவாடையோடு சேர்த்து பிழியவும் கௌசல்யா ஆடுகளை ஓட்டிக்கொண்டு அங்கே வரவும் சரியாக இருந்தது

மான்சியின் நனைந்த உடைகளை பார்த்து வாய் பொத்தி களுக்கென்று சிரித்தவள் "என்ன மாமாவுக்கு இன்னும் விட மனசில்லையாக்கும், பேசாம நீ வீட்டுக்கு வா மாமா நெல்லாவது வயக்காடாவது" என்று கேலி செய்ய ...சத்யன் அசடு வழிய திரும்பி கொண்டான்

இரண்டு பெண்களும் பாத்திரங்களை எடுத்து கூடையில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு போகும் வழியில் திரும்பி நடக்க, கௌசல்யா மட்டும் திரும்பி மறுபடியும் வந்து " ஏன் மாமோய் பொண்டாட்டியை கட்டிப்புடிக்கிற வேகத்துல இப்புடியா துண்டு அவுந்தது கூட தெரியாம நிப்ப" என்று நக்கலாக சொல்லிவிட்டு போக

சத்யன் அதிர்ந்து போனான் அவன் இதயம் வாயருகே வந்து துடிக்க அவசரமாக குனிந்து தனது இடுப்புக்கு கீழே பார்த்தான் ,, இடுப்பில் துண்டு சரியாகத்தான் இருந்தது, அப்போதுதான் அவள் கேலி செய்துவிட்டு போகிறாள் என்று புரிய தலையில் அடித்துக்கொண்டு மறுபடியும் தண்ணீருக்கு அடியில் போய் நின்றுகொண்டான்





" நீ வருவதற்கு இன்னும் நேரம்...

" இருக்கிறதோ என நினைத்து.....

" உன் வேட்டி சட்டை எடுத்து....

" ஆசையோடு அணிந்து இருந்தேன்....

" திடீரென்று வந்துவிட்ட நீ....

" ஓ என்ன ஆம்பிளை ஆக ஆசையா என்றாய்....

" இல்லை ...என் ஆம்படையான் மேல் ஆசை....

" சொல்லிவிட்டு ஓடி மறைந்தேன் நான்...

" காதல்கொண்ட மனைவியாக!



குளித்து முடித்த சத்யன் தொட்டியைவிட்டு வெளியே துண்டால் தலையை துவட்டிக்கொண்டிருக்க, அங்கே வந்த சரவணன் " என்னலே தம்பி இன்னேரத்துல குளிச்சுகிட்டு மேலுக்கு ஏதாவது வந்துற போவுது" என்று அக்கரையுடன் கேட்க

தலையை குனிந்து கொண்ட சத்யன் " இல்லண்ணே கொஞ்சம் கசகசன்னு இருந்துச்சு அதான்" என்று சத்யன் மெல்லிய குரலில் கூறினான்

அவன் குரலும் குனிந்த தலையும் சரவணனுக்கு விஷயத்தை விளக்கிச் சொல்ல லேசான சிரிப்புடன் " சரிலே தலையை நல்லா தொடைச்சுக்க பொழுதுபோன நேரம் ஈர அப்படி இருக்கும்" என்றவன் அங்கேயிருந்த கல்லில் உட்க்கார்ந்து கொண்டு

" ஏன்டா தம்பி வானம் இருக்குற வாட்டத்தைப் பார்த்தா மழை விடாது போலருக்கு பேசாம நாளைக்கு நெல்லு வாங்குற மிஷினை எடுத்துட்டு வந்து மொத்த நெல்லு கட்டையும் மிஷின்ல விட்டுறலாம்டா ஒரேநாள்ல வேலை முடியும், நெல்லையும் மூட்டை பிடிச்சு நாள மறுநாள் வீட்டுக்கு ஏத்திரலாம் நீ என்ன சொல்ற" என்று சத்யனை யோசனை கேட்டதும்,

சத்யன் உடனே தலையசைத்து " சரிண்ணே அப்படியே செய்யலாம், எதுக்கும் அப்பாகிட்ட ஒரு யோசனை கேட்டுக்கங்க" என்று வேகமாக கூறினான், யப்பா ஒரு வாரம் இங்கயே இருக்கவேண்டியதில்லை நாளைக்கே வீட்டுக்கு போகலாம், அவன் உள்ளம் குதூகலித்ததை வெளியே தெரியாமல் அடக்க ரொம்ப சிரமப்பட்டான்

" சரி தம்பி நான் வீட்டுக்கு போயி சித்தப்பாரை ஒரு வார்த்தை கேட்டுகிட்டு, வண்டிக்காரணுக்கு தகவல் சொல்லிறேன்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பியவன் மறுபடியும் நின்று " எலேய் ராவைக்கு உனக்கு சோறு இருக்கா இல்ல நா போயிட்டு மறுபடியும் எடுத்துகிட்டு வரவாலே" என்றதும்

சத்யனுக்கு அவன் பாசத்தை பார்த்து நெஞ்சு கலங்கியது " சாப்பாடு இருக்குண்ணே, பொழுது போச்சு இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு போண்ணே" என்று சத்யன் பதில் சொன்னதும் தான் சரவணன் வீட்டுக்கு கிளம்பினான்

அதன்பிறகு சத்யன் எல்லன் வந்ததும் இருந்த சாப்பாட்டில் அவனுக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு இவனும் சாப்பிட்டு பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு, டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு களத்துமேட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரப்பில் அமர்ந்தான்

அப்போது எல்லன் கயிற்றுக்கட்டிலை தலைமேல் தூக்கிவந்து களத்தில் போட்டுவிட்டு " தம்பியோவ் நீங்க கட்டில்ல ஒரங்குங்க நா இப்புடி படுத்துக்குறேன்" என்று தோளில் கிடந்த அவனுடைய போர்வையை எடுத்து தரையில் விரித்து படுத்துக்கொண்டான்

சத்யன் கட்டில் படுத்தவாறு அன்று காலையில் இருந்து தன் மனைவியுடன் அரங்கேறிய காதல் விளையாட்டுகளை மனதில் கொண்டுவந்து சந்தோஷத்துடன் புன்னகைத்துக் கொண்டான், இப்போ மான்சி என்ன பண்ணுவா சாப்பிட்டு தூங்கியிருப்பாளா இல்ல என்னை மாதிரியே விட்டத்தை வெறித்தக் கொண்டு நடந்ததை நெனைச்சு பார்த்துக்கிட்டு இருப்பாளா, என்று நினைத்தான், இரண்டாவதைத்தான் செய்துகொண்டிருப்பாள் என்று அவன் காதல் உள்ளம் சொன்னது

சுகமான அவளின் நினைவுகள் மனதை நிறைக்க, இதமான இரவுத் தென்றல் தாலாட்ட, சத்யனின் இமைகளை தூக்கம் தழுவியது, என்றுமில்லாத சந்தோஷம் அவன் முகத்தில் மையமிட்டு இருக்க நிலவின் ஒளியில் ராஜகுமாரனை போல இருந்தான் சத்யன்

வீட்டில் இருந்த மான்சியோ சத்யனின் நினைவுகளை மனதில் சுமந்து, " நீ எப்போது மறைவாய். நாளை எப்போது வரும்" என்று ஏக்கத்தோடு விண்ணில் மிதந்த நிலவை கேள்வி கேட்டபடி படுத்திருந்தாள்

அவள் உடலின் ஒவ்வொரு இடமும் அவன் உதடுகள் ஊறுவது போலவே இருந்தது, அவள் பெண்மையில் ஏற்பட்ட குறுகுறுப்பு உடல் முழுவதும் பரவ தொடைகளை இடுக்கி வைத்துக்கொண்டாள், லேசாக தடித்துப் போன இதழ்களை நாவால் தடவிப்பார்த்து, இன்னும் கூட கொஞ்சம் அழுத்தமாக முத்தமிட்டிருக்கலாம் என்று எண்ணி ஏங்கினாள்

அவனின் நினைவுகள் மனதை வாட்ட, அவனின் தொடுகை உணர்வு உடலை வாட்ட, மான்சி உறங்கும் போது நடுநிசியை தாண்டியிருந்தது 



" இனி வரும் காலங்களில்....

" உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா....

" என்று கேட்பதை விடுங்கள்.....

" உங்களுக்கு காதலாகி விட்டதா....

" என்று கேட்க்க பழகுங்கள்!
மறுநாள் பொழுது இருவருக்குமே இனிமையாக விடிய, சத்யன் எழுந்து வேப்பங்குச்சியால் பல்லை தேய்த்துக்கொண்டே வயக்காட்டை ஒரு ரவுண்டு வந்தான், எல்லன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்

தூரத்தில் சரவணன் கட்டு அடிக்கும் இயந்திர வண்டியுடன் வருது தெரிய, சத்யன் பரப்பரப்புடன் வாய்க் கொப்புளித்து முகம் கழுவி களத்துமேடுக்கு ஓடினான், அதற்க்குள் வண்டி வந்து நிற்க்க சரவணன் இறங்கி கையில் இருந்த சிறிய தூக்கை சத்யனிடம் கொடுத்து " ஏலேய் தம்பி இதுல சீம்பால் காய்ச்சி கௌசல்யா கொடுத்தனுப்புனா, வீட்டுல பூங்கொடி கிட்ட ஒரு தூக்கு குடுத்துட்டேன், சூடு ஆறுரத்துக்குள்ள தின்னாதான் நல்லாருக்கும் நீ போய் தின்னுட்டு வா நான் இங்க பார்த்துக்கிறேன்" என்றவன் தார்பாயை சுற்றியிருந்த கற்களை அகற்ற ஆரம்பித்தான்

எல்லனும் எழுந்து சரவணனுக்கு உதவி செய்ய, சத்யனு்க்கு கையில் இருந்த சீம்பால் பாத்திரம் வாயில் உமிழ்நீரை ஊறவைக்க, அதன் மூடியை திறந்து மூடியில் கொஞ்சம் அள்ளிப்போட்டு எல்லனிடம் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்துக்கொண்டு வரப்பில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்

அப்போது துரை சைக்கிளில் நெல் பிடிக்க கோணிக்கட்டுடன் வந்து இறங்கினார், அடுத்த சில மணிநேரங்களில் இயந்திரம் ஓட ஆரம்பிக்க ஒரு பக்கம் கதிர் கட்டுகளை இயந்திரத்திற்குள் விட மறுபக்கம் நெல் மணிகள் கொட்ட அதை சரவணன் கோணிப்பைகளில் பிடிக்க, துரை நெல் மூட்டைகளை கோணிஊசியில் சணல் கோர்த்து தைக்க. எல்லனும் சத்யனும் மூட்டைகளை தயாராக இருந்த டிராக்டரில் ஏற்றி அடுக்க ஆரம்பித்தனர்

கடகடவென வேலைகள் முடிய, முதலில் கௌசல்யா ஆடுகளை ஓட்டிக்கொண்டு வர பின்னாலேயே பூங்கொடி சாப்பாட்டு கூடையுடன் வந்தாள், ஆனால் மான்சியை வரவில்லை, சத்யன் முகம் ஏமாற்றத்தில் வாட அதை வெளிக்காட்டாமல் அமைதியாக மூட்டைகளை ஏற்றினான், மான்சி ஏன் வரவில்லை என்று அவனும் கேட்கவில்லை, யாரும் அவனிடம் சொல்லவுமில்லை

அன்று கட்டு அடிக்கும் வேலை முடிந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டரில் எல்லோரும் வீடுவந்து சேரும் போது இரவு மணி எட்டு ஆகிவிட்டிருந்தது, சத்யன் மான்சி வீட்டு வாசலிலேயே வந்து நிற்ப்பாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் மான்சி வரவில்லை, சத்யன் மனம் தவித்தது, ஆனால் டிராக்டரில் தார்பாய் போட்டு மூடினால்தான் காலையில் எழுந்து அப்படியே டிராக்டரை எடுத்துக்கொண்டு மதுரை நெல் மண்டியில் விலை பேசமுடியும்

சத்யனும் சரவணனும் நேர்த்தியாக தார்பாய் போட்டு மூடிவிட்டு கீழே இறங்க மொதல்ல குளிக்கனும் என்று சரவணன் தனது வீட்டுக்கு கிளம்பினான், தனலட்சுமியும் துரையும் 'உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது' என்பதற்கு ஏற்ப்ப பயிரிட்ட செலவையும் நெல் மூட்டைகளையும் திண்ணையில் அமர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தனர்

சத்யன் மான்சியை பார்க்கும் ஆர்வத்தில் நாலே எட்டில் வீட்டுக்குள் நுழைந்து சுற்றும்முற்றும் அவளை தேடிப் பார்த்துவிட்டு எங்கும் மான்சி இல்லாதுபோக பொறுக்கமுடியாமல் அங்கே வந்த பூங்கொடியிடம் "அண்ணி எங்க பூங்கொடி" என்று கேட்க



" அண்ணி பின்னாடி இருக்காங்கண்ணே " என்று சொல்லிவிட்டு மடித்த துணிகளுடன் அறைக்குள் போய்விட, அங்க என்ன பண்றா என்ற குழப்பத்துடன் சத்யன் வேகமா பின்கட்டை நோக்கி போனான்

தோட்டத்துக்கு செல்லும் வழியில் இருக்கும் மூட்டைகள் அடுக்கும் அறையின் வெளியே ஓரமாய் மான்சி ஒரு கிழிந்த பாயில் தலைக்கு ஒரு மரத்தால் ஆன மணக்கட்டையை வைத்துக்கொண்டு படுத்திருக்க, அவளுக்கு பக்கத்தில் உலக்கை ஒன்று போடப்பட்டு அவளை சுற்றிலும் அடுப்பு சாம்பலால் கோடு போடப்பட்டிருந்தது

அவளை பார்த்ததுமே சத்யனுக்கு புரிந்துபோனது, இரண்டு தங்கைகளுடன் பிறந்தவன் ஆயிற்றே அவனுக்கா புரியாது, ஆனாலும் மான்சியை அந்த நிலையில் பார்த்ததும் அவனுக்கு கண்கலங்கியது, பழக்கமில்லாத இந்த வீட்டில் இருப்பதே ரொம்ப சிரமம் இதில் இந்தமாதிரி என்றால் இன்னும் ரொம்பவே கஷ்டம், ச்சே இன்னுமா இந்த மாதிரியான பத்தாம்பசலித்தனமான கொள்கைகளை வச்சிருப்பாங்க, என்று அவளுக்காக அவன் மனம் கண்ணீர் விட அவளின் பக்கவாட்டில் மண்டியிட்டு அமர்ந்தான் 

No comments:

Post a Comment