Wednesday, July 29, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 10

அடுத்ததாக தட்சிணாவின் செல் அடித்தது,, “ அவளா பாருடா,, அவளா இருந்தா பேசாத கட் பண்ணுடா” என்று சத்யன் இரைச்சல் போட்டான் எடுத்து பார்த்த தட்சிணா “ இல்லண்ணே எங்க ஊர்ல இருந்து பண்றாங்க” என்று சொல்லிவிட்டு செல்லை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனான்
அவ்வளவு போதையிலும் தட்சிணா பொய் சொல்கிறான் என்று சத்யனுக்கு புரிந்தது,,

சிறிதுநேரம் கழித்து வந்த தட்சிணா “ அண்ணே ப்ளீஸ் வாங்க சாப்பிடலாம்,, இப்போ நீங்க சாப்பிடலைன்னா நானும் சாப்பிட மாட்டேன்” என்றான் ,, மான்சி அன்று சொன்ன அதே வார்த்தைகள் ,, ஆனால் இப்போதும் வேலை செய்தது



“ நீ ஏன்டா பட்டினியா இருக்கனும்,, நீ ஏ தம்பிடா,, இல்ல இல்ல அதுக்கும் மேல,, வா ரெண்டு பேருமே சாப்பிடுவோம்,, யாருக்காகவும் நாம பட்டினியா இருக்கக்கூடாதுடா” என்று சோபாவில் இருந்து தடுமாறிய படி எழுந்தவனை தட்சிணா வந்து தனது தோளில் தாங்கிகொண்டு டேபிளுக்கு அழைத்துச் சென்றான்

அதன்பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு சத்யனை சமாதானம் செய்து படுக்க வைப்பதற்குள் தட்சிணாவிற்கு சாப்பிட்டது ஜீரணம் ஆகிவிட்டது

மறுநாள் காலை சத்யனுக்கு தட்சிணாவை பார்க்கவே சங்கடமாக இருந்தது,, ஆபிஸ்க்கு கிளம்பியவன் தட்சிணா அருகில் வந்து “ ஸாரிடா நைட்டு கொஞ்சம் ஓவராயிடுச்சு,, ரொம்ப தொல்லை குடுத்துட்டேன் ” என்றான் வருத்தமாக

பளிச்சென்று சிரித்த தட்சிணா “ விடுங்கண்ணே பரவாயில்லை நீங்க தானே,, ஆனா அந்தக்கா ரொம்ப நல்லவங்க தான்னே,, நைட்டு எனக்கு போன் பண்ணி எப்படியாவது அவரை சாப்பிட வை தட்சிணாமூர்த்தின்னு அழுவுற மாதிரி கெஞ்சினாங்க” என்று சொன்னான்,,... ‘ம்ம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் கிளம்பிவிட்டான் சத்யன்

அன்று மாலை சரியாக நாலு மணிக்கு ஆபிஸில் இருந்த கம்பியூட்டரை நோண்டிக்கொண்டு இருந்த சத்யனை செல் ஒலித்து அழைத்தது,, எடுத்து பார்த்தான்,, மான்சிதான் போன் செய்திருந்தாள்,

பேசலாமா வேண்டாமா என்று சத்யன் யோசிக்கும் போதே அவனது விரல் அவன் பேச்சை கேட்காது பச்சை பட்டனை அழுத்தியது .. காதில் வைத்து " ஹலோ" என்றான் சத்யன் தயக்கமாக

" என்ன பண்றீங்க,, கொஞ்சம் என் வீட்டுக்கு வர்றீங்களா?" என்று மான்சி கேட்க

உடனே போ காரை எடு என்று விரட்டிய மனதை சிரமப்பட்டு அடக்கியவாறு " என்ன விஷயம் சொல்லு" என்றான் சத்யன்

எதிர் முனையில் சிறிதுநேரம் அமைதியாக இருந்தது பிறகு " ரொம்ப பிசியா இருந்தா வரவேண்டாம்" என்று மான்சி சொன்னாள்

காரியத்தை கெடுத்துட்டியேடா முட்டாள் என்று ஏசிய மனதுக்கு சமாதானம் சொன்னவாறு அவசரமாக " இல்லை வேலை எதுவும் இல்ல சும்மாதான் இருக்கேன் இதோ வர்றேன்" என்று சத்யன் கூற

" சரி வாங்க வெயிட் பண்றேன்" என்று சொல்லி கட் செய்தாள்

என்னவாக இருக்கும் என்று குழம்பிய படியே காரை எடுத்தான்,, அடுத்த இருபதாவது நிமிடத்தில் மான்சியின் வீட்டில் இருந்தான் சத்யன்

வாசலிலேயே காத்திருந்தாள் மான்சி,, இவனைப் பார்த்ததும் வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்,, திரும்பி வரும்போது கையில் ஒரு பேக்குடன் வந்தாள்

எங்காவது ஊருக்கு போகிறாளா,, என்று சத்யன் யோசிக்கும் போதே,, " ஒரு வாரம் காலேஜ் லீவு என்கூட இருந்த பொண்ணுங்க எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க,, நானும் ஊருக்கு போகலாம்னு நெனைச்சேன்,, இந்த ஒரு வாரத்தில் ஊருக்கு போய் என்ன பண்ணப்போறேன்னு போகலை.,, இங்க தனியா இருக்கிறதை விட உங்க வீட்டுக்கு வரலாம்னு கிளம்பிட்டேன்" என்றவள் திகைப்புடன் இருந்த சத்யன் முகத்தை நேராக பார்த்து " என்ன அமைதியாயிட்டீங்க வரலாம் தானே?" என்று கேட்க

திகைப்பு விலகிய சத்யன்,, சரியாகத்தான் தனது காதில் விழுந்ததா என்ற சந்தேகத்தில் " எங்கே என் வீட்டுக்கா?" என்றான்

" ஆமா உங்க வீட்டுக்குத்தான்,, ஜெயந்தி ஆன்ட்டிக்கு போன் பண்ணேன் அவங்கதான் போகச்சொன்னாங்க,, அவங்களும் வர்றேன்னு சொல்லிருக்காங்க,, ம்ம் கிளம்புங்க" என்று கையில் பூட்டு சாவியுடன் தயாராக நின்றாள்

திகைப்பு நீங்கி உற்சாகம் உள்ளே குமிழியிட அதை வெளியே காட்டாமல் "இதோ வா போகலாம்" என்று காரை நோக்கி வேகமாக போனான் சத்யன் 

சத்யனுடன் காரில் வரும்போது எதுவுமே பேசாமல் வந்தாள் மான்சி, சத்யன் மட்டும் பின்னால் திரும்பி பார்ப்பதும் பிறகு தனது தலைக்கு மேல கண்ணாடியை சரி செய்து அதன் வழியாக மான்சியை அடிக்கடி பார்த்துக்கொண்டே கரை ஓட்டினான்

மான்சி சத்யன் பார்ப்பதை தனது ஓரப்பார்வையால் உணர்ந்தாலும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,, அவள் முகம் முழுவதும் சிந்தனையின் சாயல் தெரிந்தது,, அப்படி எதைத்தான் இவ்வளவு தீவிரமாக சிந்திக்கிறாளோ என்று சத்யன் நினைத்தான்

வீடு வந்ததும் சத்யன் காரை விட்டு இறங்கி மான்சிக்கு கார் கதவை திறந்து விட, அவள் பேக்கை எடுத்துக்கொண்டு இறங்கி வீட்டுக்குள் போனாள்
அவள் வருகைக்காகவே காத்திருந்தது போல தட்சிணா ஓடி வந்து பேக்கை வாங்கிக்கொண்டு “ எப்படி அக்கா இருக்கீங்க” என்று புன்னகையுடன் விசாரித்தான்

பின்னாடி வந்த சத்யனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது,, ஆக மான்சி வருவது தட்சிணாவுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது,, ‘ டேய் சத்யா என்னடா நடக்குது இங்கே’ என்று அவன் மனம் அவனை கேள்வி கேட்டது,, எனக்கே ஒன்னும் புரியலை என்று சத்யன் முனங்கியபடி காரை ஓரம் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான்

ஹாலில் சோபாவில் மான்சி எடுத்து வந்த பை மட்டும் இருந்தது மான்சியை காணவில்லை,, தட்சிணாவின் குரல் சமையலறையில் கேட்க,, என்ன நடக்கிறது என்று சத்யன் சத்தமில்லாமல் சமயலறையை நெருங்கினான்
மான்சி சுடிதாரின் துப்பட்டாவை மார்பின் மீது தாவணியாக போட்டு அதை இடுப்பில் முடிந்துக்கொண்டு வாஷ்பேசினில் கிடந்த பாத்திரங்களை வேகமாக கழுவிக்கொண்டு இருக்க,, தட்சிணா அவளுடன் பேசிக்கொண்டே அடுப்பில் பாலை காய்ச்சி கொண்டு இருந்தான்

அறைக்குள் நுழைந்த சத்யன் மான்சியை நெருங்கி பாத்திரம் கழுவிய அவள் கையை பிடித்து “ வந்ததும் இப்போ யாரு உன்னை இதெல்லாம் செய்யச்சொன்னது,, காலையில வேலைக்காரம்மா வந்து இதெல்லாம் செய்வாங்க நீ வா” என்று பற்றிய கையை இழுக்க

மான்சி தனது கையை பற்றியிருந்ததை பார்த்துவிட்டு அவன் முகத்தை பார்த்து முறைக்க,, சத்யன் பட்டென்று கையை எடுத்துவிட்டான் “ இல்ல நீ ஏன் இதெல்லாம் செய்யனும்” என்று வார்த்தையை மென்று விழுங்கினான் சத்யன்

“ எனக்கு தெரியும் நீங்க போய் ஹால்ல உட்காருங்க நான் காபி எடுத்துட்டு வர்றேன்” என்று கழுவும் பாத்திரத்தில் கவனத்தை வைத்து சத்யனுக்கு பதில் சொன்னாள் மான்சி

முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வெளியே வந்த சத்யன் தோட்டத்து பாத்ரூமில் முகம் கழுவிட்டு,, தனது அறைக்குள் போய் போட்டிருந்த அலுவலக உடையை கழட்டிவிட்டு ஷாட்ஸும் கையில்லாத பனியனை எடுத்து போட்டுக்கொண்டு வெளியே வந்து சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான்

கையில் காபியுடன் வந்த மான்சி,, ஒரு டம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு,, இன்னொன்றை அவள் எடுத்துக்கொண்டு அதே சோபாவில் அடுத்த முனையில் அமர்ந்தாள்

காபியை உறிஞ்சியபடியே மான்சியை ஓரக்கண்ணால் பார்த்த சத்யன் “ இதெல்லாம் நீ ஏன் பண்ற மான்சி,, ஏதாவது காரணம் இருக்கா?” என்று அக்கறையற்ற குரலில் கேட்பதுபோல் கேட்க

திரும்பி அவனை நேராக பார்த்த மான்சி “ பின்னே இந்த ஒரு வாரத்துக்கு உங்க வீட்டுல ஓசியிலயா சாப்பிட முடியும்,, சாப்பிடுற சாப்பாடுக்கு ஏதாவது வேலை செய்யனும்ல” என்று பட்டென்று பதில் வந்தது

ஏன்டா கேட்டோம் என்று நினைத்த சத்யனுக்கு அதற்க்கு மேல் அந்த காபி ஒரு துளிகூட இறங்கவில்லை “ ஏய் தட்சிணா இந்தா எனக்கு காபி வேனாம்” என்று சத்யன் தட்சிணாவிடம் காபி டம்ளரை சத்யன் நீட்ட

சத்யனை நெருங்கிய தட்சிணாவை கண்பார்வையால் தடுத்த மான்சி “ ஏன் வேனாம்,, நான் சொன்னதுக்கு தான் காபி பிடிக்கலைன்னா கோபத்தை என்கிட்ட காமிங்க காபிகிட்ட காட்டாதீங்க” என்று சொன்ன மான்சி அலட்சியமாக திரும்பி டிவியை பார்த்தாள்



எரிச்சலுடன் காபியை அவசரமாக குடித்துவிட்டு டம்ளரைடீபாயில் வைத்துவிட்டு தனது அறைக்குள் போய் சத்யன் கதவை சாத்திக்கொண்டு கம்பியூட்டர் முன்பு அமர்ந்தான்

சிறிதுநேரம் கழித்து கதவை தட்டிவிட்டு அறைக்குள் மான்சி வந்தாள்,, இதற்க்கு முன் மான்சி சத்யன் அறைக்குள் வந்ததில்லை,, சத்யன் அவளை ஆச்சரியமாக பார்க்க,, அவள் அறையை முழுவதுமாக பார்வையிட்டாள்

பிறகு அவனருகில் வந்து “ தட்சிணா கிட்ட கொஞ்சம் பணம் கொடுத்தனுப்புங்க,, காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரட்டும் நான் இருக்கும் வரை வீட்டுலயே சமையல் பண்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக மான்சி காத்திருக்க............

“ அதெல்லாம் வேண்டாம் ஹோட்டல் வாங்கி சாப்பிட்டுக்கலாம்,, உனக்கெதுக்கு வீன் சிரமம்” என்று சத்யன் சொன்னான்

அவனையே பார்வையால் ஊடுறுவிய மான்சி “ பணம் எங்க வச்சிருக்கீங்க சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன்” என்றாள் விடாப்பிடியாக

அவளுடைய உரிமையான பேச்சு சத்யனுக்கு வியப்பாக இருந்தது,, கடவுளே இவளை புரிஞ்சுக்கவே முடியலையே, என்று நினைத்தபடி எழுந்து ஸெல்ப்பில் இருந்த பர்ஸை எடுத்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தான்

“ம்ஹூம் பத்தாது மளிகை சாமான்கள் கூட எதுவுமே இல்லை எல்லாமே வாங்கனும்” என்று மான்சி சொல்ல

சத்யன் கையில் இருந்த பர்ஸை அவளிடம் கொடுத்து “ தேவையானதை நீயே எடுத்துக்க” என்று கூறிவிட்டு மறுபடியும் கம்பியூட்டர் முன் அமர்ந்துகொண்டான்

மான்சி அவன் செயலை மறுக்கவில்லை,, மாறாக பர்ஸை திறந்து இன்னும் இரண்டு நோட்டுகளை எடுத்துக்கொண்டு பர்ஸை அவன் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே போனாள்

வெளியே தட்சிணாவிடம் பொருட்களை வாங்க சொல்வதும்,, அவன் சரிக்கா என்று சொல்வதும் சத்யன் காதில் விழுந்தது,, அப்போது தான் சத்யனுக்கு ஜெயந்தி வருவதாக மான்சி சொன்னது ஞாபகம் வர தனது செல்லை எடுத்து, ஜெயந்தியின் நம்பருக்கு கால் செய்தான்

நான்கைந்து ரிங்குகளுக்கு பிறகு எடுத்த ஜெயந்தி “ சொல்லுடா தம்பி” என்றாள்

“ என்ன இங்க வர்றேன்னு சொன்னியா அக்கா,, மான்சி சொன்னா, நீ வர்றேன்னு அவளும் இங்க வந்துருக்கா, உன்னை இன்னும் காணோம் அதான் கேட்கலாம்னு போன் பண்ணேன்” என்று சத்யன் சொல்ல..

“ நான் நாளைக்கு சாயங்காலம் வர்றேன் சத்யா, மாமா இன்னும் டியூட்டிக்கு போகலை,, அவரை அனுப்பி வச்சுட்டு வர்றேன்,, மான்சிய பார்த்துக்க சத்யா” என்றாள் ஜெயந்தி

“ நான் எங்க அவளை பார்த்துக்கறது,, அவ என்னை பார்த்துகிட்டா போதாதா” என்று சத்யன் கிண்டலாக பதில் சொன்னான்

எதிர்முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ சத்யா மான்சி ரொம்ப நல்லப் பொண்ணுடா,, எப்பவுமே போன் பண்ணா உன்னை பத்திதான் விசாரிப்பா,, உன்மேல ரொம்ப அக்கறைடா,, உன்னை பத்தி எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கனும்னு அவளுக்கு ஆர்வம் ஜாஸ்தி சத்யா” என்று ஜெயந்தி சொல்ல

சத்யனுக்கு இது புது தகவல்,, மனது எக்காளமிட “ என்னை பத்தி என்ன சொன்னக்கா” என்று ஆர்வமாக கேட்டான்

“ நான் எங்க சொன்னேன், அவளுக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கு, பாண்டியன் சொல்லிருப்பார் போல,, அவளுக்கு தெரிஞ்ச விஷயத்தை என்கிட்ட கேட்டு கண்பார்ம் பண்ணிக்குவா,, மத்தபடி அவளுக்கு உன்னைப்பத்தி எல்லாமே தெரியும்” என்று சொல்லி முடிக்க...

“ சரிக்கா நீ நாளைக்கு வா, நான் வச்சிர்றேன்” என்று சத்யன் செல்லை கட் பண்ணி வைத்த சத்யன் கதவருகே நிழலாட திரும்பி பார்த்தான்,, மான்சி தான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்


அவள் பார்வையில் ஏதோவொரு வித்தியாசம் தெரிந்தது, சத்யன் அதை உற்றுப்பார்த்து உணருவதற்குள் தலைகவிழ்ந்த மான்சி “ உங்க ரூம் கசமுசான்னு இருக்கு க்ளீன் பண்ணட்டுமா?” என்று கேட்டாள்

இவளுக்கு என் அறையை க்ளீன் பண்ணனுமா,, இல்லை என் அருகில் இருக்க விரும்புகிறாளா,, என்று மனதுக்குள் கேள்வி கேட்ட சத்யன் எழுந்து அவளை நெருங்கி நின்றான்

“என்ன மான்சி என்ன வேனும்,, உன் பார்வையில் ஏதோவொரு தடுமாற்றம், என்னம்மா என்னாச்சு” என்று சத்யன் குரலில் அன்பை குழைத்து கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சியின் பார்வையில் வழக்கமான கம்பீரம் இல்லை எதையோ யாசிக்கும் பார்வை “ எனக்கு ஒன்னுமில்ல,, நான் உங்க ரூமை க்ளீன் பண்ணவா?” என்று பார்வையால் அவனை தகர்த்த வாறு மான்சி மெல்லிய குரலில் கேட்டாள்

சத்யன் மனதில் வாசனை மிகுந்த பூக்கள் அடுத்தடுத்து மலர்ந்து வாசனையை பரப்ப,, “ இப்போ என்ன இந்த ரூமையை க்ளீன் பண்ணனும் அவ்வளவு தானே சரி வா பண்ணலாம்” என்று சத்யன் அவள் கையை பற்றி உள்ளே இழுத்தான்

முன்புபோல் தொட்டதற்காக மான்சி முறைக்கவில்லை,, அவனுடன் அறைக்குள் நுழைந்தவள் சுற்றிலும் பார்த்துவிட்டு சத்யனிடம் இருந்து கைகளை உருவிக்கொண்டு, பரபரவென்று வேலையை ஆரம்பித்தாள்,, சத்யனையும் சும்மா விடவில்லை இதை திருப்புங்க, அதை இங்க வைங்க, இதை அங்கே வைங்க, என்று ஏகப்பட்ட வேலை வாங்கினாள்

அவன் உடைகள் இருந்த அலமாரியை திறந்து எல்லாவற்றையும் சரியாக அடுக்கினாள்,, கட்டிலை ஜன்னலோரமாக திருப்பி போட்டார்கள்,, புதிதாக மெத்தை விரிப்பை விரித்து தலையனை உறைகளை மாற்றினாள்,, கட்டில் பக்கத்தில் இருந்த டேபிளை க்ளீன் செய்து உள்ளே இருந்த காலி விஸ்கி பாட்டில்களை சத்யனை முறைத்தபடி எடுத்து போட்டாள்,

சத்யன் அவள் பார்வையை தவிர்த்து, வேலையை மும்முரமாக செய்வது போல நடித்தான்,, கம்பியூட்டர் இருந்த டேபிளை நகர்த்தி திருப்பி வைத்து அறையை சுத்தம் செய்து முடித்தபோது ஒரு கோணிப்பை நிறையும் அளவுக்கு குப்பை இருந்தது,, சத்யனுக்கே சங்கடமாக இருந்தது,, இவ்வளவு குப்பையா தன் அறையில் இருந்தது என்று,,

சத்யன் அறை பளிச்சென்று சுத்தமாக அழகாக மாறிவிட்டது,, சத்யனுக்கு மனசுக்கு சந்தோஷமாக இருந்தது,, யப்பா எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்றா என்று மான்சியை ஆச்சரியமாக பார்த்தான்

நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்தபடி அறையை கூட்டியவள் இவன் பார்வையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்து புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க,,

அவளை நெருங்கிய சத்யன் அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் வழிந்த வியர்வையை விரலால் வழித்து சுண்டிவிட்டு,, “ இன்னிக்கு நிறைய வேலை பார்த்துட்ட இப்பவே ரொம்ப டயர்டாயிட்ட இதோட நீ சமையல் செய்யவேண்டாம்,, தட்சிணாவுக்கு போன் பண்ணி இப்போ நைட்டுக்கு மட்டும் ஹோட்டலில் வாங்கிட்டு வரச்சொல்றேன்,, நாளையிலேருந்து நீ சமையல் பண்ணு சரியா” என்று அவளின் கண்களை பார்த்துக்கொண்டே சத்யன் சொன்னான்

அவளும் தன்னை விழுங்கும் சத்யனின் கண்களை பார்த்தபடி சரியென்று தலையாட்டினாள்,, அவள் நெற்றியில் விழுந்த கற்றை கூந்தலை காதோரம் ஒதுக்கிய சத்யன் அவள் அழகை பார்வையால் விழுங்கியபடி “ மான்சி நீ ரொம்ப அழகாயிருக்க” என்று கிசுகிசுப்பாக சொல்ல,,

அதை கேட்ட மான்சியின் கண்கள் மேலும் பெரியதாக விரிந்தது,, நாசிகள் விடைக்க, உதடுகள் துடிக்க சத்யனையே பார்த்தாள்,, “ நிஜமாகவே நீ ரொம்ப ரொம்ப அழகு மான்சி, இந்த கண்களும் மூக்கும் உதடும் ரொம்ப கவர்ச்சியா இருக்கு” என்ற சத்யன் அவள் மூக்கில் ஒட்டியிருந்த தூசியை தன் விரலால் தடவி எடுத்துவிட்டு, அவளின் மவுனம் துணிச்சலைத் தர மெதுவாக குனிந்து அவள் நெற்றியில் தன் உதடுகளை வைத்து அழுத்தினான்

அதுவரை விழிகளை விரித்து அவனையே பார்த்த மான்சி அவன் நெற்றியில் உதடு பதித்ததும் விழிகளை மூடிக்கொண்டாள்,,அவளிடம் எதிர்ப்பில்லாமல் போகவே சத்யன் அடுத்ததாக அவளின் பளிங்கு கன்னத்தில் முத்தமிட்டான்,, மான்சியின் ஈரமான இதழ்கள் உணர்ச்சியில் துடிக்க சத்யன் அந்த சிவந்த இதழ்களை நெருங்கினான்

அவன் பிடியில் இருந்த மான்சியின் உடல் துவண்டு அவன் கைகளில் வழிய ஆரம்பிக்க, அவள் இதழ்களை நெருங்கிய சத்யன் தன் உதட்டை நாக்கால் தடவி ஈரப்படுத்திக்கொண்டு குனியவும் வெளியே தட்சிணா கேட்டை திறந்து பைக்கை உள்ளே ஏற்றும் சத்தம் கேட்டது

வெளியே சத்தம் கேட்டதும்,, அதுவரை துவண்டு வழிந்த மான்சியின் உடலில் சட்டென்று ஒரு விரைப்பு வர. அடுத்த நொடி சத்யனை உதறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள் 





" எல்லா உயிர்க்குள்ளும் நெருப்புண்டு!

" அது காதலெனும் நெருப்பு!

" இந்த நெருப்பின்றி உய்யாது உயிர்!

" நெருப்பே ஆசை!

" நெருப்பே பார்வை!

" நெருப்பே காதல்!

" நெருப்பும் நெருப்பும் அணைத்துக்கொண்டால்...

" நெருப்பே மிஞ்சும்!

" இந்த நெருப்பை அனைக்க...

" இரு ஜோடி இதழ்களின் ஈரமே போதும்!


No comments:

Post a Comment