Wednesday, July 29, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 11

மான்சி சத்யனை உதறிவிட்டு அவசரமாக வெளியேறிவிட , சத்யன் தன் நெற்றியில் அடித்துக்கொண்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.. “போச்சு எல்லாம் போச்சு அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துட்டேன்,, பேக்கை தூக்கிகிட்டு கிளம்பப் போறா,, அய்யோ நானே எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டேனே’’ என்று சத்யன் வாய்விட்டு புலம்பியவாறே கட்டிலில் மல்லாந்து படுத்தான்

‘ஏற்கனவே தொட்டதுக்கெல்லாம் முறைப்பா, இப்போ சொல்லவே வேண்டாம் நிச்சயம் கிளம்பப் போறா,, ச்சே எனக்கு அறிவேயில்லை,, என்று தன் கன்னத்தில் தானே அடித்துக்கொண்டான்

வெளியே தட்சிணாவின் பேச்சுகுரல் கேட்டது,, இன்னும் கொஞ்சநேரத்தில் ‘ அக்கா போய்ட்டாங்க அண்ணே,, என்று சொல்லப்போறான்,, என சத்யன் தன் செயலுக்காக தன்னையே வெறுத்து கொண்டு படுத்திருந்தான்



சிறிதுநேரத்தில் கதவை தட்டிய தட்சிணா “ அண்ணே சாப்பிட வாங்க அக்கா வெயிட் பண்றாங்க,, என்று கூப்பிட,,...

ஆகா அப்போ என் தேவதை வீட்டைவிட்டு போகவில்லையா, என்று மனம் துள்ளிக்குதிக்க.. சத்யன் வாறி சுருட்டிக்கொண்டு எழுந்து வெளியே வந்தான்

டைனிங் டேபிளில் மான்சி ஒரு சேரில் அமர்ந்து டம்ளர்களில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருந்தாள்,, சத்யன் அவளுக்கு எதிரே சேரில் அமர்ந்தான்,,

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ போய் கைகால் முகமெல்லாம் கழுவிட்டு வாங்க,, ரூமை நீங்களும் தானே சுத்தம் பண்ணீங்க” என்று சொல்ல

மறுபேச்சின்றி எழுந்து போய் ஒரு மினி குளியலே போட்டுவிட்டு வந்தான் சத்யன்,, டவலால் தனது வெற்று மார்பை துடைத்தபடி சேரில் அமர்ந்தான்,, அவனெதிரே தட்டு வைத்து அதில் உப்புமாவை அள்ளி வைத்தாள் மான்சி

உப்புமாவை பார்த்ததும் சத்யன் முகம் கோணியது அவனுக்கு உப்புமா சாப்பிடுவதை விட பட்டினி கிடப்பது ரொம்ப பிடிக்கும் “ டேய் தட்சிணா என்னடா ஹோட்டல்ல டிபன் எதுவும் வாங்கிட்டு வரலையா?” என்று சத்யன் போட்ட கூச்சலில் தட்சிணா நடுங்கினாலும் மான்சி அசையாமல் நின்றாள்

“ நீங்க போன் பண்ணி சொன்னாதானே அவன் வாங்கிட்டு வருவான்,, எதுவுமே சொல்லாம அவனை போய் கோவிச்சுக்காதீங்க,, அவசரத்துக்கு உப்புமாதான் பண்ண முடிஞ்சது,, உங்களுக்கு உப்புமா பிடிக்காதுன்னு தெரியும், அதான் பீன்ஸ் கேரட் எல்லாம் போட்டு புலாவ் மாதிரி பண்ணிருக்கேன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க” என்று பொறுமையாக எடுத்து சொன்னபடி தேங்காய் சட்னியை கரண்டியில் எடுத்து தட்டில் ஊற்றினாள்

அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் சத்யன் கடமைக்காக சாப்பிட ஆரம்பித்து, மூன்றாவது முறையாக கேட்டு வாங்கி சாப்பிட்டான்,, உப்புமா இவ்வளவு ருசியாக கூட செய்யமுடியும் என்பதே அவனுக்கு இப்போதுதான் தெரியும், விரலை வாயில் போட்டு ஒட்டியிருந்த உப்புமாவை சப்பியவாறே போய் கைகழுவிவிட்டு வந்தான்

மறுபடியும் சேரில் அமர்ந்த சத்யன் “ உப்புமா சூப்பரா இருந்துச்சு மான்சி, நீ எப்படி இதெல்லாம் கத்துக்கிட்ட?” என்று கேட்டான்

தனக்கு ஒரு தட்டிலும் தட்சிணாவுக்கு ஒரு தட்டிலும் உப்புமாவை பறிமாறிய மான்சி தலைகுனிந்த வாறே “ ம் ஸ்கூலுக்கு போய் கத்துகிட்டேன்” என்று நக்கலாக பதில் சொல்ல

“ என்ன மான்சி இப்படி சொல்ற” என்று சத்யன் வருத்தமாக கேட்க

“ பின்ன இதெல்லாம் எங்கபோய் கத்துக்கறது எல்லாமே தானா வரனும் அதான் பொண்ணு” என்றவள் உணவில் கவனமாக இருக்க,,, சத்யன் எழுந்து ஹாலுக்கு போனான்

சாப்பிட்டு விட்டு வந்த தட்சிணா அவன் வழக்கமாக படுக்கும் போர்ட்டிகோவில் படுக்கையை விரித்து படுத்துக்கொண்டான்

சிறிதுநேரத்தில் மான்சி கை துடைத்தபடியே வந்து “ உங்க ரூம்ல இருக்கிற புக்ஸ்ல எதாவது எடுத்துக்கவா?” என்றாள்

“ம் எடுத்துக்க மான்சி ஆனா என்கிட்ட சாண்டில்யன், அகிலன், கல்கி, இவங்க புக்ஸ் தான் இருக்கு, உனக்கு பிடிக்குமா?” என்று சத்யன் கேட்க

“எனக்கு சரித்திர நாவல்களும் பிடிக்கும்” என்ற மான்சி சத்யனின் அறைக்குள் நுழைந்தாள்

உடனே எழுந்த சத்யன் எப்படியாவது நடந்ததற்கு ஒரு ஸாரியாவது அவளிடம் சொல்லிறனும், இல்லேன்னா காலையில கூட கிளம்பினாலும் கிளம்பிடுவா’ என்று நினைத்த சத்யன் மான்சியின் பின்னாலேயே அறைக்குள் நுழைந்தான்
ஸெல்ப்பில் இருந்து புத்தகங்களை எடுத்து புரட்டிக்கொண்டிருந்த மான்சி சத்தம் கேட்டு திரும்பி சத்யனை பார்த்தாள்,, அவளின் முறைப்புக்கு பயந்து தனது பார்வையால் கெஞ்சியபடி அவளை நெருங்கிய சத்யன் “ ஒன்னுமில்ல மான்சி, அப்போ நடந்ததுக்கு ஸாரி சொல்லலாம்னு வந்தேன் அவ்வளவு தான்” என்றவன் கட்டிலில் உட்கார்ந்தான்

அவனுக்கு முதுகுகாட்டி கையிலிருந்த புத்தகத்தை புரட்டியபடி, “ விடுங்க அதைப்பத்தி நான் மறந்துட்டேன்” என்றாள் மான்சி

“ இல்ல மான்சி உன் முகத்தை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததும் என்னால கன்ட்ரோல் பண்ணிக்கமுடியலை, உன் அழகு என் மூளையை செயலிழக்க வச்சுருச்சு அதான் அப்படி பண்ணிட்டேன்” என்று தனது செயலுக்கு விளக்கம் சொன்னான் சத்யன்

புத்தகத்தில் கவனமாக இருந்த மான்சி “ ம்ம் புரியுது விடுங்க” என்றாள்
கட்டிலிருந்து எழுந்த சத்யன் அவளருகில் சென்று “ அதனால உனக்கு கோபமில்லையே மான்சி நான் ரொம்ப பயந்து போய்ட்டேன்” என்று சொல்ல

“எதுக்கு பயந்தீங்க” என்றாள் மான்சி இன்னும் தலை நிமிராமல்

“ நடந்ததுக்கு கோவப்பட்டு எங்க நீ வீட்டைவிட்டு போயிடுவியோன்னு தான் பயந்தேன்” என்றவன் அவள் பின்னால் நின்று அவள் வாசனையை நாசிகளில் ஏற்றியபடி “ அப்போ உனக்கு கோபம் இல்லை தான மான்சி,, உன்கிட்ட ஒன்னு கேட்கனும்” என்றான்

“என்ன கேளுங்க” என்றாள் மான்சி

“இல்ல நீ முன்னல்லாம் மாமான்னு கூப்பிடுவ இப்ப ஏன் கூப்பிடுறதில்லை” என்று மெல்லிய குரலில் கேட்டான்

“ இப்போ கூப்பிடனும்னு தோனலை அதனால கூப்பிடலை” என பட்டென்று பதில் வந்தது மான்சியிடமிருந்து

எப்படி முகத்திலடிச்சாப் போல பதில் சொல்றாப் பாரு, சரியான மண்டைகர்வம் பிடிச்சவ என்று மனதுக்குள் கறுவிய சத்யன் “ ஓ,... ஆனா ஏன் கூப்பிட தோணலை?” என்றான் விடாக்கண்டனாக

“ இதுக்கெல்லாம் காரணம் சொல்லிகிட்டு இருக்கமுடியாது, எனக்கு பிடிக்கலை கூப்பிடலை” என்றாள் புத்தகத்தை பார்த்தபடி

“அதாவது என்னை பிடிக்கலை அதனால என்னை மாமான்னு கூப்பிட பிடிக்கலை நான் சொல்றது சரிதானே மான்சி” என்று வருத்தமாக சத்யன் கேட்டான்

இப்போது பட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த மான்சி “ நீங்களே ஏதாவது கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றாள்

“அப்போ என்னை உனக்கு பிடிக்குமா?” என்று சத்யன் கேட்க

அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை, புத்தகத்தில் ஒரு வரியை கூட படிக்காமலேயே மொத்த பக்கங்களையும் புரட்டிக்கொண்டு இருந்தாள்

“ சொல்லு மான்சி என்னை உனக்கு பிடிக்குமா” என்று சத்யன் மறுபடியும் கேட்டான்

சிறிதுநேரம் பக்கங்களை புரட்டாமல் விரலுக்கு ஒய்வு கொடுத்த மான்சி “ ம்ம்” என்று மட்டும் சொல்ல

“இதுக்கு என்ன அர்த்தம் மான்சி, வாயை திறந்து பதில் சொல்லு என்னை எதனால., எப்போதிலிருந்து உனக்கு பிடிக்கும்” என்று சத்யன் விடாபிடியாக கேட்டான்

விடமாட்டியா என்பதுபோல் நிமிர்ந்து அவனை பார்த்த மான்சி “ ம்ம் உங்களை சின்னபுள்ளையா இருக்கும் போதிலிருந்தே பிடிக்கும், பொண்டாட்டி செத்தா உடனே வேற ஒரு மனைவியை தேடும் உலகத்தில், ஒருத்தியை காதலிச்சு அவள் இறந்து பத்து வருஷம் ஆகியும் அவளோட நினைவிலேயே இருக்கும் உங்களை யாருக்குத்தான் பிடிக்காது,, ஆனா அதுக்காக நான் எந்த உரிமையும் எடுத்துக்க விரும்பலை” என்று அவள் மனதை ஓரளவு தெளிவாக மான்சி எடுத்துரைக்க

“எந்த உரிமையும்னா என்ன மான்சி எனக்கு புரியலை” என்று சத்யன் மறுபடியும் விளக்கம் கேட்டான்

“ ஆமாம் நான் சொல்றது சரிதானே உரிமை எடுத்துக்க எனக்கு என்ன தகுதியிருக்குது,, நான் ஒரு ஊனமுற்றவள் தானே,, உங்களோட இந்த நொண்டி குதிரை ஜோடி சேரவேண்டாம்,, அது குடும்பம் என்ற சவாரிக்கு சரியா வராது” என்றாள் மான்சி படபடப்பாக

அவள் தோள்களை பற்றி தன் பக்கம் திருப்பிய சத்யன் “ நீ என்கிட்ட உரிமை எடுத்துக்க தடையா இருக்குறது ,உன்னோட ஊனமா? இல்லை என்னோட முன்னால் மனநோயாளி என்ற நிலைமையா? எனக்கென்னவோ ரெண்டாவதுதானே என்று தோணுது” என்று சத்யன் விரக்தியான குரலில் சொல்ல

அவனுடைய வார்த்தைகளின் பாதிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, அடுத்த நொடியில் விழிகள் குளமாக. புத்தகத்தை ஸெல்ப்பில் வைத்துவிட்டு, தன் தோளில் இருந்த அவன் கைகளை விலக்கிவிட்டு அறையை விட்டு வெளியேற முயன்றாள்

தனது வார்த்தைகள் அவள் மனதை தாக்கிவிட்டது என்று சத்யனுக்கு புரிய, போனவளை எட்டி பிடித்து இழுத்து தன் நெஞ்சில் போட்டுக்கொண்டான் சத்யன்
பீறிட்டு வந்த அழுகையுடன் அவனிடமிருந்து திமிறியபடி “ என்னை விடுங்க நான் போறேன், என் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்,, யாருக்கும் நான் அதை விளக்கனும்னு அவசியமில்லை, விடுங்க மொதல்ல” என்று அழுகையினூடே சொல்லியவாறு மான்சி திமிறினாள்

திமிறியவளை சுலபமாக அடக்கியவாறு “ ஸ்......... இப்போ நான் என்ன சொன்னேன்னு இவ்வளவு அழுகை, ஆமா நான் கேட்டதில் என்ன தப்பு, இதுவரைக்கும் நான் பார்த்த பொண்ணுங்கள்ல என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னவ எல்லாம் என்னோட பழைய நிலைமையை கேள்விப்பட்டதும் உடனே என்னை வேண்டாம்னு சொல்லிடுவாங்க,, அதோட நீயும் இதுவரைக்கும் என்கிட்ட அனுசரனையா நடந்துகிட்டு இருக்கியா?. நேத்து கூட ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டுற, அப்போ என் மனசு எவ்வளவு பாடுபட்டுச்சுன்னு எனக்குத்தான் தெரியும், அதனாலதான் இப்படி சொன்னேன் ” என்று சத்யன் தான் சொன்னதற்கான விளக்கத்தை சொல்ல

அவன் நெஞ்சில் இருந்த மான்சியின் திமிறல் ஓய்ந்து போயிருக்க “ எல்லாப்பெண்களும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க , மனசை புரிஞ்சுக்கிட்டு விரும்புறவங்களும் இருக்காங்க,, அது மாதிரி ஒரு நல்ல பொண்ணு உங்களுக்கு கண்டிப்பா அமைவாங்க,என்றவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு

" யார்கிட்டயும் எதுவும் உதவி கேட்காதது என்னோட குணம், வீட்டுல கூட நான் அப்படித்தான், நீங்க எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க, உங்களுக்குன்னு ஒரு நல்லவ நிச்சயம் பிறந்திருப்பா அவளுக்காக காத்திருங்க” என்று மான்சி சொன்னாள்,, அவள் இதை சொல்லும்போது சத்யனின் நெஞ்சை வருடிக்கொண்டே சொன்னாள், சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமேயில்லாமல்

தன் நெஞ்சில் இருந்த மான்சியின் தலைமுடியை விரல்களால் அலைந்தவாறு,, “ அப்போ நீ யாரு?” என்றான் சத்யன்
அன்னாந்து அவன் முகத்தை பார்த்து “என்னது எனக்கு புரியலை என்று மான்சி கேட்க

“ இல்ல எனக்குன்னு ஒருத்தி நல்லவளா வர்றவரைக்கும் காத்திருங்கனு சொல்றியே, அப்போ நீ என்ன பண்ணப்போற, நீ நல்லவ இல்லயா? ” என்று அவள் கண்களை பார்த்து சத்யன் கேட்டான்

அவனைவிட்டு விலகி மெல்ல தலைகுனிந்து “ எனக்கு உங்களை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே முடியாது” என்று கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே மான்சி கூறியதும்

மறுபடி அவளை இழுத்து வளைத்த சத்யன் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி “ ஏன் நாம சேர்ந்து வாழமுடியாதுன்னு சொல்ற மான்சி” என்று கேட்டான்

“ஆமா நாம வாழமுடியாது, மாத்தி மாத்தி ஏதாவது பிரச்சனை தான் வரும்” என்றாள் மொட்டையாக

தன் கைகளுக்குள் இருந்தவளை முரட்டுத்தனமாக பற்றி குலுக்கியவன் “ ஏய் திரும்ப திரும்ப அதையே சொல்லாத ஏன் வாழ முடியாது காரணத்தை சொல்லு” என்றான் கோபமாக

" ஆமா எப்படி வாழ முடியும்,, என்னோட ஊனத்துக்காக பரிதாபப்பட்டு தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு நான் நெனைச்சு அழுவேன்,, நம்மோட மனநிலை சரியில்லாததால் தான் இப்படி ஒரு நொண்டிய கல்யாணம் பண்ணவேண்டியதா போச்சுன்னு நீங்க வாழ்நாள் பூராவும் அழுவீங்க,, எதுக்கு இந்த ஒட்டாத நிலைமை, இதை விட விலகியிருந்து ரசிப்பதே மேல்" என்று மான்சி கண்ணீருடன் அவனுக்கு விளக்கம் சொன்னாள்

சிறிதுநேரம் சத்யனிடம் எந்த அசைவும் இல்லை,, பிறகு அவளை விலக்கி நிறுத்தி முகத்தை உற்றுப்பார்த்தான் " அப்போ நான் வேற வழியில்லாமல் தான் உன்மேல ஆசைப்படுறேன்னு நெனைக்கிறயா?" என்று அழுத்தமாக கேட்டான்

அய்யோ நான் அப்படி சொல்லலை,, நம்மளோட நிலைமை சரியாயிருந்தா ஏன் இதுபோல ஒரு நொண்டியை கல்யாணம் பண்ணப்போறோம்னு நீங்க ஒருநாள் நிச்சயமா வருத்தப்படுவீங்க,, அப்போ அதை கேட்டா என்னால தாங்க முடியாதுங்க " என்று மான்சி உடல் குலுங்க அழுதாள்

"ஏய் மொதல்ல இந்த அழுகையை நிப்பாட்டு,, என்று அவள் தோள்களை பற்றி உலுக்கியவன் " என் நெஞ்சில் அப்படியொரு எண்ணமே சத்தியமா கிடையாது மான்சி,, உன் பயோடேட்டாவில் உன்னோட போட்டோவை பார்த்ததில் இருந்து என் மனசுக்குள்ள ஒரு தாக்கம் மான்சி, அது இந்த ஒரு மாசத்தில் படிப்படியாக வளர்ந்து பெரிய விருட்சமாக மாறிருச்சு மான்சி, என் காதலை நான் எப்படி நிரூபிச்சா நீ என்னை ஏத்துக்குவ மான்சி?" என்று சத்யன் கேட்ட அடுத்த நிமிடம்

அவனை பார்த்து வாயை பிளந்தபடி பார்த்து " என்னது காதலா?" என்று மான்சி திகைப்போடு கேட்டாள்

அவளுடைய இந்த தோற்றத்தை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் குறைந்து " பின்னே இப்படி கட்டிப்பிடிச்சுக்கிட்டு நிக்கிறமே இது பேரு காதல் இல்லாம வேறென்ன மான்சி" என்று சத்யன் குறும்பாக கேட்க

அப்போதுதான் தனது நிலையை உணர்ந்தவள் போல மான்சி அவசரமாக விலக முயல.... " ஸ் இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்துச்சு இப்ப மட்டும் என்னவாம்" என்று அவள் காதில் கிசுகிசுப்பாக கூறிய சத்யன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்

மாலையில் கொடுக்காமல் விட்ட பாக்கியை இப்போது கொடுத்துவிடும் எண்ணத்தில் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் எதிர்க்கும் முன் பட்டென்று அவளின் ஈர இதழ்களை கவ்விக்கொண்டு தன் வாய்க்குள் இழுத்து சப்ப, மான்சியின் உடல் அவன் கைகளில் வில்லாக வளைந்தது,,

முதலில் தனது இதழ்களை விலக்க மறுத்தவள் பிறகு அவனின் முத்தத்தில் மயங்கி கொஞ்சம் கொஞ்சமாக தனது இதழ்களை விலக்கி அவன் நாக்குக்கு வழிவிட்டாள், கொண்டாட்டமாய் நுழைந்த சத்யனின் நாக்கு அவளின் வாய் முழுவதும் தடவித் தடவி ருசித்தது

அவர்களின் உதடுகள் மட்டும் இணைந்து முத்தமிட்டாலும், அதன் பரவசத்தில் உடல் முழுவதும் சிலிர்த்தது, மான்சி அவனுக்கு தோதாக அவன் உயரத்துக்கு எக்கி நின்று தலையை பக்கவாட்டில் சாய்த்து நிற்க்க,

சத்யன் ஒருகையால் அவளின் மெல்லிடையையும்., மறுகையால் அவளின் பின்னந்தலையையும் தாங்கி தனது முரட்டுத்தனமான முத்தத்தை அவளின் மெல்லிய இதழ்களுக்கு வழங்கிக்கொண்டு இருந்தான்

விலகவேண்டும் என்று அவளுக்கும் தோன்றவில்லை, விலக்க வேண்டாம் என்று அவனுக்கும் தோன்றவில்லை, இருவரும் தங்கள் காதலின் உறுதியை முத்தத்தால் புரிந்து கொள்ள முயன்றனர்



சத்யன் மான்சியை அழுத்தமாக தாங்கி பிடித்திருந்தாலும், மான்சியின் உடல் அவன் கைகளில் வில்லாக வளைந்தது,, சத்யன் அவளின் முகத்தை கைகளில் ஏந்தி முத்தத்தின் அழுத்தத்தில் குனிந்துகொண்டே போக, அவள் வளைந்து கொண்டே போனாள்

மான்சிக்கு கழுத்து வலித்தது போல,, லேசாக திமிறியபடி அவன் நெஞ்சில் கைவைத்து மான்சி தள்ள,, புரிந்துகொண்ட சத்யன் தன் உதடுகளை விலக்கிக்கொண்டு .. தன்கையில் வளைந்து கிடந்த அவளை நிமிர்த்தி இடுப்பைப் பற்றி உயரே தூக்கினான்,

தனது தலைக்கு மேலே மான்சியை தூக்கியவன் அவளின் புடவை மறைக்காத வெற்று வயிற்றில் தன் முகத்தை வைத்து அழுத்தி தேய்த்து “ மான்சி மை லவ்,,.. என்னை புரிஞ்சுக்கோ மான்சி ” என்று கிசுகிசுப்பாக கொஞ்சினான்

அவனது தலைக்கு மேலே இருந்து கொண்டு தனது இருகைகளையும் அவனது இரு தோள்களில் ஊன்றிய மான்சி “ அய்யோ கீழே விடுங்க,, எவ்வளவு உயரத்துல தூக்குறது,, எனக்கு தலை சுத்தது ப்ளீஸ் விடுங்க” என்று சத்யனிடம் கெஞ்சினாள்

அவளின் வயிற்றில் தனது மூக்காலும் உதட்டாலும் நாக்காலும் கோலம் வரைந்த சத்யன் “ம்ஹூம் விடமாட்டேன்,, நீ மாமா விடுங்க மாமான்னு சொல்லு விடுறேன்” என்று சத்யன் சொல்லிகொண்டே அவளின் தொப்புளில் தனது நாக்கை நுழைக்க,,

மான்சி சிலிர்த்துப் போய் கால்களை உதறி “ ப்ளீஸ் மாமா என்னால முடியலை விடுங்க மாமா அய்யோவ் ம்ஹூம்” என்று பிதற்றி கூச்சத்தில் நெளிந்து இறங்க முயன்றாள்

ரொம்ப மெதுவாக அவளை தன்மீது சரித்தபடி இறக்கிய சத்யன், அவளை இறுக்கி அணைத்து ,கண்களில் அளவுகடந்த காதலோடு “ இது இதுபோதும் மான்சி, இந்த ஒரு மாசமா இந்த வார்த்தையை நீ சொல்லமாட்டியான்னு நான் ரொம்ப தவிச்சுப் போனேன் மான்சி” என்றவன் தனது நெஞ்சில் இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி மறுபடியும் இதழ்களில் முத்தமிட குனிந்தான்

இருவரின் அதரங்களுக்கும் நடுவே தனது கையை குறுக்கே விட்ட மான்சி “ போதும் மாமா ரொம்ப நேரமாச்சு நான் என் ரூம்ல போய் படுக்குறேன்,, பேசவேண்டியதை நாளைக்கு பேசலாம்,, நாம இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கு மாமா, இதுக்கு மேல நான் உங்க ரூமுக்குள்ள இருந்தா அது சரியில்லை,, ப்ளீஸ் நான் போறேன் மாமா” என்று மான்சி கொஞ்சலாகவும் கெஞ்சலாகவும் சத்யனிடம் வேண்டினாள்

ஆனால் அவள் வாய்தான் போகிறேன் என்றதே தவிர உடல் சத்யனோடு இன்னும் அழுத்தமாக ஒட்டிக்கொண்டது,, அவளின் பேச்சும் செயலும் சத்யனுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாக உணர்த்தியது,.... அது மான்சிக்கு சத்யன் புதியவனல்ல,, அவள் அவனுடைய நினைவுகளை வெகுநாட்களாக சுமந்துகொண்டு இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது,, ஆனால் எப்படி இது நடந்தது என்று மட்டும் புரியவில்லை

சத்யன் அவளை தழுவிய கரங்களை விலக்காமல்,, “ மான்சி எனக்கும் தெரியும்,, கல்யாணத்துக்கு முன்னாடியே தேவிகூட நான் செய்த தவறால் அவள் என்ன ஆனாள்,, நான் என்ன ஆனேன் எல்லாம் தெரியும்,, மறுபடியும் அந்த தப்பை பண்ணமாட்டேன்,, நீ பயப்படாதே,, சும்மா கொஞ்சநேரம் என்கூட இப்படியே இரு அதுபோதும்,, ஏன்னா இந்த ஒரு மாசமா உன் மனசுல என்ன இருக்குன்னு புரியாம நான் தவிச்ச தவிப்பு இருக்கே,, ரொம்ப கஷ்டம் மான்சி ” என்ற சத்யன் அவளை அணைத்தபடியே கட்டிலில் அமர்ந்து,, மான்சியை பக்கத்தில் உட்கார வைத்து அவள் சுதாரிக்குமுன் அவள் மடியில் தனது தலைசாய்த்தான்

மான்சி அவன் தலையை விலக்கவில்லை,, தன் வயிற்றோடு அழுத்திக்கொண்டு,, “ இப்ப மட்டும் என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு புரிஞ்சுபோச்சா?,, நான் எதுவுமே சொல்லலையே அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியும்” என்ற மான்சி குனிந்து அவன் காதின் நுனியை தனது உதட்டால் உரசியபடி கேட்க

அவள் வயிற்றின் உட்புறமாக திரும்பி படுத்து தனது கைகளால் அவள் இடுப்பை வளைத்த சத்யன் “ சரி நீ லவ்வை சொல்லலை ஒத்துக்கிறேன்,, ஆனா இப்படி வயசுப்பையனோட தனி ரூம்ல உன் மடியில படுக்க வச்சு தலையை கோதி விடுறியே இதுக்கு என்ன அர்த்தம்?” என்று சத்யன் கேட்டான்

தன் விரல்களில் இருந்த அவன் முடியை கொத்தாக பிடித்து இழுத்த மான்சி “ ம்ம் இதுக்கு அர்த்தம்,, எனக்கு பிடிச்ச என் மாமாவை என்னோட மடியில படுக்க வச்சிருக்கேன்னு அர்த்தம் ,, இதோ பாருங்க மாமா நான் என் மனசு உங்களுக்கு தெரியக்கூடாதுன்னு என்னை எவ்வளவு அடக்கி வச்சிருந்தேன், ஆனா நீங்க அதை வெளியே கொண்டு வந்துட்டீங்க சரி ,,

" ஆனா அதுக்காக நாம ரெண்டுபேரும் உடனே கல்யாணம் பண்ணிகிட்டு சேர்ந்து வாழ்ந்திட முடியாது,, ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ண வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு,, அதெல்லாம் எப்போ எங்க பேசப்போறோம்னு முதல்ல முடிவு பண்ணுங்க,, இந்த மாதிரி முத்தம் குடுக்கறது,, காதலாக பேசறது எல்லாம் நம்மோட உணர்ச்சிகளுக்கு வேண்டுமானால் வடிகாலாக இருக்கலாம்,, ஆனா கண்முன்னே இருக்கும் நம்மோட பிரச்சனை அப்படியேதான் இருக்கு,, அதை எப்படி தீர்கறதுன்னு யோசிக்கனும்” என்று தீர்க்கமாக மான்சி பேசிக்கொண்டே போக.... சத்யனிடம் எந்த பதிலும் இல்லை

“ என்ன மாமா நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்,, நீங்க எதுவுமே பேசலை” என்று மான்சி மறுபடியும் சத்யன் தலை முடியை பற்றி உலுக்கி கேட்டாள்

ஒரு பலத்த பெருமூச்சுடன் அவள் மடியில் இருந்து எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்த சத்யன்,, அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “ இல்ல மான்சி நீ இவ்வளவு மெச்சூர்டா பேசுவேன்னு எதிர்பார்க்கலை,, நீ சொல்றது ரொம்ப கரெக்ட்,, நாம ரெண்டு பேரும் இன்னிக்கே ரொம்ப நெருங்கிட்டாலும்,, இந்த முத்தத்தால் நம்மோட வாழ்க்கையை நிர்ணயம் செய்யமுடியாது ,, நம்ம பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கு,, என்னைப்பற்றி நீ இன்னும் நிறைய தெரிஞ்சுக்கனும்,, அதையெல்லாம் நான் சொன்ன பிறகு நீ என்ன நினைக்கிறே என்று தெரிஞ்ச பிறகுதான் நம்ம மேரேஜ் சரியா” என்று சத்யன் சொல்ல,,

மேரேஜ் என்று சத்யன் சொன்னதும்,, மான்சியின் முகம் குங்குமமாய் சிவந்தது அந்த டியூப்லைட் வெளிச்சத்தில் வெகு அழகாக இருந்தது,, சத்யன் எட்டி அவள் முகத்தை தனது கரங்களில் ஏந்தி “ யப்பா ரொம்ப அழகுடி நீ,, அப்படியே கடிச்சு வச்சிரலாமான்னு இருக்கு ” என்று சொன்னதும் மேலும் சிவந்த முகத்தோடு “ச்சீ போங்க” என்று பட்டென அவன் மடியில் கவிழ்ந்தாள்

தன் மடியில் விழுந்த தேவதையின் கூந்தலை கோதிய சத்யனின் கண்கள் திடீரென கலங்கியது ‘ எவ்வளவு மென்மையானவள் இவள்,, எந்த துன்பமும் இவளை தீண்டாமல் பார்த்துக்கனும், முதலில் எனக்குள் இருக்கும் பிரச்சனையை இவளிடம் சொல்லிய பிறகுதான் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டும்,, எனது இழப்புகள் அணைத்தும் இவள் வந்தால் எனக்கு கிடைக்கவேண்டும்,, அதுக்கு மொதல்ல என்னோட பிரச்சனை சரியாகனும்’’ என்று யோசித்த சத்யன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை கவனிக்கவில்லை,, அது அவன் கன்னங்களில் வழிந்து மடியில் கவிழ்ந்து படுத்திருந்த மான்சியின் காதில் துளியாக விழந்தது

பட்டென்று எழுந்து அமர்ந்த மான்சி சத்யனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்ததும் பதறிப்போய் அவன் முகத்தை தன்னருகே இழுத்தாள் “ என்னாச்சு மாமா, ஏன் கண்ணீர் விடுறீங்க,, நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா,, அய்யோ மாமா நீங்க அழவே கூடாது” என்று அவன் கண்களை துடைத்து தன் மார்பில் அவன் முகத்தை வைத்துக்கொண்டாள்

“ இல்ல மான்சி நீ எதுவும் தவறா சொல்லலை,, எதைஎதையோ நெனைச்சேன் அதான் கண்ணீர் வந்துருச்சு,, நீ எனக்கு கிடைச்சா பத்து வருஷமா இழந்ததெல்லாம் எனக்கு திரும்ப கிடைச்சுடும்னு தோனுச்சு அதான் கொஞ்சம் பீல் பண்ணிட்டேன்” என்றவன் அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்

“ மான்சி நீ போய் படு நாளைக்கு காலையில உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிப் போறேன்,, அங்கே நிறைய தனிமை கிடைக்கும் நாம பேசறதுக்கு ஏத்த இடம் அங்க போய் பேசுவோம்,, இப்போ போய் படு நேரமாச்சு ” என்ற சத்யன் கட்டிலைவிட்டு எழுந்து அவளையும் கைகொடுத்து எழுப்பினான்,, அவளை தோளோடு அணைத்து கதவருகே போய் விட்டான்

கதவை நெருங்கி திறந்த மான்சி திரும்பி சத்யனை பார்த்தாள்,, அவள் பார்வையில் சத்யன் இதுவரையில் பார்த்தறியாத ஏக்கமும் யாசிப்பும் இருந்தது,, சத்யனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல், புருவத்தை உயர்த்தி “ என்னம்மா” என்று கேட்டான்

கதவை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவள் ஒன்னுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள்,, இரண்டே எட்டில் அவளை நெருங்கிய சத்யன் அவள் பற்றி “என்ன விஷயம் மான்சி என்னாச்சு சொல்லு” என்று கேட்க

எதுவுமே சொல்லாமல் அவனையே குறுகுறுவென்று பார்த்த மான்சி “ மாமா நீங்க எனக்கு வேனும் மாமா என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே,, நொண்டின்னு வேனாம்னு சொல்ல மாட்டீங்களே ” என்று கண்களில் வழிந்த கண்ணீரோடு ஆவேசமாக அவனை இறுக்கி அணைத்தவள் அதே ஆவேசத்தோடு அவன் முகமெல்லாம் முத்தமிட்டாள்

அவளுடைய ஆவேசத்தில் சத்யன் ஒரு நிமிடம் அசந்து போனான்,, பிறகு அவளை சமாதானப்படுத்தும் விதமாக அவள் முதுகை வருடி அவளின் ஆவேசத்தை குறைத்தான்,, எச்சில் தெரிக்க அவன் முகத்தில் முத்தமிட்டவள் அவன் உதட்டை நெருங்கி ஒரு வினாடி தயங்கி பிறகு அவனின் கீழுதட்டை ஆர்வமாக கவ்விக்கொண்டாள்

சத்யனுக்கு இந்த மான்சி ரொம்ப புதுமையாக இருந்தாள்,, இத்தனை நாள் பார்த்துவந்த மான்சிக்கும் இவளுக்கும் துளிகூட சம்மந்தமேயில்லை,, அவளிடம் கண்டிப்பும் கறாரும் இருந்தது,, இவளிடம் முழுக்க முழுக்க காதல் மட்டுமே இருந்தது, அந்த காதலை அவள் வெளிப்படுத்திய விதம்தான் சத்யனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது

சத்யன் உணர்ச்சி வேகத்தில் பற்றியிருந்த அவள் இடுப்பை அழுத்தி பிசைய ஆரம்பித்தான்,, மெதுமெதுவாக அவனுக்குள் உறங்கிக்கிடந்த உணர்ச்சிகள் தலைதூக்க,, அதன் பாதிப்பு அவனுடைய இடுப்புக்கு கீழே இருந்த அதிகப்படியான விரைப்பில் தெரிந்தது

இதற்க்குமேல் இந்தநிலை நீடித்தால் ஆபத்து என்று புரிந்த சத்யன்,, அவசரமாக உதட்டை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு,, சுவற்றின் பக்கமாக திரும்பி நின்று “ மான்சி வெளியே போ, ப்ளீஸ் என்னால முடியலை சீக்கிரமா போய்டு மான்சி” என்று பலமற்ற குரலில் கிசுகிசுப்பாக கூறினான்

மான்சிக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும் க்ளுக்கென்று அவள் வாய் பொத்தி சிரிக்கும் சத்தமும் அதை தொடர்ந்து அவள் கதவை திறந்து வெளியேறுவதும் கேட்டது

அவள் போனதும் கட்டிலில் பொத்தென்று கவிழ்ந்து விழுந்த சத்யன்,, கைகளால் மெத்தையை குத்தினான்,, “ ச்சே என்னைப்பற்றி என்ன நெனைச்சிருப்பா” என்று புலம்பியவன் “ அதெல்லாம் அவ தப்பா நெனைக்க மாட்டா,, ஏன்னா அவளுக்கும் என் நிலைமைதான்” என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான்

மான்சியின் கண்களில் தெரிந்த காதலும் ஏக்கமும் சத்யனுக்கு ஞாபகம் வந்தது,, அவளது வார்த்தைகள் காதில் ஒலித்தது,, யப்பா எத்தனை மாமா,, ஒருமுறை மாமான்னு கூப்பிட மாட்டாளான்னு ஏங்கினேன், ஆனா அவ எத்தனை மாமான்னு கூப்பிட்ட,, உண்மையிலேயே இவள் தேவதைதான்,, என்று நினைத்த சத்யனுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது



இதுவரை தேவியை நினைத்தால் மட்டுமே ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்பு இப்போது மான்சியிடமும் ஏற்றப்பட்டுள்ளது,, தனது விரைத்த உறுப்பை கையால் தொட்டுப்பார்த்தான் இன்னும் விரைப்பு குறையவில்லை, இது எப்படி முடியும் என்று அவனையே கேள்விகேட்டு கொண்டான்

ஏனென்றால் ஒருமுறை தனது நண்பர்களுடன் அவன் ஒக்கேனக்கல் போயிருந்த போது, அங்கேயே ஹோட்டலில் ரூமெடுத்து இரவு தங்கினார்கள்,, அப்போது நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பாலியல் தொழில் செய்யும் பெண்களை ஆளுக்கு ஒருத்தியாக அழைத்துச்செல்ல, சத்யனுக்கும் ஒருத்தி அனுப்பப்பட்டாள்... அவளிடம் சத்யன் பட்ட அவமானம் இன்னும் கண்முன்னே நிழல் படமாக ஓடியது

நாளை முதல் வேலையாக மான்சியிடம் இதையெல்லாம் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துபடி படுத்துக்கொண்டான் சத்யன் 



" அன்பே உன் உதடுகள் உச்சரித்த...

" அந்த ஒற்றை வார்த்தையில் தான்..

" என் உலகமே விடிந்தது!

" இனிமேல் எனது விடியல்..

" உனது மடியில் தான்!

No comments:

Post a Comment