Wednesday, July 22, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 12

காலை 5 மணிக்கு எழுந்து கார்த்திக் வாக்கிங் சென்று விட்டு, யோகா செய்து முடிக்க மணி 6. அதற்குள் ஜனனி தூக்கத்தில் இருந்து எழ கார்த்திக்கு நேற்று இரவு நடந்தது நினைவுக்கு வந்தது. இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று முடிவெடுத்தான். ஜனனியும் நேற்று இரவு நடந்ததை வெளி காட்டாமல் நடிக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் பூரணியும் சதானந்தனும் எழுந்திரிக்க, அனைவரும் குளித்து ரெடியாகி இரண்டு வீதி தள்ளி இருந்த மே பிளவர் அபார்ட்மென்ட் சென்று வாட்ச்மானிடம் இருந்த சாவியை வாங்கி இரண்டாவது மாடியில் இருந்த அந்த 3BHK பிளாட்டை பார்த்தனர். அது வரைக்கும் என்ன காரணத்துக்காக இந்த வீட்டை பார்க்கிறோம் என்று அறியாத பூரணி, சதானந்தனிடம் இந்த "பிளாட் வாங்க போறோம், நீங்க ரெண்டு பேரும் இனிமே இங்க தான் இருக்க போறீங்க. அந்த வீட்டை வித்துடலாம்" என்று சொல்ல, இருவருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை

"இதற்கு யார் காரணம்" என்று அவர்கள் கேட்க ஜனனியை கை காண்பித்து விட்டு கார்த்திக் விலகி நின்றான். அம்மா அப்பா அவளை நன்றியோடு பார்க்க ஜனனிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் இது கார்த்திக் வேலை என்று புரிந்து கொண்டாள். 

அதற்குள் மோகன் காரில் அவர்கள் நால்வரையும் பிக்அப் செய்து கோவை ஏர் போர்ட்டில் ட்ராப் செய்ய, மதியம் ஒரு மணி அளவில் மயிலாப்பூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 

வீட்டுக்கு போகலாம் என்று அழைத்து வந்த கார்த்திக்கிடம் பூரணி "இந்த பங்களாவை போயா வீடுன்னு சொன்னிங்கன்னு" ஆச்சர்யமாக கேட்க, கார்த்திக் சிரித்து கொண்டே "இது எல்லாம் உங்க பொண்ணோட வீடா நெனச்சுகங்க" என்று சொன்னான்.

ஏற்கனவே மோகன் பேசி வைத்திருந்ததால் திருமண வரவேற்பு பார்க் ஹோட்டலில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. மாலை ஆறு மணிக்கு தொடங்கிய அந்த விழாவில் அனைத்து பிரபல நடிகர்கள், நடிகைகள் மற்றும் டைரக்டர்களும் வந்தனர். யவன ராணி தயாரிப்பு குழுவை தேர்ந்த பாண்டியன் வர, அவரை தொடர்ந்து உச்ச நடிகரும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்க விழா கோலாகலமாக இருந்தது.எட்டு மணி அளவில் வந்த நேகா வேகமாக சென்று ஜனனியிடம் காது கொடுத்து பேசி கொண்டுரிந்தாள். 8 .30 மணி அளவில் நடிகர் அக்ரம் வர கார்த்திக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்த அக்ரம் அவனை அடுத்த நாள் அவர் வீட்டில் அவர்கள் வந்து பார்க்க சொன்னார். ஏற்கனவே கதாநாயகன் கதாபத்திரத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று கார்த்திக் உறுதியாக நின்றதால், நாளை அவரை சந்திப்பது படத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவருக்கு நன்றி சொல்ல, அவரும் வாழ்த்து தெரிவித்து விட்டு தனது BMW காரில் சென்றார்.



மோகனை அழைத்து ஜனனியிடம் விஷயத்தை சொல்லி நாளைக்கு அக்ரம் வீட்டுக்கு இருவரும் விருந்துக்கு போக வேண்டும் என்று தெரிவிக்க, சரி என்று தலை அசைத்தான் மோகன். 

நேகா ஜனனியிடம் தனியாக பேசி கொண்டுரிந்தாள். "என்ன கல்யாணம் திடீர்னு" என்று கேட்க,

"இல்லை அவர் தான் அவசரபட்டார்" என்று மழுப்ப,

"அவர் அவசரபட்டார, இல்லை நீ அவசரபடுத்தினியா?" என்று அவளை நக்கலாக கேட்க, ஜனனிக்கு பயம் வந்தது, 

"என்ன" என்பது போல் பார்த்தாள்

"இங்க பாரு ஜனனி நான் தான் கார்த்திக்கை ஏத்தி விட்டேன். அவனுக்கு உன் மேல காதல் இருக்கும்னு எனக்கு சந்தேகம் வந்த உடனே நீ உன் சீனியர் ராஜ்குமார காதலிக்கிறதா பழி போட்டேன். பார்ட்டி முடிஞ்ச உடனே ஏதோ நடந்திருக்குன்னு என் உள் மனசு சொல்லுது". 

ஜனனிக்கு அவள் மேல் கடுமையாக கோபம் வந்தது. "இதல்லாம் உன் வேலை தானா? என்னோட பெண்மை தொலைச்சு நிக்கிறேன்.இப்ப உனக்கு சந்தோசமா?உனக்கு ஏன் இந்த பழி வாங்கிற வேலை" என்று கேட்டு சட்டென்று நாக்கை கடித்தாள். "ஆஹா நேகாவுக்கு உண்மை தெரிந்து விட்டதே" என்று தலை குனிந்தாள்.

"ஹேய் ஒன்னும் வருத்தபடாதே, நான் உன்னை பழி வாங்கினேன்?, நீ சொல்றது பாதி உண்மை தான். முதல்ல என்னை பத்தி தெரிஞ்சுக்க அப்பதான் நான் எதுக்கு அப்பிடி பண்ணுனேன்கிறது உனக்கு புரியும்" என்று சொல்ல ஆரம்பித்தாள்.

"நான் பத்து வருசத்துக்கு முன்னால ஆனப்போ எனக்கு சினிமா ஒரு சாக்கடைன்னு தெரியாது. என்னோட முதல் படம் தமிழ் படம் ரிலீஸ் ஆக ரொம்ப நாள் ஆச்சு. அந்த டைரக்டர் தொல்லை தாங்க முடியலை. படம் முடியிற வரைக்கும் போதும் போதும்கிற அளவு அனுபவிச்சாரு. அவருக்கு என்னை சின்ன வீடா வச்சுக்க ஆசைப்பட்டார். எனக்கோ சினிமால ஒரு நல்ல நடிகையாக அடையாளம் காணப்பட வேண்டும் என்ற ஆசை. அதுனால அதுக்கு நான் ஒதுக்கலை. அவர் எனக்கு நிறைய தொந்தரவு கொடுத்தார். "

"நல்ல வேலையா இன்னொரு டைரக்டர் எடுத்த ஹாப்பி படம் நன்றாக ஓட எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. என் கூட நடித்த ஸ்ரீராம் எனக்கு பொருத்தமான ஜோடி என்று பத்திரிகைகள் பாராட்ட, நாங்கள் இருவரும் சேர்ந்து நான்கு படங்கள் சேர்ந்து நடித்தோம்.எல்லா படமும் சிறப்பாக ஓடியது. எனக்கும் அவரை கல்யாணம் செய்து கொள்ளனும்னு ஆசை வந்தது. யாருக்கும் தெரியாம நாங்கரெண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தோம். 

ஆனா என்னோட அம்மா அப்பாவுக்கு பிடிக்கலை. அவங்களுக்கு நிறைய பணம் சம்பாதித்து கொடுத்தால் நான் கல்யாணம் பண்ணிகொள்ளலாம் என்று சொல்ல, அவர்கள் ஆசைப்படி பல தயாரிப் பாளர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு நான் விருந்துபடைக்கப்பட்டேன். இந்த விஷயம் ஒரு நாள் ஸ்ரீ ராமுக்கு தெரிய வர, சீ என்று என்னை விட்டு விலகி போய் விட்டார். அதற்கு அப்புறம்இந்த தொழிலிலே முழுக்க இறங்கி விட்டேன். 

எனக்கு இப்போது கோவை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் உட்பட பல இடங்களில் வீடு, இடங்கள், கடைகள் உண்டு.

என் அம்மா அப்பா ரொம்ப செல்வ செழிப்பாக இருக்கார்கள். எனக்கு மாதத்தில் 10 நாள் சிங்கப்பூரில், 10 நாள் கோவையில், மீதிநாட்கள் சென்னை மற்றும் ஹைதராபாதில் இருந்து சம்பாதிக்கிறேன். 

எனக்கு இது எல்லாம் அலுத்து போச்சு. முதன் முதல்ல கார்த்திக்கை பார்த்த போது சினிமா தனம் இல்லாத அந்த அப்பாவித்தனம்பிடித்து போனது. அதுனால நானா அவனோட படுத்தேன். இதுவரைக்கும் பல தடவை அவனோட சந்தோசமா இருந்துருக்கேன். ஆனாஒரு தடவ கூட நான் காசு வாங்கினதில்லை. 

எனக்கு அவனை கல்யாணம் செய்து கொள்ளனும்னு ரொம்ப நாளா ஆசை, அந்த சமயத்ல நீ அவன் வாழ்க்கைல வந்த. அவன்என்னை பார்க்கிற போதெல்லாம் உன்னை பற்றி பெருமையா பேசிய விதத்தில் இருந்து அவனுக்கு உன் மேல ஆசைன்னு எனக்குதெரிஞ்சு போச்சு. 
அவனை பார்க்கிற மாதிரி அவன் வீட்டுக்கு வந்த நான் உன் அழக பார்த்து அசந்து போனேன், நிச்சயம் அவன் உன்னைதான்கல்யாணம் பண்ணிக்குவான்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. அப்போதான் அங்கே உன் கூட வேலை பார்த்த உன்னோட சீனியர்ராஜ்குமாரை பார்த்தேன். எனக்கு மனசில ஒரு திட்டம் தோணுச்சு.

அதனால கார்த்திக்கிட்ட பொறாமைய உருவாக்கனும்னு நீ ராஜ்குமார காதலிக்கிறதா பொய் சொன்னேன். ரெண்டு பேரும் சண்டைபோடுவிங்கன்னு எதிர்பார்த்தேன். நீ சொன்னதில இருந்து தான் அவன் உன்னை கெடுத்துட்டான்னு தெரிஞ்சுது. 

அவனுக்கு உன் மேல அன்பு ஜாஸ்தி. அதுல சந்தேகம் இல்லை. பார்ட்டி நடந்ததுக்கு அப்புறம் அவன் என்னை தேடி வர்றதும் இல்லை. நீங்கரெண்டு பேரும் நல்ல ஜோடிகள். அதில சந்தேகம் இல்ல. உன் மேல பொறமை இருந்தது உண்மை தான், ஆனா இப்போ நீங்க ரெண்டுபேரும் தம்பதி ஆய்டிங்க. உங்கள நான் பிரிக்க மாட்டேன்" கண் கலங்க அவளை வாழ்த்தி விட்டு "எனக்கு ஒரு ராசி இருக்குதெரியுமா, நான் எங்க போய் கடை திறந்து வைத்தாலும் அந்த இடம் செழிக்குமாம். அதே மாதிரி தான் கல்யாணமும். உங்க திருமணவாழ்க்கை நல்லபடியா நடக்கனும்னு நான் வாழ்த்துகிறேன்" என்று இருவருக்கும் வாழ்த்து சொல்லி விடை பெற்றாள்.


அடுத்த நாள் நடிகர் அக்ரம் வீட்டுக்கு கார்த்திக் மற்றும் ஜனனி விருந்துக்காக செல்ல, அக்ரம், அவர் மனைவி இருவரும் புதுமண தம்பதிகள் இருவருக்கும் விருந்து கொடுத்தனர். விருந்து முடிந்த போது கார்த்திக்கு தங்க பேனா கொடுக்க அவனுக்கு ஆச்சர்யம்.

"சார் நான் இப்போ அதிகமாக எழுதுவதில்லை" என்று சொல்ல, "எனக்கு தெரியும். திரும்ப நீங்க எழுதனும், அதுவும் இந்த பேனால எழுதனும்னு எனக்கு விருப்பம்" என்று சிரித்து கொண்டே சொல்ல, புன்சிரிப்புடன் பெற்று கொண்டான். அக்ரம் மனைவி உயர்ந்தரக பட்டுபுடவை அன்பளிப்பாக கொடுக்க ஜனனி மகிழ்ந்து போனாள். 

பிறகு பேசிய அக்ரம் யவனராணி படம் எப்படி போகிறது என்று விசாரிக்க, கால்வாசிதான் முடிந்து இருப்பதாக சொல்ல, அவருடைய கால்சீட் வேண்டும் என்றும் நினைவுபடுத்தினான். "எவ்வளவு நாள் வேண்டும்" என்று கேட்க "மூன்றுமாதம்" என்று சொல்ல

"என்னோட குருநாதர் படைப்புக்கு ஒரு வருஷ கால்சீட் கொடுத்துருக்கேன். அவர்கிட்ட பேசி ஒரு மாசம் வேணும்னா நான் அட்ஜஸ்ட் பண்ணி தர்றேன்" என்று சொல்ல, கார்த்திக் முகத்தில் ஏமாற்ற களை தெரிந்தது. 

அக்ரமுக்கு புரிந்தது. "என்ன பிரச்னை" என்று கேட்க "சார், நீங்கதான் ஹீரோ அப்பிடின்னு சொல்லி விளம்பரம் பண்ணியாச்சு ஒரு மாத கால் சீட் பத்தாது, மூன்று மாசம் வேண்டும் சார்" என்று சொல்ல, "சரி இப்போ யார் யார் கால் சீட் இல்லை" என்று கேட்க, "சார் முக்கியமான பத்திரங்கள் இளஞ்செழியன், கரிகாலன், யவனராணி, பூவழகி, அலீமா, அல்லி, இருங்கோவேள், துறவி பிரமானந்தம். இதுல இளஞ்செழியன், கரிகாலன் மற்றும் பூவழகி தவிர எல்லா கேரக்டர்களுக்கும் ஆள் கிடைச்சுட்டாங்க. நீங்க நடிக்கிறது ஹீரோ இளஞ்செழியன் கேரக்டர்ல, நேகா நடிக்கிறது அல்லி கேரக்டர்ல". 

"சரி கார்த்திக், கரிகாலன் கேரக்டர் எவ்வளவு நாள் ஷூட்டிங் எடுக்கும்". 

"சார் ஒரு 20 -25 நாள் எடுக்கும்" என்று சொல்ல, "நான் கரிகாலன் கேரக்டர்ல நடிக்கிறேன். இளஞ்செழியன் (ஹீரோ), பூவழகி (ஹீரோயின்)கேரக்டர்ல நடிக்க எனக்கு தெரிஞ்ச ரெண்டு பேரை சிபாரிசு பண்ணுறேன்" என்று சொல்ல கார்த்திக் குழம்பினான்

"யார் சார்?" என்று கேட்க, "குழப்பமா இருக்கா இளஞ்செழியன்?" என்று கார்த்திக்கை பார்த்து கேட்க அதை கேட்ட அதிர்ச்சியில் ஜனனி"ஆ" என்று கத்த, "என்ன ஆச்சர்யமா இருக்க பூவழகி ?" என்று கேட்க இருவரும் அதிர்ச்சியில் சிலையாக நின்றார்கள். 

உரக்க சிரித்த அக்ரம், "என்ன நம்ப முடியலையா?" என்று கேட்க, சிலையாக நின்ற இருவரில் கார்த்திக் தான் முதலில் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட்டான்.


"சார் எனக்கு நடிக்க தெரியாது, அதோட அந்த கதா பாத்திரத்துக்கு நீங்க தான் பொருத்தமா இருப்பிங்க" என்று சொல்ல, 

"நோ கார்த்திக் நீங்க கண்ணாடில உங்க உருவத்தை பார்த்ததில்லை போலிருக்கு. நான் பத்து வருஷத்துக்கு முன்னால இருந்த மாதிரிநீங்க இருக்கீங்க. அதோட நீங்க சிறந்த டைரக்டர்", 

"இதே மாதிரி தான், யாரும் நடிக்க மாட்டேன்னு சொன்னப்ப டைரக்டர் சேரன் நடிகர் சேரன் ஆனார். இது உங்களுக்கு நல்ல வாய்ப்பு.மத்தபடி உங்க மனைவி தான் உங்களுக்கு ஜோடி, அவங்க அழகை பற்றி நான் சொல்ல வேண்டாம் உங்களுக்கே தெரியும்" என்றுசொல்ல, ஜனனி வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்.

"இல்லை சார் நான் வந்து" என்று அவள் இழுக்க 

"பாரும்மா உன் அண்ணன் மாதிரி சொல்லுறேன். நீ இந்த ஒரு படம் மட்டும் உன் கணவனோட நடி. வேறு யாரு கூடயும் நடிக்கஅவருக்கும் ஒரு மாதிரியா இருக்கும்" என்று சொல்லி விட ஜனனிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"Thangamstl","width":300,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write('
'); }());
small;">"சரி" என்று தலை ஆட்ட அவருக்கு மகிழ்ச்சி "குட் கேர்ள்" என்று சொல்லி சிரித்து விட்டு, "கார்த்திக் பாண்டியன் நம்பரை கொடுங்க"என்று சொல்லி பாண்டியனிடம் பேச "பாண்டியனும் கார்த்திக் மீது முழு நம்பிக்கை இருப்பதாக சொல்ல", அக்ரம் நன்றி சொல்லிபோனை வைத்தார். 


கார்த்திக்கு இன்னும் பயம் இருந்தது, அதை உணர்ந்த அக்ரம் "வேற எந்த பிரச்னை வந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான்பாத்துக்கிறேன்" என்று சொல்ல, கார்த்திக் முகத்தில் சந்தோஷம் வந்தது. ஜனனியை பார்க்க அவள் "ஓகே சொல்லுங்க" என்று தலைஅசைக்க, அவனும் ஓகே சொன்னான். 

வீட்டுக்கு வந்தது முதல் மோகனின் கிண்டல் தாங்க முடியவில்லை. "டேய் நான் சொன்னப்ப ஒரு படம் கூட நடிக்க மாட்டேன்னுசொன்னே, இப்போ உன் வீட்டுக்கார அம்மா கூட நடிக்கிறான்னு சொன்ன உடனே நீயும் சந்தோசமா ஓகே சொல்லிட்ட" என்றுகிண்டல் செய்து விட்டு, அவன் கையை பிடித்து குலுக்கி "எனக்கு இது தோணவே இல்லை. அக்ரமுக்கு தான் நன்றி சொல்லணும்"என்று சொன்னான் மோகன்.

ரெண்டு நாட்களில் அடுத்த schedule என்று முடிவு செய்யப்பட்டது. ஜனனி அவனிடம் "உங்க மேல எனக்கு தனிப்பட்ட முறைல கோபம்இருந்தாலும் மத்தவங்க முன்னிலைல நான் விட்டு கொடுக்க மாட்டேன்" என்று சொன்னாள். படமும் வேகமாக வளர்ந்து வந்தது.சொன்னது போல் அக்ரமும் அவர் நடிக்க வேண்டிய பகுதியை நடித்து கொடுக்க வாரபத்திரிகைகளில் படத்தை பற்றி நிறையதகவல்கள் வந்து எதிர்பார்ப்பை கிளப்பியது.

இதற்கு இடையில் கோவை மே பிளவர் அபார்ட்மென்ட்டுக்கு பூரணி, சதானந்தன் குடி புக, ரெஜிஸ்ட்ரேசன் நடந்த நாளில் மோகனுடன்கார்த்திக் ஜனனி சென்று வந்தனர்.


"சார் எனக்கு நடிக்க தெரியாது, அதோட அந்த கதா பாத்திரத்துக்கு நீங்க தான் பொருத்தமா இருப்பிங்க" என்று சொல்ல, 

"நோ கார்த்திக் நீங்க கண்ணாடில உங்க உருவத்தை பார்த்ததில்லை போலிருக்கு. நான் பத்து வருஷத்துக்கு முன்னால இருந்த மாதிரிநீங்க இருக்கீங்க. அதோட நீங்க சிறந்த டைரக்டர்", 

"இதே மாதிரி தான், யாரும் நடிக்க மாட்டேன்னு சொன்னப்ப டைரக்டர் சேரன் நடிகர் சேரன் ஆனார். இது உங்களுக்கு நல்ல வாய்ப்பு.மத்தபடி உங்க மனைவி தான் உங்களுக்கு ஜோடி, அவங்க அழகை பற்றி நான் சொல்ல வேண்டாம் உங்களுக்கே தெரியும்" என்றுசொல்ல, ஜனனி வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்.

"இல்லை சார் நான் வந்து" என்று அவள் இழுக்க 

"பாரும்மா உன் அண்ணன் மாதிரி சொல்லுறேன். நீ இந்த ஒரு படம் மட்டும் உன் கணவனோட நடி. வேறு யாரு கூடயும் நடிக்கஅவருக்கும் ஒரு மாதிரியா இருக்கும்" என்று சொல்லி விட ஜனனிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

"சரி" என்று தலை ஆட்ட அவருக்கு மகிழ்ச்சி "குட் கேர்ள்" என்று சொல்லி சிரித்து விட்டு, "கார்த்திக் பாண்டியன் நம்பரை கொடுங்க"என்று சொல்லி பாண்டியனிடம் பேச "பாண்டியனும் கார்த்திக் மீது முழு நம்பிக்கை இருப்பதாக சொல்ல", அக்ரம் நன்றி சொல்லிபோனை வைத்தார். 

கார்த்திக்கு இன்னும் பயம் இருந்தது, அதை உணர்ந்த அக்ரம் "வேற எந்த பிரச்னை வந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான்பாத்துக்கிறேன்" என்று சொல்ல, கார்த்திக் முகத்தில் சந்தோஷம் வந்தது. ஜனனியை பார்க்க அவள் "ஓகே சொல்லுங்க" என்று தலைஅசைக்க, அவனும் ஓகே சொன்னான். 

வீட்டுக்கு வந்தது முதல் மோகனின் கிண்டல் தாங்க முடியவில்லை. "டேய் நான் சொன்னப்ப ஒரு படம் கூட நடிக்க மாட்டேன்னுசொன்னே, இப்போ உன் வீட்டுக்கார அம்மா கூட நடிக்கிறான்னு சொன்ன உடனே நீயும் சந்தோசமா ஓகே சொல்லிட்ட" என்றுகிண்டல் செய்து விட்டு, அவன் கையை பிடித்து குலுக்கி "எனக்கு இது தோணவே இல்லை. அக்ரமுக்கு தான் நன்றி சொல்லணும்"என்று சொன்னான் மோகன்.

ரெண்டு நாட்களில் அடுத்த schedule என்று முடிவு செய்யப்பட்டது. ஜனனி அவனிடம் "உங்க மேல எனக்கு தனிப்பட்ட முறைல கோபம்இருந்தாலும் மத்தவங்க முன்னிலைல நான் விட்டு கொடுக்க மாட்டேன்" என்று சொன்னாள். படமும் வேகமாக வளர்ந்து வந்தது.சொன்னது போல் அக்ரமும் அவர் நடிக்க வேண்டிய பகுதியை நடித்து கொடுக்க வாரபத்திரிகைகளில் படத்தை பற்றி நிறையதகவல்கள் வந்து எதிர்பார்ப்பை கிளப்பியது.

இதற்கு இடையில் கோவை மே பிளவர் அபார்ட்மென்ட்டுக்கு பூரணி, சதானந்தன் குடி புக, ரெஜிஸ்ட்ரேசன் நடந்த நாளில் மோகனுடன்கார்த்திக் ஜனனி சென்று வந்தனர்.

"ஜானு நல்ல யோசிச்சு பாரு அந்த குழந்தை என்ன தப்பு பண்ணிச்சு? தப்பு செஞ்சது நான்தானே. எனக்கு நீதான் ஏற்கனவே தண்டனைகொடுதுருக்க, அந்த குழந்தையும் கொன்னு நாம பாவம் செய்ய வேண்டாம்" என்று கெஞ்சினான். 

"இல்லை என்னால முடியாது எனக்கு புடிக்காத குழந்தைய நான் எதுக்கு சுமக்கனும்?" என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் கலங்கிநின்றான்.

"ஜனனி நமக்கு கல்யாணம் நடந்து இந்த ரெண்டு மாசத்தில நான் உன் கிட்ட தவறா நடந்து இருக்கேனா? சொல்லு. நீ என்னசொன்னாலும் கேக்குறேண்டா தயவு செஞ்சு நான் இப்போ சொல்றத மட்டும் கேளு. குழந்தையா பெத்து என் கிட்ட கொடுத்துடு. நான்பாத்துக்கிறேன். எனக்கு அப்பா அம்மா கிடையாது. எனக்கு மனைவியா இருக்க உனக்கு விருப்பம் இல்லை. இப்போ இந்த குழந்தை கூடஇல்லேன்னா வேற யாரு எனக்கு இருக்கா?" என்று கதறி அழுதான். 

ஜனனிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் அவர்களின் தாம்பத்யத்தை நினைத்து பார்த்தாள்.அவன்சுண்டுவிரல் கூட அவள் மீது பட்டதில்லை. இருவரும் ஒரே படுக்கையில் படுத்த போதிலும், பல நாட்களை அவன் தூங்காமல்கழித்தது அவள் நினைவுக்கு வந்தது. சில நாட்களில் அவள் அருகாமை தந்த விரக தாபத்தை தாங்க முடியாமல் பால்கனி கதவைதிறந்து இரவு முழுக்க வெளியே நடந்து கொண்டிருந்தது நினைவுக்கு வர,

"சரி கார்த்திக் ஆனா ஒரே ஒரு நிபந்தனை". கார்த்திக்கு அவள் பதில் நிம்மதி தர கன்னங்களில் வழிந்த கண்ணீர் துளிகளை துடைத்துவிட்டு 

, "ஜானு நீ என்ன சொன்னாலும் ஓகேடா" என்று சொல்ல, 

"குழந்தை பிறந்த உடனே நான் உங்க கிட்ட கொடுத்துடுவேன். ஒரு வேளை தாய் பால் கொடுக்கணும்னு நீங்க விருப்ப பட்டா, ஒருமூணு மாசம் கொடுக்க எனக்கு சம்மதம், மத்தபடி என் கிட்ட வேற எந்த கரிசனமும் எதிர் பார்க்க வேண்டாம். குழந்தைய சாக்கு வச்சிட்டுஎன் கிட்ட திரும்ப விளையாட வேண்டாம்" என்று கண்டிப்பாக சொல்ல, 

"நீ சொல்ற எல்லா நிபந்தனைக்கும் நான் ஒத்துக்கிறேன்" என்று கை கூப்பி கண் மூடி நிற்க அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்மனதை சொல்லியது.

தூரத்தில் இருந்து "மன்னிக்க மாட்டாயா உன் மனம் இறங்கி" என்ற பாடல் ஜேசுதாஸ் குரலில் FM-ல் ஒலிக்க அதன் சோகம் மனதைபிழிந்தது.




No comments:

Post a Comment