Wednesday, July 8, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 6

கார் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே மான்சி அவன் பக்கமாக சரிந்து அவன் தோளில் சாய்ந்துகொண்டு “ம் எப்படி இருந்துச்சு என்னோட கிஸ், அப்படியே ஒதுங்கி ஒதுங்கி போறீங்க விட்டேனா பார்த்தீங்களா” என்று கர்வமாக பேசினாள்

சத்யன் ஒருகையால் அவளை விலக்கிவிட்டு, “தயவுசெய்து நேரா உட்காருங்க, நான் உங்ககூட நிறைய பேசனும், எப்ப பேசலாம்” என கடுமையான குரலில் கேட்க

அதுவரை சிரிப்பில் மலர்ந்திருந்த மான்சியின் முகம் பட்டென வாடியது, சத்யன் கோபமாக இருக்கிறான் என்றுணர்ந்தவள்



“ இன்னிக்கு மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் க்ளாஸ் முடிச்சுட்டு வந்துர்றேன், நீங்க அப்பாவை கூட்டிவந்து விட்டுட்டு காலேஜ் வந்துருங்க, நாம வண்டியூர் தெப்பக்குளம் நடுவுல இருக்கிற கோயில்ல போய் பேசலாம், நானும் அப்பாக்கிட்ட போன் பண்ணி சீக்கிரமா எனக்கு கார் அனுப்புங்கன்னு சொல்லிர்றேன்” என்று மான்சி சொன்னதும்

சரி என்ற ஒரு வார்த்தைக்கு மேல சத்யன் பேசவில்லை, அவளும் அவனிடம் பேச்சுக்கொடுக்காமல் அமைதியாக வந்தாள்

அவளை காலேஜ்ல் இறக்கிவிட்டு சத்யன் காரை திருப்பிக்கொண்டு இருக்கும் போது மான்சி கைகாட்டி காரை நிறுத்தினாள், சத்யன் காரை நிறுத்தி தலையை வெளியே நீட்டி என்ன என்பது போல் மான்சியை பார்க்க

அவனருகே வந்து குனிந்து “ என்ன ஏமாத்தற மாதிரி எந்த பிளானும் போடாதீங்க, நீங்க கிடைக்கனும்னா நான் எதை வேனும்னாலும் செய்வேன், அதனால என்னை கன்வின்ஸ் பண்ற முயற்சி மட்டும் பண்ணாதீங்க அது நடக்காது” என்று உறுதியான குரலில் மான்சி கூற

அவள் பேசியதை கேட்டதும் சத்யன் சட்டென்று ஆவேசமாக “ ஏய் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, படிச்சவ மாதிரி பேசு முட்டாள் மாதிரி பேசாதே” என இருக்குமிடம் மறந்து உரக்க பேச

“ ஆமா பைத்தியம்தான், உங்கமேல பைத்தியம் இப்போ அதுக்கு என்ன பண்ணப்போறீங்க, இந்த கத்தலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், எனக்கு நீங்க வேனும், அதனால பேசாம போய்ட்டு கரெக்டா ரெண்டு மணிக்கு வாங்க” என்று கூறிவிட்டு அவன் கன்னத்தை தடவியவள் பிறகு கல்லூரிக்குள் நுழைந்தாள்


சத்யன் வீட்டுக்கு வந்து நீலவேணியை மார்கெட்க்கு அழைத்துப்போய் விட்டு மறுபடியும் ராஜாராமனை கடையில் இருந்து மாலை உணவிற்கு அழைத்து வர, அவர் கல்லூரியில் இருந்து மான்சி அழைத்து வருமாறு கூறினார்

சத்யன் சரியா ரெண்டு மணிக்கு கல்லூரி வாயிலில் காத்திருக்க, சிறிது நேரத்திலேயே வந்த மான்சி காரில் ஏறி அமர்ந்து, தெப்பக்குளத்துக்கு அவனுக்கு வழி சொல்ல,

“ தியாகராஜா காலேஜ் எதிரில் தான எனக்கு வழி தெரியும்” என வேண்டாவெறுப்பாக சொன்ன சத்யன்... காரை தெப்பக்குளம் நோக்கி செலுத்தினான்

தெப்பக்குளம் வந்துவிட காரை அதன் சுவர் ஓரமாக நிறுத்தி இறங்கிய சத்யன்,மறுபுறம் வருவதற்குள் மான்சி இறங்கி குளத்தின் படிகளில் இறங்க ஆரம்பித்தால்

குளம் ஒரு சொட்டு நீரின்றி வரண்டு போயிருக்க இருவரும் அதன் நடுவே இருந்த மண்டபம் நோக்கி நடந்தனர், மான்சி விறுவிறுவென முன்னால் நடக்க சத்யன் குழம்பிய முகத்துடன் ஆயிரமாயிரம் சிந்தனைகளுடன் அவள் பின்னால் நடந்தான்

குளத்தின் நடுவே இருந்த கோபுரத்தை சுற்றியிருந்த மண்டபத்திலும் அதை சுற்றியிருந்த மரங்களின் பக்கத்திலுமாக அங்காங்கே ஒன்றிரண்டு ஜோடிகள் உலகையும் சுட்டெரிக்கும் வெயிலையும் மறந்து பேசிக்கொண்டு இருக்க

அவர்களை எல்லாம் பார்த்தவுடனே சத்யனுக்கு புரிந்துபோனது, இந்த இடம் காதலர்கள் சந்தித்து கதையளக்கும் இடமென்று யூகித்த சத்யன், ச்சே பேசுவதற்கு இங்கதானா வரவேண்டும் என தன்னையே கடிந்துகொண்டான்

அதற்க்குள் மான்சி தனிமையான ஒரு மரத்தடி நிழலை கண்டுபிடித்து அங்கே உட்கார்ந்து கொண்டு சத்யனை அழைக்க, சத்யன் வந்து அவளைவிட்டு நாலடி தள்ளி அமர்ந்தான்

“ இப்படி உட்கார்ந்து என்ன ரகசியம் பேசமுடியும், அப்புறம் நாம பேசுறது இங்க இருக்கிற எல்லாருக்கும் கேட்கும்” என்ற மான்சி அவனை நெருங்கி அமர்ந்தாள்

சத்யன் வேறு வழியில்லாது அவளை ஒட்டியே அமர்ந்து “ நாம பேசி ஒரு முடிவுக்கு வர்றது நல்லதுங்க” என்று முதலில் ஆரம்பிக்க

“ மொதல்ல இந்த நீங்க வாங்க போங்க இதெல்லாம் விட்டுட்டு, ஒழுங்கா மான்சி வாடி போடின்னு கூப்பிடுங்க, என்ன சரியா” என மான்சி உத்தரவாக கூற

அவளையே பார்த்த சத்யனுக்கு பேச வந்ததே மறந்துவிடும் போல இருந்தது , அடிக்கடி நெற்றியில் விழுந்த கற்றை முடிகளை ஒதுக்கி அவனை பார்ப்பதும் பிறகு நிலத்தை பார்ப்பதுமாக இருந்தாள்

ஒருவழியாக மனதை நிலைப்படுத்திய சத்யன் " நான் உங்கவீட்டுக்கு வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு" என்றான்


அவன் நக்கல் செய்கிறான் என்பதை உணர்ந்த மான்சி " நம்மளோட துணை இவன்தான்னு உணர வருஷக்கணக்கில் ஆகனும்னு நெனைக்கிறீங்களா சத்யன், ஆனா என்னப் பொருத்தவரை உங்களோட சிரிப்பை சந்திச்ச அடுத்த வினாடி என் மனசை அந்த சிரிப்பு ஈடாக கொடுத்துட்டேன்,என் மனசு புரிய எனக்கு ஒருநாள் போதும் சத்யன், உங்களுக்கு ஒருநாள் பத்தாதுன்னா நீங்க வேனும்னா டைம் எடுத்துக்கங்க எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை " என மான்சி தீர்மானமாக கூற

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்த சத்யனுக்கு காலையில் இருந்து யோசித்து வைத்தெல்லாம் மறந்துவிட்டது, இவள் இவ்வளவு உறுதியாக இருப்பாள் என்று சத்யன் எதிர்ப்பார்க்கவில்லை

" என்ன சத்யன் அப்படி பார்க்கிறீங்க, என்னடா இவள் பைத்தியக்காரி மாதிரி பேசுறாளேன்னு பார்க்கிறீங்களா, ஆமா சத்யன் நான் பைத்தியம்தான் உங்கள் மீது கொண்ட காதல் பைத்தியம், நான் உங்களை உயிரா விரும்புறேன் சத்யன், மறுபடியும் இல்ல நாம சந்திச்சு ஒருநாள்தான் ஆச்சு அப்படின்னு புலம்பாதீங்க, அந்த ஒரு நாள்லயே நீங்கதான் என் துணைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது, உங்களுக்கு புரியலைன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை" என மான்சி தீர்மானமாக தன் காதலை சொல்லிவிட

அவள் காதலை அவன் முகத்துக்கு நேராக சொல்லிவிட சத்யன் விதிர்த்து போய் அவளை பார்த்தான்




" அடிப் பைத்தியம் என்கிறேன் ..

" ஆனாலும் உன்னால் எப்படி

" புன்னகைக்க முடிகிறது...

" எனக்கு உன்மீது காதல் இல்லை...

" எனக்கு உன்மீது பைத்தியம் என்கிறாய்...

" காதலுக்கு அனிச்சை செயல்களும்...

" அனிச்சை வார்த்தைகளும் என்றும் அழகுதான்!

சத்யன் விதிர்த்துப் போய் மான்சியை பார்க்க “ என்ன பேசனும்னு சொன்னது நீங்க ஆனா நான்தான் பேசிகிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க, என்ன பேசனும் சொல்லுங்க” என மான்சி அவனை நேருக்குநேர் பார்த்து கேட்க

சிறிதுநேரம் அவளையே கூர்ந்து பார்த்த சத்யன் “ இது விளையாட்டு இல்லை வாழ்க்கை, வருஷக்கணக்கில் காதலிப்பவர்களின் காதலே சிலசமயங்களில் தோல்வியில் முடியுது,.. ஒரேநாளில் பார்த்து பழகி காதலிப்பது சரியில்லை, உன்னோட படிப்பு அந்தஸ்து, உன் அப்பாவோட கௌரவம் இதையெல்லாம் யோசிச்சு பார்த்தியா நீ, வேண்டாம் மான்சி இது நல்லதில்லை, எனக்கு விருப்பமும் இல்லை” என்று சத்யன் தரையை பார்த்துக் கொண்டு சொல்ல

" ஓ ... விருப்பமில்லாம தான் காலையில பாத்ரூமில் இங்க எல்லாம் முகத்தை வச்சு அமுக்கிகிட்டு கிஸ் பண்ணீங்களா, அப்போத் தெரியலையா நான் பணக்காரி அப்படின்னு” என மான்சி ஏளனமாக கேட்க

அதுவரை பொறுமையாக அவள் சொல்வதை கேட்ட சத்யன் இந்த வார்த்தைகளுக்கு பிறகு சற்று சூடாகி “ ஏய் நீயா வந்து முத்தம் குடுப்ப நான் உனக்கு காட்டிகிட்டு சும்மாயிருக்க என்னை என்ன பொண்டுகப் பயல்னு நெனைச்சயா, அதோட விட்டேனேன்னு சந்தோஷப்படு, உன் பிரண்டும் அம்மாவும் வரலைன்னா என்ன நடந்துருக்கும்னு எனக்கே தெரியாது” என்று சற்று உரத்த குரலில் கேட்க

சற்று தொலைவில் இருந்த ஒரு ஜோடி இவர்களை திரும்பி பார்த்தது, மான்சி அவர்களை பார்த்து புன்னகைத்து “ஒன்னுமில்ல ரொம்ப லேட்டா வந்துட்டேன்னு கோபப்படுறாரு அவ்வளவுதான்” என்று சொல்ல

சத்யன் தலையிலடித்துக் கொண்டு “ அவங்க உன்னை கேட்டாங்களா, ஏன் இப்படி இருக்க, உனக்கு வாழ்க்கையை பத்தி உன் அப்பா அம்மாவை பத்தி எந்த பயமோ வருத்தமோ இல்லையா மான்சி” என குரலை தணித்து ரகசியமாக கேட்க

" எனக்கு எந்த வருத்தமும் இல்லை, நீங்க ஓகே சொன்னா நான் இப்பக்கூட என் டாடிக்கிட்ட உங்களை லவ் பண்றதை சொல்லுவேன், அவரு ஒத்துக்கலைன்னா ஒரேயொரு டிரஸ் மட்டும் எடுத்துகிட்டு உங்களோட உங்க வீட்டுக்கு வந்துருவேன், நான் என் மனசுல எல்லாம் தெளிவாத்தான் யோசிச்சு வச்சிருக்கேன், உங்களுக்குத்தான் பயம்” என்று மான் கூறினாள்

“ என்க்கு இருக்கறது பயமில்லை, உங்கப்பா மேல இருக்கிற மரியாதை, இதெல்லாம் வேண்டாம் மான்சி விட்டுரலாம், கொஞ்சம் அமைதியா நிதானமா யோசிச்சு பாரு மான்சி நீ நினைக்கிறது எல்லாமே இப்போ நல்லாயிருக்கும் ஆனா பிற்காலத்திற்கு சரியா வராது, என் குடும்ப சூழ்நிலையில் உன்னால ஒருநாள்கூட குடும்பம் நடத்த முடியாது,” என அவளுக்கு புரியவேண்டுமே என்று மனதில் வேண்டியபடி சத்யன் எடுத்து கூற

“ ஏன் என்னால குடும்பம் நடத்த முடியாது, நீங்க என் பக்கத்தில் இருந்தா நான் நடுத்தெருவில் கூட குடியிருக்க தயார், சரிங்க நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க, என்னை முதல்முதலா பார்த்தப்ப உங்க மனசுல என்ன நெனைச்சீங்க, அப்புறமா நாம பாத்ரூமில் நடந்துகிட்டதுக்கு நீங்க குடுத்த விளக்கம் பத்தாது, இதே வேற ஒரு கேர்ள் அங்க இருந்தா நீங்க அந்த மாதிரி நடந்துகிட்டு இருப்பீர்களா, நிச்சயமா இருக்காது, நானாக இருக்கவே தானே இங்கயெல்லாம் அப்படி பண்ணீங்க ஒத்துக்கங்க சத்யா” என்று தன் மார்பில் ஆள்காட்டிவிரலை வைத்து மான்சி கேட்க



சத்யன் அவள் விரல் இருந்த இடத்தையே வெறித்துப் பார்த்தான், அன்று மான்சி ரத்தச்சிவப்பில் வெள்ளை முத்துக்கள் பதித்த சாட் சுடிதார் போட்டிருந்தாள், கழுத்தை சுற்றிலும் முத்து வேலைபாடு செய்யப் பட்டிருக்க, ப வடிவில் முன்கழுத்து சற்று இறக்கி தைக்கப்பட்டிருந்தது, அவளின் விரல் வலது மார்பில் இருக்க,

சத்யன் அந்த விரல் இருந்த பகுதியின் வளமையையும் திண்மையையும் தன் கண்களாலேயே எடை போட்டான், இதற்க்கு முன்னால் என்ன பேசினோம் என்று அவனுக்கு மறந்து போய்விட்டது

“ ஏன் அப்படி திருட்டுத்தனமா ஓரக்கண்ணால் பார்க்கனும், அதான் பாத்ரூம்ல வச்சு நல்லா ரசிச்சீங்களே” என மான்சி கிசுகிசுப்பான குரலில் சொன்னதும்

சட்டென சுதாரித்த சத்யன் அவள் முகத்தை பார்த்து “ உனக்கு கூச்சமே இல்லையா, எல்லாத்தையும் இப்படி வெளிப்படையா பேசுற, எங்க கிராமத்து பொண்ணுங்க இந்த மாதிரியெல்லாம் பேசமாட்டாங்க,” என்று சத்யன் சொல்லும்போதே இரண்டு நாட்களுக்கு முன்பு வயக்காட்டில்வேலைக்கு வந்த பெண்களின் குறும்பு பேச்சு ஞாபகம் வர,.. தான் சொல்வது எவ்வளவு பொய் என்று அவனுக்கே சங்கடமாக இருந்தது

“ உங்க முன்னால நான் ஏன் கூச்சப்படனும், எனக்கு அதெல்லாம் கிடையாது” என்று பட்டென சொன்னவள் “ ஆனா நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை, பேச்சை மாத்த பார்க்குறீங்க’” என்று மான்சி குற்றஞ்சாட்டும் குரலில் கூற

அவள் என்ன கேட்டாள் என்று ஒரு நிமிடம் கண்மூடி யோசித்த சத்யன், அவள் கேள்விக்கான உண்மை பதிலை எப்படி சொல்வது என்று தயங்கி அவளை பார்த்தான்

“ ம் சொல்லுங்க சத்யன், என்னை பர்ஸ்ட் டைம் பார்த்தப்ப என்ன நெனைச்சீங்க, வேற பொண்ணா இருந்தா பாத்ரூம்ல அந்த மாதிரி நடந்துகிட்டு இருப்பீங்களா” என்று குரலை உயர்த்தி கேட்க

சிறிதுநேரம் தலைகவிழ்ந்து அவள் கேள்விக்கான பதில் கட்டாந்தரையில் இருப்பது போல உற்று பார்த்தவன், பிறகு தலை நிமிர்ந்து “ எனக்கும் உன்னை பிடிக்கும் மான்சி ஆனா எந்தவிதத்திலும் நாம பொருத்தமானவங்க கிடையாது, நாம இரண்டு துருவங்கள் மாதிரி ஒன்னு சேரவே முடியாது” என்று மெல்லிய குரலில் சத்யன் கூற

முகத்தில் எரிச்சலுடன் சட்டென நிமிர்ந்த மான்சி “ நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க சத்யன், பணக்காரன் ஏழை என்பதெல்லாம் மாறி ரொம்ப காலம் ஆச்சு, இது ஒன்னும் ஆண்டான் அடிமை காலமில்லை,

இருபத்தியொராம் நூற்றாண்டு இப்பவந்து நாம இரு துருவம் அதுஇதுன்னு பேசிகிட்டு இருக்கீங்க, எனக்கு தேவை உங்களுக்கு என்ன பிடிச்சுருக்காங்கறது தான், அதை உங்க வாயாலேயே சொல்லிட்டீங்க, அதுபோதும் கிளம்புங்க வீட்டுக்கு போகலாம்” என்று மான்சி எழுந்திருக்க

சத்யன் அவசரமாக அவள் கையை பற்றி இழுத்து உட்கார வைத்து “ இன்னும் நான் ஒன்னுமே சொல்லலை மான்சி அதுக்குள்ள எழுந்திருச்சுட்ட” என்று கூறி அவள் கையை விடுவிக்க

தன் கையில் அவன் பற்றியிருந்த இடத்தை தடவிக்கொண்டே “ச்சே ரொம்ப முரடு நீங்க பாருங்க எப்படி சிவந்து போச்சுன்னு” என்று தனது மணிக்கட்டை அவனிடம் காட்டினாள்

உண்மையில் சிவந்துதான் போயிருந்தது அவள் மணிக்கட்டு, சத்யன் பட்டென்று அவள் கையை பற்றி சிவந்த இடத்தை மென்மையாக தடவி “ மன்னிச்சுடு மான்சி நான் விவசாயம் பண்றதுக்கு ஏர் புடிக்கும் கையில்ல அதனால கை கொஞ்சம் முரடாத்தான் இருக்கும்” என்றான்

அவனுடைய மென்மையான தடவலில் தன்னை மறந்த மான்சி, முகத்தில் வெட்கச் சிரிப்புடன் தனது விழிகளை மூடிக்கொள்ள, அந்த மூடிய விழிகளில் மாற்றிமாற்றி முத்தமிட்டு திறக்கவேண்டும் என்ற நினைப்பு சத்யன் மனதில் புசுபுசுவென்று கிளம்ப, ரொம்ப சிரமப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டு அவள் கையை அவள் மடியில் வைத்தான்... உடனே மான்சி கண்களை திறந்தாள்

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சத்யன் “ மான்சி நாம ஒரு முடிவுக்கு வந்தே ஆகனும், எனக்கு உன்னை பிடிக்கும் உனக்கு என்னை பிடிக்கும் என்பதெல்லாம் சும்மா,.. இது ஒரு இனக்கவர்ச்சி மாதிரி, நான் உன்னைப்போல ஒரு அழகான பெண்ணை பார்க்காததால் உன்னிடம் மயங்கியிருக்கலாம், நீயும் என்னைப்போல ஒருவனை சந்திக்காததால் உன் மனசில் இப்படி தோன்றியிருக்கலாம், இதெல்லாம் காதலே இல்லை மான்சி, ரெண்டு நாளைக்கு ஒருத்தரையொருத்தர் பாத்துக்காம இருந்தா தானாகவே மனசு மாறிப்போகும், நன் சொல்றதை கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு மான்சி,” என சத்யன் தீர்கமாய் கூறினான்

அவனையே பார்த்த மான்சி “ சரி பேசிட்டீங்களா வாங்க போகலாம்” என மறுபடியும் எழுந்திருக்க முயன்றாள்

“ எனக்கு பதில் சொல்லிட்டு போ மான்சி” என்று சத்யன் குரலில் கடுமையை வரவழைத்து கொண்டு கேட்க

மறுபடியும் பட்டென்று படிமானமாக உட்கார்ந்த மான்சி “ பின்னே உங்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போறதில்லை அப்புறம் பேசி என்ன பிரயோஜனம், ஏங்க இனக்கவர்ச்சியால் பதிக்க நாம ரெண்டுபேரும் என்ன பதினாறு வயசு டீன்ஏஜ் புள்ளைகளா, எனக்கு இருபத்தி ஒன்னு ஆகுது வயசு, உங்களுக்கு என்ன வயசாகுது” என்று மான்சி சத்யனை பார்த்து அதட்ட

சத்யனோ “ இருபத்தேழு வயசு ஆகுது” என்றான் உடனே

“ ம் இந்த வயசுல என்னமோ ஞானி மாதிரி பேசுறீங்க, ஆனா நீங்க சொன்னதில் ஒன்னு மட்டும் உண்மை, அதான் உங்களை மாதிரி ஒரு ஆம்பளையை நான் இதுவரைக்கும் சந்திக்காததால் உங்ககிட்ட மயங்கிட்டேன்னு சொன்னீங்களே அது ரொம்ப சரி, உங்களை மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததில்லை ” என மான்சி நக்கல் செய்ய

“ என்ன கேலி பண்றியா மான்சி” என சத்யன் கோபமாக கேட்க

“ பின்ன என்னங்க நானும் எத்தனைவாட்டி உங்களுக்கு சொல்லி புரியவைக்கிறது, முடிவா நீங்க என்னதான் சொல்றீங்க சத்யன்” என்று மான்சி சலிப்புடன் கேட்க

“ முடிவுதானே இதோ சொல்றேன், நீ சொல்ற மாதிரி இது காதலாவே இருக்கட்டும், ஆனா எனக்கு நம்பிக்கை வரலை அதனால எனக்கு நம்பிக்கை வர்றவரைக்கும் நீ காத்திருக்கனும், அதாவது இன்னிலேர்ந்து சரியா ஒரு மாசம் நீ என்னை வெறும் டிரைவரா மட்டும்தான் நினைக்கனும், நானும் உன்னை ஒரு முதலாளியோட மகளாத்தான் நினைப்பேன், அந்த ஒரு மாசம் கழிச்சு நாம மாறாமல் இருந்தா இது காதல்னு நான் ஒத்துக்கிறேன், அதுவரைக்கும் உன் விரல் நுனிகூட என்மேல் படக்கூடாது, இதுக்கு ஓகேன்னா சொல்லு” என சத்யன் உறுதியான குரலில் கூறினான்

அவனையே கூர்ந்து பார்த்த மான்சி “ இதுக்கு நான் ஒத்துக்கலைன்னா” என்று சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்த

“ நான் இன்னிக்கே இந்த வேலையில் இருந்து போயிருவேன்” என்று சத்யன் தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தினான்




No comments:

Post a Comment