Thursday, July 16, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 2

"இன்னொரு விஷயம் என்னோட அக்கா பொண்ணு அதான் உனக்கு தெரியுமே, ஜனனி, அங்கதான் 10 வது படிக்கிறா, போன வருஷம்வரைக்கும் ஹாஸ்டல் ல தங்கி படிச்சா. இந்த வருஷம் இங்கயே பரத் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ல சேத்துட்டோம். அவ கணக்கில 70-80மார்க் வாங்குறா, ஆனா அவ 100 மார்க் வாங்கனும்னு அக்காவோட ஆசை, நீ கொஞ்சம் சண்டே சொல்லி கொடுக்க முடியுமா" என்றுகேட்க, "சரிடா, ஆனா சண்டே வேண்டாம் எனக்கு ஏற்கனவே ஒரு டியூஷன் இருக்கு, வேணும்னா தினசரி மாலை 5 மணிக்கு ஒரு batchஇருக்கு அதுக்கு ஓகேயா, அக்காவ கேட்டு சொல்லு" என்று சொன்னான்.

ஜனனியை மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தது. எப்போதும படிப்பில் ஆர்வம் அதிகம் என்பதால் சரியாக சாப்பிடுவதில்லை,ஒல்லியாக இருப்பாள். ஆனால் நல்ல நிறம், நிறைந்த கூந்தல். இப்போது எப்படி இருப்பாள் என்று தெரியவில்லை. அவளும் விஜய்நண்பன் என்பதால் கார்த்திக் மாமா என்று அழைப்பது வழக்கம். 

அடுத்த நாள் காலை விஜய் அவனுக்கு போன் செய்து 10 மணிக்கு ஸ்கூல் இண்டர்வியூ இருப்பதை சொல்ல, கார்த்திக் அவனதுஅனைத்து கல்லூரி மற்றும் பள்ளி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் இவற்றுடன் பள்ளி முதல்வர் வீராசாமியை பார்க்க சென்றான். 

கார்த்திக்கை பார்த்து அவனிடம் பல கேள்விகளை கேட்டு, அவனது டுடோரியல் மற்றும் டியூஷன் பற்றி கேட்டு விட்டு, அவனிடம்"இங்க பாருங்க கார்த்திக் உங்களுக்கு நல்ல தகுதி இருக்கு. அதனால உத்தியோகம் உறுதி. ஆனா உங்களுக்கு என்னால ஆரம்பத்திலஅதிகமா சம்பளம் தர முடியாது, 3000 தான் தர முடியும். நீங்க வேனும்ன private டியூஷன் எடுத்துக்கலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை.ஆனா டுடோரியல் வேலையை நீங்க ராஜினாமா பண்ணி விட்டு அடுத்த நாளே நீங்க இங்க வேலையில சேரலாம். மற்றபடி உங்கநண்பர் விஜய் என்னோட பக்கத்துக்கு வீடு, பல வருசங்களா தெரியும். அவரோட வார்த்தைக்காக நான் உங்கள நம்புறேன். இதுகோஎஜுகேசன் ஸ்கூல், அதுனால ஒழுங்கா நடந்துகுவிங்கன்னு நம்புறேன், பெஸ்ட் ஆப் லக்" என்று சொல்லி கை குலுக்கி விட்டுஅனுப்பி வைத்தார். 

வீடு திரும்பிய உடன் டுடோரியல் சென்று அதன் ஓனர் சுப்ரமணியிடம் எல்லா விபரங்களையும் சொல்லி வேலையில் இருந்துவிடுவிக்க சொல்லி வேண்டி கொண்டான். "ஏன் தம்பி கவலை படுரிங்க, உங்களுக்கு ஒரு நல்ல வேலை கெடச்சா எனக்கு ரொம்பசந்தோசம்தான். நீங்க நாளைக்கே அங்கே சேரலாம், நான் உங்களுக்கு இப்பவே வேலை விடுப்பு சான்றிதழ் தந்து விடுகிறேன்" என்றுசொல்லி அவர் அவனுக்கு relieving லெட்டர், certificate அடித்து கொடுத்தார். இவ்வளவு சுலபமாக வேலை முடியும் என்று எதிர்பாராதகார்த்திக் சந்தோசத்தில் தடுமாறினான்.




வரும் வழியில் பானு வீட்டுக்கு போன் போட நல்ல வேலையாக பானு எடுக்க அவளிடம் இந்த செய்தி சொல்ல அவள் சந்தோசத்தில் அவனுக்கு வாழ்த்து சொல்லி, "என்ன சார் அடுத்து கல்யாணம் தான" என்று கேட்க, அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை அசட்டு சிரிப்பு சிரித்து போனை வைத்தான். முதலில் விஜயை பார்த்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே, வீடு திரும்பிய போது மணி 5 . 

அவனுக்காக வீட்டு வாசலில் விஜயராகவன், ஜனனியோடு நிற்க காக்க வைத்ததற்கு "சாரி" சொல்லி விட்டு கதவை திறந்து இருவரையும் ஹாலில் உட்கார சொன்னான். அப்போது தான் ஜனனியை கவனித்தான், மூன்று வருடங்களுக்குள் நிறைய மாற்றங்கள்.வயதுக்கு மீறிய வளர்ச்சி. "மாமா எப்படி இருக்கீங்க" என்று கேட்க, கார்த்திக் "நான் நல்லா இருக்கேன். முதல்ல என்ன மாமா அப்பிடின்னு கூப்பிடுறத நிறுத்து, மத்த மாணவர்கள் முன்னால நான் உனக்கு ஆசிரியர், அதுனால டீச்சர் அப்பிடின்னு கூப்பிடு" என்று சொல்ல, அந்த மிரட்டலுக்கு பணியாத ஜனனி, "உங்கள மத்தவங்க முன்னால மாஸ்டர் அப்பிடின்னு கூப்பிடுவேன், மத்த இடங்கள்ள நீங்க எனக்கு மாமா தான்" என்று கூறினாள்.

விஜய் அதற்கு "டேய் அவள் கூட தகறாரு பண்ணாத, அவளோ சொன்ன பேச்சை கேக்கறதில்ல, அவ கூபிடறபடி கூப்பிட்டும்" என்று சொல்லி முற்று புள்ளி வைத்தான். அதற்குள் மத்த மாணவர்களும் வர, விஜய் கார்த்திக் அருகில் வந்து, "டேய் அவள் கணக்குல நல்ல மார்க் வாங்கணும் பாத்துக்க, மத்தபடி ஜனனி நல்ல புத்திசாலி, ஆனா என்ன கொஞ்சம் வாய் தான் ஜாஸ்தி", என்று எச்சரித்து விட்டு கிளம்பினான்.

எல்லா மாணவர்களுக்கும் டெஸ்ட் கொடுத்து விட்டு, ஜனனியிடம் உக்கார்ந்து எந்த பாடம் வரை அவள் கிளாஸ் டீச்சர் நடத்தி இருக்கிறார்கள் என்று விசாரித்து தெரிந்து கொண்டான். தினமும் இன்னும் ஒரு மணி நேரம் 15 நாட்கள் சொல்லி கொடுத்தால் ஜனனிக்கு இப்போது நடத்தி வரும் பாடத்துடன் ஒரு சேர முடியும் என்பதை அறிந்து அவளிடம் நாளை முதல் மாலை 6 - 7 ஸ்பெஷல் கிளாஸ் வர சொல்லி விட்டு அன்றைய பாடத்தை தொடர்ந்தான். ஜனனி புத்திசாலி என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை, அதை நிருபிப்பது போல் தினமும் கிளாஸ் வொர்க் கொடுத்தால் எல்லாருக்கும் முன்னால் முடித்து விட்டு சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாள். 

அவளுக்கு geometry பாடத்தில் மட்டும் கொஞ்சம் புரியாமல் இருந்ததை சொல்லி கொடுத்து வந்தான். அவளின் புரிந்து கொள்ளும் திறமை நம்ப முடியாத அளவுக்கு வேகமாக இருந்தது.


பரத் மெட்ரிகுலேஷன் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்தன, இடையே கார்த்திக் பானு சந்திப்பு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்தது. ஒரு நாள் கார்த்திக் தன் காதலை உடைத்தான். அவளுடைய தோழிகள் எல்லோருக்கும் காதலர்கள் ஏற்கனவே இருந்ததால் அவளுக்கு கார்த்திக் தன் காதலை தெரிவித்தவுடன் பெருமை தாங்க முடியவில்லை, தனக்கும் காதலன் இருக்கிறான், தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்ற நினைவே அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தது. அவன் காதலை ஏற்று கொண்டாள். இருவரும் ஞாயிறு மதியம் திரை அரங்குகளிலும் சுற்ற தொடங்கினர்.

டிசம்பரில் நடந்த அரை ஆண்டு தேர்வில் ஜனனி உட்பட 12 மாணவ மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்றதால், முதல்வர் வீராசாமி கார்த்திக்கு பரிசாக கேடயம் கொடுக்க, அனைத்து மாணவ மாணவிகளும் கை தட்டி கரகோஷம் செய்தனர்.

இப்போதல்லாம் 6 மணிக்கு டியூஷன் முடிந்தாலும் வீட்டுக்கு போகாமல் கார்த்திக் வீட்டில் இருக்கும் நாவல்களை படிப்பது, அவன் எழுதி இருக்கும் சிறு கதைகளை கிண்டல் செய்வது என்பது ஜனனிக்கு வழக்கம் ஆகி விட்டது. சில நேரங்களில் அவன் டைரியில் எழுதும் காதல் கவிதைகளை அவனுக்கு தெரியாமல் படித்து விட்டு கிண்டல் செய்வாள். சின்ன பெண் தானே என்று அவளை பற்றி கவலை படாமல் சிரிப்பான் கார்த்திக்.

ஒருநாள் சாய்பாபா காலனியில் மரத்துக்கு அடியில் மறைந்து நின்று கார்த்திக் பானு பேசி கொண்டிருப்பதை பார்த்து ஜனனிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. 
அன்று மாலை டியூஷன் முடிந்த பின்பு கார்த்திக்கை கிண்டல் செய்து "என்ன master உங்களுக்கு கணக்கு பாடம்தான் சொல்லி தர தெரியும்னு நினைச்சேன், காதல் பாடமும் சொல்லி தர தெரியும் போல இருக்கு, என்ன வழக்கம் போல 100 மார்க் வாங்க வச்சுடுவிங்களா" என்று கிண்டல் செய்ய, பதிலுக்கு "நீயே 100 மார்க் வாங்கும் போது அவ வாங்க கூடாதா" என்று திரும்பி கிண்டல் செய்தான்.

முழு ஆண்டு தேர்வு நெருங்கியது. எல்லா மாணவர்களும் தங்கள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். ஜனனியும் கிண்டலை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினாள். வார கடைசி நாட்களான சனி, ஞாயிறு மட்டும் கார்த்திக் வீட்டுக்கு வந்து வார பத்திரிக்கைகளை படித்து செல்வது அவள் வாடிக்கை. அப்படிபட்ட ஒருநாளில் அவள் பானுவை சந்தித்தாள்.

பானுவிடம் பேசியபோது அவள் அவள் அம்மா அப்பா, அவர்களின் சொத்து அந்தஸ்து இவற்றை பற்றி அதிகமா பேசினாள். கார்த்திக்கை பற்றி பேசினாள், "அவர் முதலில் ஒரு அரசாங்க வேலையில் உட்காரட்டும் அப்பதான் வீட்டுல கல்யாணத்த பத்தி பேச முடியும்" என்றாள். "ஒரு வேளை நல்ல வேலை கிடைக்கலேன்னா என்ன பண்ணுவிங்க" என்று கேட்க, அதற்கு அவளிடம் பதில் இல்லை.

பானு கார்த்திக்கை காதலிப்பது புரிந்தாலும், கார்த்திக் அளவுக்கு அவள் அழமாக காதலிக்கவில்லை என்று புரிந்தது. இதை கார்த்திக்கிடம் சொன்னால் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க என்று திட்டுவார், நமக்கு எதுக்கு வம்பு என்று வாயை மூடி கொண்டாள் ஜனனி.

10 ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடியும் நேரம். கடைசி எக்ஸாம் முடியும் நாள் அன்று, வழக்கம் போல் கார்த்திக் பானு மருதமலை சென்று விட்டு வர, அவர்கள் இருவரையும் மருதமலையில் ஜோடியாக பார்த்த பானுவின் அப்பா நண்பர், உடனே போன் போட்டு விஷயத்தை சொல்லி விட, பானு வீட்டுக்கு திரும்பியபோது அவள் அப்பா அம்மா ரெண்டு பேரும் வாசலில் காத்து கிடந்தனர்.


பானுவின் அம்மா "என்னங்க அவசரபடாதிங்க, மெதுவா விசாரிக்கலாம். நம்ம பொண்ணு சம்பந்தபட்ட விவகாரம், எடுத்தோம் கவிழ்தோம்னு செயல்பட்டா பாதிக்கபட போறது நாமதான்" என்று சொல்லி, வீடு வந்த பானுவை உள்ளே அழைத்து போய், "அம்மா நாங்க உன்ன பத்தி ஒரு விஷயம் கேள்விபட்டோம், உண்மையா" என்று கேட்க, பானுவுக்கு திடுக் என்று தூக்கி வாரி போட்டது. "என்ன அம்மா யாரு என்ன சொன்னாங்க" என்று கேட்க, "கண்ணு நீ யாரையோ ஒரு பையனை காதலிக்கிறதாகவும், ரெண்டு பேரும் சேர்ந்து மருதமலை அடிக்கடி போகிறதாகவும் தகவல் வந்திச்சு உண்மையா? சொல்லு" என்று அம்மா கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் பானு. அதற்குள் அப்பா அருகில் வந்து "என்ன பதில காணம்" என்று கேட்க, சுதாரித்து கொண்ட பானு "அப்பா பொய் சொல்லுறாங்க, நான் உங்க பொண்ணு அப்படி பண்ணுவேனா?" என்று எதிர் கேள்வி கேட்டாள். அது வரை பொறுமை காத்து வந்த பானு அப்பாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது." எனக்கு உறுதியான தகவல் கிடைச்சது. இப்போ நீ உண்மைய ஒத்துகிட்டு தான் ஆகணும்"என்று கத்த, சரியாக மாட்டி கொண்டோமே என்று திணறினாள்

"இந்த பாரும்மா பானு, எதுக்கும் அந்த பையனை சாயந்தரம் வர சொல்லு. மேல பேசி முடிவெடுதுடலாம்" என்று சொல்ல,சந்தோஷத்தில் பானு என்ன செய்வது என்று அறியாமல் முகம் சிவந்தாள். கார்த்திக்செல்போனை அழைக்க அது அணைக்கபட்டு இருந்ததால், கார்த்திக் நண்பன் விஜயிடம் சொல்லி "கொஞ்சம் உங்க நண்பரை கூப்பிட சொல்லுங்க முக்கியமான விஷயம்" என்று போனில் சொல்ல, அடுத்த 10 நிமிடத்தில் கார்த்திக் அழைக்க, பானு பேசினாள்.

"என்ன பானு அவசரமா ஏதோ பேசணும்னு சொன்னியாமே என்ன?" என்று கேட்க, பானு தன் குரலை தாழ்த்தி கொண்டு "நம்ம விஷயம் தெரிஞ்சுடிச்சு, அப்பா அம்மா உங்களை பார்க்கணும்னு சொல்லுறாங்க, கொஞ்சம் உடனே வர முடியுமா" என்று கேட்க "எப்படி தெரிஞ்சுது" என்று கேட்க, "யாரோ நம்மள மருதமலைல பார்த்து அப்பாவிடம் சொல்லி இருக்காங்க, என்னை பார்த்த உடனே அப்பா கத்த ஆரம்பிச்சுட்டார். நல்லவேளை, மத்த விஷயமா உங்கள பார்த்து பேசணும்னு சொன்னார். அதுனால நான் தப்பிச்சேன். சீக்கிரம் வாங்கplease" என்று கெஞ்ச "இதோ உடனே வரேன்" என்று சொல்லி போனை வைத்து விட்டான் கார்த்திக்.

அடுத்த 15 வது நிமிடத்தில் பானு வீட்டை வந்தடைந்தான். வாசலில் இருந்து வரவேற்ற பானு, அவள் அப்பா அம்மாவிடம் அழைத்து செல்ல, "பானு நீ உன் ரூமுக்கு போ, நாங்க இந்த தம்பியோட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு" என்று சொல்லி அவளை வெளியே அனுப்பி விட்டு கார்த்திக்கிடம் விசாரிக்க தொடங்கினர். அவனை பற்றி முழுக்க விசாரித்து விட்டு, "கொஞ்சம் பொறுங்க தம்பி" என்று சொல்லி, பானு அம்மா அப்பா இருவரும் தனியாக போய் அடுத்த அறையில் பேசி கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் திரும்பிய இருவரும், "சரி தம்பி நாங்க நாளைக்கு கூப்பிட்டு தகவல் சொல்றோம்" என்று சொல்லி, "பானு இந்த தம்பிக்கு காபி கொடுத்து அனுப்பி விடு" என்று சொல்ல, பானு அவனிடம் "என்ன நடந்தது" என்று கேட்டாள். 

கார்த்திக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, பானுவிடம் "என்னை பத்தி, படிப்பு, குடும்பம் பற்றி விசாரித்தார்கள்.மத்தபடி நாளைக்கு சொல்றேன்னு உங்க அப்பா சொல்லி இருக்காங்க" என்று சொல்ல, பானு அவன் அருகில் வந்து "நான் பேசிட்டு கூப்பிடுறேன்" என்றாள். ஏனோ அவன் மனது கலக்கமாக இருந்தது.

வீட்டுக்கு திரும்பிய அவன் மனதில் குழப்பம், வெறும் தரையில் சட்டையை மட்டும் கழற்றி விட்டு படுத்து விட்டான்.


வழக்கம் போல் அவன் வீட்டுக்கு வந்த ஜனனி அவன் வெறும் தரையில் படுத்திருப்பதை பார்த்து "என்ன மாமா ஏன் இப்படி படுத்துரிக்கிங்க, என்ன காய்ச்சலா?" என்று கேட்டு அவன் நெற்றி மற்றும் கழுத்தில் கை வைத்து பார்த்தாள். சூடு இல்லாததை கண்டு,அவன் அருகில் அமர்ந்து "என்ன ஆச்சு மாமா?" என்றுகேட்க, சுதாரித்து கொண்டு எழுந்து தன் சட்டையை அணிந்து, "முதல்ல நீ examஎப்படி எழுதி இருக்க சொல்லு" என்று கேட்க, "நான் ரொம்ப நல்லா எழுதி இருக்கேன். உங்களுக்கு என்ன ஆச்சு" என்று கேட்டாள்.

நடந்ததை சொன்ன கார்த்திக்கிடம் எதோ விரும்ப தகாதது நடக்க போவதாக அவள் மனம் சொல்லியது. அதை சொன்னால் அவன் மனம் கலங்கும் என்று உணர்ந்த ஜனனி "நீங்க கவலைபடாதிங்க, நல்லதே நடக்கும்" என்று சொல்லி, அவனை ஆறுதல் படுத்தினாள். அதற்குள் விஜயும் வந்து நடந்ததை அறிந்து அவனை best of luck என்று வாழ்த்தி விட்டு ஜனனியை அழைத்து கொண்டு திரும்பினான்.

மறு நாள் விடிந்தது, பானு அழைப்பாள் என்று வீட்டில் காத்து கொண்டிருந்தான் கார்த்திக். அன்று இருந்த நிலையில் அவனுக்கு நிமிடங்கள் மணி நேரங்களாக நகர்ந்தன. தனது செல்போனை பார்த்தபடி பானுவின் call-க்காக காத்து கொண்டிருந்தான். பகல் பொழுது கடந்து மாலை நேரமும் வந்தது, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வேகவேகமாக கிளம்பி பானுவின் வீட்டுக்கு சென்றான். வீட்டில் யாரும் இல்லை, வீடு பூட்டி இருந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரிக்க, "வீட்டில் இருந்த எல்லாரும் RS புரம் ரத்னா விநாயகர் கோயில் போயிருக்காங்க. பானுக்கு நிச்சயதார்த்தம் அப்பிடின்னு பேசிகிட்டாங்க. இப்போ வர்ற நேரம் தான் வந்துடுவாங்க" என்று சொல்ல குமுறும் நெஞ்சத்தோடு காத்திருந்தான்.

நேரம் கடந்தது, அதற்குள் அவனை தேடி விஜய் வந்து விட்டான். அவனை வீட்டுக்கு திரும்பி வரசொல்ல கார்த்திக் "முடியாது, எனக்கு ஒரு முடிவு தெரியாம போக மாட்டேன்" என்று கைகட்டி பானு வீட்டு வாசலில் நின்றான். வானம் இருட்ட தொடங்கியது. மூன்று சுமோ வண்டிகளில் பானு அவள் அப்பா, அம்மா, உறவினர்கள் வந்து இறங்கினர். பானு பட்டு சேலையில் பளபளக்க வீடு வந்தாள், வாசலில் கார்த்திக்கை கண்டவுடன் முகம் இருள தொடங்கியது. 

அவள் பார்வை சென்ற இடம் பார்த்த அவள் அப்பா, உடனே கார்த்திக்கிடம் சென்று அவனையும் விஜயையும் மாடிக்கு கூட்டி சென்றார்.மனதில் உணர்சிகள் கொந்தளிக்க அவரிடம், "ஏன் சார் இப்பிடி பண்ணுனிங்க, ஆசை காட்டி மோசம் பண்ணிடிங்களே. என்னோட பானு இதுக்கு ஒத்துக்க மாட்டா. நீங்க தான் ஏதோ திட்டம் போட்டு ஏமாத்திரிக்கிங்க. இப்பவே நான் அவள கூப்பிடுறேன், பானு ஏய் பானு"என்று கத்த, "தம்பி கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் சொல்லுறத கேட்டுட்டு அப்புறம் முடிவு பண்ணுங்க. பானு எங்களுக்கு ஒரே பொண்ணு, அவள நல்ல எடத்துல கட்டி குடுக்கனும்னு நாங்க நினைக்கிறோம். உங்கள பத்தி விசாரிச்சோம் தம்பி, நீங்க அப்பா அம்மா இல்லாத பிள்ள, தாத்தா மட்டும் தான். ஒரு நிரந்தர வேலை இல்லை, கிடைக்கிற சம்பளம் உங்க வாய்க்கும் கைக்கும் எட்டலைன்னு கேள்விபட்டேன். என் பொண்ணு நல்ல வசதியா வாழ்ந்த பொண்ணு. அவளை உங்களால வசதியா வச்சிக்க முடியாட்டினாலும்,குறைஞ்ச பட்சம் குடும்பம் நடத்துற அளவுக்காவது சம்பாதிக்கணும். நீங்க சம்பாதிக்கிற 3000 ரூபா எந்த மூலைக்கு?. அவளுக்கு நாங்க ஒரு மாசத்துக்கு வாங்கி தர்ற உடைகளுக்கே பத்தாது. அப்பறம் குடும்பம் நடத்த எங்கே போவிங்க?. இத எல்லாம் நான் என் பொண்ணுகிட்ட தெளிவா பேசினேன். அவள் புத்திசாலி நல்லா புரிஞ்சிகிட்டா. தம்பி இந்த காலத்தில பாக்கெட்ல பைசா இல்லேன்னா பொணம் கூட மதிக்காது. அதுனால அவகிட்ட பேசி, பொள்ளாச்சில இருக்கிற என்னோட தங்கச்சி பையனுக்கு நிச்சயம் பண்ணிட்டோம்.இது அவளோட முழு சம்மதத்தோட நடக்குது".



கார்த்திக்கு நம்ப முடியவில்லை. அவன் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. அருகில் இருந்த விஜய் "டேய் அழாதடா. எனக்கு கஷ்டமா இருக்குடா. உன்னை கண்ட்ரோல் பண்ணிக்க" என்று சொல்ல, தன் உதட்டை கடித்து அழுகையை கட்டுபடுத்தி விட்டு, "சார் நான் ஒரே ஒரு தடவ பானுகிட்டபேசணும், என்னை அனுமதிப்பிங்களா" என்று கெஞ்ச, மனம் இறங்கிய அவர்"சரி நான் கூட்டிட்டு வரேன். சீக்கிரம் பேசிட்டு அனுப்பிடுங்க" என்று சொல்ல, "சரி" என்று தலை அசைத்து விட்டு பானுக்காக காத்திருந்தான். விஜய் ஒரு ஓரத்தில் நிற்க, மாடியில் இருந்த அந்த தனி அறையில் கார்த்திக் பானுக்காக காத்து இருந்தான். 

அலங்கரித்த நிலையில் நுழைந்த பானுவிடம், "நீ என்ன காதலிச்சது எல்லாம் பொய்யா பானு?" என்று கண்கள் கலங்க கேட்க. பானு அவன் முகத்தை பார்த்து "கார்த்திக்உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா அப்பா அம்மா என்கிட்ட பேசி உங்களால என்னை வச்சு வசதியா பாத்துக்க முடியாது அப்பிடின்னுன்னாங்க. உங்களோட 3000 ௦ரூபா சம்பளத்த வச்சு நாம குடும்பம் நடத்த முடியாது." 

"அப்பறம் ஏண்டி என்னை காதலிச்ச?", என்று கோபம் தலைக்கேற கத்தி விட்டு, அவள் கழுத்தை பிடித்து நெரிக்க, பானுவின் கதறல் ஒலி கேட்டு வாசலில் இருந்த பானு அப்பா ஓடி வந்து பானுவை காப்பாற்ற, கூட ஓடி வந்த விஜய் கார்த்திக் கையை பின்னால் கட்டி அவனை அந்த இடத்தில இருந்து அப்புறபடுத்த முயன்றான். அதற்குள் முகத்தில் இருந்த கோபம் குறைந்து கை நடுங்க, கண்கள் கலங்க "பானு என்னை மன்னிச்சுடு. உன்னைய நான் எப்படியாவது காப்பாத்துவேன். என்னை நம்பு, ப்ளீஸ்" என்று கதறினான்

"விஜய் உங்க நண்பர அழைச்சுகிட்டு போகலைனா, நான் போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்" என்று பானு அப்பா எச்சரிக்க, விஜய் கார்த்திக் தோளை கட்டி அணைத்து கொண்டு வெளியேறினான்.

தன்னுடைய பைக்கில் அவனை அவசரமாக அழைத்து கொண்டு கார்த்திக் வீடு நோக்கி விரைந்தான். அங்கே வீட்டுவாசலில் ஜனனி உட்கார்ந்து இருந்தாள். இருவரையும் பார்த்து அவள் எழுந்து நிற்க, விஜய் கார்த்திக்கிடம் இருந்து சாவியை வாங்கி வீட்டை திறந்தான். "இவள் எப்படி இங்கே?" என்று சந்தேகமாக கார்த்திக் கேட்க, "இவள்தான் வழக்கம் போல புக் படிக்கலாம் என்று உன்னை பார்க்க வந்தாள். அவள் வீட்டை நெருங்கிய நேரத்தில் நீ அவசரமாக வெளியே செல்வதை பார்த்து விட்டு, என்னை போனில் கூப்பிட்டு ஏதோ பிரச்னை நடக்க போது சொன்னாள். அவ சந்தேக பட்டது சரியா போச்சு" என்று சொன்னான்.

வீட்டுக்குள் வேகமாக நுழைந்த கார்த்திக், தனது படுக்கையில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழ, அவனை கண்டு ஜனனி மனம் கலங்கி நின்றாள். அவன் அழும் வரைக்கும் விஜய் காத்து இருக்க, அதற்குள் அவனுக்கு டீ தயார் செய்து வந்த ஜனனி அவனிடம் நீட்ட தன்நிலை தடுமாறிய கார்த்திக் தம்ளரை தூக்கி எறிந்தான். விஜய்க்கு கோபம் தலைக்கு ஏறியது. வேறுவழி இல்லாமல் தன் உயிர்நண்பனை பளார் என்று கன்னத்தில் அறைய, அதன் பிறகு தான் ஓரளவு கட்டுக்குள் வந்தான் கார்த்திக்.

ஜனனியை பார்த்து கார்த்திக் "எனக்கு ஒரு உதவி செய்வியா" என்று கேட்க, "சொல்லுங்க மாமா கட்டாயம் செய்யிறேன்" என்றாள்.

"பானுகிட்ட போயி தனியா பேசி என்ன மன்னிக்க சொல்லு, வீட்ட விட்டு ஓடி போகலாம். நான் எப்படியாவது காப்பாத்துறேன்னு சொல்லு".

"மாமா அது தப்பு" என்று ஜனனி சொல்ல, 

"எனக்காக பண்ண மாட்டியா" என்று கெஞ்சினான். 

விஜயை பார்க்க அவன் கண்ணசைத்து சரி போ என்று சொல்ல, ஜனனி கிளம்பி பானு வீட்டுக்கு வந்தாள். தனி அறையில் இருந்தபானுவிடம், "அக்கா உங்க கிட்ட கார்த்திக் மாமா அவர் மோசமா நடந்துகிட்டதுக்கு மன்னிப்பு கேட்டார்" என்று சொல்ல, பானுவோபுருவத்தை உயர்த்தி "வேறு என்ன" என்று கேட்க, தயங்கியபடி "நீங்க வீட்ட விட்டு வெளியே வந்தா காப்பாத்துரதா சொன்னார்." 

"எப்படி பிச்ச எடுத்தா, இனிமே நான் அந்த மனுசன பாக்க விரும்பல" என்று எரிந்து விழ, 

"அக்கா அவர் உங்க காதலன் தானே, இப்படி பண்ணலாமா, காசு பணம் எப்ப வேணா சம்பாதிக்கலாம். அவர் மாதிரி உங்க மேல இந்தஅளவுக்கு அன்போட இருக்கவர எங்கேயும் பார்க்க முடியாது. ப்ளீஸ் தயவு செஞ்சு அவர பாக்க வாங்க". என்று கெஞ்ச பானு நக்கலாக 

"அப்பிடின்னா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானா" என்று பேச, பொறுக்க முடியாமல் ஜனனி "அசிங்கமா பேசாதிங்க" என்றுசொல்லி விட்டு திரும்பி வந்தாள்.

வீடு திரும்பிய ஜனனியிடம் என்ன நடந்தது என்று கை அசைத்து கேட்ட விஜயிடம் உதட்டை பிதுக்கி காண்பித்து, எங்கே கார்த்திக்என்று கை அசைத்து கேட்க, உள்ளே கை காட்டினான். உள்ளே தன்னை மறந்து உறங்கி கொண்டிருந்தான். 

அவளிடம் "நீ கொஞ்சம் ஹாலில் இரு" என்று சொல்லி விட்டு "நான் போய் எல்லாருக்கும் சாப்பாடு கொண்டு வரேன் என்று சொல்லிவிட்டு தன் பைக்கில் கிளம்பினான்.

அதற்குள் ஹாலில் இருந்த புத்தகங்களை புரட்டியபடி இருந்தாள் ஜனனி. அவளுக்கு மனம் முழுக்க வேதனை. இந்த மாதிரி உயிருக்குஉயிரா காதலிச்ச கார்த்திக் மாமா தன் நிலை இழந்து பாவமா இருக்கார், இவரை ஏமாத்தின பானு கவலையே இல்லாம சந்தோசமாஇருக்காள். கடவுளே எங்க மாமா மனசு மாறணும். அவர் மனசை புரிஞ்சிகிட்ட நல்ல பெண் அவருக்கு துணைவியாக வர வேண்டும்,நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், என்று ஒரு நிமிடம் கண்மூடி வேண்டி கொண்டாள்.

திடீர் என்று கார்த்திக் படுத்திருந்த அறைகதவு பூட்டப்படும் ஓசை கேட்டவுடன் திடுக்கிட்டு எழுந்த ஜனனி, ஏதோ விபரீதம் நடக்கபோகிறது என்று உணர்ந்தாள். ஓடி வந்து கதவை தட்டி "கார்த்திக் மாமா கதவை திறங்க, மாஸ்டர் கதவை திறங்க" என்று கத்தியபடிகதவை ஓங்கி தட்டினாள், பதில் ஏதும் வராமல் போகவே, வயிற்றில் கலவரம் எழும்ப "ப்ளீஸ் கதவ தொறங்க" என்று கெஞ்சினாள்.அதற்குள் விஜயராகவனும் வந்து சேர, என்ன ஆச்சு என்று கேட்க, "விஜய் மாமா மாஸ்டர் கதவ பூட்டிக்கிட்டார் எனக்கு பயமாஇருக்கு. கதவ தட்டினா திறக்க மாட்டேங்கிறாரு".




No comments:

Post a Comment