Friday, July 10, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 11

கௌசல்யா மான்சியை உள்ள அழைத்துச் சென்று கூடத்தில் போடப்பட்டிருந்த புது பாயில் உட்கார வைத்தாள், பிறகு சத்யனிடம் வந்து “ மாமா நீயும் பாயில போய் உட்க்காரு , ரெண்டு பேருக்கும் பாலும் பழமும் குடுக்கனும்” என்று சொல்ல

கௌசல்யாவை பார்த்து முறைத்த சத்யன் “ ஆமா அது ஒன்னுதான் கொறைச்சல், எல்லாம் அவளுக்கே குடுங்க” என்றுவிட்டு விறுவிறுவென புழக்கடை பக்கம் போய்விட்டான்

கௌசல்யா என்ன செய்வது என்று புரியாமல் தனலட்சுமியை பார்க்க ‘எல்லாம் சரியாகிவிடும் விடு, என்பதுபோல் சைகையில் சொல்லிவிட்டு உள்ளே போய்விட.. கௌசல்யா மான்சியின் அருகில் பாயில் உட்கார்ந்து கொண்டாள்

“மாமாவுக்கு உங்கமேல கோவம், நாளாக நாளாக சரியாயிடும், நீங்க அவசரப்பட்டுட்டீகன்னு மாமா நெனைக்கிறாக, ஆனாக்க ஆம்பளைகளுக்கு எங்க நம்ம மனசு தெரியுது, எல்லாம் அவுக மேல இருக்கிற ஆசையாலதா இப்புடி எல்லா நடந்துக்குறோம்னு தெரியமாட்டிக்குது” என்று மான்சிக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசலாம் என்று கௌசல்யா பேசிக்கொண்டு இருக்க



அதெல்லாம் மான்சியின் காதில் விழவில்லை, பெற்றோரின் வார்த்தைகளும் சத்யனின்அலட்சியமுமே அவள் மனதை வாட்டி வதைத்தது,.. ஆனால் மான்சி ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தாள் , அது தனது இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த தப்பும் இல்லை, இப்படி செய்யவில்லை என்றால் சத்யனை நிச்சயமாக இழந்திருப்போம் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்,

யார் என்ன சொன்னாலும் என் காதலில் நான் ஜெயிக்க எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று எண்ணியவளுக்கு சத்யனின் ஒதுக்கம் ஞபாகத்திற்கு வந்தது, ஒதுங்கிபோகட்டுமே யாருக்கு என்ன என் கழுத்தில் தாலி கட்டிய பிறகு இவருடைய ஒதுக்கம் என்னை என்ன செய்யமுடியும் என்று எண்ணி மனதை தைரியப்படுத்திக் கொண்டாள்

அதன்பிறகு கௌசல்யா தனது சொற்பொழிவை முடித்துக்கொண்டு தனலட்சுமியிடம் போய் “ ஓவ் அயித்தே நா போய்ட்டு புள்ளைகளுக்கும் உன் மவனுக்கும் ராவைக்கு ஏதாச்சும் செஞ்சு வச்சிட்டு மறுபடியும் வர்றேன், நீ இவுக ரெண்டுபேத்துக்கும் நல்லா ஆக்கிப்போடு, நா வர்றேன்” என்று படபடவென பேசிவிட்டு தாழ்வாரத்து கட்டிலில் அமர்ந்திருந்த சத்யனிடம் வந்தாள்

“மாமோய் நல்லா சாப்புட்டு உடம்ப தேத்திவை ராவைக்கு வேலை அதிகமா இருக்கும்,” என்று நக்கல் செய்ய,.. சத்யன் அவளை பொசுக்கிவிடுவது போல முறைத்தான்

“அய்யோடா சாமி என்னாத்துக்கு இம்புட்டு கோவம் வேணாம் மாமோய், பாவம் அந்த புள்ள உன்னைய நம்பி ஆத்தா அப்பன அம்புட்டு சொத்துப் பத்தையும் விட்டுப்போட்டு வந்துருக்கு, அவுக கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வந்தாலும் அது உன்மேல வச்சிருக்க அன்பு பொய்யினு ஆயிரும் மாமாவ், நீ நாலெழுத்து படிச்சவக நா உனக்கு சொல்ல வேனாம் மாமோவ் பாத்து நடந்துக்க , நா வீட்டுக்கு போய் புள்ளைகள பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கௌசல்யா கிளம்பிவிட்டாள்

கௌசல்யா கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் சத்யனின் பொட்டில் அறைந்தது போல இருந்தது, ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் என்னை நம்பி வந்துவிட்டவளை நான் ஏன் இப்படி நோகடிக்கனும் என்மேல் உள்ள காதலால் தானே வந்தாள்,

அன்பான அம்மா அப்பாவையும் இவ்வளவு பணத்தையும் அந்தஸ்தான வாழ்க்கையையும் துறந்துவிட்டு என்னைத்தேடி வந்தாள் என்றாள், அது எனக்கும் என் ஆண்மைக்கும் பெருமைதானே, இவளைப்போய் நான் ஏன் வார்த்தைகளால் வதைக்கிறேனே, என்று தன்னையே நொந்தான் சத்யன்


மெதுவாக திரும்பி கூடத்தில் பாயில் அமர்ந்திருந்த மான்சியை பார்த்தான், தரையில் அமர்ந்து பழக்கமில்லாததால் காலை மடித்து முட்டிபோட்டவாறு புதுப் புடவையில் சிரமமாக அவள் அமர்ந்திருக்க, சத்யன் எழுந்து அவளருகில் போய் மான்சி என்று அழைக்க

நிமிர்ந்து அவனை பார்த்து என்ன என்று தனது மீன் விழியசைத்து மான்சி கேட்க, அந்த விழிகளின் அசைவில் ஒரு வினாடி தன்நிலையை இழந்த சத்யன் அவள் விழிகளை பார்த்துக்கொண்டே “எழுந்திரு மான்சி” என்றான்

அவன் சொன்னதும் தரையில் கைகளை ஊன்றி மண்டியிட்டவாறே தவழும் குழந்தை முதன்முறையாக மண்டியிட்டு எழுமே அதைப்போல எழுந்தவளை பார்த்து சத்யனுக்கு சிரிப்பு வர, அவளுக்கு உதவுவது போல தனது வலதுகையை நீட்டினான்

அவன் கையை நீட்டியதுமே சற்றுமுன் வெளியே அவனை பற்றிய தனது கையை உதறியதுதான் மான்சிக்கு ஞாபகம் வந்தது, அவன் நீட்டிய கைகளை பற்றாமல் உடனே பட்டென் எழுந்து நின்றவள் “ என்ன செய்யனும்” என்று அவனை பார்த்து கேட்க

அவள் அப்படி கேட்டதும் சத்யனுக்கு மேலும் சிரிப்புதான் வந்தது, “ ம் தோட்டத்தில் விரகு இருக்கும் அதை எடுத்துட்டு வந்து அடுப்புல வச்சு எரியவிட்டு எங்க எல்லாருக்கும் சோறாக்கனும், அப்புறமா எங்கவீட்டுல கிரைண்டர் கிடையாது, அதனால டிபனுக்கு கையாலதான் உரல்ல மாவாட்டனும், அப்புறம் எங்கவீட்டுல மிக்ஸி இல்ல அம்மியில அரைச்சுதான் குழம்பு வைக்கனும், அப்புறம் எங்கவீட்டுல வாசிங் மெசின் இல்லை நெதமும் எல்லார் துணியையும் கம்மாக்கரைக்கு எடுத்துட்டுப் போய் துவைச்சு காயவைச்சு எடுத்துட்டு வரனும்.” என்று வேலைகளை அடுக்கியவன் “இதெல்லாம் நீ செய்றியா” சீரியசாக அவளை கேட்க

அவன் பேச்சைக்கேட்டு மான்சி ஒருகணம் மலைத்தாலும் உடனே “ ஒருமுறை கத்துகிட்டா நான் எல்லாமே கரெக்டா செய்வேன், எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க எல்லாத்தையும் கத்துக்கிறேன், இப்போ என்னனென்ன செய்யனும்னு பூங்கொடியை பக்கத்துல இருந்து சொல்லச்சொல்லுங்க நான் அதுமாதிரி செய்றேன்” என்று தலைநிமிர்ந்து அவனுக்கு பதில் சொல்ல

சத்யனுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்வரை சிலிர்க்க, அவளை வாறியணைத்து, ஆயிரம் அன்பு முத்தங்களால் அவள் தேகத்தை அர்ச்சிக்க வேண்டும் போல் ஆவேசமாக ஒரு உணர்ச்சி எழ வேகமா அவளை நெருங்கினான்

அப்போது சட்டென சத்யனின் அப்பா கையில் ஒரு பையுடன் வீட்டுக்குள் வர, மான்சியை நெருங்கிய சத்யன் பிரேக்கடித்தார் போல் நின்றுவிட்டான், அய்யோ இந்த அப்பா இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு வரக்கூடாதா என்று அவன் மனம் ஏங்கி அவன் விட்ட பெருமூச்சு மான்சியின் கழுத்தில் சூடாக வந்து மோதியது

சிறிதுநேரத்தில் இரவு உணவு தயாராக பூங்கொடி வந்து மான்சியை கூப்பிட்டுக்கொண்டு சமையலறைக்கு போக அங்கே சத்யன் ஏற்கனவே உட்கார்ந்திருந்தான், இவளைப் பார்த்ததும் “வா சாப்பிடு” என்று தனது பக்கத்தில் இருந்த இடத்தை கண்ணால் காட்டி சம்பிரதாயமாக கூப்பிட

அய்யோ பொண்டாட்டி மேல ரொம்பத்தான் அக்கறை மாதிரி பேச்சைப் பாரு என நினைத்த மான்சி அவனருகே அமர்ந்தாள்
இருவருக்கும் வாழைஇலை போட்டு உணவு பரிமாறப்பட்டது, சாதம், கத்திரிக்காய் சாம்பார், அவரைக்காய் பொரியல் என இலையில் பரிமாறப்பட, மாலையிலிருந்து எதுவும் சாப்பிடாத மான்சி அவசரமா சாதத்தில் கைவைக்க


சத்யன் அவள் கையை பற்றிக்கொண்டு " இருஇரு இப்படியா உட்கார்ந்து சாப்பிடுவாங்க, நல்லா சம்மணமிட்டு உட்காரு இல்லேன்னா ஒருகாலை மடக்கி ஒருகாலை குத்தங்காலிட்டு உட்காரு,. இந்தமாதிரி மண்டிபோட்டு உட்கார்ந்து சாப்பிடக்கூடாது மான்சி, அது அன்னத்தை பழிக்கிற மாதிரி, அதனால நல்லா உட்காரு " என்று சத்யன் சொல்ல

" அட விடு ராசு அந்த புள்ள சாப்புடட்டும் இப்பபோய் கெழவன் மாதிரி வியாக்யானம் பேசிகிட்டு இருக்குறவே" என்ற தனலட்சுமி தன் மகனை அதட்ட

" இல்ல பரவாயில்லை நான் அவர் சொல்ற மாதிரியே உட்காருறேன்" என்ற மான்சி மறுபடியும் எழுந்து சம்மணமிட்டு அமர்ந்து சாதத்தில் கைவைக்க, அதுபோல் அமர்ந்து முதுகை வளைத்து குனிந்து உணவை அள்ளி வாயில் வைக்க அவளுக்கு வாட்டமாக இல்லை, கை எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல் சத்யனை பரிதாபமாக மான்சி பார்க்க

அவனுக்கும் அவளை பார்த்து ரொம்ப பரிதாபமாகத்தான் இருந்தது , பிறகு ஏதோ யோசனை வர பூங்கொடியை பார்த்து " பூங்கொடி அந்த மணையை எடுத்துட்டு வா" என்று சொல்ல அவள் உடனே மணையை எடுத்துவந்து சத்யனிடம் கொடுத்தாள்,

மணையை கீழே வைத்துவிட்டு மான்சியின் இலையை உணவோடு பக்குவமா எடுத்து அந்த மணையில் வைத்து அதை மான்சியின் முன் நகர்த்தி " ம் இப்போ சாப்பிடு உயர்ம் சரியா இருக்கும் , ஆனா இதையே பழக்கப்படுத்திக்க கூடாது எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க சரியா" என்று குழந்தைக்கு சொல்வதுபோல் சொல்லிவிட்டு தனது சாப்பாட்டில் கவனத்தை செலுத்தினான்

ஒரு நிமிஷம் அவனை நெஞ்சு நிறைந்த காதலோடு பார்த்த மான்சி , பிறகு உணவை வாறி வயிற்றுக்குள் அடைக்க ஆரம்பித்தாள், அவளது பசிக்கு அந்த உணவு தேவாமிர்தம் போல இருந்தது , ஆனால் அந்த கிராமத்து காரத்தை அவள் நாக்கு ஏற்றுக்கொள்ளாமல் கண்களில் கண்ணீரை வரவழைத்தது

அதை கவனித்த தனலட்சுமி " ரொம்ப ஒறப்பா இருக்குதாம்மா, இனிமே ஒறப்ப கொஞ்சம் கொறைவா போட்டு சமைக்கச் சொல்றேன்" என்று மருமகளுக்கு சமாதானம் சொன்னாள்

ஒருவழியாக உணவு முடிந்து கைகழுவிவிட்டு இருவரும் கூடத்துக்கு வர , பூங்கொடி தனலட்சுமி துரை மூன்றுபேரும் சாப்பிட அமர்ந்தனர்




மான்சி மறுபடியும் பாயில் உட்காரப் போனாள், " மான்சி இங்கே வா" என்று சத்யன் அழைக்க , மான்சி உடனே அவனருகே வந்தாள்

" இதோபார் மான்சி உனக்கு தரையில் உட்காரத் தெரியலை, அதனால நீ எப்பவும் இந்த கட்டில்ல உட்காரு, ஆனா எங்கப்பா வரும்போது மட்டும் எழுந்துருச்சுடு சரியா" என்று பரிவுடன் சொல்ல, மான்சி அவன் கண்களை பார்த்துக்கொண்டே சரியென்று தலையசைத்தாள்

அப்போது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல் கௌசல்யா வரும்முன் அவளது குரல் தெருவில் கேட்டது யாரையோ வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவள் பேச்சில் தெரிந்து

" ஏய் மதினி என்னா எங்கண்ணனை திண்ணையில படுக்க வச்சுட்ட, இதுக்குத்தான் உன்னைய எட்டு ஜில்லாவுலயும் தேடி கட்டியாந்தமா" என்று கௌசல்யாவின் குரலும்

" அடப்போ புள்ள நீவேற அவுகதா உள்ளாற ரொம்ப வெக்கையா இருக்குன்னு வெளிய வந்து படுத்துட்டாக" என்று ஒரு பெண்ணின் பதில் குரலும் கேட்க

" உள்ளாற வெக்கையா இருக்குன்னா நீ என்ன பண்ற மதினி உன் மேலாக்கை எடுத்து ராவெல்லாம் எங்கண்ணனுக்க வீசிவிடு" என்று அந்த பெண்ணுக்கு பதில் சொல்லிகொண்டு உள்ளே நுழைந்த கௌசல்யா நேராக மான்சியிடம் வந்து

"சாப்பிட்டியா தங்கச்சி" என்று அன்பாக கேட்க , மான்சி ஒரு பெரிய புன்னகையுடன் தலையசைத்து பதில் சொன்னாள்

" ஏன் எங்களை எல்லாம் சாப்பிட்டாச்சான்னு விசாரிக்க மாட்டிகளா மதினி" என்று சத்யன் கேட்க

"அதெல்லாம் நீங்க நல்லாத்தான் சாப்பிட்டுருப்ப எனக்கு தெரியும்,ஏன்னா உனக்குத்தான மாமா இன்னிக்கு வேலை அதிகம், ஆனா என் தங்கச்சிதான் உன்னைய ராவெல்லாம் சுமக்கனும் அதான் மொதல்ல அவுகளை விசாரிச்சேன்" என்று கௌசல்யா வெளிப்படையாக பேச

" அடக்கடவுளே உங்ககிட்ட போய் வாய் குடுத்தேன் பாரு என்னைய சொல்லனும்" சத்யன் நெற்றியில் அடித்துக்கொண்டு அங்கிருந்து அகல,....

" உன்னை யாரு மாமா என்கிட்ட வாய் குடுக்க சொன்னா, இன்னும் கொஞ்ச நேரத்துல என் தங்கச்சிகிட்ட குடு உன் வாயை" என்று அவனுக்கு பதிலடி கொடுத்து நக்கல் செய்த கௌசல்யா " அயித்தேய்" என்று கூப்பிட்டவாறு உள்ளே போனாள்

மான்சி மறுபடியும் பாயிலேயே மண்டியிட்டு உட்கார்ந்துகொண்டாள், அவள் முகத்தில் தீவிர சந்தனை கோடுகள் ஓடியது, நெற்றியை சுழித்தவாறு தீவிரமாக யோசனை செய்தாள்

சிறிதுநேரத்தில் மான்சிக்கு எதிர்புறத்தில் இருந்த அறைக்குள் அடிக்கடி நுழைந்து சத்யன் மான்சி இருவருக்கும் தயார் செய்த கௌசல்யா, மான்சியை அழைத்துப்போய் தோட்டத்தில் குளித்துவிட்டு வேறு உடைமாற்றி வருமாறு சொல்ல

மான்சி சொன்ன சொல் தட்டாமல் அப்படியே செய்தாள், அவள் தலையில் கத்தையாக குண்டு மல்லிகை சரத்தை வைத்த கௌசல்யா அவளை அழைத்துப்போய் தயார் செய்த அறைக்குள் விட்டுவிட்டு முன்பே உள்ளே அமர்ந்திருந்த சத்யனிடம்

" மாமா கஷ்டப்பட்டு உங்களுக்கு பாயெல்லா விரிச்சு பூவெல்லாம் போட்டுருக்கேன், காலையில பாய்க்கு கீழ அரை பவுன் மோதரமாவது வை மாமா" என்று சொல்லிவிட்டு அவள் வெளியேற

மான்சி எந்தவித தயக்கமும் இல்லாமல் உள்ளே நுழைந்து கதவை சாத்திவிட்டு திரும்பி சத்யனை பார்த்தாள் அவன் அங்கிருந்த சிறு ஜன்னலை மூடிக்கொண்டு இருந்தான் ,, அறைக்குள் நடுவே பாய் விரித்து பூக்கள் தூவப்பட்டிருக்க பக்கத்தில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் ஒருடசன் வாழைப்பழமும் இரண்டு ஆப்பிளும் , நாலைந்து துண்டுகள் மைசூர்பாகும் இருந்தது

மான்சி கையில் இருந்த பால் சொம்பை அந்த தாம்பாளத்தின் பக்கத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தவள் ஒருகணம் திகைத்துவிட்டாள், ஆம் சத்யன் அவளை நெருங்கி நின்றிருந்தான், அவன் பார்வையில் மான்சி இதுவரையில் பார்க்காத புரிந்த காதலும் புரியாத தாபமும் நிறைந்திருந்தது ,

சட்டென இரண்டடி பின்னால் போன மான்சி " நான் உங்ககிட்ட பேசனும்" என்றாள் ..........." என்ன பேசனும் இப்படி பாயில உட்கார்ந்துகிட்டே பேசலாமே" என்றான் சத்யன்

" இல்ல நீங்க வேனா உட்காருங்க நான் சொல்ல வந்ததை நின்னுகிட்டே சொல்லிர்றேன்," என்றவள் ஒருகணம் கூட தாமதிக்காமல் " இதோ பாருங்க நீங்க எல்லாரும் நான் ரொம்ப அவசரப்பட்டு கிளம்பி வந்துட்டதா நெனைக்கிறீங்க , எல்லாரையும்விட நீங்க நான் உங்கள் மேல் காதல் இல்லாம வேற எதுக்காகவோ அவசரப்பட்டு வந்துட்டதா நினைக்கிறீங்க அது எனக்கு நல்லா தெரியும், அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன், அதாவது இன்னிலேர்ந்து நாம ரெண்டுபேரும் வெளியில மட்டும்தான் ஹஸ்பண்ட் அன ஒய்ப், இந்த ரூமுக்குள்ள ஜஸ்ட் ப்ரண்ட்ஸ் மட்டும்தான்,"

" இது எவ்வளவு நாளைக்குன்னா இப்போ நான் எப்படி நீங்க இல்லேன்னா எனக்கு எதுவுமே இல்லேன்னு கிளம்பி வந்தேனோ,அதேமாதிரி என்னிக்கு நான் இல்லாம உங்களுக்கு வாழ்க்கையே இல்லைன்னு நீங்க உணர்றீங்களோ அதுவரைக்கும் இதேநிலை நீடிக்கும், என்னோட முடிவுல உங்களுக்கும் இஷ்டமாத்தான் இருக்கும், அதனால நான் அந்த ஓரமா படுத்துகிறேன், நீங்க இங்கேயே படுங்க" என்று படபடவென்று பேசிய மான்சி அந்த அறையின் மூலையிலிருந்த வேறொரு பாயை எடுத்து தரையில் விரித்து படுத்துக்கொண்டாள்

அவள் சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் சத்யன் திக்பிரமை பிடித்து அப்படியே நின்றான்



" ஒரு முன்னெச்சரிக்கை....

" என்றாவது ஒருநாள் என் உதடுகள்..

" உன்னை தீண்டும் என்பதால்.....

" நான் உணவைக்கூட சூடாக உண்பதில்லை!

" உன்னால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ...

" உதட்டால் உணவையும்..

" கண்களால் என்னயும் சாப்பிட
மான்சியின் வார்த்தைகள் ஏற்படுத்தி தாக்கத்தில் இருந்து மீளா முடியாது அப்படியே நின்ற சத்யனின் எல்லாம் உன்னால்தான், உன் வார்த்தைகள் ஏற்ப்படுத்திய காயம்தான் அவளை இப்படியொரு முடிவெடுக்க தூண்டியிருக்கிறது, இப்போ அனுபவி என்று அவன் மனம் அவனை ஏளனம் செய்தது

அவன் மனது போடும் இரைச்சல் வெளியே கேட்பதுபோல் இருந்தது. சிறிதுநேரத்தில் மனதை நிலைப்படுத்திய சத்யன் திரும்பி மான்சியை பார்க்க,.. அவள் தலையனைகூட இல்லாமல் கைகளை மடக்கி தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு ஒருக்களித்து சுருண்டு படித்திருந்தாள், அவள் உயரத்துக்கு காலை நீட்டக்கூட அங்கே இடம் இல்லை

சத்யன் இரண்டே எட்டில் அவளை நெருங்கி குனிந்து “ மான்சி இந்த இடத்துல உன்னால படுக்க முடியாது, பாரு காலை நீட்டக் கூட இடம் இல்லைஎழுந்திரு மான்சி” என்று அவள் தோளைத் தொட்டு சத்யன் சொல்ல

தன் தோளில் இருந்த அவன் கைய*ை விலக்கிய மான்சி படுத்தவாறே “ வேற எங்க படுக்கறது பரவாயில்லை விடுங்க நான் இங்கயே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்ற மான்சி கூற

அய்யோ ப்ளீஸ் மான்சி எழுந்திறேன் நீ காலை நீட்டுனா அடுக்கி வச்சிருக்க பானை எல்லாம் உன்மேல தான் விழும் எழுந்திரு மான்சி” என்று வற்புறுத்தலாக சத்யன் கெஞ்சினான்

கையை ஊன்றி எழுந்த மான்சி “ நான் வேற எங்க படுக்கறது தூக்கம் சொருகிய விழிகளை கசக்கியபடி கேட்க

சத்யனுக்கு அய்யோ என்றிருந்தது , கடவுளே இந்த இடத்தில் இவள் எப்படி தூங்குவாள் என்று எண்ணியவன் தலைக்கு மேல கரகரவென்ற சத்தத்துடன் ஓடிய பழைய பேனை பார்த்தான் இந்த சத்தத்தில் இவனுக்கு தூக்கம் வராது என்றுதான் இந்த அறைக்குள்ளேயே வரமாட்டான்

ஆனால் ஏசியிலேயே வாந்த மான்சி இதில் எப்படி தூங்குவாள் என்று கவலைப்பட்ட சத்யனுக்கு இப்போது மான்சியின் மீது அவர்களுக்காக ஏற்பாடு செய்த இந்த இரவுக்கான எந்த உணர்ச்சியும் இல்லை மான்சியின் நிம்மதியாக உறக்கம் மட்டுமே அவன் நினைவில் இருந்தது

“நீ எழுந்திரு மான்சி” என்று தூங்கி வழிந்த மான்சியின் இரண்டு தோளைத்தொட்டு தூக்கி நிறுத்தினான், பிறகு அவளை நடத்தி வந்து போட்டிருந்த புதுப் பாயில் உட்கார வைத்தான்

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ நான்தான் எதுவும் வேனாம்னு சொன்னேன்ல” என்று மெல்லிய குரலில் மான்சி கூற

அதோ பாயில் அவள் எதிரில் அமர்ந்த சத்யன் “ இதோபார் மான்சி உன்னோட வார்த்தைக்கு நான் கட்டுப்படுறேன், ஆனா அதுக்காக நீ ஒருமூலையிலையும் நான் ஒருமூலையிலையும் படுத்தாதான் உன்னோட உறுதியை செயல் படுத்த முடியுமா என்ன, இதே பாயில் படுத்தாக்கூட நாம கட்டுப்பாடா இருக்கமுடியும், இது பெரிய பாய் இதுல நாலு பேர்கூட படுக்கலாம், நீ அந்த பக்கமா படு நான் இந்த பக்கமா படுத்துக்கிறேன்” என்று அவளுக்கு புரிவதுபோல் எடுத்து சொல்ல

அவளும் தலையசைத்துவிட்டு திரும்பி படுக்க எத்தனித்தனித்தவள் மறுபடியும் அவனை சந்தேகக் கண்ணோடு பார்க்க, சத்யன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கி



“ மான்சி எனக்கும் மனசுக்குள்ள இந்த இரவை பத்திய கனவெல்லாம் இருக்கு, ஆனா நீ சொல்றதும் நியாயமாதான் என் மனசுக்கு படுது, நாம ரெண்டுபேரும் இன்னும் நல்லா ஒருத்தரையெருத்தர் புரிஞ்சுகிட்டு அப்புறமா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம், அதுவரைக்கும் இப்படி தனித்தனிவே இருப்போம் சரியா, இப்போ நீ நிம்மதியா தூங்கு” என்று அவளை தலையை பற்றி தலையனையில் சாய்த்து படக்க வைத்துவிட்டு இவன் மறுபுறம் படுத்துக்கொண்டான்



No comments:

Post a Comment