Thursday, July 23, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 14

கோபத்தில் தன் பென்ஸ் காரை எடுத்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை.குழப்பமான நிலையில் இருந்த அவனுக்கு நினைவுக்கு வந்தது மோகன் மட்டுமே.

மோகன் வீடு அடையாரில் இருப்பது தெரியும். அடையாறு காந்தி நகர் நோக்கி விரைந்த கார்த்திக் மனதில் பல சிந்தனைகள். ஒருவேளை தான் செய்தது சரியோ இல்லை தவறோ.

ட்ராபிக் அதிகரிக்க தொடங்கிய நேரம். காலை நேரம் 9 மணியை நெருங்கி கொண்டிருந்தது. தனது ஆப்பிள் ஐ போனை எடுத்துமோகனை கூப்பிட உடனே போனை எடுத்தான். "மோகன் எங்க இருக்க", 

"வீட்ல தான். அங்கே வர்றதுக்கு தான் கிளம்பி கொண்டு இருக்கிறேன்"

"சரி நீ உன் வீட்லயே இரு. நான் ஒரு 20 நிமிஷத்ல அங்கே வர்றேன்", என்று சொல்ல

"எதுக்கு அவன் இந்த நேரத்ல வீட்டுக்கு வரான்" என்று யோசித்தபடி போனை வைத்தான் மோகன்.

சொன்னபடியே சிறிது நேரத்தில் கார்த்திக் வர, வீட்டு வாசலில் அவனுக்காக காத்திருந்த மோகன் அவனை கைநீட்டி அவன் தோளைஅணைத்தபடி உள்ளே அழைத்து சென்றான். உள்ளே "அம்மா கார்த்திக் வந்துருக்கான். கொஞ்சம் காபி கொண்டு வா. நாங்க ரெண்டுபேரும் என்னோட மாடி ரூம்ல இருக்கோம்" என்று சொல்லி விட்டு மாடிக்கு அழைத்து சென்றான்

"என்ன பிரச்னை கார்த்திக்" என்று கேட்க, கார்த்திக் அவனை நிமிர்ந்து பார்த்த கண்ணில் கண்ணீர் கலங்கி நிற்க பதறி போனான்.

"
என்னஆச்சு ஏன்டா அழறே" என்று பரிவுடன் கேட்க, கண்களை தொடைத்து கொண்டு பேச ஆரம்பித்தான். 

மோகனுக்கோ அவர்கள் இருவரும் மனமொத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று நினைத்திருக்க, கார்த்திக் சொன்ன விபரங்கள் அவனுக்குஅதிர்ச்சியாக இருந்தது.

"கார்த்திக் நீ சொல்றது உண்மையா. ஜனனி நல்ல பெண் ஆச்சே" என்று வருத்ததுடன் கேட்க, அதற்குள் மோகன் தங்கை இரண்டுகாபியுடன் கதவை தட்டினாள். "ஹாய் கார்த்திக் அண்ணா, எப்படி இருக்கிங்கிங்க? ஜனனி அக்கா சுகம் தானே" என்று கேட்க,புன்னகையை பதிலாய் கொடுத்தான்.

நிலைமையை உணர்ந்த மோகன், தன் தங்கை நீலாவை "நீ முதல்ல கிளம்பு, நாங்க கொஞ்சம் முக்கியமான விஷயம் பேச வேண்டிஇருக்கு" என்று சொல்ல, "அது தான் தினமும் ஆபீஸ்ல பேசுறிங்களே, அப்படியும் என்னதான் முக்கியமான விஷயமோ" என்றுதோளை வெட்டி கொண்டு சலிப்புடன்படி இறங்கினாள்

"அவ கிடைக்கிறா, விட்டு தள்ளு". 

"இப்போ நீ சொல்ற விபரத்தை வைத்து பார்த்தால் உங்க இருவருக்கும் நடப்பது ஒரு ஈகோகிளாஷ்தான். வேற ஒன்னும் பிரச்னை இல்லை. இது தீரணும்னா உங்கள்ல யாராவது ஒருத்தர் விட்டு தரணும்". 

"ஏன் நாந்தான் ஒவ்வொரு தடவையும் விட்டு தரணுமா? அவள் விட்டு கொடுக்க மாட்டாளா?" என்று கோபப்பட,

நீ சொல்றது சரிதான் கார்த்திக், ஆனா இப்போ அவ ஒரு உயிர் இல்லை, ரெண்டு உயிர். நீதான் விட்டு கொடுக்கணும். உன்னோடகோபம் நியாயம்தான். ஆனா நீ அதுக்காக வீட்டை விட்டு வெளியே வந்தது தப்பு. இது உங்க ரெண்டு பேருக்கும் இடைல உள்ள பிரச்னை. ரெண்டு பேரும் தான் பேசி தீத்துக்கணும். என்னை கேட்டின்னா, இந்த விஷயத்தை நீ என் கிட்ட சொன்னதே தப்பு. இதுஎன்னோட கருத்து. இதுக்கு மேல உன்னோட விருப்பம்" என்று சொல்ல, கார்த்திக் மோகன் சொன்ன வார்த்தைகளில் உள்ளஉண்மையை உணர்ந்தான்

"மேலும் இந்த நேரத்தில் அழுவதோ, மன கஷ்டபடுவதோ ஜனனியை மட்டும் இல்லை, அவள் வயிற்றில் வளரும் குழந்தையையும்பாதிக்கும். அவள் அவனை பின் தொடர்ந்து வந்ததை அறிந்ததால் கட்டாயம் அவளுக்கு தன் மனது புரிந்து இருக்கும்" என்ற நம்பிக்கைவந்தது

கார்த்திக் முகம் தெளிவடைவதை கண்ட மோகன் அவனை காபி குடிக்க சொல்லி விட்டு வழி அனுப்பி விட்டு திரும்பினான். அவன்அம்மாவோ "என்னடா கார்த்திக் ஒன்னும் பேசாம போறான்" என்று கேட்க "ஒன்னும் இல்லைம்மா வீட்ல சின்ன பிரச்னை, இப்போ சரிஆகிடும்னு நினைக்கிறேன்" என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டான். 

வண்டியை திருப்பி மெதுவாக ஒட்டி கொண்டு சென்ற கார்த்திக் தனது போனில் வந்த அழைப்பை எடுத்து பார்த்தான். ஜனனியின்போட்டோ வர, ஆன் செய்து வண்டியை ஓரத்தில் நிப்பாட்டி "சொல்லு ஜனனி" என்று பேச, அடுத்த முனையில் இருந்த ஜனனி "ஓ"என்று அழ ஆரம்பித்தாள்.




"கார்த்திக் என் மேல கோபப்படாதிங்க, நான் இனிமே உங்கள கிண்டல் செஞ்சு ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். என்னைமன்னிச்சுடுங்க. ஆனா வீட்டை விட்டு மட்டும் போகாதிங்க" என்று திரும்ப அழ, கார்த்திக்கு மனம் சங்கடப்பட்டது

"அழாத ஜனனி இன்னும் பாத்து நிமிஷத்ல நான் வீட்ல இருப்பேன்" என்று சொல்ல

"சரி சீக்கிரம் வாங்க" என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்

வீட்டை நெருங்கி காரை நிறுத்தி விட்டு கார்த்திக் இறங்கி வாசலுக்கு வர , ஜனனி ஹாலில் இருந்து மூச்சிரைக்க ஓடிவந்து அவனைஅணைத்து கொண்டாள். அவள் கண்கள் மூடி இருக்க கண்களில் வழிந்த கண்ணீர் அவள் கார்த்திக் மேல் கொண்ட காதலைசொன்னது. 

கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு பிறகு அவளின் தொடுகையை உணர்ந்த கார்த்திக் தன் மெய் மறந்து போனான். ஒரு வழியாக முதலில் சுய நினைவுக்கு வந்த கார்த்திக் அவளை உலுக்க ஜனனிக்கு ஒரு கணம் தன்னை மறந்து விட்டது புரிந்தது.

அவனின் வலது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து "பாத்திங்களா உங்க பையன் என்ன முரட்டு தனம் பண்ணுறன்னுதெரியுதா?", 

"ஏன் பையனா தான் இருக்கனுமா, ஏன் எனக்கு பிடிச்ச பொண்னா இருக்க கூடாதா?" என்று கேட்க, பதில் சொல்லாமல் மென்மையாகசிரித்தாள்

"இடுப்பு வலிக்குது நான் கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளட்டுடுமா?" என்று கேட்க, அவள் நிலை உணர்ந்து பதறிய கார்த்திக், அவளைமெதுவாக அணைத்து படுக்கை அறைக்கு கொண்டு சென்று உட்கார வைத்தான்

அவனுக்கோ அவளை விட்டு செல்ல மனம் இல்லை, அவன் மனம் அறிந்த ஜனனியோ மனதுக்குள் சிரித்தாள்

அவன் தோள் மீது சாய்ந்து ஜனனி கண்ணுறங்க, அதை அறிந்த கார்த்திக் அசையாமல் உட்கார்ந்து இருந்தான். இடையில் வந்த எந்தபோன்காலையும் எடுக்கவில்லை. 

அவன் இடுப்பை தன் கைகளால் சுற்றி வளைத்து உறங்கிய ஜனனி, திடீர் என்று விழித்து பார்க்க, கார்த்திக் தன் முகத்தையோ பார்த்துகொண்டிருந்தது தெரிந்தது. 

முகத்தில் நாணம் மின்ன "அய்யய்யோ நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல, ஏங்க நீங்க என்னை எழுப்ப கூடாதா?" என்றுகேட்க, "நீ எழுந்து என்ன பண்ண போற" என்று கிண்டலுடன் கேட்டான் கார்த்திக்.


அதற்குள் பூரணி அந்த அறைக்குள் வர, அவர்கள் இருவரும் அன்யோன்யமாக இருப்பதை கண்டு, தலையை குனிந்து கொண்டு "சரி தம்பிநான் அப்புறம் வரேன்" என்று சொல்ல, "இல்ல அக்கா ஒண்ணுமில்லை, ஜனனி தூங்கி எழுந்துரிசிட்டா, நீங்க உள்ளே வாங்க" என்றுசொல்ல அதற்குள் ஜனனி சுதாரித்து எழுந்து "வாம்மா என்ன விஷயம்?" என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்லை ஜனனி வட மாநிலங்கள்ல இருக்கிற கோவில்களுக்கு டூர் போகலாம்னு ஒரு ஐடியா இருக்கு. அது 15 நாள் ஆகும்போல, உன் அப்பாவுக்கும் இப்போ ஆபரேஷன் செய்து கால் ஓரளவு சரி செஞ்சுட்டதலா, ரெண்டு பேரும் போகலாம்னு இருக்கோம்.முருகன் ட்ராவல்ஸ் இந்த மாசம் (ஏப்ரல்) மூணாவது வாரத்லபோக போறாங்க புக் பண்ணலாமா?" என்று கேட்டாள்.

ஜனனி கார்த்திக்கை பார்க்க, "ஜானு நம்ம படத்தோட வேளை இன்னும் பத்துநாள்ல முடிஞ்சுடும். அதுக்கப்புறம் நான் இங்க தான்இருப்பேன். படம் ரிலீஸ் மே 5 , உனக்கு டெலிவரி மே ரெண்டாவது வாரம் தான் சொல்லி இருக்காங்க. இவங்க போயிட்டு ஏப்ரல் கடைசிலதிரும்பிருவாங்க. அதுனால டெலிவரி சமயத்ல நமக்கு பிரச்னை இல்லை. நாம சமாளிச்சுக்கலாம்" என்றுசொல்ல, பூரணி சந்தோசமாகஇருந்தது. 

கார்த்திக் தானே புக் செய்வதாக சொல்லி முருகன் ட்ராவல்ஸ் போன் நம்பர் வாங்கி கொண்டு பேசி முடித்தான். அதற்குள் ஜனனிபாத்ரூம் சென்று மூஞ்சி கைகால் கழுவி வந்தாள்

சந்தோசத்துடன் பூரணி திரும்பி செல்ல, ஜனனி கார்த்திக்கிடம் "ரொம்பநாளாவே எனக்கு ஒரு சந்தேகம்" என்றுஆரம்பிக்க, என்ன என்றுகண்களால் வினவினான்

"நாம எடுக்கிற படமோ தமிழர் வரலாறு பற்றியது இது எப்படி தமிழை தவிர மற்ற மொழிகள்ல ஓடும்" என்று கேட்க, "உன்னோடசந்தேகம் சரி தான்" என்று சொல்லி விட்டு, "இந்த கதைய தமிழர்கள் கதையாக பார்க்காமல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்இந்திய நாகரிகம் எப்படி இருந்தது என்பதை அறியும் ஒரு வரலாறாக பார்க்க வேண்டும்".

"அவதார் போன்ற ஆங்கில மொழி படங்கள் இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து ஓடும் போது, நமது நாகரிகத்தை காட்டும் படம் ஏன்ஓடாது, ஓடக் கூடாது?" என்று எதிர் கேள்வி கேட்டான்

"ஹிந்திதெலுங்குஓகே, அது சரி, அது எப்படி படம் ஆங்கிலத்தில் ஓடும் என்று எதிர்பார்கிறீர்கள்" என்று ஜனனி சந்தேகத்துடன் கேட்க,


"மெல் கிப்சன் இயக்கிய the passion of the christ என்ற படம் பல விருதுகளை வாங்கிய படம், அந்த படம் ஆங்கிலத்தில் எடுக்கபடவில்லை, அதன் வசனங்கள் எல்லாம் ஹீப்ரு, Latin மொழிகளில் அமைந்தது. படத்தில் இங்கிலீஷ் சப் டைட்டில் போட்டு தான்உலகமெங்கும் ஒட்டினார்கள்அது போல தான் நமது படமும்."

"ஆங்கில படத்திலும் சில இடங்களில் தமிழ் வசனங்கள் உண்டு. ஆனால் அவற்றை ஆங்கில சப் டைட்டில் உடன் போட்டு இருப்பதால் எல்லாரும் படத்தை ரசிக்க முடியும். எனக்கு award வாங்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. ஆனால் தமிழர் பெருமையை, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கல்லணை கட்டி காவேரி மண்டலத்தை வளப்படுத்திய நமது கரிகால சோழனை பற்றி இந்த உலகம் அறிய வேண்டும் என்பதே எனது ஆசை" என்று கார்த்திக் பதில் சொன்னான்.

"கடைசியாக ஒரு சந்தேகம். கதையின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களான ஹிப்பலாஸ் மற்றும் டைபீரியஸ் வேடத்தில் நடிப்பதுயார்? யார்?" என்று கேட்க,

"ஹிப்பலாஸ் புது நடிகர், ஆனால் டைபீரியஸ் வேடத்தில் மெல் கிப்சன் (பிரேவ் ஹார்ட்) கிரீக் நாட்டில் வந்து நடித்து கொடுத்தார். அவர் சம்பளம் ஐந்து மில்லியன் டாலர்".அசந்து போனாள் ஜனனி

"இந்த விஷயம் எனக்கு, மோகனுக்கு மற்றும் பட பிடிப்பில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரியும். இதை படம் ரிலீஸ் செய்யும் தினத்தன்றுஅனைவருக்கும் தெரிய வைக்க போகிறோம்" என்று சொல்ல, ஜனனி அடக்க முடியாத சந்தோசத்தில் அவனை கட்டி அணைத்துகன்னத்தில் முத்தமிட்டு "இந்த படம் வெற்றி தான். சந்தேகமே இல்லை" என்று சொல்ல, கார்த்திக் மெல்லிய புன்னகை பூத்தான்.

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ஆடியோ லான்ச் செய்ய, உலகமெங்கும் ஆடியோ ரிலீஸ் ஆனது. படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமேஇருக்க, அனைத்து பாடல்களும் FM ரேடியோக்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டு அனைவர் மனத்திலும் இடம் பெற்றது. ஆங்கில version-ல் பாடல்கள் இல்லை.

ஏப்ரல் 15 ஆம் தேதி பூரணி சதானந்தன் இருவரும் வட இந்திய சுற்றுலா பயணம் செய்ய கிளம்பினர். ஜனனி பூரணியை பார்த்து"அம்மா நீ போய் தான் ஆகனுமா, எனக்கு பயமா இருக்கு" என்று கலங்க, பூரணியும் போக வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

நிலை உணர்ந்த கார்த்திக் "ஜனனி எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. ரெண்டு வாரத்ல திரும்பி வந்துடுவாங்க. டெலிவரி இன்னும் ஒருமாதம் இருக்கு. நான் உன்கூட தான் இருப்பேன். இடைல ஒரு நாள் மட்டும் கொஞ்ச நேரம் லேப் போயிட்டு trailer பிரிண்ட் பார்க்கபோவேன், மத்த நாள் எல்லாம் உன் கூட தான் இருப்பேன். நீ கவலைபடாதே" என்று உறுதி சொல்ல ஒரு வழியாக மனம் சமாதானம்அடைய ஜனனி அம்மா அப்பா இருவரையும் வழி அனுப்பி வைக்க சம்மதித்தாள்.

சதானந்தன் தம்பதியினர் ஊருக்கு கிளம்பிய இரண்டாவது நாள், கார்த்திக் மற்றும் மோகன் இருவரும் படத்தின் trailer வேலையாகஜெமினி கலர் லேப் செல்ல, ஜனனி அவர்கள் இருவரும் மதிய உணவுக்கு திரும்பி வருவார்கள் என்று காத்து கொண்டு இருந்தாள்.

மதியம் மணி இரண்டு ஆக இன்னும் வரவில்லையே என்று தவித்தபடி கார்த்திக் எண்ணுக்கு முயற்சி செய்ய அது பிஸி ஆக இருக்க,கொஞ்ச நேரம் கழித்து போன் செய்யலாம் என்று வைத்து விட்டாள். 

வேலை முடிந்து மற்ற விஷயங்களை பாண்டியனிடம் பேசி கொண்டு இருக்க கார்த்திக்கு இரண்டு missed கால் அவன் வீட்டில் இருந்துவந்து நின்று விட்டது. பாண்டியனிடம் பேசி முடிக்கும் போது மணி 2 .30 , அதற்குள் திரும்ப கால் வர எடுத்தான். 

அடுத்த முனையில் வேலைக்காரி தங்கம்மா பேச, "என்ன?" என்று கார்த்திக் கேட்க, "அய்யா ஜனனி அம்மா பாத்ரூம்ல வழுக்கிவிழுந்துட்டாங்க, நாங்க உடனே டாக்டர் ஹேமாவதியை கூப்பிட்டுருக்கோம், நீங்க உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க" என்று போனைவைக்க, "ஹலோ ஹலோ" என்று கார்த்திக்கு கத்தி கொண்டு இருக்க "டேய் என்னடா ஆச்சு" என்று அருகில் இருந்த மோகன் கையை பிடித்து உலுக்க, சுய நினைவுக்கு வந்தான். 

"மோகன் ஜனனிக்கு ஏதோ அடிபட்டுருக்குன்னு நினைக்கிறேன் இப்போதான் வேலைக்காரி போன் செஞ்சா. டாக்டரை கூப்பிட்டு இருக்காங்க.எனக்கு டென்சனா இருக்கு. இப்போ இருக்கிற நிலைமைல என்னால கார் ஓட்ட முடியாது. நீ கொஞ்சம் என்னை வீட்ல ட்ராப் பண்றியா?" என்று கெஞ்சி கேட்க, மோகன் நிலைமையை புரிந்து கொண்டு கார்த்திக்குடன் கிளம்பினான்.





No comments:

Post a Comment