Tuesday, July 28, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 7

திடுக்கிட்டு எழுந்து முகத்தை துடைத்த பாண்டியன் “ என்ன சத்யா” என்று கேட்க
“மாமா என்னை அங்க கூட்டிட்டு போறயா” என்றான் சத்யன்

“ எங்கப்பா”

“ அதான் மாமா தத்தநேரி சுடுகாட்டில் தேவியை எரிச்சாங்களே அங்கே” என்ற சத்யன் குரலில் ஒரு வெறுமை எதையோ தேடிப் போய் அலைந்து திரிந்து களைத்துப் போன வெறுமை

“ இன்னேரத்து வேனாம் சத்யா காலையில போகலாம் படுத்து தூங்கு ” என்று பாண்டியன் சொல்ல

சத்யன் எதுவும் பேசாமல் எழுந்து நின்றுகொண்டு “ இல்லேன்னா நானே போறேன்” என்று பிடிவாதமாக வெளியே போக கதவை திறந்தான்

“இருடா இருடா நானும் வர்றேன்” என்று எழுந்த பாண்டியன் முருகனையும் விநாயகத்தையும் எழுப்பினார், பரிமளாவிடம் சொல்லிவிட்டு ஆட்டோவில் மறுபடியும் சுடுகாடு வந்தனர்

பாண்டியன் வாட்ச்மேனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு இருக்க, அனைவருக்கும் முன்னால் ஓடிய சத்யன் சரியாக தேவியின் சாம்பல் அருகே போய் நின்றான், அதைச்சுற்றி சுற்றி வந்தவன், திடீரென தேவியின் சாம்பல் வலதுபுறம் சாம்பலை கிளறினான்



“அய்யோ என்னடா பண்ற” என்று வேகமாக பாண்டியன் ஓடி வர, சாம்பலை கிளறிய சத்யன் எதையோ கையிலெடுத்துக் கொண்டு நிமிர்ந்தான், பாண்டியன் அருகே வந்ததும் கையை விரித்துக் காட்டினான்

அது ஒரு முருகன் டாலர் கருகி கறுத்துப் போயிருந்தாலும் உருகிவிடாமல் உருப்படியாக இருந்தது “ இது போன வாரம் நானும் தேவியும் திருப்பரங்குன்றம் போனப்ப வாங்குனது, நான்தான் அவளுக்கு சோத்தாங்கையில கட்டிவிட்டேன் , எனக்கு கழுத்துல அவதான் கட்டிவிட்டா” என்று தன் கழுத்தில் இருந்த முருகன் டாலரை இழுத்து கான்பித்தான்

மறுபடியும் சாம்பல் அருகில் போய் மண்டியிட்டவன் “ அப்போ இது தேவிதான், அதான் டாலர் இருக்குள்ள, ஆனா ஏன் மாமா செத்துப்போனா, ரொம்ப தைரியமா பேசுவாளே மாமா, அவளோட அண்ணுங்க எனக்கு பதிலா இவளை கொன்னுட்டாங்களா, இருக்கும் இருக்கும், இல்லேன்னா ஏதாவது பண்ணிருப்பாங்க இவ ரோசக்காரி மாமா அதான் செத்துட்டா, ஆனா என்னை ஏன் விட்டுட்டு போனா” என்று ஏதேதோ பிதற்றியவனை பார்த்து விநாயகம் கண்ணீர் விட

“அழுவுறியா விநாயகம், அழு அழு, ஆனாக்க எனக்கு அழுகையே வரமாட்டேங்குதுடா இவதான் உன் அண்ணி,” என்று சாம்பலை அள்ளி அவனிடம் காட்டியவன் “ இப்போ வெறும் சாம்பல் விநாயகம்” என்று பேசினான் பேசினான் பேசிக்கொண்டே இருந்தான்

அவனுக்கு மனநிலை பாதித்துவிட்டதோ என்று பயந்துபோன பாண்டியன், அவனை தோள் பற்றி எழுப்பினான் “ சரி தேவிதான் போய்ட்டா, நீ தலை முழுகனும்ல வா வீட்டுக்கு போகலாம்,” என்று தயவாக பேசி அவனை இழுத்தார்

“ வேண்டாம் மாமா நான் இங்கயே இருக்கேன் “ என்று சத்யன் பிடிவாதம் செய்ய மூவருமாக சேர்ந்து அவனை அழுத்திப்பிடித்துக்கொண்டு ஆட்டோவிற்கு வந்தனர், அவன் மனம்விட்டு அழுதால் சரியாகிவிடும் என்று நினைத்தார் பாண்டியன்

ஆனால் சத்யன் அழவேயில்லை, தொணதொணவென்று தேவியைப் பற்றி எதையாவது பேசிக்கொண்டே இருந்தான், மறுநாள் வந்த அவன் அம்மா மகனின் நிலைமையை பார்த்துக் கதறினார், இதற்கெல்லாம் காரணம் தானதாம் என்று தலையிலடித்துக் கொண்டார்

அதன்பிறகு வந்த நாட்களில் சத்யனை பிடித்து வைப்பது பெரும்பாடானது, விட்டால் ஓடிப்போய் சுடுகாட்டில் நின்றான், இல்லையென்றால் வைகையாற்றின் கீழ் பாலத்தின் அருகே தேவியை சந்திக்கும் இடத்தில் இருப்பான், முருகனும் பாண்டியனும் சத்யனை தேடுவதே வேலையாக இருந்தது,..

சத்யனுக்கு புத்தி பேதலிக்க ஆரம்பித்து விட்டதாக பயந்தார்கள்,
எல்லோருமே பாண்டியன் வீட்டில்தான் தங்கியிருந்தனர், தேவியின் குடும்பத்தாரால் ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்று பயந்துபோய் பாண்டியன் அனுப்ப மறுத்தார்

தேவி இறந்த பதினோராம் நாள் சத்யனுடன் ஒரு நாள் வாழ்ந்தவள் என்ற காரணத்தால், வைகையாற்றில் ஐயரை வைத்து தேவிக்கு இறுதிகாரியம் செய்தார் சத்யன் அம்மா, தேவியின் அஸ்தியை சத்யனின் கையில் கொடுத்து ஆற்றில் கரைத்து விட்டு தலைமுழுகி தாலி கட்டாத மனைவிக்கு காரியம் செய்தான் சத்யன்

சத்யனை பார்க்க வந்த அவன் பெரியப்பா மகள் சத்யனின் உடன்பிறவாச் சகோதரி, ஜெயந்தி, தனது தோளில் துக்கி வளர்த்த தனது தம்பியின் அவல நிலையை பார்த்து கண்ணீர் விட்டு சத்யனை தன்னுடன் அழைத்துப் போவதாகவும், அவனை நல்ல மருத்துவரிடம் காட்டி சரிசெய்து அனுப்புவதாக தன்னுடைய ஊரான திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர்க்கு அழைத்து வந்தாள்

சத்யனின் குடும்பம் கொஞ்சநாள் தங்களுடனே இருக்கட்டும் என்று சத்யனின் சித்தி அவர்களை திருச்சூர்க்கு அழைத்துப் போய் சத்யன் தம்பி விநாயகத்துக்கு அவன் சித்தப்பா தயாளன் தான் வேலை செய்த அப்போல்லோ டயர்சில் கடைநிலை ஊழியனாக வேலை வாங்கி கொடுத்தார்

சத்யனை அழைத்து வந்த ஜெயந்திக்கு சத்யனை பிடித்து வைப்பது பெரும்பாடாக இருந்தது அவளுடைய ஒரே மகன் பத்து வயது கௌதமனை சத்யனுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் அவனை வைத்து சத்யனை பிடித்துவைத்தார்கள்

ஒரு கட்டத்தில் சத்யனின் நடவடிக்கைகள் பயத்தை ஏற்ப்படுத்த, அவனை வேலூர், அடுக்கம்பாறை பாகாயம் அரசு மனநல மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டான், பலவிதமான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒருமாத காலம் மருத்துவமனையிலேயே இருந்தான் சத்யன்

மருந்தும் முறையான மருத்துவ ஆலோசனைகளும் சத்யனை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டது, தேவியின் கொடுமையான சாவு அவன் மனதில் பதிய ஆரம்பித்தது, அதன்பிறகு நடந்தவைகளை நினைத்து பார்க்க முடியவில்லை அவனால்

பகலெல்லாம் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வரும் சத்யன், இரவுநேரங்களில் தேவியை நினைத்து கண்ணீர் விட்டான், அவனுடைய இளவயதும் ஆரோக்கியமான உடலும் அவனை சீக்கிரமே மனநோயின் பிடியிலிருந்து மீட்டது, சில வருடங்களுக்கு மாத்திரைகளை தொடரவேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் தேவியை சந்தித்த இடங்களுக்கு சில வருடங்களுக்கு செல்லக்கூடாது, என்ற நிபந்தனையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தான் சத்யன்

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்ட நிலையில், சத்யனிடம் கட்டியிருந்த உடை கூட அவன் சகோதரி வாங்கிக்கொடுத்ததாக இருந்தது, அவனுக்கென்று எதுவுமேசாத்தியமில்லாத நிலையில் வேலை தேட வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது

அவனை வெளியே வேலைக்கு அனுப்பிவைக்க விருப்பமில்லாத ஜெயந்தி தனது குடும்பத்தினர் நடத்தும் லாரிகளில் க்ளீனராக வேலைக்கு அனுப்பினாள் . பல ஊர்களுக்கு சுற்றும் அந்த வேலை சத்யனுக்கும் பிடித்துப்போக லாரி சம்மந்தப்பட்ட அனைத்தையும் ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டான்

மாத்திரைகளை விடாமல் சாப்பிட்டு பாகாயம் மனநல மருத்துவமனைக்கும் அடிக்கடி போய் பரிசோதனை செய்துகொண்டான்

அவன் அம்மாவும் மதுரைக்கே வந்துவிட. அவன் தம்பி விநாயகமும், அவர்களின் பரம்பரை தொழில் பழக்கடை வைத்து வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்தான்,

அவனுடைய இருப்பத்திமூன்றாவது வயதில் ஜெயந்தியின் கணவர் ஏழுமலையின் ஆலோசனைப்படி ஒரு பழைய லாரியை வாங்கி புதுபித்து டிரைவரை வைத்து ஜெயந்தி டிராண்ஸ்போர்ட் என்று ஆரம்பித்தான்,

அவன் தம்பி விநாயகம் இளவயதிலேயே தன்னுடன் முன்பு வேலை செய்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டான். தம்பியின் திருமணத்திற்கு கூட சத்யன் மதுரைக்கு போகவில்லை

அடிக்கடி பாண்டியன் மட்டும் அவனை வந்து பார்த்துவிட்டு போவார், தேவியின் நினைவுகளில் இருந்து வெளியே வரமுடியாத சத்யன் மது பானத்தின் உதவியை நாடினான், சத்யனுக்கு குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது

அந்த மோட்டார் தொழில் அவனுக்கு கைகொடுக்க அடுத்த இரண்டு வருடங்களில் நான்கு பழைய லாரிகள் சேட்டின் பைனான்ஸில் வாங்கினான், லாரிகள் நன்றாக ஓட வருமானம் பெருகியது. ஒருகட்டத்தில் பத்து டயர் லாரிகள் பெருகி ஆறு டயர் லாரிகளின் மவுசு குறைந்தது

அடுத்தடுத்து நஷ்டம் வரவே லாரிகளை விற்றான் சத்யன், பிறகு நண்பர்களின் ஆலோசனையின் பேரில் பிரபல டூவீலரின் டீலர்ஷிப் எடுத்து நடத்தினான், அதுவும் நல்ல லாபம் வந்தது, சத்யன் கைவைத்தால் அது பணமாகும் என்பதுபோல் முன்னேறினான்

எத்தனை வந்தாலும் தேவியின் நினைவுகளை அவனால் மறக்கமுடியவில்லை, இரவு நேரங்களில் அவளின் நினைவுகள் வாட்டி வதைத்தது. சத்யன் இறுதியாக அதற்க்கும் ஒரு வழிகண்டு பிடித்தான், அதாவது தேவியுடன் கற்பனையாக வாழ்வது என்று

அதேபோல் ஒரு இரவு கற்பனையில் வாழ்ந்து பார்த்தான், ரொம்ப இதமாகவும், இன்பமாகவும் இருந்தது, சொர்கமே தன் அருகில் இருப்பது போல உற்சாகமாக இருந்தது, தேவியின் நினைவில் நிறைய கவிதைகள் புனைந்தான், கதைகள் எழுதினான், இப்படியே வருடங்கள் கழிந்தன, சத்யனுக்கு வயது முப்பது ஆனது

அவனுடைய கனவு வாழ்க்கையின் எதிரொலி நிகழ்காலத்தில் தெரிந்தது, முன்பைவிட அதிகமாக தொழில் முன்னேறினான் சத்யன் 

அதன்பிறகு சத்யனின் வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லாமல் முன்னேறிக்கொண்டு இருந்தான், அவனுடைய முன்னேற்றத்தை தாய் கண்டு பூரித்தார், சகோதரி வாழ்த்தினாள், சகோதரன் பெருமைப்பட்டான், ஆனால் முன்னேற்றத்தில் முகம் மலரு அவனை அணைத்து தடவி ஆறுதல்படுத்தி கொஞ்சி ரசிக்கத்தான் ஆள் இல்லை,

ரொம்பவும் வெறுமையாக இருந்தது சத்யனின் வாழ்க்கை, அந்த வெறுமையை போக்க மது அவனுக்கு உதவியாக இருந்தது, இவனுடைய மது பழக்கத்தை ஜெயந்தி கண்டிக்க, அக்கா வீட்டில் இருப்பது சத்யனுக்கு இடைஞ்சலாக இருந்தது, தனியாக தங்கிக்கொள்ள முடிவு செய்து சகோதரியை விட்டு வெளியே வந்தான்

தனது கடையில் வேலை செய்யும் வெளியூர் பசங்க மூன்றுபேருடன் தனியாக வீடு எடுத்து தங்கினான், நாட்கள் செல்ல செல்ல சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடிபெயர்ந்தான், ஐ டென் கார் வாங்கினான், வசதி பெருகியது, ஆனால் வாழ்வில் வளமில்லை,

ஆனால் ஜெயந்தி அவனை விட்டு விலகவில்லை, சனி ஞாயிறுகளில் தனது மகனுடன் சத்யன் வீட்டுக்கு வந்துவிடுவாள், மகன் கௌதமுக்கு லீவு விடும்போதெல்லாம் மாமனை பார்க்க வந்துவிடுவான் சத்யனுக்கு தனது அக்கா மகனிடம் மிகுந்த பாசம் இருந்தது, எதையும் அக்காவின் ஆலோசனை படியே செய்தான் ...

சொந்தமாக வாங்கிய இவ்வளவு பெரிய வீட்டில் விளக்கேற்ற கூட ஒரு பெண்ணில்லை என்று அம்மா சத்யன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் புலம்பினார், தம்பிக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கு இவனுக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று கேள்வி கேட்ட சொந்தகளுக்கு அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை

சத்யனின் தீவிரமான குடி பழக்கம் அவருக்கு அதிர்ச்சியை தர, ஜெயந்தியுடன் சேர்ந்து அவசரஅவசரமாக சத்யனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள், எந்த பெண்ணும் சத்யனுக்கு பொருத்தமாக இல்லை, ஒன்று ஜாதகம் பொருந்தவில்லை, இல்லையென்றால் அவனுடைய உயரத்துக்கு பொருத்தமாக இல்லை, எடுத்த முயற்ச்சி எல்லாம் தோல்வியில் முடிந்தது

சத்யனும் திருமணத்தில் அதிகமாக விருப்பம் காட்டவில்லை, அவனுக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் திருமணம் செய்ய விருப்பம் இல்லை, காரணம் கனவில் தேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் தனக்கு நிஜத்தில் தேவி அல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருப்தியாக தாம்பத்யத்தில் ஈடுபட முடியுமா என்று பலத்த சந்தேகம் இருந்தது, இன்னும் தனக்கு மனநலம் சரியாகிவிட்டதா என்ற சந்தேகமும் சத்யனுக்கு இருந்தது

அதோடு அவன் திருமணமே செய்துகொள்ளாமல் தனது தாயாரை பழிவாங்க நினைத்தான், தனது தம்பியின் காதலை உடனே ஏற்றுக்கொண்டு திருமணம் நடத்திவைத்த அம்மா, அன்று ஒரேயொரு நிமிடம் யோசித்து தேவியையும் தங்களுடன் அழைத்துச்சென்றிருந்தால் தான் தேவியை இழந்திருக்கமாட்டோம் என்று உறுதியாக நம்பினான்

சத்யனுக்கு பாண்டியன் மீதும் மனக்குறை இருந்தது, தனது வாழ்க்கை சூன்யமானதற்கு அவரும் ஒரு காரணம் என்று நம்பினான்,

பாண்டியனின் பெற்றோர் பரிமளாவை ஏற்றுக்கொண்டு பாண்டியன் குடும்பத்தை சொந்த ஊரானா விருதாச்சலத்துக்கே அழைத்துப்போய்விட்டார்கள், அங்கே தனது சொந்த கிராமத்தில் பாண்டியன் முழுநேர விவசாயியாக மாறிவிட்டார், பூர்வீக நிலத்தில் செழுமையாக விவசாயம் செய்து இன்னும் நிலங்களை வாங்கினார், ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சத்யனை வந்து பார்க்க மட்டும் தவறுவதில்லை

தன் நிலத்தில் விளைந்ததை எடுத்துக்கொண்டு அடிக்கடி சத்யனை பார்க்க வரும் பாண்டியன் சத்யனுக்கு தன்மீது அவனுக்கு கோபம் இருப்பதை உணர்ந்து “ சத்யா நான் காதலிச்சப்ப எனக்கு என்னோட காதல் தான் பெரிசா தெரிஞ்சுது., ஆனா கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகளை பெத்தப் பிறகு, எனக்கு உன்னோட காதல் பெரிசா தெரியலை உன் உயிர்தான் எனக்கு பெரிசா தெரிஞ்சுது, ஏன்னா உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் மகன் உதயா தான் ஞாபகத்துக்கு வருவான், நீ எனக்கு மூத்த மகன் மாதிரிடா” என்று பலமுறை சத்யனுக்கு விளக்குவார்

அந்தநேரத்தில் “ சரி விடு மாமா எனக்கு யார் மேலயும் கோபமில்லை” என்று அவருக்கு ஆறுதல் சொல்லி நன்றாக கவனித்து அனுப்பினாலும், மறுபடியும் மனம் தொட்டாச்சிணுங்கியாக பழைய சம்பவங்களில் உழலும்

சத்யன் அம்மாவுக்கு தனது பேரன்களை விட்டுவிட்டு வர மனமில்லா விட்டாலும் எப்போதாவது சத்யனை பார்க்க வேண்டும் என்று வரும் அம்மாவிடம் சத்யன் அதிக அன்பு வைத்திருந்தாலும், குடித்துவிட்டு வரும் நாட்களில் அவனையும் அறியாமல் மனதில் இருப்பதை கொட்டிவிடுவான்,

அதற்காக அம்மா சொல்லும் பாசத்தின் அடிப்படையிலான காரணங்களை நம்ப மறுத்தான், இதனால் மனசு சங்கடப்பட்டு கண்ணீர் விடும் அம்மா, ஒருமாதம் சத்யனுடன் இருக்க வந்துவிட்டு, ஒரே வாரத்தில் கிளம்பி விடுவார்கள்

ஏதேதோ காரணங்கள் சொல்லி பெண் பார்பதை தவிர்த்து வந்த சத்யனுக்கு ஒரு விபத்து நடந்தது, ஒரு நாள் தனது பைக்கில் ஒரு வேளையாக காஞ்சிபுரம் சென்றவன் வரும்போது அதிகமாக குடித்துவிட்டு பைக் ஓட்டி வந்தான் வரும் வழியில் முன்னால் சென்ற மினி வேனில் பைக் மோதி சத்யனு வலதுகால் எலும்பு முறிந்து உடைந்து தொங்கியது கால்,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து உடைந்த காலை இணைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான், அதன்பிறகு தான் அவன் எப்படிப்பட்ட ஒரு சூன்யமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறான் என்று புரிந்தது, கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் நடக்கவே முடியாத சூழ்நிலையில் தனது அன்றாட தேவைகளுக்கு கூட அடுத்தவர் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை,

அவன் தாயும் சகோதரியும் அவனை சுத்தம் செய்யும்போது உடல் கூசி கண்ணீர் விட்டான் தன்னைப்பெற்ற அம்மா சிறு குழந்தைக்கு செய்வதுபோல் இவனுக்கு பணிவிடைகள் செய்வது கண்டு மனம் குமுறினான், காயத்தால் ஏற்பட்ட வலியும், மற்றவர்களின் பணிவிடையால் ஏற்றப்பட்ட குற்றவுணர்ச்சியும் சத்யனை ரொம்பவே தனிமைப்படுத்தியது

இவனது மனநிலையை புரிந்துகொண்ட அவனது நண்பர்கள் சத்யனை தாங்கள் கவனித்துக் கொள்வதாகவும் நீங்கள் மதுரைக்கு போங்கள் என்று சத்யன் அம்மாவிடம் வற்புறுத்தி சொல்ல, ஜெயந்தியிடம் சொல்லிவிட்டு சத்யன் அம்மா அரைமனதோடு மதுரைக்கு போனார்கள்

தனது வாழ்க்கையில் ஒரு பெண் எவ்வளவு அவசியம் என்பதை சத்யன் உணர ஆரம்பித்தான், மனைவி என்று ஒருத்தி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது, துன்பம் வரும்போது தான் தனக்கொரு துணை அவசியம் தேவை என்பதை உணர்ந்தான்



மருத்துவரின் ஆலோசனை கேட்டு நிச்சயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற உறுதி அவனுக்குள் எழுந்தது, அதன்பிறகு எழுந்து நடமாட ஆரம்பித்ததும் , அக்கா ஜெயந்தியிடம் தனது திருமண ஆசையை சொன்னான் சத்யன், அவனாகவே திருமணத்திற்கு கேட்டவுடன் ரொம்ப சந்தோஷப்பட்ட ஜெயந்தி தம்பிக்கு தீவிரமாக பெண் தேடினாள்

திருமணத்திற்கு சத்யன் போட்ட கன்டிஷன் இரண்டே இரண்டுதான்,.. பெண் அதிகம் படிக்காதவளாக இருக்கவேண்டும், அதற்கு காரணம் அவனுக்கு காலில் அடிபட்டு வீட்டில் இருந்த நாட்களில் அவனுக்கு அறிமுகமான சில படித்த பெண்களின் நடவடிக்கைகளால் மனம் வெறுத்து போயிருந்த சத்யன், படித்த பெண் தனது வாழ்க்கையில் நுழைந்தால் முதலில் தனது குறைகளைத்தான் சுட்டிக்காட்டுவாள் என்ற பயம் தான் சத்யன் படிக்காத கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தான்

அடுத்தது தன்னுடைய நிலைமையை பெண்ணிடம் அவனே சொல்லவேண்டும், இவனுடைய குறைகளை புரிந்துகொண்டு சத்யனை திருமணம் செய்துகொள்ள அந்த பெண்க்கு எந்த தயக்கமும் இல்லை என்று தெளிவாக தெரிந்த பிறகே திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான்

அதன்பிறகு சத்யன் தனது அக்காவுடன் பல பெண்களை போய் பார்த்தான், அத்தனையும் பல காரணங்களால் தட்டிப்போனது,

ஆனால் இரவு நேரங்களில் தேவியின் நினைவில் வாழ்வதை மட்டும் சத்யன் மாற்றிக்கொள்ள வில்லை, மாற்றவும் முடியவில்லை, நாளடைவில் இதுவும் ஒருவித மனநோய் தான் என்பதை உணர்ந்தான், இதேநிலை திருமணத்திற்கு பிறகும் நீடித்தால் அது நல்லதில்லை என்று புரிந்தது. திருமணத்திற்கு பிறகு மனைவிக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தான்

அம்மா, சகோதரிக்கு தெரியாமல் மறுபடியும் பாகாயம் மனநல மருத்துவமனை சென்ற சத்யன் மருத்துவரிடம் தனது நிலைமையை சொன்னான். அவனை பலவருடமாக கவனித்து வரும் டாக்டர் என்பதால் சத்யனின் நிலைமையை சரிவர புரிந்துகொண்டார்

பல பரிசோதனைகளுக்கு பின்னர் சத்யன் திருப்திகரமான குடும்ப வாழ்க்கைக்கு தகுதியானவன் என்றாலும், அவனுடைய மனதில் மனைவியாக இருக்கும் தேவியை விட்டுவிட்டு இன்னோரு பெண்ணை சத்யன் நாடவேண்டும் என்றால், அதற்கு சில பயிற்சிகளை சொன்ன டாக்டர் இரவில் மட்டும் எடுத்துக்கொள்ளும் சில மாத்திரைகளையும் எழுதி கொடுத்தார்

டாக்டர் சொன்னபடி தன்னிடம் சிறியதாக இருந்த தேவியின் படத்தை பெரியதாக்கி பூஜை அறையில் மாட்டினான், நல்லநாளில் தேவியை தெய்வமாக நினைத்து பூஜை செய்தான், தினமும் ஆபிஸ்க்கு சொல்லும்போது அவள் படத்தை தொட்டு வணங்கிவிட்டுத்தான் போவான், மனதில் காதலியாக மனைவியாக இருக்கும் தேவியை தெய்வமாக மாற்றிக்கொள்ள முயன்றான், அதில் வெற்றிபெற்றானா என்று அவனுக்கு இன்னும் புரியாத குழப்பமாகவே இருந்தது,.. இரவில் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் மது அருந்துவதை குறைத்தான்,

மதுரையில் இருந்த விநாயகம் சொந்தமாக வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் வைத்துவிட்டு தனது அண்ணணை அழைக்க வந்தான், தம்பியின் வளர்ச்சி சத்யனுக்கு சந்தோஷத்தை கொடுக்க, நிச்சயம் மதுரை வருவதாக சத்யன் உறுதியளித்து தம்பியை அனுப்பினான்

கிரஹப்பிரவேசம் நடக்கும் நாளும் நெருங்க சத்யன் ஜெயந்தி குடும்பத்துடன் தனது காரில் மதுரைக்கு கிளம்பினான், விநாயகம் வாடகைக்கு இருந்த வீட்டில் தங்க சத்யன் மட்டும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினான், காரணம்’ கிரஹப்பிரவேசத்திற்கு வருகின்ற சொந்தங்களின் கேள்விகளில் இருந்தும் பழையவற்றை ஞாபகப்படுத்தும் பரிதாபமான பார்வைகளில் இருந்தும் தப்பிக்கத்தான் இந்த ஏற்பாடு,

பகலில் தம்பி வீட்டுக்கு போய் பெரியப்பா என்று தாவும் பிள்ளைகளுடன் விளையாடினான், இரவில் ஹோட்டல் அறையில் வந்து பழைய நண்பர்களுடன் சந்தோஷமாக குடித்து பொழுதை போக்கினான்,

கிரஹப்பிரவேசத்திற்கு பாண்டியனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது, விசேஷத்திற்கு வந்த பாண்டியன் சத்யனை ஹோட்டல் அறையில் வந்து சந்தித்தார்,

முருகனுடன் உற்சாகமாக பேசி அவன் குடும்பத்தை பற்றி விசாரித்து கொண்டிருந்த சத்யன் அறையின் கதவு தட்டப்படுவதை உணர்ந்து கதவை திறந்தான் , அறைக்கு வெளியே பாண்டியனை பார்த்ததும் சத்யனுக்கு உற்சாகம் பொங்க “ ஓய் மாமு” என்று அணைத்துக்கொண்டான்

அவரின் கையைப்பிடித்து உள்ளே அழைத்து வந்த சத்யன் “ என்னா மாமா இப்பல்லாம் என்னை பார்க்க வர்றதே இல்ல, ரொம்ப பெரிய விவசாயி ஆயிட்டீங்களா” என்று கேலி பேசியபடி அவரை சோபாவில் உட்கார வைத்து “ அக்கா, உதயா, அம்மு எல்லாரும் எப்படி இருக்காங்க மாமா, அக்காவையும் கூட்டிக்கிட்டு வர்றதானே மாமா” என்று சத்யன் சம்பிரதாயமாக விசாரித்தான்

சோபாவில் உட்கார்ந்த பாண்டியன் “ எல்லாரும் நல்லாருக்காங்கப்பா, எங்க சத்ய முன்ன மாதிரி விவசாயத்தில் அவ்வளவா வருமானம் இல்லை, வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கு, உதயா வேற இஞ்சினியரிங் மேல் படிப்பு படிக்கிறான், நம்ம அம்மு இந்த வருஷம் தான் எம் எஸ் சி முடிச்சுது, இவங்க படிப்புக்கு செலவு பண்ணவே எனக்கு சரியா இருக்குப்பா” என்று பாண்டியன் சலித்தபடி பேசினார்

அதன்பிறகு முருகன் சத்யன் பாண்டியன் மூவரும், நிறைய பேசியபடி, குடிக்க ஆரம்பித்தனர், பழைய கதைகள் நிறைய பேசினார்கள், ஆனால் பாண்டியனும் முருகனும் ரொம்ப கவணமாக தேவியை பற்றிய பேச்சை தவிர்த்தனர்....

பாண்டியனுடைய பேச்சில் அவர் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறார் என்று சத்யனுக்கு புரிந்தது, ஆனால் தான் உதவி செய்தால் அதை வாங்க மாட்டார் என்பதும் சத்யனுக்கு தெரியும்

“ ஏன் மாமா அம்மு படிப்பு முடிச்சிட்டு என்ன பண்ணறா?” என்ற கேள்வியுடன் குடும்ப நிலவரத்தை அறிந்துகொள்ள முயன்றான்

“ விருதாச்சலத்துலயே ஒரு கான்வென்ட் ஸ்கூலுக்கு டீச்சரா போகுது சத்யா, வெறும் ஆயிரத்திஐநூறு குடுக்குறாங்க, போக வர பஸ் சார்ஜே சரியாப்போகுது, வேனாம்மா அலையாம வீட்டுலயே இருன்னா கேட்கமாட்டேங்குது, படிச்சிட்டு என்னால வீட்டுல சும்மா இருக்க முடியாதுன்னு சட்டம் பேசுது, அவ குணம்தான் உனக்கு தெரியுமே சத்யா, அதான் சரி பொழுதுபோக்கா போய்ட்டு வரட்டும்னு அனுப்புறேன்”என்றார் பாண்டியன்

“ சரி போகட்டும் மாமா, ஆனா மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு அடிப்படையில் பதிவு பண்ணி வைக்கவேண்டியது தானே” என்று சத்யன் கேட்க

“ அட நீவேற அதெல்லாம் சீனியாரிட்டி படிதான் வேலை கிடைக்கும், ஏற்கனவே பதிவு பண்ணவங்க லட்சக்கணக்கில் வெயிட் பண்றாங்க, நம்ம அம்மூவுக்கு வேலை கிடைக்க எப்படியும் அஞ்சாறு வருஷமாவது ஆகும், அதுவரைக்கும் இப்படியே எங்கயாவது போய்ட்டு வரட்டும், வேறென்ன பண்றது ” என்று சிகரெட்டை புகைத்தபடி பாண்டியன் விபரம் சொன்னார்

நம்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும், இவ்வளவு மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்ற செய்தி சத்யனுக்கு வருத்தத்தை அளித்தது

சிறிதுநேரம் யோசனையாக இருந்த சத்யன், அவருக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் “ நீங்க சொல்றது சரி மாமா, எதுக்கும் அம்முவோட சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் என் ஆபிஸ் அட்ரஸ்க்கு கூரியரில் அனுப்புங்க, அந்த பக்கம் நிறைய காலேஜ் இருக்கு அதுல ஒரு இஞ்ஜினியரிங் காலேஜ் கட்டும்போது நம்ம லாரிங்க தான் ரெகுலரா சிமின்ட் ஓட்டுச்சு, அந்த வகையில அந்த காலேஜ் நிறுவனர் எனக்கும் ஜெயந்தி அக்கா வீட்டுக்காரர்க்கும் ரொம்ப பழக்கம், அடிக்கடி லயன்ஸ் க்ளப்பில் பார்ப்பேன், அவர்கிட்ட அம்மூவோட சர்டிஃபிகேட்ஸ் காட்டி ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணமுடியுமான்னு பார்கிறேன்” என்று சத்யன் சொன்னதும்

“அய்யோ அவ்வளவு தூரத்தில் எங்கப்பா போய் தனியா தங்கும்” என்று பாண்டியன் கவலையாக கேட்டார்

" என்னா மாமா இப்படி சொல்லிட்டீங்க, அக்கா தனியாத்தான இருக்கு, கௌதமும் சென்னையில படிக்கிறான், மாமா வாரத்துல ரெண்டு நாள்தான் வீட்டுக்கு வருவார், அக்கா கூட தங்கட்டும், இல்லேன்னா அந்த காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்க ரெண்டு மூனு பேரா தனியா வீடு எடுத்து தங்கியிருக்காங்க, அந்த மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்யலாம், நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம் மொதல்ல அவ சர்டிபிகேட்டை எனக்கு அனுப்புங்க” என்று பாண்டியனுக்கு விளக்கமாக சத்யன் எடுத்து சொன்னதும், பாண்டியன் முகத்தில் தயக்கம் விலகி நிம்மதி தெரிந்தது

“ சரி சத்யா சீக்கிரமே அனுப்பி வைக்கிறேன்” என்று சந்தோஷமாக கூறினார்
அதன்பிறகு கிரஹப்பிரவேசம் முடிந்ததும் பாண்டியன் விருதாச்சலம் கிளம்ப, சத்யன் இன்னும் நாலு நாட்கள் மதுரையில் இருந்து விட்டு அவன் ஊருக்கு வந்தான்

பயணக் களைப்பு தீர்ந்து மறுநாள் அவன் கடைக்கு போய் அவனது ஆபிஸ் ரூமில் சாவகாசமாக அமர்ந்தவனை அவன் பெயருக்கு கூரியர் வந்திருப்பதாக கடைப் பையன் வந்து சொல்ல, சத்யன் தபாலில் கையெழுத்திட்டு அதை வாங்கிக் கொண்டான்

பாண்டியன் தான் அனுப்பியிருந்தார், சத்யன் அறைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்து கவரைப் பிரித்தான், உள்ளேயிருந்த சர்ட்டிபிகேட்டை வெளியே எடுத்துப் பார்த்தவனுக்கு திகைப்பாக இருந்தது,

திகைப்புக்கு காரணம் அதில் பெயர் மான்சி என்று இருந்தது, ஆனால் பாண்டியன் மகளுடையது தான் என்று தெரிய, அப்போ அம்முவோட உண்மையான பெயர் மான்சியா? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்



தனது மொபைலை எடுத்து பாண்டியன் மொபைலுக்கு கால் செய்தான், உடனே எடுத்த பாண்டியன் “ என்ன சத்யா அம்முவோட சர்டிபிகேட் எல்லாம் வந்துருச்சா?” என்று கேட்டார்

அந்த சர்டிபிகேட்டில் இருந்த அம்முவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே “ ம்ம் இப்பதான் வந்துச்சு மாமா, ஆமா அம்முவோட பேரு மான்சியா? இவ்வளவு நாளா எனக்கு தெரியாது மாமா, நான் பேரே வெறும் அம்முதான்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்” என்று சத்யன் சொல்ல

“ ஏம்ப்பா யாராவது வெறும் அம்முன்னு பேரு வப்பாங்களா? அது செல்லமா நாங்க கூப்புட வச்சது, கடைசில அந்த பேரே நெலச்சு போச்சு, எங்களுக்கே மான்சி தான் அவ பேருன்னுறதே மறந்து போச்சு, ஆனா அவ காலேஜ்ல படிச்சப்ப யாருக்கும் மான்சின்னு சொன்னாதான் தெரியும்” என்று பாண்டியன் மகளின் பெயர் காரணத்துக்கு பெரிய விளக்கம் கொடுக்க


No comments:

Post a Comment