Wednesday, July 29, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 12

மான்சியின் அணைப்பில் கிடைத்த சுகத்தை மனதில் அசைபோட்டபடியே படுத்த சத்யனுடைய அன்றாடப் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தேவி வந்து அவனுடைய போர்வைக்குள் படுத்துக்கொண்டாள், எப்போதும் தேவியை அணைத்தபடி சுகமாக உறங்கிப்போகும் சத்யன், அன்று பாதியில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான்

தேவியின் ஞாபகங்களுக்காக இதுபோல ஒரு கற்பனை வாழ்வில் ஈடுபட்டது இன்று தன்னுடைய சுயத்தையே தொலைக்க வேண்டியிருக்கும் என்று சத்யன் இதுவரை நினைக்கவில்லை,, தேவியின் நினைவுகளோடு வாழ்வதை இன்பமாக நினைத்தது எவ்வளவு தவறு என்று சத்யனுக்கு புரிந்தது,, தேவியின் மரணத்தை மறக்க நான் தேர்ந்தெடுத்த வழி ரொம்ப தவறோ என்று ரொம்ப சங்கடப்பட்டான் சத்யன்,



தேவியின் மறைவு எங்கே தன்னுடைய வாழ்க்கையை தின்றுவிட்டு போய்விடுமோ என்ற பயத்தில்தான் இப்படி வழியை சத்யன் தேர்ந்தெடுத்தது,, அதாவது அவளின் மறைவு ஏற்ப்படுத்திய சோகத்தை கற்பனையில் சுகமாக்கிக் கொண்டு இருந்தான், அதாவது பிரிவு எனும் நரகத்தை தவிர்க்க,, கற்பனை எனும் சொர்கத்தை தேர்ந்தெடுத்தான் சத்யன்

ஆனால் அந்த நரகம்தான் இன்று சத்யனை பிற்கால மணவாழ்க்கைக்கு பெரும் பிரச்சனை ஆகிவிடுமோ என்று முதன்முறையாக ரொம்ப பயந்தான் சத்யன்,, இப்போதும் அவன் மனம் தேவியை மறக்க நினைக்கவில்லை,, ஆனால் அதற்காக தேர்ந்தெடுத்த வழிமுறை எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்தது

மான்சியை கட்டியணைத்து முத்தமிட்டு ,, அதனால் ஏற்ப்பட்ட உணர்ச்சிகளின் உச்சத்தை மான்சியிடமே கனவில் புணர்ந்திருந்தால் கூட தப்பில்லை ஏனென்றால் அது மான்சியுடன் அவன் வாழப்போகும் எதிர்கால தாம்பத்தியத்தின் ஒத்திகையாக இருந்திருக்கும்,, ஆனால் இவன் ஆண்மையின் விரைப்பை அடக்கியது தேவி எனும்போது சத்யனின் அடி வயிறு தடதடத்தது,

இத்தனை நாட்களாக சொர்க்கமாக தோன்றிய ஒன்று,, இன்று திக்குத்தெரியாத பெரும் காடாக தெரிந்தது,, இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று புரியாமல் தவித்தான்,, ஒரு விலைமாதிடம் பட்ட அவமானம் மான்சியிடம் ஏற்ப்பட்டால் அத்தோடு உயிரோடு வாழ்வதற்கே அர்த்தமில்லை என்று கலங்கினான் சத்யன்

டேபிளில் இருந்த தேவியின் படத்தை எடுத்து பார்த்தான்,, சத்யனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, தனது வாழ்க்கை வெறும் கண்ணீர் காவியமாகி விடுமோவென்று பயம் வந்தது,, தனது இந்த மனநோய்க்கு என்ன வைத்தியம் செய்வது என்று புரியவில்லை,,

பேசாமல் மான்சியை என் வாழ்வில் இருந்து ஒதுக்கிவிட்டு, இப்படியே வாழ்ந்துவிடலாமா என்று கூட நினைத்தான்,, ஆனால் மான்சி கடைசியாக சொன்ன “ நொண்டின்னு என்னை ஒதுக்கிடாதே மாமா” என்ற வார்த்தைகள் சத்யனின் காதில் ஒலித்தது,

“ அய்யோ கடவுளே, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் பைத்தியக்காரனாவே ஊரை சுத்திகிட்டு இருந்திருக்கலாமே, கடவுளே ஏன் இப்படியெல்லாம் ” என்று சத்யன் வாய்விட்டு அலறினான்

அவன் கண்ணீர் வழிந்து தேவியின் படத்தில் விழுந்தது, சத்யன் தனது கையால் படத்தை துடைத்தான்,, தேவி புன்னகையுடன் சத்யனை பார்த்து சிரித்தாள் “ தேவி நீதான் எனக்கு வாழ வழிசொல்லனும்,, என்னால இதை தாங்கமுடியலை தேவி,, எனக்கு மான்சி வேனும் தேவி,, இனிமேல் அவ இல்லாம என்னால வாழமுடியாது தேவி,, நானே உலகம்னு நெனைச்சுகிட்டு இருக்குற அந்த அப்பாவியை என்னால ஏமாத்த முடியாது தேவி ” என்று சத்யன் தேவியிடம் வேண்டினான்

கலங்கிய கண்களுடன் நெஞ்சில் தேவியின் படத்தை வைத்துக்கொண்டு சத்யன் உறங்க ஆரம்பிக்கும் போது பொழுது விடிய ஆரம்பித்துவிட்டது,,

அன்று காலை கையில் காபியுடன் மான்சிதான் அவனை எழுப்பினாள்,, லேசாக மூடியிருந்த கதவை திறந்துகொண்டு உள்ளே வந்திருக்க வேண்டும் “ எழுந்திரு மாமா மணி ஏழாகுது” என்று மான்சியின் குரல் கேட்ட அடுத்த நிமிடம் கண்விழித்து பார்த்தான்

மான்சி குளித்துவிட்டு தலையில் சுற்றப்பட்ட டவலோட இருந்தாள்,, அவள் நீண்ட கூந்தலின் ஈரம் அவளது தோள்களில் வழிந்து போட்டிருந்த அரக்கு நிற ரவிக்கையை நனைத்திருந்தது, முகத்தில் எந்தவொரு ஒப்பனையும் இல்லாமல் வெறும் நெற்றிப்பொட்டோடு இருந்தாள், எலுமிச்சை நிறத்தில் அரக்கு நிற ரோஜாக்கள் வாரியிறைத்த புடவையில் தோவதையாக நின்ற மான்சியை பார்வையால் பருகினான் சத்யன்

அவன் பார்வை வெட்கத்தைகொடுக்க “என்ன மாமா அப்படி பார்க்கிற இன்னிக்கு எங்கயோ போய் பேசலாம்னு சொன்னியே அதான் காலையிலயே குளிச்சு ரெடியாயிட்டேன்’” என்று மான்சி வெட்கக் குரலில் சொல்ல

இரவு நடந்தவைகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு ஞாபக அடுக்கில் வலம்வர “ ம்ம் போகலாம், கண்டிப்பா போய் பேசித்தான் ஆகனும்” என்ற சத்யன் அவளிடமிருந்து காபியை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு “ நான் பல் தேய்ச்சிட்டு காபிகுடிக்கிறேன்நீ போய் தலையை நல்லா காயவை,, ஈரம் சொட்டுது” என்று அக்கரையுடன் சொன்னான்

சரியென்று தலையசைத்து மான்சி வெளியே போனாள்,, அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை கொடுத்த சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது,, இவளை ஏமாற்ற முடியாது,, இவளுக்கு எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்ளும் மனதிடம் இருக்குமா?, எனது பிரச்சனையை தீர்க்க இவள் ஏதாவது வழி சொல்வாளா? என்று சத்யனுக்கு கவலையாக இருந்தது

குளித்து காலை டிபன் சாப்பிட்டு இருவரும் காரில் கிளம்பும் போது மணி எட்டரை ஆகியிருந்தது,, சத்யன் மான்சியை அழைத்துக்கொண்டு ஒரு மலையடிவாரத்துக்கு போனான்,, ரோட்டி காரை நிறுத்திவிட்டு இறங்கி மான்சியுடன் மரங்கள் அடர்ந்த தனிமையான இடத்தில் அமர்ந்து அவளுக்கும் கைகொடுத்து இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான்

சத்யனை உரசிக்கொண்டு அமர்ந்த மான்சி “ எங்கயோ கூட்டிப்போக போறீங்கன்னு நெனைச்சேன்,, அப்புறம் பார்த்தா இங்க வந்துருக்கீங்க” என்றாள்
தன் கையில் இருந்த மான்சியின் காந்தல் விரல்களை நீவிய சத்யன் “ இந்த ஊர்ல தனிமையான இடம்னா அது இதுதான் மான்சி,, யார் தொல்லையும் இல்லாமல் நிறைய பேசலாம்” என்றான்

“ சரி சொல்லுங்க என்ன பேசனும்,, எனக்கு தெரிஞ்சு நேத்து நைட்டே நாம ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டோம்னு நெனைக்கிறேன்,, இன்னும் பேசறதுக்குஎன்ன இருக்கு மாமா” என்ற மான்சி அவன் வலதுகையை எடுத்து அவன் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள்

சிறிதுநேரம் தயங்கி எங்கெங்கோ இலக்கற்று பார்த்த சத்யன், பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய்,, அவளிடமிருந்த தன் விரல்களை வழுவில் உருவிக்கொண்டு “ மான்சி என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியாது,, ஆனா நீ தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,, அதெல்லாம் உனக்கு சொல்லாம நான் நேத்து உன்னை தொட்டது தப்புதான்,, ஆனா உணர்ச்சிகளுக்கு முன்னாடி யாருமே தூசுதான்,, இன்னும் உன் மனசுல ஆசையையும் ஏக்கத்தையும் உண்டாக்குறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிர்றேன்” என்று சத்யன் பொது மன்னிப்பு கேட்பவன் போல பேச................

“ மாமா கொஞ்சம் இருங்க,,, இப்போ நீங்க என்ன சொல்லப்போறீங்க,, நான் முன்னாடி மனநிலை சரியில்லாம இருந்தவன்னு தானே,, அதுதான் எனக்கே தெரியுமே.,, பத்து வருஷத்துக்கு முன்னாடி தேவி அக்காவை தேடிகிட்டு ஆத்துல பாலத்துக்கு கீழே சுத்தியதையும்,, உங்களை இழுத்துட்டு வந்து கையை காலை கட்டி கார் வச்சு இந்த ஊருக்கு ஜெயந்தி அக்கா கூட்டிட்டு வந்ததையும், நான் என் கண்ணால பார்த்திருக்கேன் மாமா,, அப்புறம் நீங்க மனநல மருத்துவமனையில் இருந்தது, அப்புறமாபலவருஷமா மாத்திரை சாப்பிடுறது,, தேவியக்கா ஞாபகத்தில் குடிப்பது எல்லாமே எனக்கு தெரியும் மாமா,, நீங்க எதுவும் சொல்லவேண்டாம்” என்று மான்சி தெளிவாக தீர்கமாக பேசினாள்



அவள் பேசும் வரை அவள் முகத்தையே பார்த்த சத்யன் “ இல்ல மான்சி இதெல்லாத்தையும் விட எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கு,, அதை சொன்னாத்தான் உனக்குபுரியும்” என்றான்

முகத்தில் குழப்ப ரேகைகள் முடிச்சிட “ இன்னும் என்ன மாமா பிரச்சனை இருக்கு?” என்றாள் மான்சி

அவளின் நேர்ப்பார்வையை தவிர்த்து தலைகுனிந்த சத்யன் “ மான்சி நான் சொல்றதை உன்னால எந்தளவுக்கு புரிஞ்சுக்க முடியும்னு எனக்கு தெரியலை,, ஆனா உனக்கு ஒரு ஆண் எப்படி இருப்பான் என்ன செய்வான்னு தெரியுமா?” என்று கேட்க

இந்த கேள்வியால் மேலும் குழம்பிய மான்சி “ விவரமா தெரியாது, ஓரளவுக்கு தெரியும்” என்று அவளும் தலைகுனிந்து பதில் சொன்னாள்

“ அப்போ சரி நான் சொல்றதை கேளு,, தேவி இறந்ததுக்கு அப்புறமா நான் அந்த ஒரு வருஷமா எப்படியிருந்தேன்னு எனக்கே தெரியாது,, ஆஸ்பிட்டல்ல இருந்து அக்கா வீட்டுக்கு வந்ததும் தேவியோட நான் வாழ்ந்த அந்த ஒருநாள் நினைவு எனக்கு ரொம்ப அதிகமா இருந்தது,, அவகூட அன்னிக்கு நான் அவ்வளவு அன்யோன்யமா இருந்தேன், எந்த பக்கம் பார்த்தாலும் அதே ஞாபகம் எதை செய்தாலும் அதே ஞாபகம்னு ரொம்ப கஷ்டப்பட்டேன்,, அந்த கஷ்டத்துக்கு நானே ஒரு வழி கண்டு பிடிச்சேன்,, அதாவது தினமும் தேவி கூட கற்பனையில் வாழுறதுன்னு முடிவு பண்ணேன், ஒருநாள் இரவு அவளோட கற்பனையில் வாழ்ந்து பார்த்தேன், அது சொர்கத்தை விட எனக்கு சுகமா இருந்தது” என்று சொன்ன சத்யன் நிறுத்திவிட்டு மான்சியை பார்த்தான்

“ இதிலென்ன இருக்கு மாமா,, நம்ம துணையை நினைச்சு கற்பனையில் வாழுறது எல்லாரும் பண்றதுதானே, இதுல குழப்பம் என்ன இருக்கு” என்று மான்சி புரியாமல் கேட்க

“ மான்சி நீ சொல்றது உயிரோட இருக்கிறவங்க கூட நாம சேர்ந்து வாழுற மாதிரி கற்பனை பண்றது, நான் செத்துப்போன தேவிகூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்,, முழுசா சொன்னாத்தான் உனக்கு புரியும்,, இப்போ நான் தினமும் தேவியோட ஒரு புருஷன் பொண்டாட்டியா தாம்பத்யம் நடத்துறேன்,, அதாவது இறந்தவள் கூட குடும்பம் நடத்துறேன்,,கிட்டத்தட்ட எட்டு வருஷமா இது நடக்குது,, தேவியுடன் வாழும் ஒவ்வொரு இரவும் எனக்கு சொர்கமா தெரிஞ்சது, ஆனா இப்போ அதுவே என் வாழ்க்கைக்கு பெரிய பிரச்சனையாருச்சு மான்சி” என்ற சத்யன் நிமிர்ந்து அவள் முகத்தை சங்கடமாக பார்த்தான்

“ ம்ம் எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மாமா நான் புரிஞ்சுக்குவேன்” என்றாள் மான்சி அன்போடு

அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள்அடக்கிய சத்யன் “ மான்சி நான் சொல்றதை வச்சு என்னை தவறா நெனைக்காதே,, என்னை பத்தி எல்லாமே உனக்கு தெரியனும்னு தான் இதை சொல்றேன்,,ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் ப்ரண்ட்ஸ்ங்க கூட ஒக்கேனக்கல் போனேன் அங்கே ஹோட்டலில் ரூம் எடுத்து ரெண்டு நாள் தங்கினோம், அன்னிக்கு நைட் என்கூட இருந்த பசங்க எல்லாம் என்ஜாய் பண்ண பொண்ணுங்களை அரேஞ்ச் பண்ணியிருந்தானுங்க,, எனக்கும் சேர்த்துதான்,, அந்த பொண்ணு என் ரூமுக்கு வந்தப்ப நானும் கொஞ்சம் போதையில் இருந்தேன் ,,

" ஆர்வத்தோட அந்த பொண்ணை நான் தொட்டேன் மான்சி,, ஆனா என் மனசில் இருந்த ஆர்வம் உடலில் இல்லை, எனக்கு அந்த பொண்ணுகூட செக்ஸ் வச்சுக்கவே முடியலை, அதாவது சுத்தமா என்னோட ஆண்மைக்கு எழுச்சியே வரலை, அவளும் என்னன்னவோ பண்ணி பார்த்தா, என்னால கடைசி வரைக்கும் முடியவேயில்லை,, அந்த பொண்ணு என்னை திட்டிட்டு போய்ட்டா” என்றவன் ஒரு பெருமூச்சுடன் ‘’ மான்சி நான் சொல்றது உனக்கு புரியுதா?” என்றான்

தலைகுனிந்திருந்த மான்சியிடமிருந்து “ம்ம் புரியுது” என்ற பதில் மட்டுமே வந்தது

" அதுதான் என்னோட பிரச்சனையே தேவி அல்லாத இன்னொரு பெண்ணை என்னால திருப்தி படுத்த முடியாது மான்சி,, இப்போ என்னோட நிலைமை உனக்கு தெளிவா புரியுமே,, இதுவும் ஒருவகை மனவியாதி தான் மான்சி,, நான் அது நடந்து அடுத்த வாரமே மறுபடியும் பாகாயம் ஆஸ்பிட்டல் போய் எனக்கு ட்ரீட்மெண்ட் பண்ற டாக்டர் கிட்ட நடந்தது எல்லாம் சொன்னேன் மான்சி" என்று சத்யன் சொல்ல

" அதுக்கு டாகடர் என்ன சொன்னாரு " என்று மான்சி ஆர்வமாக கேட்டாள் 

அவளுடைய ஆர்வம் சத்யனை வாட்டி வதைத்தது " அவரும் நான் சொன்னதைத்தான் சொன்னார் மான்சி,, இது ஒருவகையான மனவியாதி தான் நீங்க ஒத்துழைச்சா சரி பண்ணலாம்னு சொன்னார்,, காதலியாகவும் மனைவியாகவும் நினைக்கின்ற தேவியை தெய்வமாக நினைக்கச் சொன்னார்,, சில யோகாசனப் பயிற்சிகளை சொல்லி செய்யச்சொன்னார்,, நானும் கொஞ்சநாளா இதெல்லாம் செய்றேன் மான்சி ஆனா எந்த பலனும் இல்லை,, தினமும் தேவியை நினைக்காமல் என்னால தூங்கமுடியலை,, எங்கே இதாலேயே மறுபடியும் நான் பைத்தியமாகி விடுவேனோ என்று பயமாயிருக்கு மான்சி" என்ற சத்யன் கலங்கிய தனது கண்களை துடைத்துக்கொண்டான்

அவனையே திகைப்போடு பார்த்த மான்சியை பார்த்து " என்னம்மா அதிர்ச்சியா இருக்கா,, இன்னும் சொல்றேன் கேளு நேத்து நைட் உன் கூட அவ்வளவு சந்தோஷமா கிஸ் பண்ணிட்டு நைட் உன் நினைப்போடயே படுத்த கொஞ்சநேரத்தில் தேவியோடத் தான் என்னால எல்லாமே பண்ண முடிஞ்சுது,, இதேநிலை நீடித்தால் அது உனக்கு நான் செய்ற துரோகம் தானே மான்சி,, அதனாலதான் நாம பேசி ஒரு முடிவுக்கு வரனும்னு சொன்னது,,

" உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்னை உயிராய் விரும்புறேன் மான்சி,, ஆனா இப்படி ஒரு பொம்மை வாழ்க்கை வாழ்ந்து உன்னை கஷ்ட்டப்படுத்த விரும்பலை,, உனக்கு நான் வேண்டாம் மான்சி,, நீ வேற யாராவது நல்ல மனநிலையில் இருக்கிறவனா,, நல்லா படிச்சவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ" என்று சத்யன் சொல்லி முடித்துவிட்டு அவள் முகத்தையே பார்க்க

மான்சி எதுவுமே பேசவில்லை,, ஆனால் அவள் முகத்தில் குழப்பமும் இல்லை,, ரொம்ப தெளிவாக இருந்தது கையை தரையில் ஊன்றி தனது ஒற்றை காலை அழுத்தமாக பதித்து எழுந்த மான்சி,, புடவையின் பின்னால் இருந்த தூசியை தட்டிவிட்டு " சரி வா மாமா வீட்டுக்கு போகலாம்" என்றாள்

அவளின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்த சத்யன் " என்ன மான்சி எதுவுமே சொல்லாம கிளம்பிட்ட,, என் விஷயத்தில் உன்னோட முடிவு என்ன அதை சொல்லிட்டு கிளம்பு மான்சி" என்றான்

" என் முடிவுதானே அதை இன்னிக்கு சாயங்காலம் சொல்றேன்,, நீங்க என்னை வீட்டுல விட்டுட்டு ஆபிஸ்க்கு கிளம்புங்க" என்று சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தாள்

வேறு வழியின்றி சத்யனும் அவள் பின்னோடு நடந்துபோய் காரை நெருங்கி அவளுக்கு கதவு திறந்து விட்டு, அவள் அமர்ந்ததும் இவனும் அமர்ந்து காரை கிளப்பினான்

செல்லும் வழியில் சத்யன் மனது பலவாறு குழம்பியது 'ஒருபக்கம் மான்சி தன்னை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்று கடவுளை வேண்டினான்,, இன்னோரு பக்கம் இந்த நல்ல மனம் படைத்த அழகிக்கு நான் வேண்டாம் வேறு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று கடவுளை வேண்டினான்...

அவளின் முடிவுக்காக மாலை வரை காத்திருக்க வேண்டும் என்பதே சத்யனுக்கு கொடுமையாக இருந்தது,,

மான்சியை வீட்டில் விட்டுவிட்டு ஆபிஸ்க்கு போன சத்யனுக்கு,, ஒவ்வொரு நொடியும் நகர்வது கொடுமையாக இருந்தது,, மாலை எப்போது வரும் என்று காத்திருந்து சரியாக ஐந்து மணி ஆனதும் உடனே கிளம்பி வீட்டுக்கு வந்தான்

வீட்டில் அவன் அக்கா ஜெயந்தி வந்திருந்தாள்,, மான்சி அவளிடம் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தாள்,, சத்யன் தனது அக்காவை நலம் விசாரித்து விட்டு உடைமாற்றிக் கொண்டு வந்தான்

சத்யன் வந்ததும் காபி எடுத்து வந்து கொடுத்தாள்,, சத்யன் அவளுடைய பதிலுக்காக ஏக்கத்துடன் அவள் முகத்தை பார்த்தான்

மான்சி *கொடுத்த காபியை உறிஞ்சியபடி தனது சோபாவில் அக்காவின் அருகில் அமர்ந்த சத்யன்,, டிவியை பார்ப்பதும் ஓரக்கண்ணால் மான்சியை பார்ப்பதுமாக இருந்தான்,, ஒரு வேளை இவள் ‘’ எனது முடிவை இன்று மாலை சொல்கிறேன், என்று காலையில் சொன்னதை மறந்துவிட்டாளா?,, இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளே என்று மனதில் எண்ணியபடி காபி குடித்து முடித்தான்

ஜெயந்தியிடம் சிறிது நேரம் குடும்ப விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தவன்,, அடிக்கொருதரம் மான்சியை திரும்பிப் பார்த்தான்,, அவள் இவனை கவணிக்காதது போல டிவியை மும்முரமாக பார்த்துக்கொண்டு இருக்க எரிச்சலடைந்த சத்யன் “ சரிக்கா எனக்கு கொஞ்சம் முக்கியமான மெயில் செக் பண்ணணும் நைட் சாப்பாடு ரெடியானதும் கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு எழுந்து தனது அறைகதவை நெருங்கினான்

“மாமா கொஞ்சம் இருங்க” என்று மான்சியின் குரல் கேட்டதும் சத்யனின் கால்கள் உடனே பிரேக்கடடித்து சடனாக திரும்பியது

என்ன என்று ஆர்வத்தோடு சத்யன் மான்சியை பார்க்க,, “ மாமா காலையில தெருவில் ரோஜாச்செடி வித்தாங்க நானும் கலர் கலரா அஞ்சு செடி வாங்கி மாடியில் பால்கனியில் வச்சுருக்கேன், உங்ககிட்ட ரோஜாச்செடியை காட்டனும்னு நெனைச்சேன்,, வர்றீங்களா மாடிக்கு போகலாம்” என்று மான்சி சிறு புன்னகையுடன் கேட்க

“ ஓ போகலாமே” என்று மறு யோசனையின்றி சத்யன் திரும்ப,,

ஜெயந்தி டிவியை பார்த்துக்கொண்டே “ என்ன சத்தி முக்கியமான மெயில் செக் பண்ணணும்னு சொன்ன,, ரோஜாச்செடி காலையில பார்த்தா போச்சு, இருக்கிற வேலையை பாருடா ”என்று சொன்னாள்

சத்யன் அசடு வழிய அக்காவை ஏறிட்டான்,, உதட்டில் வழிந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு டிவியில் கவணமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்ட ஜெயந்தி “ சரி அவ ஆசையை ஏன் கெடுப்பானேன், போ போய் பார்த்துட்டு வா சத்தி” என்று சொல்ல,,

மான்சிக்கு முன்னே சத்யன் மாடிப்படியை நோக்கி ஓடினான்
அவன் பின்னாலேயே வந்த மான்சி,, ஏன் இப்படி ஓடி வர்றீங்க மெதுவாத்தான் வந்தா என்ன” என்றபடி ஒரு ஒரு படிகளாக ஏறினாள்,,

அவளுக்கு முன்னால் படிகளில் இருந்த சத்யன் திரும்பி “ ஏன் மான்சி படி ஏற ரொம்ப கஷ்டமா இருக்கா” என்று கேட்க,,

“அதெல்லாம் ஒன்னுமில்ல போங்க” என்றவள் மாடியை அடைந்ததும் பால்கனிக்கு போய் ரோஜாச்செடியை காட்டி “ எப்படியிருக்கு மாமா,, எல்லாம் சூப்பர் கலர்ல்ல” என்று கேட்டாள்

உண்மையிலேயே ரோஜாச்செடிகள் அழகாக இருந்தது,, ஐந்து வண்ண ரோஜாச்செடிகளில் சில பூக்கள் மலர்ந்தும்,, சில பூக்கள் மொட்டாகவும் சிரித்தன ,,
சிறிதுநேரம் பூக்களை பார்த்து ரசித்த சத்யன் பிறகு திரும்பி கைபிடி சுவற்றில் சாய்ந்துகொண்டு “ செடியை பார்க்க மட்டும் நீ என்னை கூட்டிட்டு வரலைன்னு தெரியும் மான்சி,, சொல்லு என்ன முடிவு பண்ணியிருக்க மான்சி” என்று கேட்டான்



அவனருகில் வந்து நின்று அவனை ஏறிட்டுப் பார்த்த மான்சி “ கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்க,, ஆனா இதுக்காக பாராட்டுவேன்னு எல்லாம் எதிர்பார்க்காதீங்க மாமா,, சரி நான் முடிவு பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க மாமா ” என்று குறும்புடன் கூறினாள்

மங்கிவரும் மாலை வேளையில் அவளின் முகத்தில் தெரிந்த அழகு சத்யனை தடுமாற செய்ய “ என்ன முடிவு பண்ணிருப்ப,, மாமா எனக்கு எதுவுமே வேண்டாம் உங்களை பார்த்துக்கிட்டே உங்ககூட இந்த வீட்டுல ஒரு வேலைக்காரி மாதிரி வாழ்ந்தா போதும்னு டயலாக் சொல்லப் போற அது தானே” என்று சத்யன் விட்டேத்தியாக சொல்ல

அவன் முகத்தையே உண்ணிப்பாக பார்த்த மான்சி “ அதெப்படி மாமா இப்படி ஒரு முடிவு நான் எடுப்பேன்னு சொல்றீங்க, உங்க கெஸ் ரொம்ப தப்பு மாமா” என்று நேரடியாக அவனை பார்த்து சொன்னாள்



" ஏய் பெண்ணே! உன் செவியில் கேட்கிறதா?

" என் மனதின் மௌனக்கதறல்களை!.

" ஏய் பெண்ணே! உன் கண்ணில் தெரிகிறதா?

" நீயில்லாது எனது உடல் இளைத்து துறும்பாவதை!

" ஏய் பெண்ணே! உன் மனம் அறிகிறதா?

" உன்னை நினைத்து உருவாகும் ஏக்கப்பெருமூச்சுகளை!

" ஏய் பெண்ணே! உன் இதயத்திற்கு புரிகிறதா?

" உன் பார்வைபடாத என் ஜீவனின் மரண அவஸ்தைகளை!

" ஏய் பெண்ணே! உன் அறிவு உணர்கிறதா?

" உன்னால் ஏங்கும் என் தேகத்தின் உயிர் கசிவுகளை!

No comments:

Post a Comment