Saturday, August 1, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 13

கேள்வியாய் அவளை பார்த்த சத்யன் “ அப்படின்னா என்ன முடிவு பண்ணிருக்க” என்று குழப்பமாக கேட்டான்

“ என்னால எதுவுமே வேனாம்னு எல்லாம் இருக்கமுடியாது,, நான் என்ன சாமியாரா எல்லாத்தையும் அடக்கியாள, நானும் சராசரி பொண்ணுதான், எனக்கு எல்லாமே வேனும், அந்தகாலத்து பொண்ணுங்க மாதிரி ‘அய்யோ நாதான்னு நீங்களே சகலமும்னு, டயலாக் பேசிட்டு எல்லாத்தையும் மறந்து மரத்துப்போய் என்னால வாழ முடியாது ” என்று மான்சி தீர்கமாக சொல்ல

“ அப்படின்னா என்னை மறந்துட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கியா?” என்றான் சத்யன்,, இதை சொல்லும்போது அவன் வார்த்தைகளை அவனே வெறுத்தான்

அவனை கடுமையாக முறைத்து பார்த்த மான்சி “ என்ன நக்கலா?, நான் ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை,, நேத்து அப்படி தடவித்தடவி முத்தம் குடுத்துட்டு இன்னிக்கு வேற ஒருத்தனை கட்டிக்கிறயான்னு கேட்கிறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை,, உங்களுக்கு எப்படியோ எனக்கு நீங்கதான் இனிமேல் புருஷன்” என்ற மான்சி சத்யனை இன்னும் அதிகமாக ஒட்டி நின்றாள்

அந்த அந்திமாலையில் தங்களின் கூட்டைத் தேடி வானில் பறந்த பறவைகளுடன் தானும் பறப்பது போல் உணர்ந்த சத்யன், தனது உற்சாகத்தை வெளிக்காட்டாமல் “ குழப்பாத மான்சி என்னன்னு தெளிவா சொல்லு” என்று கேட்டான்



அவனை நெருங்கி உராய்ந்து கொண்டு நின்ற மான்சி, அவன் போட்டிருந்த டீசர்ட்டின் மேல் இரண்டு பட்டன்களை கையால் திருகியபடி,, “ ஏன் மாமா உங்களுக்கு மட்டும் நெஞ்சுல இவ்வளவு முடியிருக்கு” என்று சம்மந்தமில்லாமல் கேட்டாள்

பட்டென்று அவள் கையை தட்டிவிட்ட சத்யன் “ ஏய் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பேசுற ,, விளையாடாத மான்சி இது ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்தப்பட்டது” என்று சற்று கோபமாக சொல்ல

“ அதெல்லாம் பட்டுன்னு எப்படி மாமா சொல்றது,,, இப்படித்தான் ஆரம்பிக்கனும்,,நீங்க மொதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க,, உங்களுக்கு மட்டும் நெஞ்சுல ஏன் இவ்வளவு முடியிருக்கு” என்று சிறு குழந்தையை போல பிடிவாதமாக மறுபடியும் கேட்க

இந்த முறை சத்யனுக்கு கோபம் வரவில்லை, சிரிப்புத்தான் வந்தது தனது சட்டையின் பட்டனை திருகிய அவள் கைகளை பற்றிக்கொண்டு “ ம்ம் யூரியா போட்டு வளர்த்தேன்,, நீ எவ்வளவு புத்திசாலின்னு நெனைச்சேன் நீ என்னடான்னா இப்படி கேனைத்தனமா கேள்வி கேட்கிற” என்றான்

“ ஓய் மாமா இது கேனைத்தனமா,, நேத்து உங்களை சட்டையில்லாம பார்த்தப்ப எவ்வளவு முடியிருந்துச்சு அதான் கேட்டேன்,, சரி விடுங்க இப்ப என்ன உங்களுக்கு என் முடிவு தெரியனும் அவ்வளவு தானே,, சரி நான் கேட்கிறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க,, இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு எது தடையா இருக்கு?” என்று நேரடியாக அவனை கேட்டாலும் அவள் விரல்கள் அவன் சட்டையின் பட்டனை திருகியபடியே இருந்தது

சத்யனுக்கு அவளுடைய நெருக்கமான இந்த நிலையில் காலையில் பேசியதெல்லாம் மறுபடியும் ஞாபகத்துக்கு வரவில்லை,, சிறிதுநேரம் கண்மூடி,, காலையில் சொன்ன காரணங்களை மனதில் கொண்டு வந்தான் சத்யன்

பிறகு கண்களை திறந்து “ தடை எதுன்னா என்னோட இன்றைய நிலைமைதான்,, அதாவது உன்னை என் மனசு விரும்பினாலும் உடல் உன்னை ஏத்துக்கலை,, தேவியோட மட்டுமே நான் உறவுகளை கற்பனை பண்ணி வாழ்வதால் வேறு எந்த பெண்ணிடமும் உறவு கொள்ள முடியாது இது ஒரு பெரிய பிரச்சனை மான்சி,, அதனால என்னைவிட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன்” என்று வேறு எங்கோ பார்த்தபடி சத்யன் சொன்னான்


எங்கே அவன் முகத்தை தன் பக்கம் திருப்பிய மான்சி “ இது நம்ம வாழ்க்கை பிரச்சனைன்னு சொல்லிட்டீங்க அதனால நானும் வெளிப்படையாவே கேட்கிறேன்,, தேவி அக்காவுக்கு பிறகு நீங்க இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்களோட உறவு வச்சுருப்பீங்க?” என்று மான்சி கேட்க

“என்ன மான்சி என்னை சந்தேகப்படுறியா” என்று சத்யன் நேரிடையாக கேட்டான்

“ அய்யோ மாமா உங்களை சந்தேகப்படலை,, நான் கேட்டதுக்கு கரெக்டா பதில் சொல்லுங்க, இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்ககூட செக்ஸ் பண்ணிருக்கீங்க அதை சொல்லுங்க” என்று மான்சி அழுத்தமாக கேட்டாள்

மறுபடியும் அவள் அதையே கேட்டதும் கோபமான சத்யன் “ ஏன்டி காலையிலதான் அவ்வளவு சொன்னேன்ல,, இதுவரைக்கும் எவகூடயும் நான் படுத்ததில்லை,, ஒக்கேனக்கல் சம்பவம் மட்டும்தான்,, ஆனா அதை எதுலயுமே சேர்க்கமுடியாது, தோல்வியில் முடிந்த ஒரு தப்பு,, அவ்வளவுதான்” என்று எரிச்சலாக கூறினான்

" அப்புறம் ஏன் மாமா என்னால எந்த பொண்ணையும் திருப்தி படுத்தமுடியாதுன்னு நீங்களே நெனைக்கிறீங்க,, எவகூடயும் படுக்காமலேயே இந்த மாதிரி முடிவு பண்ணா எப்படி மாமா,, அன்னிக்கு உங்களோட நிலைமைக்கு ஒரு வடிகாலா தேவியின் உறவை பயன்படுத்தினீங்க,,

"ஆனா இப்போ இன்னொரு பெண் மனைவியா உங்க வாழ்க்கையில் வந்தா நிச்சயமா மாறுவீங்க மாமா,, எனக்கு நம்பிக்கை இருக்கு,, அதனால நீங்க பயப்படாம எங்கப்பாவுக்கு போன் பண்ணி சீக்கிரம் வரச்சொல்லுங்க” என்று மான்சி முடிக்க

அவளையே வெறித்துப்பார்த்த சத்யன் “ ஏன் மான்சி இதையெல்லாம் நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்னு நெனைக்கிற?,, பல நாட்களா யோசிச்சு எடுத்த முடிவுதான்,, உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு,, உனக்கு நான் எப்படியோ தெரியாது ஆனா எனக்கு நீ எனக்குள் ஒரு அங்கமாகிட்ட,, அப்படிப்பட்ட உன்னையே நான் இழக்க நினைக்கிறேன்னா பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுக்கோ,, நீ நல்லபடியா ஒருத்தரை கல்யாணம் பண்ணி நல்லாரு மான்சி” என்று சத்யன் அடைத்த குரலில் கூற

சட்டென்று கோபமான மான்சி “ ஏன் மாமா நீ மட்டும் தேவி கூட வாழ்ந்ததை நெனைச்சுக்கிட்டு இருப்ப,, நான் மட்டும் நேத்து உன்னைய கட்டிப்பிடிச்சு முத்தமெல்லாம் குடுத்துட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கனுமா,, அது மட்டும் நடக்கவே நடக்காது,, எனக்கு நீதான் வேனும்,, மொதல்ல என் காதலைச் சொல்ல என் ஊனம் ஒரு தடையா இருந்தது,,

" ஆனா இப்போ என்னாலயும் இவ்வளவு கம்பீரமான ஆணை சலனப்படுத்த முடியும்னு நெனைக்கும் போது எனக்கு தன்னம்பிக்கை வந்திருச்சு , எனக்கு நீதான் வேனும் அதுவும் எல்லாமே வேனும்,, உன்னால என்கூட சேர்ந்து வாழ முடியும் மாமா மனசை போட்டு குழப்பிக்காத மாமா ” என்று மான்சி தன் தரப்பை தெளிவாக சொல்லி விட்டாள்

சத்யனுக்கு அவள் வார்த்தைகள் ரொம்ப சந்தோஷமா இருந்தாலும்,, அவளுக்கு இன்னும் புரியவைக்கும் கடைசி முயற்சியாக “ மான்சி திருமணத்திற்கு பிறகு எதுவுமே நடக்காமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கண்ணீர் விட்டு,, கண்ட டாக்டரையும் போய் கன்சல்ட் பண்ணவேண்டிய நிலைமையை யோசிச்சுப்பாரு மான்சி,, அதுவும் நீவேற எனக்கு எல்லாமே வேனும்னு சொல்ற,, அப்புறம் எதுவுமே கிடைக்கலைன்னா அடுத்த நாளே கோர்ட்டுல போய் நிப்ப போலருக்கு,, அதுக்குத்தான் சொல்றேன் எதுக்கு இந்த ரிஸ்க் விலகிவிடலாம் மான்சி கொஞ்சநாள் வேதனையா இருக்கும் பிறகு சரியாயிடும் ” என்று சத்யன் வெறுத்த குரலில் சொன்னதும்


அவன் வார்த்தைகளின் வீரியம் அவள் முகத்தில் தெரிய “ அதாவது நேத்து அவ்வளவு நடந்த பிறகு நான் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கனுமா? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க,,

“தேவி இறந்ததும் பைத்தியமான நீங்க நான் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணும்போது அமைதியா வேடிக்கை பார்த்து அட்சதை தூவுவீங்களா? சரி அப்புறமா நீங்க என்னாவீங்க? சந்தோஷமா இருப்பீங்களா? .........

“ இல்ல இல்ல தேவி அளவுக்கு நான் உன்னை நேசிக்கலைன்னு உங்களால சொல்லமுடியுமா? இந்த முப்பத்தைந்து நாளுல உங்களின் தவிப்பை ஒவ்வொரு நாளும் பார்த்துகிட்டுதான் இருக்கேன் மாமா, என்கிட்ட பொய் சொல்லாதீங்க,,....

“ மாமா எனக்கு செக்ஸ் மேல இருக்குற ஆசையால எனக்கு எல்லாமே வேனும்னு நான் சொல்லலை, என்னை கட்டிபிடிக்கும் ஆண் நீங்களா இருக்கனும்,, என்னை முத்தமிடும் ஆண் நீங்களா இருக்கனும், என்னோட உடலை சொந்தமாக்குவதும் நீங்களா இருக்கனும்,, மொத்தத்தில் எனக்கு எல்லாமே உங்களோட நடக்கனும்னு என்ற அர்த்தத்தில் சொன்னேனே தவிர,, வேற எவன் கூடயோ இல்லை” என்று மான்சி ஆவேசமாக பேச சத்யன் வாயடைத்துப் போய் அவளையே பார்த்தான்

“ என்ன மாமா அப்படி பார்க்கிற என்னடா அவ்வளவு ஏறெடுத்தும் நம்மல பார்க்காம அடக்கமா இருந்தவ இப்போ இப்படி பேசுறாளேன்னா? எனக்கு ஒரு அனுமதி தேவைப்பட்டுச்சு அது நேத்து நைட்டே எனக்கு கிடைச்சிருச்சு,, இனிமேல் நான் எதற்காகவும் உங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை,, ............

“ இன்னும் சொல்லப்போனா தேவியோட காதலை விட என்னோட காதல் ரொம்ப வலுவானது,, எப்படின்னு நெனைக்கறீங்களா? தேவி உங்களை கொஞ்சநாளில் பார்த்து பழகி ரொம்ப சீக்கிரத்திலேயே எல்லாமே முடிஞ்சுபோச்சு,, ஆனா என் காதல் அப்படியில்லை,, கிட்டத்தட்ட பத்துவருஷமா நான் உங்களை காதலிக்கிறேன்,,என்று மான்சி சொன்னதும்,,.. சத்யன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான்

“ ஆமா மாமா உங்களை சின்ன வயசுல பார்த்ததுதானாலும் என் மனசுல உங்களின் நினைவுகள் அப்படியே பதிஞ்சுபோச்சு,, அப்பப்போ எங்கப்பா உங்களை பார்க்க வருவாரே எப்படின்னு நினைச்சீங்க , அவர் மறந்தாலும் நான்தான் அவரை வற்புறுத்தி அனுப்புவேன்,, நீங்க போன்ல அப்பா கூட பேசும்போதெல்லாம் ஸ்பீக்கரை ஆன் பண்ணி உங்க குரலை கேட்டு ரசிப்பேன்,, இங்கே வேலைன்னதும் எவ்வளவு ஆசையோட வந்தேன் தெரியுமா? உங்களை தினமும் பார்க்கலாம்னு நெனைச்சுத்தான்,, ஆனா என்னோட ஊனம் எனக்கு பெரிய குறையா இருந்துச்சு, நேத்து நைட்ல இருந்து அதுவும் கிடையாது,, இப்போ சொல்லுங்க என் லவ் எவ்வளவு ஸ்ட்ராங்கானதுன்னு? இது ஒன்னும் விவரம் புரியாத டீனேஜ் காதல் இல்ல மாமா,, பத்து வருஷத்து காதல்” என்று மான்சி கண்களில் கண்ணீருடன் உதடுகள் துடிக்க சத்யனிடம் தன் மனதை முழுமையாக எடுத்து சொன்னாள்

தன் எதிரே நின்றவளையே கண்கொட்டாமல் பார்த்த சத்யன் “ மான்சி” என்று ஒரு சிறு கூச்சலுடன் அவளை வாரியணைத்துக் கொண்டு, அவள் முகத்தில் தன் உதடுகளால் முத்தத்தை தாறுமாறாக வாரியிறைத்தான், அந்த முத்தங்கள் எந்த இடமென்று புரியாமல் அவள் முகத்தில் எங்குபார்த்தாலும் தனது தடத்தை பதித்தது

அவனுடைய இறுகிய அணைப்பு மான்சியை மூச்சுத்திணற வைத்தது,, உடலெங்கும் சுகமான ஒரு வலி பரவ தன் பங்குக்கு அவளும் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்

மான்சியின் இடுப்பை வளைத்து தூக்கியவாறே திரும்பிய சத்யன் பின்புறம் இருந்த காம்பவுண்ட் சுவற்றில் உட்கார வைத்தான், பிறகு மறுபடியும் தனது முத்தமிடும் வேலை சீராக தொடர்ந்தான்,, இப்போது தடுமாற்றம் இல்லாமல் வெகு நிதானமாக முத்தமிட்டான், அவளின் முகமெல்லாம் இவனுடைய எச்சில்ப்பட்டு நிலா வெளிச்சத்தில் மினுமினுத்தது

அவனின் ஒவ்வொரு முத்தத்தையும் கண்மூடி ரசித்த மான்சி, கைப்பிடி சுவற்றில் அமர்ந்து அவனை தனது கால்களால் அவன் கால்களை வளைத்துப் பிடித்து, தன் கைகளால் சத்யனின் இடுப்பை வளைத்துக்கொண்டாள், அவன் முத்தத்தால் அவள் முகத்தில் கவிதை எழுத, அவள் தனது முகத்தை காகிதமாக்கி அவன் எழுதும் முத்த கவிதைக்கு கொடுத்தாள்


அவனின் உமிழ்நீரும் அவளின் இதழ்த்தேனும் ஒன்றாக கலந்து புதியதோர் சுவையை இருவருக்கும் அறிமுகம் செய்தது,, அவள் தனது பத்து வருட தாகத்தை அந்த ஒர் இரவில் தீர்த்துக்கொள்ள முயன்றாள், அவன் வாயினுள் இருக்கும் ஈரத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்தாள்

அந்த ஈர இரவும் மங்கிய இருட்டும் அவர்கள் காதல் செய்வதை வெளியுலகுக்கு தெரியாமல் மறைத்தது , இல்லையென்றால் அந்த ஊர் மக்கள் அனைவரும் இலவசமாக ஒரு முத்தக்காட்சியை பார்த்து ரசித்திருப்பார்கள்

ஒருகட்டத்தில் இருவருமே கலைத்துப்போனார்கள், இருவரின் பிடியும் மெல்ல தளர ஆரம்பித்தது, மான்சி அவன் தோளில் முகத்தை சாய்த்துக்கொள்ள, சத்யன் அவளின் தலை உச்சியில் தன் தாடையை வைத்து மூச்சுவாங்க இளைப்பாறினான்

அவன் தோளில் சுகமாக சாய்ந்தவாறு “ இவ்வளவு ஆசையை மனசுல வச்சுகிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்களே மாமா” என்று மான்சி காதலோடு கேட்க

அவள் கூந்தலை விரலால் அலைந்த சத்யன் “ எனக்கு வேற வழி தெரியலை மான்சி, சொல்லிட்டு என் மனசு எவ்வளவு வேதனை பட்டுச்சு தெரியுமா?” என்றான் சத்யன்

“இந்த பிரச்சனையை நம்ம கல்யாணத்துக்கு பிறகு சரி பண்ணமுடியாதுன்னு நினைக்கிறீங்க மாமா,, இதுதான் உங்க பயம்னா, நான் அதுக்கும் ஒரு முடிவை யோசிச்சு வச்சிருக்கேன் , கடைசியாத்தான் அதை உங்ககிட்ட சொல்லனும்னு நெனைச்சேன்,, இப்போ சொல்றேன் மாமா” என்றவள் அவனிடமிருந்து கொஞ்சம் விலகி அவனெ தோள்களை தனது இரண்டு கையாலும் பற்றிக்கொண்டு அவனையே பார்த்தாள்

" என்ன முடிவு சொல்லு மான்சி" என்று சத்யன் ஆர்வமும் குழப்பமுமாக கேட்டான்

கொஞ்சம் தயங்கிய மான்சி " இல்ல மாமா உங்க பயத்தை போக்க நாம ஏன் கல்யாணத்துக்கு முன்னாடியே முயற்ச்சி பண்ணி பார்க்கக்கூடாது? அதாவது எது இன்னொரு பொண்ணோட முடியாதுன்னு நீங்க நெனைக்கிறீங்களோ அது முடியுமா முடியாதான்னு நாம ஏன் முயற்ச்சி செய்து பார்க்கக்கூடாது? உங்க மனசுல இருக்கிற குற்றவுணர்ச்சியும் போய்டும்ல,, இதுதான் நான் எடுத்த முடிவு மாமா, நீங்க எப்போ எங்கேன்னு சொன்னா நான் அதுக்கு ரெடி மாமா" என்று மான்சி சொன்னதும் ............

அவள் சொன்னதன் அர்த்தம் புரிய சத்யனுக்கு சில நிமிடங்கள் ஆனது,, புரிந்ததும் அதிர்ந்து போனான் " ஏய் உனக்கு என்ன பைத்தியமாடி பிடிச்சுருக்கு இந்த மாதிரியெல்லாம் பேசுற,, ஒரு பொட்டச்சி பேசுற பேச்சாடி இது,, உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை மான்சி " என்று சத்யன் அவள் தோள்களை பற்றி உலுக்கி வெறுப்புடன் சொன்னான்

தன்னை உலுக்கிய அவனையே முறைத்த மான்சி “ ஏன் நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு ,, நல்லா யோசிச்சு பாருங்க மாமா,, அதாவது மூடிய கதவுக்கு பின்னாடி பூதமா பிசாசான்னு பயந்து பயந்து அன்றாடம் வாழுறதைவிட கதவை திறந்து பார்த்து அங்கே இருக்கிறது பூதமா இல்லை வரம் கொடுக்கும் தேவதையான்னு கன்பார்ம் பண்ணிக்கலாம்னு சொல்றேன் மாமா,, இதோ பாருங்க இதை ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி நடக்கும் அசிங்கம்னு நெனைக்கிறீங்க, உங்க வியாதிக்கு ஒரு வைத்தியமா நினைச்சு பாருங்க, எதைத் தின்னா பித்தம் தெளியும்னு இருக்கிறது நம்மோட நிலைமை, அதை தின்னு வியாதியை குணப்படுத்துறதை விட்டுட்டு என்னமோ கதை பேசுறீங்க,, இப்போ நீங்க நோயாளி உங்களுக்கு மருந்து நான், என்னை சாப்பிட்டுத்தான் பாருங்களேன் நோய் குணமாகுதா இல்லையான்னு தெரியும், மொதல்ல மனசை தெளிவா வச்சு யோசிங்க புரியும், முடியலையா நீங்க எதையுமே யோசிக்க வேண்டாம் உங்களுக்கும் சேர்த்து நான் யோசிக்கிறேன் மாமா,, நேரமாச்சு அக்கா தேடுவாங்க நான் போறேன் ” என்று பேசி முடித்த மான்சி கைப்பிடி சுவற்றில் இருந்து கீழே குதித்து தனது வலது காலை இழுத்துக்கொண்டு மாடிப்படிகளை நோக்கி போனாள்

போகும் அவளையே அதிர்ச்சியுடன் பார்த்தான் சத்யன் 




மான்சி இறங்கி போவதையே கண்கொட்டாமல் பார்த்த சத்யனுக்கு அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மறுபடி மறுபடி செவிகளில் அறைந்தது,, இவளுக்கு என்ன ஆச்சு ரொம்ப அடக்கமா,, அமைதியா நல்லாத்தானே இருந்தா,, இப்போ இவ்வளவு பேசுறாளே,, இந்த புது பூகம்பத்தை எப்படி சமாளிப்பது என்று எண்ணிய சத்யனுக்கு அந்த இரவின் ஈரக்காற்றிலும் நெற்றியில் பொடிப்பொடியாக வியர்த்தது

ஆனால் இவள் இவ்வளவு தூரம் துணிந்து பேசக் காரணம் தன்மீது உள்ள அளவற்ற காதல்தான் என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்தது,, தன்னை இழக்கக்கூடாது என்றுதான் அவள் இப்படியொரு முடிவு எடுத்துள்ளாள் என்று சத்யனுக்கு விளங்கியது,,

சிலநிமிடம்கள் மான்சியின் பேச்சு முட்டாள்தனமானது என்று நினைத்த சத்யன்,, இந்த பேச்சின் பின்னனி அளவற்ற மாசற்ற அவளது காதல் என்றுணர்ந்ததும், அவன் மனம் உற்சாகத்துடன் கூவியது

எது எப்படியிருந்தாலும் மான்சி கருத்தை சத்யனால் ஏற்க்க முடியவில்லை,, திருமணத்திற்கு முன்பு உறவு வைத்ததால் தேவியின் உயிர் போனது,, அதே தவறை மீண்டும் செய்து மான்சியையும் இழக்கக்கூடாது என்று மட்டும் சத்யன் உறுதியாக இருந்தான்

தேவியின் உயிர் பிரிந்ததற்கு வயிற்றில் உருவான தன் குழந்தையும் முக்கிய காரணம்,, அது மட்டும் இல்லையென்றால் அவள் நிச்சயம் உயிருடன் இருந்திருப்பாள் என்று நினைத்த சத்யனின் மனதில் தேவியை பற்றிய சிந்தனை வந்ததுமே மான்சியை விலக்கவேண்டும் என்ற எண்ணமும் அதிகமானது

மான்சி சொன்னது போல் முயற்சி செய்து மான்சியின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க சத்யன் தயாராக இல்லை , அதனால் மான்சியின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட கூடாது,, தன்னால் முடிந்தால் மான்சியை மாற்ற வேண்டும் இல்லையென்றால் பாண்டியனை வரவழைத்து விஷயத்தை சொல்லிவிடவேண்டும்,, தன்னுடைய மகள் வாழ்க்கை வீனாவதை எந்த தகப்பன் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பான்,, நிச்சயம் இந்த பிரச்சனைக்கு அவரே முடிவுகட்டி விடுவார் என்று எண்ணியபடி படிகளில் இறங்கினான் சத்யன்

ஹாலில் அமர்ந்து ஜெயந்தியுடன் டிவி பார்த்துக்கொண்டு இருந்த மான்சி சத்யனை பார்த்ததும் “ வா மாமா சாப்பிடலாம் நேரமாகுது,, அக்காவும் நமக்காக வெயிட் பண்றாங்க” என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ஒன்றுமே நடவாதது போல்...

சத்யன் மணியை பார்த்தான்,, எட்டரை ஆகியிருந்தது,,இப்போது அறைக்குள் போனால் மறுபடியும் மறுபடியும் வந்து கதவை தட்டுவாள்,, அதைவிட உணவை முடித்துக்கொண்டே உள்ளே போய் கதவை சாத்திக்கொள்ளலாம் என்று சாப்பிட போய் அமர்ந்தான்

அக்காவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்த சத்யன்,, தனது அறைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டான்,, மான்சியை பார்த்து பதுங்குவது போன்றதொரு எண்ணம் அவனுக்குள் உருவானது

அறைக்குள் வந்து கம்பியூட்டரின் முன் அமர்ந்தான் சத்யன் ,, வெகுநேரமாக தனது ஆர்வக்கோளாறை கம்பியூட்டரில் முயன்று கொண்டிருந்த சத்யன் கதவு திறந்து மான்சி உள்ளே வந்ததை கவனிக்கவில்லை

அவன் முன்னால் டேபிளில் பால் டம்ளர் வைக்கப்பட,, திடுக்கிட்டு நிமிர்ந்த சத்யன் எதிரில் இருந்த மான்சியை பார்த்து “ நீ எப்ப உள்ள வந்த, கதவை கூட தட்டாமல் அப்படியே வர்ற” என்று வரவழைத்த எரிச்சலுடன் கேட்க

“ இதென்ன புதுசா இருக்கு , நேத்து நைட் கதவை தட்டிட்டா உள்ள வந்தேன்,, அதுவும் எவ்வளவு நேரம் உள்ளவே இருந்தேன்” என்று மான்சி குறும்பா கண் சிமிட்டி சொல்ல

இவ நேத்து நடந்ததை விடமாட்டா போலருக்கே என்று நினைத்தவாறு “ எனக்கு பால் வேனாம் நைட்ல பால் குடிக்கும் பழக்கம் இல்லை,, மொதல்ல எடுத்துட்டு போ” என்று சற்று கோபத்தோடு சத்யன் சொன்னான்

“ பரவாயில்லை இப்ப இருந்து பழகிக்கங்க” என்று அலட்சியமாக சொன்னவள்,, வேகமாக திரும்பி சத்யன் படுக்கையில் இருந்த பழைய பெட்கவரை எடுத்து விட்டு வேறு சலவை செய்ததை போட ஆரம்பித்தாள்

அவசரமாய் சேரை விட்டு எழுந்த சத்யன் வேகமாக மான்சியை நெருங்கி “ ஏய் ஏய் இரு நீ ஏன் இந்த வேலையெல்லாம் செய்ற, என் பெட்டை தட்சிணா வந்து க்ளீன் பண்ணுவான்,, நீ வெளியே போ” என்று கோபமாக அவள் தோள் பற்றி கதவு பக்கம் திருப்பினான் சத்யன்

“ அதெல்லாம் இனிமேல் தட்சிணா செய்யமாட்டான்,, நான்தான் செய்வேன்” என்று அலட்சியமாக கூறி அவனை அதிர வைத்து அவன் கையை தட்டி விட்டவள், சுருட்டி கீழே போட்டிருந்த பெட்சீட்டை குனிந்து எடுத்துக்கொண்டு “ பால குடிச்சுட்டு வேலையா தூங்குங்க சும்மா எப்பபார்த்தாலும் சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு நகர்தாள்

அவள் சொன்ன வார்த்தைகளால் பிரமை பிடித்து நின்றிருந்த சத்யன் சட்டென்று சுதாரித்து “ ஏய் மான்சி நில்லு ,, இப்போ என்ன சொன்ன மறுபடியும் சொல்லு” என்று அவளை பிடித்து நிறுத்தினான்



“ ம்.. இனிமேல் நீங்க சம்மந்தப்பட்ட வேலையெல்லாம் தட்சிணா பண்ணமாட்டான் நான்தான் பண்ணுவேன்னு சொன்னேன்” என்று மான்சி நிறுத்தி நிதானமாக சொன்னாள்

“ இதுக்கு என்ன அர்த்தம் மான்சி” என்று சத்யன் அவளை உற்று நோக்க

“ என்ன கேள்வி மேல கேள்வி கேட்குறீங்க.. எனக்கு வேலையிருக்கு நான் போறேன்” என்று மான்சி திரும்ப,,

“ ஏய் பதில் சொல்லிட்டு போ” என்று சத்யன் அவளை பிடித்து இழுக்க,, தனது பலமற்ற ஒரு காலை தரையில் சரியாக ஊன்றாத மான்சி சத்யன் இழுத்த இழுப்பில் பக்கவாட்டில் சரிய ஆரம்பித்தாள்



No comments:

Post a Comment