Thursday, October 8, 2015

மைதிலி - அத்தியாயம் - 10

ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னை திரும்பினேன். மைதிலியைப் பார்க்க ஆவலாக இருந்தது. மைதிலி அவளது பெற்றோருடன் இருக்கிறாள் என்றும் முன்பு செய்து கொண்டு இருந்த வேலையில் மறுபடி சேர்ந்து உள்ளதாகவும் வசி மூலம் அறிந்து கொண்டேன். அவளை அவளது அலுவலகத் தொலைபேசி மூலம் அழைத்தேன்.

"சொல்லுங்க முரளி"

"உன்னைப் பாக்கணும், பேசணும். மத்தியானம் கொஞ்ச நேரம் வரமுடியுமா?"

"எதைப் பத்தி பேசணும்?"

"நான் நேரில் பாக்கறப்ப சொல்றேன்"

"சரி, மூணு மணிக்கு வாங்க. நான் பர்மிஷன் சொல்லிட்டு வர்றேன்"

அவளை அழைத்துக் கொண்டு உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன்னுக்குச் சென்றேன். நான் அவளை கடந்த முறை பார்த்த போது அப்பியிருந்த சோகம் விலகி அமைதி நிலவி இருந்தாலும் அவளது முகம் சந்தோஷக் கீற்றுகளற்றுக் காட்சியளித்தது. நெற்றியில் பொட்டு வைக்காமல் மூளிக் கழுத்துடன் இருந்தவளைக் கண்டு என் மனம் குமுறியது.



"சொல்லுங்க"

"எப்படி இருக்கே?" எப்படிப் பேச்சை எடுப்பது என்று அறியாமல் அப்படிக் கேட்டேன்.

"ம்ம்ம் ... இருக்கேன். அவருக்கு வந்த செட்டில்மெண்ட் எல்லாத்தையும் பைசா விடாம என் மாமியார் வாங்கிட்டுப் போனாங்க. பெங்களூர் வீட்டையும் அவங்களே காலி செஞ்சுட்டு அங்கே இருந்த என் துணிமணிகளை மட்டும் என் கிட்டே கொடுத்து எங்க வீட்டுக்கு என்னை அனுப்பி வெச்சாங்க. என் வேலை மறுபடி கிடைச்சுது. காலம் ஓடிட்டு இருக்கு"

"எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும்?"

"எதுக்கு?"

"நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு"

"என்னவோ எப்ப என் புருஷன் செத்துப் போவாரு எப்ப உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நான் காத்துட்டு இருந்த மாதிரி பேசறீங்க?" அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நான் கேட்டதில், அதுவும் இவ்வளவு சீக்கிரம் அந்தப் பேச்சை எடுத்ததில், இருந்த என் தவறை உணர்ந்தேன்.

"ப்ளீஸ் மைதிலி. நான் அவசரப் பட்டு அப்படி கேட்டுட்டேன். ஐ அம் சாரி. வா போகலாம் உன்னை வீட்டில் கொண்டு போய் விடறேன்"

"எனக்கே போயிக்கத் தெரியும். நீங்க போங்க"

இப்போது கோவப் படுவது என் முறையானது.

"Why the hell do you talk like this? வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னது அமுதாவைப் பார்க்கலாங்கறதுக்காக. ஏன், அவளைப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா?"

"அதான் ஊருக்கே தண்டோரா போட்டாச்சே உங்க பொண்ணுன்னு. நான் யார் பார்க்க வேண்டாம்ன்னு சொல்றதுக்கு" என்றபடி கண் கலங்கினாள்.

எவ்வளவுதான் தன் கணவனின் பழக்கங்களையும் சில குணாதிசியங்களையும் அவள் வெறுத்து இருந்தாலும் அவனை மணமுடிக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்த போது இரட்டை வாழ்க்கை வாழாமல் அவன் மேல் அவள் வரவழைத்துக் கொண்ட உளமார்ந்த காதலும் அவன் மறைவு வரை அவன் மனம் மாற மாட்டானா என்று ஏங்கி இருந்ததும் எனக்கு தெள்ளத் தெளிவானது. நான் நினைத்தது போல் அவன் மறைவு அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

வில்லனின் மகள் அவன் கொல்லப் பட்ட அடுத்த காட்சியில் கதாநாயகனோடு டூயட் பாடி ஆடுவது சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்.


1987

ஒரு நாள் மதியம் முழுவதும் கால்ஃப் விளையாட் எரிக் எனக்கு அழைப்பு விடுத்தான். அவனுடன் கால்ஃப் கோர்ஸில் நடந்து கொண்டு இருக்கையில் மைதிலியிடம் எலிஸபெத் எடுத்த பேச்சை எடுத்தான். முதலில் பொறுமை காத்து அவனது விண்ணப்பத்தை அமைதியாக

"நோ எரிக். எங்க ரெண்டு பேருக்கும் இதில் விருப்பம் இல்லை" என்று சொல்லி மறுத்தேன்.

எரிக், "உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லு. எலிஸபெத் பேசினப்ப மைதிலி உன்கிட்ட பேசிட்டு பதில் சொல்றதா சொல்லி இருக்கா. அவளுக்கும் நிச்சயம் ஒரு வெள்ளைத் தோல்காரங்கூட படுக்க ஆர்வம் இருக்கு"

நான் மேலும் பொறுமை காத்து, "அப்படி எல்லாம் இல்லை. நாளைக்கு நீயே அவகிட்ட ஃபோனில் கேளு"

எரிக், "உன் விருப்பத்தை அவ மீற மாட்டாங்கற நம்பிக்கையில் சொல்றேன்னு புரியுது"

என் எரிச்சலை அடக்க முடியாமல், "என்ன எரிக்? இருக்கற எல்லா செக்ரடரிங்கள்கூடவும் படுத்தாச்சுங்கற அலுப்பா? இல்லை, உன் மனைவியை நான் அனுபவிச்சு இருக்கேங்கற பொறாமையா?"

எரிக், "ரெண்டும் இல்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா பொம்பளைங்க விஷயத்தில் உன்னோட செலக்ஷன் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். அதுவும் உன்னோட மனைவி செலக்ஷன் சூப்பர். சோ, எனக்கு அலுப்பும் இல்லை பொறாமையும் இல்லை. மைதிலியை அனுபவிக்கணும்ன்னு ஆசை அவ்வளவுதான். உனக்கு எலிஸபெத்கூட படுக்க விருப்பம் இல்லைன்னாலுன் பரவால்லை"

என் எரிச்சல் கோபமானது .. "லுக். இத்தோட இந்த டாபிக்கை விட்டுடு. இதுக்கு மேல் பேச எனக்கு விருப்பம் இல்லை. நான் கிளம்பறேன்"

எரிக், "ஓ.கே. பட், நீ சொன்ன மாதிரி உன் மனைவிகிட்ட பேசத்தான் போறேன்"

நான், "ஓ. தாரளமா பேசு"

அடுத்த சில நாட்களில் அவன் மைதிலியை நான் இல்லாத போது வீட்டில் வந்து பார்த்தான். மைதிலி என் அளவுக்கு இங்கிதம் பார்க்கவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள்.

காலை அலுவலகத்தின் உள் நுழையுமும் ரிஸப்ஷனின் என்னைவிட பல மடங்கு தாழ்ந்த பதவியில் இருந்த ஹெச்.ஆர் மேனேஜர் என்னிடம் நான் வேலை நீக்கம் செய்யப் பட்டதாக ஒரு ஆணையைக் கொடுத்தான். தொடர்ந்து ஸேக்யூரிட்டி ஒருவனின் மேற்பார்வையில் என் அறையில் இருந்த என் தனிப்பட்ட பொருட்களை ஒரு பெட்டியில் போடவைத்து வெளியேற்றப் பட்டேன்.

கம்பெனியின் விரிவாக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டதால் நான் முதன்மையாகச் செய்து கொண்டு இருந்த விரிவாக்கப் பணிகள் தேவைப் படாது என்றும் நான் செய்து கொண்டு இருந்த மற்ற வேலைகளுக்கு ஏற்கனவே சில மேனேஜர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்த ஆணையில் காரணம் சொல்லப் பட்டு இருந்தது.

விரிவாக்கங்களையும் உற்பத்தியில் புது மாற்றங்களையும் நிர்வாகிக்கும் வைஸ்-ப்ரெஸிடெண்ட் பதவியைத் தவிற பனிரெண்டு முக்கிய பங்குதாரர்களில் ஒருவனான நான் அந்த கம்பெனியின் டைரக்டர்களில் ஒருவனாகவும் இருந்தேன்.

என் அளவுக்கு உயர்ந்த பதவியில் இருப்பவரை உடனடியாக நீக்க சேர்மனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அதுவும் ஒரு தற்காலிக அதிகாரமே. அந்த நீக்கத்துக்கு போர்ட் மீட்டிங்கில் மற்ற டைரக்டர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். எரிக் தனது தற்காலிக அதிகாரத்தைப் பயன் படுத்தி உடனடியாக என்னை நீக்கி இருந்தான்.

மற்ற டைரக்டர் யாரும் எனது பதவி நீக்கத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரிந்ததே. அதை அவனும் அறிந்து இருப்பான். ஆக, எல்லோரும் பார்க்கும் விதமாக என்னை வெளியே துரத்தி, போர்ட் மீட்டிங்க் கூட்டும்வரை என்னை வேலையற்று இருக்க வைத்து அவமானப் படுத்துவதே அவன் குறிக்கோள்.

ஒரு அளவுக்கு சேமிப்புகள் இருந்தாலும் எனது பிராதான சேமிப்பு நான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் எனக்கு இருந்த பங்கு. சாம் ஸ்ப்ரிங்கர் உயிருடன் இருந்த போது, எனக்கு சம்பள உயர்வுக்கும், எனக்கு வரக்கூடிய இன்ஸெண்டிவ் தொகைகளுக்கும், பதிலாக கம்பெனியில் பங்கு கொடுக்க முன்வந்தார். நானும் அதை ஏற்றுக் கொண்டு இருந்தேன்.

கை நிறையச் சம்பளம் வந்ததால், ஒரு அளவுக்கு ஆடம்பரமான வாழ்க்கை, சொந்த வீடு என்றாலும் அதை வாங்குவதற்காக எடுத்த கடனுக்கான மாதக் கட்டணம், நல்ல பள்ளிகளில் குழந்தைகளின் படிப்பு, இரண்டு கார்கள், வீட்டில் வேலைக்கு ஆள் இவையனைத்தையும் சமாளித்து சேமிக்கவும் முடிந்து இருந்தது.





வீட்டுக்கு வருவதற்குமுன் நான் அவமானப் பட்ட செய்தி மைதிலிக்கு வந்து இருந்தது. எலிஸபெத் எங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரிடமோ சொல்லி இருப்பாள் என்பது என் யூகம்.

கோபம் வந்தால் நான் மிகவும் அமைதியாவது மைதிலி அறிந்ததே. என் முகபாவத்தில் இருந்து தணலாகக் கொதித்துக் கொண்டு இருந்த என் கோபத்தை மைதிலி புரிந்து கொண்டாள்.

மாலை வரை அறையில் தனித்து இருந்தேன். மாலை நான் எதிர்பார்த்தது போல எட்வர்ட் ப்ராடி வந்தார். எட்வர்ட் ப்ராடி எங்கள் நிறுவனத்தின் ஸீ.எஃப்.ஓ மற்றும் ஃபைனான்ஷியல் டைரக்டர். என்னைப் போல வேலைக்குச் சேர்ந்து முன்னுக்கு வந்தவர். என்னை விட ஏழெட்டு வருடங்கள் சீனியராக இருந்தாலும் எனக்கு நெருங்கிய நண்பர். மைதிலிக்கும் மிகவும் பழக்கமானவர்.

வெகு நேரம் இருவரும் மேற்கொண்டு எடுக்கப் போகும் நடவடிக்கைகளைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்.

அவர் சென்ற பிறகு மைதிலி என்னிடத்தில் வந்து, "புறப்படுங்க .. "

நான், "எங்கே?"

மைதிலி, "அடுத்த ரெண்டு நாளுக்கு லோவெஸ் காரனேடோவில் ஒரு சூட் புக் பண்ணி இருக்கேன்."

லோவெஸ் காரனேடோ பே ரிஸார்ட் கடற்கரையோரத்தில் இருக்கும் ஒரு அழகான ஸ்பா வசதி கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல். மிக அருகே இருந்ததால் ஒன்று இரண்டு நாட்கள் அங்கு தங்கி அதன் ஸ்பாவில் உடலையும் மனத்தையும் அசுவாசப் படுத்தும் பாடி மஸ்ஸாஜ் செய்து கொண்டு ஸ்டீம், சானா பாத் எடுத்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பணக்காரப் பொழுது போக்கு. திருமணம் ஆன புதிதில் அவளையும் அங்கு கூட்டிச் சென்றபோது மைதிலி, "வீட்டில் ஜம்முன்னு எண்ணை தேய்ச்சு குளிச்சு விடறேன். இங்கே வந்து ஏன் இப்படி காசு அழறீங்க?" என்று கிண்டலடித்தாலும் நாளடைவில் "வேற ஒருத்தர் நமக்கு எண்ணை தேய்ச்சுவிட்டு உடம்பை எல்லாம் நல்லா பிடிச்சு விடறது நல்லாத்தான் இருக்கு" என்று தன்னைப் பழக்கிக் கொண்டாள்.

சற்று எரிச்சலடைந்த நான், "இப்ப நான் உன்னை புக் பண்ணச் சொன்னேனா? ஏற்கனவே வேலை போயிடுச்சு. இருக்கற காசை எல்லாம் தீக்கறதா முடிவு பண்ணிட்டியா" என்று சொன்ன பிறகு என் சுடு சொற்கள் அவள் மனத்தை துளைப்பதைக் கண்டேன்.

என் நாவினால் சுட்ட புண்ணை புறக்கணித்து, "அய்யா ஒண்ணும் நடுத்தெருவில் நிக்கப் போறது இல்லை. அது எனக்கும் தெரியும். சும்மா பேசணுங்கறதுக்காக எதுவும் சொல்லாதீங்க. புறப்படுங்க"

எண்ணிப் பார்க்க எப்படியும் நானும் ப்ராடியும் எடுத்த முடிவுகளைச் செயலாக்க இன்னும் இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் தேவைப் படும் என்பதை உணர்ந்தேன். 'நான் இன்னும் என் திட்டத்தை இவகிட்ட சொல்லவே இல்லையே? இவளுக்கு எப்படி தெரிஞ்சுது?' என்ற ஐய்யம் எழுந்தாலும் மேலும் அதைப் பற்றி விவாதிக்காமல், "குழந்தைங்க?"

"ரெண்டு நாளைக்கு அத்தையும் அந்த புது மெய்டும் மேனேஜ் பண்ணிப்பாங்க. நம்ம ரங்கராஜன் சாரோட பொண்ணு வனிதாவை காலையிலும் சாயங்காலமும் வந்து பேபி சிட் பண்ண சொல்லி இருக்கேன். இதுங்களுக்கு வனிதா அக்கான்னா பிடிக்கும். ஒரு பிரச்சனையும் இல்லை. நாம் ரெண்டு பேர் மட்டும் போறோம்"

அவளுடன் புறப்பட்டுச் சென்றேன்.

அன்று இரவு படுக்கையில் மைதிலி வழக்கத்துக்கு மாறாக எனக்கு கிறக்கத்தைக் கொடுத்தாள். என் மனதுக்குள் செந்தணலாக குமுறிக் கொண்டு இருந்த கோப வெறிக்கு தன்னை ஒரு வடிகாலாக அற்பணித்துக் கொண்டாள்.

சேர்க்கையின் போது எப்போதும் இல்லாமல், "இன்னும் நல்லா. கம் ஆன் கிவ் மி ஹார்டர்" என்று எனக்கு காம வெறியேற்றினாள். அடுத்த இரண்டு நாட்களில் மஸ்ஸாஜ், ஸ்டீம் மற்றும் சானா பாத் என் மனத்தில் இருந்த கோப வெறியைத் தணிக்க. படுக்கையில் பல முறை எனக்கு காம வெறியேற்றி என் கோப வெறியை மறக்கச் செய்தாள்.

இரண்டாம் நாள் இரவு உக்கிரமான சேர்க்கைக்குப் பிறகு அவளை அணைத்துப் படுத்துக் கொண்டு இருந்தபோது தன் பேச்சைத் தொடங்கினாள்.

மைதிலி, "என்ன? அவனை நடுத்தெருவுக்குக் கொண்டு வர முடிவெடுத்தாச்சா?"

நான், "யாரை?"

மைதிலி, "வேற யாரு? எரிக்"

நான், "ஏய், கம்பெனியில் இருக்கும் ஷேர்களைத் தவிற சாம் ஸ்ப்ரிங்கர் சேத்து வெச்சு இருக்கும் சொத்து அவனுக்கு இன்னும் மூணு தலைமுறைக்குத் தாட்டும். மறந்துடாதே"

மைதிலி, "தெரியும். ஆனா பெரியவரும் நீங்களும் அவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கின கம்பெனியை உடைக்கறதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு சந்தோஷம்?"

நான், "நான் ஒண்ணும் உடைக்கப் போறது இல்லை. நான் உருவாக்கின ஃபேக்டரிகளில் எனக்கு மேஜர் ஷேர் இருக்கு. அவைகளை மட்டும் ஸ்ப்ரிங்கர் கம்பெனி நிர்வாகத்தில் இருந்து பிரிக்கப் போறேன்"

மைதிலி, "முரளி", என் மேல் படுத்து இருந்தவள் தன் முழங்கையை என் மார்பில் பதித்துத் தலையை உயர்த்தி என்னைக் கூர்ந்து பார்த்தாள். சில மிக இக்கட்டான சமயங்களில் மட்டுமே மைதிலி என்னை பெயர் சொல்லி அழைப்பாள், "நான் ஒண்ணும் தெரியாத மக்கு இல்லை. பிரிச்சதுக்கு அப்பறம் வேற கம்பெனிகூட பேரம் பேசிட்டு ஸ்ப்ரிங்கர் கம்பெனிக்கு உற்பத்தி செஞ்சு கொடுக்க முடியாதுன்னு சொல்லப் போறீங்க. அப்படி இல்லைன்னா அதிக விலை சொல்லுவீங்க. ஸ்ப்ரிங்கர் கம்பெனிக்கு பெரிய நஷ்டமாகும். இழுத்து மூடுவாங்க. இதுதானே உங்க ப்ளான்?"

மௌனம் காத்த என்னைப் பார்த்து கண்கள் கலங்க மைதிலி, "எரிக் குடும்பத்தை விடுங்கப்பா. வேற எத்தனை பேர் இங்கே வேலை செஞ்சுட்டு இருக்காங்க. அவங்க குடும்பத்தை எல்லாம் பத்தி யோசிச்சீங்களா?"

நான், "வேலை செஞ்சுட்டு இருக்கறவங்களுக்கு மறுபடி வேலை கிடைச்சுடும்"

மைதிலி, "மறுபடி ஏன் எனக்கு ஒண்ணும் தெரியாதுங்கற மாதிரி பேசறீங்க? எத்தனை பேர் ரிடையர் ஆகற வயசில் இருக்காங்க. அவங்களை யாராவுது வேலைக்கு எடுத்துக்குவாங்களா? இந்தக் கம்பெனியை இழுத்து மூடினா இத்தனை வருஷம் வேலை செஞ்சவங்களுக்கு வரவேண்டிய பணம் கிடைக்குமா? வேண்டாம்பா ப்ளீஸ். நாம் செய்யற பாவம் நம் குழந்தைங்களைப் பாதிக்கும்ன்னு சொல்லுவாங்க. ஏற்கனவே நீங்க செஞ்சதுக்காக நான் தினம் தினம் ஸ்ரீராமஜெயம் எழுதிட்டு உங்களுக்காக ஆண்டவன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்கேன்"


2007

ரேடியேஷன் தெரபி அவளை ரணப் படுத்தியது. ஆனால் அந்த சிகிச்சை முடிந்து ஆடையணியத் தொடங்கிய பின் முன்பு எடுப்பாக இருந்த மார்புப் பகுதியைத் தவிற வெளிப்படையாக வேறு எந்தச் சுவட்டையும் அது விடவில்லை.

ரேடியோ தெரபிக்குப் பிறகு அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். அழைத்துச் செல்வதற்கு முன் டாக்டர் ஸ்ரீநாத் என்னை தனியாக அழைத்து எனக்கு சில அறிவுறைகளைச் சொன்னார்.

டாக்டர் ஸ்ரீநாத், "மிஸ்டர் முரளி. இனி பாக்கி ட்ரீட்மென்டுக்கு அவங்க ஆஸ்பத்திரியில் தங்க ஆக வேண்டியது இல்லை. வீட்டில் தங்கிட்டு ட்ரீட்மென்ட் இருக்கும் நாளில் மட்டும் காலையில் வந்துட்டு சில மணி நேரங்கள், அல்லது அதிக பட்சம் சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டு போயிடலாம். ஆஸ்பத்திரி சுற்றுச் சூழலில் இருந்து விடுபடறது ஒரு அளவுக்கு அவங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். அடுத்த ரெண்டு வாரமும் அவங்க நல்லா சாப்பிடணும். இப்ப இருக்கும் சோர்வு முழுவதும் போகணும். ஏன்னா அதுக்கு அப்பறம் கொடுக்கப் போற கீமோதெரபியின் பாதிப்புகளை தாங்கற தெம்பு வேணும்"

நான், "என்ன மாதிரி பாதிப்புகள் டாக்டர்?"

டாக்டர் ஸ்ரீநாத், "ஆபரேஷன் மூலம் கேன்ஸர் கட்டிகளையும் கேன்ஸர் பாதிச்ச லிம்ஃப் நோடுகளையும் எடுத்தோம். அடுத்த ரேடியோ தெரபி மூலம் அந்த கட்டிகள் இருந்த பகுதியை சுற்றி இருந்த வேர்களை அழிச்சோம். ஆனால் உடம்பிலயும் மற்ற லிம்ஃப் நோடுகளிலும் இன்னும் கேன்ஸர் ஸெல் (அணு) இருக்கும். அந்த கேன்ஸர் ஸெல்கள் வேகமா வகுந்து (அதாவது ஒவ்வொரு அணுவும் இரண்டாகப் பிரிந்து இரு அணுக்களாக மாறுவது) பெருகி ரத்தம் மூலம் பரவி வேற இடத்தில் கேன்ஸரா முளைக்கும். ரத்ததில் கலந்த மருந்து மூலம் உடம்பில் இருக்கும் கேன்ஸர் ஸெல்களை அழிக்கறதுதான் இந்த கீமோதெரபி. கேன்ஸர் ஸெல்லை மட்டும் தாக்கற மாதிரி மருந்து இன்னும் கண்டுபிடிக்கலை. அதனால உடலில் வகுந்து பெருகும் மற்ற சில ஸெல்களையும் (உயிரணுக்களையும்) இந்த மருந்து பாதிக்கும்"

நான், "மத்த ஸெல்லுன்னா?"

டாக்டர் ஸ்ரீநாத், "சொல்றேன், முடி, நகம் இது ரெண்டும் இந்த மாதிரி ஸெல்கலால் மட்டும் ஆனது. அதைத் தவிற உடலில் பல இடங்களில் ஈரபசையை உண்டாக்கி தோலில் விரிந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கறதுக்குன்னு சில ஸெல்கள் இருக்கு. வாய், வயிறு, குடல், யோனி, தண்டுவடம், உள்ளங்கை, உள்ளங்கால் இந்தப் பகுதிகளில் அந்த மாதிரி ஸெல்கள் இருக்கு"

நான், "சோ, முடி விழறது இதனால்தானா?"

டாக்டர் ஸ்ரீநாத், "முடி விழறது ரொம்ப ஆப்வியஸா தெரியும் ஸைட் எஃப்ஃபெக்ட். குடலில் இருக்கும் இந்த மாதிரி ஸெல்கள் அழிபடறதுனால் குமட்டல், தலை சுற்றல் வரும். அதே மாதித்தான் வாய்புண் வரும். லிப் மாய்ஸ்சரைஸர் போடலைன்னா உதடுகள் வெடிக்கும். உள்ளங்கை, உள்ளங்காலில் தோல் உரிஞ்சு வீக்கமும் எரிச்சலும் வரலாம். யோனியில் இருக்கும் ஸெல்கள் அழிபடறதுனால் ஈரப்பசை குறைஞ்சு உள்தோல் வறண்டு போய் இருக்கும். இதனால் சில சமயம் யீஸ்ட் (புளிப்பை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா) இன்ஃபெக்ஷன் வந்து எரிச்சலும் வலியும் வரக்கூடும். இது எல்லாத்தையும் விட அதிகமா உடல் சோர்வும் மனச் சோர்வும் வரும். அடிக்கடி சீக்கிரம் எரிச்சல் அடைஞ்சு கோபமும் அழுகை வரும்"

அவர் முடிவாகச் சொன்னதை நான் இதுவரை மைதிலியிடம் பார்த்தது இல்லை.

நான், "இல்லை டாக்டர். அவ எதுக்கும் கோவப் படமாட்டா. எப்பவும் கல கலப்பா இருப்பா"

டாக்டர் ஸ்ரீநாத், "Let us hope that mentality of hers helps her to face what is to come. ரொம்ப கஷ்டப் படுவாங்க முரளி. ஆனா பொறுத்துக்க வேண்டிய கஷ்டம். இதில் எதுவுமே நிரந்தரமான விளைவுகளை ஏற்படுத்தாது" என்று முடித்தார்.

நான், "நான் பாத்துக்கறேன் டாக்டர்"

டாக்டர் ஸ்ரீநாத், "உங்களுக்கு ரொம்ப பிஸி ஸ்கெட்யூல் இருக்கும். இருந்தாலும் தினமும் நீங்க கொஞ்ச நேரமாவுது அவங்க கூட இருக்கணும். அவங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். அது ஒண்ணே போதும். இந்த ஸைட் எஃப்ஃபெக்ட் எல்லாத்தையும் ஈஸியா எதிர்கொண்டு குணமாக முடியும்"

அவர் இறுதியில் சொன்னது மணமுடித்தது முதல் ஒவ்வொரு நாளும் நான் தவறாமல் செய்வது என்பதை அவர் அறிந்து இருக்கவில்லை. மணமுடித்து அமெரிக்கா சென்ற புதிதில் பாஷை தெரியாத ஊரில் வீட்டில் தனியாக இருப்பாளே என்று ஏழு மணிக்குள் வீட்டை அடைவதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

இரவுச் சாப்பாட்டுக்கு முன்னால் குழந்தைகளுடன் அதற்குப் பின் படுக்கைக்கு போகும் வரை (படுக்கையிலும் தான்!?) அவளுடன் பேசிக் கொண்டு இருப்பேன். சில சமயம் வெளிநாட்டில் இருப்பவருடன் தொலைபேசி உரையாடல்கள் இருக்கும். அச்சமயங்களில் கூட அவள் என்னருகிலேயே, என் மேல் சாய்ந்து கொண்டோ அல்லது என் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டு இருப்பாள். டாக்டர் சொன்ன பிறகு எளிதில் சமாளித்து விடலாம் என்று எனக்குத் தோன்றியது. இப்போதைக்கு அவளுக்கு அந்தச் சிகிச்சையை எதிர்கொள்ளும் உடல் பலமும் மன பலமும் வரவைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.



No comments:

Post a Comment