Saturday, October 17, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 12

அதிகாலையில் அவர்கள் கிளம்பும் போது ராகினி விட்ட கண்ணீரைப் பார்த்து ஊர் மக்களும் அழுதனர், மான்சி பிரியாவிடை பெற்று காரில் ஏறினாள், டிரைவருக்கு அருகில் சாமிநாதன் அமர்ந்துகொள்ள, சத்யன் பின் இருக்கையில் அமர்வதாக சொன்னபோது “ இல்லப்பா நான் ரிஷியோட பின்னாடி உட்கார்ந்து வர்றேன், நீ நைடெல்லாம் தூங்கலை அதனால முன் சீட்டுல நீயும் மான்சியும் தாராளமா உட்கார்ந்து முடிஞ்சா கொஞ்சம் தூங்குங்க” என்று விஜயா சொல்லிவிட்டு பின் இருக்கையில் பேரனுடன் ஏறிக்கொண்டாள், அவளுடன் பிரவுனியும் பின்னால் இருந்த சீட்டில் ஏறிக்கொண்டுது

டிரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து ஒரு முதலாளியின் தோரணையோடு காரில் வலம்வரும் விஜயா,, பேரனுடன் பின் இருக்கையில் அமர்ந்தது மான்சிக்கு வியப்பாக இருந்தது,


பின்னிரவில் தோட்டத்தில் நடந்த உரையாடலுக்குப் பிறகு சத்யன் மான்சியிடம் பேசவில்லை, மகனை தூக்கிக்கொண்டு அவனுடனேயே கொஞ்சிக்கொண்டு மான்சியின் பொறாமையை தூண்டிக்கொண்டிருந்தான், இப்போது பேரனை வாங்கிக்கொண்டு விஜயா பின்னால் ஏறிக்கொண்டதும் சத்யன் எதுவும் பேசாமல் மான்சியின் அருகில் அமர்ந்தான், ஆனால் ஒரு அடி இடைவெளிவிட்டு

மான்சிக்கு எரிச்சலாக வந்தது, பக்கத்துல யாரு இருக்காங்க, நாம எங்க இருக்கோம் இதெல்லாம் பாக்காம கிடைக்கும் போதெல்லாம் மொச்சு மொச்சுன்னு முத்தம் குடுக்க மட்டும் தெரியுது?, இப்ப என்னமோ நல்ல புள்ளை மாதிரி இவ்வளவு தள்ளி உட்கார்ந்து வர்றத பாரு, நான் அப்படியென்ன சொன்னேன், எனக்கு கொஞ்சம் டைம் வேனும்னு சொன்னேன், என்கூட பேசக்கூடாது, என்னை தொடக்கூடாதுன்னா சொன்னேன், ச்சே என்ன மனுஷன் இவரு? என்று மனதுக்குள் ஆத்திரத்துடன் புகைந்தபடி நொடிக்கொருதரம் சத்யனை ஓரக்கண்ணால் பார்த்தபடி வந்தாள் மான்சி

சத்யன் நேற்று பழனியில் இருந்து மான்சியை பின்தொடர்ந்து வந்தபோது காரிலேயே விட்டுவிட்ட அவனுடைய செல் போனை நோண்டியபடி வந்தான்,
சாமிநாதன் மான்சியுடன் பேசிக்கொண்டே வந்தார், முதலில் ராகினியின் பூர்வீகம் பற்றி மான்சியிடம் கேட்டார், மான்சியின் படிப்பு பற்றி கேட்டார், ரிஷி பிறந்தது எங்கே என்று கேட்டார், அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் மெல்லிய குரலில் பதில் சொன்னபடி வந்தாள் மான்சி

அப்பா கேள்வி கேட்டதையும், மான்சி அதற்கு பதில் சொன்னதையும் சத்யன் கவனமாக கேட்டுக்கொண்டு வந்தானே தவிர குறுக்கே ஒரு வார்த்தைகூட பேசவில்லை, நேரம் ஆக ஆக மான்சிக்குள் இருந்த புகைச்சல் மெல்ல ஆத்திரமாக உருவெடுத்தது

எனக்கு தண்ணி காட்டும் இவனுக்கு நான் தண்ணி காட்டினால் என்ன? என்று நினைத்தாள், நினைத்தமாத்திரத்தில் முகத்தில் குறும்பாய் ஒரு புன்னகை மலர்ந்தது, லேசாய் நெருங்கி அமர்ந்து பார்த்தாள், அசையாமல் அமர்ந்திருந்தான் சத்யன், என்ன செய்வது என்ற யோசனையுடன் கண்மூடி பின்னாள் சாய்ந்தாள் மான்சி,

அவளுக்கு இப்போது என்ன தேவை என்று அவளுக்கே புரியவில்லை, அவனை சந்தித்த இந்த பதிநான்கு மணிநேரத்தில் அவன் நெருங்கும்போது அவனுடைய துரோகம் ஞாபகத்திற்க்கு வந்து அவளை வதைத்தது. அவன் விலகும்போது அவன் மேல் இவளுக்கிருந்த அபரிமிதமான காதல் விழித்துக்கொண்டு அவன் தொடமாட்டானா என்று ஏங்கியது, இந்த விசித்திரமான உணர்வால் மான்சி பெரும் குழப்பத்தின் பிடியில் இருந்தாள், 

இத்தனை நாட்களாக அவன் துரோகத்தை மனதில் வைத்து வெறுத்தாலும், ஒவ்வொரு நாளும் இரவும் நிலவும் அவளின் உணர்வுகளை தூண்டி அவளின் விரகத்தை சோதித்துக் கொண்டுதான் இருந்தது, சில இரவுகளில் சத்யனின் ஆண்மையும் அதன் ஆளுகையும் மான்சியை ரொம்ப தடுமாற வைக்கும் அந்தமாதிரி நாட்களில் தலையணையை அணைத்துக்கொண்டு கண்ணீர் விடுவதை தவிர மான்சிக்கு வேறெதுவும் தோன்றாது, உண்மையைச் சொன்னால் அவளின் தன்மானம் விரகத்தை அடக்க முயன்று தோற்றுப்போனது. இதனால் நான் காமத்துக்காக அலைகிறேனோ என்று பலநாட்கள் அவள் தன்னையே வெறுத்ததுண்டு,

இப்பவும் நேற்று முத்தமிட்ட இடமெல்லாம் இன்னும் ஈரம் காயாதது போல் சிலுசிலுத்தது, எல்லோர் முன்பும் தன்னை அணைத்தது, முத்தமிட நெருங்கியதை எல்லாம் நினைத்தால் இப்போது மான்சிக்கு சிலிர்த்து, எப்பவுமே சத்யன் பயந்தவன் இல்லை, எதையும் துணிந்து தைரியத்துடன் செய்துவிட்டு அப்புறம்தான் சுற்றுமுற்றும் கவணிப்பான், நேற்று அதைகூட கவனிக்காமல் அவன் கவனம் முழுவதும் தன்மீதே இருந்ததை எண்ணி மான்சி கர்வமாக நிமிர்ந்தாள்

அவன் பார்வை பட்டவுடனேயே மலரும் தன் பெண்மையை எண்ணி சுகமாக இருந்தாலும் ,, இப்படி பலகீனமான மனதை வைத்துக்கொண்டு அவனிடம் சவால் விட்டிருக்ககூடாதோ? ஏற்கனவே சிறு வயதிலிருந்தே அவன் அழகுக்கும், ஸ்டைலுக்கும், கம்பீரத்திற்க்கும், அடிமையாகிப் போன மான்சியின் மனது, அவனது ஆண்மையின் பலம் தெரிந்தும் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்துபோனது, அவன் கொடுத்த சுகங்களையும், கட்டிலில் அவன் தன்னை ஒரு மகாராணியைப் போல உணர வைத்ததையும் மறக்கமுடியாது பல நாட்கள் தவித்தவளுக்கு இப்போ சத்யனை நேரில் பார்த்ததும் தவிப்பு ரொம்ப அதிகமானதுதான் மிச்சம்

அவளுக்கு சத்யனின் இந்த பாராமுகத்தை தாங்க முடியவில்லை, அவனுக்கு தன்மேல் இருக்கும் காதலை எப்படி புரிந்துகொள்ளவது என்பதைவிட,,, அவன் தன்னை விட்டு நீங்காமல் பார்த்துக்கொள்வதே தலையாய வேலை போல் இப்போது தோன்றியது, ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் பலகீனமானவன், நான் வெறுத்து ஒதுக்கிவிட்டேன் என்று வேற எங்காவது பார்வையை திருப்பிவிட்டால் என்ன செய்வது? ஏதோவொரு சந்தர்பத்தில் திருந்திவிட்டேன் என்று அவன் சொல்வது உண்மையாக இருந்தால்? அப்படி திருந்தியவனை பாதுகாக்கும் பொருப்பு தனக்கிருப்பதாக மான்சி புரிந்துகொண்டாள்

அந்த மூன்று மாத காலமும அவன் மனதில் தன்னுடைய நிலைபாடு என்ன என்று தெரியும் வரை உறவைத் தவிர்க்க வேண்டும், ஆனால் அவனை தன்னை விட்டு நீங்காமல் இருக்கவும் செய்யவேண்டும், இதுதான் சரியான வழி என்று மான்சி முடிவெடுத்து முடிக்கும்போது அவர்களின் கார் பழனியை நெருங்கியது,
அவளுக்குத் தெரியும் இதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு என்று,

அவளைப்பொருத்தவரையில் சத்யன் தன் அருகிலேயே காதல் பார்வைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும், ஆனால் இவள் அவனுக்கு இணங்காதது போல் அவனை தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும் 

அப்போது விஜயாவிடம் இருந்த ரிஷி எதற்கோ சினுங்க, கண்மூடி சிந்தனையில் இருந்த மான்சி பட்டென்று கண்விழித்து, “ அவனுக்கு பசிக்குது போலருக்கு பால் குடுக்கனும் இங்கே குடுங்க” என்று பின்னால் கை நீட்டினாள்

விஜயா ரிஷியை கொடுத்ததும் வாங்கி தன் மடியில் கிடத்தி, ரவிக்கையின் கீழ் இரண்டு ஊக்குகளை விடுவித்த மான்சி மெதுவாக ரவிக்கையை உயர்த்திவிட அவளின் பால் கலசங்களில் ஒன்று குழந்தையின் முகத்தருகே வந்து உரச, மான்சி தன் ஆள்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே காம்பைப் பற்றி குழந்தையின் வாயில் வைக்க, குழந்தை கண்மூடி அரைதூக்கத்தில் காம்பை கவ்வி சப்ப ஆரம்பித்தது

மான்சிக்கு இப்போது சத்யன் தன்னைப் பார்ப்பானா என்று தெரிந்துகொள்ள வேண்டும், குழந்தையை அடுத்த மார்புக்கு மாற்றிவது போல் தூக்கி திரும்பினாள், சட்டென்று சத்யன் ஜன்னல் பக்கம் திரும்புவதைப் பார்த்துவிட்டாள் “ அடப்பாவி திருடா?” என்று மனதுக்குள் எண்ணி ரகசியமாக சிரித்தவள், தூங்கிய குழந்தைக்கு பால் கொடுத்தது போதும் என்று எண்ணி குழந்தையின் நாப்கினை மாற்ற நினைத்தவள், “ ரிஷி கொஞ்சம் பிடிங்க நாப்கின் மாத்தனும் ” என்று குழந்தையைத் தூக்கி சத்யனிடம் கொடுக்க அவனும் சாதரணமாகத் தான் வாங்கினான், ஆனால் குழந்தையை வாங்கும்போது அவன் கண்கள் போன இடம் அவனுக்கு அபாய அறிவிப்பு விடுத்தது, சத்யன் மூச்சுவிட மறந்து சட்டென்று வாய்ப்பிளந்தான்

இவ்வளவு நேரம் குழந்தைக்கு பால் கொடுத்த மான்சி புடவையை இழுத்து மூடினாளே தவிர ரவிக்கையை மூடிவில்லை, மெல்லிய ஜார்ஜெடெ புடவையின் ஊடே தெரிந்த வென் கோபுரத்தைப் பார்த்து சத்யன் எச்சில் விழுங்க, மான்சி அலட்சியமாக அவன் மடியில் இருந்த குழந்தைக்கு நாப்கினை மாற்றினாள், ஈரமான பழைய நாப்கினை ஒரு கவரில் போட்டு விட்டு “ அங்கிள் காரை கொஞ்சம் ஓரமா நிறுத்தச் சொல்லுங்க கை கழுவனும்” என்றாள்

கார் ஓரமாக நிற்க, டிரைவர் தண்ணீர் பாட்டிலுடன் இறங்க, சத்யன் பதட்டமானான், டிரைவர் வருவதற்குள் குழந்தையை மான்சியின் மடிக்கு மாற்றி, பக்கவாட்டில் தெரிந்த புடவையை அவசரமாக விலக்கி அவள் மார்பை உள்ளே தள்ளி ரவிக்கையை கீழே இழுத்துவிட்டான்,

இதை மான்சியே எதிர்பார்க்கவில்லை, வீட்டில் சிலநேரங்களில் அவள் இதுபோல் குழந்தையின் ஈரத் துணியை மாற்றுவது வழக்கம், அப்போது வெறும் புடவையை மட்டும் இழுத்து மூடுவாள், நிறைய முறை ராகினி கவனித்துவிட்டு “ இன்னும் சின்ன குழந்தையாவே இருக்கியே கண்ணு, பொம்பளையே பார்த்தாலும் கூட ஒருத்தர் கண்ணு போல இருக்காது, நல்லா ரவிக்கையை இழுத்து மூடு கண்ணு” என்று திட்டுவாள், இப்போது அதே பழக்கம் வந்து சத்யன் இழுத்து மூடும்படி ஆகிவிட்டது அவளுக்கு சங்கடமாக இருந்தது, ச்சே என்னைப்பத்தி என்ன நினைப்பான், அதுவும் அவன் கை காயத்தோடு இப்படி.... அவளுக்குள் ஒரு மாதிரியாக இருக்க தலையை சங்கடமாக குனிந்து கொண்டாள்

சத்யன் மகனை வாங்கிக்கொண்டு, “ அந்த கவரை கீழே போட்டுட்டு கை கழுவிட்டு வா மான்சி” என்று அமைதியாக கூறியதும் சரியென்று தலையசைத்து விட்டு இறங்கி டிரைவர் கொடுத்த தண்ணீரால் கையை கழுவிக்கொண்டு மறுபடியும் காரில் ஏறினாள்

அவள் அமர்ந்ததும் அவள் மடியில் மகனை கிடத்திய சத்யன் “ பால் குடிச்சிட்டான்னா ரிஷியை அம்மா கிட்ட குடுத்துடு” என்றான்

“ ஆமாம் மான்சி என் கிட்ட குடு நான் வச்சிருக்கேன், நீ கொஞ்ச நேரம் தூங்கு, நைட்டெல்லாம் தூங்கலை” என்று கரிசனத்தோடு விஜயா கூறிவிட்டு குழந்தைக்காக கையை நீட்டினாள் 




மான்சிக்கும் தூக்கம் கண்களை அழுத்தியது, ரிஷியை தூக்கி பின்னால் கொடுத்துவிட்டு சீட்டில் கண்மூடி சாய,, “ நான் நகர்ந்துக்குறேன் மான்சி நீ காலை நீட்டி நல்லா படுத்துக்க” என்று சத்யன் கூறியதும் மான்சிக்கும் அப்படிப் படுத்தால் தேவலாம் போல் இருக்க . அவன் பக்கமாக காலை நீட்ட சங்கடப்பட்டு தலையை அவன் பக்கமாக வைத்துக்கொண்டு காலை மடக்கி படுத்துக்கொள்ள,

சத்யன் அவள் தலையை தன் காயம்பட்ட கைகளால் தூக்கி தன் மடியில் வைத்துக்கொள்ள முயன்றான், மான்சி புரிந்துகொண்டு சற்று மேலே ஏறி படுத்து அவன் மடியில் தலை வைத்துக்கொண்டாள்

மான்சியின் தலை நழுவாமல் சத்யனின் வலது கை அவள் கழுத்தை சுற்றி வளைத்து தன் வயிற்றோடு அழுத்திக்கொண்டு விரல்களால் அவள் நெற்றியை வருட,, மான்சிக்கு சுகமாக இருந்தது , இதுவரை எத்தனையோ முறை சத்யன் மான்சியின் மடியில் படுத்துறங்கி இருக்கிறான், மான்சி அவன் மடியில் தலைசாய்வது இதுதான் முதல்முறை, அவனுடைய அன்பான வருடலில் மான்சிக்கு கண்ணைக் கரித்தது,

சற்றுமுன் அவள் மறந்து போய் விட்டதால் நேரவிருந்த அவமானம், சத்யனால் தவிர்க்கப்பட்டது, இப்படியெல்லாமா இருக்கறது என்று கோபமாய் ஒரு பார்வை கூட பார்க்கவில்லை, மாறாக தெரியாத குழந்தைக்கு உடை திருத்தும் ஒரு கண்ணியம் மட்டுமே அவன் செயலில் இருந்தது, இப்போதும் அவன் மடியில் படுக்கவைத்து தூங்க வைப்பதில் கூட அன்பான ஒரு அரவணைப்பு இருந்ததே தவிர அவன் செயலில் கொஞ்சம்கூட விரசமில்லை,

இதற்கு முன்பு சந்தித்த சத்யனுக்கும் இவனுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள், அந்த சத்யனிடத்தில் அவசரமும், ஆர்வமும், தேடலும், அதிகம் இருக்கும், பார்த்தவுடன் கட்டியணைத்து முத்தமிட்டு இவள் சுதாரிக்குமுன் அடுத்தகட்டத்துக்கு போய் விடுவான், இந்த சத்யனிடம் ஒரு நிதானம் இருந்தது, இவள் எனக்கு சொந்தமானவள், என்னவள் இவள், எனக்கு அவசரமில்லை, என்று ஒரு நிதானம், நேற்று சூழ்நிலை புரியாமல் முத்தமிட்டது கூட இத்தனை நாள் பிரிவால் தானோ? மான்சி மெதுவாக புரண்டு கவிழ்ந்தார்ப் போல் படுத்து அவன் இடுப்பை தன் கைகளால் வளைத்துக்கொண்டாள்

சத்யனுக்கும் ஏதோ புரிந்திருக்க வேண்டும், குனிந்து அவள் பின் தலையில் முத்தமிட்டு, பிறகு கொஞ்சம் சரிந்து அமர்ந்து காலை முன்நோக்கி மடித்து உயர்த்தி, அவள் தலையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து க்கொண்டான், அவன் இதயத்தின் துடிப்பை அவள் கன்னங்கள் உணர்ந்தது, அவளின் மூச்சுக்காற்றை அவனுடைய இதயம் உணர்ந்தது,

அவனுடைய செய்கையால் மான்சிக்கு கண்ணீர் வந்தது, அவளின் சூடான கண்ணீர் அவன் சட்டையை மீறி நெஞ்சை சுட்டது, அது அவள் கண்ணீர் தான் என்று நிமிடத்தில் உணர்ந்த சத்யன் “ ஸ் என்னடா இது, இனிமே நீ எப்பவும் அழக்கூடாது, நான் இருக்கும்வரை” என்று சத்யன் குனிந்து அவள் காதோரம் மெல்லிய குரலில் கூறினாலும் அந்த குரல் சாமிநாதன், விஜயாவின் காதுகளிலும் விழுந்தது, ஆனால் இருவரும் எதுவும் பேசவில்லை, அவள் கண்ணீரை கண்ட சத்யனின் அணைப்பு இறுக்கியது

மான்சியை மடியில் தாங்கிய சத்யனும் கண்மூடி பின்னால் சாய்ந்தான், ஆனால் மான்சியின் தலையை பற்றியிருந்த கைகள் மட்டும் தளரவில்லை,
பழனி வந்ததும் சாப்பாட்டுக்காக ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தச் சொன்னார் சாமிநாதன், கார் குலுங்கி நின்றதும் மான்சிதான் முதலில் விழித்தாள், தன்னைச்சுற்றியிருந்த சத்யனின் கையில் காயம் இருந்த இடத்தில் உதட்டை அழுத்தமாக பதித்துவிட்டு வேகமாக எழுந்துவிட்டாள் மான்சி

சத்யன் தூக்கத்தில் கவனித்திருக்க மாட்டான் என்றுதான் மான்சி நினைத்தாள், ஆனால் அவன் “ இந்த கை என்ன பாவம் பண்ணுச்சு ” என்று இடது கையைக் காட்டி பரிதாபமாக கேட்டதும், மாட்டிக்கொண்டதில் வெட்கப்பட்டு மான்சி வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்


காரில் இருந்து இறங்கி சத்யன் கார் கதவை திறந்து குனிந்த சாமிநாதன் “ சத்யா நாங்க உள்ள போய் சாப்பிடுறோம், உனக்கு ஈசியா சாப்பிடுற மாதிரி ஏதாவது வாங்கி குடுத்தனுப்புறோம் ஸ்பூன் போட்டு சாப்பிடு சத்யா” என்றவர் மான்சியைப் பார்த்து “ நீயும் வாம்மா சாப்பிடலாம்” என்று அழைத்தார்
திரும்பி அவரை பார்த்தவள் “ எனக்கும் இவருக்கு வாங்குறதையே வாங்கி குடுத்தனுப்புங்க அங்கிள், இங்கேயே சாப்பிட்டுக்கிறேன்” என்று புன்னகையோடு கூற..

சரியென்று நிமிர்ந்த சாமிநாதன் “ ஏன்டி விஜி நீயாவது இறங்கேன், அப்படியே பேரனோட ஜக்கியமாயிட்டப் போலருக்கு” என்று மனைவியை கிண்டல் செய்தார்
வெகுநாட்களுக்குப் பிறகு வெட்கப்பட்ட விஜயா “ அய்யோ இவரு என்னமோ பேரனையே கொஞ்சாதவரு மாதிரி பேசுறாரு பாருடா ரிஷி ?” என்று போலியாக சலித்தபடி காரில் இருந்து இறங்கினாள்

சாமிநாதன் பேரனை வாங்கிக்கொண்டு மறுபடியும் குனிந்து “ ஏன்மா ரிஷி என்னம்மா சாப்பிடுவான்?” என்று மான்சியிடம் கேட்டார்

“ ரசம் சாதம் குழைச்சு ஊட்டுனா சாப்பிடுவான், அதோட பருப்பு சாதம் கூட சாப்பிடுவான் அங்கிள்” என்ற மான்சி “ அவனை குடுங்க அங்கிள் நானே ஊட்டுறேன், நீங்கப் போய் சாப்பிட்டு வாங்க” என்று மான்சி கூறியதை கேட்க அங்கே யாருமில்லை

“ ரிஷி விஷயத்தில் இனி உனக்கு எந்த வேலையும் இருக்காது போல, எல்லாம் அவங்க பாட்டி தாத்தாவே பார்த்துக்குவாங்க, ஆனாலும் எங்கப்பாவும் அம்மாவும் இன்னும் இளமையா இருக்காங்க, ரிஷியை பேரன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க தானே?” என்று சத்யன் குறும்பாக கேட்க

வேறெங்கோ பார்ப்பது போல் பாவனை செய்த மான்சி “ ஆமா புள்ள பிஞ்சிலேயே பழுத்தா சீக்கிரமா பேரன் பேத்தியை பார்த்தாக வேண்டியது தான், வேற வழி, ஆனாலும் இதுவே ரொம்ப லேட் தான், உங்க அனுபவத்துக்கு இன்னும் அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே இவங்க தாத்தா பாட்டியா ஆயிருக்கனும், என்னப் பண்றது எல்லாம் அந்த ஆஸ்பிட்டல்லயே கரைஞ்சு வீனாப் போச்சு” என்று எவ்வளவு அடக்கியும் முடியாமல் மான்சி குத்தலாக பேசிவிட, அவ்வளவு நேரம் அங்கிருந்த இயல்பு தொலைந்து போய் ஒரு இறுக்கம் வந்து சூழ்ந்து கொண்டது,

சத்யன் கண்களை இறுகமூடி சீட்டில் சாய்ந்தான், அவன் முக சதைகள் கெட்டிப்பட்டு நெற்றி நரம்புகள் புடைத்தன, கட்டுப்போடப்பட்ட இரு கைகளும் விரைத்து முறுக்கியதில் கட்டு அழுந்தி காயத்தில் நீர் கசிந்தது, அவனைப் பார்த்த மான்சிக்கு வயிறு திக்கென்றது, அய்யோ ஏன் சொன்னோம் என்ற வேதனையில் துடித்துப் போனாள்,

அப்போது டிரைவர் உணவு கவருடன் வர, மான்சி அதை வாங்கி உள்ளே வைத்துவிட்டு நிமிர.... “ இன்னும் ஏதாவது வேனுமான்னு கேட்டாங்கம்மா?” என்று டிரைவர் கேட்க..

“ இல்ல இதுவே போதும், தண்ணி பாட்டிலை மட்டும் எடுத்து குடுத்துட்டுப் போங்க” என்று மான்சி கூற, முன் இருக்கையின் அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்துவிட்டுப் போனான் டிரைவர்

மான்சி மெதுவாக அவன் கையைத் தொட்டு “ சாப்பாடு வந்துருச்சு வாங்க சாப்பிடலாம்” என்றாள் மெல்லிய குரலில்

சத்யன் மூடிய கண்ணை திறக்கவில்லை, இறுகிக்கிடந்த உதடுகளை மட்டும் திறந்து “ எனக்கு வேனாம் நீ சாப்பிடு” என்றான்

“ அய்யோ நைட்டும் நீங்க எதுவும் சாப்பிடலை, காலையிலையும் வெறு காபி தான் குடிச்சீங்க,, ப்ளீஸ் சாப்பிடுங்க” என்று மான்சி வற்புறுத்தி கூற

“ எனக்கு வேண்டாம் மான்சி” என்றான் மறுபடியும்

மான்சி எதுவும் பேசவில்லை, அவளும் சீட்டில் சாய்ந்துகொண்டாள்,, சற்றுநேரம் கழித்து கண்திறந்த சத்யன் “ நீ சாப்பிடு மான்சி, நீயும்தான் நைட் சாப்பிடலை” என்று அமைதியாக கூறினான்

மான்சி அவனுக்கு பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள,,. அவள் தோளில் கைவைத்த சத்யன் “ சரி வா நானும் சாப்பிடுறேன்” என்று அவன் அழைத்ததும் வேகமாக திரும்பி அவனைப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள்


வெஜிடபிள் ரைஸ் வாங்கி வந்திருந்ததால், இருவருக்கும் காரில் அமர்ந்து சாப்பிட எளிதாக இருந்தது, சாப்பாட்டை எடுத்து பிரித்து இருவருக்கும் நடுவே வைத்த தண்ணீரை எடுத்து தயாராக மான்சி வைத்தாள் , இருவரும் கைகழுவிவிட்டு சத்யன் சாப்பாட்டு கவரில் இருந்த ஸ்பூனை எடுத்து உணவை அள்ளி வாயில் வைக்க, மான்சி அவன் கையைப் பற்றி தடுத்து ஸ்பூனை பிடுங்கி வெளியே போட்டுவிட்டு, சாப்பாட்டை அள்ளி சத்யனின் வாயருகே எடுத்துச்சென்றாள்

சத்யன் அவள் கண்களையேப் பார்த்து “ வேனாம் மான்சி, உனக்கு பிடிக்காத எதையும் செய்யவேண்டாம்” என்று கூறினான்

“ அய்ய...... எனக்கு பிடிக்காது எதுன்னு உங்களுக்கு ரொம்ப தெரியுமோ? பேசாம வாயைத்திறங்க” என்று மான்சி அதட்டியதும், சத்யன் சிறு புன்னகையுடன் வாயைத்திறந்து உணவை வாங்கிக்கொண்டான்

மான்சி அவனுக்கு ஒரு வாய் தனக்கு ஒரு வாய் என்று மாற்றி சாப்பிட்டனர், சத்யன் மட்டும் தன் வாய்க்குள் உணவோட போகும் அவள் விரல்களை விடுவிக்க சிறிதுநேரம் எடுத்துக்கொண்டான், உணவோடு சேர்த்து அவள் விரல்களையும் ருசித்தான், ஒவ்வொரு முறையும் “ அய்யோ விரலை விடுங்க, அப்படியே கடிச்சி முழுங்கிடுவீங்க போலருக்கே?” என்று மான்சி கூறியபிறகே தன் வாய்க்குள் இருக்கும் விரல்களை விடுவான்,

சத்யன் பின்சீட்டில் எட்டிப் பார்த்து பிரவுனிக்கு என்று இருந்த பிஸ்கட்டை போட, அது தின்றுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டது

இருவரும் சாப்பிட்ட முடிக்கவும் தான், ஹோட்டலுக்குள் சாப்பிட போனவர்கள் வந்தனர், சாமிநாதன் தன் பேரனை கொஞ்சியபடி வந்து “ பருப்பு சாதம்தான்மா கொஞ்சம் சாப்பிட்டான்” என்று மான்சியிடம் சொல்லிவிட்டு பேரனுடன் முன் சீட்டில் ஏறி அமர்ந்து “ வேணு இதோ நம்ம வீட்டுல தான் வண்டி நிக்கனும் கிளம்பு ” என்றதும் கார் சீறிக்கொண்டு கிளம்பியது

இவர்கள் யாரையும் பார்த்து ரிஷி அழாதது மான்சிக்கு வியப்பாக இருந்தது, அவன் சொந்தங்களை பார்த்தவுடன் என்னையே மறந்துட்டானே? ” என்று எண்ணினாள் மான்சி

பொள்ளாச்சி வரையுமான மிச்ச தூரத்தையையும் சத்யனின் மடியில் படுத்து தூங்கியபடியே வந்தாள் மான்சி, முன்பு அவள் தலையை மட்டும் தாங்கிக்கொண்டு வந்த சத்யன் இம்முறை அவள் இடுப்பை தன் கைகளால் வளைத்துப் பிடித்தபடி வந்தான்

வீடு வருவதற்கு சற்றுநேரத்துக்கு முன்பே அவளை எழுப்பியவன் தன் விரல்களால் அவளின் கலைந்த கூந்தலை சரிசெய்து ஒதுக்கி விட்டான்,, வீடு வந்துவிட்டது என்றதும் மான்சிக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் உள்ளிருந்து கிளர்ந்தது, அமைதியாக சத்யனின் கையை பற்றியபடி அமர்ந்திருந்தாள்

வீட்டு வாசலில் கார் நின்றதும் சத்யன் முதலில் இறங்கிக்கொண்டு மான்சியை நோக்கி கையை நீட்ட, அவன் கையைப்பிடித்துக் கொண்டு மான்சி இறங்கினாள், இவர்களுக்கு முன்பே இறங்கிய விஜயா பேரனை சாமிநாதனிடமிருந்து வாங்கி மான்சியிடம் கொடுத்து “ ரெண்டுபேரும் குழந்தையோட வெளியவே நில்லுங்க, நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு பரபரப்புடன் வீட்டுக்குள் போனாள்

அடுத்த சிலநிமிடங்களில் வேலைக்காரர்கள் அனைவரும் மான்சியையும் அவள் மகனையும் பார்க்க வாசலுக்கே வந்துவிட்டனர், ஜானகியும் வாசுகியும் ஆளுக்கொருப் பக்கமாய் மான்சியை கட்டிக்கொண்டனர், ஜானகி ரிஷியை வாங்கி கண்ணீருடன் முத்தமிட்டுவிட்டு மறுபடியும் மான்சியிடமே கொடுத்தாள்

விஜயா ஆரத்தி சுற்ற, மான்சி தன் மகனுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தாள், விஜயா பரபரப்புடன் வேலைக்காரர்களை ஏவ, எல்லோரும் திசைக்கொருவராய் பறந்தனர்,

சத்யன் அருகில் தலை குனிந்து அமர்ந்திருந்த மான்சியின் அருகே அமர்ந்த விஜயா “ நீ எதை நினைச்சும் சங்கடப்படாதே மான்சி, இந்த வீட்டுல உன் மனசு நோகும்படி எதுவுமே நடக்காது” என்று அவள் கையைப் பற்றி ஆறுதலுடன் கூற.. மான்சி ஒப்புதலாய் தலையசைத்தாள்


மகனுக்கு அருகே அமர்ந்த சாமிநாதன் “ நம்ம யோசியரை கிட்ட கேட்டு சீக்கிரமா ஒரு நல்லநாள் பார்த்து உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணிடலாம் சத்யா,, அதுவரைக்கும் மான்சி கீழே விருந்தினர் அறை எதிலயாவது தங்கிக்கட்டும்,, என்ன சொல்ல சத்யா? ” என்று மகனிடம் யோசனை கேட்டார்

“ இல்லப்பா,, எனக்கும் மான்சிக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கு, அதையெல்லாம் பேசி தீர்க்கனும், அவள்கிட்ட இருந்து நான் நிறைய தெரிஞ்சுக்கனும், அதனால மான்சி என் ரூம்லயே தங்கட்டும், உங்க திருப்திக்காக வேனாம்னா ஒரு உறுதி சொல்றேன், கல்யாணம் வரை நான் வரம்பு மீற மாட்டேன்,, போதுமா அப்பா?” என்று சத்யன் சொன்னதும்.

சாமிநாதன் குழப்பமாக விஜயாவை பார்த்தார், விஜயா மான்சியைப் பார்த்து “ என்னம்மா சத்யன் ரூம்லயே தங்கிக்கிறயா?” என்று கேட்க

மான்சி அமைதியாக தலை குனிந்து யோசித்தாள்,, ஆமாம் சத்யன் சொல்வது சரிதான், அவனிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது, இதுவரை எனக்கு புரியாத பல விஷயங்களை புரிந்துகொள்ளவும்,, அவனுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கவும்,, அவன் அருகாமையில் இருந்தால் மட்டுமே முடியும், அதைவிட முக்கியம் சத்யனது உடல்நிலையும் மனநிலையும் அதைப் பற்றி முற்றிலும் தெரியவேண்டும் என்றால் அவனை விட்டு அகலாமல் இருந்தால் மட்டுமே முடியும்

பட்டென்று தலை நிமிர்ந்த மான்சி “ ஆமாம் அங்கிள், இப்போ அவர் இருக்கும் நிலையில நான் அவர் கூடவே இருந்தால் தான் முன்னாடி நடந்து இவர் மறந்ததா சொல்ற பல விஷயங்கள் புரியவரும், அதனால நான் அவர் ரூம்லேயே இருக்கேன்” என்று மான்சி தீர்மானமாக கூறினாள்.



“ சரி விஜயா நீ போய் சத்யன் அறையில மான்சி தங்க எல்லா ஏற்பாடும் பண்ணு, நான் நம்ம டாக்டருக்கு போன் பண்ணி மான்சி வந்துட்ட விஷயத்தை சொல்றேன்” என்று சாமிநாதன் தன் அறைக்கு போய்விட, விஜயா வேலைக்காரர்கள் இருவரை அழைத்துக்கொண்டு சத்யனின் அறைக்கு போனாள்

சத்யன் வெற்றியுடன் மான்சியை காதலாய் பார்க்க,, மான்சி கர்வத்துடன் அவனை பாவமாய் பார்த்தாள், இருவரின் பார்வையிலும் நிறைய வித்தியாசங்கள், மான்சி அவனுக்குள் இருப்பவனை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவன் அறையில் தங்குவதற்கு ஒத்துக்கொண்டாள், சத்யன் அடிக்கடி மாறும் அவளை தன் காதலால் ஒரேயடியாக மாற்றும் எண்ணத்தில் தன்னுடனேயே தங்கவைத்துக் கொள்கிறான்,

சத்யனிடத்தில் தன் காதலை அவளுக்கு புரியவைக்கும் ஆர்வமிருந்தது,, மான்சியிடத்தில் அவனை அலசி ஆராயும் அவசரமிருந்தது

இனி அந்த மூடிய அறைக்குள் நடக்கப்போவது, சத்யனின் காதல் காவியமா? அல்லது மான்சியின் புலன்விசாரணையா? 




No comments:

Post a Comment