Thursday, October 15, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 8

மயக்க மருந்தை விரட்டி மான்சியின் நினைவுகளை தக்கவைக்க போராடியது சத்யனின் செயலிழந்து வரும் மூளை, அவளுடன் தோட்டத்தில் உலாவிய நினைவுகளுடன் நின்று போனது சத்யனின் நினைவுகள்

டாக்டர்கள் தங்களின் வேலையை தொடங்கினர், தலைமை மருத்துவர் சத்யனின் மூளை பலகீனமாக இருப்பதால், மயக்கமருந்தை சிறுகச்சிறுக செலுத்தும்படி கூறினார், சத்யன் இடப்பக்கமாக ஒருக்களித்து படுக்கவைக்கப் பட்டான், மயக்கமருந்தின் வீரியம் சத்யனை கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி அழைத்துச்சென்றது

மான்சி வந்தாள், அழுதாள், நெஞ்சில் முத்தமிட்டாள், பிறகு கன்னத்தில், அப்புறம் உதட்டில், ஆமா அவளோட உதடுகள் ஏன் இனிப்பு சுவையாக இருந்தது?, அப்படியே கிஸ்பண்ணிகிட்டே இருக்கனும் போல இருக்கே, அப்புறம் அன்னிக்கு நான் செத்து போறேன்னு சொன்னதும் எப்புடி அழுதா, அப்புறமா என்கூடவே இருந்தா, நான் சொர்க்கம் எப்படி என்று முதன்முதலாக உணர்ந்த நாள், அந்த இன்பம் நீடிக்காதா என்று ஏங்கிய நாள், மறுபடியும் மறுபடியும் பண்ணனும் பண்ணிகிட்டே இருக்கனும், அந்த புதையல் எல்லாம் எனக்குத்தான், யாருக்குமில்லை, அப்புறம் பிரவுனி வந்துச்சு பிரவுனிய பாத்ததும் எப்படி மிரண்டு ஒடினா, நான் கட்டிப்பிடிச்சதும் எனக்குள்ளயே அடங்குற மாதிரி எப்புடி வந்து ஒட்டினா, ம்ம் இதுக்காகவே தினமும் பிரவுனியை விரட்டச் சொல்லி கட்டிப் பிடிச்சிருக்கலாம்’ அன்றைய நினைப்பில் சத்யனின் காய்ந்து போன உதட்டில் ஒரு சிறு கீற்றாக புன்னகை...



“ சத்யன், ஹலோ சத்யன், இங்க பாருங்க” எங்கோ இருந்து யாரோ அழைத்தார்கள் சத்யனை, அவனைச்சுற்றி பலதரப்பட்ட குரல்கள், அத்தனையும் ஆங்கிலம் பேசின, ஸ்டீல் உபகரணங்கள் ஒன்றோடொன்று உரசும் சப்தம் காதுகளில் நாரசமாய் விழுந்தது

தன் நினைவுகளை தடுத்த குரலைக்கேட்டு சத்யன் எரிச்சலுடன் முகம் சுழித்தான், ‘ம்ம்ம்’ என்றான்

எந்த இடத்தில் விட்டோம் என்று நினைவு கூர்ந்து பார்த்து மறுபடியும் தன் கனவு பயணத்தை ஆரம்பித்தான் தனக்கு தலைவலி என்று அவள் மடியில் படுத்த முதல் நாள் ஞாபகம் வந்தது, .....இரண்டு கைகளால் அவள் இடுப்பை தன் கைகளால் சுற்றி வளைத்துக்கொண்டு, அவள் அடிவயிற்றில் முகம் பதித்து, ........... ஓ அந்த வாசனை.... ம்ம்.. சத்யன் நாசியில் இழுத்தான், நாப்த்தலின் வாடை மூக்கில் ஏறியது,, அய்யோ இது மான்சியோட வாசனை இல்லையே, .......... எங்கே எங்கே என் மான்சி,..... சந்துரு சீக்கிரமா மான்சிய கூட்டி வாடா,.......... நான் தினமும் மான்சி மடியில தூங்கனும்........ அந்த வாசனை........ ஓ........ அது இப்போ வேனுமே, பின் மண்டையில் சுரீரென்று ஒரு பயங்கர வலி........... மான்சி சீக்கிரமா வா, எனக்கு மான்சி மடி வேனுமே........... மான்சி வர்ற வரைக்கும் எதுவும் பண்ணாதீங்க...... வேனாம்......... ,, சத்யன் வலது கையால் காற்றில் தூளாவின், யாரோ அவன் கையை பிடித்து படுக்கையில் வைத்தார்கள்,

சத்யனுக்கு மிச்சமிருந்த நினைவுகள் தப்பியது, பிடிவாதமாக பிடித்து வைத்தான்,...... மான்சி மான்சி அய்யோ என் மான்சி வயித்துல பாப்பா இருக்கே........ குழந்தை நல்லபடி பிறக்கனும்.......... அது........ அது.... என் குழந்தை...... எனக்கு வேனுமே........... சந்துரு சீக்கிரமா மான்சிய கண்டுபிடிடா?.... மறுபடியும் நங்கூரத்தை தலையில் இறக்கியது போல பயங்கரமாக வலித்தது, ஒருநாள் தலைவலியுடன் மான்சியின் மடியில் படுத்தபோது அவள் பாடிய கந்தசஷ்டி கவசத்தின் வரிகள் ஞாபகம் வந்தது, சத்யன் உதடுகள் அவற்றை முனுமுனுத்தது,

“ எத்தனை குறைகள், எத்தனைப் பிழைகள்”

“ எத்தனையடியேன் எத்தனை செயினும்”

“ பெற்றவன் நீ குரு, பொறுப்பது உன் கடன்!

“ பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!

“ பிள்ளையென்றன்பாய்ப் பிரியமளித்து!

“ மைந்தனென் மீது மனமகிழ்ந்தருளி!

“ தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்!

“ டாக்டர் இவர் ஏதோ முனுமுனுக்குறார், இன்னும் கொஞ்சம் கான்ஷியஸ் இருக்குன்னு நினைக்கிறேன்” என்றது ஒரு பெண் குரல்

அடுத்ததாக ஆண் குரல் ஒன்று குழைவான ஆங்கிலத்தில் ஏதோ சொல்ல, சத்யனுக்குள் மறுபடியும் ஏதோ மருந்து செலுத்தப்பட்டது

சத்யனின் நினைவில் மான்சியும், சந்துருவும், கந்தசஷ்டிகவசமும் மட்டுமே மிச்சமிருக்க நினைவுகள் தொலைந்து எங்கோ உயர உயர பறந்தான் 


சாமிநாதன் பதட்டத்துடன் ஆப்ரேஷன் தியேட்டரின் காத்திருக்க, சுவரோரம் கிடந்த பெஞ்சில் சுருண்டு கிடந்தாள் விஜயா, அவளின் பெற்ற வயிறு மகனுக்காக காலையிலிருந்தே விரதமிருந்தது, மகன் குணமடைய ஆயிரம் தெய்வங்களை துணைக்கழைத்தாள், கண்ணீரைத் துடைத்துத் துடைத்து முந்தானை நனைந்தது

சாமிநாதன் அந்த அறையின் கதவைப் பார்ப்பதும், பிறகு நடப்பதும், அழும் மனைவின் அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்லமுடியாது தவிப்புடன் கைகளைப் பற்றுவதுமாக இருந்தார்,,

அவருக்கு மகனின் பிரச்சனையோடு இப்போது இன்னொன்றும் சேர்ந்து கொண்டது, அது நான்கு நாட்களுக்கு முன் மான்சியை காணவில்லை என்று வீட்டில் இருந்து வந்த போன் தான், எங்கே போனாள் என்று வீட்டு வேலையாட்களை விட்டு தேடச் சொன்னதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை, விஜயாவிடம் சொன்னபோது “ அவ அம்மா மாதிரி எவன்கூடயாவது ஓடி போயிருப்பா” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாள்

சாமிநாதனுக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லையென்றாலும், இப்போதைய சூழ்நிலையில் மகனைப் பற்றி மட்டுமே அவரால் யோசிக்க முடிந்தது, இருந்தாலும் தனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக மான்சியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிகிறதா என்று ரகசியமாக விசாரிக்கச் சொன்னார், வயசுப்பெண் என்பதால் விஷயம் வெளியேத் தெரியவேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார், ஆனால் மான்சியைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்ற பதில்தான் வந்தது,

சத்யனுக்கான அவர்களின் காத்திருப்பு மணிக்கணக்காய் நீண்டது, கிட்டத்தட்ட ஆறுமணிநேரமாக நடந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு வெளிய வந்த மருத்துவக் குழுவில், கோவை டாக்டரும், தலைமை டாக்டரும் மட்டும் பிரிந்து சாமிநாதனிடம் வந்தனர்,

சாமிநாதன் டாக்டரின் கையை எட்டிப்பிடித்து கண்களால் வேண்ட, அவர் தோளைத் தட்டிய தலைமை டாக்டர், “ நாங்க எங்களோட கடமையை சரியா செய்திட்டோம், தைரியமா இருங்க சாமிநாதன், நல்லதே நடக்கும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகன்றார்

சாமிநாதனும் விஜயாவும் மகனைப் பார்க்கும் அந்த தருனத்திற்க்காக காத்திருந்தார்கள், இரவு ஆப்ரேஷன் தியேட்டருக்கு எடுத்துச்செல்லப் பட்ட சத்யன், அதிகாலை ICU பகுதிக்கு மாற்றப்பட்டான், கண்ணாடி கதவுக்கு அப்பால் மகனை பார்ப்பதற்கு முன்பு மகனைச் சுற்றியிருந்த மருத்துவக்குழுவை பார்த்தே மயங்கி சரிந்தாள் விஜயா, சாமிநாதன் மட்டும் இதயத்தை விரலால் அழுத்தியபடி மகன் முகத்தைப் பார்த்தார், அவருக்கு மகனை அடையாளம் காணமுடியவில்லை, “ என் மகனா இது? எப்போதும் சிரிப்பும் துள்ளலுமாக இருக்கும் என் மகனா இது? ஏன்......... ஏன்.. இப்படி? “ எவ்வளவுதான் தைரியத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றாலும் அவனின் நிலைமை அவரது தைரியத்தை சுக்குநூறாக உடைத்தது, தலையிலடித்துக்கொண்டு கோவென்று கதறியவரை வெளியேத் தள்ளிக்கொண்டு வந்தனர் மருத்துவமனையின் ஊழியர்கள்,

அடுத்துவந்த ஏழு நாட்களும் சத்யன் ICU பகுதியிலேயே இருந்தான், அவனுக்கு நான்காவது நாளே நினைவு திரும்பிவிட்டாலும் அவன் எல்லோரையும் அலட்சியமாகப் பார்த்தான், அவன் கண்கள் அறையின் வாசல் வரை யாரையோ தேடியது, பிறகு மூடிக்கொண்டது, மற்றபடி அவன் உடல் வெகு ஆரோக்கியமாக தேறி வந்தது,

டாக்டர்களுக்கு அவன் விஷயத்தில் தெளிவாக புரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவனுக்கு யாரையுமே அடையாளம் தெரியவில்லை, தெரிந்துகொள்ளவும் அவன் விரும்பவில்லை என்பது அவன் அலட்சியத்தில் நன்றாகவே புரிந்தது, யாரைப் பார்த்தாலும் யாரோ என்பதுபோல் பார்த்தான் 


சாமிநாதன் கண்ணீருடன் டாக்டரைப் பார்க்க,, “ வெயிட்ப் பண்ணுங்க சாமிநாதன், இப்போதைக்கு உங்களுக்கு மகன் கிடைச்சுட்டான், அதை மட்டும் நம்புங்க, மத்ததெல்லாம் படிப்படியாகத்தான் நடக்கும், அவனுக்கு தெரிஞ்ச... பிடிச்ச விஷயங்களை மட்டும் சிரிச்ச முகத்தோட அவன் எதிரில் பேசுங்க, நிச்சயம் ஏதாவது மாற்றம் வரும், இனிமேல் சத்யன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று கூறிவிட்டுப் போனார்

தனக்கு மகன் உயிருடன் கிடைத்ததே பெரிய விஷயமாக தெரிந்தது விஜயாவுக்கு, மகனிடம் வந்து கண்ணீருடன் “ கண்ணே நான் அம்மாடா?” என்றாள்

அவளை நிமிர்ந்து பார்த்து “ அம்மாவா, ம்ம் அம்மா, சரி அம்மாதான்” என்றான் வித்தியாசமாக, சாமிநாதன் “ நான் அப்பாடா” என்றார் “ சரி அதனால என்ன?” என்றான் அதே அலட்சியத்துடன், அடிக்கடி தனது மொட்டைத் தலையைத் தடவிப் பார்த்தான்,, “ பல் தேய்டா” என்று விஜயா சொன்னால் “ ஏன்?” என்று எதிர் கேள்வி கேட்டான், ஒரு ஆண் நர்ஸ் நியமிக்கப்பட்டு அவனுக்கு தேவையானவற்றை கற்றுகொடுக்க, எல்லாவற்றையும் “ ம்ம்” என்று உடனே புரிந்து செய்தான்

“ அவனுக்கு எல்லாமே தெரியுது, ஆனா அதையெல்லாம் ஏன் செய்யனும்னு தெரியலை, நாம சொன்னதும் சரியாப் புரிஞ்சுக்கிறான் பார்த்தீங்களா சாமிநாதன்? இதேபோல போகப்போக எல்லாம் மாறும் தைரியமா இருங்க, இப்போது பலமிழந்த அவனோட மூளை எல்லாவற்றையும் ஞாபகத்திற்கு கொண்டு வராது, நாமலும் அதை வலுக்கட்டாயமாக தினிக்கமுயன்றால் அது பெரிய ஆபத்தில் போய் முடியலாம் சாமிநாதன், நான் என்ன சொல்றேன்னு புரியும்னு நெனைக்கிறேன், அதாவது அவன் மூளை தாங்கும் அளவுக்கு விஷயங்களை புகுத்துங்க, கொஞ்சம் அதிகமானாலும் அவன் மெண்டல் ஆகிறதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு ” இது டாக்டரின் கூற்று

அதன்பிறகு சாமிநாதன் விஜயாவும் மொத்த பொறுப்புகளையும் அந்த ஆண் நர்ஸிடம் விட்டுவிட்டு, சிறு குழந்தையிடம் பேசுவதுபோல அவனிடம் பேசினார்கள், மீண்டும் அவனை குழந்தையாக பார்த்தனர்

ஆனால் இரண்டு நாட்களிலேயே அன்றாட தேவைகள் சத்யனுக்கு புரிந்தது, யாரும் சொல்லாமலேயே தன் தேவைகளை பார்த்துக்கொண்டான், தலையைத் தடவிப்பார்த்து “என்ன கட்டு போட்டிருக்கு?” என்று சாமிநாதனிடம் கேட்டான், அவர் உண்மையை மறைக்காமல் கூறினார், “ ஓ.........” என்று அமைதியானான்

அடிக்கடி சஷ்டிகவ வரிகளை அவன் உதடுகள் முனுமுனுத்தது, அதை உற்றுக் கேட்ட சாமிநாதனுக்கும் விஜயாவுக்கும் ரொம்பவே ஆச்சரியம், நெற்றியில் விபூதிக் கூட இட்டுக்கொள்ளாதவன் இன்று கந்தசஷ்டிகவசத்தை மனப்பாடமாக சொல்கிறானே என்று வியந்தனர்,

ஆப்ரேஷன் முடிந்து பத்தாவது நாள் காலையில் தான் சந்துரு வந்தான், மேலும் இரண்டு நண்பர்களுடன், மான்சியைத் தேடி பெங்களூர் சென்று வந்தவன் உடனே தனது தாத்தா காலமானதால் சத்யனை இன்றுதான் பார்க்க வந்தான், மூவரும் நண்பனின் நிலையைப் பார்த்து கண்கலங்கி நின்றிருந்தனர், எப்போதும் அழகும் ஸ்டைலுமாக இருக்கும் சத்யன், பொழிவிந்த ஓவியமாக கட்டிலில் கண்மூடிக்கிடந்த காட்சி அவர்களை வருத்தியது

தூங்கிய சத்யன் கண்விழித்ததும் முதலில் பார்த்தது, சந்துருவைத்தான், இத்தனை நாட்களாக ஜீவனிழந்து இருந்த முகத்தில் அப்படியொரு வெளிச்சம் “ டேய் சந்துரு மச்சான் எப்படா வந்த” நோயுற்றவன் போல் இல்லாமல் சத்யன் உற்சாகத்துடன் வினவ.



அங்கிருந்த அத்தனைப் பேரும் அதிர்ச்சியுடன் சத்யனைப் பார்த்தார்கள், சத்யனோ இயல்பாக சந்துருவை நோக்கி கையை நீட்ட சந்துரு வேகமாக வந்து சத்யன் கையைப் பற்றிக்கொண்டான் “ டேய் மச்சி என்னை தெரியுதாடா?” என்று கண்கலங்க கேட்டான் சந்துரு, அவனுக்கு மனதில் ஒரு சந்தோஷம் கலந்த நிம்மதி இதுவரை யாரையுமே அடையாளம் தெரியாமல் இருந்தவனுக்கு தன்னை மட்டும் தெரிகின்றதே என்று சந்தோஷம்

“ ஏன்டா தெரியலை, நீ சந்துரு, அதைவிடு மான்சியை கண்டுபிடிச்சயா? அவ எங்க இருக்கா? உன்கூட கூட்டிட்டு வரலையா?” என்றான் சத்யன்

மான்சி என்ற பெயரை சத்யன் கூறியதும் அங்கிருந்த அத்தனை பேருமே திகைத்துப்போனார்கள், ‘ மான்சி காணாமல் போனது இவனுக்கு எப்படி தெரியும்? இது சாமிநாதனின் குழப்பம், “ முதல்முதலா போயும் போயும் அந்த ஓடுகாலி பேரைச் சொல்றானே?” இது விஜயாவின் ஆத்திரம், “ சாவின் நுனிக்கு சென்று வந்தும் அந்த பொண்ணை இன்னும் ஞாபகம் வச்சிருக்கானே?” இது சந்துருவின் ஆச்சரியம் “ என்னடா அப்படி முழிக்கிற? மான்சிய கண்டுபிடிக்கச் சொன்னேனே? எங்க அவ?” இது சத்யனின் ஆதங்கம், யாருக்கும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்

சற்றுநேரத்தில் அந்த இடத்தில் இருந்த அனைவருக்கும் பெரும் இடியாப்பச் சிக்கலானது சத்யனின் பிரச்சினை , முதல் நுனி எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை, எல்லோரின் பார்வையும் சந்துருவின் பக்கம் திரும்ப, அவன் தர்மசங்கடத்தில் நெளிந்தான்

சத்யனின் பெற்றோர் முன்பு எப்படி இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது என்று புரியாமல் அவன் சத்யனின் முகத்தைப் பார்த்தான்

சாமிநாதன் சந்துருவை நெருங்கி “ மான்சியை உன்னைவிட்டு தேடச்சொன்னானா சத்யன்? உனக்கு என்னத் தெரியும்னு சொல்லு சந்துரு ப்ளீஸ் ” என்றார்

“ அய்யோ என்னப்பா நீங்க சொல்லுடான்னா சொல்லப்போறேன், அதுவந்துப்பா பதினேழு நாளுக்கு முன்னாடி ஒருநாள் காலையில எங்களையெல்லாம் பொள்ளாச்சி பஸ்ஸ்டாண்டுக்கு வரச்சொல்லி போன் பண்ணான், நாங்களும் என்னவோன்னு பதறி வந்ததும்” என்று ஆரம்பித்து.. ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து கடைசியாக மான்சியைத் தேடிச் சொன்னது வரை, எல்லாவற்றையும் சொன்னான் சந்துரு, தன் மொபைலுக்கு சத்யன் அனுப்பிய மான்சியின் புகைப்படத்தையும் காட்டினான்

சாமிநாதன் தலையில் கைவைத்துக்கொண்டு சேரில் அமர்ந்துவிட்டார், விஜயா தன் காதில் விழுந்த எதையுமே நம்பமுடியாமல் திகைத்து விழித்தாள், ஆனால் சந்துரு மட்டும் சத்யனிடம் ஒரு விஷயத்தை உற்று கவனித்தான், அதாவது சந்துருவுடன் வந்த மற்ற நண்பர்களை சத்யனுக்கு அடையாளம் தெரியவில்லை, அவர்கள் வழியப் போய் பேசியும், சத்யன் யாரோ என்பதுபோல் அவர்களைப் பார்த்தான்,

சந்துரு குழப்பத்துடன் தான் கண்டுபிடித்ததை சாமிநாதனிடம் தாழ்ந்த குரலில் மெதுவாக கூறினான், அவனது குழப்பம் இப்போது சாமிநாதனையும் தொற்றிக்கொண்டது, இருவரும் மெதுவாக வெளியேறி டாக்டரைத் தேடிப் போனார்கள்..

சிறிதுநேர காத்திருப்புக்குப் பிறகு டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்க, இருவரும் உள்ளேப் போய் டாக்டரிடம் நடந்தவற்றைக் கூறினர், சத்யனுக்கு ஆப்ரேஷன் தொடங்கும் முன்பு அவரது போனிலிருந்து தான் சத்யன் சந்துருவிடம் பேசினான் என்பதால், டாக்டருக்கும் ஓரளவுக்கு விஷயம் புரிந்தது, “ சரி வாங்க சத்யன் கிட்டயே பேசிப் பார்க்கலாம்” என்று அங்கிருந்து வெளியேறி சத்யனின் அறைக்குப் போனார் டாக்டர்




டாக்டர் வந்ததும் எல்லோரும் ஒதுங்கிவிட, அவனுடைய சாட் எடுத்து பார்த்துவிட்டு சத்யனிடம் சம்பிரதாய விசாரிப்புக்குப் பிறகு சத்யனிடம் மெதுவாக ஆரம்பித்தார் டாக்டர் “ சத்யன் இவர் யார்னு உங்களுக்குத் தெரியுதா?” என்றார்

“ ஓ...... என் பிரண்ட் சந்துரு” என்றான் சத்யன்

“ ம் சரி, நீங்க கடைசியா எப்ப இவரை மீட்ப் பண்ணீங்க? ”
சிறிதுநேரம் கண்மூடி யோசித்தவன் “ மான்சி என்னைவிட்டுப் போன அன்னிக்கு, பஸ்ஸ்டாண்டில் பார்த்தேன், மான்சியை இவனைத் தேடச்சொன்னேன்” என்றான் சத்யன் தெளிவாக

“ சரி மான்சி யார்? அவங்க ஏன் உங்களை விட்டுப்போனாங்க?”

மறுபடியும் கண்மூடினான், முன்புபோல் அதிகநேரம் யோசிக்கவில்லை “ மான்சி என் காதலி, என் உயிர், அவ இல்லேன்னா எதுவுமேயில்லை, ஆனா அவ ஏன் போனா?” புருவம் சுருக்கி யோசித்தான்,

அவன் அதிகம் யோசிப்பதை விரும்பாத டாக்டர் “ சரி விடுங்க சத்யன் பரவாயில்லை அதைப்பற்றி பிறகு பார்க்கலாம்,, நீங்க அவங்களைத் தேடினீங்க?, அதான் மான்சியை தேடினீங்களா?” அவன் முகத்தில் தெரிந்த மாற்றங்களை உற்று கவனித்தபடி கேட்டார்

“ தேடினேனா?” மறுபடியும் புருவங்கள் முடிச்சிட யோசித்தான், பிறகு தலையசைத்து “ ம்ஹும் தெரியலையே?” என்றான்

“ ஓகே விடுங்க,, அடுத்து நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க சத்யன்” என்ற டாக்டர் சத்யன் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து “ மான்சியும் நீங்களும் லவ்வர்ஸ் சரி,,.... நீங்க ரெண்டு பேரும் எங்க சந்திச்சீங்க?, அவங்ககூட எப்படி பேசினீங்க?, உங்க ரெண்டுபேருடைய உறவு எப்படிப்பட்டது?”

சத்யன் சிறிதுநேரம் தலையை பின்னால் சாய்த்தான், பிறகு பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான், மறுபடியும் நிமிர்ந்து அமர்ந்து பேச ஆரம்பித்தான் “ மான்சியை எனக்குத் தெரியும், அதுமட்டும் தான் ஞாபகம் இருக்கு, எப்போ சந்திச்சேன்னு ஞாபகம் வரலை, அவ நிறைய நாள் நைட்ல என்கூடவே இருப்பா, அப்புறம் நானும் அவளும் விடியவிடிய ஒன்னா தூங்குவோம், எனக்கு தலைவலி வரும்போது அவ மடியில படுத்துக்குவேன், மான்சி சஷ்டிகவசம் சொல்லிகிட்டே என் தலையை பிடிச்சுவிடுவா அப்புறம் தூங்கிடுவேன், அப்புறம் பிரவுனி எங்ககூடவே இருக்கும், ஒருநாள் நைட் நிறைய கிஸ் பண்ணா, அப்புறம் அவளைக் காணோம், நான் சந்துரு கிட்ட தேடச் சொன்னேன், அவ எனக்கு வேனும்” என்று சத்யன் தன் ஞாபக அடுக்குகளில் இருந்தவற்றை துண்டு துண்டாக சொல்ல,

அங்கிருந்தவர்கள் எல்லாவற்றையும் சேர்த்து கோர்த்துப் பார்த்தனர், எல்லாம் சரியாக வந்தது, ஆனால் மான்சி ஏன் போனாள் என்று மட்டும் யாருக்கும் புரியவில்லை,

எல்லாவற்றையும் கேட்ட விஜயாவின் வயிறு காந்தியது, ‘ அடப்பாவி அந்த ஓடுகாலி மக தானாடா உனக்கு கிடைச்சா?’ என்று மகனை மனசுக்குள் திட்டினாள்
சாமிநாதனுக்கு எல்லாம் தெளிவானது, மான்சியும் இவனும் காதலித்திருக்கிறார்கள், ஆனால் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனையில் மான்சி இவனைவிட்டு பிரிந்திருக்க வேண்டும், அது என்ன பிரச்சனை?

டாக்டர் சேரில் இருந்து எழுந்து “ ஓகே சத்யன் மான்சியை சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் தைரியமா இருங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர...

“ டாக்டர் கொஞ்சம் இருங்க, இன்னொரு விஷயம் பத்தி நீங்க கேட்கவேயில்லை?” என்று சத்யன் அவருக்கு ஞாபகப்படுத்த............. அவர் என்ன என்ற கேள்விக்குறியுடன் அவனைத் திரும்பி பாத்தார், அவர் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே சத்யனை கேள்வியாக பார்த்தனர்..


“ பாப்பா... பாப்பா,..... டாக்டர், எனக்கும் மான்சிக்கும் இன்னும் கொஞ்சநாளில் குழந்தை பிறக்கப் போகுது, அதுக்குள்ள அவளை கண்டுபிடிக்கனும், இல்லேன்னா தனியா ரொம்ப கஷ்டப்படுவா டாக்டர்” என்று அமைதியாக பேசியபடி அந்த இடத்தில் பெரிய வெடிகுண்டை வீசினான்.

இதை எதிர்பார்க்காததால் டாக்டரே சிறிது அதிர்ச்சியுடன் “ என்ன சொல்றீங்க சத்யன், மான்சி உங்களை விட்டு போகும்போது கன்சீவ் ஆகியிருந்தாங்களா? உங்களுக்கு நல்லாத் தெரியுமா?” என்று கேட்க

டாக்டரை கிண்டலாகப் பார்த்த சத்யன் “ என் காதலியைத் தெரியும்போது, அவ வயிற்றில் இருந்த என் குழந்தையைத் தெரியாதா டாக்டர்? ஆனா அவ ஏன் என்னைவிட்டுப் போனா? அதுதான் புரியலை? நான்தான் அவ மனசு நோகும்படி ஏதாவது தப்புப் பண்ணியிருக்கனும், இல்லேன்னா அவ்வளவு கவனமா என்னைப் பார்த்துக்கிட்டவ ஏன் என்னைவிட்டுப் போகபோறா?” என்று டாக்டரிடமே கேட்டான் சத்யன்

“ அதுதான் புரியலை சத்யன், எதுவாயிருந்தாலும் இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணலாம், இதுக்குள்ள நீங்க அதிகமா யோசிக்கிறது ஆபத்து சத்யன், உங்க மான்சியை சந்திக்கும் போது நீங்க ஆரோக்கியமா இருக்கனும் அல்லவா?” என்று டாக்டர் கூற...

சத்யன் ஒரு புன்னகையுடன் அவர் சொன்னதை தலையசைத்து ஏற்றுக்கொண்டான்,,

டாக்டர் அங்கிருந்து கிளம்ப, அவர் பின்னாலேயே போனார்கள் சாமிநாதனும் சத்யனின் நண்பர்களும், டாக்டர் அவருடைய அறைக்குச் சென்று ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு சேரில் அமர்ந்து “ உட்காருங்க சாமிநாதன்,, நீங்களும் உட்காருங்கப்பா” என்று இருக்கைகளை காட்டினார்,

அனைவரும் அமர்ந்ததும், “ சாமிநாதன் சத்யன் விஷயத்தில் இனி எந்த குழப்பமும் இல்லை, அதாவது ஆப்ரேஷனுக்கு மயக்கம் குடுக்குறதுக்கு சிலநிமிடங்கள் அவர் மனசுல ஓடின அத்தனை விஷயங்களும் ஆழமா பதிஞ்சு போயிருக்கு, மான்சி, சந்துரு, நாய் பிரவுனி, மான்சி பாடின கந்தசஷ்டி கவசம், அப்புறம் அந்தப் பொண்ணு வயிற்றில் இருந்த குழந்தை, அவள் பிரிந்து போனது, சந்துருவை தேடச் சொன்னது, இதையெல்லாம் கடைசி நிமிஷம் வரை யோசிச்சதால எல்லாமே ஆழ் மனசுல பதிஞ்சு போயிருக்கு, மற்ற எல்லாம அவர் மெமரில இருந்து போயிருக்கு, ஆனா மான்சி வந்தா எல்லாமே திரும்ப வந்துரும்” என்ற டாக்டர் நிமிர்ந்து அமர்ந்து சாமிநாதனை நேராகப் பார்த்து “ இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்கு காரணம் அந்த குழந்தை உண்டான விஷயமாகத்தான் இருக்கனும்னு நான் நெனைக்கிறேன், நீங்க என்ன நெனைக்கிறீங்க சாமிநாதன்?” என்றார்

சற்றுநேரம் அமைதியாக இருந்த சாமிநாதன் “ என்னால எதையுமே நம்ப முடியலை டாக்டர், என் ஒய்புக்கு அந்தப் பொண்ணை சுத்தமா பிடிக்காது, அதனால அவ வீட்டுக்குள்ள எங்கயுமே வரமாட்டா, அதுமட்டுமல்ல இன்னிக்கெல்லாம் அந்த பொண்ணுக்கு பதினேழு வயசுதான் ஆகுது, அதுக்குள்ள எப்படி இந்த மாதிரியெல்லாம்” என்று எரிச்சலுடன் முகம் சுழித்தார்

“ அப்படியெல்லாம் சொல்லாதீங்க சாமிநாதன் சத்யன் சொல்றது உண்மையாயிருந்தா அது உங்களோட பேரக்குழந்தை,, அதனால முதல்ல அந்தப் பொண்ணை தேடிக் கண்டுபிடிக்கும் வழியைப் பாருங்க, அவதான் மிச்சமிருக்கும் சத்யனின் நினைவுகளை வெளியே கொண்டு வரனும்” என்று டாக்டர் கூறினார்


சரியென்று தலையசைத்துவிட்டு வெளியே வந்தார் சாமிநாதன்
இந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியாத ஒரே நபர் விஜயாதான், அவள் மனம் மான்சியை தன் மகனின் காதலி என்று நினைத்துப் பார்க்கவே மறுத்தது, அப்படியே அவள் வந்தாலும் சத்யன் குணமானதும் ஏதாவது கொஞ்சம் பணத்தை கொடுத்து அனுப்பிவிடனும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டாள்
மான்சியைத் தேடும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற, மறுபுறம் சத்யன் தன் நினைவுகளில் எந்த முன்னேற்றமும் இன்றி உடலளவில் நல்லபடியாக குணமானான்

சத்யன் வீடு வந்து சேர முழுதாக ஒன்றரை மாதம் ஆனது, அவன் வந்ததும் சரியாக தோட்டத்திற்க்குத்தான் போனான், எங்கிருந்தோ ஓடிவந்த பிரவுனி அவன் கால்களை நக்கி தன் விசுவாசத்தை சொன்னது, சத்யன் நட்புடன் அதன் தலையை தடவினான் ,

பிறகு அவன் பார்வை மான்சியிருந்த அறை பக்கம் திரும்பியது, விறுவிறுவென்று அங்கே போனான், கதவை திருந்து உள்ளே நுழைந்தவன் மான்சியும் அவனும் படுத்திருந்த பாயை வருடி அதை விரித்து அதிலேயே படுத்துக்கொள்ள,

வேலைக்காரர்கள் முன்பு சத்யன் அப்படி செய்தது விஜயாவுக்கு பெருத்த அவமானமாக இருந்தது , சாமிநாதன் மட்டும் அந்த சிறு அறைக்குள் நுழைந்து மகனருகே அமர்ந்து “ சத்யா இதோபார் கண்ணா, மான்சி சீக்கிரமா வந்துருவா, அவ வந்ததும் நீ இங்கயே வந்து இரு,, இப்போ உனக்கு ஆப்ரேஷன் பண்ணியிருக்குள்ள, அதோட இந்தமாதிரி இடத்துல படுக்க கூடாதுப்பா, எழுந்து வா உன் ரூமுக்கு போகலாம்” என்று பொறுமையாக எடுத்துக்கூறி மகனை அழைக்க..

“ ம் சரிப்பா, ஆனா மான்சி வந்ததும் இங்கே வந்துடுவேன்” என்றபடி எழுந்து அவன் அறைக்குப் போனான், அங்கேயும் மான்சியை ஞாபகப்படுத்த ஏகப்பட்ட விஷயங்கள் இருக்க..

சத்யன் தன் கட்டிலில் படுத்து, ஒருமுறை மான்சி அவனுடன் உறங்கிய போது வைத்திருந்த தலையணையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் “ அப்பா இந்த தலைகாணியை மான்சி தலைக்கு வச்சிருந்தாப்பா” என்று கபடற்று சாமிநாதனிடம் கூற ..

எந்தமாதிரியான சூழ்நிலையில் அந்த தலையணை பயன்பட்டிருக்கும் என்று சாமிநாதனுக்கு புரிய.... தர்மசங்கடத்துடன் “ சரிப்பா நீ தூங்கு அவ சீக்கிரமா வருவா” என்றார்

அதன்பிறகு சத்யன் பிரவுனியோடு தோட்டத்தில் சுற்றினான், நிறைய நேரம் மான்சி இருந்த அறையில் படுத்துக் கிடந்தான், நடு இரவில் தோட்டத்தில் அமர்ந்து மான்சியுடன் கழித்த நிமிடங்களை கண்மூடி ரசித்திருந்தான், அவன் ஞாபகங்களில் மான்சியின் பிரிவுக்கான காரணம் என்ன என்று கொஞ்சம் கூட புலனாகவில்லை,

வீட்டிலிருந்த எல்லோருக்கும் தெரிந்து போனது மான்சி சத்யனின் காதல், அதுமட்டுமல்ல அவன் குழந்தையை மான்சி தன் வயிற்றில் சுமந்து சென்றதும் தெரிந்து போனது, ஜானகிக்கு இருவர்களின் காதல் சந்தோஷமாக இருந்தாலும், விஜயாவுக்கு பயந்து சந்தோஷத்தை வெளிகாட்டவில்லை, ஆனால் மறைமுகமாக தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி ஜானகி ஒருபக்கம் மான்சியை தேடினாள்,

விஜயாவுக்கு இதெல்லாம் ரொம்பவே வெறுப்பை வரவழைத்தது, ஒருநாள் ஹாலில் அமர்ந்து டிவிப் பார்த்த சத்யனிடம் “ அந்த குட்டிய நீ மட்டும் தான் சத்யா காதலிச்சிருப்ப, அவ வேற யார்கிட்டயாவது தப்புப் பண்ணி வயித்துல புள்ளை வாங்கிகிட்டு வந்திருப்பா, அதனால்தான் உன் முகத்துல முழிக்க அசிங்கப்பட்டு பிள்ளை குடுத்தவன் கூடவே ஓடி போய்ட்டா, ஆத்தா புத்தி அவளுக்கு அப்படியே இருக்கு” என்று நைசாக மகனிடம் சொல்ல

அவள் சொல்லி முடிக்கும்வரை உண்ணிப்பாக கேட்டுக்கொண்டிருந்த சத்யன், தன் தாய் முடித்த அடுத்த நொடி “ ஏய் அது என் பிள்ளைதான், நீ சொன்னதை நான் நம்பமாட்டேன் ” என்று ஆக்ரோஷமாக கத்தியபடி எதிரில் இருந்த கண்ணாடி டீப்பாயை தன் முஷ்டியால் ஓங்கி ஒரு குத்துவிட கண்ணாடி தூள் தூளாகி சத்யனின் கையை கிழித்து ரத்தம் ஒழுகியது அப்படியும் ஆக்ரோஷம் அடங்காமல் விஜயாவை பார்த்து ரௌத்திரமாய் விழித்தான்

விஜயா மகனைப் பார்த்து அலறிப்போனாள் “ இல்ல.... இல்ல, இனிமே சொல்லலை,, மான்சியைப் பத்தி சொல்லமாட்டேன் சத்யா” என்று மகனை சமாதானப்படுத்த முயன்றாள்,

“ ச்சே” என்று கையை உதறியபடி ரத்தம் வழிய வழிய தோட்டத்திற்கு போய் மான்சியின் அறையில் படுத்துக்கொண்டான், மகனின் மூர்க்கத்தை முதன்முதலாக பார்த்த விஜயா பிரம்மையில் அப்படியே நின்றிருந்தாள், சாமிநாதனுக்கு போன் செய்து அவர் வந்து மகனை சமாதானம் செய்த பிறகுதான் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்,


அதன்பிறகு நாட்கள் மாதங்களாக மான்சியும் கிடைக்கவில்லை, ஆக சத்யனின் நிலையிலும் மாற்றமின்றி அப்படியே கழிந்தன, ஆனால் இந்த நாட்களில் விஜயாவிடம் மட்டும் சில மாற்றங்கள், மகனின் ரீவிரமான காதலை புரிந்துகொண்டாள், அதோட மான்சி சிவப்பு மையால் காலண்டரில் குறித்து வைத்த நாள்கணக்கை எடுத்துவந்து ஜானகி விஜயாவிடம் கொடுக்க, மான்சி இந்த வீட்டுக்கு வந்த ஐந்தாறு நாட்களிலேயே சத்யன் மான்சி உறவு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சரியாக கணித்தாள், அதையே சாமிநாதனிடமும் சொன்னாள்,

அந்த கணக்குப்படிப் பார்த்தாள் இப்போது குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்று இருவரும் ஒரேமாதிரி நினைத்தனர், மனநிலை சரியில்லாத தன் மகனுக்குப் பிறந்த வாரிசு எங்கே எப்படி இருக்கிறதோ என்று இருவரும் பேரக்குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்தனர், குழந்தை உண்டானதால் தான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விலகியிருக்க வேண்டும் என்று விஜயா கூற சாமிநாதனும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டார்

சத்யனுக்கு ஆப்ரேஷன் நடந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில், அவன் மருத்துவமனையில் இருந்தபோது மகன் பிழைத்து எழுந்ததும் பழனி முருகனுக்கு தங்கத்தில் வேல் சாத்துவதாக வேண்டுதல் செய்திருந்த விஜயா தன் கணவர், மகனுடன் பழனிக்கு புறப்பட்டாள், இப்போது பேரனும் மான்சியும் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலும் கூட சேர்ந்துகொண்டது

சன்முகா நதியில் குளித்துவிட்டு, பழனி மலைக்கு மூவரும் நடந்தே மேலேறினார்கள், சத்யன் துவளும் போதெல்லாம், “ மான்சியும் உன் பிள்ளையும் கிடைக்கனும்னு கும்பிட்டுக்கிட்டே மலையேறு கண்ணா, அந்த முருகன் நம்ம வேண்டுதலை நிறைவேத்துவான்” என்று விஜயா கூற

அதேபோல் வேண்டிக்கொண்டே படியேறினான் சத்யன், அவர்கள் சென்றது காலைவேளை என்பதால் ராஜா அலங்காரத்துடன் முருகன் கம்பீரமாக நிற்க, முதன்முறையாக தூய்மையான உள்ளத்தோடு தன் மகனும் மான்சியும் பேரக்குழந்தையும் ஒன்றாக சேரவேண்டும் என்று விஜயா மனதார வேண்டினாள்

தங்கத்தில் வேல் செய்து காணிக்கையாக செலுத்துவதால் இவர்களுக்காக சிறப்பு ஆராதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, சத்யன் கையால் தங்கவேல் முருகன் பாதத்தில் சேர்க்கப்பட, என் பேரக்குழந்தை கிடைத்ததும் அடுத்த வருடம் அவன்கையால் இதேபோன்றதொரு தங்கவேலை காணிக்கையாக செலுத்துகிறேன் என்று விஜயா மறுபடியும் ஒரு வேண்டுதலை முருகனின் முன்பு வைத்தாள்

சாமிதரிசனம் முடித்து மூவரும் கோயிலில் இருந்து வெளியே வந்தனர், மூவரும் படியிறங்கி அடிவாரம் வந்தனர், பிரவுனியும் அவர்களுடன் வந்திருந்ததால் பிரவுனியை காரில் வைத்துக்கொண்டு கீழேயே இருந்த டிரைவர் வேகமாக வந்து விஜயாவிடம் இருந்த பொருட்களை வாங்கி காரில் வைக்க, சாமிநாதன் பிரசாரம் வாங்கி வருவதாக கூறிவிட்டு அதற்காக பில் வாங்க சென்றுவிட, விஜயா பாத்ரூம் செல்லவேண்டும் என்று கழிவறையைத் தேடி போய்விட்டாள்,

டிரைவர் சத்யனை காருக்குள் உட்காரச்சொல்லி “ கொஞ்சம் இருங்க தம்பி நான் போய் என் வீட்டுக்கு ஒரு முருகன் படம் வாங்கிட்டு வந்துர்றேன்” என்று கூற
சரியென்று தலையசைத்த சத்யன் காரில் ஏறியமர்ந்து கதவை மூடிவிட்டு தன் கையில் அம்மா கட்டிய முருகன் டாலர் வைத்த கயிறை பார்த்தவன், அம்மா கொடுத்த கவரில் இருந்து இன்னொரு முருகன் டாலர் வைத்த கயிற்றை எடுத்து பிரவுனியின் கழுத்தில் கட்டிவிட்டான், பிரவுனி அவனுடன் விளையாடியபடி மடியில் படுத்துக்கொள்ள, சத்யனுக்கு உடனே மான்சியின் மடியில் தான் படுத்திருந்த ஞாபகம் வந்தது , பிரவுனியை வருடியபடி மான்சியைப் பற்றிய சிந்தனையில் அமைதியாக அமர்ந்திருந்தான்,



சற்றுநேரத்தில் கையில் பிரசாத கவருடன் வந்த சாமிநாதன் காரருகே யாரையும் காணாமல் குழப்பத்தோடு சுற்றுமுற்றும் தேடினார், ஒருவேளை விஜயா ஏதாவது வாங்க சத்யனுடன் போயிருக்காளோ என்று அவர் எண்ணும்போதே விஜயா தனியாக வர “ விஜயா சத்யன் எங்கே?” என்று குழப்பத்துடன் மனைவியிடம் கேட்க

விஜயாவும் “ என்கூட வரலையே, டிரைவரைப் பார்த்துக்கச் சொல்லிட்டு நான் பாத்ரூமுக்கு போனேன்” என்று கலவரத்துடன் சொல்லிவிட்டு இருவரும் டிரைவர்த் தேட கொஞ்சநேரத்தில் அவனும் வந்து “ அய்யோ அம்மா நீங்க போனதும் சின்னய்யாவையும் பிரவுனியையும் காருக்குள்ள உட்கார வச்சுட்டு நான் வீட்டுக்கு சாமி படம் வாங்கப் போனேன்” என்று பயத்துடன் சொல்ல , மூவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது, பரபரப்புடன் சத்யனையும் பிரவுனியையும் தேடினார்கள், 



No comments:

Post a Comment