Thursday, October 8, 2015

மைதிலி - அத்தியாயம் - 11

வீட்டை அடைந்ததும் மைதிலி தான் கெஸ்ட் பெட்ரூமில் படுத்துக் கொள்வதாக அமுதாவிடம் சொல்லி இருக்கிறாள். அமுதாவின் வற்புறுத்தலால் எங்கள் அறைக்கு வந்து படுத்தாள். அவளது சிகிச்சை தொடங்கியது முதல் எங்களிடையே தனிப்பட்ட பேச்சு மிகவும் குறைந்து இருந்தது. எப்போதும் ஒரு குற்ற உணர்வும் தாழ்மை உணர்வும் அவள் பேச்சில் இருந்தது. தன்னை எனக்கு தகுதியற்றவளாக கருதுவதை நான் நன்கு உணர்ந்தேன். சற்று இளைத்து இருந்தாள். ஒரு அளவுக்கு நடமாடக் கூடிய நிலையில் இருந்தாள். வகை வகையாக நூற்றுக்கணக்கில் சேலைகளை வாங்கி அடுக்கி இருந்தவள் ஹவுஸ் கோட்டையும் சுடிதாரையும் மட்டுமே அணிந்தாள். அதிலிருந்து முன்புறம் இருந்த எடுப்பு மறைந்ததில் அவள் மனம் குன்றிப் போனது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த இரு வாரங்களும் என் அலுவலக வேலைகளை அறவே குறைத்து கூடிய மட்டும் அவளுடனே இருக்க முயற்சித்தேன்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு ...

இரவு உணவை முடித்தபின் ஸ்டடி ரூமில் நான் டி.வி பார்த்துக் கொண்டு இருந்தேன். அமுதாவுடன் மைதிலியும் சமையலறைக்குள் நுழைந்தாள். வேலைக்காரியை சமையல் அறையைச் சுத்தம் செய்யப் பணித்த பின் மகளை அவளது அறைக்கு அனுப்பிவிட்டு நான் சாப்பிட்ட பிறகு எப்போதும் குடிக்கும் காப்பிக் கோப்பையை ஏந்தி மைதிலி வந்தாள்.

என்னிடம் காப்பியைக் கொடுத்துவிட்டுத் திரும்பியவளை நான் அழைத்து, "வாம்மா. வாக் போகலாம்" இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் வாக் செல்வது வழக்கமாக இருந்தது.

மைதிலி, "நீங்க போயிட்டு வாங்களேன்"

"ஏம்மா? டயர்டா இருக்கா?"

"அப்படி ஒண்ணும் இல்லை"

"அப்பறம் என்ன? போலாம் வா"

என் பார்வையைத் தவிர்த்து, "வேண்டாம்பா"

அவள் அருகில் சென்றவன் அவள் முகத்தை நிமிர்த்த அவள் கண்கள் குளமாவதைக் கண்டேன்.

"ஏய், என்னது இது?"

நான் அவளுக்கு இன்னமும் அருகே சென்று இடுப்பை வளைத்து அணைத்தேன். முன்பு இருந்ததற்கும் இப்போதைக்கும் இருந்த மாற்றத்தை என்னாலே நன்றாக உணற முடிந்தது. அணைத்த சில நொடிகளில் குலுங்கி அழத் தொடங்கினாள்.

உயரத்தில் என்னை விட ஆறு அங்குலம் குறைந்த அவளது உச்சி சரியாக என் மூக்கின் நுனியளவுக்கு வரும். அணைக்கும் போது கழுத்தில் இதழ் பதிப்பதும் மெலிதாகக் கடிப்பதும் (மூடைப் பொருத்து!) அவளுக்குப் பிடித்த சேட்டை. அவள் உதடுகள் என் கழுத்திலும் தோளிலும் பதியும் உயரத்தில் இருந்தாலும் அவளது வனப்புகள் தடுப்பதால் சற்று கழுத்தை நீட்டியே அவளால் அப்படிச் செய்ய முடியும். இப்போது எங்கள் அணைப்பில் அவளது நிலை மாறி ... இதை எப்படி சொல்வது .. ஆங்கிலத்தைக் கலந்து சரியாகச் சொன்னால் ... அவளது postureஏ மாறி இருந்தது. பொங்கி வந்த என் கண்ணீரை எப்படி கட்டுப் படுத்தினேன் என்று எனக்கே புதிராக இருந்தது.

என் இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி, "ஏய், மைதிலி, என்ன ஆயிடுச்சுன்னு இப்படி அழறே? கடவுள் புண்ணியத்தில் பெரிய கண்டத்தில் இருந்து தப்பி வந்து இருக்கேன்னு நான் சந்தோஷமா இருக்கேன். நீ ஏன் இப்படி கவலைப் படறே?"

சிறிது நேரம் விசும்பியவள் அமைதியாகி, "பேரன் பேத்தி எடுக்கப் போற நேரத்தில் எதுக்குடி இப்படி மினிக்கிக்கறேன்னு ஆண்டவனே எனக்கு தண்டனை கொடுத்துட்டான்"

"பேரன் பேத்தி எடுத்தா என்ன? எம் பொண்டாட்டி எப்பவும் மினிக்கிக்கணும். அந்த ஆண்டவனே வந்தாலும் அதை வேண்டாம்ன்னு சொல்ல விடமாட்டேன்"

"இனி எங்கே மினிக்கிக்கறது. அதான் எல்லாம் .. "

"என்ன ஆச்சு?"

அழுகையுடன் பல நாட்களாக மறைந்து இருந்த குறும்புச் சிரிப்பும் சேர, "அதான் எல்லாம் சஹாரா பாலை வனம் மாதிரி ஆயிடுச்சே" என்று ஒரு சோகப் புன்முறுவலிட்டாள்.

"ஹப்பா, இப்பத்தான் என் மைதிலியைப் பாக்கறேன்" என்றவாறு அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.

"ம்ம்ம் .. வேண்டாம்"

வலுக்கட்டாயமாக அவளை இழுத்துச் சென்று சோஃபாவில் அமரவைத்து அணைத்தவாறு அருகில் அமர்ந்து தொடர்ந்தேன், "நம்ம ஃபர்ஸ்ட் நைட் உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ம்ம்ம் ... இருக்கு. சொல்லுங்க"

"ஃபர்ஸ்ட் நைட்டுக்கு அடுத்த நாள் காலையில, உன் பர்த்டே அன்னைக்கு, என்ன நடந்துச்சுன்னு?"

"ம்ம்ம் ... சொல்லுங்க"

"என்ன நடந்துச்சு?"

"எனக்கு வாங்கிக் கொடுத்த முதல் டைமண்ட் செட்டை எனக்கு போட்டு விட்டீங்க. காசு இருந்தா அது ரெண்டுக்கும் தனியா நகை வாங்கிப் போட்டு இருப்பேன்னும் சொன்னீங்க. அதை ஞாபகப் படுத்தறீங்களா" என்று கண்கலங்கினாள்

"ஐய்யோ! நான் ஒரு மடையன். நான் அதுக்கு அப்பறம் உன்னை வர்ணிச்சதை ஞாபகப் படுத்தலாம்ன்னு பாத்தா மறுபடி நீ பிடிச்ச பாயிண்டுக்கே வர்ற மாதிரி செஞ்சுட்டேன்" என்றவாறு தலையில் அடித்துக் கொண்டேன். கவலையை மறந்து சிரித்தபடி ஒரு முறை அடித்த கையை மறுபடி அடிக்காமல் பற்றியவள்.

"சரி சொல்லுங்க"

"ம்ம்ம் .. அது ரெண்டைத் தவிற மத்தது எல்லாம் அப்படியே இன்னும் இருக்கு. வேணும்ன்னா நான் அன்னைக்கு டெமான்ஸ்ட்ரேட் பண்ணின மாதிரி பண்ணிக் காமிக்கட்டுமா?"

"அதெல்லாம் வேண்டாம். எனக்கு ஞாபகம் இருக்கு"

"அப்பறம் ஏண்டா இப்படி அப்செட் ஆகி இருக்கே? I love you so much honey. நான் அடிக்கடி அது ரெண்டும்ன்னு உங்கிட்ட சொல்லி இருக்கலாம். ஆனா உன் அழகு அது ரெண்டு மட்டும் இல்லடா" என்றவன் தொடர்ந்து "இப்படி என் மடியில் ரெண்டு பக்கமும் காலைப் போட்டு ஒக்காரு பாக்கலாம்? நான் இன்னும் விளக்கமா சொல்றேன்"

"சீ .. போதும் அமுதா இங்கேதான் இருக்கா. மெய்ட் இன்னும் கிச்சனில்தான் இருக்கா"

"ஆரம்பிச்சுட்டயா? ஏம் பொண்டாட்டியை என் வீட்டில் நான் கொஞ்சறேன்"

சிரித்தவாறு என் தோளில் தலை சாய்த்தாள். பிறகு அவளே எழுந்து, "வாங்க வாக் போகலாம்" என்றாள்.

அன்று முதல் அடுத்த பத்து நாட்களும் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு மறையாமல் இருக்க முயற்சித்தேன். இருந்தாலும் சில சமயங்களில் என்னால் தடுக்க முடியாமல் நான் சொல்வது எதற்கும் செவி மடுக்காமல் அவள் துயரத்தில் ஆழ்ந்து மௌனத் தவம் இருப்பாள். அப்போதுதான் மௌனமனத்தையும் அவளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று உணர்ந்தேன். அவளுடன் நான் அப்படி இருந்ததில் அவள் மனக் கனம் வெகுவாகக் குறைந்தது. கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களில் எங்களிடையே இருந்த நெருக்கத்தைவிட அப்போது உருவாகிய நெருக்கம் சொல்லால் வர்ணிக்க முடியாது.

பத்து நாட்களுக்குப் பிறகு முதல் சுற்று கீமோதெரபி துவங்கியது. அவளுக்கு வந்து இருந்த கேன்ஸரைத் தவிற நல்ல உடல் நலத்துடன் இருந்ததாலும், கேன்ஸர் முற்றும் வரை சிகிச்சை துவங்காமல் விட்டதாலும் டாக்டர் ஸ்ரீநாத் "டோஸ்-டென்ஸ் கீமோதெரபி (Dose-dense Chemotherapy) என்ற குறுகிய இடைவெளி விட்டு மறுபடி கொடுக்கும் சிகிச்சை முறையை பயன் படுத்தினார். மறுபடி கேன்ஸர் வரும் வாய்ப்பை குறைப்பதும் இந்த முறையில் கொடுப்பதற்கு இன்னொரு நோக்கம்.

அந்தச் சிகிச்சை பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக இருந்தது. ட்ரிப்ஸ் கொடுப்பது போல் அவளது வலது புறங்கையில் இருந்த குருதிநாளத்தில் ஊசியேற்றி மேலே தொங்கவிடப் பட்ட க்ளூக்கோஸுடன் மருந்தைக் கலந்து செலுத்தினர். முதல் முறை அவளை அழைத்துச் சென்றபோது சாதாரணமாகப் பேசிக் கொண்டு வந்தாள். சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்பும் போதும் அப்படியே. "கொஞ்சம் குமட்டுது. மத்தபடி ஒரு வித்தியாசமும் தெரியலை" என்று நம்பிக்கையுடன் சொன்னாள்.

ஆனால் இரண்டொரு நாட்களில் டாக்டர் ஸ்ரீநாத் எதிர்பார்த்த பாதிப்புகள், எதிர்பார்த்த அளவுக்கு அவள் உடலில் ஏற்பட்டன. இருந்தாலும் மைதிலி எங்கள் உதவியுடன் மன உறுதியுடன் அவைகளை எதிர்கொண்டாள்.

தலையில் இருந்த முடியெல்லாம் உதிர்ந்த போது முன்பு வந்த அளவுக்கு அவள் முகத்தில் சோகம் வரவில்லை.

"சீக்கிரம் முளைச்சுடும் இல்லைப்பா? பேரக் குழந்தை பிறக்கும் போது மொட்டைத் தலையோட இருக்க மாட்டேன் தானே?"

"இந்த ட்ரீட்மெண்ட் முடிஞ்ச ரெண்டே மாசத்தில் முளைச்சுடும் கண்ணம்மா"

வாய்ப்புண்ணும், குடற்புண்ணும் அவளை வதைத்தன. எதைச் சாப்பிட்டாலும் வாந்தியாக வெளிக் கொணர்ந்தாள். கழிப்பிடத்துக்குச் செல்லக்கூட தலை சுற்றலால் தனியாக நடக்க முடியாமல் போனதை வெறுத்தாள். ஒரு முறை நாங்கள் யாரும் இல்லாத சமயத்தில் என்னையோ அமுதாவையோ கூப்பிட சங்கோஜப் பட்டுத் தனியாக எழுந்து டாய்லெட்டுக்குச் செல்லப் பார்த்தவள் அரை மயக்கத்தில் விழுந்தாள்.

நானோ அமுதாவோ அவளை விட்டு அகன்ற மறுகணத்தில் இருந்து மைதிலியுடன் இருக்க அன்று முதல் ஒரு முழு நேர நர்ஸுக்கு ஏற்பாடு செய்தேன்.

இப்படி எல்லாம் வசதிகள் இல்லாமல் எத்தனை கேன்ஸர் நோயாளிகள் அவதிப் படுகிறார்கள் என்று எண்ணி என் நிலைமைக்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன். மைதிலிக்கு கேன்ஸர் சிகிச்சை தொடங்கிய அந்த ஆறு மாதங்களில் மெர்ஸிலெஸ், ருத்லெஸ் போன்ற அடைமொழிகளுடன் அழைக்கப் பட்ட நான் முற்றிலும் மாறினேன்.

மூன்று மாதங்களில் கீமோதெரபி தொடர்ந்து கொண்டு இருந்தாலும் அவள் உடல் நிலை நன்கு தேறி இருந்தது.

அமுதாவுக்கும் குழந்தை பிறந்தது. உடல் நிலை ஒரு அளவுக்கு தேறிய நிலையில் யார் சொன்னாலும் கேட்காமல் தலையில் ஒரு ஸ்கார்ஃபைக் கட்டிக் கொண்டு அமுதாவுக்கு உதவியாக இருந்தாள்.

2008

புதுவருடப் பிறப்பை பேத்தியுடன் கொண்டாடினோம்.

அதுவரை இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாக இருந்த கீமோதெரபி மூன்று வாரத்துக்கு ஒரு முறையாக அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து முடிந்தது. அவள் உடல் நிலையும் நன்கு தேறி இருந்தது.

அடுத்த மூன்றே மாதங்களில் அவள் தலைமுடியும் நன்கு வளர்ந்து இருந்தது. அமுதாவின் வெகு நாள் வேண்டுகோளுக்கு இணங்கி பாப் வைத்துக் கொண்டு பார்க்க அட்டகாசமாக காட்சியளித்தாள். மார்பகம் அகற்றப் பட்டதால் வெளித்தோற்றத்தில் வந்த குறையைப் போக்க அவளுக்கு அவளது ப்ராவில் பொருந்தும் படியான ஸ்பாஞ்சில் செய்த மார்பக தோற்றம் கொண்ட ப்ராஸ்தெடிக்ஸ் (உடலில் பொருத்திக் கொள்ளக் கூடிய அமைப்புகள்) வாங்கிக் கொடுத்தேன். முதல் முதலில் அவைகளை போட்டு எனக்குக் காட்டியவளின் முகத்தில் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகம். என் கண்கள் பனிக்க வெகுநாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் அந்தப் பெருமிதச் சிரிப்பைக் கண்டேன். வெளித்தோற்றத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

டாக்டர் ஸ்ரீநாத்திடம் செக்-அப் சென்ற போது அவர் மைதிலியை பரிசோதித்த பிறகு அவளிடம், "மைதிலி, இனி நீங்க முன்னே மாதிரி லைஃப் லீட் பண்ணனும். உங்க உடம்பில் ஆகி இருக்கும் உருமாற்றத்துக்கு வருத்தப் படக் கூடாது. மார்பகங்களோட முக்கியமான வேலை என்ன? குழந்தைகளுக்கு பால் கொடுப்பது. அந்தத் தேவை உங்களுக்கு இப்ப இல்லை. அதைத் தவிற உடலுறவின் போது உணற்சியைக் கிளப்பும் நரம்புகள் மார்பகத்தில் இருக்கறதால, உடலுறவுக்கும் அவைகள் தேவைப் படது. ஆனா அது ஒரு முக்கியத் தேவை இல்லை. அதை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்." மைதிலி முகத்தைச் சுளித்துக் கொண்டு தலைகுனிந்தவாறு நெளிந்தாள்.

அவர் மேலும் தொடர்ந்து, "சார் உங்களுக்காக உங்களோட பழைய ரூபத்திலே இருக்கற மாதிரி அமெரிக்காவில் இருந்து ப்ராஸ்தெடிக்ஸ் வாங்கிக் கொடுத்து இருக்கார். வெளித் தோற்றத்தில் எந்த மாற்றம் தெரியலை. எப்பவும் சியர்ஃபுல்லா இருக்கணும். ஓ.கே" என்றார்.

சிரித்துத் தலையாடிய மைதிலியை வெளியே அனுப்பிவிட்டு என்னிடம் தனியாகப் பேச விரும்பினார்.

டாக்டர் ஸ்ரீநாத், "அவங்களுக்கு மெனோபாஸ் எப்போ வந்தது?" என்று கேட்டார். மாதவிடாய் நிற்பதை ஆங்கிலத்தில் மெனோபாஸ் (menopause) என்று அழைப்பர்.

நான், "மூணு வருஷத்துக்கு முன்னாலதான். அவளோட ஐம்பதாவுது வயசில்"

டாக்டர் ஸ்ரீநாத், "இந்தியாவில் பொதுவா அதுக்கு ரொம்ப முன்னாலயே வந்துடும். ஆனா உலக அளவில் சராசரி ஐம்பத்தி ஒண்ணு. அவங்களூக்கு சரியான சமயத்தில் தான் வந்து இருக்கு" என்றவர் தொடர்ந்து, "How active has been your sex life before the cancer on-slaught?" ("அவளுக்கு கேன்ஸர் வருவதற்கு முன்னால் உங்களுக்கு இடையே உடலுறவு நடந்து கொண்டு இருந்ததா? எத்தனை நாளுக்கு ஒரு முறை?") என்று கேட்டார்.

நான் சற்று நெளிந்து, "Well those days .. three to four times a week (அப்ப எல்லாம் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை)" என்று சொல்லி பிறகு "It had increased after both the kids moved out (ரெண்டு குழந்தைகளும் வீட்டை விட்டு போனதுக்கு அப்பறம் அதிகரிச்சு இருந்தது)" என்று சாக்குச் சொன்னேன். அதற்கு முன்னாலும் அதே அளவோ அதை விட அதிகமாகவோ இருந்ததை கண்ணியம் பார்த்து அவரிடம் பகிர்ந்து கொள்ள வில்லை!

லேசாக புன்னகைத்த டாக்டர் ஸ்ரீநாத், "ஓ, ரெண்டு குழந்தைங்களும் அமெரிக்காவில் இருந்தாங்களா?" என்று பேச்சை மாற்றினார்.

நான், "இல்லை டாக்டர். மகன் அப்போ மலேஷியாவில் இருந்தான். யூ.எஸ்ஸில் எம்.பி.ஏ முடிச்சுட்டு இங்கேதான் இருந்தான். எக்ஸ்பீரியன்ஸ் வரட்டும்ன்னு மலேஷியா யூனிட்டுக்கு நான் அனுப்பினேன். இப்போ இங்கேதான் இருக்கான். அமுதா பெங்களூரில்தான் இருக்கா. ஆனா கல்யாணத்துக்கு பிறகு அவங்களுக்கு பொறுப்பு வரணும்ன்னு என் மனைவியே தனிக் குடித்தனம் வெச்சுக் கொடுத்துட்டா"

டாக்டர் ஸ்ரீநாத், "Sorry for digressing. அவங்களுக்கு எந்த அளவுக்கு செக்ஸில் ஆர்வம் இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்காக உங்க செக்ஸ் லைஃபைப் பத்திக் கேட்டேன். நீங்க சொல்றதை வெச்சு உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் இருக்கு ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. முதலில் நல்லதைச் சொல்றேன். ஒரு வேளை மெனோபாஸ் வராம இருந்து இருந்தா நிச்சயம் கீமோதெரபியின் போது வந்து இருக்கும். மெனோபாஸினால வரும் குழப்பங்கள் உங்களுக்கு இல்லை"

நான், "மெனோபாஸ்ஸை ரொம்ப சாதாரணமா சமாளிச்சா டாக்டர்"

டாக்டர் ஸ்ரீநாத், "That's good. இப்ப கெட்ட செய்திக்கு வர்றேன். மெனோபாஸ்ஸுக்குப் பிறகும் பெண்கள் செக்ஸில் கலந்துக்கறதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு அவங்களுக்கே இருக்கும் செக்ஸ் உள்ளுணர்வு. அடுத்தது செக்ஸ் ட்ரைவ். செக்ஸ் ட்ரைவ் என்பது முழுக்க முழுக்க மனம் சம்மந்தப் பட்ட ரெண்டு விஷயங்கள். ஒண்ணு செக்ஸ் மூலம் வரும் உணற்சிகளை அனுபவிக்கணுங்கற ஆசை. இன்னொண்ணு, அவங்களோட வாழ்க்கைத் துணையின் மேல் இருக்கும் காதலினால் அவங்களைத் திருப்திப் படுத்தறதுக்காக வரும் உந்துதல். அவங்களுக்குக் கொடுக்கப் பட்ட சிகிச்சை, அவங்க உருவத் தோற்றத்தில் வந்து இருக்கும் மாற்றம் இந்த ரெண்டு காரணத்தாலும் அவங்களோட செக்ஸ் உள்ளுணர்வுகள் ரொம்பவே பாதிக்கப் பட்டு இருக்கும். முக்கியமா அவங்க யோனியில் ஈரப் பசை குறைஞ்சு இருக்கும். சீக்கிரமா ஈரமாகாது. What we call pre-intercourse secretion? அதனால தங்களால் செக்ஸில் ஈடுபட முடியாதுன்னு அவங்க நினைப்பாங்க. செக்ஸ் மூலம் வரும் உணற்சிகள் இனிமேல் வராதுன்னு அவங்க நினைப்பாங்க. செக்ஸ் ட்ரைவ் குறையும்."

நான், "அதனால பரவால்லை டாக்டர். இந்த ஒரு வருஷமா எனக்குப் பழகிப் போச்சு"

டாக்டர் ஸ்ரீநாத், "நோ நோ. இங்கேதான் நிறைய கணவர்கள் தப்புப் பண்ணறாங்க. உங்க மனைவிக்கு முன்னே மாதிரி நல்லா தன்னம்பிக்கை வரணும்ன்னா அவங்களால் உங்களை இன்னும் திருப்திப் படுத்த முடியும் அப்படிங்கற நம்பிக்கை வரணும். அதுக்காக நீங்க செக்ஸில் ஈடுபடணும். வற்புறுத்தாதீங்க. இன்னமும் அவங்களை நீங்க உடல் ரீதியா விரும்பறீங்கன்னு அவங்களுக்கு புரிய வையுங்க. விரும்பறீங்கதானே?"

நான், "அஃப் கோர்ஸ் டாக்டர்"

டாக்டர் ஸ்ரீநாத், "So what is stopping you? Have fun!"

நான், "ஓ.கே டாக்டர். அப்பறம் இன்னும் ஒண்ணு உங்ககிட்ட கேட்கணும்"

டாக்டர் ஸ்ரீநாத், "Yes. Please"

நான், "நீங்க ட்ரீட்மெண்ட் தொடக்கத்தில் அடுத்த ஐந்து வருடத்தில் மறுபடி கேன்ஸர் வரக் கூடும்ன்னு சொன்னீங்க"

டாக்டர் ஸ்ரீநாத், "இந்த சந்தோஷமான சமயத்தில் நான் அதைப் பத்தி பேச வேண்டாம்ன்னு பாத்தேன். Any how, the fact is she stand very high chances for recurrence of cancer within the next five years (அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அவங்களுக்கு கேன்ஸர் வரும் வாய்ப்புகள் மிக அதிகம்). அது வரும்போது பார்க்கலாம். நான் உங்களுக்கு சொல்லும் ஒரே அட்வைஸ், இது உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் பொருந்தும், "Live life as though there is no tomorrow" (நாளை என்று ஒன்று இல்லை என்று மனத்தில் கொண்டு வாழுங்கள்)" என்று முடித்தார்.

தகவல் பகுதி:

கேன்ஸர் சிகிச்சை முறைகளைப் பற்றிய தகவல்களை இம்முறை கதையிலேயே கொடுத்து விட்டேன். ஆனால் வேறு ஒரு முக்கியமான விவரத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மைதிலியின் உடல் சீக்கிரம் நலமானதுக்கு காரணம் கொடுத்த மருந்தும் சிகிச்சையும் மட்டும் அல்ல. அவள் குடும்பத்தினரின் அன்பும் முரளீதரனின் அணைப்பும் காரணங்கள். கவனிக்க. நான் சொன்னது அரவணைப்பு அல்ல. அணைப்பு ...

அணைப்பும் ஒரு அறுமருந்து...

அன்புடன் அணைப்பதை ஆங்கிலத்தில் ஹக் (hug) என்று சொல்வார்கள். அணைப்பதினால் உடல் நலன் மேம்படுவது நிரூபிக்கப் பட்ட உண்மை.

ஒரு ஆராய்ச்சியில் அணைக்கும் போது அணைப்பவருக்கும் அணைக்கப் படுபவருக்கும் இரத்த அழுத்தம் குறைகிறது என்று கண்டறிந்து உள்ளனர்.

இன்னொரு ஆராய்ச்சியில் அணைக்கும் போது இருவரின் உடலிலும் ஆக்ஸிடாஸின் (oxytocin) எனப்படும் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கிறது என்று கண்டறியப் பட்டு இருக்கிறது. ஆக்ஸிடாஸின் காமத்துக்கும் இனப்பெருக்குக்கும் மட்டும் பயன் படும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தனர். அந்த ஹார்மோன் பல்வேறு ஆக்கபூர்வமான உணர்ச்சிகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை சமீபகாலத்து ஆராய்ச்சிகள் கண்டுபிடித்து உள்ளன.

மேற்கண்ட கருத்துக்களை நீங்கள் விக்கிப்பீடியாவில் காணலாம்.

ஒரு கணவன் மனைவியை அணைப்பதை வழக்கமாகக் கொண்டால் அதனால் மனைவி பயனுறுகிறாள் என்பதை நார்த் கரோலினா பல்கலைக் கழகம் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். இதை பி.பி.ஸி செய்தித்தளத்தில் காணலாம்.http://news.bbc.co.uk/2/hi/health/4131508.stm

வெறுமனே "benefits of hugging and cuddling" என்று கூகிளில் கொடுத்துப் பாருங்கள். கூகிள் கொடுக்கும் ஒவ்வொரு வலை இணைப்பும் அணைப்பின் நன்மையைப் போற்றும்.

அணைப்பது ஒரு மேல்நாட்டுப் பழக்கம், குழந்தைகள் பிறந்தபின் குழந்தைகள் முன்னால் கணவன் மனைவியை அணைப்பதால் குழந்தைகள் மனம் கெடும் என்று எண்ணுவது மடமையிலும் மடமை.

நான் முந்தைய பதிவில் மருத்துவப் பரிசோதனையைப் பற்றி எழுதி இருந்தேன். அதை செயலாக்க ஹனின் வாசகர்களுக்கு விண்ணப்பித்து இருந்தார். மற்றவர் சொல்லுமுன் நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மனைவியை, உங்கள் கணவனை, அன்புடன் (துளியும் காமம் இல்லாமல்) அணைப்பதை ஒரு வழக்கமாகக் கொள்ளுங்கள். உங்கள் இருவரின் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் அது ஒரு நல்ல மருந்து.

No comments:

Post a Comment