Thursday, October 1, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 13

நண்பரகளுடன் இரண்டு பைக்கில் கிளம்பினான் சத்யன், இலஞ்சியை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்த தென்னந்தோப்புக்குள் போனது அவர்களின் பைக், வண்டியை மறைவாக நிறுத்திவிட்டு நால்வரும் இறங்கி அங்கேயிருந்த ஒரு குடிசைக்குள் நுழைந்தார்கள்,

மண்பானையில் இருந்த கள்ளை லிட்டர் அளவையால் அள்ளி வேறொரு பிளாஸ்டிக் மக்கில் அளந்து ஊத்திக்கொண்டு இருந்தவனிடம் காசை கொடுத்துவிட்டு அவன் கொடுத்த கள்ளை வாங்கி இவர்கள் எடுத்து வந்த இரண்டு லிட்டர் வாட்டர் கேன்களில் ஊற்றி நிரப்பிக்கொண்டு வெளியே வந்து வந்த வழியே பைக்கில் கிளம்பி விட்டனர் நால்வரும்



வழியில் இருந்த கடையில் ஊறுகாய் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, மறுபடியும் திருநெல்வேலி வந்து முண்டன்துறை புலிகள் சரணாலயம் செல்லும் சாலையில் பைக்கை விரட்டினார்கள்,

அடர்ந்த காட்டில் ஒரு இடத்தை தேர்வுசெய்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினார்கள், நால்வரும் அங்கே கிடந்த பாறைகளில் அமர்ந்து பாட்டில்களை ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு, ஒரு கையில் ஊறுகாயும் மாறுகையில் கள் பாட்டிலுமாக இருந்தனர்,

இதுமாதிரி நேரங்களில் சத்யனின் அரட்டை தான் அதிகமாக இருக்கும் ஆனால் இன்று சத்யனின் அமைதி அவன் நண்பர்களின் மனதில் உறுத்தியது, அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள பிரச்சனை ஊரறிந்த விஷயம், இப்போது அவள் வந்திருப்பதால் ஏதாவது பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை

சத்யன் ஒரே தம்மில் இரண்டு லிட்டர் கள்ளையும் மடமடவென்று குடித்தான், இடையே ஊறுகாயைக் கூட தொட்டுக்கொள்ள வில்லை, அந்த புளிப்பான குளிர்ந்த கள் அவனின் மனதில் இருந்த கொதிப்பை கொஞ்சம் கூட குறைக்க வில்லை,

மனம் மான்சி மான்சி என்று புலம்பியது, புத்தி அவள் துரோகி அவள் பெயரைச் சொல்லாதே என்று அவனை கடிந்தது, அன்று அருவியில் நடந்தவைகள் எல்லாம் நினைவில் வந்து அவன் மனதை புரட்டிப்போட்டது, நான் முத்தம் கொடுக்கும் முன்பே என் நாக்கை இழுத்து தன் உதடுகளால் சிறைபிடித்து சுவைத்தாளே அது பொய்யா? அந்த பார்வை, அவள் கண்களில் தெரிந்த தாபம், ஏக்கம், காதல் எல்லாமே பொய்யா? என்னை அவள் ஏமாற்றினாளா? இல்லை நான் அவளிடம் ஏமாந்தேனா? என் மான்சிக்கு துரோகம் செய்யக்கூட தெரியுமா? அவளுக்கு என் காதல் புனிதம் என்று நினைத்தேனே,, இப்படி ஒன்றுமில்லாமல் பொய்த்துப் போய்விட்டாயே என் மான்சி,, என்று புலம்பியது மனது

மறுபடியும் கள் பாட்டிலுக்காக சத்யன் கையை நீட்ட ,, “ டேய் சத்தி வேனாம்டா, ஏற்கனவே ரெண்டு லிட்டர் குடிச்சிட்ட, இன்னும் குடிச்சா வாந்திதான் வரும்டா?’ என்று ஒருவன் எச்சரிக்கை செய்ய

“ ஏய் எனக்கு ஒரு மசுரும் ஆகாது குடுடான்னா குடு” என்று சத்யன் கோபமாக இரைந்து கத்தியபடி எழுந்து நண்பனை நெருங்கியவன் எதையோ நச்சென்று மிதிக்க, என்னவென்று குனிந்து பார்ப்பதற்குள் சத்யனின் வலதுகால் நடுவிரலில் தனது முத்திரையை பதித்தது அந்த கொடும் விஷமுள்ள கருவேலம் பாம்பு ,

ஆனால் சத்யன் துள்ளி விலகினானே தவிர,,அய்யோ என்று அலறவில்லை, அவன் மனநிலை அலற இடம் கொடுக்கவில்லை போல, ஆனால் நண்பர்கள் பாம்பு கவனித்துவிட்டார்கள், அதில் ஒருவன் “ அய்யோ கருவேலம் பாம்புடா,, சத்யன் காலுக்கு கீழ இருந்துதான் வந்துச்சு” என்று கூறிவிட்டு பாம்பு போனதிசை பார்ககும் முன் பாம்பு மறைந்துவிட்டிருந்தது


சத்யன் காலை உதறுவதை பார்த்து ஒருவன் “ டேய் சத்யா, உண்மையை சொல்லுடா பாம்பு உன்னைய கொத்துச்சா” என்று கலவரத்துடன் கேட்க
சத்யன் ஆம் என்று தலையசைத்தான், அவ்வளவு தான் அத்தனை பேரும் கையில் இருந்த கள்ளை தூர எறிந்துவிட்டு சத்யன் காலடியில் அமர்ந்து காலை பரிசோதித்தனர்,, சரியாக வலதுகால் நடுவிரலில் பாம்பி பல் தடம் தெரிந்தது, கடித்தது கொடிய விஷமுள்ள பாம்பு என்றாலும், மூவரும் திரண்ட கண்ணீரை கட்டுப்படுத்தி, பதட்டத்தை ஒதுக்கி விட்டு ஒருவன் பைக்கிலிருந்து பர்ஸ்டெய்டு பாக்ஸை எடுத்து அதிலிருந்த ரோஸ்நிற பேண்டேஜ் துணியை எடுத்து கனுக்காலுக்கு சற்று மேல கட்டு போட்டான், மற்றொருவன் சத்யனின் காலை அசையாமல் பிடித்துக்கொள்ள, மூன்றாமவன் தன் பர்ஸில்லிருந்து சிறு பேனா கத்தியை எடுத்து பாம்பு கடித்த இடத்தில் சரக்கென்று கிழிக்க, ரத்தம் பீறிட்டது

கீழே அமர்ந்து என்னவோ செய்கிறார்கள் என்று அசால்டாக நின்றிருந்த சத்யன், விரலை கத்தியால் கிழிக்கவும் வலியால் துடித்து “ அடங்கோ **** ங்களா, எதையும் சொல்லிட்டு செய்ங்கடா” என்று கோபமாக அலறி காலை விடுவிக்க முயல, மூவரும் விடவில்லை, ஏகப்பட்ட ரத்தம் வழியும் வரை காலை அழுத்தி பிடித்துக்கொண்டனர்,

“ டேய் மச்சான் இவ்வளவு ரத்தத்துக்கு இன்னேரம் விஷம் வெளிய வந்திருக்கும், இருந்தாலும் நாம செங்கோட்டை பார்டர்ல இருக்குற நம்பூதிரி கிட்ட போய் காமிக்கிறதுதான் நல்லது” என்று ஒருவன் கூற

“ ஆமாம்டா நீ போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணு” என்றதும், ஒருவன் ஓடிச்சென்று பைக்கை ஸ்டார்ட் செய்ய, ரத்தம் வழிந்த விரலை கட்டுப்போட்டு விட்டு சத்யனை நடுவே உட்காரவைத்து மற்றொருவன் அவனுக்கு பின்னால் அமர்ந்து பிடித்துக்கொண்டான்

மற்றோரு பைக்யும் எடுத்துக்கொண்டு பறந்தனர் , சத்யனின் நண்பர்களுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது, ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை

“ டேய் சத்யா மயக்கமா வர்ற மாதிரி இருக்காடா” என்று பின்னால் இருந்தவன் கேட்க,,

“ இல்லடா மச்சான்,, வெளக்கெண்ணை நீ விரல கிழிச்சது தான் வலி உயிர் போகுது” என்றவன், ஏதோ தோன்றியதும் தலையை உலுக்கிக்கொண்டு “ அன்னிக்கு அவளுக்கும் இதே வலதுகால் நடுவிரல்ல தான் அட்டைப்பூச்சி கடிச்சுது” என்று சொல்ல..

“ அப்போ உங்க ரெண்டு பேரையும் பிடிச்ச சனியன் இன்னியோட ஒளிஞ்சுதுடா மச்சான்” என்று பின்னால் இருந்தவன் சத்யனின் தோளைத்தட்டி உற்சாகமாக சொன்னான்

சத்யனுக்கு புரியவில்லை,, அப்படித்தானோ, என்று நினைத்தான், அதற்குள் நம்பூதிரி வீடு வந்துவிட, மூவரும் இறங்கி சத்யனை அழைத்துக்கொண்டு உள்ளே போனார்கள்

நம்பூதிரி வழக்கம் போல சட்டை போடாமல் கொண்டை போட்டிருந்தார், கழுத்தில் ருத்ராட்சம் மாலை இருந்தது,, அவருக்கு வைத்தியம் தெரியுமோ தெரியாதோ? ஆனால் அவரிடம் வந்ததும் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் சுற்றுவட்டார மக்கள் பூச்சிகடி பாம்பு கடி இவைகளுக்கு இவரைத்தான் தேடி வந்தனர்

சத்யனை பார்த்ததுமே கேட்டார் “ மோனே கள் குடிச்சிட்டுண்டோ?” என்று,, சத்யன் சங்கடமாக தலையசைத்தான்

சற்றுநேரத்தில் அவரது உதவியாளன் ஒரு பித்தளை டம்ளரில் பச்சையாக எதையோ கொண்டு வந்து கொடுத்து சத்யனை குடிக்கும்படி சொன்னான்

டம்ளரை வாங்கிய சத்யன் “ டேய் மச்சான், என்னடா இது கன்னுக்குட்டி சாணியை கரைச்ச மாதிரி இருக்கு” பக்கத்தில் இருந்தவன் காதில் கிசுகிசுக்க

“ ஏய் பேசாம குடிடா அவரு காதில் விழபோகுது” என்று அதட்டினான் நண்பன்

சத்யன் கண்ணைமூடிக்கொண்டு மூக்கை பொத்திக்கொண்டு டம்ளரில் இருந்ததை மடமடவென்று குடித்துவிட்ட இரண்டு நிமிடத்தில் அவன் குடித்த கள் இரண்டு மடங்காக வெளியே வந்தது


அதன் பிறகுதான் வைத்தியர் பாம்புகடிக்கு வைத்தியம் செய்தார், சில மூலிகைகளை கசக்கி சத்யன் வாயில் ஊற்றிவிட்டு, கால் விரலில் இருந்த காயத்துக்கு மருந்து போட்டு கட்டு போட்டுவிட்டு நிமிர்ந்தவர் தன் உதவியாளரிடம் ஏதோ சொல்லிவிட்டு உள்ளே போய்விட

அவர் சத்யனை நெருங்கி “ விஷம் அவ்வளவாக ஏறலை, அதனால தப்பிச்ச, இந்த மருந்த நைட்டு ரெண்டு முறை குடிச்சிடு, ஆனா மருந்து வேலை செய்ய நைட்டு முழுக்க தூங்காதே, அப்பத்தான் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற விஷமும் முறியும், ஒரு வாரத்துக்கு புலால் உணவை எடுத்துக்காதே ” என்றவர் சத்யனின் நண்பர்களிடம் திரும்பி “ தம்பிகளா கொத்துனது கருவேலம் பாம்பு,, அதனால நைட்டு பனிரெண்டு மணிக்கு வைக்கோல்ல ஒரு பொம்மை செஞ்சு அதுக்கு இவரோட துணிகளை போட்டு சுடுகாட்டுக்கு கொண்டு போய் நாலு விரகை வச்சு எரிச்சுட்டு வந்துடுங்க,, இல்லேன்னா நாம கொத்துனவன் இன்னும் சாகலைன்னு அந்த பாம்பு மறுபடியும் இவரை தேடிவரும்” என்று தகவல் சொன்னார்

அவர் சொன்ன விஷயம் நம்பமுடியாதது என்றாலும், அதன் பாதிப்பை நினைத்து திகிலாக இருந்தது, சரியென்று சொல்லைவிட்டு, அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு நால்வரும் சத்யன் விட்டுக்கு வந்தபோது இரவு மணி ஒன்பதாகி இருந்தது

கடை மூடியிருக்க, சத்யன் வீட்டு படிகளில் ஏறி கடைக்குள் செல்லும் வழியில் இறங்கி உள்ளே போய்விட்டான்,, அவனை தொடர்ந்த நண்பர்கள் “ டேய் சத்யா என்னடா கடைக்கு வந்துட்ட வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்க,,

“ நான் வரலை நீங்க வீட்டுக்குப் போங்கடா” என்றவன் சேரில் அமர்ந்து டேபிளில் தலை கவிழ்ந்தான்

அதற்குள் ஒருவன் மேலே போய் தகவல் சொல்ல,, மான்சியும் பேச்சியும் அலறியடித்துக்கொண்டு கீழே ஓடிவந்தனர்,, இவ்வளவு நேரமாகியும் சத்யன் வரவில்லை என்றதும் வேலுவும் வீட்டுக்கு போகாமல் அங்கேயே இருந்தான்

சத்யனுக்கு பாம்பு கடித்து விட்டது என்றதும் முன்னால் வந்த பேச்சியை ஒதுக்கிவிட்டு கதறி ஓடிவந்த மான்சி, டேபிளிலுக்கு அந்த பக்கம் அமர்ந்திருந்த சத்யன் முன்பு மண்டியிட்டு அவன் காலை எடுத்து தன் மடியில் வைத்து போடப்பட்டிருந்த கட்டை வருடி “ என்ன சத்யா இது? எதுக்காக காலையில வெளிய போன” என்று கண்ணீருடன் கேட்க

அவளிடமிருந்து காலை விட்டுவித்துக் கொண்டு, டேபிளில் கவிழ்ந்த முகத்தை நிமிராமல் “ அதெல்லாம் ஒன்னுமில்ல நீ மேல போ” என்றான்

பேச்சி கண்ணீருடன் மகனின் தலையை வருடியவாறு “ என்னடா நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது,, அன்னைக்கு இவளுக்கு அட்டைப்பூச்சி கடிச்சிது,, இன்னிக்கு உன்னைய பாம்பு கடிச்சிது, என்னன்னு புரியலை” என்று கெட்டது எல்லாவற்றையும் சம்மந்தப்படுத்தி பார்த்து கலங்கியது அந்த தாய் மனது

“ அம்மா அதெல்லாம் இனிமேல் இவங்க ரெண்டுபேருக்கும் ஒரு கஷ்டமும் கிடையாது,, இத்தோடு இவங்களை பிடிச்ச சனியன் ஒளிஞ்சிதுன்னு சந்தோஷப்படுங்க,, ஆனா இன்னிக்கு நைட் முழுக்க சத்யன் தூங்க கூடாதுன்னு வைத்தியர் சொன்னாரு,, அப்புறம் ஒரு கைலி எடுத்துட்டு வந்து சத்யன் கிட்ட குடுங்க, அவன் போட்டுருக்க துணி எங்களுக்கு வேனும்” என்று சத்யனின் நண்பன் ஒருவன் கூறிவிட்டு வைத்தியர் சொன்னதை பேச்சியிடம் விபரமாக கூறினான்




உடனே மான்சி மாடிக்கு ஓடிச்சென்று சத்யனின் கைலி ஒன்றை எடுத்துவந்து சத்யனிடம் கொடுக்க, அவன் எதுவுமே பேசாமல் வாங்கி போட்டிருந்த உடைகளை கலைந்து கைலியை கட்டிக்கொண்டான், மறுபடியும் டேபிளில் தலையை கவிழ்ந்தான் சத்யன்

பேச்சியிடம் நடந்தவைகளை அவன் நண்பர்கள் விளக்கிக்கொண்டிருக்க, மான்சி கவிழ்ந்த அவன் தலையையேப் பார்த்துக்கொண்டு கண்ணீருடன் நின்றிருந்தாள்,, அவன் இப்படி போனதுக்கு காரணம் நான்தான் என்று அவள் உள்ளம் ரத்தக்கண்ணீர் வடித்தது, என் மனசு இவனுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது, இனிமேல் என்ன நடக்கும், என்ற கலக்கத்துடன் அப்படியே நின்றிருந்தாள்
சத்யன் தூங்குகிறானோ என்ற சந்தேகத்தில் வேலு அவன் தோளைப் பற்றி உலுக்கி எழுப்ப, சந்தேகமேயில்லை,ப சத்யன் தூங்கிக்கொண்டு தான் இருந்தான், அடுத்த நிமிடம் அனைவரும் பதறிப்போனார்கள்,

“ அய்யோ டேய் மச்சான் தூங்காதடா, தயவுசெய்து தூங்காதடா” என்று ஆள்மாற்றி ஆள் சத்யனை கெஞ்ச,, அவன் அவர்களை அலட்சியப்படுத்தி தலையை கவிழ்ந்தான்

மான்சி அவனை நெருங்கி “ வேனாம் சத்யா தூங்காதே,, கொஞ்சநேரம் முழிச்சிரு சத்யா” என்று கதறலுடன் கெஞ்சினாள்

முடியாது என்பது போல் சத்யன் தலையை அசைத்தான்,,

அவனை விழிக்க வைக்க நண்பர்கள் எல்லோரும் பாட்டு, ஜோக்ஸ் என்று இறங்கினார்கள்,, “மயக்கமென்ன” படத்தின் “ காதல் என் காதல்” பாட்டை செல்லில் ஒலிக்கவிட்டு வேலு அந்த பாடலுக்கு அருமையாக ஆட,, ம்ஹூம் சத்யனின் கவனம் எதிலும் நிலைக்கவில்லை, நண்பர்களின் முயற்சித் தோற்றது

அப்போது ஒருவன் “ டேய் காலையிலேர்ந்து சத்யன் ஒரு பாட்டை செல்போன்ல வச்சு கேட்டுக்கிட்டே இருந்தானே? அந்த பாட்டை போடுங்கடா அவன் கேட்கட்டும்” என்று சொன்னதும்

மூனு படத்தில் தனுஷ் பாடிய அந்த பாடலை சத்யனின் செல்போனில் ஒலிக்கவிட்டு டேபிளில் வைத்தனர் 



போ நீ போ,, போ நீ போ,,
தனியாக தவிக்கின்றேன்,,
துணைவேண்டாம் அன்பே போ,,
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ….

நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ…
நிஜம் தேடும் அன்பே போ….
உயிரோட விளையாட
விதி செய்த அன்பே போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ….

உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே…
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே….
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா…

போ நீ போ,, போ நீ போ

என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ…
என் கனவு களைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ…
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ…
உயிரோட விளையாட விதி செய்தால் அன்பே

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ…
போ நீ போ,, போ நீ போ,,





No comments:

Post a Comment