Friday, October 30, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 13

மாலை ஆறு மணி செய்தியில் 'நிப்பு நிரஞ்சனை பற்றி சரியானதகவல் தெரியவில்லை' என்று தெரிவிக்க,பைத்தியம் பிடித்தது போல் ஆனாள் ஷிவானி.

"அம்மா இனிமேல் என்னால பொறுக்க முடியாது. நான் அங்கே போறேன். நீ வந்தா வா, இல்லைனா எனக்கு தனியா போய்க்க தெரியும்."

"இருடி, நானும் வரேன்"

இரவு ட்ரெயினில் விஐபி கோட்டாவில் இருவரும் கிளம்ப, நள்ளிரவு 1 மணிக்கு வாரங்கல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.



இறங்கிய இருவரும் என்ன செய்வது என்று யோசித்து, 'சரி கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கலாம்' என்று நினைக்க, ஷிவானி தோளில் கை விழுந்தது.

யார் என்று பார்க்க ஒரு முப்பத்தி ஐந்து வயது பெண் சிரிப்போடு நின்று கொண்டு இருந்தாள். 

"நீங்க ஷிவானி தானே, நிப்பு சார் மனைவிதானே" என்று கேட்க, "ஆமா நீங்க யாரு, என்னை எப்படி தெரியும்" என்று கேட்க, "அம்மா என் பெயரு ராஜம்மா, இன்ஸ்பெக்டரா இருக்கேன். நிப்பு சார் உங்களை பத்தி சொல்லி இருந்தாரு. நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து என்னை இங்கே வெயிட் பண்ண சொன்னாரு."

'அப்பாடி'ஷிவானி மனதில் சந்தோஷம். "பாத்தியாம்மா எனக்கு நிருவை பத்தி நல்லா தெரியும். அம்மா இவங்க கூட போகலாம்ப்ளீஸ்"என்று சொல்ல, பத்மா "வேண்டாம் ஷிவானி, தெரியாதவங்க கூட போறது தவறு."

"அம்மா, யாரை பார்த்தாலும் சந்தேகபட கூடாது. இவங்கதான் எல்லா விபரத்தையும் சொல்லுறாங்களே. கூட போகலாம்மா.இல்லைனா நான் அவங்க கூட போய்டுவேன்" என்று கோபத்தோடு சொல்ல, "சரி நானும் வரேன்" என்று பத்மா கிளம்ப மூவரும் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் இருந்த இண்டிகா காரில் கிளம்பினர்.

டிரைவர் வேகமாகஓட்ட மூன்று மணி நேரத்தில் காட்டுக்குள் கார் நுழைந்தது.

அதே நேரத்தில் காட்டுக்குள்

"வீர ராஜு, கேஷவ் ராவ், ராமையா ரெண்டு பேர் கூட இருந்த அந்த இருவது பேர் தப்பிசுட்டாங்க, இப்போ என்ன செய்றது" நிரஞ்சன் உடம்பு முழுக்க சிறு காயங்கள்.


அருகில் இருந்த வீர ராஜு "சார் இருவது பேரையும் தீத்து கட்டலைனா, அவங்க வெளியே போய் எல்லோரையும் கெடுத்து, நாசம் பண்ணிடுவாங்க"

"நீங்க சொல்றது உண்மைதான் வீர ராஜு", கண்களை சுருக்கி சிந்தனையில் ஆழ்ந்து போக, வீர ராஜு அமைதியாக காத்து இருந்தார். நிப்பு யோசித்தால், எதிரிக்கு கட்டாயம் ஆப்புதான்.

சிந்தனையில் இருந்து விடுத்து எழுந்த நிரஞ்சன் கடகடவென்று ஆணைகளை பிறப்பித்தான்.கூட இருந்த அந்த இருபது பேர் கொண்ட போலிஸ் கூட்டம் கவனமாக கேட்க ஆரம்பித்தது.

நீங்க உங்க கைல இருக்கிற மரபெட்டிகளை பிரித்து உள்ளே இருக்கிற கண்ணி வெடிகளை ஒவ்வொரு பத்தடிக்கும் இடைல புதைச்சுட்டு அப்படியே கிளம்புங்க. நாம யாரும் இந்த இடத்தில இருக்க கூடாது"வீர ராஜு "அங்கே பாருங்க" என்று தூரத்தில் கை காட்ட, காளி கோவில் அருகில் இருந்த மரங்களை கண்ட நிரஞ்சன் கண்கள் அப்படியே நின்று போயின. 

"சார் அதுதான் அந்த படுகொலை நடந்த இடம்"வீர ராஜு சொல்வதை புரிந்து கொண்ட நிரஞ்சன் முகம் இறுகி போனது. கையில் டார்ச்லைட் உடன் மெதுவாக அனைவரும் முன்னேறி செல்ல, பின்னால் வந்த போலிஸ் கூட்டம் கண்ணி வெடிகளை பூமியில் புதைத்து கொண்டே முன்னேறியது.எதிரிகள் நடமாட்டம் இருப்பது போல் தெரிய,நிரஞ்சன் மூளை மின்னல் வேகத்தில் ஈடுபட்டது.

"வீர ராஜு நான் முன்னால போறேன். நீங்க நம்ம ஆட்களோட என்ன நடக்குதுன்னு மரத்துக்கு பின்னால ஒளிஞ்சு நின்னு பாருங்க. நான் பயர் சொன்னா மட்டும் சுட்டா போதும். அதுவரை அவசரபட வேண்டாம்."

"இல்லை சார் நானும் வரேன்."

"வேணாம் சொன்னா கேளுங்க"முன்னோக்கி நடந்த நிரஞ்சன் திரும்பி வந்தான்."ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ஷிவானியை வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க, இது என்னோட கடைசி ஆசை." பதிலுக்கு காத்திராமல் முன்னேறி சென்று விட்டான். 

'என்ன சொல்வது' என்று புரியாமல் உறைந்து போய் நின்றார்.

இருட்டுக்கு நடுவே இரவு முழுக்க திரிந்து கொண்டு இருப்பதால் கண்கள் பழக்கமாகி இருக்க தனது Pen டார்ச்லைட்டை அணைத்து விட்டு முன்னேற, அங்கே அவன் கண்ட காட்சி நடுங்க வைத்தது.


இரண்டு மரங்களிலும் ஷிவானி மற்றும் பத்மா கட்டப்பட்டு இருக்க,அருகில் ராமையா, கேஷவ் ராவ், லக்ஷ்மி நிற்க, சுற்றி ஐம்பது நக்சலைட்கள் கையில்துப்பாக்கி உடன் நின்றனர்.

"வாடா புது மாப்பிள்ளை, என்னடா கல்யாணம் பண்ணி ஹனி மூன் கொண்டாட போவான்னு பார்த்தா இங்கே வந்தா எங்களை கொல்ல பார்க்கிற" என்று ராமையா உரும, பின்னாலே கேஷவ் ராவ், 

"டேய் உன்னையை அன்னைக்கே கொன்னு போட்டு இருக்கணும். தப்பிச்சு போய்ட்ட. அது மட்டும் இல்லாம ஐநூறு பேர் இருந்த எங்க கூட்டத்தை வெறும் ஐம்பது பேராசுருக்கிட்ட.உன்னைய மட்டும் போட்டு தள்ளனும்னு பார்த்தா, உன் பொண்டாட்டியும் மாமியாரும் தானே வந்து விழறாங்க.

இன்னைக்கு எங்களோட இருக்கிற எல்லாரையும் அடித்து நொறுக்கிட்டடா. ஆனால் என்ன பாரு நீ யும் உன் புது பொண்டாட்டியும், உன் மாமியாரும் இங்கே தான் சாக போறீங்க"உரக்க சிரித்து கொண்டே "என்னடா முழிக்கிற. லக்ஷ்மி இங்கே வா. வந்து இவனுக்கு புரியுற மாதிரி சொல்லு".

"உன் பொண்டாட்டி, உன்னோட மாமியார் ரெண்டு பேரையும் ஏமாத்தி கொண்டு வந்தது நான்தாண்டா. எனக்கு எப்படி தெரியும்னு பாத்தியா. உங்க போலிஸ் தலைமை அலுவலகத்தில இருக்கிற எங்க கை ஆளுதான் நீ திரும்பி வந்ததாய்சொன்னான். அவன் மூலம் உன் பொண்டாட்டி போட்டோவும் கிடைச்சது."

"நீரு வந்துட்டிங்களா" என்று ஷிவானி கதற, கண்களால் அவளை பார்த்து பயப்படாதே என்று சைகை செய்தான்.

"டேய் இவனை அடிங்கடா. நான் கொஞ்ச நேரம் அதை வேடிக்கை பார்க்கிறேன்" என்று கேஷவ் சொல்ல, துப்பாக்கியை கீழே போட்டு விட்டு இரண்டு பேர் எகிறி அடிக்க, கீழே விழுந்தான் நிரஞ்சன்.

கேஷவ் சிரித்தான். "டேய் இவன் பேரு நெருப்பாம். இவனை முதல்ல கொளுத்துங்கடா. இவன் கண் முன்னாலே இவனோட பொண்டாட்டி, மாமியாரை அப்படியே சுட்டு கொன்னுட்டா, மேல போய் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துவான்."

கீழே விழுந்து கிடந்த நிரஞ்சன், உருண்டு எழுந்த போது அவன் இரண்டு கைகளிலும் துப்பாக்கி முளைத்து இருந்தது. ஐ பி எஸ் பயிற்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற அந்த நினைவுகள் திரும்ப வர, 'பயர்' என்று சத்தம் போட்டு கொண்டே,தனது இரண்டு கைகளில் இருந்த துப்பாக்கி மூலம் மாறி மாறி சுட, முதல் குண்டு லக்ஷ்மி காலில், இரண்டாவது குண்டு ராமையா கழுத்தில், மூன்றாவது குண்டு கேஷவ் நெஞ்சில் வெடிக்க மூவரும்
சுருண்டனர்.

கூடவே இருவது துப்பாக்கிகள் முழங்கும் ஓசை கேட்டு நக்சலைட் தீவிரவாதிகள் சிதறி ஓடஅதற்குள் சத்யநாராயணா, மோகன் பாபு தலைமையில் போலிஸ் அதிகாரிகள் வந்து சேர்ந்து அவர்களும் சுட ஆரம்பித்தனர்.

ஓட தொடங்கிய பலரும் கண்ணிவெடியில் கால் வைக்க, வெடித்து சிதறி உயிர் விட்டனர்.காடு மரங்கள் பற்றி எரிய அந்த இடமே போர்க்கோலம் பூண்டது.




அதற்குள் சுதாரித்து கொண்டு ஓடிய நிரஞ்சன், ஷிவானி, பத்மாவை விடுவித்து இருவரையும் மரத்துக்கு பின்னேஒளிந்து கொள்ள சொல்லி விட்டு திரும்ப அதற்குள் தோளை உரசி கொண்டு ஒரு துப்பாக்கி குண்டு.

லக்ஷ்மி கையில் துப்பாக்கி உடன் நிற்க, "ஒரு பெண்ணை கொல்ல கூடாதுன்னு தான் உன்னை கால்ல சுட்டேன். உனக்கு இவ்வளவு திமிரா?" என்று கர்ஜனை செய்ய அடுத்த இரண்டு குண்டுகள் அவள் கழுத்து மார்பில் பாய சுருண்டு விழுந்தாள்.

அதற்குள் காட்டின் சில பகுதிகள் எரிய தொடங்க இருட்டு விலகி அதிகாலை வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.

செய்தி கிடைத்த டிஜிபி முதல் அமைச்சருடன் ஹெலி காப்டரில் வந்து இறங்க தொலைகாட்சிகள் போட்டோ எடுத்து தள்ள, அந்த நாளின் தலைப்பு செய்து ஆனது. 

நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்க, இது வரை நடந்த தீவிரவாத ஒழிப்புகளில் இது தான் சிறந்தது என்று பாராட்டப்பட்டது. 

முதல் அமைச்சருக்கு நிரஞ்சனை சந்தித்த மகிழ்ச்சி. பாராட்டி பேசி கொண்டு இருக்க, அருகில் ஷிவானி, வீர ராஜு, பத்மா கண்ணீர் மழையில்.

'கும்பகோணம் வந்தாச்சு இன்னும் அரை மணி நேரத்தில தஞ்சாவூர் வந்துடும்' என்று டிடிஇ சொல்ல, நிரஞ்சன் உறங்கி கொண்டு இருந்த ஷிவானியை எழுப்பினான். 

எழுந்த ஷிவானி, முகம் கழுவி விட்டு வர அவளுக்கு வாரங்கல் காட்டில் நடந்த பேச்சு வார்த்தை நினைவுக்கு வந்தது

பாராட்டு மழையில் நனைந்த நிரஞ்சனை, பத்திரிக்கைகள் பேட்டி எடுக்க, மெதுவாக நடந்து வெளியில் வந்தாள் ஷிவானி. முதல் அமைச்சர் தனியே டிஜிபியுடன் பேசி கொண்டு இருக்க, அவர்களின் அருகில் வந்தாள்.

"யார் இது" என்று முதல் அமைச்சர் டி ஜி பி யிடம் கேட்க, அவரோ "இது நிப்புவின் மனைவி ஷிவானி" என்று சொன்னார்.

அவள் வணக்கம் தெரிவித்து கோரிக்கை ஒன்றை விடுத்தாள்."சார், நீங்க எதிர்பார்த்த மாதிரி நக்சல் ஆபரேஷன் எல்லாம் முடிஞ்சுது.ஆனால் எவ்வளவு நாள்தான் நாம சண்டை போட்டு கொண்டே இருப்பது. இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு வேணும்.

அவங்க எல்லாருமே மோசமானவங்க இல்லை. நிறைய பேரு வேற வழி இல்லாம இந்த இயக்கத்தில சேர்ந்து இருக்காங்க. இவங்களோட மறு வாழ்வுக்கு உதவி செஞ்சா யாரும் பழைய பாதைக்கு திரும்பி போக மாட்டங்க. அதுக்கு என்னோட புருஷன் மாற்றி இருக்கும் நூற்றுகணக்கான தீவிரவாதிகளே சாட்சி. 

அவருக்கு நீங்க கொடுத்த பணி முடிந்தது. ஆனால் இனிமேலும் அவர் இங்கே இருந்தால் அவருக்கு ஆபத்து. அவருக்கு ஒண்ணு ஆனால் என்னால தாங்க முடியாது.

அதனால அவரை வேற டிபார்ட்மென்ட் மாத்துங்க. முடிஞ்சா அவரை வேற மாநிலம் மாத்தினா கூட சரிதான். ப்ளீஸ் எனக்காக இது செய்ய முடியுமா?" என்று கெஞ்சி கேட்க முதல் அமைச்சர் அவள் பேச்சில் இருந்த அக்கறையை உணர்ந்தார்.


"ஓகே தினேஷ். எனக்கு ஓகே. எந்த ஸ்டேட் கொடுத்தா சரியா இருக்கும்."

"சார் இவரை எந்த ஸ்டேட்டுக்கு கொடுத்தாலும் ஓடி வந்து வரவேற்பார்கள். ஆனால் எனக்கு இவரை தமிழ் நாட்டுக்கு அனுப்பினா சரியா இருக்கும்னு தோணுது. நான் தமிழ் நாடு டிஜிபிகிட்ட பேசி ஏற்ப்பாடு பண்ணுறேன்."

"என்னம்மா உனக்கு சந்தோஷமா" என்று கேட்க, கண்களில் கண்ணீர் வழிய கை கூப்பினாள்.

முதல் அமைச்சர்"ஷிவானி உன்னை பார்த்தா என்னோட பொண்ணு மாதிரி இருக்கு. உங்களோட கல்யாணத்துக்கு என்னால வர முடியலை. என்னோட கல்யாண பரிசா இதை நினைச்சுக்க."


"நிரு, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்டா."

"இன்னும் பத்து நிமிஷம்தான்."

அவளை இடுப்போடு வலதுகையால் வளைத்து கொள்ள, தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்குள் ட்ரெயின் நுழைந்தது.

இருவரும் இறங்க, அவன் ட்ராலியை யாரோ பிடித்து பின்னால்இழுக்க, யாரென்று திரும்பி பார்த்தால், "டேய் ராதா கிருஷ்ணா என்னடா திடீர்னு" சந்தோசத்தோடு கூவினான் நிரஞ்சன்.

"ஷிவானி, இவன் என்னோட ஸ்கூல் பிரெண்ட். நம்மோட வீடு, நிலங்கள் எல்லாம் இவன்தான் பாத்துக்கிறான்."

ஷிவானி வணக்கம் சொல்ல"தங்கச்சி நீ வாம்மா, இவன் கிடக்கிறான்" என்று சொல்லி விட்டு இருவரின் பெட்டியை தூக்கி கொண்டு முன்னே செல்ல, இருவரும் இறங்கி தயாராக இருந்த காரில் ஏறி திருவையாறு ரோட்டில் இருந்த நிரஞ்சனின் பரம்பரை வீட்டுக்கு சென்றனர்.

வீடு பழைய வீடாக இருந்த போதும், பெரிய வீடாக இருந்தது. வீட்டுள்ளே மாடி. சுற்றி பார்த்து களைத்து போனாள் ஷிவானி.

"நிரு, உங்களுக்கு இந்த வீடு மட்டும் தானா, வேற வீடு இருக்கா."

"தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில ஒரு பெரிய வீடு வாடகைக்கு இருக்கு. திருவையாரை ஒட்டி நூறு ஏக்கர் நிலம் இருக்கு."

"ஓ அப்படியா. இவ்வளவு சொத்து இருந்தும் ஏன் போலிஸ் வேலைபார்க்கிறீங்க" என்று கண்ணடித்து கேட்க, "ஏய் உனக்கு தெரியாதா?" என்றான் நிரஞ்சன்.


அனுகிட்ட பேசணும் போல இருக்கு. அவளோட திருமண வாழ்க்கை நல்லபடியா போய்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன்."

"அனுவுக்கு நல்ல மனசு. இல்லைனா அண்ணாமலையை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாளா. உண்மைலே உன்னை காதலிக்கலைனா அனுவைதான் கல்யாணம் பண்ணி இருப்பேன்."

"அப்படி ஒரு ஆசை இருக்கா"காதை பிடித்து திருக, "ஆ" என்று பொய் வலியோடு கத்தினான் நிரஞ்சன்.

"இப்பவே அவளை கூப்பிட்டு சொல்றேன்".

போனை எடுத்து அனுவின் நம்பரை அடிக்க அண்ணாமலை எடுத்தான்

"ஹாய் எப்படி இருக்கீங்க. அனு இருக்காளா". 
....................

"வெளியே போய் இருக்காளா. சரி உங்க பிரெண்ட்கிட்ட பேசுங்க."

நிரஞ்சன் பேசி விட்டு போனை ஷிவானியிடம் கொடுக்க, அனு வந்தால் கூப்பிட சொல்லி போனை வைத்தாள்.

ராதா கிருஷ்ணன் பிடிவாதம் செய்து அழைத்து செல்ல, வேறு வழி இல்லாமல் அருகில் இருந்த பெரியப்பா வீடு, சித்தப்பா, மாமா வீட்டுக்கு போய் விட்டு, பரம்பரை சொத்தான நூறு ஏக்கர் நிலத்தையும் சுற்றி பார்த்து விட்டு வந்து களைப்பாகி வீட்டுக்கு திரும்பஇரவு ஏழு மணி ஆனது.

வீட்டில் இருந்த தூரத்து சொந்த பாட்டி இட்டு வைத்து இருந்த இட்லி, கும்பகோணம் டிகிரி காபி குடித்து விட்டு மொட்டை மாடிக்கு சென்றனர்.

மொட்டைமாடி என்று சொன்னாலும், அங்கே ஒரு சிறிய படுக்கை அறை இருந்தது.இருவரும் உள்ளே சென்று பார்த்தனர்.

"நான் படிக்கும் போது எனக்கு தனி அறை வேணும்னு அப்பாதான் இந்த ரூமை எனக்கு கொடுத்தார்". முகம் வாடி போனது. "இப்போ அப்பா, அம்மாவை நினைச்சா.........", கண்கள் கலங்க கஷ்டப்பட்டு உதட்டை கடித்து கண்ணீரை அடக்கி கொண்டான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் கலங்கி நின்ற ஷிவானி, அவனை கட்டி அணைத்து சமாதானபடுத்த"சரி நாம இங்கே வெளியில படுத்துக்கலாம்" என்று சொல்ல, 

"நல்ல யோசனை நான் கூட வெயில் காலத்தில இங்கேதான் படுப்பேன். கண்ணம்மா."

"ஆமா என் கிட்ட நீங்க ட்ரான்ஸ்பர் வந்ததுன்னு சொன்னீங்க. ஆனால் என்ன வேலைன்னு சொல்லலை".


"அதுவா, ஒரு நிமிஷம்", தனது ஓவர் கோட் எடுத்து அதில் இருந்த அப்பாயின்மென்ட் கடிதத்தை கொடுக்க, அதை பிரித்து பார்த்த ஷிவானி "ஏய் நீ இனிமே திருச்சி சிட்டி போலிஸ் கமிஷனரா. ஏன்டா என்கிட்டே இன்னும் சொல்லலைகைகளை மடக்கி வயிற்றில் குத்த வர, அவளின் இரண்டு கைகளை பின்னால் மடக்கி உதடுகளை கவ்வி கொண்டான்.

மெல்ல கைகளை விடுவிக்க அவள் இரு கைகளையும் அவன் தலைக்கு பின்னே வைத்து அழுத்தி கொண்டாள்.

அவளை அப்படியே தூக்கி கட்டிலில் போட்டு மேல படுத்து கொண்டு இரு கைகளையும் தனது கைகளால் சிறை பிடிக்க செல் போன் அலறியது. எடுத்து பார்த்தால் யு எஸ் கால். 

"சொல்லு அக்கா"

"என்னடா தம்பி. காலைல இருந்து உன்னோட போன் ட்ரை பண்ணுனேன் கிடைக்கலை."

"சாரி அக்கா, சார்ஜ் போட மறந்துட்டேன். இப்போது சாயந்தரம் தான் போட்டேன்".

தனசேகர் பேசினார்"மச்சான். முதல்ல என் தங்கை கிட்ட கொடு".

"ஷிவானி எப்படிமா இருக்க."

"நல்லா இருக்கேன்னா"

"என்னம்மா மூச்சு ஒரு மாதிரியா வருது. என்ன பண்ணுறான் என்னோட மச்சான். பிரச்சனை பண்ணுனா சொல்லு, நான் மிரட்டி வைக்கிறேன்.

"

"நீங்க வேற அண்ணா. அவரு அதுக்கு எல்லாம் கவலைபட மாட்டாரு. இப்போ கூட பாருங்க அவர் ஏதோ அதிரடியா தொல்லை பண்ணிக்கிட்டு இருக்காரு."

தனசேகருக்கு புரிந்தது. "சரிம்மா நான் காலைல கூப்பிடுறேன்". போனை கட் செய்ய, அருகில் இருந்த கீதா "என்னங்க என்ன சொல்லுறான் என் தம்பி".

"அவனா, அவனை பத்தி ஒரு வார்த்தைல சொல்லணும்னா. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சான்டி"

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு சிரித்து கொண்டனர்.

முற்றும்



No comments:

Post a Comment