Thursday, October 8, 2015

மைதிலி - அத்தியாயம் - 8

2007

டாக்டர் ஸ்ரீநாத் சந்தேகித்தது போல் மைதிலியின் மார்பகத்தில் இருந்த கேன்ஸர் மிகவும் உக்கிரமாக பரவி இருந்தது.

இடது மார்பகத்தில் இருந்த பெரிய கட்டியினால் அந்த மார்பகத்தை முழுவதும் அகற்றும் மாஸ்டெக்டமி ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. வலது மார்பகத்திலும் நெஞ்சுக்கூட்டை ஒட்டிய தசைப் பகுதியில் கேன்ஸரின் அறிகுறிகளோடு சிறு முடிச்சாக உரிவாகி இருந்ததை மட்டும் (மார்பகத்தை முழுவதும் அகற்றாமல்) லம்பெக்டமி எனப்படும் ஆபரேஷனும் அதே சமயத்தில் செய்ய முடிவு செய்தனர்.

இவ்விரண்டுக்கும் மேலாக லிம்ஃப் நோட் (Lymph node)களை பரிசோதித்ததில் மார்பகத்தின் உள்புறம் இருப்பவைகளைத் தவிற இடது கை அக்குள் பகுதியில் இருக்கும் லிம்ஃப் நோட்களும் பாதிக்கப் பட்டு இருந்தன.

மறுபடி அடுத்த ஐந்து வருடங்களுக்குள் நெஞ்சுக்கூட்டைச் சுற்றி இருந்த உருப்புகளைத் கேன்ஸர் தாக்கும் வாய்ப்பு தொண்ணூரு சதவிகதத்துக்கும் அதிகம் என்று தெரியவந்தது. மைதிலியிடம் இந்தத் தகவலை மறைக்கும் படி கேட்டுக் கொண்டேன்.

அக்குள் பகுதியில் இருந்த பாதிக்கப் பட்ட லிம்ஃப் நோட்களையும் ஆபரேஷன் செய்யும் போது அகற்ற முடிவு செய்தனர்.



ஆபரேஷன் முதலில் முடிந்தது. அதை அடுத்த ஒரு வாரத்தில் ரேடியேஷன் (Radiation - கதிர் வீச்சு) மருத்துவம் தொடங்க இருந்தது. ஆபரேஷன் முடிந்த மூன்று நாட்களில் மைதிலி சுயநினைவுடன் எழுந்து நடமாடும் அளவுக்கு குணமடைந்து இருந்தாள். வலியைவிட, தன் அழகின் ஒரு சின்னமாக இருந்தவைகளில் ஒன்று முழுவதும் இழந்து மற்றது உருக்குலைந்து போனதன் சோகம் அவள் முகத்தில் வழிந்தது. என் கண்களைத் தவிர்த்துப் பேசினாள். என்னிடம் பேசும் போது எப்போதும் இல்லாத் ஒரு தாழ்மை உணர்வு அவளிடம் இருப்பதை உணர்ந்தேன். நல்ல வேளையாக ஆறு மாத கர்ப்பவதியாக இருந்த அமுதா தாயைக் கவனிக்க உடன் இருந்தது அவளுக்கு கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என்ற உறுதியை அவள் மனதில் ஏற்படுத்தியது.

ரேடியேஷன் மருத்துவம். ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் x-ray கதிர்களை வீசும் மெஷினுக்கு அடியில் படுத்து இருப்பதே. வெளியில் இருந்து பார்க்க மென்மையாகத் தோன்றிய அந்த ஒளி அவள் தசைகளுக்கு உள்ளே இருந்த கேன்ஸர் தொற்றிய ஸெல்களை அழித்தன. அதன் ஆக்கபூர்வமான (??!) விளைவுகளுடன் அது ஏற்படுத்தும் பின் விளைவுகளில் சிலவற்றையும் ஏற்படுத்தியது. அவள் மார்ப்புப் பகுதிகளின் தோல் தீயினால் சுட்டதுபோல் ஆனது. மேலாடையே அவளுக்கு எதிரியானது. வலை போன்ற கவுன்கூட அவளுக்கு அளவுக்கு அதிகமான எறிச்சலை ஏற்படுத்தியது. ஒரு நாளில் பல மணி நேரங்கள் ஏ.சி அறையில் மேலாடை இன்றி மார்புப் பகுதி முழுவதும் அலோ வேரா (கத்தாழை) எஸ்ஸென்ஸ் கொண்ட லோஷன் பூசி இளைப்பாறினாள். என்னால் அந்த அளவுக்கு சௌகர்யத்தைக் கொடுக்க முடிந்தத நிலையில் இருந்ததற்கு நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.


சில தகவல்கள்

பரெஸ்ட் கேன்ஸர் வராமல் தடுப்பது எப்படி?

ப்ரெஸ்ட் கேன்ஸர் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன (சென்ற பதிப்பைக் காண்க). இக்காரணங்கள் இருப்பின் ப்ரெஸ்ட் கேன்ஸர் வருவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம். இவைகளில் தவிற்கக் கூடிய காரணங்கள் சில. உதாரணத்துக்கு, மது அருந்துவது, உடல் பருமன், மற்றும் உடற் பயிற்சி இன்மை. ஆனால் சில தவிற்க முடியாத காரணங்களும் உள்ளன. உதாரணத்துக்கு, பூர்வீகம், வயது ... பெண்கள் பூப்படையும் வயது, திருமணம் ஆகும் வயது, குழந்தை பெறும் வயது, மாதவிலக்கு நிற்கும் (மெனோபாஸ் அடையும்) வயது இவை எல்லாம் இதில் அடக்கம்.

சாத்தியக் கூறுகள் இருப்பின் ப்ரெஸ்ட் கேன்ஸர் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அப்படி வந்தால் தடுக்கவும் வழி ஏதும் இல்லை.

ஆக, 100% ப்ரெஸ்ட் கேன்ஸர் வராமல் தடுக்கக் கூடிய முன்னேற்பாடு என்று எதுவும் இல்லை. ஆனால், தவிற்க முடியாத காரணங்கள் இருப்பினும் அரோக்கியமான உடல் நிலையையும், ஆரோக்கியமான வாழ்வு முறைகளையும் கடைபிடித்து வருபவர்களிடையே ப்ரெஸ்ட் கேன்ஸர் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்று கூறலாம்.

தவிற்கக் கூடிய சாத்தியக் கூறுகளை குறைப்பது எப்படி?

  • அளவான உடற்கட்டுடன் இருப்பது
  • அளவாக சரியான் நேரத்திற்கு உணவருந்துவது
  • நீர் அருந்துவது .. ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டேகால் லிட்டர் நீர் பெணகளின் உடலுக்குத் தேவை. பொதுவாகவே இந்திய உணவில் நீரின் அளவு சற்று அதிகம். இருப்பினும் தினமும் குறைந்தது ஒன்றரை லிட்ட்ர் நீரை அருந்துவது ப்ரெஸ்ட் கேன்ஸரின் சாத்தியக் கூறுகளைத் தவிற மற்றவைக்கும் உதவும். (ஆண்களுக்கு ஒரு நாளுக்கான தேவை மூன்று லிட்டர்!)
  • முடிந்த வரை மது அருந்தாமல் இருப்பது. அப்படி அருந்தினாலும் இரு வாரங்களுக்கு ஒரு முறைக்கு மேல் அருந்தாமல் இருப்பது. அப்படி அருந்தும் போதும் அளவாக அருந்துவது.
  • கருத்தடை மாத்திரைகளை தவிர்ப்பது. இது ஒரு சர்ச்சைக்கு உரிய விஷயம். பல நிபுணர்கள் இதை ஒரு சாத்தியக் கூறு என்று கூறினாலும் மேலும் விவரங்களை கொடுப்பது இல்லை. நவீன நாகரீகத்தில் முக்கியத் தேவை என்று கருதப் படுவதும், கருத்தடை மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனங்களின் பண பலமும் இதற்குக் காரணம் என்று நான் கருதுகிறேன்.
  • ப்ரெஸ்ட் கேன்ஸரை தடுக்கும் மருந்துகள். பூர்வீகம், வயது போன்ற காரணத்தால் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பவர்களுக்கு ப்ரெஸ்ட் கேன்ஸர் வருவதை கூடியவரை குறைக்க சில மருந்துகள் உள்ளன. அந்த மருத்துவத்துக்கு Breast Cancer Chemoprevention என்று பெயர். தேர்ந்த மருத்துவரின் ஆலோசனைப் படி இவைகளை உட்கொண்டால் ப்ரெஸ்ட் கேன்ஸர் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறையும்.

ப்ரெஸ்ட் கேன்ஸர் வருவதை முன் கூட்டி அறிவது எப்படி?

இதற்கு முதற்படி சாத்தியக் கூறுகளை நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்வது.

வருடா வருடம் கீழ் கண்ட பரிசோதனைகளை செய்து கொண்டால் சாத்தியக் கூறுகள் இருப்பினும் ப்ரெஸ்ட் கேன்ஸர் ஒரு கொடுங்கொல்லி ஆவதற்கு முன்னமே அதை முளையில் கிள்ளி எறிய முடியும்.



  • இருவது வயதில் இருந்து : Breast Self Examination .. சுய பரிசோதனை: எப்படி மார்பகங்களை பரிசோதிப்பது என்பதை ஒரு தேர்ந்த மருத்துவரிடம் அறிந்து கொண்டு அந்த செய்முறைகளை கடைபிடிக்க வேண்டும். இணையத்திலும் பல தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஒரு முறையாவுது ஒரு மருத்துவர் அதை செய்து காட்டிய பிறகு அடிக்கடி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • முப்பது வயதில் இருந்து : Clinical Breast Examination ... மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்வது
  • நாற்பது வயதில் இருந்து : Memogram and/or MRI மெமோக்ராம் மற்றும் எம்.ஆர்.ஐ பரிசோதனை. மெமோக்ராம் என்பது ஒரு பிரத்தியேக எக்ஸ்-ரே. அதிகக் கடுமை இல்லாத மார்பகங்களுக்கு இந்தப் பரிசோதனை போதும். மார்பகங்கள் கடுமையாக (கும்முன்னு!) இருப்பின் மெமோக்ராம் மூலம் கேன்ஸர் இருப்பது தெரியாமல் போக வாய்ப்புகள் உண்டு. அப்படி இருப்பின் எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment