Saturday, October 24, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 4

இப்போதைக்கு யாரிடம் பேசுவது என்று தெரியாமல் குழம்பி இருந்த ராகவுக்கு அனு நினைவுக்கு வந்தாள்.

அனுவின் போனை அடிக்க, இரண்டு ரிங்குகளுக்கு பிறகு அனு போனை எடுத்தாள்.

"சொல்லுங்க சார்".

நடந்த விஷயங்கள் எல்லாம் ராகவ் சொல்ல சிந்தனையில் ஆழ்ந்தாள் அனு.

"என்ன அனு ஒண்ணும் பேச மாட்டேங்கிறீங்க"

"பண்ணுறதையும் பண்ணிட்டு இப்போ இந்த மாதிரி கேள்வி கேட்டா எப்படி

?"

"ஒண்ணும் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?"

"சார், ராத்திரில மகாபலிபுரத்தில் இருந்த பொண்ணு காலைல உங்க படுக்கை அறைல இருந்தா, அவ மனசு எந்த அளவுக்கு பாடுபடும்.அது மட்டும் இல்லை. உங்களை அவளுக்கு ஏற்கனவே பிடிக்காது.இதுல வேற நீங்க இந்த மாதிரி தேவை இல்லாத விஷயத்தில மாட்டிகிட்டிங்க."

மௌனமானான் ராகவ். "சாரி அனு. இந்த விஷயத்தை நான் யோசிக்கவே இல்லை. அவங்களை பிரணவ்கிட்டே இருந்து காப்பதணும்னு தான் என் மனசில ஓடி கொண்டு இருந்ததாலே, இந்த மாதிரி ஆகும்னு தெரியலை. இப்போ வேற வி.சி கிட்ட புகார் செய்ய போறதா சொல்லிட்டு கோபமா போய் இருக்காங்க. என்ன செய்றது" என்று கையை பிசைய, அனுவுக்கு அவன் நிலை பரிதாபமாக இருந்தது.

'பாவம் ராகவ், என்னதான் புத்திசாலியா இருந்தாலும் பெண்களை புரிந்து கொள்ளும் விஷயத்தில் அடி செருக்கி விட்டார்' என்று பரிதாபட்டாள்.

"சார் கவலைப்படாதிங்க. நான் ஷிவானி கிட்ட பேசுறேன்.பேசிட்டு உங்களை கூப்பிடுறேன்."

அதே நேரத்தில் ஷிவானி அனுவிடம் பேசலாம் என்று போன் அடிக்க, அனுவின் போன் என்கேஜ் ஆக இருந்தது. 

சரி கொஞ்ச நேரம் கழித்து திரும்ப முயற்சி செய்யலாம் என்று போனை வைத்து விட்டு பிரணவ் நம்பர் டயல் செய்ய சுவிட்ச் ஆப் என்று செய்தி வந்தது.


இப்போது அனுவிடம் இருந்த கால் வர போனை எடுத்தாள்.

"சொல்லு ஷிவானி. மகாபலிபுரம் ட்ரிப் எப்படி இருந்தது. இப்போ அப்பாவோட உடல் நலம் பரவாயில்லை. இன்னும் ரெண்டு நாளில் சென்னை வருவேன்."

"அனு இந்த ராகவ் இருக்கானே, அவன் என்ன பண்ணினான் தெரியுமா, என்னோட ரூம்ல வந்து தூங்கிட்டு இருந்த என்னை தூக்கிட்டு வந்து அவனோட ரூம்ல படுக்க வச்சு இருக்கான். என்னோட டி ஷர்ட் டை வேற காணம். எழுந்து பார்த்து எனக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. இப்போதான் வி.சி கிட்ட போன்ல பேசி புகார் கொடுத்து இருக்கேன். நாளைக்கு காலைல வந்து பார்க்க சொல்லி இருக்காரு"மூச்சு முட்ட சொல்லி முடித்தாள்.


அனுவோ "மெதுவா, மெதுவா. அப்புறம் என்ன ஆச்சு"என்று கேட்க, "என்னடி நான் என்ன கதையா சொல்லுறேன்."


"சரி நீ எப்படி ராகவ் ரூமுக்கு போனே."

"அதுதாண்டி தெரியலை. கேட்டா பிரணவ் என்னை ரேப் பண்ண முயற்சி பண்ணினான். இவன் தான் ஹீரோ மாதிரி வந்து என்னை காப்பதினானாம். என்னடி இப்படி காதில பூ சுத்த பார்க்கிறான். அவனை கன்னா பின்னான்னு திட்டி கிளம்பி வந்துட்டேன்."

"சரி ஷிவானி. அவன் உன்னை ஏதாவது பண்ணிட்டானா."

"ஒண்ணும் பண்ணலைடி. நான் அவனை தொட விட மாட்டேன்."

"லூசு. நீ தான் மயக்கத்தில இருந்தியே. ஏதாவது பண்ணி இருக்கானா."

"இல்லைடி. ஆனால் என்னோட T-ஷர்ட் கிழிச்சு அவனோட ஓவர் கோட்டை மாட்டி இருந்தான்."

"அவன் கூட ஒரு ராத்திரி முழுக்க இருந்து இருக்க. ஆனால் அவன் உன்னை ஒண்ணும் பண்ணலை. லாஜிக் உதைக்குதே."ஷிவானிக்கும் மனதில் இனம் புரியாத குழப்பம்.

"ஆமாண்டி எனக்கும் அது தான் புரியலை. ஒரு வேளை என்னை லவ் பன்னுறானோ. என்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னு இப்படி பண்ணி இருப்பனோ. என்னடி, ஒரே குழப்பமா இருக்கு."


"ஷிவானி, நான் ஒண்ணு சொல்றேன் தப்பா நினைக்காதே. நீ கண்ணால் பார்ப்பதை வைத்து தப்பா நினைக்கிறே. தீர விசாரித்து முடிவு பண்ணு. இல்லைனா பின்னால வருத்த படுவே. ஜாக்கிரதை"என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

'என்ன சொல்ல வர்றா இந்த அனு' என்று குழம்பி போனாள் ஷிவானி.

பிரணவ் மெல்ல கண் விழித்து பார்த்தான். தலையில் அடிபட்ட இடம் இன்னும் வலித்தது. சுற்றும் முற்றும் பார்க்க யாரையும் காணவில்லை. 

"எங்கே அந்த தே... பையன் ராகவ்" என்று பல்லை கடித்தபடி தேடி பார்த்தான். 

'என்ன அந்த ஷிவானியை வேற காணம். சொன்ன மாதிரி காப்பாத்திட்டான் போல இருக்கு, அவனை முதல்ல கையை, காலை ஓடிக்கணும்.'

'இப்போதைக்கு ஷிவானி ரூம்ல நான் இருக்கிறதை யாராவது பார்த்தா எனக்கு தான் சிக்கல்'ரூமை மூடி விட்டு, சாவியை மேனஜரிடம் திருப்பி கொடுத்தான். பாக்கெட்டில் இருந்தடியூயல் சிம் கொண்ட செல்போனை எடுத்துபார்க்க சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகி இருந்தது. சார்ஜ் போட்டு விட்டு மிஸ் டு கால்ஸ் பார்க்க, ஷிவானி போன் நம்பர் இருந்தது.

ஷிவானியை எடுத்த போட்டோவை அவளுக்கு தெரியாத இரண்டாவது சிம் வழியாக அவளுக்கு எம் எம் எஸ் அனுப்பி விட்டு, ஐந்து நிமிடம் கழித்து வழக்கமான நம்பரில் கூப்பிட்டான்.

போனை எடுத்த ஷிவானி குரலில் பதட்டம்

"பிரணவ் எங்கேடா இருக்க. உனக்கு ரொம்ப நேரமா போன் செஞ்சுட்டு இருக்கேன். சுவிட்ச் ஆப் ல இருந்தது".

"சாரி ஷிவானி. அந்த ராகவ் என்னையும், நம்ம அஞ்சு நண்பர்களையும் அடிச்சுட்டு உன்னை தூக்கிட்டு வந்துட்டான். உனக்கு ஒண்ணும் ஆகலையே."

"இல்லை பிரணவ். நான் அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன், இப்போ ஒரு அஞ்சு போட்டோ எனக்கு வந்து இருக்குடா.என்னை அசிங்கமா படம் எடுத்து எவனோ அனுப்பி இருக்கான்."

"அப்படியா. கட்டாயம் அந்த ராகவ்வா தான் இருக்கணும். உடனே வி.சி கிட்ட புகார் கொடுக்கணும். என்ன பொண்ணுகள்னா கிள்ளு கீரைனு நினைசுட்டானா, ராஸ்கல். அம்மா"என்று கத்த




"என்ன பிரணவ் என்ன ஆச்சு. "

"ஒண்ணும் இல்லை ஷிவானி. அந்த ராகவ் அடிச்ச அடில நல்ல அடிபட்டு இருக்குன்னு நினைக்கிறேன். எப்படியும் இந்த காயம் சரியாக ரெண்டு மூணு நாளாவது ஆகும்."

"சாரிடா பிரணவ். முதல்ல அந்த ராகவ் பத்தி வி.சி கிட்ட எல்லா விஷயமும் சொல்லணும். அனு கிட்ட பேசினா அவனுக்கு வக்காலத்து வாங்கிரா."

"ஷிவானி, அனுகிட்ட எல்லாம் இனிமே எதுவும் சொல்லாதே. நான் உன்னோட காதலன், வருங்கால கணவன். நான் சொல்றதை கேளு. நாளைக்கு புகார் எழுதி கொடுத்து இந்த போட்டோவையும் கொடுத்து அவனை டிஸ்மிஸ் பண்ண வச்சுடலாம்."

"சரி" என்று ஆமோதித்த ஷிவானி போனை வைத்தாள்.

திங்கள் காலை. வி சி ரூமில் ஷிவானி. தனது புகாரை எழுதி கொடுத்தாள்.

"சார் ப்ரொபசர் ராகவ் என்னோட ரூமுக்கு வந்து மயங்கி இருந்த என்னை தூக்கி கொண்டு அவரோட வீட்டுக்கு கூட்டி என் கிட்ட தவறாக நடக்க முயற்சி பண்ணி இருக்கார். இங்கே பாருங்க" என்று தனது செல்போனில் இருந்த படங்களை காண்பித்தாள்.

வி.சி க்கு புரிந்தது. இது பெண் சம்மந்த பட்ட விஷயம். ரொம்ப கவனமாக கையாலனும் என்று உணர்ந்து"நான் கட்டாயம்விசாரிக்கிறேன் ஷிவானி" என்று சொல்ல, 'சரி' என்று தலை அசைத்து விட்டு கிளம்பி விட்டாள்.

கையில், தலையில் கட்டுடன் வந்த பிரணவ் காலேஜ் வந்தவுடன் ஷிவானியை பார்க்க கிளாஸ் செல்ல, அவனை கட்டி கொண்டு அழுதாள்.

"ஷிவானி, நான் அப்பவே அவனை பத்தி சொல்லி இருந்தேன். அந்த ப்ரொபசர் ஒரு மோசமான ஆளுன்னு. உண்மை ஆய்டுச்சு பாத்தியா. அவனை பாத்தேன்னா கண்ட துண்டமா வெட்டி போட்டுடுவேன்" என்று குதிக்க, பக்கத்தில் இருந்த வேல் முருகன் சிரித்தான். 

'ஆமா இவர்தான் கிளிச்சுடுவாறு. அந்த ராகவ் அஞ்சு பேரையும் அடிச்சு போட்டு, இந்த பிரணவ்வையும் துவைச்சு போட்டுட்டான்.பேசுற பேச்சை பாரு" என்று முனக, பிரணவ் அவனை பார்த்து முறைத்தான். 'நமக்கு எதுக்கு தேவை இல்லாத வம்பு' என்று தன் வாயை மூடி கொண்டான் வேல் முருகன்.

கிளாஸ் ஆரம்பிக்கும் நேரத்தில் ராகவ் வர அவனை கண்ட ஷிவானி,பிரணவ், அவன் நண்பர்கள் ஐந்து பேர், எல்லோரும் கிளாஸ் விட்டு வெளி நடப்பு செய்தனர்.


கிளாஸ் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ராகவ்க்கு வி.சி யிடம் இருந்து அழைப்பு வந்தது.

முத்துசாமி உள்ளே வந்த ராகவ்வை பார்த்து," என்னய்யா. நீ ரொம்ப நல்லவனா இருக்கியே.உன்னை பத்தி எந்த புகாரும் இல்லையேன்னு நினைச்சேன். அந்த பெண் ஷிவானி உன்னை பத்தி புகார் பண்ணி இருக்கா, நீ என்ன சொல்ற."

"சார், என் மேல எந்த தவறும் இல்லை. அந்த பெண் பிரச்சனைல மாட்டினா. அதனால தான் உதவி செஞ்சேன்."


"நான் இப்போ அந்த பெண்ணையும் வர சொல்லி இருக்கேன்.அவளை போட்டோ வேற எடுத்து வச்சு மிரட்டுறிங்கன்னு புகார் கொடுத்து இருக்கா. எதுக்கு இந்த வம்பெல்லாம். போட்டோவை கொடுத்திட வேண்டியதுதானே."

"என்ன முட்டாள்தனமா பேசுறீங்க" என்று ராகவ் எகிற

"சரி சரி, கோபப்படாதீங்க. இன்னும் 10 நாளில ரெட்டி வந்துடுவாரு. நீங்க வேற கிளம்பனும். என்ன ஒரே குழப்பமா இருக்கு." அவர் சொட்டை தலையை தடவி கொண்டே யோசிக்க

உள்ளே வந்தாள் ஷிவானி. அவளுக்கு ராகவ்வை பார்க்க கோபம் தலைக்கு ஏறியது."ஷிவானி, அந்த போட்டோவை ராகவ் கிட்டகாட்டும்மா" என்று வி.சி சொல்ல அந்த போட்டோவை பார்த்து விட்டு திரும்பி கொடுத்து விட்டு, "சார் இந்த போட்டோ எதையும் நான் எடுக்கலை. அந்த பிரணவ்தான் எடுத்து இருக்கணும். ராஸ்கல். அவன் கையை காலை எடுத்தா தான் சரிபட்டு வரும்" என்று முனகி விட்டு,"சார், என் மேல இருக்கிற இந்த குற்ற சாட்டை நானே உடைக்கிறேன்."

"இந்தாங்க என்னோட ராஜினாமா கடிதம்.என் மேல உள்ள இந்த குற்றசாட்டை நான் உடைக்கிற வரைக்கும் உங்ககிட்ட இருக்கட்டும். ஒரு நாலு நாள் டைம் கொடுங்க. அவனை முடிச்சுட்டு வரேன்"சொல்லி விட்டு ராகவ் விடை பெற, ஷிவானி அவனை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

சொன்ன மாதிரியே ராகவ் அடுத்த இரண்டு நாட்கள் கிளாஸ் அட்டென்ட் செய்யவில்லை.

புதன் கிழமை அனு யுனிவர்சிட்டி வந்து ஷிவானியை சந்தித்து விபரங்களை தெரிந்து கொண்டாள். 

"ஷிவானி, நீ பிரணவ்வை நம்புறது தப்பு இல்லை. அதுக்காக எடுப்பார் கைபிள்ளையா இருக்காதே, யாரையும் யோசிக்காம நம்பாதே"என்று சொல்ல, ஷிவானிக்கு குழப்பம் அதிகமானது.


கூட இருக்கும் எல்லா மாணவ மாணவியருக்கும் ஷிவானி கொடுத்த புகார் தெரிந்து விட்டது. உபயம், பிரணவ் மற்றும் அவன் நண்பர்கள்.

'ராகவ் பற்றி உனக்கு தெரியாது ஷிவானி. அவர் ரொம்ப நல்ல மனுஷன். நிறைய உதவி செஞ்சு இருக்காரு'.என்று ஒவ்வொருவரும் ஷிவானியிடம் சொல்லி புகாரை வாபஸ் வாங்க சொன்னார்கள்

வியாழக்கிழமை காலை ஏழு மணி அளவில் பிரணவ் வீட்டு வாசல் மணி அடிக்க கதவை திறந்தான்.வாசலில் ராகவ்.

பிரணவ் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. 

சமாளித்து கொண்டு ஒரு வழியாக "வாங்க மிஸ்டர் ப்ரொபசர்" என்று கிண்டலுடன் வரவேற்றான்.

உட்கார சொல்ல, ராகவ் உட்கார்ந்து கொண்டே, "பிரணவ் உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்".
"சொல்லுங்க சார்,பார்த்திங்களா. உங்க பேட் லக்.நீங்க ஹீரோ. ஆனா ஷிவானி உங்களை வில்லனா தான் பார்கிறா. என்னோட குட்லக்,நான் இன்னும் அவள் மனசில நல்லவனா தான் இருக்கேன்".

தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்து அருகில் இருந்த டேபிளில் வைத்தான் ராகவ்.

"பிரணவ், நீ பண்ணுறது தப்பு. நீயா வந்து ஷிவானிகிட்ட மன்னிப்பு கேளு இல்லைனா, பயங்கரமான பின் விளைவுகளை நீ சந்திக்க வேண்டி இருக்கும்."

"என்னய்யா. பெருசா மெரட்டுற. ஷிவானிக்கு ஜூஸ்ன்னு சொல்லி மயக்க மருந்து கலந்தது நான்தான். அவள் ரூமுக்கு சாவி போட்டு திறந்து உள்ளே போனது நாந்தான்."

"அப்படின்னா அந்த போட்டோ எடுத்தது."

"ஓ அதுவும் தெரிஞ்சு போச்சா. அதுவும் நான்தான்.யோவ். உனக்கு அறிவு இருக்கா. அவளை அனுபவிக்கலாம்னு இருந்தபோது வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டியே. இப்போ பாரு அவ உனக்கும் இல்லை. உன் மேல புகார் கொடுத்து இருக்கா. இது எல்லாம் உனக்கு தேவையா."

"பிரணவ், அந்த போட்டோ எல்லாத்தையும் கொடு. ஒரு அப்பாவி பொண்ணு வாழ்க்கைல விளையாடாதே."

"யோவ் ப்ரொபசர். நீ இங்கே இருந்து உயிரோடு போனாதானே. என்னோட அப்பா பெரிய ஆள். உன்னை மாதிரி ஒரு அனாதை பயலை கொலை பண்ணினா, கேட்க ஆள் கிடையாது." பேசி கொண்டேஅருகில் இருந்த டிராவை திறந்து ரிவால்வர் வெளியே எடுக்க,கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட்டான் ராகவ்.


வலது காலை உயர்த்தி பிரணவின் இரண்டு கால்களுக்கு இடையில் இருந்த மர்மஸ்தானத்தில் உதைக்க, 'அம்மா' என்று அலறிக் கொண்டு ரிவால்வாரை நழுவ விட்டான். 

அடுத்த நொடியில் ராகவின் வலது கையில் துப்பாக்கி, தனது இடது கையில் பிரணவ் பிடரி தலை முடியை பிடித்து இழுத்து அவனை மண்டி போட்டு உட்கார வைத்தான்.

ஏற்கனவே அடி வாங்கியதால் வலி தாங்க முடியாமல் பிரணவ் அரற்றி கொண்டு இருக்க, அவன் வாயை திறந்து துப்பாக்கி முனையை வைத்தான் ராகவ்.

"டேய் பிரணவ். இருபது பேரை சுட்ட எனக்கு இருபத்தி ஒண்ணா உன்னை போட்டு தள்ளுறது பெரிய விஷயம் இல்லை. ஷிவானியை நீ எடுத்த போட்டோ எங்கே வச்சு இருக்க."

பிரணவ் பேசாமல் இருக்க, அவன் பின்னங்காலில் எட்டி உதைத்தான். 'சொல்லாமல் விட்டால் அடித்தே கொன்று விடுவான்' என்பதை உணர்ந்து, "சொல்றேன் சொல்றேன்" என்று முனகி கொண்டே தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து கொடுத்தான். 

அது இரண்டு சிம் உள்ள போன். "எந்த சிம்-லடா அனுப்பின" என்று கேட்க. ஷிவானிக்கு தெரியாத "இரண்டாவது சிம் கார்டில் இருந்து அனுப்பினேன்" என்று வலியோடு சொல்ல, செல் போனை பிடிங்கி சோதித்து பார்த்து விட்டு, எதுக்கு வம்பு என்றுஅதில் இருந்த இரண்டு சிம் கார்டையும் தனது பாக்கெட்டில் வைத்து கொண்டான்.

திரும்ப அவன் தலை முடியை பிடித்து இழுத்து, "பிரணவ் இனிமே நீ எந்த பொண்ணையும் தப்பா நினைச்சு பார்க்க கூடாது. எல்லோரும் இனிமே உனக்கு அக்கா, தங்கை, அம்மாவா தெரியணும் சரியா?"

பதில் சொல்லாமல் இருக்க திரும்ப வயிற்றில் எட்டி உதைத்தான். "சரி, சரி, அப்படியே நடந்துக்கிறேன். விட்டுடு. ஆனால் ஒரு சந்தேகம்.கல்யாணம் பண்ணினா பொண்டாட்டியை நான் தப்பாபார்க்கலாம்ல."

"என்னடா நக்கலா"பளார் என்று கன்னத்தில் அறைந்து, துப்பாக்கியை வாயில் இருந்து எடுத்து, குண்டுகளை உருவி பாக்கெட்டில் போட்டு கொண்டு, துப்பாக்கியை திருப்பி பிரணவ் பின்னந்தலையில் அடிக்க, மயங்கி சுருண்டு விழுந்தான்.

வீடியோ எடுத்த தனது மொபைல் போனை எடுத்து ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டு வெளியேறினான்.


நேரு யுனிவர்சிட்டி, வி சி முத்துசாமி யின் அறை. தன்னிடம் இருந்த வீடியோ காண்பித்து விபரம் சொல்ல, முத்துசாமி அந்த வீடியோ மற்றும் போட்டோவை சப்மிட் செய்ய சொல்ல 

"இல்லை சார். இந்த போட்டோ இல்லாம விசாரணைய முடிங்க. இந்த போட்டோ வெளி வந்தா ஷிவானி வாழ்க்கை பாதிக்கப்படும்."

"இது இல்லாம உங்களோட விசாரணை முடியாது ராகவ்".


"பரவாயில்லை சார். ஒரு பெண்ணை பற்றிய இந்த மாதிரி படத்தை காண்பித்து தான் என்னோட நேர்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை."

"என்னோட ராஜினாமா கடிதத்தை ஏற்று என்னை விடுவிக்கணும்" என்று கேட்க, கொஞ்ச நேரம் தீவிரமாக யோசித்த வி.சி, 'சரி' என்று தலை அசைத்தார்.


அன்று மாலை, ப்ரொபசர் ராகவ் ரிசைன் செய்து விட்டதாகவும்அடுத்த நாள் (வெள்ளி கிழமை) , அவருக்கு வி.சி சார்பில் ஆடிட்டோரியத்தில் Farewell பார்ட்டி கொடுப்பதாகவும், அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒட்டப்பட்டு இருந்தது.

விஷயம் கேள்விபட்ட ஷிவானி கொதித்து போனாள். 
வி.சி முத்துசாமி அறைக்கு சென்று "என்ன சார் இது விசாரணை முடியாம நீங்க பாட்டுக்கு அந்த ஆளோட ராஜினாமாவை ஏத்துகிட்டிங்க. என்னோட அந்த போட்டோ என்ன சார் ஆச்சு. என்னோட அந்த புகாரை என்ன பண்ணுனீங்க. குப்பை தொட்டில போட்டுட்டிங்களா."

வி சி தனது டிரா-வில் இருந்து சிம் கார்ட் எடுத்து கொடுத்து "இது ராகவ் கொடுத்தது. ராகவ் மேல குற்றம் இல்லை. இதுக்கு மேல உன் கிட்ட எதுவும் சொல்லனும்னு அவசியம் இல்லை. நீ போகலாம்."பொருமி கொண்டே அந்த சிம் கார்டை வாங்கி விட்டு கிளாஸ் ரூமுக்கு வந்து, அனுவிடம் நடந்ததை சொன்னாள்.

அனுவுக்கு ஏதோ நடந்து இருக்க வேண்டும் என்றும், ராகவிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும் என்றும் தெரிந்தது. ராகவ் என்னை முயற்சி செய்ய, சுவிட்ச் ஆப் என்ற பதில் வந்தது.

கடந்த இரண்டு மாதங்களில் எல்லாரிடமும் நல்ல பெயர் சம்பாதித்து இருந்தான் ராகவ். அவன் பிரிவது யுனிவர்சிட்டியின் தலைப்பு செய்தி ஆகி விட்டது.எம் ஏ இரண்டு கிளாஸ் சேர்த்து பேச வேண்டி இருப்பதால், மதியம் இரண்டு மணி அளவில் ஆடிடோரியம் புக் செய்யபட்டது.


வழக்கம் போல் எல்லோருக்கும் முன்னதாக வந்து ராகவ் உட்கார்ந்து இருந்தான்.

சந்தன கலர் ஷெர்வானியில் கம்பீரமாக இருந்த ராகவை பார்த்து அனைத்து மாணவ மாணவிகளும் அசந்து போனார்கள்.

அனுவின் வற்புறுத்தலால் ஷிவானி வேண்டா வெறுப்பாக வந்து இருந்தாள்.


இரண்டு மணி ஆனவுடன் கதவை அடைக்க சொன்னான் ராகவ். பிரணவ் தவிர அனைவரும் இருக்க, பேச தொடங்கினான்.

"என் அருமை மாணவ நண்பர்களே, கடந்த இரண்டு மாதங்களாய் உங்களுக்கு பாடம் நடத்திய நான் இன்னைக்கு விடை பெறுகிறேன்.இன்று எனது கடைசி நாள். உங்களோட இருந்த இந்த நாட்களில் நான் உங்ககிட்டே இருந்து நிறைய கத்து கொண்டேன். "

"நான் தினமும் கிளாஸ்ல என்னோட வாழ்க்கைல கத்துகிட்ட சில விஷயங்களை இது வரைக்கும் பகிர்ந்து கொண்டேன். இன்னைக்கு முக்கியமான விஷயத்தை சொல்ல போறேன்.இது உங்களோட வாழ்க்கைல ரொம்ப உபயோகமா இருக்கும்."
தனது டேபிளில் இருந்த தண்ணீர் கிளாஸ் எடுத்து கையில் வைத்து கொண்டு எல்லோரையும் பார்த்தான். "டியர் ஸ்டுடண்ட்ஸ் இப்போ என் கைல இருக்கிற தண்ணீர் கிளாஸ் வைத்து ஒரு சின்ன பாடத்தை சொல்ல போறேன்".
"
கதிரவன் இங்கே வாங்க", என்று முன் வரிசையில் இருந்தவனை அழைக்க வந்தான். 

"இந்த கண்ணாடி கிளாஸ்சை ஒத்தை கையாள பிடியுங்க."

"டியர் ஸ்டுடண்ட்ஸ் இப்போ கதிர் கையில் இருக்கிற இந்த கிளாஸ் எவ்வளவு எடை இருக்கும்."

ஒவ்வொரு மாணவனாக சொல்ல ஆரம்பித்தனர்
 
50 கிராம்

100 கிராம்

150 கிராம்


"இருக்கலாம். எவ்வளவு இருக்கும் சரியா சொல்ல முடியாது. இருந்தாலும் எடை குறைவு தான் சரியா.?"

"சரி சார்."

"ஓகே. இந்த கிளாஸ்-சை கதிர் அஞ்சு நிமிஷம் வச்சு இருந்த என்ன ஆகும்."

"ஒண்ணும் ஆகாது சார்"

"சரி, ஒரு மணி நேரம் வைத்து இருந்தா."

"கொஞ்சம் கை வலிக்கும் சார்."

"ஓகே, ஒரு நாள் முழுக்க கையில் வைத்து இருந்தால்,"

"கை வலிக்க ஆரம்பிச்சுடும், பக்கவாதம் வந்த மாதிரி ஆய்டும், டாக்டர் கிட்ட போக வேண்டி இருக்கும்" என்றான் ஒரு மாணவன்.

"Good. ஸ்டுடண்ட்ஸ், இந்த நேரத்தில கதிரவன் கைல இருந்த கிளாஸ் வெயிட் மாறி போச்சா, இல்லை ஏறி போச்சா?"

மாணவர் கூட்டத்தில் மௌனம்.
"சொல்லுங்க,"

"இல்லை" என்றாள் ஷிவானி.

"குட், எடை மாறலை. இப்போ கதிரவன் அந்த வலில இருந்து தப்பிக்க என்ன செய்யணும்."

அனு சொன்னாள், "கிளாஸ்சை கீழே போட வேண்டும்"

"வெரி குட், டு தி பாயிண்ட்" கை தட்டினான், ராகவ்.


"இது போலதான் நம்ம வாழ்க்கைலயிலயும். சில பிரச்சனைகளை அஞ்சு நிமிஷம் மனசில போட்டு கவலைபட்டா, ஒண்ணும் பண்ணாது. ஒரு ஒரு மணி நேரம் நினைச்சு கவலைபட்டா. பரவாயில்லை, சமாளிக்கலாம்.அதையே நாள் முழுக்க நினைச்சுகிட்டே இருந்தா அது இந்த கிளாஸ் மாதிரி உங்களை செயலிழக்க வைத்து விடும்."

"இந்த நேரத்தில் என்ன செய்யணும்."

"சார், கிளாஸ்சை கீழே போடணும்."

"எஸ், அதே மாதிரி. இந்த பிரச்சனையான நினைவுகளை உங்க மனசில இருந்து விரட்டனும்."

"நீங்க எல்லாரும் நாளைக்கு ஒரு கம்பனில வேலைக்கு போறீங்க. ஆபீஸ்ல நிறைய பிரச்சனை இருக்கு. அது உங்களை பாதிக்க விடாதிங்க. வீட்டு வாசலில் செருப்பை கழட்டி போடும்போது உங்கள் ஆபீஸ் பிரச்சனைகளை கழட்டி போட்டு விடுங்கள். அதுபோல, வேலைக்கு போகும்போது வீட்டு பிரச்சனைகளை நினைத்து குழப்பி கொள்ளாதீர்கள்.நன்றி", என்று முடிக்க, எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினர்.

அடுத்து பேசிய சில மாணவர்கள் தனக்கு ராகவ் எப்படி கம்பனி வேலை கிடைக்க உதவி செய்தார் என்று சொல்ல, அனு, மற்றும் ஷிவானி முகத்தில் ஆச்சர்யம்.

தனது கடிகாரத்தை திருப்பி மணி பார்த்தான். "டியர் ஸ்டுடண்ட்ஸ். நவ் தி டைம் இஸ் அப்" என்று சொல்ல, ஒவ்வொரு ஸ்டுடண்ட் ஸ் ஆக வந்து அவனிடம் கைகொடுத்து விடை பெற்றனர். எல்லோர்க்கும் ராகவ் ஒரு பார்க்கர் பென் கொடுக்க, கண் கலங்க விடைபெற்றனர்.

ஷிவானிக்கு ராகவிடம் இருந்து பரிசு பெற இஷ்டம் இல்லை. கடைசியாக அனுவுடன் நிற்க, வேறு வழி இல்லாமல் வந்தாள். 

அனுவிடம் பார்க்கர்பென் கொடுத்து விட்டு, கையில் இருந்த ஒரு சிறிய பார்சலை கொடுத்து "இதில் முக்கியமான விஷயம் இருக்கு. அஞ்சு மணிக்கு மேல திறந்து பாருங்க" என்று சொல்லி விட்டு, அடுத்து பார்கர் பென்னை ஷிவானியிடம் கொடுக்க, வேண்டா வெறுப்பாக வாங்கி கொண்டு, அனுவிடம் கொடுத்து "அனு எனக்கு இந்த பரிசு எல்லாம் பிடிக்காது. அதுவும் இந்த மாதிரி ஆள் கிட்ட இருந்து"

அனு, "என்னடி இப்படி பேசுற, சும்மா இரு" என்று சொல்ல, ராகவ் முகம் கொஞ்சம் வாடியது. உடனே புன் சிரிப்பை வரவழைத்து கொண்டு, "நான் கிளம்புறேன். பார்க்கலாம்" என்று அனுவிடம் சொல்லி விடை பெற்றான்.


அனுவிடம் "என்னடி உன்னோட ஆள் ஏதோ உனக்கு கிப்ட் கொடுத்து இருக்கார். பிரிக்க மாட்டியா" என்று ஷிவானி கேட்க, "அவர் அஞ்சு மணிக்கு தான் பிரிக்க சொல்லி இருக்கார்.இன்னும் அரை மணி நேரம் இருக்கு வெயிட் பண்ணு."

கிளாஸ்ஸில் இருந்த அனைவரும் கிளம்பி விட, ஐந்து மணிக்கு அனு பரபரப்பாக அந்த கவரை பிரித்தாள்.உள்ளே இருந்தது ஒரு மெமரி கார்ட்.



தனது செல் போனில் இருந்த மெமரி கார்டை வெளியே எடுத்து, ராகவ் கொடுத்து இருந்த கார்டை போட்டு பார்த்த அனு முகம் மாறியது. சரியாக பதினைந்து நிமிடம் ஓடிய அந்த வீடியோவை பார்த்து கண் கலங்கினாள்.

"ஷிவானி, நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு."

"என்னடி சொல்ற,"

"இந்தா இந்த வீடியோவை பாரு. புரியும்"

படங்கள் சரியாக தெரியா விட்டாலும் குரலை வைத்து அது ராகவ் மற்றும் பிரணவின் குரல் என்பதை அடையாளம் கண்டு கொண்டாள்.

பார்க்க பார்க்க கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவள் முகத்தில் கோபம், அழுகை, வியப்பு போட்டியிட அப்படியே தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்தாள்.

"என்னடி, இப்படி ஆகி போச்சே"

கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வழிய, "முதலில் ராகவ் செல் நம்பரை கூப்பிடு" என்று அனுவிடம் சொல்ல, அனு ட்ரை செய்து விட்டு சுவிட்ச் ஆப் என்ற செய்து வர ஷிவானியிடம் 'இல்லை' என்று உதட்டை பிதிக்கினாள்.

அழுகையை ஷிவானி கட்டுபடுத்த முயல முடியவில்லை.

"அனு இந்த வேதனை பார்த்தியா. நான் இது வரைக்கும் சரின்னு நினைச்சது, இப்போ தப்பா தெரியுது.
இது வரைக்கும் தப்புன்னு நினைச்சது, இப்போ சரியா தெரியுது."



No comments:

Post a Comment