Saturday, October 17, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 13

இரவு உணவுக்காக எல்லாரும் டேபிளில் அமர்ந்தனர், ஜானகியும் வாசுகியும் உணவுகளை எடுத்து வந்து டேபிளில் வைத்தனர், மான்சியும் அவர்களுக்கு உதவும் நோக்கில் தட்டுகளை கழுவி எடுத்துவந்து டேபிளில் வைத்தாள்

“ மான்சி அவங்க ரெண்டுபேரும் பறிமாறுவாங்க, நீ வந்து சாப்பிட உட்காரு” என்று விஜயா அழைக்க, ஜானகி மான்சியின் தோள் பற்றி சத்யனுக்கு பக்கத்து இருக்கையில் உட்காரவைத்து “ இனிமே நீ தம்பிய கவனமா பார்த்துக்க, அது போதும்” என்றாள்

ஜானகி பேச்சை ரசித்த விஜயா “ மான்சி தட்டுல சாப்பாட்டைப் போட்டு பிசைஞ்சு ஒரு ஸ்பூன் போட்டு குடு சத்யன் சாப்பிடட்டும்” என்று கூறிவிட்டு தன் சாப்பாட்டில் கவனமானாள்

மான்சி அமைதியாக சாதத்தை பிசைந்து சத்யனின் வாயருகே எடுத்துச்செல்ல, ‘ நீ இப்படிதான் செய்வேன்னு எனக்குத் தெரியும்’ என்று சொல்லாமல் சொன்ன பார்வையுடன் வாயைத் திறந்து உணவை வாங்கிக்கொண்டான்



சத்யனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு வாய் துடைத்து, தண்ணீர் கொடுக்கும் மான்சியை புன்னகையுடன் பார்த்தாள் விஜயா “ என் மகன் ஏன் உன்னை தேர்தெடுத்தான்னு இப்பதான் புரியுது” என்று கூறிவிட்டு சிரிக்க..

“ உன் அத்தைக்கு உங்களைப் பார்த்து பொறாமை மான்சி, ஒருநாள் கூட எனக்கு இந்த மாதிரி ஊட்டிவிட்டதே இல்லை” என்று போலியான வருத்தத்துடன் சாமிநாதன் கூறினார்

“ அதுக்கென்ன இப்போ ரெண்டு கையிலயும் சூடு போட்டுட்டு ஊட்டி விட்டா போச்சு” என்றாள் விஜயா பதிலுக்கு

“ அடிப்பாவி,, எத்தனை நாளா இந்த ஆசைடி உனக்கு” என்றவர், தன் மடியில் இருந்த பேரனிடம் “ டேய் ரிஷி இந்த கிழவிய பாருடா எனக்கு சூடு வைக்கப் போறாளாம்” என்று மனைவிக்கு சாமிநாதன் பயந்தவர் போல நடித்தார்

“ ஆமாம்டா இந்த கிழவனுக்கு இப்பதான் இளமை துள்ளுது, ஊட்டி விடனுமாம்டா?” என்று தன் பேரனிடம் புகார் செய்தாள் விஜயா

“ ஓய் யாரடி கிழவன்னு சொல்ற?, நாற்பத்தெட்டு வயசு கிழவன் வயசா? பாக்குறியா இன்னும்............” என்று ஏதோ சொல்லவந்தவர் விஜயாவின் முறைப்பைப் பார்த்து கப்பென்று வாயை மூடிக்கொண்டார்

இவர்களின் பேச்சைப் பார்த்து சத்யனும் மான்சியும் வாய்விட்டு சிரித்தனர், “ டாடி எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்லை, தம்பியோ தங்கச்சியோ எதுவாயிருந்தாலும் எனக்கு ஓகே” என்று சத்யன் குறும்புடன் கூறிவிட்டு மறுபடியும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க..

“ டேய் அவருதான் ஏதோ உளருறார்னா நீவேற” என்ற விஜயா வெட்கமாக தலையை குனிந்து சாப்பாட்டை விரலால் கிளறினாள்

சாமிநாதன் பேரனை மடியில் வைத்துக்கொண்டு அசடுவழிய சத்யனையும் மான்சியையும் பார்த்து சிரித்துவிட்டு பேரனுக்கு இட்லியை ஊட்ட ஆரம்பித்தார்

இந்த விரசமில்லாத உரையாடல்கள் அந்த வீட்டின் வேலைக்காரர்களை கூட சந்தோஷப்படுத்தியது, வெகுநாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் சந்தோஷமான சிரிப்பு சத்தம் வாசல்வரை கேட்டது

சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலுக்கு வந்த சாமிநாதன் தன் மகனிடம் “ சத்யா டாக்டருக்கு போன் பண்ணேன், வர்ற புதன் ஈவினிங் ஆறு மணிக்கு வரச்சொல்லியிருக்கார், வரும்போது மான்சியும் கூட இருக்கனும்னு சொல்லிருக்கார்” என்றவர் சத்யனின் மாத்திரைகளை எடுத்துவந்து மான்சியிடம் கொடுத்து “ மாத்திரைகளை எப்படி கொடுக்கனும்னு அதுலயே போட்டுருக்கும், அதன்படி குடும்மா” என்று கூறிவிட்டு தனது அறைக்கு போய்விட்டார்


மான்சியிடம் இருந்து மாத்திரைகளை வாங்கிய சத்யன் “ ஒன்றரை வருஷமா இந்த கருமத்தை தின்றேன், எரிச்சலா இருக்கு,, இந்த முறை டாக்டரைப் பார்த்து இனிமேல் எனக்கு மாத்திரை வேண்டாம், என் மான்சி வந்தாச்சுன்னு சொல்லப்போறேன், இப்போ இதை அலமாரியில் வைக்கிறேன்” என்றுவிட்டு துள்ளலுடன் சத்யன் மாடிக்கு போக, மான்சி போகும் அவனையே வெறித்துக்கொண்டிருந்தாள்,

நான் வந்ததுல இவ்வளவு சந்தோஷமா? அல்லது என்னை இங்கே கொண்டு வந்துவிட்ட வெற்றி களிப்பா? யோசனையுடன் மகன் முகத்தைப் பார்த்தாள் மான்சி, ரிஷி புதிதாய் முளைத்த இரண்டு பற்களுடன் இவளைப் பார்த்து சிரித்தான்

தன் அறைக்குள் குழந்தையுடன் நுழைந்த மான்சியை புன்னகையுடன் பார்த்த சத்யன், “ வெல்கம் மை டியர் மகாராணி அன் இளவரசன்” என்று கூறி இடுப்பை வளைத்து குனிந்து கைகளை விரித்து அவர்களை வரவேற்றான்

மான்சியும் புன்னகையுடனேயே உள்ளே நுழைந்தாள், குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, அந்த பெரிய அறையை சுற்றி வந்தாள், அறையில் நிறைய மாற்றங்கள், ரிஷி இப்போதுதான் எழுந்து நின்று அடியெடுத்து வைப்பதால் கம்பியூட்டர் இருந்த டேபிள், இன்னும் மற்ற எல்லா பொருட்களும் அறையின் மூலையில் ஓதுக்கி வைக்கப்பட்டு குழந்தைக்கு விளையாட நிறைய இடம் ஒதுக்கி இருந்தார்கள், சத்யனின் கட்டிலுக்கு அருகே சிறிது இடைவெளி விட்டு சுவர் ஓரமாக மற்றொரு இரட்டை கட்டிலில் போடப்பட்டிருந்தது,

அந்த கட்டிலைப் பார்த்ததும் மான்சி வாயை பொத்திக்கொண்டு பலமாக சிரிக்க,, அந்த சிரிப்பில் இருந்த ஏளனம் சத்யனை திரும்பிப் பார்க்க வைத்தது, கேள்வியாய் புருவம் உயர்த்திய சத்யன் “ என்ன மான்சி இப்படி சிரிக்கிற” என்று இறுக்கமான குரலில் கேட்டான்

மறுபடியும் பொங்கி வந்த சிரிப்பை செயற்கையாய் அடக்கியபடி “ அதில்லைபா நீங்க எவ்வளவு உத்தமன்னு நெனைச்சு இங்கே இன்னொரு கட்டில் போட்டுருக்காங்க, ஆனா நீங்க எவ்வளவு கில்லாடின்னு அவங்களுக்கு தெரியாதே?, அதை நெனைச்சேன் சிரிப்பு வந்துருச்சு” என்று மறுபடியும் சிரித்தாள் மான்சி

சத்யனின் முகம் மேலும் இறுக “ நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலை மான்சி” என்று கேட்க

அவனை நிமிர்ந்து நேருக்குநேர் பார்த்த மான்சி “ அதாவது மகாராஜா, இந்தமாதிரி ரெண்டு கட்டில் இருந்தா மட்டும் நீங்க கட்டுப்பாடா இருந்திருவீங்களா என்ன? உங்களோட கேரக்டரையே புரிஞ்சுக்கலை பாருங்க உங்களை பெத்தவங்க,, உங்களுக்கு தேவைன்னா பட்சி எங்க இருந்தாலும் தானா வந்து உங்க கட்டில்ல விழ வைக்க உங்களால முடியும், அப்படி விழலைன்னா இருக்கவே இருக்கு உங்க பேவரிட் டயலாக்” என்ற மான்சி இடுப்பில் இருந்த மகனை தரையில் விட்டுவிட்டு சத்யனின் கட்டிலில் கால்நீட்டி அமர்ந்து “ இவ்வளவு ஆசையை மனசுல வச்சுகிட்டு நாளைக்கே நான் செத்துப் போய்ட்டா என்னப் பண்ணுவ மான்சி” என்று அவன் அன்று பேசியதைப் போலவே பேசிக்காட்டிய மான்சி “ இந்த டயலாக்கை தான் சொன்னேன் மகராஜ்,, ஆனாபாருங்க எப்பவுமே எல்லாரும் ஏமாளியாவே இருக்கமாட்டாங்க” என்று கூறிவிட்டு அவனை ஏளனமாகப் பார்த்தாள்

தன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகே வந்து அவள் இடுப்புக்கு இரு பக்கமும் கையூன்றி அவளை சிறைசெய்த சத்யன் அவளின் விரிந்த விழிகளை உற்று நோக்கி “ ஆனா எனக்கென்னவோ நீ சொன்ன காரணம் பொய்ன்னு தோனுது மான்சி” என்றான் கூர்மையுடன்

அவன் பார்வையைத் தவிர்த்து பக்கவாட்டில் தலையைத் திருப்பிய மான்சி “ இல்லை நான் பொய் சொல்லலை” என்றாள்




“ இல்ல பொய்தான் மான்சி,, உண்மை என்னன்னு நான் சொல்லவா? உனக்கு வருத்தம் மான்சி என்னடா இந்த மாதிரி ரெண்டு கட்டிலைப் போட்டு நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிட்டாங்களேன்னு வருத்தம்,, உனக்கு ஓகேன்னா, நானும் உன் கட்டில்லயே வந்து படுத்துக்கிறேன், சுவர் ஓரமா ரிஷி, அவனுக்குப் பக்கத்துல நீ, உனக்கு பக்கத்துல நான், என்ன கொஞ்சம் இடநெருக்கடியா இருக்கும், பரவாயில்லை உன்னை என்மேல படுக்க வச்சுக்கிறேன், இந்த வருத்தத்தை மறைக்கத்தான் நீ சிரிச்ச,, இதுதான் உண்மை ,, என்ன மான்சி நான் சொன்னது சரிதானே?” என்று சத்யன் கேட்டான், இப்போது இவன் குரலில் ஏகப்பட்ட நக்கல் வழிந்தது

“ நான் ஒன்னும் எதுக்கும் வருத்தப்படலை,, ச்சீ நெனைப்பை பாரு? மொதல்ல கையை எடுங்க நான் போய் குழந்தைக்கு துணி மாத்தனும்” என்று மான்சி எரிச்சலுடன் கத்த...

மெதுவாக கையை அகற்றிய சத்யன் “ ஏன் மான்சி உனக்கு இவ்வளவு கோபம்? உண்மையை நான் கண்டுகிட்டேன்னா? சரி விடு நீ சொன்னதையே நான் நம்பிட்டேன்” என்று கூறிவிட்டு இவன் பலமாக சிரிக்க, அவனை எரித்துவிடுவது போல் பார்த்த மான்சி விருட்டென்று எழுந்து கட்டிலைவிட்டு இறங்கினாள்

கீழே விளையாடிய ரிஷியை தூக்கி உடை மாற்றினாள், அவளிடமிருந்து மகனை வாங்கி, தன் கட்டில் கிடத்தி தானும் அருகில் படுத்துக்கொண்டு குழந்தையின் குண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு “ டேய் சின்ன குஞ்சு அப்பாகிட்டயே வந்துட்ட பார்த்தியா? நீதான்டா எனக்கு கிடைச்ச அதிசயமானப் புதையல்,, நீ எனக்கு கிடைப்பேன்னு நான் நெனைச்சு கூட பார்க்கலைடா, இனிமேல் அப்பா உன்னை ஒருநாளும் பிரிய மாட்டேன் செல்லம், ” என்று கொஞ்சினான்

தனது பெட்டியில் மாற்றுடை எடுத்துக்கொண்டிருந்த மான்சி “ ஆமாம்டா செல்லாம் உன்னை அழிக்க உன் அப்பா எவ்வளவோ பிளான் போட்டு தப்பிப் பிறந்தவன் நீ, அதனால நீ உன் அப்பாவுக்கு பெரிய அதிசயம் தான்” என்று நக்கலாக கூறிவிட்டு நைட்டியை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள், சற்றுமுன் அவனிடம் இழந்த சுயமரியாதை இந்த வார்த்தைகள் மூலம் தக்கவைத்துக்கொண்டதாக மான்சி எண்ணினாள்

சத்யன் பாத்ரூம் கதவையே வெறித்தான், இவ ஏன் இப்படி மாறிட்டா? என்ற கேள்வி அவன் பார்வையில் தொக்கி நின்றது, எந்த சமயத்துல எப்படி பேசுவான்னு கணிக்கவே முடியலையே?, என்னவோ முடிவில்லாத பாதையில் பயணிப்பது போல் சத்யனுக்கு ஆயாசமாக இருந்தது , அப்போது அவன் பக்கத்தில் படுத்திருந்த ரிஷி சத்யனின் மீசையை பிடித்து இழுத்து விளையாட “ உன் அம்மா மனசு மாற உன்னைத் தான்டா நம்பிருக்கேன்” என்ற சத்யன் மகனை அணைத்துக் கொண்டான்

பாத்ரூமிலிருந்து நைட்டியுடன் வெளியே வந்த மான்சி தன் பெட்டியில் சீப்பைத் தேடி எடுத்து தன் நீள கூந்தலை வாறி பின்னலிட்டுக் கொண்டு, பால்கனியின் கதவை திறந்து அங்கிருந்து தோட்டத்தின் அழகை நிலவின் ஒளியில் ரசித்தாள்.
அவள் அழகை பின்னால் இருந்து கண்கொட்டாமல் ரசித்தான் சத்யன், அவள் போட்டிருந்த சிவப்பு நிற நைட்டியில் அவளின் எழில் வளைவுகள் அற்புதமாய் இருந்தது, இடைவரை நீண்டிருந்த அவளின் ஜடை அவள் அசைவிற்கு ஏற்ப்ப, அவளின் புட்டத்தில் மோதி தாளமிட்டது, சிலநேரம் அசையாமல் அந்த பிளவில் உருண்டது, நைட்டி அவள் உயரத்திற்கு கொஞ்சம் சின்னதாக இருந்ததால் அவளின் கனுக்கால் வென் சதை பளிச்சென்று தெரிந்தது, பார்வை மேலே ஏற ஏற அந்த நைட்டி அவள் தொடைகளை கவ்விப் பிடித்து, வீணைக் குடம் போன்ற புட்டங்களை உள்ளடக்க ரொம்பவே சிரமப்பட்டது, பின்புறமே இப்படி இம்சிக்கிறதே முன்பக்கம் பார்த்தால்? ..........சத்யன் நீளமாய் பெருமூச்சை இழுத்துவிட்டான்... 


சத்யன் மகனை கையில் தூக்கிக்கொண்டு அவள் பின்னால் வந்து நின்றான் அவள் உடலில் வந்த சோப்பின் வாசத்தை நுகர்ந்தான், “ ம்ம் சோப்பு, சீப்பு, பிரஷ், எல்லாமே வரும்போதே எடுத்துட்டு வந்துட்ட போலருக்கே?” என்று கேலியாக கேட்க

அவன் குரல் கேட்டும் திரும்பாத மான்சி “ ஆமாம், வந்ததும் எதையும் தேட முடியாதுன்னு எடுத்துட்டு வந்தேன்,, எல்லாம் காலியானதும் நீங்கதான் வாங்கித் தரனும் வேற வழியில்லை,, ஆனா நீங்க இந்த மாதிரி செலவெல்லாம் செய்து பழக்கமிருக்காது, நீங்க பணம் செலவு பண்றதே ரொம்ப வித்தியாசமானது” என்றவள் வேகமாக திரும்பி சத்யனை நேராகப் பார்த்து

“ கவலைப்படாதீங்க எனக்கு தேவையும் கம்மிதான், நாற்பதாயிரம் அம்பதாயிரம்னு பெரிய செலவெல்லாம் எப்பவும் வைக்கமாட்டேன், மிஞ்சிப் போனா மாசம் ஆயிரம் ரூபாய்க்குள்ள அடங்கிடும் என் செலவுகள்” என்று குரலில் ஏகப்பட்ட குத்தலோடு மான்சி கூற........

சத்யன் எதுவுமே பேசவில்லை, அவளையே கூர்ந்து பார்த்தான், பிறகு அவள் கையைப் பற்றி இழுத்துவந்து கட்டிலில் தள்ளிவிட்டு கையில் இருந்த மகனை கீழே உட்காரவைத்து சில விளையாட்டுப் பொருட்களை அவனருகே போட்டுவிட்டு நிமிர்ந்த சத்யன் “ ஏய் நானும் பார்த்துகிட்டே இருக்கேன், வந்ததுலருந்து நக்கலாவே பேசிகிட்டு இருக்க? உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலை, அங்க என்னாடான்னா உருகி உருகி அழுத, அப்புறம் கார்ல வரும்போது மடியில படுத்து அணைச்சுகிட்டு தூங்குன, கைல கிஸ் பண்ண, சாப்பாடு ஊட்டி விட்ட, வீட்டுக்கு வந்தும் எல்லாரும் இருக்காங்கன்னு கூச்சப்படாம சாப்பாடு ஊட்டி விட்ட, இப்ப என்னடான்னு வார்த்தையால குத்திக்குதற்ர, உனக்கு ரெண்டு முகமா? இதுல எதுடி உண்மை?” என்று சத்யன் கோபமாய் இரைந்து கத்த....

“ ஸ்ஸ்ஸ்ஸ் ஏன் இப்படி கத்துறீங்க” என்று தன் காதுகளைப் பொத்திக்கொண்ட மான்சி “ இப்படியா கத்துறது குழந்தை பயந்துடப் போறான்,,, இப்ப உங்களுக்கு என்னத் தெரியனும்? நான் ஏன் இப்படி அடிக்கடி மாத்தி மாத்தி பேசுறேன்னு தானே,, ஆமாம் எனக்கு ரெண்டு முகம் தான்,, உங்களைப் பார்த்து அழுதது, உங்களுக்கு முத்தம் குடுத்தது, சாப்பாடு ஊட்டிவிட்டது எல்லாமே உங்களை உயிருக்குயிரா காதலிச்ச,, காதலிக்கிற மான்சி, இப்போ குத்தலா பேசுற மான்சி, உங்களால் பாதிக்கப்பட்டு, அபார்ஷன் வரைக்கும் போய், வயித்துல புள்ளையோட உங்ககிட்ட இருந்து தப்பிச்சுப் போன மான்சி, முன்னாடி மான்சி கோழை, அவளுக்கு அழ மட்டும் தான் தெரியும், இப்ப இருக்குற மான்சி உங்களை எப்படியாவது பழிவாங்கனும்னு துடிக்கிறவ,, ரெண்டுபேருக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கு, எவ எந்த சமயத்துல வெளிப்படுவான்னு எனக்கே தெரியாது, அதனால நீங்கதான் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போகனும்” என்று மான்சி எகத்தாளமாக பேச...

சத்யன் வியப்புடன் அவளையேப் பார்த்தான், அவன் பார்வை அவளை ஆயிரம் கேள்விகள் கேட்டது, ஆனால் ஒன்றுக்கு கூட அவள் பதில் சொல்லமாட்டாள் என்று அவனுக்கு தெரியும், குனிந்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்து “ ஏன் மான்சி நான் சொன்ன எதையுமே நீ நம்பலையா?” என்று வருத்தமாக கேட்டான்

“ எதை நம்புறது, நீங்க சொல்றது உண்மையான்னு உங்களுக்கேத் தெரியலை, அப்புறம் நான் எப்படி நம்புறது, முன்னாடி நடந்தது எதுவுமே ஞாபகத்துக்கு வரலை, ஆனா உன்மேல உள்ள காதலால் தான் அப்படி நடந்துருப்பேன்னு நீங்க சும்மா கெஸ் பண்ணிதான் சொல்றீங்க, அப்படியிருக்க அதை நம்ப நான் என்ன முன்ன மாதிரி முட்டாளா? அதெப்படிங்க ஏகப்பட்ட பெண்கள் கூட பழக்கம் உள்ளவர், ஏகப்பட்ட பெண்களை அபார்ஷன் வரைக்கும் கூட்டிட்டுப் போனவர், என்னைய மட்டும் உண்மையா விரும்புனீங்கன்னு சொல்றீங்க? ம்ஹூம் நம்புவதற்கில்லை? ” என்று மான்சி வார்த்தைகளை முள்ளாக்கி அவன் இதயத்தில் குத்த...


சத்யன் அந்த வேதனையில் கண் மூடினான், தொப்பென்று அவள் அருகில் கட்டிலில் அமர்ந்து தலையில் கைவைத்து அழுத்தி விட்டுக்கொண்டு “ ம்ஹூம் முடியலை மான்சி, இந்த பிரச்சனைக்கு உன்னோட முடிவுதான் என்ன?” என்றான்

“ முடிவில்லை இதுதான் ஆரம்பம்,, நீங்க சொன்ன மெத்தேட் படியே இனிமேல் நாம இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” என்று மான்சி சொல்ல ..

“ என்னது? புரியலை?” என்றான் சத்யன்

“ நாம ஏன் முன்னாடி நடந்ததை ஞாபகப்படுத்திக்கனும், மறுபடியும் புதுசா காதலிக்க முயற்சி பண்ணுவோம், முன்பு நாம சேர்ந்து இருந்த அதே இரண்டரை மாசத்தை இப்போ எடுத்துக்குவோம் நாம இதே ரூம்ல ஒன்னா இருப்போம், ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம், நீங்க உண்மையாத்தான் என்னை லவ் பண்றீங்கன்னு எனக்கு முழுசா புரிஞ்சா நாம ரெண்டு பேரும் ஒன்னு சேருவோம், ஆனா எந்த சமயத்திலாவது நீங்க பழைய கேவலமான புத்தியோடு என்னை நெருங்குறீங்களான்னு பார்க்கிறேன், அப்படி நெருங்கினா அடுத்த நிமிஷம் நான் வெளியேறிவேன்” என்று மான்சி சொல்ல...

“ வெளியேறி?” என்றான் சத்யன்

கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்த மான்சி “ வெளியேறி ராகினி அக்கா வீட்டுக்கு போயிடுவேன்,, நிரந்தரமாக ” என்றாள்

“ அப்போ நம்ம கல்யாணம்?” என்று மறுபடியும் சந்தேகம் கேட்டான் சத்யன்

“ கல்யாணம் இந்த ரெண்டு மாசம் முடிஞ்சதும் தான், கல்யாணம் முடிஞ்சிட்டா ஒருத்தரையொருத்தர் சகிச்சுக்கிட்டு போகவேண்டிய கட்டாயம் வந்துடும்,, அதனால கல்யாணம் இரண்டு மாசம் கழிச்சுதான்,, அது வரைக்கும் உங்கமேல எனக்கு நம்பிக்கை வருதான்னு பார்க்கலாம்” என்று அலட்சியமா கூறிவிட்டு எழுந்தவள் கீழே விளையாடிய மகனை தூக்கி கட்டில் படுக்க வைத்துக் கொண்டு தானும் படுத்து “ எனக்கு அந்த கட்டில் புடிக்கலை இங்கதான் படுப்பேன், நீங்களும் அந்த பக்கமா படுங்க பார்க்கலாம் உங்க லவ்வு எவ்வளவு ஸ்ட்ராங்குன்னு?” என்று நக்கலாக உரைத்துவிட்டு கட்டிலில் கிடந்த டவலை எடுத்து தன் கழுத்துக்கடியில் போட்டுக்கொண்டு மகனை தன் மார்புக்கு அருகே திருப்பி டவலுக்குள் கைவிட்டு ஜிப்பை இறக்கி குழந்தையை தன் மார்போடு அணைத்து பால் கொடுக்க ஆரம்பித்தாள்

அவளையேப் பார்த்த சத்யன் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான், இவளுடன் ஒரு அறையில் இருப்பதே கஷ்டம், இதுல ஒரே கட்டிலா? அந்த கட்டில்ல போய்ப் படுத்தா அதுக்கும் குறை சொல்லுவா போலருக்கே? மான்சியிடம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் அரங்கேறியதும் ரொம்பவே சோர்ந்து போனான், இவளை எப்படி சரிசெய்வது என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தவன் திடீரென ஏதோ தோன்ற மான்சியின் பக்கம் அவசரமாக திரும்பியவன் விலகியிருந்து டவலுக்குள் மான்சியின் மார்பை தன் மகன் இரண்டு கையாலும் பிடித்துக்கொண்டு பால் குடிப்பது தெரிய, சில விநாடிகள் அந்த அழகை ரசித்து லயித்தவன் மான்சியின் கண்டிஷன் ஞாபகம் வர கப்பென்று கண்களை மூடி திரும்பிக்கொண்டான்

அவளிடம் என்ன சொல்ல வந்தோம் என்று கஷ்டப்பட்டு ஞாபகத்திற்கு கொண்டு வந்து “ மான்சி “ என்று அழைக்க...

“ ம்ம் சொல்லுங்க” என்றாள் மான்சி

அவள் பக்கம் திரும்பிய சத்யன் பார்வையை அலைய விடாமல் கஷ்டப்பட்டு அவள் கண்களை பார்த்து “ நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன்,, நான் கட்டுபாடா இருந்து என் காதலை உனக்கு புரியவைப்பேன், அந்த நம்பிக்கை எனக்கிருக்கு,, ஆனா நீ கட்டுப்பாடு தளர்ந்துட்டா என்னப் பண்றது? ஐ மீன்,, நீயா என்னைத் தேடி வந்தா என்னப் பண்றது மான்சி” என்று சத்யன் இயல்பாக கேட்க........


“ என்னது?” என்றாள் திகைப்புடன், இதைப்பற்றி இவன் கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் திகைப்பிலேயே தெரிந்தது, “ ஆங்........ அதெல்லாம் நான் வரமாட்டேன், என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று உறுதியான குரலில் மான்சி கூறினாள்...

“ அப்படி நீயே வந்தா என்னப் பண்றது? அதை சொல்லு” என்று சத்யன் விடாபிடியாக கேட்டான்

சற்றுநேரம் யோசிப்பது போல் பாவனை செய்த மான்சி “ ம்ம் அப்பவும் நீங்கதான் என்னை ஏமாத்தி மயக்கிட்டீங்கன்னு சொல்வேன்” என்று சிரியாமல் மான்சி கூற...

“ அடிப்பாவி இது எந்த ஊர் நியாயம்,, நீ பேசுறது ரொம்ப அநியாயம்டி” என்று சத்யன் திகைப்புடன் வாய்பிளக்க..

“ ஒழுங்கா போய் டிரஸ் மாத்திக்கிட்டு படுங்க, இல்லேன்னா இன்னும் ஏதாவது புதுசா ஒரு கன்டிஷன் போடுத் தோனும்” என்று மிரட்டும் குரலில் மான்சி கூறியதும்

“ இனி புதுசா என்ன இருக்கு” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு தனது கபோர்டை திறந்து டீசர்ட்டும் ஷாட்ஸ்ம் எடுத்துக்கொண்டு சத்யன் பாத்ரூமை நெருங்க...

“ கொஞ்சம் இருங்க” என்ற மான்சியின் குரல் சத்யனை தடுக்க, நின்று அவன் திரும்புவதற்குள் மான்சி அவனருகே வந்திருந்தாள் “ இன்னும் என்ன?” என்று சத்யன் கேட்டான்

அவன் கையிலிருந்த உடைகளை பிடுங்கிய “இருங்க நானும் வர்றேன்” பாத்ரூமுக்குள் நுழைந்தவளை திகைப்புடன் தடுத்த சத்யன்“ ஏய் நீ எதுக்கு வர்ற” என்றான்

அவனை வியப்பாக பார்த்த மான்சி “ என்னங்க ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறீங்க? இந்த கையை வச்சுகிட்டு எப்படி குளிப்பீங்க?” என்றவள் அவனை கூர்மையோடு பார்த்து “ ஏன் குளிக்க வைக்க வேற யாராவது வர்றாங்களா?,, ஜ மீன் உங்களோட கேர்ள் ப்ரண்ட் யாராவது? ” என்று மான்சி கேள்வியாய் புருவத்தை உயர்த்தி நின்றாள்...

சத்யன் “ என்ன மான்சி இப்படியெல்லாம் பேசுற?” என்று வருத்தமாக கேட்க...

“ பின்ன உங்களுக்கு சோறு ஊட்டிவிட்டு, தண்ணி குடுத்து வாயை தொடச்சு விடுறதெல்லாம் நானு, குளிக்க வைக்க மட்டும் வேற எவளாவது வருவாளா என்ன?” என்று ஆத்திரமாய் கேட்டாள் மான்சி..



சத்யனுக்கு முதன்முறையாக மான்சியைப் பார்த்து சத்யனுக்கு பயமாக இருந்தது,, இவள் மனதில் என்னைப் பற்றி ரொம்ப கேவலமாக நினைத்துவிட்டாளா? அய்யோ இவ்வளவு ஈகோ பிடிச்சவளா மான்சி” சத்யன் செய்வதறியாது திகைப்புடன் நிற்க..

“ என்ன சார் யாராவது வர்றாங்கன்னா சொல்லிடுங்க நான் கண்ணை மூடி காதைப் பொத்திக்கிட்டு போய் படுத்துக்கிறேன், இல்ல வெளிய வெயிட்ப் பண்ணச் சொன்னாலும் என் பிள்ளையோட வெளிய வெயிட் பண்றேன்?” என்று மான்சி ஏகப்பட்ட நக்கலுடன் கேட்க

சத்யனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது,, என் மான்சிக்கு இப்படியெல்லாம் கூட பேசத்தெரியுமா? அவன் திகைப்புடன் பார்க்கும் போதே மான்சி மறுபடியும் ஏதோ சொல்ல வாயைத் திறக்க, சத்யன் சட்டென்று அவளைத் தள்ளிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் “ ம் நீயே குளிக்க வை, இந்த ஜென்மத்துல உனக்கு போட்டியா எவளும் வரமாட்டா” என்று கேலியாக சொல்லிவிட்டு தன் கைகளை விரித்தபடி சத்யன் நின்றான்



No comments:

Post a Comment