Thursday, October 22, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 17

இவர்களின் கார் வேடசந்தூர் வரும்போது மதியம் மணி ஒன்றானது, காலை இவர்கள் கிளம்பும்போது சாமிநாதன் ராகினிக்கு போன் செய்து தகவல் சொன்னதால் ராகினி வாசலிலேயே அமர்ந்து இவர்களுக்காக காத்திருந்தாள்..

காரைப் பார்த்ததும் எழுந்து ஓடிவந்தவள், காரிலிருந்து இறங்கிய மான்சியைப் பார்த்ததும் கன்னத்தில் கைவைத்து தலையை பக்கவாட்டில் சாய்த்த ராகினி “ ஏங்கண்ணு என்ன இம்பூட்டு அழகா போய்ட்ட?” என்று வியப்பில் வாய் பிளந்தாள்

தன்னை அழகு என்று கூறினாள் மயங்காத பெண் உலகில் இல்லை, மான்சி வெட்கத்துடன் சத்யனின் தோளில் சாய்ந்து “ போங்கக்கா, இங்க இருந்த மாதிரிதான் இருக்கேன்” என்று குரல் கம்ம கூறினாள்

சத்யனிடமிருந்து ரிஷியை வாங்கிய ராகினி “ அய்யோ நெசமாத்தான் ராசாத்தி சொல்றேன், தம்பி நீங்களே சொல்லுங்க இப்போ ரொம்ப அழகா மாறிருச்சு தானே பாப்பா?” என்று சத்யனிடம் கேட்டாள் ராகினி

சத்யன் தன்மீது ஒயிலாக சாய்ந்து நின்றவளை தள்ளி நிறுத்தி பார்த்தான். மான்சி அவனை தன் விழி வெட்டால் வீழ்த்தும் முயற்சியாக இமைகளை படபடத்தாள்



“ விண்ணில் வெட்டுவதெல்லாம் மின்னல் என்றால்!
“ உன் பார்வையை என்னவென்று சொல்வது?


மான்சியைப் பார்த்தவன் அப்படியே தெருவில் நிற்க.. “ சரியா போச்சு போங்க,, இப்படித்தான் உங்க வீட்டுலயும் நடுக்குதா? அதான் ரிஷி பய இப்படி மெலிஞ்சு போச்சு?” என்று கேலி செய்த ராகினி “ ரெண்டு பேரும் இங்கயே நில்லுங்க நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வர்றேன்” என்று ரிஷியை மறுபடியும் சத்யனிடமே கொடுத்துவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் ராகினி

தெருவில் தெரிந்தவர் அறிந்தவர் என சிறு கூட்டம் இவர்களை காணும் ஆவலில் காரை நெருங்கினர், சத்யன் இடுப்பில் முழங்கையால் சீண்டிய மான்சி “ என் தோள்ல கைப்போட்டு நெருக்கமா நில்லுங்க” என்று அவனிடம் ரகசியமாக சொல்ல.......

‘ ம்க்கும் இதுல ஒரு கொறையும் இல்ல, கைபோட்டா இவ அசையாம அப்படியே இருப்பா, நான்தானே தவிக்கப் போறவன் ’ என்று மனசுக்குள் எண்ணியவாறு கையை எடுத்து அவள் தோளில் போட்டு சுற்றி வளைத்து தன்னோடு பாதியாக அணைத்துக்கொண்டான்..

ஆரத்தித் தட்டுடன் வந்த ராகினி சேர்ந்து நிற்கும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து வியந்தபடி, ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்துப் போனாள்
மதிய உணவுக்கு பிரியாணி தயார் செய்து வைத்திருந்தாள் ராகினி, தோட்டத்தில் முகம் கைகால் கழுவி லுங்கிக்கு மாறிய... சத்யன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட அருகில் அமர்ந்து அவன் தொடையில் கையூன்றியபடி சாப்பிட்டாள் மான்சி

இப்போதெல்லாம் அவள் அவனை சீண்டினாள் உணர்ச்சிகள் ஏற்படுவதற்கு பதிலாக, ஒருவித எரிச்சல் கலந்த சலிப்புதான் ஏற்பட்டது சத்யனுக்கு, தன் உணர்வுகளோடு விளையாடி, கடைசியாக அந்தரத்தில் விட்டுவிட்டு போவதே மான்சியின் வேலை என்பதால் முந்தையநாள் இரவில் இருந்து சத்யனின் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்திருந்தது,

அவன் தட்டிலிருந்து எடுத்து சாப்பிடுவதும் பிறகு தன் தட்டில் இருப்பதை எடுத்து அவனுக்கு கொடுப்பதுமாக சிறுசிறு செல்ல விளையாட்டுகளுடன் மான்சி அவன்மீது பாதி சரிந்தபடி சாப்பிட.........

ராகினி இவர்களுக்கு சாப்பாடு வைத்துவிட்டு இங்கிதமாய் ரிஷியுடன் ஒதுங்கி தோட்டத்தில் விளையாட்டு காட்டியபடி குழந்தைக்கு சோறூட்டினாள்


தன் தட்டில் இருந்து ஏதோ எடுத்து சத்யனின் வாயருகே எடுத்துச்சென்று மான்சி ஊட்டிவிட முயன்றாள்,, சத்யன் வேண்டாம் என்பதுபோல் முகத்தை திருப்பிக்கொண்டான்,

காரில் ஏறியதிலிருந்து மான்சி சத்யனை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள், சத்யன் முகத்தில் சலிப்பும் ஒதுக்கமும், இவள் தொட்டால் கடமையாக அதை ஏற்றுக்கொள்வது போலவும் அவனது நடவடிக்கைகள் அவள் கவனத்தை ஈர்த்தது

சாப்பிட்டுவிட்டு தோட்டத்தில் கைகழுவும் போது “ மான்சி எனக்கு தூக்கம் வருது, நைட் சரியா தூங்கலை, அதனால கொஞ்சநேரம் நல்லா தூங்கனும்” என்று அவள் முகத்தைப் பார்க்காமல் சொல்லிவிட்டு சத்யன் உள்ளே போக

மான்சி அவனையே யோசனையுடன் பார்த்தாள், என்னை தவிர்க்கிறானோ? என்ற கேள்வி பெரியதாக அவள் மனதில் எழுந்தது, நேற்று இரவு ரொம்பவே சோதித்து விட்டேனோ? என்னை வெறுத்துட்டானா? நான் மட்டும் என்ன செய்றது? உங்ககிட்ட இருந்து உண்மையை வரவழைக்க எனக்கும் வேற வழி தெரியலையே? சத்யனின் வெறுப்பு மான்சியை வதைத்தது, உண்மையை வரவழைக்க தான் தேர்தெடுத்த வழி தவறோ என்ற சிந்தனையில் கவலை பூசிய முகத்தோடு உள்ளே வந்தாள்

ராகினி ரிஷியை மடியில் வைத்துக்கொண்டே அவசரமாக சாப்பிட்டு எழுந்து கைகழுவிவிட்டு வந்து “ பாப்பா நீ வர்றேன்னு தெரிஞ்சதும் தலைவர் வீட்டம்மா ரிஷியை பார்க்கனும்னு தூக்கிட்டு வரச்சொன்னாங்க, காலைலேர்ந்து நாலைஞ்சு வாட்டி போன் பண்ணிட்டாங்க,, நான் போய் புள்ளைய காட்டிட்டு வெயில் போனதும் பொழுதுசாய வர்றேன், நீங்க ரெண்டுபேரும் அலுப்புத் தீர தூங்குங்க, சாயங்காலம் தம்பி காபி கேட்டா தண்ணி பானை மேல சொம்புல பால் இருக்கு, போட்டுக் குடு பாப்பா” என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டு கதவை திறந்து ரிஷியின் மேல் வெயில் படாமல் தன் முந்தானையால் முக்காடிட்டுக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள்

மான்சி கதவை சாத்தி தாளிட்டுவிட்டு வந்தாள் மான்சி, போதிய வெளிச்சம் இல்லாமல் மெல்லிய இருட்டு கவிழ்ந்தது வீட்டுக்குள்,, சன்னலை திறந்தால் வெளிச்சம் வரும் என்று யோசித்தபடி சமையலறைக்கு சென்று தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு அங்கிருந்து சத்யனைப் பார்த்தாள்,

தரையில் விரித்த பாயில் புதுத் தலையணைப் போட்டு அதில் சுவற் பக்கமாக திரும்பி படுத்திருந்தான், இடுப்பில் கைலியும், மார்பில் வெள்ளைநிற கையில்லா பனியனும் மட்டுமே இருந்தது, மேலே ஒரு ஃபேன் சுழன்றபடி இருக்க, பக்கத்தில் ஒரு டேபிள் ஃபேனை வைத்துவிட்டு போயிருந்தாள் ராகினி, சத்யன் மீது ராகினிக்கு இருக்கும் பாசத்தை நினைத்து மான்சிக்கு உள்ளம் நெகிழ்ந்தது

இந்த வீட்டைப் போல் ஐந்து மடங்கு பெரிய அறையில் இல்லாத ஒன்று அந்த சிறிய அறையில் இருந்துகொண்டு அவன் பக்கம் தன்னை ஈர்ப்பது போல் மான்சிக்கு மனதில் பட்டது , ராகினி சொல்லிவிட்டு போனது நிச்சயம் சத்யன் காதில் விழுந்திருக்கும், ஆனால் தன் பக்கம் திரும்பாமல் கூட பார்க்காமல் படுத்திருக்கும் சத்யனை எண்ணி கோபமாக வந்தது மான்சிக்கு,

உடுத்தியிருந்த ஏகப்பட்ட வேலைபாடுகளுடன் கூடிய கனமான புடவை மான்சிக்கு பாரமாக இருக்க.. சமையலறையின் மூலையில் இருந்த துணிகள் அடுக்கும் ஷெல்பில் இருந்து முன்பு இவள் உடுத்தும் கைத்தறி புடவையும் அதற்கான ரவிக்கையும் எடுத்து கட்டியிருந்த புடவையை அவிழ்த்து விட்டு மாற்றிக்கொண்டாள்

வெளியே வந்தபோது சத்யன் உறங்கிவிட்டான் என்பதன் அடையாளமாக, அவன் முதுகு சீராக ஏறி இறங்கியது, எப்போதுமே மான்சி நினைத்து நினைத்து கர்வப்படும் ஒரே விஷயம் சத்யனின் அகன்ற மார்பும் திரண்ட புஜங்களும் தான், அதிகாலை உடற்பயிற்சிகள் காரணமாக அதிகப்படியாக துளி சதை கூட இல்லாமல் தட்டையான வயிறு, நீண்டு நெடுநெடுவென கால்கள், சமீபகாலமாக வயதுக்கு சற்று அதிகப்படியான முதிர்ச்சி முகத்தில் மட்டும்,, அவனை கண்களால் விழுங்கியபடி அந்த அறையையே தகிக்க வைக்கும் பெருமூச்சுடனும் அதே பாயில் அவனருகே சரிந்து படுத்தாள் மான்சி

அவன் முதுகில் தன் மூச்சு படும்படி புசுபுசுவென்று மூச்சு விட்டவள், அவன் புஜத்தில் கைவைத்து “ தூங்கிட்டீங்களா?” என்று மெதுவாக கேட்டாள்... சத்யனிடம் பதிலில்லை,,




கையை சற்று முன்புறமாக இறக்கி பனியனுக்குள் நுழைத்து அவன் மார்பை வருடியபடி “ எனக்கு தூக்கம் வரலை, இந்த பக்கம் திரும்புங்களேன் ப்ளீஸ்” என்று மீண்டும் அழைத்தாள்

“ எதுக்கு திரும்பனும்?” பட்டென்று பதில் வந்தது சத்யனிடமிருந்து
அடப்பாவி தூங்கவே இல்லையா?, என்று மனதில் எண்ணியபடி “ சும்மாதான், என் பக்கமா திரும்புங்க” என்று மறுபடியும் அவனை அழைத்தாள்

“ ஏன்டி......... மார்கழி மாசத்து நாய் மாதிரி உன் பின்னாடி அலைய விடவா,, எனக்குத் தேவையில்லை நான் இப்படியே இருக்கேன், மொதல்ல உன் கையை எடு” என்றான் வரண்ட குரலில்,, சொன்னதோடு அல்லாமல் அவள் கையைப்பிடித்து பனியனுக்குள் இருந்து இழுத்து பின்னால் போட்டான்..

மான்சிக்கு அவனது அலட்சியம் கண்கலங்க வைத்தது “ ஏங்க இப்படி பேசுறீங்க, எனக்கு மட்டும் உங்கமேல அன்பு பாசம் எல்லாம் இல்லையா என்ன?, நான் மட்டும் என்ன மரக்கட்டையா?” என்று குரல் கரகரக்க கேட்க

“ ஓ அதெல்லாம் உனக்கு இருக்கா?” என்று வியப்பு காட்டி பேசியவன் “ சரி நல்லது,, இருக்கட்டும், ரொம்ப சந்தோஷம், இப்போ என்னை தூங்கவிடு, ப்ளீஸ் தொல்லை பண்ணாதே” என்று கொஞ்சம் கடுமையாக எச்சரித்தான் சத்யன்

சற்றுநேரம் மான்சியிடம் அமைதி,, பிறகு மீண்டும் அவன் தோளில் கைவைத்து “ இதோ பாருங்க எனக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்கு, நான் ஒன்னும் கல் இல்லை,, ஆனா நீங்கதான் பிடி குடுக்காம நழுவுறீங்க, ” என்று அவனையே குற்றம்சாட்டினாள்

“ நான் நழுவுறேனா? என்ன சொல்ற நீ? நான் உன்னை காதலிக்கிறேனான்னு உனக்கு உறுதியா தெரியனும்னு நீதான் கண்டிஷன் போட்ட, நானும் என் காதல்ல இருந்து இம்மிகூட அசையாமல் அப்படியேத்தான் இருக்கேன், உனக்கும் புரிய வச்சு பார்த்துட்டேன், நீ பிடிவாதமா இருந்தா நான் என்ன செய்றது, காலம்பூராவும் இப்படியேத்தான் வாழனும்னு விதி போல, நானும் இந்த நிலையை ஏத்துக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன், அதனால இனிமேல் உனக்கு என்னால எந்த சிரமமும் இல்லை நீ நீயாவே இரு” என்று படபடவென்று பேசிய சத்யனின் வாயை அவள் தளிர் கரங்கள் பொத்தியது

அவன் காதை உதட்டால் உரசி “ எல்லாம் எனக்கு புரியும், இதைகூட புரிஞ்சுக்காம இருக்க நான் என்ன மாணிக்கம் மகளா? இப்போ சத்யனோட பொண்டாட்டி, எனக்கு எது, என்ன, எப்படின்னு எல்லாமே புரியும்” என்று ரகசியமாக மான்சி சொல்ல

அவள் சொன்னது சத்யனின் மண்டையில் ஏற சிலநிமிடங்கள் ஆனது, உடலில் ஒரு விரைப்புடன் பட்டென்று அவள் பக்கம் திரும்பிய சத்யன் “ நீ என்ன சொல்ற? எது புரிஞ்சுது?” என்ற படபடப்பாக கேட்டான்

விழிகளை மூடிக்கொண்டு அவன் பனியனை இரண்டு கையாலும் கொத்தாக பற்றி அவனை தன் முகத்தருகே இழுத்தபடி “ ம் இந்த திருட்டுப் பையனோட காதலி நான் மட்டும் தான்னு புரிஞ்சுது, காதலிக்காத போதே உங்களோட அசைவுகளை காதலோடு ஒப்பிட்டவ நான், இப்போ நீங்க இவ்வளவு காதலோட இருக்கும் போது அதை கண்டுபிடிக்க முடியாதா என்ன? நைட்டெல்லாம் நானும் தூங்கலை,, விடியகாலை மூனு மணிக்கு எழுந்து குளிச்சேன் தெரியுமா? நானும் எவ்வளவு நாளைக்கு கட்டுப்படுத்திக்கிட்டு இருக்குறது? ” என்ற மான்சியின் குரலில் கண்ணீர் கலந்த தாபம் தெரிய... சத்யன் பட்டென்று எழுந்து அமர்ந்தவன் அவள் தோள்பற்றி எழுப்பி

“ அப்புறம் ஏன்டி என்னையும் கொஞ்சம் கொஞ்சமா கொன்னு, உன்னையும் வருத்திக்கிற? , எல்லாம் புரிஞ்சுதுக்கப்புறம் எதுடி உன்னை இன்னும் தடுக்குது?” என்று கத்திய சத்யனுக்கு இத்தனை நாட்களாக தவித்து தனித்திருந்த ஆத்திரம் கொந்தளித்தது


அவன் பார்வையை சந்திக்காமல் பக்கவாட்டில் திரும்பிய மான்சி “ உண்மைகள் எல்லாருக்கும் தெரியனும், அதுதான் எனக்கு வேனும்” என்று மான்சி தீர்கமாக கூறியதும்

குழப்பத்துடன் அவளை பார்த்த சத்யன் “ இன்னும் என்னடி உண்மை தெரியனும்? எல்லாம்தான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சிருச்சு தானே? அப்புறம் என்ன?” என்று அடுத்தடுத்து கேள்விகள் தொடுக்க ..

இப்போது நேருக்குநேர் அவனைப்பார்த்த மான்சி “ எல்லாருக்கும் நான் சொல்லித்தானே நமக்குள்ளே என்ன நடந்ததுன்னு தெரியும்?” என்று ஏளனமாய்க் கேட்க..

“ அப்படின்னா?” சத்யன் கூர்மையாகப் பார்த்தான்

“ அப்படின்னா? நீங்க உங்க வாயால் எல்லாத்தையும் சொல்லனும்னு அர்த்தம்? இதுகூட புரியலை?” மறுபடியும் மான்சியின் குரலில் ஏளனம்........

எரிச்சலுடன் தலையை சிலுப்பிய சத்யன் “ அதான் எனக்கு எதுவுமே ஞாபகமில்லைன்னு சொல்றேனே மான்சி,, நீ சொன்னதைத்தான் எல்லாரும் ஏத்துக்கிட்டாங்களே மான்சி, பிறகென்ன நான் வேற சொல்லனும்னு எதிர்பார்க்கிறே?” சத்யன் சலிப்புடன் கேட்க

அவனை கண்களால் எரித்துவிடுவது போல் பார்த்த மான்சி “ நான் சொன்னதை இன்னைக்கு ஏத்துக்கிட்டாங்க சரி, ஆனா பிற்காலத்தில் ஏதாவது பிரச்சினைன்னு வந்தா ‘ என்னோட மகனின் நிலையை உனக்கு சாதகமா பயன்படுத்தி உள்ள வந்தவதானே?’ அப்படின்னு உங்கம்மா கேட்டால் அப்போ நான் யாரை சாட்சிக்கு கூப்பிட முடியும்” என்று மான்சி தணிந்த குரலில் நிதானமாக கேட்க...

இவ்வளவு நாட்களில் தன் மனதில் என்ன இருக்கிறது என்று தெளிவாக தெரியாமல் தவித்த சத்யனுக்கு. அவள் இப்போது தன் மனதை தெளிவுபடுத்தியதும் அதிர்ந்துபோனான், “ மான்சி என் அம்மா அப்படி சொல்லுவாங்கன்னு நெனைக்கறயா?” என்று தடுமாற்றத்துடன் கேட்டான்

“ ஏன் கேட்கமாட்டாங்க? இன்னைக்கு உங்களோட இந்த நிலைமை என்னை மருமகளா அவங்களை ஏத்துக்க வச்சிருக்கு,, ஆனா இதுக்கு முன்னாடி நான் அவங்ககிட்ட எவ்வளவு அவமானப்பட்டுருக்கேன்னு எனக்குத்தான் தெரியும், என் அம்மா பண்ண தவறுக்காக உங்கம்மா என்னை ஒவ்வொரு நாளும் தன் வார்த்தைகளால் முள்மேல என்னை நிக்க வச்சாங்க, நான் செய்யும் சின்னச்சின்ன தவறுகளை கூட ஓடிப்போன என் தாய்க்கூட ஒப்பிட்டு பேசுவாங்க, இன்னிக்கு உங்களுக்கு நடந்த ஆப்ரேஷனும், நமக்குப் பொறந்த ரிஷியும் அவங்களுக்கு என்னை ஏத்துக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கு,, இந்த சூழ்நிலை ஒருநாள் மாறலாம், அப்போ என் தாய்மை கலங்கப் படுத்தப்படலாம், மறுபடியும் 'தாயைப் போல மகள்னு ஏசலாம்,, அதனால உண்மைகளை உங்க வாயால் சொல்லனும்னு நான் எதிர் பார்க்குறது தப்பா?” என்று படபடவென பேசிய மான்சி ..

சத்யனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து “ இன்னும் உங்களுக்கு புரியலையா? தெளிவா சொல்றேன் கேளுங்க,, முதல்நாள் உங்க உயிரை பணயம் வச்சு என்னை பணிய வச்சது, அப்புறம் ரெண்டு மாசமா நமக்குள்ள நடந்த உறவுகள், பிறகு நான் கர்ப்பமானது, அதை அபார்ஷன் செய்ய நீங்க ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனது,, அங்கிருந்து நான் தப்பிச்சது, இது எல்லாமே நான் சொல்லித்தான் தெரியும், உங்க தரப்புல நீங்க சொன்னது, நீங்க என்னை காதலிச்சது, நாம உறவுகொண்டது, நான் கர்ப்பமானது, இது மட்டும் தான், அப்படியிருக்க நடந்தவைகளை மொத்தமும் நீங்க சொன்னால் மட்டுமே உங்க வீட்டுல எனக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கும், நான் இப்போ உங்களுக்கு பொண்டாட்டி ஆனாலும், ஒரு வேலைக்காரங்களை அதட்டினாக்கூட, ‘ ஆமா இவ என்னமோ யோக்கியம் மாதிரி என்னை அதட்ட வந்துட்டா,, இவ எப்படி இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சான்னு இந்த உலகத்துக்கே தெரியுமே’ அப்படின்னு என் காதுபடவே சொல்லுவாங்க,, அவங்களை மறுத்து என்னால என்ன பேசமுடியும், இவங்க முன்னாடி நான் என்ன சொன்னாலும் பொய்யாத்தான் தெரியும், நீங்க உண்மைகளை சொல்லாதவரை... நான் மாணிக்கம் துளசியோட மகளா அந்த வீட்டுல வாழனுமா? இல்லை அந்த வீட்டின் ஒரே வாரிசு சத்யனோட காதல் மனைவியா நான் வாழனுமா? இதை நீங்கதான் முடிவு பண்ணனும்,” என்றவள் தன் பார்வையை கூர்மையாக்கி சத்யன் கண்களில் ஊடுருவி.... 


“ நீங்க என்னை தவறா நெனைச்சாலும் பரவாயில்லை, உங்களை காதலிக்க ஆரம்பிச்சதும் எனக்குள் ஆசைகள் அதிகம் சத்யா,, அத்தனையும் உங்க காதலி என்ற கர்வத்தில் ஏற்பட்ட ஆசைகள், உங்ககூட பெரிய கார்ல போகனும், உங்ககூட பெரிய பெரிய ஹோட்டல் எல்லாம் போய் நல்ல சாப்பாடுகள் சாப்பிடனும் , பெரிய பெட்ரூம்ல விலையுயர்ந்த கட்டில் மெத்தைல படுத்துக்கனும், உங்கம்மா மாதிரி இடுப்பில் பெரிய வெள்ளி சாவிக்கொத்தை சொருகிகிட்டு பெரிய கரை வச்ச பட்டு புடவை கட்டிக்கிட்டு.. காதுல கழுத்துல வைரநகை எல்லாம் போட்டுகிட்டு அந்த வீட்டுல ஒரு மகாராணியா வளையவரனும்,, இதையெல்லாம் விட நீங்க எனக்கே எனக்கு மட்டும் இருக்கனும்,,

"இப்படி ஏகப்பட்ட ஆசைகளை சிறுசிறு நெஞ்சுக்குள்ள தேக்கி வச்சிருக்கேன் சத்யன், இது எல்லாம் இப்போ எனக்கு குடுக்க உங்க வீட்டுல தயாரா இருக்கீங்க தான், ஆனா எனக்கு இதை நான் கேட்டு வாங்கின மாதிரி இருக்க கூடாது, நீங்க என் காலடியில் வச்சு என்னை ஏத்துகிட்ட மாதிரி இருக்கனும்னு விரும்புறேன் சத்யா, என் வார்த்தைகள் உங்களுக்கு கர்வமாத்தான் தெரியும், ஆனா என் காதல் ரொம்ப உயர்ந்தது சத்யா, அது கொடுத்த கர்வம் தான் இது, இதெல்லாமே நடக்கனும்னா உண்மைகள் உங்க வாயால் வரனும்,, வருமா சத்யா? ” என்ற கேள்வியுடன் மான்சி தெளிவாக பேசி முடித்தாள்

சத்யன் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தான், அவள் சொல்வது அத்தனையும் நியாயமான கருத்துக்கள், அவனால் மறுக்கமுடியாதவை, ஆனால்?..... “ மான்சி உண்மை உண்மைன்னு நீ மறுபடியும் மறுபடியும் சொல்றதைப் பார்த்தா.... என்னமோ நான்தான் எல்லாத்தையும் மறைச்சுட்ட மாதிரி இருக்கு, எனக்குத்தான் எதுவுமே ஞாபகம் வரலையே” என்று கவலையுடன் கூற

அவன் கண்களையே உற்றுப் பார்த்து “ஆமாம் சத்யன் மறைக்கிறீங்க,, உண்மையை மறைக்கிறீங்க?” என்றாள்

சத்யன் உச்சபட்ச அதிர்ச்சிக்கு போனான் “ மான்சி என்னை நீ நம்பலையா?, எதை மறைச்சுட்டேன்னு சொல்ற? ” என்று குரல் கம்ம கேட்டான்



அவனை நெருங்கி அமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்ட மான்சி “ நான் வேனும்னா உங்களுக்கு ரெண்டு மாச பழக்கமா இருக்கலாம் சத்யா? ஆனா நீங்க என்னோட ஆறு வருஷத்து கனவு, உங்களோட ஒவ்வொரு அசைவையும் என் நெஞ்சுல பதிச்சு வச்சுருக்கேன், உங்க கண்கள் பொய் சொல்லுது சத்யா?” என்று சொல்லி நிறுத்திவிட்டு அவனையேப் பார்த்தாள்

சத்யன் பார்வயை சட்டென்று தாழ்த்திக்கொண்டு “ இல்லை நான் எதையும் மறைக்கலை, பொய்யும் சொல்லலை,, என்னை விடு நான் தூங்கப்போறேன் ” என்றவன் அவள் கைகளை உதறிவிட்டு பாயில் படுத்து முன்பு போல சுவர் பக்கமாக திரும்பிக்கொண்டான்

பாதி பேச்சில் முறித்துக்கொண்டு அவன் அப்படி படுத்துக்கொண்டது மான்சிக்கு கோபத்தை கிளறியது, சட்டென்று அவன் பனியனை பற்றி இழுத்து தன் பக்கமாக திருப்ப.. அவள் அவனுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்ததால் புரண்ட வேகத்தில் சத்யன் தலை மான்சியின் மடியில் வந்தது, அவன் தலைமுடியை கொத்தாக பற்றி பிடரியில் கைவிட்டு உயர்த்தியவள் பட்டென்று குனிந்து அவன் உதடுகளை மொத்தமாக கவ்வி இழுத்தாள்



No comments:

Post a Comment