Thursday, October 1, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 12

விஸ்வா திரும்புவதற்குள் சத்யன் பைக் அருகே வந்துவிட்டிருந்தான், விஸ்வா பைக்கில் ஏறியமர்ந்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிய சத்யனின் உடலும் மனமும் நெருப்பாய் தகித்தது,

என்னவொரு பொய்வேடம் போட்டு என்னை ஏமாத்திருக்கா? கல்யாணம் பண்ணிக்கப் போறவன்கிட்ட தினமும் முத்தம் வாங்கிகிட்டு என்னையும் அலைகழிச்சுருக்கா? எல்லாம் எதுக்காக வேனாம்னு சொல்லிட்டு வந்த என்னை உன்கால்ல விழிவைக்கத்தானா?

அடிப்பாவி உன் வஞ்சம் மாறவேயில்லையா? நீ இங்கே வந்தன்னிக்கே சொன்னயேடி நானும் இவரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு அப்பவே உன்னை இந்த வீட்டுலேர்ந்து விரட்டியிருக்கனும், ஆகமொத்தம் நீயும் இவனும் கொஞ்சுறதை பார்த்து நான் வெம்பி சாகனும் அதுக்காகத்தானே இங்கே வந்த, அது மட்டும் நடக்கவே நடக்காதுடி,, என்று வண்டியின் வேகத்தை விட சத்யனின் சிந்தனைகள் வேகம் அதிவேகமாக பயணிக்க..

வரும்போது பேசிக்கொண்டு வந்தவன் திரும்ப போகும்போது மவுனமாக போவதின் காரணம் புரியாமல் விஸ்வாவும் அமைதியாக வந்தான்,
சத்யனின் மனநிலை மிகவும் மோசமாக இருந்தது, ஒருநாளில் பூத்துக்குலுங்கி காய்த்து கனிந்து அன்றே கருகிப்போன தன் காதலை எண்ணி எண்ணி குமைந்தது அவன் நெஞ்சம்,

வீட்டுக்கு வந்ததும் விஸ்வா பைக்கிலிருந்து இறங்கி அவசரமாக மாடிக்கு ஓட ‘ஓ முத்தமிட எவ்வளவு வேகமாக ஓடுறான் பாரு” என்று சத்யனின் மனம் சத்யனுக்கு சுட்டிக்காட்டியது

கடைக்குள் நுழைந்தவன் நேராக பின்புறம் சென்று முன்பு பூஜையறையாக இருந்து இப்போது ஸ்டோர் ரூமாக இருக்கும் அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்து கதவை மூடினான்,

கதவில் சாய்ந்து நின்றவனின் நெஞ்சை துக்கம் அடைக்க, முகத்தை இருகையாலும் மூடிக்கொண்டு கோவென்று கதறியழுதான், சத்யனின் அப்பா இறந்தபோது கூட கண்ணீர் விடாதவன், இன்று தன் காதல் பொய்த்து போனதாக எண்ணி எண்ணி அழுதான்,

ஒரு ஆண் இதற்காக அழுதால் எவ்வளவு அவமானம் என்று புரிய அதற்கும் சேர்த்து அழுதான், தான் எவ்வளவு கேவலமாக தோற்கடிக்கப் பட்டிருக்கிறோம் என்ற கழிவிரக்கத்திலேயே கண்ணீர் இன்னும் அதிகமாக பெருகி வழிந்தது, ஒரு துரோகிக்காக அழாதே என்று அவன் மனம் எச்சரிக்கை செய்தாலும் அதை உதாசீனப்படுத்தி விட்டு அழுதான்,

இந்த மூன்று நாட்களாக நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்து நினைத்து வருந்தினான், அதான் கையெழுத்துப போட்டு எல்லாம் முடிஞ்சு போச்சே அதுக்கப்புறமும் அவமேல ஆசை வச்சது உன் தப்பு, அவதான் வந்ததுமே சொன்னாளே நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அதன்பிறகும் அவளை ரசிச்சது உன் தப்பு, என்று அவன் உள்ளம் கொந்தளித்து குமுறியது

எப்போதாவது பகல் வேளையில் கடையில் கூட்டமில்லாத போது சத்யன் அந்த அறையில் வந்து படுத்து ஓய்வெடுபது வழக்கம், அதனால் எப்போதும் ஒரு பாயும் தலையணையும் அந்த அறையிலேயே இருக்கும், இப்போது அழுது ஓய்ந்த சத்யன் அப்படியே மடிந்து அமர்ந்து அந்த பாயில் படுத்துக்கொண்டான்

மாடிக்குச் சென்று நேராக மான்சி படுத்திருந்த சத்யனின் அறைக்குள் நுழைந்த விஸ்வா “ மான்சி நான் உடனே மதுரைக்கு கிளம்புறேன், மஞ்சுவுக்கு காலில் வெந்நீர் சிந்தி காயமாயிடுச்சாம், எரியுது வலிக்குதுன்னு போன்ல ஒரே அழுகை, என்னால அவளை அந்த நிலைமையில் விட்டுட்டு இங்கே இருக்கமுடியலை, நான் கிளம்புறேன் மான்சி” என்று கூறிவிட்டு தனது பெட்டியில் தனது பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டான்


மான்சி சாந்தாவுக்கு போன் செய்து மஞ்சுவுக்கு என்ன நடந்தது என்று விசாரித்து விட்டு விஸ்வாவிடம் “ காயம் ஒன்னும் பெரிசா இல்லையாம் விஸ்வா,, அம்மா தான் ஆஸ்பிட்டல்க்கு கூட்டிட்டுப் போய் வந்தாங்கலாம்,, ஆனா இப்ப அவகூட நீங்க இருக்கனும்னு விரும்பினா கட்டாயம் கிளம்பி போங்க, நான் இங்கேயே இருக்கேன்” என்று மான்சி சொல்ல..

புன்னகையுடன் அவளை ஏறிட்ட விஸ்வா “ என் மனசை புரிஞ்சுகிட்டதுக்கு தாங்க்ஸ் மான்சி, நான் ஆன்ட்டி கிட்டயும் சத்யன் கிட்டயும் சொல்லிட்டு கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அறைக்கதவை நெருங்கியவன் மறுபடியும் வந்து “ அப்புறம் மான்சி சத்யன் ஏதோ மூட்அவுட்ல இருக்கார் போலருக்கு, வரும்போது என்கிட்ட சரியாவே பேசலை, நீவேற அவரை ஏதாவது வெறுப்பேத்தி இன்னும் டென்ஷன் ஆக்காத, சத்யன் கொஞ்சம் சென்சிட்டிவ்வான ஆளா இருக்காரு அதனால நீ கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்க மான்சி ப்ளீஸ்” என்று ஒரு சகோதரனாக வாஞ்சையுடன் மான்சிக்கு எடுத்து கூற.. மான்சி சிரிப்புடன் “ சரிங்க சீனியர்” தலையசைத்தாள்

விஸ்வா ஒரு அவசர வேலையாக போவதாக பேச்சியிடம் கூறிவிட்டு, சத்யனிடம் சொல்லிக்கொள்ள கடைக்கு வந்தான், “ அண்ணன் ரொம்ப தலைவலிக்குதுன்னு சொல்லிட்டு படுத்திருக்காரு, எழுப்பனுமா?” என்று கடைப்பையன் வேலு கேட்க, “ “ வேண்டாம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும், நான் அப்புறமா போன்ல சொல்லிக்கிறேன்” என்றுவிட்டு விஸ்வா காரில் கிளம்பினான்

அவனுடைய செல்பேசி பேச்சை அரைகுறை கேட்டுவிட்டு ஆயிரத்தெட்டு தப்புக்கணக்கை போட்டு குற்றுயிராய் கிடக்கும் ஒருவனைப் பற்றி ஏதுமறியாமலேயே போய்விட்டான் விஸ்வா



அத்தோடு சத்யன் அன்று இரவு பதினோரு மணிக்கு கடையை அடைத்துவிட்டு தான் மாடிக்கு வந்தான், வந்தவன் பசியில்லை என்று கூறிவிட்டு வராண்டாவில் போய் படுத்துக்கொள்ள..

மான்சி மெதுவாக அவனருகில் போய் அமர்ந்து “ என்ன சத்யா சாப்பிடாமல் படுத்துட்ட,, கொஞ்சமாச்சும் ஏதாவது சாப்பிடேன் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்

அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் “ நீ மட்டும் ஏன் இங்கயே இருக்க, அவன்கூடவே போகவேண்டியது தானே, ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணாடி, போயிடு என் மூஞ்சியிலயே முழிக்காத போயிடு" என்று அடக்கிவைத்த குரலில் புலியாய் உறுமினான்

அவனின் இந்த கோபத்தைக் கண்டு மான்சி மிரண்டு போனாள், நேற்றுவரை கண்களால் சிரித்தவன் இன்று கனலாய் கொதிப்பதன் காரணம் புரியாமல் திகைப்புடன் அவனிடமிருந்து நகர்ந்தாள்

அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த இரண்டு நாட்களும் கூட அவனை யாருமே நெருங்க முடியாத அளவிற்கு நெருப்பாய் கொதித்தான் சத்யன்

என்ன நடந்தது, ஏனிப்படி தகிக்கிறான் என்று புரியாமலேயே மாமியாரும் மருமகளும் தவித்து போனார்கள், அவனுடைய கோபத்தை தாங்கமுடியாமல் கண்ணீர் சிந்தும் மருமகளை கண்டு வருந்தினாள் பேச்சி

மறாவது நாள் ஞாயிற்றுக்கிழமை, எப்போதுமே ஞாயிறு அன்று கடையை திறப்பது கிடையாது, ஆனால் அன்று கடையைத் திறந்து வைத்துக்கொண்டு இருந்தவனை அவனது நண்பர்கள் சிலர் பார்க்க வந்தனர்

சிறிதுநேரம் கழித்து கடைப்பையன் வந்து கடை சாவியை கொடுக்க " சத்யன் எங்கடாப் போனான்?" என்று பேச்சி கேட்க

" அண்ணனோட பிரண்டுங்க மூனுபேர் வந்து பைக்ல கூட்டிட்டுப் போயிட்டாங்க, இலஞ்சில புது கல்லு இருக்குறாங்களாம், வாடா போய் குடிச்சிட்டு வரலாம்னு கூட்டிட்டு போனாங்க" என்றான் வேலு

" சரி நீ போ" என்று அவனை அனுப்பிவிட்டு, சத்யனுக்காக காத்திருந்தனர் இருவரும்





" காதலுக்கு தனிமை நண்பன் என்றால்,,

" தன்மானம் மிகப்பெரிய எதிரி!

" காதலிக்க ஆரம்பித்தவுடன்...

" பணம், பதவி,,

" அந்தஸ்து, புகழ்,,

" குடும்பம், நட்பு,,

" வெற்றி,, தோல்வி,,

" பசி,, தூக்கம் ,,

" இரவு,, பகல்,,

" வெட்கம்,, துக்கம்,,

" இன்பம்,, துன்பம்,,

" என எல்லாவற்றையும் துறந்து விட்ட நீ....

" தன்மானத்தையும் துறந்துவிடு!

" காதலை தன்மானத்தோடு அனுகினால்,,,

" அந்த காதல் ஜெயிக்காது! 


No comments:

Post a Comment