Tuesday, October 27, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 5


அனுவுக்கு ஷிவானியை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை. என்ன சொன்னாலும் ஷிவானி தொடர்ந்து அழுது கொண்டு இருந்தாள். 

"நான் தப்பு பண்ணிட்டேன் அனு. நீ பல தடவை சொன்னப்பவே எனக்கு புரிஞ்சு இருக்கணும். படிச்ச முட்டாளா இருந்துட்டேன்.ராகவ்கிட்ட நான் ரொம்ப கேவலமா, மட்டமா நடந்துட்டேன். இப்போ என் தவறை உணர்ந்துட்டேன். அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கிறேன். ஆனால் அதுக்கு வாய்ப்பு இல்லாம போச்சு"

"நான் பல தடவை அவமானப்படுத்தி இருந்தும், ஆபத்துக்கு பாவமில்லைன்னு என்னை காப்பாத்த மகாபலிபுரம் வரை ரிஸ்க் எடுத்து வந்தார். அந்த பேருதவிக்குநன்றி சொல்லலைனா பரவாயில்லை இப்படி அபாண்டமா பழி போடாம இருந்துருக்கலாம்."

ஹாஸ்டலில் தனது படுக்கையில் படுத்து அழுது கொண்டே இருக்க, அனுவுக்கு அவளை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.



அங்கே ஹாங்கரில் தொங்கி கிடந்த ஓவர் கோட்டை பார்த்து 'இது என்ன' என்று அனு கேட்க, "இது தாண்டி அவர் என் மானத்தை காப்பாத்த போட்டு விட்ட அவரோட ஓவர் கோட். அவர் முகத்தில் தூக்கி வீசி எறியனும்னு நான் வச்சு இருந்தது."

அனு அவள் தலையை தடவி கொடுக்க, அவள் மடியில் படுத்து கொண்டு கண்ணீர் விட்டாள்.

"இனிமே அழுது ஒண்ணும் ஆக போறது இல்லை. நீ உன் தப்பை உணர்ந்துட்ட. அது போதும்.சீக்கிரம் அவரை சந்திக்கிற சந்தர்ப்பம் அமையணும்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கோ. பார்க்கும்போது மன்னிப்பு கேளு. அதுக்கு இணையான ஒரு தீர்வு இந்த உலகத்தில எதுவும் இல்லை."

"நீ வேணாம்னு சொல்லி கொடுத்த அவரோட பேனா என்கிட்ட இருக்கு. வேணுமா"
ஷிவானி முகம் மலர்ந்தது. அனுவிடம் இருந்து அந்த பார்க்கர் பேனாவை வாங்கிக்கொண்டு பார்க்க, அதில் ஷிவானி பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. அதை வாங்கி தனது பர்சில் கவனமாக வைத்து கொண்டாள்.

"அனு, எனக்கு இப்பவே அப்பாவை பார்க்கணும் போல இருக்குடி"யோசித்த அனு, "சரிடி, நாளைக்கு காலேஜ் வேற இருக்கே. என்ன பண்ணுறது."

"அனு நீதாண்டி ஒரு வழி சொல்லணும்"


"நோ ப்ரோப்லம். அடுத்த வாரம் ரிவிஷன் தான். நம்ம புது வருஷம் வேற வருது. முதல்லயே புதன் கிழமை போகலாம்னு நினைச்சோம். இப்போ உனக்கு அப்பாவை பார்க்க வேணும் போல இருக்குன்னு சொல்ற. ஒண்ணு செய்யலாமா, இன்னைக்கு ராத்திரி வோல்வோ பஸ்ல போகலாமா."

"சரிடி, நான் இப்பவே அப்பாகிட்ட பேசுறேன்". சொல்லி விட்டு ஷிவானி செல் போனை எடுத்து தனது தந்தையை அழைத்தாள்.

உங்களை உடனே பார்க்க வேணும் போல இருக்கு அப்பா (நானா). நான் இன்னைக்கு நைட்டே கிளம்பி வரேன்""

.....
சரிப்பா, நான் அனு கிட்ட கொடுக்கிறேன்.""

.....
"சொல்லுங்க அங்கிள். அவ மனசு சரியில்லை. அதனால தான் உங்களை பார்க்கணும்னு சொன்னா. அவ உங்க செல்லம்தானே"சிரித்தாள் அனு.

....."சரி அங்கிள். ராத்திரி வோல்வோ பஸ்ல வரோம். எங்களை பென்ஸ் சர்கிள்ல காலைல அஞ்சு மணிக்கு பிக் அப் பண்ணிக்கணும்.சரியா".

.......
"ஓகே அங்கிள். பாய்."

"என்னடி, அங்கிள்கிட்ட நடந்த எல்லாம் சொல்ல போறியா."

"ஆமாண்டி, அப்பாகிட்ட (நானா) நான் எதையும் மறைச்சது இல்லை".

"ஆமா ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன். பாவம் அடிபட்டு படுத்து கிடக்கான் அந்த பிரணவ், போய் பார்க்கலையா."

"வேனாம்டி, எனக்கு கோவமா வருது. அந்த பொறுக்கியை திரும்ப பார்தேன்னா கொன்னே போடுவேன்."

"அப்பாடி. அவன் கிட்ட இருந்து ஒரு வழியா தப்பியாச்சு".

"ஆமா, உனக்கு ஒண்ணும் வருத்தமா இல்லையே. காதல் தோல்வி வேற. பாவம்டி நீ"

"அதல்லாம் ஒண்ணும் இல்லை. அவனும், நானும் ஒரே ஜாதி தான். இருந்தாலும் இப்படி ஒரு மட்டமான ஆளை காதலிச்சு இருக்கேன்னு நினைக்கிறப்போ எனக்கு வாந்தி வர மாதிரி இருக்கு."




"என்னடி, வாந்தியா", வயிற்றை தடவி பார்த்தாள் அனு, "ஒண்ணும் நடக்கலையே".

ஷிவானி பொய் கோபத்தோடு"அப்பாடி, அது மட்டும் இல்லை. தப்பிச்சேன். அடிக்கடி என் உள்மனசாட்சி சொல்லும். இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இருன்னு. அது உண்மையா போச்சு."

அனு கிண்டலோடு"உன் உள்மனசாட்சி பேரு டாக்டர் ராகவ்தானே" என்று கேட்க, மீண்டும் ராகவ் பெயரை கேட்டவுடன் சோகத்தில் ஆழ்ந்தாள் ஷிவானி.

ரெட்பஸ் டாட் காமில் டிக்கெட் புக் செய்து விட17ம் தேதி இரவு பதினொரு மணி கேசிநேனி பஸ்ஸில் இருவரும் விஜயவாடா கிளம்பினர்.

"ஏண்டி ஏ சி குளிர் தாங்கல. நீ கம்பளி போர்வை போத்திக்கலையா."

"நான் போத்தி இருக்கேனே" என்று ஷிவானி காண்பிக்க

அனுவுக்கு சந்தேகம். "ஏய் உன்னோட கம்பளியை விலக்கு" என்று சொல்ல, 

"மாட்டேண்டி எனக்கு நல்லா குளிருது" என்று சொல்ல, 

"எனக்கு தெரியும்டி", என்று அவள் கம்பளியை உருவ, உள்ளே ராகவின் ஓவர் கோட்.

"என்னடி கொடுமை இது. எதுக்கு அந்த அழுக்கு கோட்டை தூக்கிகிட்டு அலையற."

"இல்லடி, குளிர் அதிகமா இருந்தா தேவைப்படுமேன்னுதான்."

"குளிரு"

"ஆமா"

"அதிகமா"

"ஆமாம்."

"அதுவும் விஜயவாடாவில"


"ஹி ஹி ஹி"

"அசடு வழியுது துடைடி."

"ஆமா என்ன திடீர்னு இந்த பைத்தியம். ராகவ் யாருன்னே தெரியாது. போன்ல பேசவும் முடியாது. இது தேவை இல்லாத வேலை.நான் வேணாம் அங்கிள் கிட்ட பேசி உனக்கு சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா." என்று கண் சிமிட்ட.

"சும்மா இருடி. நீ வேற. அப்பா ஏற்கனவே அவர் பிரெண்ட் பையன் இருக்கானு சொல்லி என்னை அடிக்கடி டார்ச்சர் பண்ணுறாரு. நீ வேற இப்படி சொன்னா. என்னை பாடாபடுத்தி வச்சுடுவாரு."

"என்னடி மணி ஒரு மணி ஆச்சு இன்னம் தூக்கம் வரலையா."

"இல்லைடி எனக்கு அந்த ராகவ் நினைப்பாவே இருக்கு."

"சரிதான் போடி. எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன்" கண்கள் சுழற்ற தூக்கத்தில் ஆழ்ந்தாள் அனு. 

"விஜயவாடா பென்ஸ் சர்கிள் வந்தாச்சு. இறங்குங்க" என்று கிளீனர் சொல்ல, அனு ஷிவானியை எழுப்பினாள். 

"என்னடி எப்போ தூங்கின". 

"மூணு மணி இருக்கும்டி."

இருவரும் பேக் எடுத்து கொண்டு இறங்க, அனு உற்சாகமாக கத்தினாள். "அங்கிள் வந்தாச்சுடி".

"டாடி" என்று இறங்கிய உடன் ஓடோடி வந்து கட்டி கொண்டாள் ஷிவானி.

"என்னம்மா பிரயாணம் நல்லபடியா முடிஞ்சதா".

"நல்லபடியா இருந்தது அப்பா."


"என்ன அங்கிள், அப்படியே யூனிபார்மோட வந்துட்டிங்க."

"நைட் டியூட்டி. அதனாலஅப்படியே வந்துட்டேன்.அனு உன்னை முதல்ல ட்ராப் பண்ணிட்டு நாங்க வீட்டுக்கு போறோம்" என்று சொல்ல, சரி என்று தலை அசைத்தாள் அனு.

அனுவை ட்ராப் செய்து விட்டு வீட்டுக்கு வந்த ஷிவானி தந்தை, அவள் முகத்தை பார்த்து, "என்னம்மா ஏதாவது பிரச்சனையா."
"இல்லப்பா ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. அப்புறம் விபரமா சொல்றேன்."

ஷிவானி அப்பாதனது யூனிபார்ம் மாற்றி விட்டு இரவு உடைக்கு மாற, ஷிவானியும் தனது உடை மாற்றி கொண்டு அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தாள்.

"சரி நீ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடும்மா" என்று சொல்ல, ஷிவானி மாடியில் இருந்த தனது படுக்கை அறைக்கு சென்றாள்.

கீழே ஷிவானி அப்பா"என்னடி பத்மா, ஷிவானி முகத்தை பார்த்தா ஏதோ பிரச்சனை மாதிரி தெரியுது. ஏதாவது கேட்டியா"

"நீங்க தான் உங்க பொண்ணுக்கு செல்லம கொடுத்து கெடுத்து வச்சுரிக்கிங்க. எது கேட்டாலும் ஒண்ணும் இல்லைன்னு சொல்றா.நீங்க கேட்டாதான் சொல்லுவான்னு நினைக்கிறேன்." சொல்லி விட்டு தனது வீட்டு வேலையை கவனிக்க சென்று விட்டாள்.

'சரி இந்த வாரம் முழுக்கவீட்டில தான இருக்க போறா, மெதுவா விசாரிக்கலாம்" என்று தன்னை தானே சமாதானபடுத்தி கொண்டார்.

அங்கே அனு வீட்டில் அனு அப்பா ஸ்ரீநிவாசராவ் அவளை பார்த்தவுடன்"என்னம்மா பிரயாணம் சௌகரியமா இருந்துச்சா."

"நல்லபடியா வந்துட்டோம்ப்பா.நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்ப்பா, பத்து மணிக்கு மேல எழுப்பி விட்டா போதும்."

"சரிம்மா, நீ தூங்கு. நான் கொஞ்சம் மிளகாய் கோடௌனுக்கு போகணும் மதியம் சாப்பாட்டுக்கு வரும்போது பேசிக்கலாம்."

"சரிப்பா", என்று சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றாள் அனுபமா.

பத்து மணிக்கு பல் விளக்கி கொண்டு இருந்த ஷிவானியின் செல்போன் அலறியது. யார் என்று பார்த்தால் பிரணவ், போனை எடுக்கவில்லை. அவன் தொடர்ந்து அழைக்க எரிச்சலானாள் ஷிவானி.


போனை எடுக்க "சாரி ஷிவானி. என்னை மன்னிச்சுடு".

கோபம் தலைக்கு ஏற, "ஏன்டா, நீயெல்லாம் ஒரு மனுஷனா, தூ. இனிமே எனக்கு போன் பண்ணினே, அப்புறம் நான் என்னோட உண்மையான ரூபத்தை காட்டா வேண்டி வரும். போனை வைடா" கட் செய்து விட்டு திரும்ப, இடுப்பில் கைவைத்தபடி அவள் அப்பா.

அசடு வழிந்தாள்.

"யாரும்மா அது போன்ல."

"கிளாஸ் மேட்பா.

"என்னமோ கோபமா பேசின மாதிரி இருக்கு. அப்பாகிட்ட எதையும் மறைக்க மாட்டியே. இது என்ன புதுசா."

தலை குனிந்தாள். "சாரி டாட். சொல்றேன்".

சாப்பிட்டு கொண்டே அவள் நடந்தது எல்லாம் சொல்ல, அம்மா பத்மாவதி தலையில் அடித்து கொண்டார்.

"இதுக்குதான் சொன்னேன். பொண்ணை வேற ஊருக்கு அனுப்பாதிங்கன்னு. இப்போ பாருங்க வம்பை விலைக்கு வாங்கி வந்து இருக்கா.அந்த பிரணவ் பணக்கார பையன் போல இருக்கு."

"ஷிவானிஅந்த ராகவ் பத்தி இன்னும் கொஞ்சம் விபரமா சொல்றியா."

"அடிக்கடி அனு அவரை நாகார்ஜுனா மாதிரி இருக்கார்னு சொல்லுவா."

"ஓ அப்படியா."

"அப்புறம் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். என்னை பார்த்தா எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு, பழகின மாதிரி இருக்குன்னு சொல்லுவாரு. ஒரு வேலை நெல்லூர்ல ஸ்கூல்ல படிக்கிறப்ப பார்த்து இருப்பாரோ."

நீண்ட யோசனையில் ஆழ்ந்தார் ஷிவானி அப்பா.

"ஷிவானி, வீடியோ ஒண்ணு எடுத்து கொடுத்தார்னு சொன்னியே அது எங்க அம்மா."

"சாரி டாட், அது அனு கிட்ட இருக்கு."


அங்கே அனு வீட்டில்.

"என்னப்பா மதிய சாப்பாட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு ஒரு மணி நேரத்தில திரும்ப வந்துட்டிங்க."

"இல்லைமா, பேங்க் போகணும். பாஸ் புக்கை மறந்து வச்சுட்டேன். அதுதான் திரும்ப வந்துட்டேன். சாப்பிட்டு, பேங்க் போயிட்டு அப்படியே திரும்ப கோடௌன் போய்க்கிறேன்."

"சரி, காலேஜ்ல நடக்கிற தினமும் ஒரு தகவல் மாதிரி விஷயம்ன்னு உன்னோட புது ப்ரொபசர் பத்தி போன வாரம் வந்து இருக்கிறப்போ சொன்னே. ஏம்மா அவரை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டி வரலாமே. நல்ல மனுஷனா தெரியுறாரு."

"இல்லைப்பா அதுக்கு வாய்ப்பு இல்லை"

"ஏம்மா. என்ன ஆச்சு." என்று ஸ்ரீனிவாச ராவ் ஆச்சர்யத்துடன் கேட்க

"அவர் வேலையை ரிசைன் பண்ணிட்டு போய்ட்டாரு."

"ஓ அப்படியா. ஆமா எங்க போய்ட்டாரு."

"தெரியலைப்பா. ஆனால் அவரை சுத்தி ஏதோ மர்மம இருக்கு."ஷிவானியிடம் இருந்து போன் வர, எடுத்தாள்.

"சரிடி, இதோ அனுப்பி வைக்கிறேன்."

மெயிலில் அனுப்பி வைத்தாள்."என்னம்மா, ஷிவானி என்ன கேட்டா. நீயும் ஏதோ அனுப்பி வச்ச."

"அப்பா அது ஒரு வீடியோ". நடந்த விஷயத்தை சுருக்கமாய் சொல்ல, அப்பா அசந்து போனார்.

"ரொம்ப நல்ல மனுஷன் மாதிரி இருக்கே.அந்த வீடியோவை காண்பி."


இங்கே ஷிவானி வீட்டில்.

"என்னம்மா, வீடியோ டவுன்லோட் பண்ணிட்டியா."

"அப்பா இதுதான் அந்த வீடியோ."

"என்னம்மா பிக்சர் எதுவும் சரியா இல்லை.இது யாரோட வாய்ஸ்."

"இது பிரணவ் வாய்ஸ்."

'டேய் பிரணவ். இருபது பேரை சுட்ட எனக்கு இருபத்தி ஒண்ணா உன்னை போட்டு தள்ளுறது பெரிய விஷயம் இல்லை.ஷிவானியை நீ எடுத்த போட்டோ எங்கே வச்சு இருக்க.'

"இது யாரோட குரல்மா."

"இதுதாம்பா அந்த ராகவ் குரல்."

"எனக்கு ரொம்ப பரிட்சயமான குரலா தான் இருக்கு. ஒரு நிமிஷம் திரும்ப அந்த வீடியோவை போடு."கேட்டு விட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

"ஒரு நிமிஷம். மேலே இருக்கிற ஈநாடு பேப்பர், 2009 மார்ச் மாசம் மூன்றாம் நாள் பேப்பர் எடும்மா."

அங்கே அனு வீட்டில்.

"அனு பீரோக்கு மேல ஆந்திர வாணி, 2009 மார்ச் மாசம் மூன்றாம் நாள் பேப்பர் எடும்மா"

"அங்கே முதல் பக்கத்தில இருக்கிற செய்தியை படி."

"வாரங்கல் மாவட்டம். நக்சலைட் தாக்குதலில் 30 போலிஸ் அதிகாரிகள் சுட்டு கொலை."


இங்கே ஷிவானி வீட்டில்.

"ஷிவானி, அவருக்கு மீசை இருந்துதா, இல்லையா.?"

"மீசை இருந்ததுப்பா."

முதல் பக்கத்தில் இருந்த அந்த போலிஸ் ஆபீசர் போட்டோவில் மீசை வரைந்தார்.

"இப்போ சொல்லும்மா, இவர்தான நீ பார்த்தது."

அதிர்ந்து போனாள். "அப்பா, எப்படிப்பா கண்டு பிடிச்சிங்க."

"அதுதான் நான்" மீசை ஒதுக்கி விட்டு சிரித்தார் இன்ஸ்பெக்டர் வீர ராஜு.

அங்கே அனு வீட்டில்.

"அனு இவர் தான் நீ பார்த்த ராகவா."

"ஆமாப்பா அவருக்கு மீசை இருக்கும், இவருக்கு இல்லை.அப்பா இவர் போலீஸ் ஆபீசரா.நம்பவே முடியலைப்பா"

ஆச்சர்யத்தில் வாய் பிளந்த அனுவை உலுக்கினார்.

இங்கே ஷிவானி வீட்டில்.

"அப்பா, அவர் யாருப்பா. உங்களுக்கு நல்லா தெரியுமா.?"

திரும்ப திரும்ப அந்த பேப்பரை ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டு இருந்தாள்.


அவள் போட்ட சத்தம் கேட்டு அவள் அம்மா பத்மாவதி ஓடி வந்து 'என்ன' என்று கேட்க, பேப்பரை எடுத்து காண்பித்து, "பத்மா, என்னை சாவின் முனைல இருந்து காப்பாத்தின அந்த நல்ல மனுஷனுக்கு நன்றி சொல்லனும்னு சொன்னியே, அவர் செத்து போகலை.உயிரோட தாம்மா இருக்கார்.

"உண்மையா சொல்றீங்களா?".

பத்மாவதி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. "அவர் உயிரோட இருக்கார்னு சொல்லி பாலை வார்த்திட்டிங்க. எப்படிங்க தெரியும்.அவரை எப்போ பார்ப்போம்.

"


ஷிவானி, பிரமை பிடித்தது போல் இருந்தாள்.

"அப்பா என்னப்பா சொல்றீங்க. அவர் யாருப்பா."

வீர ராஜு சொல்ல தொடங்கினார்.

"He is Ramanujam Niranjan Raghav.

IPS officer 2004 batch from Sardar Vallabai Patel National Police Academy, Hyderabad.
ஆனால் அவரை போலிஸ் வட்டாரங்களில் நிப்பு (நெருப்பு)நிரஞ்சன் அப்படின்னு தான் கூப்பிடுவாங்க"

"அப்பா ஒண்ணும் புரியலைப்பா. கொஞ்சம் விபரமா சொல்லுங்க."

"அவர் பிறந்த ஊர் தஞ்சாவூர். அப்பா பேரு ராமானுஜம். அம்மா பேரு லலிதாம்பிகை. 

ஒரு அக்கா கீதா. கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். பார்ப்பது டாக்டர் உத்தியோகம். அமெரிக்காவில.

நிரஞ்சன் ராகவ். 

பி ஏ சரபோஜி மன்னர் கல்லூரி. 

எம் ஏ படிச்சது டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ். 

ஐ ஏ எஸ் ரேங்க் ஒன்பது. 

ஆனால் ஐ பி எஸ் ஆக விருப்பம்.

அவரை பத்தி நம்ம எல்லோருக்கும் தெரியணும்னா ஒன்பது வருஷம் முன்னால போகணும்."



No comments:

Post a Comment