Thursday, October 29, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 8

"இல்லை வீர ராஜு. யோசிக்காதிங்க. இந்த ட்ரான்ஸ்பர் நான் போராடி வாங்கினது. விட்டா திரும்ப கிடைக்காது."

"சாரி சார். நீங்க என்ன தான் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்."

'தன் மீது இந்த அளவுக்கு பாசம் வைத்து இருக்கும் வீர ராஜுக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்' என்று கலங்கினான் நிரஞ்சன்.

"வீர ராஜு, நான் சொல்றதை கேக்குறீங்களா."

"சொல்லுங்க சார்."

"எனக்கு ஒண்ணும் பிரச்சனை வராது. அப்படியே வந்தா உங்களுக்கு தெரிய படுத்துறேன்.

நீங்க உடனே கிளம்பி வரலாம்.இல்லைனா, நீங்க என்னோட கட்டளையை மீறுணீங்கன்னு உங்க மேல குற்றம் சுமத்தி விஜயவாடா ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டி இருக்கும்.
"

நிரஞ்சன் முகம் கடுமையாக, வீர ராஜு அமைதியாக பார்த்து விட்டு, "பரவாயில்லை சார். நீங்க சொல்றதால நான் கிளம்புறேன். ஆனால் ஏதாவது பிரச்சனை வந்தா, முதல் ஆளா உங்களுக்கு தோள் கொடுக்க நான் இருப்பேன் மறக்காதிங்க."


இடை மறித்தாள் ஷிவானி.

"அப்பா நீங்க ட்ரான்ஸ்பர் ஆகி வந்துட்டிங்களா."

"ஆமாம்மா நான் வந்தது, பிப்ரவரி 23 தேதி. "

"தினமும் நான் நிப்புகிட்ட பேசி கொண்டு இருப்பேன். ராமையாயை நெருங்கி விட்டதாகவும் சீக்கிரம் நமது பிடியில் மாட்டி விடுவான் என்றும் நிப்பு சொன்னார். இருபத்தி எட்டாம் தேதி இரவு நான் பயந்த அந்த விஷயம் நடந்து விட்டது."

"என்னப்பா ஆச்சு.நிரஞ்சன் போன் பண்ணினாரா."

"போன் வந்துச்சு. ஆனால் கூப்பிட்டது அண்ணாமலை."


"சொல்லுங்க அண்ணாமலைசார்."

"வீர ராஜு, நம்ம நிப்பு அம்மா அப்பாவை ராமையா ஆட்கள் கடத்தி விட்டார்கள்.நிப்புவை தனியே அந்த மேடாரம் - தடாவி காட்டு பகுதிக்கு வர சொல்லி இருக்காங்க. அவனுக்கு அந்த அளவுக்கு பரிட்சயம் இல்லாத காட்டு பகுதின்னு சொல்லி, உங்க கிட்ட தெரிவிக்க சொன்னேன். முடியாதுன்னு சொல்லிட்டான். ஆனால் எனக்கு மனசு கேட்கலை. அதனால தான் கூப்பிட்டேன்."

வீர ராஜு கண்கள் சிவந்தன. 
"ராமையா, நிப்புவோட அம்மா அப்பாவை கடத்திட்டானா. இதோ நான் உடனே கிளம்பி வரேன்."

தனது ஜீப்பை விரட்டி கொண்டு செல்ல,அடுத்த நாலாவது மணி நேரத்தில், இரவு ஒரு மணி அளவில் வீர ராஜு காட்டு பகுதியை அடைந்தார்.மெல்ல தன்னை மரத்தின் பின்னால் மறைத்து கொண்டு பார்த்த போது, அவர் கண்ணில் தெரிந்த காட்சி ரத்தத்தை கொதிக்க வைத்தது.

"டேய் நிப்பு நீ என்ன முட்டாளா, இப்படி தனியா வந்து மாட்டிகிட்டியே.உன்னோட அம்மா அப்பான்னா உனக்கு உசிரு போல இருக்கு. இங்கதாண்டா நீ கவுந்துட்ட."

"ராமையா. எதுக்கு வெட்டியா பேசுற. நீ ஆம்பளைனா என்னை அவுத்து விடு. அப்புறம் நான் யாருன்னு காட்டுறேன்."

இங்கே பாருடா, ஓங்கி சிரித்தான் ராமையா. "டேய் நிப்பு, ஏற்கனவே உன்னோட டி ஜி பி கிட்ட பேசியாச்சு. உங்க மூணு பேரையும் ரிலீஸ் பண்ண, எங்க தலைவர் கேஷவ் ராவ், லக்ஷ்மி, தளபதி முகேஷ் மூணு பேரையும் ரிலீஸ் பண்ண ஒத்துகிட்டான்."

மரத்தில் கட்டப்பட்டு இருந்த நிரஞ்சன் திமிறி கொண்டே, "டேய் பொட்டை பைய்யண்டா நீ. போலிஸ் கூட நேரடியா மோத முடியாத நீயெல்லாம் ஒரு ஆளு. தூ" என்று துப்ப, அருகில் இருந்தவன் துப்பாக்கியின் முனையை வைத்து வயிற்றில் குத்தினான்.

உடல் முழுக்க அடிபட்ட காயம் இருந்தாலும் அந்த இரவில் கொதிக்கும் நெருப்பாய் தெரிந்தான் நிரஞ்சன்.

வீர ராஜு, தனது போனை எடுத்து டி ஜி பி போனை அடித்து விபரம் சொல்ல, அவரும் விஷயத்தை கேட்டுவிட்டு 'அண்ணாமலை தலைமையில் 100 பேர் அனுப்பி வைத்து இருப்பதாக சொன்னார்'. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் காட்டுக்குள் ஊடுருவி விடுவார்கள் என்று சொல்ல, ஓகே சார் என்று சொல்லி வீர ராஜு போனை வைத்தார்.

அருகில் ஓடி வந்த ஒருவன் ஏதோ ராமையா காதில் சொல்ல, முகம் மலர்ந்தான்.


"டேய் நம்ம தலைவர் கேஷவ்ஜி வந்தாச்சு"

தொடர்ந்து கேஷவ் வர, "அண்ணா வந்தனம்" என்று சொல்ல, கேஷவ் 'ம்ம்' சொல்லி விட்டு, "எங்களை தொடர்ந்து போலிஸ் வருது. இந்த இடத்தை முதலில் காலி செய்யுங்க. சீக்கிரம்" என்று சொல்லி விட்டு நிரஞ்சனை பார்த்து "டேய் இவன் இங்கேதான் இருக்கானா. இவனையும் கூட்டிட்டு வாங்க. உபயோகமா இருப்பான்" என்று கிண்டலாக சொல்லி விட்டு உரக்க சிரித்தான்.

சுற்றி இருந்த இருநூறு பேர் அவசரமாக கிளம்பினர்.அனைவரும் பலகுழுவாக பிரிந்து செல்ல, நிரஞ்சன், அவன் அம்மா, அப்பாவுடன் இருபது பேர் கொண்ட ஒரு குழு கடைசியாக இழுத்து செல்வது என்று முடிவு செய்து புறப்பட்டனர்.

அந்த குழப்பத்தில், மெதுவாக நழுவிய வீர ராஜு நிரஞ்சன் இருந்த மரத்தின் அருகில் வந்து ஒளிந்து நின்று அவன் கட்டை அவிழ்த்து விட, அதை கண்ட நக்சலைட் குழுவில் இருந்த ஒருவன் கூச்சல் போட்டான்.

தன் கட்டை அவிழ்த்த உடன் தனது இரண்டு கைகளையும் தனது ஷூவுக்கு அருகில் இறக்கி சாக்ஸ்ஸுக்குல் சொருகி இருந்த இரண்டு துப்பாக்கிகளை எடுத்தான்.முதல் இரண்டு குண்டுகள் அப்பா, அம்மாவை கட்டி வைத்து இருந்த கயிற்றை விடுவிக்க, எதிரிகளின் மீது சராமாரியா சுட்டான். பத்து குண்டுகள் காலி ஆக, பலர் கீழே விழுந்தனர். 

அதற்குள் முன்னால் ஓடி கொண்டு இருந்த ராமையா சத்தம் கேட்டு திரும்பி கோபமாகி தனது துப்பாக்கியை தூக்கி சுட, ஒரு குண்டு அப்பா நெஞ்சில் பாய, அடுத்தது அம்மாவின் கழுத்தில். 

"அம்மா, அப்பா" என்று தன்னை மறந்து நிரஞ்சன் கத்த, அதற்குள் ராமையா கரத்தில் இருந்த துப்பாக்கி மூன்றாவது குண்டை உமிழ்ந்தது.

அந்த குண்டு வீர ராஜுவை குறி வைத்து பாய, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நிரஞ்சன் சுதாரித்து கொண்டு ஓடி சென்று வீர ராஜுவை தள்ள, அந்த குண்டு நிரஞ்சன் காலை பதம் பார்த்தது.

பின்னால் வந்த போலிஸ் கூட்டம் கண்டு கேஷவ் ராவின் கூட்டம் முன்னே வேகமாக முன்னேற, பின்னால் வந்த அண்ணாமலை ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமானுஜம், லலிதாம்பிகை பிணத்தை பார்த்து அதிர்ச்சியில் நிற்க, நிரஞ்சன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. 
"அப்பா, அம்மா" என்று அவர்கள் இருவரின் உடலை தடவி கொண்டு அவன் அரற்ற, அருகில் தன் உயிர் காப்பாற்றப்பட்ட அதிர்ச்சியில் இருந்த வீர ராஜு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தார்.

பின்னால் வந்த போலிஸ் கூட்டத்தில், மூன்று குழுவாக பிரிந்து தேட சொல்லி விட்டு அண்ணாமலை கண்கள் கலங்க நிரஞ்சன் தோளில் கை வைத்தான்.




"அண்ணாமலை, இவங்க என்னடா தப்பு பண்ணினாங்க. இப்படி கொன்னுட்டாங்களே", கதறி அழுதான் நிரஞ்சன். எப்படி ஆறுதல் சொல்வது என்று அறியாமல் வீர ராஜு, அண்ணாமலை இருவரும் உறைந்து போயினர்.

அதற்குள் மீதம் இருந்த பத்து போலிஸ் அதிகாரிகள் அந்த இரண்டு பிணங்களை எடுத்து கொண்டு முன்னே செல்ல, அவர்களுடன் அண்ணாமலை விரைந்து சென்றான்.

பின்னாலே, நிரஞ்சன் குண்டு பாய்ந்த அந்த காலை மெதுவாக வைத்து நகர, வீர ராஜு தோள் கொடுத்து தூக்கி கொண்டு வந்தார். 

ஐநூறு மீட்டர் முன்னே நடந்து சென்ற போலிஸ் கூட்டத்தில் இருந்து திடீர் அலறல். புகை மண்டலமாய் தெரிய, பதட்டமானான் நிரஞ்சன். 
"வீர ராஜு உங்க தோளை பிடிச்சு வேகமா நடந்து வரேன். சீக்கிரம் போகலாம்" என்று ஒற்றை காலில் கெந்தியவாறு வேகமாய் வர, அவனோட வீர ராஜுவும் அங்கே சென்றார்.
அந்த இடத்தை பார்த்த இருவர் கண்களும் கோபத்தில் விரிந்தன. 

நிரஞ்சன் உதடுகள் முணுமுணுத்தன. 'கண்ணி வெடி வைத்து இருக்கிறார்கள்'

இருநூறு மீட்டர் அளவில் பிணங்கள் சிதறி கிடக்க, தலையில் கை வைத்து உட்கார்ந்தான்.
"என்ன சார் இது. இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்க.ஒரு இருவது பேராவது செத்து இருப்பாங்க"

கொஞ்ச தூரத்தில் இன்னுமொரு குண்டு வெடிப்பு கேட்க இன்னும் நிறைய பேர் செத்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று உணர்ந்தார் வீர ராஜு. 
'இப்போதைக்கு நிரஞ்சனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும். என்ன சொல்லலாம்'.

"சார், இப்படி போனால் தூரமாக இருக்கும். அது மட்டும் இல்லை கண்ணி வெடி கூட இருக்கலாம். வாங்க நாம வேற வழியா போகலாம்."

நிரஞ்சனை திருப்பி விட,அவர்கள் மங்காபெட் வந்தபோது விடிகாலை 4 மணி. 

கிராம வாசலில் இருந்த அந்த குடிசையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.


"வீர ராஜு ஏதோ வேற இடத்துக்கு வந்துட்டோம்னு நினைக்கிறேன்."

"சார், முதல்ல உங்க காலில் இருக்கிற குண்டை எடுக்க வேண்டும்.அதுக்கு அப்புறம் நாம சிந்திக்கலாம்."

தனது பேண்டில் இருந்த பேனா கத்தியை எடுத்து காலில் இருந்த குண்டை அகற்றினான் நிரஞ்சன். 

வலியை பொறுத்து கொண்டு, தனது கர்சீப் எடுத்து ரத்தம் பொங்காமல் இறுக்கமாக கட்டிகொண்டான்.

"சரி, வீர ராஜு நாம போகலாம்."

"சார், நான் சொன்னா கேளுங்க சார். அவங்க வெறி புடிச்சவங்க. உங்களை கண்டா விட மாட்டாங்க. உங்களால இதுக்கு மேல ஓடி ஒழிய முடியாது. இப்பவே மாலை ஆறு மணி ஆச்சு. இன்னைக்கு ராத்திரி மட்டும் இங்கே ஒளிஞ்சு இருந்தா, நாளைக்கு காலைல எப்படியும் இந்த வழியா பத்ராசலம் போற பஸ் இல்லை லாரில உங்களை ஏத்தி விடுவேன். அங்கே இருந்து நீங்க மும்பை போய்டுங்க."

"முடியாது வீரராஜு.என்னால இதுக்கு மேல முடியாது. நான் அவங்களை எதுத்து நின்னு ஒரு பத்து பேரையாவது கொன்னுட்டு தான் உயிரை விடுவேன். என் நாட்டுக்காக உயிர் விடுறதில எனக்கு சந்தோஷம் தான்."

வீர ராஜு கண்களில் கண்ணீர். இந்த அளவுக்கு நாட்டு பற்றும, வீரமும் உள்ள ஒரு உயர் அதிகாரி கண் முன்னே காயப்பட்டு இருப்பது அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

"சார், சொன்னா கேளுங்க. அவங்க எல்லாரும் ரொம்ப ஆபத்தானவங்க. இந்த நேரத்தில வீரமா யோசிக்கிறதை விட, விவேகமா யோசிக்கணும். உங்க குடும்பத்தை கூண்டோட அழிச்ச அவங்களுக்கு உங்களை பிடிச்சு கொல்றது அந்த அளவுக்கு கஷ்டம் இல்லை.அது மட்டும் இல்லை அவங்களை நீங்க தண்டிக்க வேண்டாமா. தயவு செஞ்சு இப்போதைக்கு இங்கே இருந்து கிளம்பி போங்க. சந்தர்ப்பம் வரும். அப்போ நீங்க திரும்பி வந்து அவங்களை களை எடுக்கலாம். ப்ளீஸ்."

"நீங்க சொல்றது சரியான யோசனை வீர ராஜு. முதல்ல என்னை இவங்க கிட்ட இருந்து காப்பத்திக்கிறேன். இப்போதைக்கு போறேன்.ஆனா திரும்ப வருவேன் இந்த காட்டையே கொளுத்தி அந்த அசுரர்களை ஒழிப்பேன்".


வீர ராஜு தொடர ஷிவானி கவனமாக கேட்டு கொண்டு இருந்தாள்.

"தொடர்ந்து போலிஸ் வர, PWG குழுவை சேர்ந்தஅவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். அடுத்த சில நாட்களில் நானும் விஜயவாடா வந்துட்டேன்."

"நிப்பு கிட்டே இருந்து போன் வரும்னு எதிர் பார்த்தேன் வரலை."

"டி ஜி பி கிட்ட கேட்டேன். அவர் 'நிப்பு இறந்துட்டார்னு செய்தி கொடுத்து இருக்கேன். ஆனால் நிப்பு உயிரோட தான் இருக்கார். இதை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்' அப்படின்னு சொன்னார்."

"அப்பா அண்ணாமலை என்ன ஆனார்.?"

"அவரும் அந்த கண்ணி வெடியில் சிக்கி உயிர் விட்டார். நிப்பு அப்பா, அம்மா உடலும் சிக்கி அடையாளம் தெரியாமல் போய் விட்டது."

"அப்போ காணாமல் போன நிப்புவை பத்தி இப்போதான் நீ சொல்லி கேட்குறேன்." என்றார் வீர ராஜு.



"அப்பா அவர் பத்தி நீங்க சொன்னதை கேட்டு எனக்கு மெய் சிலிர்க்குது."

"அப்பா அவர் எதுக்கு சென்னைக்கு வந்தார். ப்ரொபசரா வேலை பார்த்தார். அப்புறம் திடீர்னு காணாமல் போய்ட்டார்." என்றாள் ஷிவானி.

"அம்மா அவர் என்ன செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்."

"நீ கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்ல கூடியவர் அவர் மட்டும் தான். அவரா கூப்பிடும் வரை நாம காத்து இருக்க வேண்டியது தான்"



No comments:

Post a Comment