Thursday, October 8, 2015

மைதிலி - அத்தியாயம் - 7



அடுத்த வாரம் மைதிலி அமுதாவுடன் என் வீட்டுக்கு வந்தாள். எதுவும் நடக்காதது போல் கல கலப்பாக பேசினாள்.

நான், "என்ன உன் மாமியார் ஊருக்கு போயிட்டாங்களா?"

மைதிலி, "ம்ம்ம் .. அடுத்த நாளே"

நான், "மைதிலி, அவங்க சொன்ன மாதிரி ..." என்று நான் தொடங்கி முடிப்பதற்கு முன் ...

மைதிலி, "முரளி, அவங்க அப்படிப் பேசினதுக்கு நான் அப்படி பதில் சொன்னேன். தயவு செஞ்சு அதை நம்பிட்டு காத்துட்டு இருக்காதீங்க. நான் டைவர்ஸ் பண்ணினா எங்க அப்பா ரொம்ப கஷ்டப் படுவார். இன்னும் கல்யாணம் ஆகாம ப்ரேமா இருக்கா. இது எல்லாத்தையும் விட நான் உங்களுக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவ முரளி. நீங்க இப்ப இருக்கற நிலைமைக்கு ஒரு விவாகரத்து வாங்கினவளை கல்யாணம் பண்ணிட்டா ஊர் உலகம் என்ன சொல்லும்?"

நான், "ஊர் உலகத்தைப் பத்தி நான் எப்பவும் கவலைப் பட்டது இல்லை. நீ மட்டும் சரின்னு சொல்லு"

மாட்டேன் என்ற தலையாட்டலே அவளிடம் இருந்து பதிலாக வந்தது.

அவர்கள் வந்தது முதல் அதுவரை மைசூர் பார்க்காததால் நான் மைதிலியின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு மைசூர் மற்றும் பிருந்தாவன் கார்டன் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தேன். முதலில் ஒப்புதல் அளித்த சிவராமன் ஒரு நாளுக்கு முன்பு தனக்கு வேலை இருப்பதாகக் கூறி மைதிலியை அழைத்துச் செல்லும்படி சொன்னான்.



மைசூரில் அரண்மணை, zoo, சாமுண்டி கோவில் எல்லாம் பார்த்த பிறகு லலித் மஹால் பேலஸ் ஹோட்டலை அடைந்தோம். முதலில் இரு அறைகள் எடுத்து இருந்தேன். மைதிலியே வற்புறுத்தி ஒன்றை கேன்ஸல் செய்யச் சொன்னாள்.

மூவரும் ஒரே அறையில் தங்கினோம். இருப்பினும் என் விரல்கூட அவள் மேல் படவில்லை. அவளும் என்னிடம் எந்த விதமான நெருக்கத்தையும் காட்டவில்லை. ஆழ்ந்த அன்பும், பாசமும் மட்டுமே எங்கள் இருவரின் இடையே இருந்த உறவில் இருந்தது. ஒரு விதத்தில் இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

ஒரு மாதத்துக்கு பிறகு நான் மலேசியாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. அடுத்த மூன்று வாரங்கள் குழந்தையைப் பார்க்கப் போவதில்லை என்றதால் அந்த வெள்ளிக் கிழமை மாலை நான் மைதிலியின் வீட்டுக்குச் சென்றேன்.

நான் வருவதாகச் சொன்னதால் மைதிலி அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்து இருந்தாள்.

நான், "அமுதா எங்கே?"

மைதிலி, "டே கேரில் தூங்கிட்டு இருந்தா. அப்படியே தூக்கிட்டு வந்து இங்கே படுக்க வெச்சுட்டேன். இன்னும் தூங்கிட்டுத் தான் இருக்கா. கொஞ்சம் இருங்க காஃபி கொடுக்கறேன். நாம் பேசிட்டு இருக்கறதுக்குள்ள இன்னும் அரை மணி நேரத்தில் முழிச்சுக்குவா"

மைதிலி காஃபி போட கிச்சனுக்குச் சென்றபோது நான் அமுதா படுத்து இருந்த அறைக்குச் சென்றேன். ஒரு சற்றே பெரிய படுக்கையில் ஒரு பக்கம் அவள் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தாள். நிர்மலமான அவள் முகத்தைப் பார்த்தபடி அவள் அருகே நான் அமர்ந்து இருந்தேன். எதேட்சையாக என் கை அருகில் இருந்த தலையணைக்கு அடியில் செல்ல எதோ தட்டுப் பட்டது. தலையணையை எடுத்துப் பார்த்தால். அடியில் ஒரு பெரிய கத்தி. சுற்று முற்றும் அறையை நோட்டம் விட்டேன். ஒரு மூலையில் ஒரு மண் எண்ணை கேன் அதன் மேல் ஒரு லைட்டர். இவையெல்லாம் அங்கு இருப்பது எனக்குள் ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. மைதிலி காஃபியுடன் வந்தாள். ஏதும் பேசி குழந்தையின் தூக்கத்தைக் கலைக்காமல் மௌன மொழியில் அவைகளைக் காட்டி 'என்ன?' என்றேன். பதிலேதும் சொல்லாமல் அவள் ஹாலுக்குச் செல்ல நான் பின் தொடர்ந்தேன்.

ஹாலில் சோஃபாவில் அமர்ந்தவனின் அருகே அமர்ந்தாள்.

மைதிலி, "அதெல்லாம் என் தற்காப்புக்கு" அவள் முகம் இறுகி இருந்தது.

நான், "யார்கிட்ட இருந்து?"

மைதிலி, "ஷண்முகம். அப்பறம் அவன் கூட சேந்துட்டு என்னை வற்புறுத்தற என் புருஷன்கிட்ட இருந்தும்"

நான், "முன்னே மாதிரி ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொன்னே?"

மைதிலி, "பிரச்சனை இருக்கு. ஆனா எனக்கு சமாளிக்க தைரியம் வந்து இருக்குன்னு சொன்னேன்"

நான், "இது தான் சமாளிக்கறதா?"

மைதிலி, "வேற வழி? என்னைக்காவுது கொலை செஞ்சுட்டேன்னு என்னை ஜெயிலில் போட்டாலோ, இல்லை நான் தற்கொலை செஞ்சுட்டு செத்துட்டாலோ என் பொண்ணை நல்லா பாத்துக்குங்க" என்றபடி கண் கலங்கினாள்.

நான், "ஷண்முகம் மெட்ராஸில் இல்லை இருக்கான்?"

மைதிலி, "அடிக்கடி இங்கே வருவான். அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேந்து குடிப்பாங்க. அவன் குடிக்கறானோ இல்லையோ என் வீட்டுக் காரருக்கு நிறைய ஊத்திக் கொடுக்கறான்னு நினைக்கறேன். இன்னைக்குக்கூட வந்து இருக்கான். இன்னைக்கு ராத்திரி அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்ததும் நான் அந்த ரூமுக்குப் போய் கதவை சாத்திட்டு படுத்துக்குவேன். வெளியில் நின்னு ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் எதாவுது சாக்கு சொல்லி கூப்பிடுவாங்க. நான் வெளியில் வரமாட்டேன். அப்பறம் போய் விழுந்துடுவாங்க. ரேப் பண்ணற அளவுக்கு எல்லாம் அவனுக்கு தைரியம் இல்லை"

செய்வதறியாது நான் மலைத்தேன்.

அடுத்த நாள் சென்னையில் வசியின் வீட்டில் காலை உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது வசிக்கு தொலைபேசி அழைப்பு என்று சத்யா சொல்ல வசி பேச எழுந்து சென்றாள்.

சற்று நேரத்துக்கு பிறகு பேயறைந்த முகத்துடன் வந்த வசி "மைதிலியோட புருஷனும் அவரோட அண்ணனும் நைட்டு பைக்கில் வந்துட்டு இருக்கும்போது ஆக்ஸிடண்ட் ஆகி இருக்கு. ரெண்டு பேருக்கும் ஸ்பாட்டிலயே உயிர் போயிருக்கு" என்றாள்.


1987

நாங்கள் ஹானலூலுவில் இருக்கும்போது சாம் ஸ்ப்ரிங்க்கர் மாரடைப்பால் அகால மரணமடைந்து இருந்தார்.

தன் சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி மேகன் ஸ்ப்ரிங்க்கரின் பொறுப்புக்குச் சென்றாலும் கம்பெனி நிர்வாகத்தில் அதுவரை அவர் கலந்து கொண்டு இருக்கவில்லை. சாம் ஸ்ப்ரிங்க்கர் இருந்தவரை அவரே சேர்மன் மற்றும் ஸி.இ.ஓ (Chief Executive Officer) ஆகிய இரு பதவிகளையும் வகித்து இருந்தார். சேர்மன் பதவியில் இருப்பவருக்கே நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகள் அனைத்தும் எடுக்கும் அதிகாரம் உண்டு. மேலும் முக்கியமான முடிவுகளுக்கு அவர் கம்பெனியின் பங்குதாரர்களின் பிரதிநிதிகளான டைரக்டர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். எது முக்கியம் எது முக்கியம் இல்லை என்பது பல சமயங்களில் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப் பட்ட முடிவுகளின் பின் விளைவுகளுக்குப் பிறகு காரசாரமாக விவாதிப்பது உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சாபக்கேடு. நாளுக்கு நாள் கம்பெனியை நடத்துவதும் அதற்கான முடிவுகளை எடுப்பதும் ஸி.இ.ஓ பதவியில் இருப்பவரின் பொறுப்பு. இந்த இரு பதவிகளையும் மேகன் ஸ்ப்ரிங்க்கரின் ஒப்புதலுடன் எரிக் ஏற்றான்.

நிறுவனத்தில் எல்லாத் துறைகளைக்கும் திறமை வாய்ந்த மேனேஜர்கள் இருந்ததால் அவனால் அந்த இரு பதவிகளின் பொறுப்புகளையும் செவ்வனே செய்ய இயலும் என்றும் சில மாதங்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்வது என்றும் டைரக்டர்களில் பெரும்பான்மையானோர் முடிவெடுத்தனர். எனக்கும் பங்கு இருந்ததால் நானும் ஒரு டைரக்டராக அந்த முடிவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு எரிக் கம்பெனியின் மேனேஜர்கள் மற்றும் டைரக்டர்களை மனைவியருடன் அழைத்து ஒரு பார்ட்டி கொடுத்தான்.

பார்ட்டி முடிந்து வந்து கொண்டு இருக்கும்போது ...

நான், "என்ன எலிஸபெத் உன் கூட ரொம்ப நேரம் தனியா பேசிட்டு இருந்தா?"

குறும்புப் பார்வை பார்த்த மைதிலி, "ஏன் எரிக் உங்க கூட பேசலையா?"

நான், "ம்ம்ம் .. முதல்ல பிஸினஸ்ஸைப் பத்தி கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தான். அப்பறம் தனக்கு அதிகமா தெரியாதுங்கறதை மறைக்க கார்களைப் பத்தி பேச ஆரம்பிச்சான். ஒரு மேனேஜர் பல வருஷம் டெட்ராய்ட்டில் இருந்தவர், அவருக்கு அவனைவிட கார்களைப் பத்தி ரொம்ப தெரிஞ்சு இருந்துது. உடனே மோட்டர் போட், யாட் பத்தி பேச ஆரம்பிச்சான். ஒரு டைரக்டர் தான் தனியா அவரோட யாட் (Yatch) இல் இங்கே இருந்து ஹவாய் வரைக்கும் போயிருக்கறதைச் சொன்னதும் மறுபடி பேச்சை மாத்தினான் .. கடைசியா சான் டியேகோவில் இருக்கும் ரெஸ்டாரண்ட்களைப் பத்தி பேச ஆரம்பிச்சான். எல்லாரும் அவன் பேச்சுக்கு தலையாட்டிட்டு இருந்தோம்"

வாய்விட்டு கல கல வென சிரித்தவள், "பட் திஸ் இஸ் ஸீரியஸ்" என்று எப்போதும் என் கவனத்தைப் பெறுவதற்கு செய்வது போல் என் தோளைத் தட்டி சீட் பெல்டை இழுத்துக் கொண்டு என் மேல் தலை சாய்த்தாள்.

நான், "என்ன?"

மைதிலி, "இன்னைக்கு எலிஸபெத் என் கிட்ட என்ன கேட்டா தெரியுமா?"

நான், "ஏய், சும்மா சொல்லு புதிர் போடாதே"

மைதிலி, "சே, எவ்வளவு முக்கியமான மாட்டர் கொஞ்சம் பில்ட் அப் கொடுக்க விடுங்கப்பா"

நான், "சரி சொல்லு"

மைதிலி, "சும்மா பேசிட்டு இருந்தோம். முதல்ல அவளோட பையனை ப்ரைவேட் ஸ்கூலில் சேர்த்து இருக்கறதைப் பத்திக் கொஞ்சம் பெருமை அடிச்சா"

நான், "ம்ம்ம் .. "

மைதிலி, "அப்பறமா திடீர்ன்னு 'ஹவ் ஈஸ் யுவர் செக்ஸ் லைஃப்' அப்படீன்னா"

அந்த உரையாடல் எங்கு செல்கிறது என்று யூகித்தவாறு நான், "ம்ம்ம் .. அப்பறம்?"

மைதிலி, "செக்ஸ்ன்னு உடனே அய்யாவுக்கு வர்ற ஆர்வத்தைப் பாரு"

நான், "ஏன் நீங்க பெரிய சாமியாரம்மாவாக்கும்? முந்தாநாள் நைட்டு .. " என்று நான் தொடங்குமுன் என் வாயைப் பொத்தி வெட்கத்தில் முகம் சிவந்து சிணுங்கினாள். தொடர்ந்த நான், "சரி மேல சொல்லு .. "

மைதிலி, "சோ, அவ அப்படி கேட்டாளா? நான் ரொம்ப ஆர்வம் காமிச்சுக்காம 'வெல் .. ' அப்படின்னு கொஞ்ச இழுத்து 'இட் இஸ் ஓ.கே' அப்படின்னேன். உடனே அவ 'ஐ நோ .. கொஞ்சம் போரடிச்சு இருக்கும் .. அதான் எரிக் கொஞ்சம் மாற்றம் இருக்கணும்ன்னு சொன்னான்' அப்படின்னா"

நான், "என்ன மாற்றமாம்?"

மைதிலி, "சொல்றேன். நானும் ரொம்ப சீரியஸா 'என்ன சொல்லறே புரியலை' அப்படின்னேன். உடனே அவ 'செக்ஸில் எதாவுது மாற்றம் இருக்கணும். இல்லைன்னா ரொம்ப போரடுச்சுப் போயிடும்' அப்படின்னா. நான் 'என்ன மாற்றம்? You mean trying different ways (வெவ்வேற மாதிரி செய்யறதை சொல்லறயா)' அப்படின்னேன். அதுக்கு அவ, 'Yes, but also with different person (ஆமா ஆன வேற ஒருத்தர் கூடவும்)' அப்படின்னா. உடனே என்னையறியாம காரித் துப்பாத குறையா 'சீ' அப்படின்னுட்டேன்"




நான், "அதுக்கு அவ என்ன சொன்னா. அதோட நிறுத்திட்டாளா?"

மைதிலி, "ம்ம்ம்? எங்கே நிறுத்தினா? 'என்ன அப்படி ரியாக்ட் பண்ணறே? முரளி உனக்கு ரெண்டாவது கணவன் தானே? ஏற்கனவே ரெண்டு பேர்கிட்ட உனக்கு செக்ஸ் அனுபவம் இருக்கு' அப்படின்னா. பேசாம இருந்தேன். அவளே அப்பறம், 'எரிக்கும் நானும் ஸ்விங்க் பண்ணறதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்கோம்' அப்படின்னா. எனக்கு உடனே ஸ்ட்ரைக் ஆகலை"

வாய்விட்டு சிரித்த நான், "நீ ஊஞ்சல் ஆடறதுன்னு நினைச்சயாக்கும்?"

மைதிலி, "போதும் சார் ரொம்ப காலை வாராதீங்க .. "

நான், "ஏய், நான் சும்மா சொன்னேன்டா"

மைதிலி, "தெரியும்பா .. சரி மேல சொல்லறேன். அவ அப்படி சொன்னதுக்கு, 'பண்ணுங்களேன். என்ன பிரச்சனை?' அப்படின்னேன். அதுக்கு, 'உங்க ரெண்டு பேர் கூட பண்ணலாம்ன்னு இருக்கோம்' அப்படின்னா' முதல்லயே எதுக்கு அடிப் போடறான்னு கொஞ்சம் கெஸ் பண்ணி இருந்தாலும் எனக்கு அவ அப்படிக் கேட்டதும் கொஞ்சம் எறிச்சல் வந்துருச்சு. மூஞ்சியில் அடிச்ச மாதிரி. 'உனக்கு இன்னும் என் ஹஸ்பண்ட் மேல ஆசையா' அப்படின்னேன்"

நான், "நிச்சயம் அவளுக்கு கோவம் வந்து இருக்காது. நான் சொன்னது கரெக்டா?"

மைதிலி, "ஆமாம்பா ... ரொம்ப சாதாரணமா .. நிச்சயமா இருக்கு அப்படின்னா. அப்பறம் நீங்க ரொம்ப நல்லா செய்வீங்க அப்படின்னா. நான் சும்மா இருக்காம, 'ஏன், எரிக்க நல்லா செய்ய மாட்டானா' அப்படின்னேன்"

நான், "மை காட்! யாரோ கல்யாணத்தப்போ அந்த மாதிரி ட்ரெஸ் பண்ண மாட்டேன். அதைப் பண்ண மாட்டே இதைப் பண்ண மாட்டேன் அப்படின்னு எல்லாம் டயலாக் விட்டாங்க. இப்ப செக்ஸைப் பத்தி பார்ட்டியில் டிஸ்க்ஸ் பண்ணறாங்க" என்று கிண்டலடிக்க மைதிலியின் முகம் சிறுத்தது .. உடனே நான் பேச்சை மாற்றுவதற்காக, "ஏய், ஏய் ... சாரி. சும்மா நான் ஜாலிக்கு சொன்னேன். அப்பறம் அவ என்ன சொன்னா சொல்லு"

மைதிலி, "ஏன், உங்களுக்கு இன்னும் அவ மேல இன்டரெஸ்ட் இருக்குதாக்கும்?"

நான், "நான் ஒரு தடவை சாரின்னு சொல்லியாச்சு. நீ மேல சொல்லு"

மைதிலி, "சரி. சொல்லறேன். நான் கேட்டதுக்கு 'அப்படி இல்லை. நான் முதல்ல சொன்ன மாதிரி இவ்வளவு வருஷத்துக்கு அப்பறம் எங்க செக்ஸ் லைஃப் கொஞ்சம் போரடிக்குது. அதனால் கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கோம்' அப்படின்னா. அதுக்கு அப்பறம் எரிக் அப்படியாக்கும், எரிக் இப்படியாக்கும்ன்னு ரொம்பவே அவனை விக்கறதுக்கு ஆரம்பிச்சுட்டா. நைட்டு முழுக்க அவ இன்னும் கொடுன்னு கெஞ்சற அளவுக்கு ரொம்ப நல்லா செய்வான்னு விடாம சொல்லிட்டே இருந்தா. ரொம்பவே போரடிச்சுது. நான் அலுங்காம கழுண்டுக்கப் பாத்தேன். கடைசியா. 'வாட் டு யூ திங்க்?' அப்படின்னா. நான் உங்ககிட்ட பேசிட்டு சொல்லறேன்னு சொன்னதுக்கு இந்நேரம் எரிக் உங்ககிட்ட பேசி இருப்பான் அப்படின்னா. அதான் நீங்க என்ன பேசினீங்கன்னு கேட்டேன்"

நான், "எரிக் என் கிட்ட அந்த மாதிரி எல்லார் முன்னாடியும் பேச மாட்டான். நீ வேணும்ன்னா பாரு இன்னும் ஒண்ணு ரெண்டு நாளில் கால்ஃப் விளையாடக் கூப்பிடுவான் பாத்துட்டே இரு"

இருவரும் சிரித்தபடி வீட்டை அடைந்தோம். இரவு படுக்குமுன் அவளிடம், "என்னைக் கிண்டலடிச்சியே? உனக்கு இன்டரெஸ்ட் இருக்குதாக்கும்"

மைதிலி அதற்கு நக்கலாக, "ஆமா, எனக்கு இங்க பத்தவே மாட்டேங்குது. இன்னும் அவன்கிட்ட இருந்தும் வேணும்" என்றாள். அதுமட்டும் இல்லாமல் அன்று இன்னொரு காரியமும் செய்தாள்.

ஒரே இரவில், அதுவும் வார நாட்களில் இரண்டாம் முறை சேர்க்கையில் ஈடு படுவது சற்று அரிதானது. பல முறை நான் தொடங்கிவைத்து முடிக்க முடியாமல் அவளிடம் மன்னிப்புக் கேட்டது உண்டு. அப்போதெல்லாம், 'சொன்னா கேக்கணும். நாளைக்கு பண்ணினா ஆச்சு. ஏன் அப்படி? நான் எங்கே ஓடியா போயிடறேன்? எனக்கு முதல் தடவை பண்ணினதே போதும். நீங்கதான் ரெண்டாவுது வேணும்ன்னு கேட்டது' என்றாலும். நான் அப்படி இரெண்டாவது முறை தொடங்கி முடித்து இருந்தால் அவள் பொங்கி வழிந்து இருப்பாள் என்பதும் எனக்கு தெரிந்ததே. அன்று பார்ட்டியில் நடந்தவை, மைதிலியுடன் காரில் பேசிக் கொண்டு வந்தது, இவை எல்லாம் சேர்ந்து எனக்கு முதல் முறை முடிந்த பிறகு மறுபடி எழுச்சி. சிணுங்கியபடி ஒப்புதல் அளித்தவளிடம் பின் புறம் இருந்து டாகி ஸ்டைல் செய்கிறேன் என்ற என் விண்ணப்பத்தையும் ஏற்றாள். அடுத்த சேர்க்கையின் பாதியில் அதை முடிக்க முடியாமல் நான் திணறிக் கொண்டு இருக்கும் போது, நான் என் இயலாமையை மறந்து கவனத்தை திருப்புவதற்கா மைதிலி, "கம் ஆன் எரிக். கிவ் மீ மோர்" என்று எலிஸெபத் அவளிடம் சொன்னது போல் கிண்டலாக சொன்னாள்.

அடுத்த கணம் இருவரும் வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டு படுக்கையில் புரண்டோம். சிரிப்பலைகள் அடங்கி அவளை என் மடிமேல் அமர்த்திக் கொண்டு அமைதியாக ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தோம்.


நான், "சாரி ... '

என் மார்பில் சாய்ந்து இருந்த தலையை நிமிர்த்திய மைதிலி, "ம்ம்ம் .. ஆரம்பிச்சுட்டீங்களா?"

அவளது முகவாயை ஒரு கரத்தால் ஏந்தியபடி நான், "இல்லம்மா. ஆரம்பிச்சுட்டு பாதில முடியாம விட்டா எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்"

மைதிலி, "பாதிலன்னா?"

நான், "உனக்கு ஆர்காஸம் வர்றதுக்கு முன்னாடி"

என்னைக் கூர்ந்து பார்த்தவள் மறுபடி என் மார்பில் தலைசாய்த்தாள்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு அப்படி இருந்தபடியே மைதிலி, "இந்த ஆர்காஸம் அப்படின்னா என்னன்னு நீங்க சொன்னதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுகிட்டேன். நீங்க வேணும்ன்னா என்னை விட செக்ஸில் ரொம்ப அனுபவசாலியா இருக்கலாம். ஆனா நீங்க சொன்னது எல்லாமே கரெக்ட்டுன்னு சொல்ல முடியாது"

நான், "என்ன கரெக்ட் இல்லை"

மைதிலி, "உங்களுக்கு வேணும்ன்னா ஆர்காஸம் வந்தாத்தான் திருப்தியா இருக்குன்னு சொல்லலாம். எனக்கு அப்படி இல்லை. ஆர்காஸம் ஜஸ்ட் ஒரு பார்ட் ஆஃப் செக்ஸ். அதுமட்டும் இல்லை. நிறைய தடவை எனக்கு ஆரம்பத்திலேயே வந்துடும். அதுக்கு அப்பறம் நீங்க செய்யும் போது மறுபடியும் வரும். ஆனா சில சமயம் மறுபடி வராமலே போகும். ஆனா திருப்தியான ஃபீலிங்க் இருக்கும்"

நான், "அப்ப நான் முடிச்சதுக்கு அப்பறம் உனக்கு வந்துதான்னு கேட்டப்ப எல்லாம் ஆமான்னு சொல்லுவே? நான் கடைசில கம் வித் மின்னு சொன்னா நீயும் எஸ் எஸ் அப்படிம்பே?"

தலையை நிமிர்த்தியவளின் முகத்தில் குறும்புச் சிரிப்பு தாண்டவமாடியது, "பின்னே? என்னவோ உங்களுக்கு வரும்போது எனக்கும் வந்தா ஒரு உலக மகா சாதனை செஞ்ச மாதிரி சந்தோஷப் பட்டா?"

ஏமாற்றம் முகத்தில் ததும்ப நான் அவளைப் பார்த்து, "அப்ப பொய் சொல்லுவியா?"

தன் கைகளால் என் முகத்தை ஏந்தி என் முகத்தை வருடியபடி, "ம்ம்ம் .. முதல்ல வந்தது உங்களுக்கு தெரியாத போது நான் வந்துதுன்னு சொன்னா அது எப்படி பொய்யாகும்? உங்க கூடவே வந்துச்சான்னு நீங்க கேட்டு இருந்தா இல்லைன்னு சொல்லி இருப்பேன்"

நான், "யூ சீட், க்ராதகி, நம்பிக்கை துரோகி!"

ஆங்கிலத்தில் rupturous laugh என்பது போல் லேசாக குலுங்கிச் சிரித்தவள் மறுபடி என்னை இறுக அணைத்தாள்.

மைதிலி, "அதுவும் நீங்க இன்னைக்கு ரெண்டாவுது தடவை ஆரம்பிக்கும் போதே உங்களால முடியாதுன்னு எனக்குத் தெரியும். டிஸ்கரேஜ் பண்ண வேண்டாம்ன்னு சும்மா இருந்தேன்"

நான், "ஆஹாஹா, சும்மா சொல்லாதே. எனக்கு எதோ மூடு சரியா வரலை. அதுக்குத் தகுந்த மாதிரி நீயும் பாதில அப்படி ஜோக் அடிச்சே. அதான் முடிக்க முடியலை" என்று நான் ஒரு நொண்டிச் சாக்கைச் சொன்னேன்.

மைதிலி, "ஊர்ல இருந்து வந்ததில் இருந்து ஒரே அலைச்சலும். நைட்டு லேட்டா வர்றதும், நேரத்துக்கு சாப்படாமலும் இருந்துட்டு அய்யா ஒரே நைட்டில் ரெண்டு தடவை செய்யணும்ங்கறது பேராசைதானே? அது என்ன ஒடம்பா இல்லை மிஷினா? வயசு முப்பத்தி ஆறு ஆச்சு இல்லை?"



அன்று ஆங்கிலத்தில் பலமுறை படித்து இருந்த "The biggest sex organ in the body is your brain" என்பதை அவள் எனக்கு சர்வசாதாரணமாக கற்பித்தாள்.

அடுத்த சில நாட்களும் எரிக்-எலிஸெபத் இவர்களைப் பற்றி பேசி கிண்டல் அடிப்பது எங்களின் சேர்க்கையில் ஒரு புது அங்கமானது.

அடுத்த இரு வாரங்களில் எரிக்கின் மனதில் இருந்த வக்கிரம் எங்களுக்கு முழுதாகப் புரிந்தது.



No comments:

Post a Comment