Wednesday, October 7, 2015

மைதிலி - அத்தியாயம் - 3

ஜனவரி 24, 2012 காலை 10:00

அன்று காலை எழுந்து காலைக்கடன்களை முடித்து காலை உணவையும் முடித்தவுடன் என் சரணாலயம் நோக்கி நடக்கிறேன்.

என் பேத்தி, "தாத்தா, மம்மி ஹாஸ் சம் வொர்க். வில் யூ கம் அண்ட் ப்ளே வித் மீ?" என்று அழைக்கிறாள்

எறிச்சல் அடைந்து நான் "அமுதா, என்னம்மா இது? வீட்டு வேலைக்கு எத்தனை வேலைக் காரங்க இருக்காங்க? குழந்தை கூட இருக்காம உனக்கு அப்படி என்ன வேலை?"

அமுதா, "அவகூட நீங்க கொஞ்ச நேரம் இருந்தா உங்களுக்கு கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்ன்னுதான் டாட் நான் அவகிட்ட எனக்கு வேலை இருக்குன்னு சொன்னேன்" என்றபடி தாயை விட மிக மென்மையான என் மகளின் கண்கள் என் சொற்களால் கலங்குவதைக் கண்டு நான் ஊமையாகி நிற்கின்றேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் என் ஸ்டடி ரூமுக்குச் சென்று டைரிகளை படிக்கத் துவங்குகிறேன்.

~~~~~~~~~~~~~~
1978

வசியின் திருமணத்தின்போது பார்த்த பிறகு மைதிலியின் முகம் என் மனக்கண்ணில் இருந்து அகலவில்லை.

அடுத்த நாள் வசியை அவள் கணவன் சத்தியமூர்த்தியுடன் தேன் நிலவுப் பயணத்துக்கு வழியனுப்பச் சென்றபோது ஏர்ப்போர்ட்டில் தனியாக இருந்த போது வசி என்னிடம், "மைதிலியை பாத்தியாண்ணா?"

"ம்ம்ம் ... "

"அவங்க அப்பா சொன்னதுக்கு ஒத்துட்டு தன் வாழ்க்கையையே பாழடிச்சுட்டு இருக்கா"

"ஏன்? என்ன ஆச்சு?'

"அவ ஹஸ்பண்ட்டுக்கு ரொம்பக் குடிப் பழக்கம். நாள் தவறாம குடிச்சுட்டுத்தான் வீட்டுக்கு வருவாறாம்"

என் மனம் குமுற "அவளை எதாவுது செய்வானா?"

"இல்லை. நானும் கேட்டேன். அவளுக்கு ஃபிஸிகலா ஒரு தொந்தரவும் கொடுக்கறது இல்லை. ஆனா ஒரு சுகமும் இல்லை. வாங்கற சம்பளத்தில் பாதிக்கு மேல் குடியிலேயே செலவு செஞ்சுடறார். இவளும் சம்பாதிக்கறதால் காலம் ஓடுது"

"ஏன் இன்னும் குழந்தை வேண்டாம்ன்னு இருக்காங்க?"

"I think they want to have a child but its not happening. அவ எங்கிட்ட வெளிப்படையா சொல்லலை. இது என்னோட கெஸ்"

"எனிவே நீயும் இனிமேல் மெட்ராஸ்ஸில்தானே இருக்கப் போறே? நீ பாத்து அவகிட்ட பேசு"

"அவ ரொம்ப அழுத்தக்காரிண்ணா. நான் சொன்னது எல்லாம் ஆண்டிதான் எங்கிட்ட சொன்னாங்க"

"அவளோட அப்பா இப்ப என்னங்கறார்"

"தானே பொண்ணு வாழ்க்கையை பாழடிச்சுட்டமேன்னு தினம் கவலைப் பட்டு இருக்கார்"

அடுத்த நாள் காலை என் பெற்றோரை கோவைக்கு வழியனுப்பிய பிறகு மைதிலியை அவள் அலுவலகத்தில் தொலைபேசியில் அழைத்தேன்.

"ஹெல்லோ"

"மைதிலி நான் முரளி பேசறேன்"

"என்ன விஷயம்"

"நான் உங்கூட கொஞ்சம் பேசணும்"

"என்ன பேசணும்?"

"என் கல்யாணத்தைப் பத்தி"

"என் கிட்ட எதுக்கு பேசணும்?"

"பேசணும்! ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வர முடியுமா?"

"லஞ்சுக்கு அப்பறம் வர்றேன்"

"சரி, ரெண்டரை மணிக்கு உன் ஆஃபீஸுக்கு வரேன்"

இரண்டரை மணிக்கு அவள் ஆஃபீஸ் வாசலில் இருந்தேன். வெளியில் வந்தவளை காரில் ஏற்றிக் கொண்டு உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் ரெஸ்டாரண்டுக்குச் சென்றேன்.

"ம்ம்ம் ... சொல்லுங்க"

"நீ சந்தோஷமா இருக்கியா?"

"ம்ம்ம் .. நினைச்சேன் வசி எதாவுது சொன்னாளா?"

"சொல்லு. சந்தோஷமா இருக்கியா?"

"சந்தோஷமாத்தான் இருக்கேன்"

"என்ன? தினமும் குடிச்சுட்டு வர்ற ஹஸ்பண்ட்கூடவா?"

அவள் கண்கள் கலங்கின. மௌனமாக அமர்ந்து இருந்தாள்.

"மைதிலி"

"ம்ம்ம்"

"டைவர்ஸ் பண்ணிட்டு வந்துடு. நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்"

"நீங்க இப்படிக் கேப்பீங்கன்னு தோணுச்சு. இருந்தாலும் நீங்க கேக்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. But, என்னால முடியாதுப்பா"

"ஏன் முடியாது? உன் வீட்டுக்காரர் ஒத்துக்க மாட்டாரா? இருக்கறதில் பெஸ்ட் லாயரை வெச்சு வாதாட வைக்கறேன். ரெண்டு பேரும் மனமொத்த விவாகரத்துக்கு அப்ளை பண்ணலாம்ன்னு சொல்லுவோம். அவரைப் பத்தி எந்த விதத்திலும் தப்பா சொல்ல மாட்டோம்ன்னு சொல்லுவோம். ஜீவனாம்சம் ஒண்ணும் வேண்டாம்ன்னு சொல்லுவோம். நிச்சயம் ஒத்துக்குவார்"

"உங்களுக்கு என் வீட்டுக் காரரைப் பத்தி எங்க மாமியாரைப் பத்தியும் ஒண்ணும் தெரியாது. எங்க அப்பாவும் இதுக்கு ஒத்துக்க மாட்டார்"

"ஏய், இது உன் வாழ்க்கை. ஒரு தடவை குட்டிச் செவராக்கிட்டாங்க இல்லை? நான் உங்க அப்பாகிட்ட பேசறேன். நிச்சயம் ஒத்துக்க வைக்க முடியும்"

"உங்களுக்கு தெரியாது முரளி. எங்க அப்பா என் மாமியார் மாமனாருக்கு ரொம்பக் கடமைப் பட்டு இருக்கார். எனக்கு அது என் கல்யாணத்துக்கு முன்னாடிதான் தெரியும். அதனால்தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். எனக்கு அது முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நான் உங்களை லவ் பண்ணி ஏமாத்தி இருக்க மாட்டேன். "

மௌனம் சாதித்தவன். "உன் பிடிவாதத்தை விட மாட்டே. அப்படித்தானே? ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா அது உன் கூடத்தான். எத்தனை வருஷமானாலும் சரி" என்றபடி காரைக் கிளப்பினேன்.

ஸ்தம்பித்துப் போய் அமர்ந்து இருந்தாள்.

அவள் அலுவலக வாசலில் இறங்கும் போது.

"நீங்களும் உங்க பிடிவாதத்தை விட மாட்டீங்க. அப்படித்தானே?" என்றபடி கலங்கிய கண்களை கைக்குட்டையால் துடைத்தபடி இறங்கினாள். என்னைக் கூர்ந்து பார்த்தவள், "உண்மையில் நான் என் வீட்டுக் காரரையும் கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஒரு உதவி கேக்கலாம்ன்னு இருந்தேன். அவர்கிட்ட பேசறதுக்கு முன்னாடி நீங்களே என்னைக் காண்டாக்ட் பண்ணிட்டீங்க. ஆனா, நீங்க இப்ப பேசினதுக்கு அப்பறம் உங்ககிட்ட அந்த உதவியைக் கேக்கறதில் ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டேன்" என்றபடி நடந்து சென்றாள். 

அடுத்ததாக மைதிலியின் தாயை சந்தித்துப் பேச முடிவெடுத்தேன். அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேல் அவர்கள் வீட்டை அடைந்தேன்.

"வா, முரளி" என்று வாய் நிறைய வரவேற்றார்கள்

"நல்லா இருக்கீங்களா ஆண்டி?" என்றபடி அமர்ந்தேன்.

"இருக்கேம்பா"

"அங்கிள், ப்ரேமா, சுதாகர் எல்லாம் எப்படி இருக்காங்க? ப்ரேமா என்ன படிச்சுட்டு இருக்கா?"

"பி.எஸ்.ஸி படிச்சுட்டு இருக்காப்பா. மேல எம்.எஸ்.ஸி பையோ-கெமிஸ்ட்ரி படிக்கணும்ன்னு இருக்கா"

"ரொம்ப கனவு காண வேண்டாம்ன்னு இப்ப இருந்தே சொல்லி வையுங்க ஆண்டி"

"உன் கோவம் எனக்கு தெரியுதுப்பா. அவர் இனி எந்த குழந்தையோட எதிர்காலத்தைப் பத்தியும் அவங்க சம்மதம் என் சம்மதம் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்னு இருக்கார்"

"அப்படின்னா மைதிலியின் எதிர்காலத்தைப் பத்தியும் யோசிச்சு இருப்பீங்களே?"

அவர் கண்கள் கலங்கத் தொடங்கின.

லேசான விசும்பலுடன், "அவர் உன்னை மட்டும் ஏமாத்தலைப்பா. அவரே அவளோட வாழ்க்கையை நாசமாக்கிட்டார்"

"ஆண்டி. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. அவளை டைவர்ஸ் பண்ணிட்டு வரச் சொல்லுங்க. நான் அவளைக் கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்கறேன்"

'அப்படி மட்டும் நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்' என்று சொல்வது போன்ற ஆதங்கம் அவர் கண்களில் சில கணங்கள் வந்து போனது. ஆனால் முகம் இறுக, "அதெல்லாம் நடக்கற காரியம் இல்லைப்பா"

"ஏன் ஆண்டி?"

"நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க. மானம் போயிடும்"

"உங்களுக்கு உங்க மானம் போறதுதான் முக்கியம் இல்லை? அவ வாழ்க்கை கெட்டுக் குட்டிச் செவுராப் போனா அதைப் பத்திக் கவலை இல்லை"

மௌனமாக அழுதார். தொடர்ந்து, "அவர் எப்படி யோசிப்பாருன்னு யோசிச்சுப் பாத்து சொன்னேன் முரளி. அது மட்டும் இல்லை. மூத்தவ டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டான்னு தெரிஞ்சா ப்ரேமாவுக்கு கல்யாணமே ஆகாது"

"அவ படற கஷ்டத்தைப் பாத்துட்டு எப்படி உங்களால சும்மா இருக்க முடியுது?"

"ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாப் போயிடும்ன்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா அதுக்கும் அந்த ஆண்டவன் இன்னும் கண்ணைத் திறக்க மாட்டேங்கறான்"

"ஏன்? என்ன பிரச்சனை?"

"முதல்ல அவளும் மருமகனும் அவங்க அப்பா அம்மாகூட ஜாயிண்ட் ஃபேமிலியா இருந்தாங்க. சரி, கூட்டுக் குடும்பத்தில் புருஷன் பொண்டாட்டி அன்னியோன்னியமா இருக்க முடியலைன்னு நினைச்சுட்டு இருந்தோம். அப்பறம் அவளோட மாமனாரே அவங்ளுக்கு தனிக் குடித்தனம் வெச்சுக் கொடுத்தார். எங்க மருமகனோட அண்ணன் எதோ பிரச்சனை பண்ணறார் அதனால தான் தனிக் குடித்தனம் போறோம்ன்னு மைதிலி சொன்னா. தனிக் குடித்தனம் போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. இப்பல்லாம் அவ மாமியார்கூட எங்ககிட்ட வந்து கல்யாணம் பண்ணி வெச்சு என்ன பிரயோஜனம்ன்னு அலுத்துக்கறாங்க"

எனக்கு ஆண்டி சொன்னவற்றில் இருந்து அவருக்கு நடந்தவற்றின் பின்னணி முழுவதும் தெரியவில்லை என்று தோன்றியது.

"ரெண்டு பேரும் டாக்டர்கிட்ட போய் செக்-அப் பண்ணிப் பாத்தாங்களா?"

"ம்ம்ம் ... ஒரு பிரச்சனையும் இல்லைன்னு ரிப்போர்ட் வந்து இருக்குன்னு மைதிலி சொன்னா"

"எந்த டாக்டர்கிட்ட போனாங்க? நல்ல ஆஸ்பத்திரிக்கு போய் செக்-அப் செஞ்சுகிட்டாங்களா?"

"அதைத் தான் அங்கிளும் சொன்னார். அதுக்கு அப்பறம் விஜயா ஹாஸ்பிடலுக்கு போய் ரெண்டு பேரும் செக்-அப் பண்ணிகிட்டாங்க"

"அங்கே என்ன சொன்னாங்களாம்?"

"அங்கேயும் ஒரு பிரச்சனையும் இல்லைன்னுதான் சொன்னாங்களாம். மேல கேட்டா மைதிலி எங்ககிட்ட 'என் தலைவிதி எப்படியோன்னு' எறிஞ்சு விழறா"

சட்டென்று மனதில் பொரிதட்ட, "எப்ப செக்-அப் பண்ணிகிட்டாங்க ஆண்டி?"

"ஆறு மாசத்துக்கு முன்னாடி"

நான் மௌனம் காத்தேன் ... பிறகு அவரே தொடர்ந்தார், "இதுக்கு நடுவில் எங்க மருமகன் பெங்களூர்ல வேற வேலைக்கு போறேன்னு ஒத்தைக் காலில் நிக்கறார். இவ இந்த வேலையை விட்டுட்டு வந்து அங்கே வீட்டில் உக்காந்துட்டு இருக்க முடியாதுன்னு சொல்லி இருக்கா. அதுக்கும் ஒரு சண்டை நடந்துட்டு இருக்கு"

"ஏன் இந்த வேலைக்கு என்னவாம்?"

"பெங்களூர்ல யாரோ அவரோட ஃப்ரெண்டாம் அதிக சம்பளத்தில் வேலை கொடுப்பதா சொல்லி இருக்காராம்"

"மைதிலிக்கு அங்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்க முடியாதா?"

"தெரியலை முரளி"

"சரிங்க ஆண்டி. நான் சொன்னது உங்களுக்கு சரின்னு பட்டுதுன்னா நீங்க அங்கிள் கிட்ட பேசுங்க. இல்லைன்னா சொல்லுங்க நானே அங்கிள்கிட்ட பேசறேன்"

"எனக்கு ஒப்புதல் இல்லை முரளி. நீயெல்லாம் அமெரிக்கா மாதிரின்னு நினைச்சுட்டு சொல்றே. இங்கத்து நிலைமை வேற" என்று எனக்கு அறிவுரைத்தார்.

அதற்கு மேலும் அவருடன் பேசினால் எனக்கு கோபம் வந்து விடும் என்று விடைபெற்றேன்.

அன்றே எனக்கு தெரிந்த ஒரு டிடெக்டிவ் ஏஜன்ஸி மூலம் சிவராமன் மற்றும் அவன் குடும்பத்தைப் பற்றி அவனது ஆஃபீஸ் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களிலிருந்தும், வெளியில் இருந்து பார்த்த அளவுக்கு மைதிலி-சிவராமன் தம்பதியினரைப் பற்றியும், அவர்கள் இருவரும் செய்து கொண்ட செக்-அப் பற்றியும் விசாரித்து முழு விவரங்களை கொடுக்கும் படி சொன்னேன். விவரங்கள் சேகரிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் எனக்கு இருந்த வேலைகளை கவனிக்கச் சென்றேன்.

ஒரு வாரத்துக்கு பிறகு நான் கேட்டதற்கும் அதிகமான தகவல்கள் வந்து இருந்தன.

சிவராமன் அவன் திருமணத்துக்கு முன்பு இருந்தே குடிப் பழக்கத்துக்கு அடிமையானவன். குடியைத் தவிற வேறு சீட்டாட்டமும் குதிரைப் பந்தயத்தில் சூதாடும் பழக்கமும் உண்டு. ஆனால் வேறு பெண்களின் உறவு எதுவும் இல்லை. அந்த விஷயத்தில் எல்லார் கணிப்புப் படி மிக்க நல்லவன். யாரோ ஒரு நண்பன் சொல்லி இருந்தது, 'பயந்தாங்கொள்ளி! ப்ளூ ஃபிலிம் பாக்கறதுக்குத்தான் லாயக்கு. ஒரு தடவை நாங்க எல்லாம் டூர் போனப்ப வாடான்னா வர மாட்டேன்னுட்டான். ஆனா எங்களை ஒளிஞ்சு இருந்து பாத்தான்'. அந்த விஷயம் எனக்கு மனதில் ஒரு உறுத்தலை ஏற்படுத்தியது. அவனுக்கு தந்தையை விட தாயிடம் ஒட்டுதல் அதிகம். சிவராமனின் தந்தை மிகவும் நல்லவர். ஆனால் அவன் தாயிடம் வாய் கொடுத்து யாரும் மீள முடியாது. இருப்பினும் அவர்கள் வீடு முழுக்க முழுக்க மதுரை என்றும் சொல்லி விட முடியாது. அவனது அண்ணன் இவன் அளவுக்கு குடிகாரன் இல்லையென்றாலும் பெண்கள் விஷயத்தில் நடத்தை கெட்டவன். அவனது மனைவி ஒரு வாயில்லாப் பூச்சி. அவனுக்கு இரண்டு குழந்தைகள்.

அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் மைதிலி சிவராமன் தனிக்குடித்தனம் செல்ல சிவராமனின் அண்ணன் ஷண்முகமே காரணம். ஆனால் ஆண்டி சொன்னது போல் இல்லை. அவர்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்தவர் சொன்னது ஒரு நாள் மைதிலி தனியாக வீட்டில் இருந்த போது ஷண்முகம் அங்கு வந்ததாகவும் சில நிமிடங்களில் மைதிலி தன் வீட்டில் இருந்து அவர்கள் வீட்டுக்கு வந்து ஷண்முகம் சென்றபின் திரும்பிச் சென்றதாகவும் சொல்லி இருந்தார்கள். அடுத்த இரண்டு வாரத்தில் மைதிலி-சிவராமன் இருவரும் தனிக் குடித்தனம் சென்று இருக்கிறார்கள். எதற்கு என்று அவளை அண்டை வீட்டார் கேட்டதற்கு 'எல்லாம் நல்லதுக்குத்தான்னு எங்க மாமனார் சொல்றார். ஆண்டவன் விட்ட வழி' என்று மைதிலி பதிலளித்து இருக்கிறாள்.

கடைசியாக கொடுத்து இருந்த தகவல் நான் எதிர்பார்த்ததே. சிவராமனின் விந்தில் உயிரணுக்கள் குறைவு என்று மட்டும் இல்லாமல் அந்த ரிப்போர்ட்டில், ED (Erectile Dysfunction) combined with PE (Premature Ejaculation) due to earlier prostate BPH என்று இருந்தது. அதாவது, அவனது ஆணுறுப்பு எழுவது கடினம். மற்றும் முழுவதும் எழுவதற்கு முன் விந்து வெளியேறுதல் போன்ற குறைகளும் இருந்தன. முடிவாக மருத்துவச் சிகிச்சை மூலம் குணப்படுத்துவது கடினம் என்றும் இருந்தது.

அந்த டிடெக்டிவ் ஏஜன்ஸி கொடுத்த தகவல்கள் அத்தனையும் படித்து முடித்த பிறகு வாய்விட்டு அழுதேன். என் மைதிலி உடல் சுகம் என்பதை இன்னுமும் அறியாமல் இருக்க நான் அவளை இழந்த வெறியில் உடலுறவில் திளைத்ததை எண்ணி வெட்கிக் குமுறினேன்.

இந்த தகவல்களுடன் சிவராமனை நேரில் எதிர்கொள்ளத் திட்டமிட்டேன்.

அதற்கு முன் மைதிலி என்னிடம் என்ன உதவி கேட்க இருந்தாள் என்று அறிந்து கொள்ள விரும்பினேன்.

No comments:

Post a Comment