Wednesday, October 7, 2015

மைதிலி - அத்தியாயம் - 6

அடுத்த நாள் மைதிலியையும் உடன் வசியையும் அழைத்துக் கொண்டு விஜயா மருத்துவமனைக்குச் சென்றேன்.

என் உடல்நலத்தை ஊர்ஜித்தப் படுத்த எல்லாவிதமான டெஸ்டுகளும் எடுக்க ஏற்பாடுகள் செய்தேன். உடன் எனது உயிரணுக்களின் தரத்தையும் ஊர்ஜிதப்படுத்தும் பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தேன்.

வசி மைதிலியை அழைத்துக் கொண்டு அங்கு இருந்த ஒரு பிரபல கைனகாலஜிஸ்ட்டைப் பார்தாள்.

மைதிலியை அவள் வீட்டில் விட்ட பிறகு ...

வசி, "சே, பாவண்ணா அவ..."

பெருமூச்சு விட்ட நான், "ம்ம்ம் ... என்ன பண்ணறது"

எங்கள் பெற்றோர் எங்களை வளர்த்த விதத்தாலும் எங்கள் இருவருக்கு இடையே இருந்த நட்பும் கலந்த பாசத்தால் வசி என்னிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் மனம் விட்டுப் பேசினாள். மேலும் அவளும் ஒரு டாக்டராக இருந்தது அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்க வேண்டும்.



வசி, "அண்ணா, டாக்டர் நாளைக்கு வரச்சொன்னது முக்கியமா உன்னோட ரிஸல்ட்ஸ் எல்லாத்தையும் பார்க்கத்தான். ஆறு மாசத்துக்கு முன்னாடி அவளுக்கு எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் பாத்துட்டு மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்டுக்கு எழுதிக் கொடுத்து இருக்காங்க. அதுவும் ஒரு மேலோட்டமான வெரிஃபிகேஷன்தான் .. இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு ஃபெர்டைல் பீரியட் (fertile period) ஆரம்பிக்கும். அது அடுத்த ரெண்டு வாரத்துக்கு இருக்கும். அந்த சமயத்தில் தினமும் பேஸல் டெம்பரேச்சர் (basal temperature0 செக் பண்ணி ஓவுலேஷன் (ovulation) ஆரம்பிச்ச உடனே கருத்தரிக்க வைக்கணும்ன்னு சொன்னார். அப்பறம் எந்த முறையில் கருத்தரிக்கப் போறான்னு கேட்டார் .. " என்று நிறுத்தினாள். இயற்கையாக உடலுறவு மூலமாகவா அல்லது விந்தை ஊசி மூலம் உள்ளே செலுத்தும் செயற்கை முறையிலா என்று கேட்டதை சொன்னாள்.

நான், "அதுக்கு மைதிலி என்ன சொன்னா?"

வசி, "மைதிலிக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியலை. நான் உன் கிட்ட கேட்டுட்டு சொல்றதா சொன்னேன். நீ என்ன சொல்றே?"

நான், "நீதானே டாக்டர்? நீ சொல்லு"

வசி, "மைதிலிகிட்ட பேசினேன். அவ உன்மூலம் கரு உண்டாகற மாதிரித்தான் இது வரைக்கும் நினைச்சுட்டு இருக்கா. Though she didn't tell me in so many words, I think she is looking forward to having sex with you."

நான், "I can sense that. என்னை ஏமாத்தினதுக்கும் இதை ஒரு பரிகாரமா நினைச்சுட்டு இருக்கா. ஆனா .. "

வசி, "ஆனா என்ன?"

நான், "இதைச் சொல்லு. இதுவரைக்கும் செக்ஸில் அவளுக்கு எந்த அளவுக்கு அனுபவம் இருக்கு? உன் கிட்ட எதாவுது சொன்னாளா?"

வசி, "இல்லை. ஆனா டாக்டர் சொன்னதை வெச்சுப் பார்க்கும் போது, இதுவரைக்கும் அவ எறக்குறைய கன்னி கழியாதவன்னு சொல்லலாம். ஹைமன் ரப்சர் ஆனதைத் தவிற அவ உடம்பில் ஒரு அறிகுறியும் இல்லை. அதுகூட இன்டர்கோர்ஸ் மூலம் ரப்சர் ஆகி இருக்கும்ன்னு சொல்ல முடியாது .. நீ என்ன சொல்ல வர்றே?"

நான், "இதுவரைக்கும் அவளுக்கு அந்த அனுபவம்ன்னா என்னன்னு தெரியாது. ஒண்ணு ரெண்டு தடவை அவ கூட இருந்துட்டு நான் போயிடுவேன். அவளுக்கு அதுக்கு அப்பறம் அந்த ஃபீலிங்க் வரும் இல்லையா?"

வசி, "நீ என்ன சொல்ல வர்றேன்னு தெரியுது ... அதுவும் கர்ப்பம் தரிச்சதுக்கு அப்பறம் அடிக்கடி அந்த ஃபீலிங்க் நிறையவே வரும். உண்மைதான். அந்த மாதிரி ஃபீலிங்க் எல்லார்கூடவும் வராது Only with the person who impregnates. ஆனா, நான் ஒண்ணு சொல்றேன் ... Please don't doubt her fidelity ... அவ எந்தக் காரணத்தைக் கொண்டும் அவ புருஷனுக்கு துரோகம் செய்ய மாட்டா"

நான், "தெரியும் வசி ... ஆனா ரொம்பக் கஷ்டப் படுவா"

வசி, "ஆமா, இந்தக் காரணத்தாலயே கொஞ்சம் வசதியுள்ளவங்க செயற்கை முறையில் கருத்தரிக்கறதை விரும்பறாங்க"

நான், "ஓ? செயற்கை முறையில் அவ கருத்தரிச்சா அந்த ஃபீலிங்க் இருக்காதா?"

வசி, "ரொம்ப இருக்காது. நிறைய ரேப் விக்டிம்ஸ் கர்பம் ஆகறாங்களே அந்த மாதிரி. உடம்பில் உடலுறவுக்கான மாற்றங்கள் எதுவும் ஏற்படாம கருத்தரிக்கும் போது அந்த ஃபீலிங்க் ரொம்ப கம்மியா இருக்கும்ன்னு சொல்லறாங்க. டாக்டர்ஸ் அனுபவ ரீதியா சொல்லற விஷயம் இது. ஆனா இன்னும் முழுசா ப்ரூவ் பண்ணாது ஒரு விஷயம்"

நான், "Well, I respect their experience .. செயற்கை முறையில் அவ கருத்தரிக்க ஏற்பாடு செய்"

சற்று நேரம் மௌனமாக என்னை பார்த்தவள் சற்று கடுமையான குரலில், "ஏண்ணா? உனக்கு அவ கிடைக்காம போனதால சொல்லறயா? இல்லை ஏற்கனவே ஒருத்தன் கைபட்ட உடம்புன்னு பார்க்கறயா?"

நான், "வசி, உண்மையில் இன்னும் அவளை காதலிச்சுட்டுத்தான் இருக்கேன். அவ இப்ப சரின்னாலும் அவளுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்து கல்யாணம் பண்ணிக்கத் தயார். அவ புருஷன் அவளை அனுபவிச்சு இருந்தாலும் அப்படி செய்வேன் ... கர்ப்பமா இருக்கும் போது அவ கஷ்டப் படக்கூடாதுங்கற காரணத்துக்காக மட்டும்தான் அப்படிச் சொன்னேன்"

வசி, "சாரிண்ணா ... " என்றபடி கண் கலங்கினாள்.

அடுத்த பதினைந்து நாட்களில் மைதிலியின் வயிற்றில் டாக்டர்கள் உள்ளனுப்பிய என் உயிரணுக்கள் மூலம் ஒரு சிசு உருவாகத் தொடங்கி இருந்தது. நான் அமெரிக்கா திரும்பினேன்.


அவள் கருத்தரித்த விதம் என்னைத் தவிற வசிக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது. மைதிலியின் வேண்டுகோளுக்கு இணங்கி என் பேற்றோர் மற்றும் மைதிலியின் பெற்றோர் உள்பட யாரிடமும் நானோ வசியோ பகிர்ந்து கொள்ளவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகு என் கம்பெனியின் விரிவாக்கத்துக்காக மலேஷியாவுக்கு வந்து இருந்தேன். அமெரிக்கா திரும்புமுன் இந்தியாவில் சில நாட்களை கழிக்கத் திட்டமிட்டு இருந்தேன். மைதிலியைப் பார்க்க வேண்டும் போல இருந்ததே அந்தத் திட்டத்தின் முக்கியக் காரணம். சென்னையையில் இருந்து கோவைக்கு செல்லுமுன் ஓரிரு முறையும் கோவையில் இருந்து திரும்பி வந்த பிறகு அமெரிக்கா புறப்படுமுன் ஒரு முறையும் அவளை பார்க்க எண்ணி இருந்தேன். இந்தியாவிற்கு விமானம் ஏறுமுன் கோலாலம்பூர் விமான நிலையத்தின் டியூடி-ஃப்ரீ கடைகளுக்கு சென்று இருந்தேன். என் தந்தைக்கு அவர் விரும்பும் ஷிவாஸ் ரீகல் பாட்டில் ஒன்றும், வசி விரும்பும் ஸ்விஸ் சாக்லேட்களையும் வாங்கியபின் மைதிலிக்கு என்ன வாங்கலாம் என்று எண்ணியவாறு நடந்தேன். அழகான பெட்டிகளில் பேக் செய்து இருந்த தாய்லாந்து நாட்டு புளியம்பழம் என் கண்ணுக்குத் தென்பட்டது. மைதிலிக்கு மசக்கையாக இருக்கும் என்றதால் அதில் இரண்டை வாங்கினேன்.



அடுத்த நாள் மாலை மைதிலியின் வீட்டை அடைந்தேன். என்னைக் கண்டதும் மைதிலியின் முகத்தில் வழிந்த மகிழ்ச்சியும் ஏக்கமும் என்னை உறுக வைத்தது. சிவராமனும் அங்கு இருந்தான். என்னைக் கண்டதும் அவன் முகம் சிறுத்ததைக் கண்டேன். பிறகு சாதாரணமாக என்னை வரவேற்றான். முதலில் மைதிலி சிவராமனை கவனிக்கவில்லை.

கொண்டு சென்று இருந்த இனிப்பு வகைகள், பழங்கள், மற்றும் புளியம் பழப் பெட்டிகளையும் கொடுத்த பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தேன்.

நான், "எப்படி இருக்கே மைதிலி?"

முழுகாமல் இருக்கும் பெண்ணின் பூரிப்பு அவள் முகத்தில் ஜொலித்தது.

மைதிலி, "ஐய்யோ! என்ன இதெல்லாம்? வாரா வாரம் அம்மா, அப்பா, மாமா அப்பறம் வசி எல்லாரும் எதையாவுது வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துட்டே இருக்காங்க. எனக்குத்தான் எதையும் சாப்பிடப் பிடிக்கலை"

நான், "நினைச்சேன். சரி, மத்ததை எல்லாம் சிவா சாப்பிட்டுக்கட்டும" என்றவாறு அந்தப் புளியம்பழப் பெட்டிகளில் ஒன்றை பிரித்தேன்

குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தவள் உள்ளே இருந்த பழுப்பு நிறப் ஓட்டுடன் கூடிய புளியம்பழங்களை எடுத்ததும் கண்கள் அகன்று என்னவென்று யூகிக்க முடிந்தாலும் மேலும் உறுதி செய்ய, "என்னது இது?" என்றாள்.

அவள் முகத்தின் அழகில் லயித்தவன், "ம்ம்ம்.. புளியம் பழமேதான். மலேஷியாவில் இருந்து வாங்கிட்டு வந்தேன்"

மைதிலி, "ஐய்யோ! ரொம்ப தேங்க்ஸ் முரளி" என்ற பிறகு அருகில் இருந்த சிவராமனை உரிமையுடன் பார்த்து "இங்கே இருக்கற மாம்பலத்தில் வாங்கிட்டு வாங்கன்னு இவர்கிட்ட பத்து நாளா கேட்டு சலிச்சுப் போயிருந்தேன்"

அவள் கணவன் மேல் காட்டிய நெருக்கம் என்னை பொறாமைப் படவைத்தாலும் என் மைதிலிக்காக என் மனம் மிக நிம்மதி அடைந்தது.

நான், "அப்பறம், செக்-அப்புக்கு எல்லாம் சரியா போறியா?"

மைதிலி, "தெரிஞ்சுட்டே ஏன் கேக்கறீங்க? வசி என்னை கரெக்டா கூட்டிட்டு போயிடறா. அப்பறம், ஏன் எல்லா செலவையும் நீங்கதான் செய்வேன்னு சொன்னீங்க? வசி என்னை எதுக்கும் செலவு செய்ய விடமாட்டேங்கறா. எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சங்கோஜமா இருந்துது. அப்பறம் அத்தைதான் இவரை வற்புறுத்தி நீங்க செய்யட்டும்ன்னு சொன்னாங்க. ரொம்ப தாங்க்ஸ்."

என் குழந்தை பிறப்பதற்கு நான் செலவு செய்கிறேன் என்று மனதில் தோன்றினாலும் அவளிடம சொல்லவில்லை. சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்த பிறகு ஒரு நாள் விட்டு அடுத்த நாள் மறுபடி வந்து பார்ப்பதாகக் கூறி விடைபெற்றேன்.

அடுத்த நாள் தன் அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு வசி மூலம் செய்தி அனுப்பி இருந்தாள்.

மதியம் அலுவலகத்தில் அவளை சந்தித்த போது முன் தினம் அவள் முகத்தில் கண்ட மகிழ்ச்சி குன்றிப் போயிருந்தது. அவளை அழைத்துக் கொண்டு ஒரு ரெஸ்டாரண்டிற்கு சென்று அமர்ந்தவன், "என்ன மைதிலி? டல்லா இருக்கே?"

மைதிலி, "நான் ஒண்ணு கேப்பேன் செய்வீங்களா?"

நான், "என்ன சொல்லும்மா"

மைதிலி, "இனிமேல் என்னை பாக்க வராதீங்க"

நான், "ஏன்?"

மைதிலி, "நேத்து நீங்க போனதுக்கு அப்பறம் அவர் என்னை ரொம்ப கேவலமா பேசினார். அத்தைக்குச் சொல்லி அனுப்பி அவங்களும் வந்து கூட சேந்துட்டு என்னை ரொம்ப அசிங்கமா பேசினாங்க" என்றவள் அதற்கு மேல் அடக்க முடியாமல் விசும்பினாள்.

பிறகு என் முகத்தில் தாண்டவமாடிய கோபத்தைக் கண்டவள், "ப்ளீஸ் முரளி. கொஞ்ச நாளா மனுஷன் சகஜமா இருக்கார் சரியா போயிடும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். அவர் எனக்கு ஒரு நல்ல புருஷனா இருக்க வேண்டாம் பொறக்கப் போற குழந்தைக்கு ஒரு நல்ல தகப்பனா இருக்கவைக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கேன். ஏற்கனவே அவருக்கு தன்னைப் பத்தி ரொம்ப தாழ்வு மனப்பான்மை. எனக்கு நேத்து அது முதலில் தோணலை. இல்லைன்னா நான் உங்ககூட அப்படி சிரிச்சு சகஜமா பேசி இருக்க மாட்டேன். எனக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய உதவி செஞ்சு இருக்கீங்க. ஆனா, இனிமேல் நான் சந்தோஷமா இருக்கணும்ன்னா என்னை மறந்துடுங்க. ப்ளீஸ்" என்றவாறு மேலும் அழுதாள்.

நான், "ம்ம்ம் .. சரி மைதிலி உன் கஷ்டம் எனக்கு புரியுது. இனிமேல் நான் உன்னை வந்து பார்க்க மாட்டேன்"

அழுகையை மெதுவாக நிறுத்தியவள் முகத்தை துடைத்துக் கொண்டு, "அப்பறம் நான் சொன்னதை பத்தி முடிவு செய்யுங்க"

நான், "என்ன?"

மைதிலி, "ஒரு கல்யாணம் பண்ணிக்குங்க .. ப்ளீஸ்"

நான் "அதைப் பத்தி சொல்லறதுக்கு உனக்கு உரிமை இல்லை. எனிவே, பாக்கலாம்" என்றவாறு அவளிடம் இருந்து விடைபெற்றேன்.


1979

சான் டியேகோ திரும்பியவன் மறுபடி முழுமூச்சுடன் என் வேலையில் ஈடுபட்டேன். என்னுடைய ஒரே வடிகால் எனது வேலை. மைதிலிக்குக் கிடைக்காத காமம் எனக்கும் வேண்டாம் என்று என் தொடர்புகளை எல்லாம் துண்டித்துக் கொண்டேன். தொழிலில் எனது நிறுவனத்தின் சேர்மன் ஸாம் ஸ்ப்ரிங்க்கருக்கு நான் வலதுகையாக மாறினேன். மெக்ஸிகாலியில் மேலும் விரிவாக்கங்களை திட்டமிட்டு செயலாக்கினோம். மலேசியாவில் உருவாக்கி இருந்த தொழிற்சாலையில் உற்பத்தியை துவக்கி இருந்தேன்.

மைதிலிக்கு கடந்த வருடம் ஜனவரி 8ம் தேதி பெண் குழந்தை பிறந்து இருந்ததை வசி அறிவித்தாள்.

வசி, "பொண்ணுண்ணா .. "

நான், "பார்க்க எப்படி இருக்கு?"

வசி, "அப்படியே மைதிலி ஜாடையா இருக்கு"

நான், "ஹப்பா! அந்த அம்மா வேற சாயலா குழந்தை இருக்கும்ன்னு சொல்லிட்டு இருந்துச்சே. இப்ப நிம்மதியா இருக்கு. குழந்தைக்கு என்ன பேர் வெச்சு இருக்காங்க?"

வசி, "அமுதான்னு பேர் வெச்சு இருக்கா"

நான், "நல்ல பேர். யார் செலக்ட் பண்ணினது?"

வசி, "அவங்க மாமனார் எதோ ஜோசியம் பாத்துட்டு 'அ' அல்லது 'ஆ' வில் ஆரம்பிக்கும் பேர் வெக்கலாம்ன்னு சொன்னாராம். மைதிலிதான் அமுதாங்கற பேரை சூஸ் பண்ணி இருக்கா. ஆனா ஏன் அந்த பேருன்னு சொல்லு பாக்கலாம்?" என்று புதிர் போட்டாள்.

நான், "ம்ம்ம் ... தெரியலை .. ஏன்?"

வசி, "அகிலாண்டேஸ்வரி, முரளீதரன், தாமோதரன் இந்த மூணு பேரோட முதல் எழுத்துங்க" என்று அவள் தாயின் பெயர், என் பெயர், மற்றும் அவள் தந்தையின் பெயர்களை பட்டியலிட்டாள்.


1981

அந்த வருடமும் அதற்கு அடுத்த வருடமும் எங்கள் இருவரின் வாழ்க்கையின் திருப்புமுனைகளான வருடங்கள். எங்கள் நிறுவனத்தின் விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக ஓசுரில் ஒரு தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டோம். பெங்களூரில் தங்கி அதற்கான வேலைகளில் ஈடு பட்டு இருந்தேன்.

ஒரு நாள் மைதிலி தொலைபேசியில் அழைத்தாள்.

மைதிலி, "முரளி, எப்படி இருக்கீங்க?"

நான், "நான் நல்லா இருக்கேன் மைதிலி. நீ எப்படி இருக்கே. அமுதா எப்படி இருக்கா?"

மைதிலி, "பேர் எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க ஆனா குழந்தையை இதுவரைக்கும் பாக்கணும்ன்னு தோணலையா?"

நான், "நிச்சயம் பாக்கணும்ன்னு இருக்கு மைதிலி. நீதானே என் வாழ்க்கையில் இனிமேல் தலையிடாதேன்னு சொன்னே?"

மைதிலி, "ம்ம்ம் .. என்னவோ ஆசையில் சொன்னேன். அதெல்லாம் மறந்துட்டேன். நாங்க இப்ப பெங்களூரில்தான் இருக்கோம்"

நான், "கேள்விப் பட்டேன். உனக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சுதா?"

மைதிலி, "இல்லை. எங்க கம்பெனியோட சிஸ்டர் கன்ஸர்ன் ஒண்ணுல அதே வேலை போட்டுக் கொடுத்தாங்க"

நான், "உன் அட்ரெஸ் கொடு நான் வந்து பாக்கறேன்"

மைதிலி, "ஐய்யோ, நீங்க இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வரவேண்டாம். நானே குழந்தையை கூட்டிட்டு வரேன்"

அதிர்ச்சியுற்ற நான், "ஏன் எந்த மாதிரி இடம்?"

மைதிலி, "கொஞ்சம் கச கசன்னு இருக்கும். எல்லாம் லோயர் மிடில் க்ளாஸ் குடியிருப்புகள். அதனால் சொன்னேன்"

நான், "நானும் அப்படி இருந்து முன்னுக்கு வந்தவன்தான் மைதிலி"

மைதிலி, "சும்மா சொன்னேன் முரளி. சரி அட்ரெஸ் கொடுக்கறேன் நீங்களே வாங்க"

வீட்டு விலாசம் கொத்தாள். அடுத்த நாள் மாலை சென்று பார்த்தேன்.

என் மகளைக் கண்டதும் என் கண்கள் கலங்கின. மைதிலியைப் போலவே பேசும் கண்கள். கொழு கொழுவென்ற கன்னங்களுடன் இரண்டு வயது அமுதா தன் மழலையால் என்னைக் கட்டிப் போட்டாள். என் மைதிலி இன்னமும் அப்படியே இருந்தாள். ஒரு குழந்தைக்குத் தாயானதன் அறிகுறிகள் அவள் உடலில் சிறிதும் இல்லை.

சற்று நேரத்தில் சிவராமன் வந்தான். அதிசயமாக என்னைப் பார்த்து, "வாங்க முரளி. எப்படி இருக்கீங்க" என்று நலன் விசாரித்தான்.

சிறிது நேரப் பேச்சுக்குப் பிறகு விடைபெற்றுச் சென்றேன். நான் வாடகைக்கு எடுத்து இருந்த ஃப்ளாட்டில் அன்று இரவு முழுவதும் மைதிலியும் அமுதாவும் என் மனதில் தோன்றி என்னை வாட்டினர்.

அந்த வாரக் கடைசியில் மைதிலி அமுதாவுடன் என் ஃப்ளாட்டுக்கு வந்தாள். குழந்தையுடன் சிறிது நேர விளையாட்டுக்கு பிறகு இருவரையும் அழைத்துக் கொண்டு கப்பன் பார்க்குக்குச் சென்று குழந்தையை விளையாடவிட்டபடி பேசிக் கொண்டு இருந்தோம்.

ஓரிரு முறை என் திருமணப் பேச்சை எடுத்தாள். என் மாறாத பதிலைக் கண்டு விரக்தியடைந்து அதைப் பற்றி பேசுவதை விடுத்தாள்.

சில வாரங்கள் இது போலவே ஓடின. மேலோட்டமாக அவள் சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றினாலும் அவ்வப்போது அவள் முகத்தில் இழையோடிய சோகத்தை நான் கவனிக்கத் தவறவில்லை.

ஓரிரு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் மைதிலியையும் அமுதாவையும் அவர்கள் வீட்டில் விட்டு வருவதற்காகச் சென்ற போது அவளது மாமியார் வந்து இருந்தார். சிவராமனும் அங்கு இருந்தான்.

மாமியார், "எங்கேடி சுத்திட்டு வர்றே" என்று நான் இருப்பதையும் பொருட்படுத்தாமல் தொடங்கினார்.

மைதிலி, "எப்ப வந்தீங்க? ஏன் வந்தவுடனே இந்த மாதிரி கூச்சல் போடறீங்க?"

மாமியார், "நான் வந்தது இருக்கட்டும். எத்தனை நாளா நடக்குது இந்தக் கூத்து?"

நான், "என்னம்மா பேசறீங்க? மைதிலியையும் குழந்தையும் கடைவிதிக்குக் கூட்டிட்டு போயிருந்தேன். இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி பேசறீங்க"

மாமியார் என்னிடம் பேசாமல், "இதுக்குத்தான் நான் முதல்லயே சொன்னேன். இப்ப பாருடா வயித்தில் குழந்தையை கொடுத்ததுக்காக இப்ப வெப்பாட்டி மாதிரி சொந்தம் கொண்டாடறா"



மைதிலி அவ்வளவு கோவப் பட்டு நான் அதுவரை கண்டது இல்லை.

மைதிலி, "ஆமா ... நான் இவருக்கு வைப்பாடிதான். உங்க பையனுக்கு பொண்டாட்டியா இருக்கறதைவிட இவருக்கு வைப்பாட்டியா இருக்கறது எவ்வளவோ மேல்" என்று என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அவள் மாமியாரை வாயடைக்க வைத்தாள்.

அவளது மாமியார், "டேய், இவ்வளவு ஆனதுக்கு அப்பறம் என்னடா உறவு வேண்டிக் கெடக்குது. அறுத்து விட்டுட்டு வாடா"

மைதிலி, "இத்தனை நாளும் உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்ன்னு என்னை என்ன பாடு படுத்துனீங்க? இப்ப எதாவுது பேசினீங்க உங்க வீட்டு மானத்தை கப்பலேத்திடுவேன் ஜாக்கிரதை"

மாமியார், "அப்ப பேருக்கு புருஷன் சொகத்துக்கு காதலனாடி"

மைதிலி, "ஆமா! இதுவரைக்கும் உங்க மகனை அந்த சொகத்தைக் கொடுக்கச் சொல்லலை. என் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா மட்டும் இருக்கச் சொன்னேன். ஒவ்வொரு நாளும் குடிச்சுட்டு வந்து விழறவரை பேருக்குத்தான் புருஷன்னு சொல்லிக்க முடியும்"

மைதிலியா இப்படி பேசுவது என்று மலைத்துப் போயிருந்தேன்.

மேலும் அவர் எதுவும் சொல்லவில்லை. 



No comments:

Post a Comment