Wednesday, October 14, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 4

மான்சி அலுப்பினால் குழப்பமின்றி தூங்கிவிட, காலையில் ஜானகி குளித்துவிட்டு வரும்வரை உறங்கினாள் மான்சி, ஜானகி வந்து எழுப்பியதும் முகத்தை பார்க்க கூசி தலைகவிழ்ந்தபடி எழுந்து குளிக்கப்போனாள்

அன்று முழுவதும் மான்சியின் மனம் குற்றக்குறுகுறுப்பில் நொந்தது, யார் முகத்தையும் பார்க்க கூசினாள், உணவு நேரத்தின்போது கூட சத்யனை ஏறெடுத்தும்ப் பார்க்கவில்லை, அவன் பார்வை சமையலறையில் அவளை தேடும் போதெல்லாம் அவன் பார்வையில் படாமல் ஒதுங்கினாள், ஜானகி விசாரித்தபோது தலைவலி என்று மோசமான பொய் கூறினாள், வழக்கமாக ஏதாவது குறைசொல்லி திட்டும் விஜயா கூட அன்று மான்சியின் முகத்தை பார்த்துவிட்டு அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்துபோனாள்



சமையலறையில் ஜானகிக்கு உதவினாலும், சத்யன் கல்லூரிக்கு செல்ல பைக்கை ஸ்டார்ட் பண்ணும் ஓசையை கேட்க காதை கூர்மைப்படுத்தி காத்திருந்தாள் மான்சி, வெகுநேரமாகியும் பைக்கை கிளப்பும் சத்தம் கேட்காததால் ‘ இன்னிக்கு காலேஜ்க்கு போகலையோ?’ என்று மான்சி யோசிக்கும் போதே வேலைக்காரன் ரங்கன் வந்து “ சத்யன் அய்யாவுக்கு ரொம்ப தலைவலிக்குதாம் சூடா காபி கேட்டாரு?” என்று ஜானகியிடம் கேட்டான்
உடனே பதறிய ஜானகி “ அதான் புள்ள ரெண்டு இட்லியோட எழுந்திருச்சுதா? சித்த இரு உடனே காபி போட்டு தர்றேன்” என்று காபி தயாரிப்பதில் ஜானகி ஈடுபட, சத்யனுக்கு தலைவலி என்றதும் மான்சிக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல வலித்தது, ஆனால் அந்த உணர்வை யாரிடம் காட்டமுடியும்? இறுகிய இதயத்துடன் காய்களை வெட்டினாள்

அன்று முழுவதும் சத்யன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை, நன்றாக தூங்குவதாக கூறி மதிய உணவுகூட மாடியில் அவன் அறைக்கே போனது, மான்சி தவிப்புடன் அவன் முகம் கான காத்திருந்தாள் ‘ ச்சே காலையிலயே பார்த்திருக்கலாம், ஏதோ வீம்புல இருந்துட்டு இப்போ இவ்வளவு அவஸ்தை படவேண்டியிருக்கு’ என்று தன்னையே நொந்துகொண்டள்
வழக்கம் போல இரவு பதினோரு அறையைவிட்டு வெளியே வந்த மான்சி சத்யனின் அறை ஜன்னலை பார்த்தாள், இன்று திறந்திருந்தது, இவளுக்காக காத்திருப்பவன் போல சத்யன் ஜன்னலோரம் சாய்ந்து நின்றிருந்தான், இவளைப்பார்த்ததும் கீழே வருவதாக கூறி கையசைத்துவிட்டு ஜன்னலை மூடினான்

சற்றுநேரத்தில் தோட்டத்தில் மான்சியின் எதிரில் வந்து நின்ற சத்யன், வந்ததுமே அவளை இழுத்து இறுக அணைத்துக்கொண்டான், அவன் அணைப்பில் அவளது தவிப்பெல்லாம் தீர, அவளும் பதிலுக்கு அவனை இறுக்கிக்கொண்டாள்

“ என்ன மான்சி நேத்து நைட் நடந்ததையே நெனைச்சு வருத்தப்பட்டியா?, இதுல வருத்தபட ஒன்னுமில்ல மான்சி, நமக்கு பிடிச்ச ஒருத்தருக்கு நம்மையே தர்றது எப்படி கேவலமாகும், இனிமேல் நடந்ததை பத்தி யோசிக்காதே மான்சி?” என்று நேற்று சொன்னதையே வார்த்தைகளை மாற்றிப்போட்டு சொன்னான் சத்யன்

அவன் நெஞ்சில் இருந்தவாறு “ உங்களுக்கு தலைவலின்னு ரங்கண்ணா சொன்னாரே இப்போ எப்படியிருக்கு?” என்று மான்சி கேட்க

“ ம்ம் இப்போ பரவாயில்லை, காலையிலதான் ரொம்ப அதிகமா இருந்துச்சு, நல்லா படுத்து தூங்கினேன் சரியா போச்சு” என்றவன் தன் விரல்களை அவள் உடலில் அலையவிட்டபடி “ நேத்து உனக்கு பிடிச்சதா மான்சி?” என்று ரொம்ப ரகசியமாக அவளிடம் கேட்க

மான்சி லேசாக உடல் விரைத்தாளே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை, தன் உதட்டால் அவளின் வலத காதை வருடியபடி “ உனக்கு பிடிச்சுதுன்னா அடிக்கடி பண்ணலாமா மான்சி? ஏன்னா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சத்யன் சொன்னதும்..

அவனிடமிருந்து மெதுவாக விலகிய மான்சி, “ எனக்கு தலைவலிக்குது தூங்கனும்” என்று மட்டும் சொல்லிவிட்டு தலைகவிழ்ந்து நிற்க, அவளையே உற்றுப்பார்த்த சத்யன் “ சரி போய் தூங்கு” என்றான்,


அவன் குரலில் கோபமில்லை என்றதும் அவனை நிமிர்ந்துப்பார்த்து பார்வையால் நன்றி சொல்லிவிட்டு மான்சி திரும்பி தன் அறைக்கு போக, சத்யன் அவள் போகும்வரை பார்த்துவிட்டு பிறகு வீட்டுக்குள் போனான்
அன்றோடு சத்யன் அவளை விடவில்லை முன்பு போலவே தனிமையில் அவளைப்பார்க்கும் போதெல்லாம் அணைத்துக்கொண்டான், கிடைத்த நேரத்தில் முத்தமிட்டான், அவசரமாக இருந்தால் நெற்றியில், சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் நிதானமாக இதழ்களில் என ஏதாவது செய்து அவளை திணறடித்தான்

பத்துநாட்களுக்குப் பிறகு இரவுநேரத்தில், தோட்டத்தில் வைத்து ஒரு ஆழமான இதழ் முத்தத்தை வழங்கிவிட்டு “ மான்சி இன்னைக்கு ரொம்ப ஆசையாயிருக்கு ப்ளீஸ் ஒரேயொரு முறை மட்டும் ப்ளீஸ்டி” என்று கெஞ்சுதலாக அவன் கேட்க, ஏற்கனவே அவன் கொடுத்த அற்புத முத்தத்தில் மயங்கிப்போயிருந்த மான்சி வெட்கமாக தலைகுனிய, அவளின் வெட்கத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு அவளைத் தூக்கிக்கொண்டு சத்தமில்லாமல் தன் அறைக்குப் போய் கதவை சாத்தினான் சத்யன்

முன்பு நடந்ததை விட அழகான ஆனால் திருட்டுத்தனமான ஒரு முறையற்ற உறவு மீண்டும் அவர்களுக்குள் வெகு நிதானமாக நடந்தேறியது, இந்த முறை மறுநாள் காலை மான்சி தவிக்கவில்லை துடிக்கவில்லை யாரையும் பார்க்க கூசவில்லை, புருஷனுடன் நிறைவானதொரு உறவு கொண்ட மனைவின் மனநிலையில் இருந்தாள் மான்சி,

அது கழிந்து சிலநாட்கள் கழித்து தோட்டத்துக்கு வந்த சத்யன் தலைவலிப்பதாக கூறி மான்சியை உட்காரவைத்து அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொள்ள.... மான்சி இதமாக அவன் நெற்றியை பிடித்துவிட்டாள், அவளின் இதமான வருடலில் சத்யன் தூங்கிப்போனான்,

இப்போதெல்லாம் ப்ரவுனி அவர்களுக்கு காவலாக இருந்தது, சத்தமின்றி அவர்களை சுற்றிவரும், தூரத்தில் யாராவது வரும் அரவம் கேட்டால் ஓடிவந்து சத்யனின் கால்களை சுரண்டி எச்சரிக்கை செய்யும், இவர்களின் திருட்டு உறவுக்கு அந்த நாயும் துணையாக இருந்தது,

அதன் பிறகு ஒருநாள் ஜானகி தன் உறவினர் வீட்டுக்குப் பெண்ணின் கல்யாணத்திற்கு என்று இரண்டுநாள் லீவு எடுத்துக்கொண்டு போய்விட, சத்யன் துணிச்சலுடன் மான்சியின் அறைக்கே வந்து அவளின் கிழிந்த பாயில் படுத்து சொர்கத்தை பார்வையிட்டான், ஜானகி வராத இரண்டுநாளும் சத்யனின் பாடு கொண்டாட்டமானது, அதிகாலை நான்கு மணிவரை அவளை அணைத்துக்கொண்டு உறங்கினான்,

மான்சிக்கு அவளின் இந்த இழிநிலை மனதுக்கு அருவருப்பாக இருந்தாலும்.... சத்யனின் பேச்சுக்கும் செயலுக்கும் அடிமையாகி இருந்தாள், அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் அவளையறியாமலேயே அவள் உடல் இணங்கி வழிவிட்டது, எல்லாம் முடிந்து அவன் எழுந்து போனபிறகு தன் நிலையை எண்ணி சுயபச்சாதாபத்தில் கண்ணீர் விடுவதே அவளுக்கு வாடிக்கையானது, அவன் தொட்டவுடனேயே துவளும் தன் உடலை எண்ணி அவளுக்கே அருவருப்பாக இருந்தது, தாயைப் போல மகள் என்று உதாரணமாகிட்டோமோ என்று தன்னையே அருவருத்தாள்,

ஆனாலும் சத்யனின் பார்வை ஒன்றே போதும் அவளை வீழ்த்தி விழவைப்பதற்கு, “மான்சி” என்ற அவனது வசீகரக் குரல் ரகசியமாக காதுகளில் ஒலித்த அடுத்த விநாடியே தன் உடல் திருட்டுத்தனமான அந்த உறவுக்கு தயாராகி விடுவதை நினைத்து திணவெடுத்து அலையும் இந்த உடலை நெருப்பிலிட்டு சுட்டால் என்ன? என்று தன்னைத்தானே கேள்வி கேட்பாள், ஆனால் அடுத்த நொடி அவன் நெஞ்சில் அவனின் இறுகிய அணைப்பில் இருப்பாள், அவன் உதடுகளுகள் செய்யும் லீலைக்கு அடிமையாய் கிடந்தாள், இந்த பதினேழு வயதில் அவளுக்கு எல்லாம் புரிந்தது,


இவ்வளவுக்கும் காரணம் நிச்சயம் சத்யன் தன்னை திருமணம் செய்துகொள்வான் என்ற மான்சி நம்பிக்கை ஒன்றேதான், இன்ஜினியரிங் படிப்பு முடிந்து ரிசல்ட் வர காத்திருந்தான் சத்யன், ரிசல்ட் வந்து அவன் அப்பாவின் கம்பெனி பொறுப்புகளை ஏற்றப்பிறகு அடுத்ததாக தங்களின் கல்யாணம் தான் என்று திட்டவட்டமாக நம்பினாள் மான்சி, ஆனால் இப்படியெல்லாம் சத்யன் ஒருமுறை கூட சொன்னதில்லை, எல்லாம் இவளின் கூற்றுதான்,

அவனும் அவளை அந்தளவுக்கு நம்பிக்கையோடு நடத்தினான், தாலி கட்டிய புருஷனைப் போல் அவளை அணைத்துக்கொண்டு தூங்கினான், தன் அறையிலிருந்து அவள் வெளியேரும் போது பாதுகாப்பாக அறைவரை வந்து அனுப்பிவிட்டு அவள் கதவை மூடியப் பிறகுதான் தன் அறைக்குப் போவான், அடிக்கடி அவனுக்கு வரும் தலைவலியின் போது மான்சியின் மடியை தேடினான், தலைவலி வரும் அந்தநேரத்தில் உறவு கொள்ளாமல் அவள் மடியில் தலைவைத்து அவளின் இதமான வருடலில் சுகமாக உறங்கினான்,

ஆனால் அவனிடம் கொண்ட உறவுக்குப் பின் மான்சியின் அழகு பெருமளவு கூடியிருந்தது. தேவையற்ற இடங்களில் இருந்த சதைப்பற்று குறைந்து, தேவையான இடங்களில் சதைப்பற்று ஏறி, உடலில் ஒரு மினுமினுப்புடன் மெருகேறியிருந்தாள், அந்த அழகே சத்யனை மறுபடியும் மறுபடியும் அவளை தேடி நாட வைத்ததோ?

சத்யனின் இந்த செயல்களுக்கு எல்லாம் அவனது பெரிய வீடு ரொம்ப ஏதுவாக இருந்தது, பங்களாக்களில் வழக்கமாக இருக்கும் அடுத்த அறையில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ள முடியாத நிலை இவர்களுக்கு சாதகமாக இருந்தது, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஆனால் சுதந்திரமாக இருந்தனர், மான்சி விஜயாவின் பார்வையிலேயே படுவதில்லை என்பதால். அவளின் தேள் வார்த்தைகளில் இருந்தும் துளைக்கும் பார்வையில் இருந்ததும் தப்பித்து வந்தாள்,



சத்யனுடன் வாழ்ந்த நாட்களில் ஆண் பெண் உறவின் அத்தனை ரகசியங்களும் மான்சிக்கு தெளிவானது, சத்யனின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தாள், சத்யனை தன் கணவனாகவே வரித்தாள், அவன் தலைவலி தீர விரதமிருந்தாள், கிடைக்கும் நேரத்தில் அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அடிப்பிரதட்சணம் செய்தாள், இத்தனை நாளில் ஒருமுறை கூட அவள் மனம் அவனை துளிகூட சந்தேகிக்கவில்லை, அவனை முழுவதுமாக நம்பினாள்,
மான்சி கல்லூரி செல்லும் நாளும் வந்தது, முதல்நாள் இரவு சத்யனை வெகுநேரம் அணைத்தபடி இருந்தாள், கல்லூரிக்கு போனால் அவனை பிரியநேரிடுமோ என்று மனதுக்குள் பயந்தாள்

ஆனால் சத்யன் அவளுக்கு நிறைய புத்திமதி சொன்னான், “ நன்றாக படித்து நல்ல வேலையில் அமர்ந்து, சொந்தகாலில் நின்று பெரிய ஆளாய் வரனும் மான்சி” என்று இன்னும் ஏகப்பட்ட அறிவுரைகள் சொன்னான்,

அன்றுதான் மான்சியின் நம்பிக்கை முதல்முறையாக ஆட்டம் கண்டது, இவனை கல்யாணம் பண்ணப் பிறகு நான் ஏன் வேலைக்கு போகனும்? ஏன் சொந்தகாலில் நிக்கனும்? நான் ஏன் பெரிய ஆளாய் வரனும்? இன்னும் கேட்டால் படிப்பு கூட இருப்பதே போதுமே? சத்யனின் மனைவிக்கு வேண்டுமானால் ஒரு டிகிரி தேவைப்படும்? மற்றபடி எனக்கு இவன் மட்டுமே போதுமே?, முதன்முதலாக மண்டை குழம்பியது மான்சிக்கு, ஆனால் சந்தோஷமான முகபாவனையில் சொல்லும் அவனை துருவ மனமின்றி சரியென்று தலையசைத்து வைத்தாள்

ஒருவாரம் கல்லூரிக்கு போய் வந்தாள், அந்த ஒரு வாரமும் இரவில் சத்யன் அவளை சந்திக்கவில்லை, ஜன்னல் வழியாக இவளைப் பார்த்து கையசைப்பதும், ஜாடையில் பேசுவதும், காற்றில் முத்தமிடுவதுமாக இருந்தான், ஞாயிறன்று ஒருநாள் மட்டும் இறங்கி வந்து அவளை அணைத்துக்கொண்டான்


மான்சி அழுவதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு காரணம் கேட்டபோது “ இல்லடா, என்னால உன் படிப்பு பாதிக்கக்கூடாதுன்னு தான்” என்று அவள் தலையை வருடியபடியே கூறியவன் தன் நெஞ்சில் இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி “ ஆமா நீ ஏன் ரொம்ப டல்லா இருக்க?, இன்னிக்கு காபி கேட்க கிச்சனுக்கு போறப்ப, ஜானகியம்மா புலம்புறத கேட்டேன், நீ சரியாவே சாப்பிடுறதில்லையாமே? ஏன் மான்சி” என்று சத்யன் கேட்க

அவன் கழுத்தில் இருந்த கணமான செயினை இழுத்து விளையாடியபடி “ பின்ன உங்களை பார்க்காம எனக்கு சாப்பிட பிடிக்கலை, அப்புறம் காலேஜ்க்கு போக பிடிக்கலை” என்று விளையாட்டாக சொன்னவள் “ காலேஜில் செமத்தியா தூக்கம் தான் வருதுங்க” என்று செல்லம் கொஞ்சினாள் மான்சி

“ இவ்வளவு நாள் வீட்டுலயே இருந்தேல்ல அதான் அப்படியிருக்க,, போகப்போக சரியாயிடும்” என்றவன் அவளை விலக்கி அறையை நோக்கி தள்ளிக்கொண்டு போய் “ சரி வேளையோடு தூங்க நான் கிளம்புறேன்” என்று கூற

மான்சி அவன முகத்தையே ஏக்கமாக பார்த்தாள், அவள் பார்வை அவள் என்ன கேட்கிறாள் என்று சொல்ல, சத்யன் அவளை இறுக்கி அணைத்து முகத்தை வளைத்து அவளின் தேன் சுரக்கும் இதழ்களை கவ்விக்கொண்டான்,, எப்போதும் ஆவேசமாக முத்தமிடும் சத்யன் இன்று மென்மையை கடைபிடிக்க, மான்சி ஆவேசமானாள், தன் இரு கையாலும் அவன் பிடரி மயிரை கொத்தாக பற்றியவள் அவனின் முரட்டு உதடுகளை முரட்டுத்தனமாக கவ்விக்கொண்டாள், முழு உதட்டையும் தனக்குள் உறிஞ்சி குடித்தவள் ஆவேசம் அடங்காமல் மறுபடியும் மறுபடியும் அவன் உதட்டை இழுத்து சப்பினாள், சத்யன் மூச்சுக்கு திணறுவது போல் ஆனது,

வெகுநேரம் கழித்து அவளை தன்னிடமிருந்த பிய்த்து எடுத்த சத்யன், அவள் முத்தை தன் கைகளில் ஏந்தி சிறிதுநேரம் உற்றுப்பார்த்து விட்டு “ போய் தூங்கு மான்சி” என்றான் அமைதியாக.....

மான்சிக்கும் ஏதோ போல் இருக்க சரியென்று தலையசைத்துவிட்டு தன் அறைக்குள் போனாள்

மறாவது வாரம் இரண்டாவது நாள் மான்சி அதிகாலையில் எழுந்து வீட்டு வேளைகளை முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி மதிய உணவுக்காக ஜானகி தரும் காலையில் மீந்ததை வாங்க டிபன்பாக்ஸுடன் சமையலறைக்கு வந்தாள், ஆனால் ஜானகி இல்லை, உதவி செய்யும் பெண் மட்டுமே இருந்தாள், மான்சி அவளை நெருங்கி “ வாசுகி அக்கா அம்மாச்சி எங்க காணோம்?” என்று கேட்க ..

“ அவங்களுக்கு போன் வந்ததா ரங்கன் வந்து சொன்னாரு, அதான் பேசப் போயிருக்காங்க” என்று சொன்னாள் அந்த பெண்..

“ ஓ அப்படியா?” என்று மான்சி திரும்பு போதே, ஜானகி முகமெல்லாம் சந்தோஷமாக உள்ளே வந்தாள்

ஜானகியிடம் ஓடிச்சென்று “ என்னா அம்மாச்சி முகத்துல இவ்வளவு சந்தோஷம்” என்று மான்சி கேட்க,

மான்சியை நெருங்கிய ஜானகி “ போன மாசம் என் மக வயித்து பேத்திக்கு கல்யாணம்னு ஊருக்கு போனேன்ல மான்சி, அந்த பேத்தி இப்போ புள்ள உண்டாயிருக்காளாம், என் மகதான் போன் பண்ணா, அவளுக்கு பேரக்குழந்தை பிறக்கப் போற சந்தோஷம், நானும் நாலாவது தலைமுறை பார்க்கப் போறேன்ல அதான் எனக்கு சந்தோஷம் ” என்று ஜானகி கூற ..

“ அய்ய அம்மாச்சி....... போன மாசம் தான கல்யாணம் ஆச்சு, சரி சொன்னா ஒன்றரை மாசம் ஆகுது அதுக்குள்ள எப்படி பாப்பா உண்டாகும்?” என்று கேட்க..


ஜானகி எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு போக, வாசுகி மான்சியிடம் வந்து அவளை சற்றுதூரம் தள்ளிக்கொண்டு போய், அவள் தலையில் தட்டி “ அடி பைத்தியக்காரி, ஆளுதான் வளர்ந்திருக்க, மத்தபடி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியலை? இதோபார் மான்சி புள்ளை உண்டாக கல்யாணம் ஆகி வருஷக்கணக்கில் ஆகனும்னு இல்லை, கல்யாணத்தன்னிக்கு ராத்திரி மட்டும் போதும் புள்ளை உண்டாக, என் பெரிய மக கல்யாணம் முடிஞ்ச பத்தாவது மாசமே பொறந்திட்டா, என் கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மா நான் தலை குளிச்சது தான், அப்படியே என் மக நின்னுட்டா” என்று வாசுகி பெருமை பேச.

மான்சி சங்கடமாக சிரித்தபடி தலையாட்டி விட்டு “ இப்போ புரியுதுக்கா” என்று கூறி அங்கிருந்து நழுவினாள், ஜானகி இட்லியை வைத்து டிபன்பாக்ஸை எடுத்துவந்து கொடுக்க மான்சி அதை வாங்கிக்கொண்டு “ நான் கிளம்புறேன் அம்மாச்சி” என்று கூறிவிட்டு தன் அறைக்கு வந்து காலேஜுக்கு எடுத்துச்செல்லும் பையில் டிபன் பாக்ஸை வைத்துவிட்டு கண்ணாடி முன்னாடி நின்று கலைந்திருந்த கூந்தலை சரி செய்தாள்

அப்போது வாசுகி கூறிய விஷயங்கள் மான்சியின் மனதில் ஓடியது, ம்ம் எனக்கும் சத்யனுக்கும் கூட கல்யாணம் ஆன பத்தாவது மாசம புள்ளை பிறக்கும், என்னமோ இந்த அக்கா மட்டும் உலகத்திலேயே ஓவியமா பிள்ளைப் பெத்துக்கிட்ட மாதிரி பீத்திக்கிறாங்க, என்று வாசுகியின் மேல் கோபம் கொண்டாள்

சத்யனின் குழந்தையை தன் வயிற்றில் தாங்கினால் எப்படியிருக்கும் என்று அவள் சிந்தனை விரிந்தது, மெதுவாக விரலால் வயிற்றை தடவினாள்,, வாசுகி சொன்ன நாள் கணக்கை எல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சுக்கனும் என்று, தன் மனதில் பதிவு செய்து கொண்டாள் மான்சி

அப்போதுதான் ஹாஸ்டலில் இருந்து வந்த பிறகு தான் இன்னும் தலைக்கு குளிக்கவில்லை என்ற ஞாபகம் வந்தது மான்சி, வயதுக்கு வந்த நாட்களில் இருந்து எப்பவுமே பலநாட்கள் பின் தங்கி வரும் பீரியட்ஸால் அவள் ஞாபகம் எதுவும் வைத்துக்கொள்வது இல்லை, பள்ளிப்படிப்பை முடித்து ஹாஸ்டலை காலி செய்யும்போது ஆறாவது நாள் என்பது மட்டும் சரியாக ஞாபகம் இருந்தது, சுவற்றில் மாட்டியிருந்த மாத காலண்டரை எடுத்து அன்றையதேதி வரை கணக்கிட்டு பார்த்தாள் மான்சி

இன்றோடு எழுபத்தியாறு நாட்கள் ஆகிவிட்டதாக கணக்கிட்டவள், ச்சே இந்தமுறை ரொம்ப லேட்டாயிருச்சே? எப்போ வரும்னு தெரியலையே? என்று எண்ணியபடி காலண்டரை மாட்டிவிட்டு கல்லூரி பையை குனிந்து எடுக்க, சற்றுமுன் ஜானகி கொடுத்த இரண்டு இட்லி தொண்டையில் வந்து எட்டிப்பார்த்தது, அப்படியே வாயை பொத்திக்கொண்டு நிமிர்ந்தவள், அவசரமாக வெளியேறி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஓரம் ஓடிய கால்வாயில் இட்லியை கக்கினாள், குடலே வந்துவிடும் ஓங்கரிப்புடன் வாந்தியெடுத்து விட்டு , பூச்செடிகளுக்கு போகும் பைப் லைனில் தண்ணீர் பிடித்து வாயையும் முகத்தையும் கழுவிக்கொண்டு அறைக்கு வந்தாள், ரொம்பவும் களைப்பாக இருக்க பாயில் சுருண்டு படுத்துக்கொண்டாள்

‘ ச்சே நேத்து காலேஜ்லயும் இப்படித்தான் மதியம் ரெண்டுவாய் சோறு தின்னுட்டு நாலுமுறை வாந்தி வந்தது, எல்லாரும் ஏதாவது ஃபுட் பாய்ஸன் ஆயிருச்சான்னு பதறிப் போனாங்க” என்ற எண்ணமிட்ட படி படுத்திருந்தவள் தன் கையில் இருந்த இருபது ரூபாய் வாட்சில் மணி பார்த்தாள், 10- 13 என்று சரியாக சொன்னது அந்த வாட்ச், “ ம்ஹூம் இதுக்கு மேல காலேஜ்க்கு போன வெளியதான் தள்ளுவாங்க, அதைவிட நாளைக்கே போகலாம்” என்று அப்படியே படுத்துக்கொண்டாள் மான்சி


சற்று நேரத்தில் அங்கே வந்த ஜானகி படுத்துகிடந்த மான்சியைப் பார்த்து பதறிப்போய் “ கண்ணு என்னம்மா ஆச்சு?, காலேசுக்கு போகலையா?” என்று கேட்க

பாதி உறக்கத்தில் விழித்த மான்சி “ இல்ல அம்மாச்சி தலைவலிக்குற மாதிரி இருந்துச்சு, அதோட கிளம்ப ரொம்ப லேட்டாயிருச்சு, காலேஜ்ல வெளியதான், அதான் நாளைக்கு போகலாம்னு படுத்துட்டேன்” ஆமா நீங்க என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க அம்மாச்சி?” என்று மான்சி கேட்க

“ என் பேத்தி முழுகாம இருக்கான்னு காலையில போன் வந்துச்சில்ல, அவ வாந்தியும் மயக்கமுமா படுத்தே கெடக்காலாம், அதான் ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்னு விஜயாம்மா கிட்ட லீவு கேட்டேன், இன்னிக்கு போய்ட்டு நாளைக்கு ராவுக்குள்ள வரனும்னு சொலெலி லீவு குடுத்தாங்க, இப்ப போனாதான் மினி பஸ்ஸை பிடிக்க முடியும்” என்ற ஜானகி ஒரு பையில் ஒரு புடவை ரவிக்கையை சுருட்டி வைத்துக்கொண்டு மறுபடியும் மான்சியிடம் வந்து அமர்ந்தாள்,

“ ஏம்மா கண்ணு ரொம்ப தலைவலிக்குதா?, இப்புடி சுருண்டு கெடக்கியே? இப்போ உன்னைய விட்டுட்டு நான் எப்புடி போறது?” என்று வருத்தமாக கூற
கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்த மான்சி “ அய்யோ அம்மாச்சி எனக்கு ஓன்னும் இல்ல, கொஞ்ச நேரத்தில் சரியாயிடும், நீங்க மொதல்ல அக்காவை போய் பாருங்க” என்று கூறிவிட்டு வரட்சியாய் புன்னகைக்க...

மான்சி கூறியதும் நிம்மதியாக எழுந்த ஜானகி “ ம்ஹும் இதேமாதிரி உனக்கும் ஒரு நல்லவனாப் பார்த்து கல்யாணத்தை பண்ணி உன் வயத்து புள்ளைகளையும் பார்த்துட்டா அதோட என்னை எமன் வந்து கூப்பிட்டா கூட நிம்மதியா போயிடுவேன்” என்று கூறிவிட்டு தன் முந்தானையின் முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு நூறுரூபாய்களை எடுத்து மான்சியின் கையில் தினித்து “ ஏதோ நோட்டு வாங்கனும்னு சொன்னியே கண்ணு, இந்த ரூவாவுல வாங்கிக்க, பெரியய்யா குடுத்ததும் அந்த ரூவாயை வேற ஏதாச்சும் செலவுக்கு வச்சுக்க” என்று கூறிவிட்டு அறையின் வாசலை நெருங்கிய ஜானகி “ நான் வாசுகி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன், அப்புறமா அம்மா இல்லாதப்ப போயி சூடா ஒரு காபி வாங்கி குடி சரியாபோயிடும்” என்று கூறிவிட்டு, தனது நைந்து போன செருப்பை அறையின் வாசலில் தேடினாள் ஜானகி

மான்சி மெதுவாக எழுந்து வந்த செருப்பை கண்டுபிடித்து ஜானகியின் காலருகே போட்டுவிட்டு “ ஏன் பாட்டி மாசமா இருந்தா நெறைய வாந்தி எடுப்பாங்களா என்ன?” என்று கேட்க

காலில் அவசரமாக செருப்பை மாட்டிக்கொண்டு “ பின்ன புள்ளைன்னா சும்மாவா, அது எப்ப வயித்துல ஜனிக்குதோ அப்பயிருந்து ஆத்தாள வாந்தி மயக்கம்னு படுத்தி எடுத்துடுமே, பச்சத் தண்ணிய கூட பல்லுல படவிடாது ” என்று போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே போனாள் ஜானகி



மான்சி அறைக்கதவை மூடிவிட்டு வந்து அமைதியாக பாயில் அமர்ந்தாள், முழங்கால்களை கட்டிக்கொண்டு அதில் தன் முகத்தைப் பதித்தாள், சற்று நேரம்வரை அசையாமல் அப்படியே இருந்தவள் திடீரென வீரிட்டு அழ ஆரம்பித்தாள், தன் அடிவயிற்றை கையால் அழுத்திக்கொண்டு “ அப்பா உன் பேரை கெடுத்துட்டேனே அப்பா,, மாணிக்கம் பொண்டாட்டியும் சரியில்லை மகளும் சரியில்லன்னு ஊர் காறித்துப்பும் படி பண்ணிட்டேனே அப்பா” என்று வாய்விட்டு கத்தியபடி ஓவென்று கதறினாள் மான்சி




No comments:

Post a Comment