Wednesday, October 7, 2015

மைதிலி - அத்தியாயம் - 5

2007

மால்டீவ்ஸில் இருந்து நேராக நான் மைதிலியை அமெரிக்கா அழைத்துக் செல்ல விரும்பினேன். மைதிலி, "வேண்டாம்பா .. பெங்களூரிலேயே நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க. டாக்டர் ஸ்ரீநாத், கோபிநாத், ஹிராமத்ன்னு நான் செக்-அப்புக்கு போகும் பாங்களூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜி (Bangalore Institute Of Oncology)இலேயே மூணு பெரிய டாக்டர்ஸ் இருக்காங்க. அங்கேதான் நான் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவேன்" என்றபிறகு அடுத்த நாளே பெங்களூர் திரும்பினோம்.

வீட்டில் இருந்தே டாக்டர்களை தொலைபேசியில் அணுகி பேசியபின் அந்த மருத்துவமனைக்குச் சென்றோம்.

முதலில் அவளுக்கு ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI Scan - Magnetic Resonance Imaging Scan) எடுக்கச் சொன்னார்கள். மறுபடி அவளது மார்பகத்தில் புற்று நோய் என்று சந்தேகித்த பகுதிக்குள்ளிருந்து ஒரு ஊசியை நுழைத்து உறிஞ்சி எடுக்கப் பட்ட இரத்தமும் தசையும் கலந்த சிறு துளியை டெஸ்டுக்கு எடுத்துச் சென்றனர். இப்படி ஊசியால் எடுத்து புற்று நோய் பரிசோதனை செய்வதை Fine Needle Aspiration Biopsy என்று அழைப்பார்கள். இம்முறையால் 60% அளவுக்கு புற்று நோயா இல்லையா என்று தெளிவாகக் கூற முடியும். அடுத்த கட்டப் பரிசோதனை புற்று நோய் என்று நம்பப்படும் பகுதிகளையே அறுத்து எடுத்து பரிசோதிப்பது. என் மைதிலி அதைத்தான் சிறிது காலம் தாமதிக்கலாம் என்று சிறு பிள்ளைத்தனமாக முடிவெடுத்து இருந்தாள்.



அடுத்த நாள் டாக்டர் ஸ்ரீநாத்தை சந்தித்தோம். நான் அவரிடம் மைதிலி இல்லாமல் தனியாக பேசும்படி சொல்லி இருந்தேன். மைதிலியை மட்டும் ஒரு பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றனர். வெளியில் அமர்ந்து இருந்த என்னை தன் அறைக்குள் அழைத்தார். என் மனத்தில் இருந்த கலக்கத்தை அவர் புரிந்து கொண்டார்.

"வாங்க மிஸ்டர் முரளீதரன். உங்களைப் பத்தி நிறைய கேள்விப் பட்டு இருக்கேன். I admire you but I can not say I am glad to meet you in this situation"

"I understand your predicament. Please let me know accurately her condition"

"நாலு மாசத்துக்கு முன்னாடி FNA Biopsy பண்ணினப்ப முடிவா என்னால சொல்ல முடியலை. அதனால் தான் உங்க மனைவிகிட்ட மேற்கொண்டு ஒரு சின்ன லம்பை எடுத்து டெஸ்ட் பண்ணலாம்ன்னு சொன்னேன். அவங்க அதுக்கு அப்பறம் வரவே இல்லை. நீங்க யூ.எஸ்ஸுக்கு கூட்டிட்டு போய் ட்ரீட் பண்ணறீங்கன்னு நினைச்சுட்டு விட்டுட்டேன். இல்லைன்னா நானே உங்களை காண்டாக்ட் பண்ணி விஷயத்தைச் சொல்லி இருப்பேன். I am really sorry for that" என்று மைதிலியின் சிறு பிள்ளைத் தனமான முடிவுக்கு அவர் மன்னிப்புக் கேட்டார்.

"உங்க மேல் என்ன தப்பு டாக்டர்? நீங்க லம்ப்பை எடுக்கணும்ன்ன உடனே கான்ஸர்தான், அதனால் ப்ரெஸ்ட்டை ரிமூவ் பண்ணிடுவாங்கன்னு நினைச்சுட்டு எவ்வளவு நாள் முடியுமோ பார்க்கலாம் அப்படின்னு ஒரு மடத்தனமான முடிவுக்கு வந்து இருக்கா"

"நிறைய பெண்கள் செய்யறதைத்தான் இவங்களும் செஞ்சு இருக்காங்க முரளீதரன். அதுக்காக நீங்க அவங்ககிட்ட தயவு செஞ்சு கோபப் படக்கூடாது. இனிமேல்தான் உங்க சப்போர்ட் அவங்களுக்கு ரொம்ப தேவை"

"அப்ப ப்ரெஸ்ட் கான்ஸர்ன்னு கன்ஃபர்ம் ஆயிடுச்சா?"

"அதையும் தாண்டி இருக்குமா அப்படிங்கறதுதான் என் கவலை"

"என்ன சொல்லறீங்க டாக்டர்?"

"ப்ரெஸ்ட் கான்ஸரில் உள்ளுக்குள் இருக்கும் கட்டியின் அளவைப் பொறுத்து ஒண்ணில் இருந்து நாலுன்னு நாங்க கணக்கிடுவோம். இவங்களுது மூணாவுது அளவில் இருக்கு. சோ, நிச்சயம் ப்ரெஸ்ட் கான்ஸர்தான். தேவையான ட்ரீட்மெண்டை உடனே தொடங்கணும். ஆனா அதை தவிற, ப்ரெஸ்ட்டுக்கு உள்ளேயும் ப்ரெஸ்டை சுத்தியும், அக்குளிலும் இருக்கும் லிம்ஃப் நோட் (lymph nodes) எந்த அளவுக்கு பாதிச்சு இருக்குன்னு பார்க்கணும். அதை வெச்சுத்தான் அவங்க அடுத்த அஞ்சு வருஷம் மறுபடி கான்ஸர் வராம இருக்க எவ்வளவு சான்ஸ் இருக்குன்னு சொல்ல முடியும்"

"மறுபடியும் கான்ஸர் வரும்ன்னா?"

"கான்ஸர் அப்படிப் பட்ட வியாதி முரளீதரன். ஒருதடவை வந்து அதை க்யூர் பண்ணினா மறுபடி திரும்பி நிச்சயம் வரும் ஆனா எவ்வளவு சீக்கரம் வரும் அப்படிங்கறது கான்ஸரின் கடுமையையும் பேஷண்டோட அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது"


சில தகவல்கள்:
ப்ரெஸ்ட் கான்ஸர் என்றால் என்ன?
தானாக கறையாத, மேலும் வளரும் அல்லது பரவும் கட்டி. பெரும்பான்மையான ப்ரெஸ்ட் கான்ஸர்கள் கண்ணுக்கு தென்படாது. முலைக் காம்பையும் சேர்த்து பாதிக்கும் ஒரு வகை ப்ரெஸ்ட் கான்ஸர் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்படி இருக்கும்.

ப்ரெஸ்ட் கான்ஸர் வருவதற்கு காரணங்கள் என்ன?
மருத்துவ ரீதியாக இன்னும் கண்டு பிடிக்கப் படாதவை. ஆனால் இதுவரை பாதித்தவர்களை வகைப் படுத்திப் பார்த்தால் கீழ்கண்டவை காரணங்களாக இருக்க சாத்தியக் கூறுகள் உள்ளன:

  • வயது : முப்பது வயதுக்குப் பிறகே ப்ரெஸ்ட் கேன்ஸர் வருகிறது
  • பூர்வீகம் : தாயுக்கு வந்து இருந்தால் மகளுக்கு வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்
  • மார்பகத்தின் கடினம்: 'கும்முன்னு இருக்கு பாருடா' என்று பார்பவர்கள் சொல்லும் படியான மார்பகங்களுக்கு வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
  • சீரற்ற மாதவிடாய்: முப்பது நாட்களுக்கு ஒரு முறை வரும் மாதவிடாய் அடிக்கடி சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வருவது. மாதவிடாய் சீர்குலைய பல் வேறு காரணங்கள் உள்ளன ..
  • மகப் பேறு: முதல் குழந்தை முப்பது வயதுக்குப் பிறகு பெற்றுக் கொள்பவர்களுக்கும், முப்பத்தி ஐந்து வயதுக்குப் பிறகும் குழந்தை பெறாமல் (திருமணமாகியும்) இருப்பவர்களுக்கும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கின்றன. ஆனால் திருமணமாகாமல் இருக்கும் (அதாவது உடலுறவு அதிகம் வைத்து இராத) பெண்களிடையே ப்ரெஸ்ட் கான்ஸரின் பரவல் மிகவும் குறைவே.
  • தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது, அல்லது மிகக் குறைந்த நாட்களில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது
  • குடி ... குடிக்கும் பெண்களுக்கு ப்ரெஸ்ட் கான்ஸர் வருவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம்
  • உடலின் பருமன் / அளவுக்கு அதிகமான உடலின் எடை
  • உடற் பயிற்சி / வியர்வை வரும்படியான (உடலுறவைத் தவிற மற்ற) காரியங்கள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது

மார்பகத்தில் வரும் புற்று நோயின் கடுமையை கணக்கிட மூன்று வெவ்வேறு அளவுகள் உள்ளன. அவை கான்ஸரின் அளவு, லிம்ஃப் நோட் (lymph node)களின் நிலை, கான்ஸரின் பரவல். இவற்றைக் கீழே விளக்கி உள்ளேன்:

ப்ரெஸ்ட் கான்ஸரின் (கட்டியின் அளவு) அளவு:

  • 0 - எந்த விதமான கட்டியோ முடிச்சோ மார்பகத்தில் இல்லை
  • 1 - கைக்குப் பிடிபடும் சிறு முடிச்சுகள் அல்லது கட்டிகள்
  • 2 - இரண்டு செண்டி மீட்டருக்கும் சிறிய கட்டி
  • 3 - இரண்டில் இருந்து ஐந்து செண்டி மீட்டர் அளவுள்ள கட்டி
லிம்ஃப் நோட்களின் நிலை: 
லிம்ஃப் நோட் (lymph node) எனப் படுபவை உடலில் பல இடங்களிலும் இருக்கின்றன. அவை சிறிய பந்து போல் இருக்கும். இவை உடலுக்குள் வரும் கிருமிகளை தடுக்கின்றன. இவைகளுக்குள் லிம்ஃபோஸைட்ஸ் என்ற வகையான வெள்ளை ரத்த அணுக்களும் உடலை வெளியில் இருந்து வரும் கிருமிகளை தடுக்கும் இம்யூன் ஸெல்களும் இருக்கும். கான்ஸர் பாதிக்கும் போது லிம்ஃப் நோட்களின் நிலை கான்ஸர் எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறது என்பதை குறிக்கும். முக்கியமாக உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் சாத்தியக் கூறு லிம்ஃப் நோட்களின் நிலையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கான்ஸரின் பரவல்:
 கான்ஸர் மார்பகத்துக்கு வெளியே மார்புக்கூட்டுக்குள் எவ்வளவு தூரம் சென்று இருக்கிறது என்பதன் அளவு.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அமெரிக்க கான்ஸர் சொஸைட்டியின் www.cancer.org என்ற தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை. இவைகளை ஊடுறுவிப் பார்த்தால் இளைய சமுதாயத்தினருக்கு பல உண்மைகள் புலப்படும். நமது நாகரீகத்தின் மேன்பாடு வெளிப்படும்.




புதன், ஜனவரி 25, அதிகாலை

படுக்கையில் இருந்து எழுந்ததும் தனிச்சையாக என் கை படுக்கையின் அடுத்த பக்கத்துக்குச் சென்றது. எழுந்தவன் சில நிமிடங்கள் அந்த வெற்றிடத்தைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். 'நான் போனதுக்கு அப்பறமும் தினம் வாக் போங்கப்பா. சோம்பேரித்தனத்தில் மிஸ் பண்ணாதீங்க' என்ற அவளுடைய அறிவுரை மனதுக்கு வந்தது. இருக்கும் ஏழு நாட்களையும் திடகாத்திரமான தேகத்துடன் கழிக்க எண்ணி வாக் செல்லப் புறப்பட்டேன்.

எப்போதும் காலை வெகு நேரம் தூங்கும் என் மகன் அஷோக் ஹாலில் காஃபிக் கோப்பையுடன் அமர்ந்து இருந்தான்.

நான், "ஹாய் அஷோக். குட் டு சீ யூ சோ எர்லி" என்றவாறு அவன் அருகில் அமர்ந்து எனக்குக் கொடுத்த காஃபியைப் பருகத் தொடங்கினேன்.

அஷோக், "ஹே, டாட். ஹாட் அ குட் ஸ்லீப்?" என்றவன் பிறகு மௌனமாகி "சாரி, I know it would have been difficult"

நான், "இல்லடா. நான் நல்லா தூங்கினேன்"

வியப்புடன் என்னைப் பார்த்தான். பிறகு, "You going for a walk. நானும் வர்றேன். Give me five minutes" என்றபிறகு என் பதிலுக்குக் காத்திராமல் தன் அறைக்குச் சென்றான். அமுதா என்னை எப்போதும் ஒருமையில் அழைக்க மாட்டாள். அவள் தாய் கற்பித்த பாடம். ஆனால் அஷோக்குக்கு அப்படிப் பேசுவது அவனால் முடியாத ஒன்று. தாயை சமாதானப் படுத்த ஆங்கிலமும் தமிழும் கலந்து என்னை ஒருமையில் அழைக்கும் வாய்ப்பு நேராதபடி பேசக் கற்றுக் கொண்டான்.

ஏழு மாத கர்ப்பிணியான தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு அவன் வந்தபோது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கடற்கரையில் அவனது நிர்வாகத்தில் இருக்கும் அமெரிக்க வியாபாரத்தை பற்றிப் பேசிக் கொண்டு நடந்தோம். மஹேஷ் அளவுக்கு அனுபவம் இன்னும் அஷோக்குக்கு வந்து இருக்கவில்லை. ஆனால், விரிவாக்கங்கள், புதுத் துறைகளில் ஈடுபடுதல் இவற்றிற்கான தகவல்கள் சேகரிப்பது அத்தகவல்களின் அடிப்படையில் என்ன முடிவெடுப்பது போன்ற பொறுப்பை மஹேஷும் அமுதாவும் அஷோக்கிடம் விட்டு இருந்தனர். Jack of all trades, master of none என்று கிண்டலடித்தாலும் அவனது பொது அறிவு என்னை பிரமிக்க வைக்கும். புதுக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய எல்லா விவரங்களும் எப்போதும் அவன் விரல் நுனியில் இருக்கும்.

நடுவில் சில சமயங்கள் எங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்று இளைப்பாரும் மனைவிமேல் சிறிதும் கவனம் குறையாமல் அவன் என்னுடன் நடந்து வந்தான். அமுதாவும் மஹேஷும் எடுத்த பேச்சை அவர்கள் இருவரும் எடுத்தார்கள்.

அஷோக், "ஸோ டாட், வாட் இஸ் யுவர் ப்ளான்?" எதையும் மிக இலகுவாக கையாளுவது அவனுக்கு கைவந்த கலை. பல முறை வீட்டில் எனக்கும் மைதிலிக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்கள் இவனால் நின்று போகும்.

நான், "என்ன ப்ளான்?"

அஷோக், "வெல், பதினோறாம் நாளைக்கு அப்பறம் .. " என்று இழுத்தான்.

நான், "அஷோக், Let us not keep a target date on this matter. என்னை கொஞ்சம் நிதானமாக யோசிக்க விடுங்க" என்று சொல்லும்போதே இன்னும் ஏழு நாட்கள் என்று நான் காலையில் நினைத்தது சரிதானா என்று என் மனத்தில் மூலையில் ஒரு கேள்வி எழுந்தது.


1978 (தொடர்கிறது)

அடுத்த நாள் மாலை மைதிலியின் வீட்டை அடைந்தேன்.

சிவராமனுடன் மைதிலியின் மாமியாரும் இருந்தார்கள்.

சில தர்மசங்கடமான நிமிடங்களுக்குப் பிறகு ...

நான், "என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?"

சிவராமன், "எதைப் பத்தி நீங்க பேசறீங்க?"

நான், "உங்க மேரீட் லைஃப்ஃபைப் பத்தி என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்கன்னு கேட்டேன்"

சிவராமன், "ஏன்? என் மேரீட் லைஃப்ஃபைப் பத்தி என்ன?"

நான், "இல்லை. உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கலைன்னு எல்லாப் பழியும் அவமேல வருது. அதனால கேட்டேன்"

சிவராமனின் தாயார், "இங்கபாருப்பா, நீ அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கேங்கறதால இங்க எல்லாரையும் எடுத்து எறிஞ்சு பேச வேண்டாம். இது எங்க குடும்பப் பிரச்சனை. நீ இதில் தலையிட வேண்டாம்"

நான், "நிச்சயம் தலையிடுவேன். நான் அவளை ஒரு காலத்தில் உயிரா காதலிச்சேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டேன். அவளோட அப்பா சொன்னதுக்காக உங்க பையன் கழுத்தில் தாலி கட்டினா. அவ நல்லா இருக்கணுங்கற அக்கறை எனக்கு நிறையவே இருக்கு. ஏற்கனவே இருக்கற பிரச்சனை போதாதுன்னு குழந்தை பிறக்கலைன்னு அவ பேச்சு வாங்கறதைப் பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது"

அந்தக் காலத்தில் காதல் என்பது புதுமை இல்லை என்றாலும் நான் அப்படி பேசுவேன் என்று அவர்கள் எதிர்பார்த்து இருக்கவில்லை.

சிவராமனின் தாயார், "தாலியை மட்டும் கழுத்தில் வாங்கிட்டு மனசில உங்கூட குடித்தனம் நடத்திட்டு இருந்தா எப்படி குழந்தை பிறக்கும்?"

சுவரோரம் நின்று இருந்த மைதிலி புழுப் போல நெளிவதைக் கண்டு நான் மனம் கொதித்தேன்.

நான் என் கைப் பையில் இருந்த விஜயா ஹாஸ்பிடல் ரிப்போர்டுகளை எடுத்து எதிரில் இருந்த டீ-பாயில் போட்ட படி தொடர்ந்தேன், "இங்க பாருங்கம்மா உங்க பையன் வண்டவாளம் எல்லாம் எனக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும். சும்மா பேசிட்டே போகாதிங்க"

சிவராமனின் தாயார் (நீலிக் கண்ணீர் வடித்து), "சரி. இப்ப என்ன? நீ உன் காதலியை கூட்டிட்டு போலாம்ன்னு வந்து இருக்கியா. கூட்டிட்டுப் போ. எங்க குடும்ப மானத்தையும் என் தம்பி குடும்ப மானத்தையும் கப்பலேத்திட்டு கூட்டிட்டு போ"

நான், "அவ இந்த நிமிஷம் சரின்னாலும் டைவர்ஸ் வாங்க வெச்சு கூட்டிட்டுப் போக நான் தயார். ஆனா, கழுத்தில் தாலி ஏறின நிமிஷத்தில் இருந்து என்னை சுத்தமா மறந்துட்டா. இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் டைவர்ஸ் பண்ண ஒத்துக்க மாட்டேங்கறா. அப்படிப் பட்ட ஒரு மருமகளுக்கு கஷ்டம் கொடுக்காம இருங்க"

சிவராமன், "நாங்க என்ன அவளுக்கு கஷ்டம் கொடுத்துட்டோம்?"

நான், "ஊரெல்லாம் போய் மருமக மலடின்னு உங்க அம்மா சொல்லறது; அப்பறம் அவகிட்டயே எப்ப குழந்தை பெத்துக்கறதா இருக்கேன்னு நீங்க கேக்கறது; எப்ப உன் காதலன் வர்றான்னு கேக்கறது; இதுக்கெல்லாம் என்ன பேர் சிவராமன்?"

சிவராமனின் தாயார் மைதிலியைப் பார்த்து, "ஏண்டி வீட்டில் நடக்கற விஷயத்தை ஊரெல்லாம் போய் சொல்லிட்டு திரியறயா?" என்றதும் என் ரத்தக் கொதிப்பு பன்மடங்கானது

நான், "மூச்! இன்னும் ஒரு வார்த்தை அவளைப் பேசக் கூடாது. அவளுக்கு குழந்தை பிறக்கணும். ஆனா கையாலாகாத உங்க குடிகாரப் பையனுக்கு பொண்டாட்டியா இருந்து வடிச்சுக் கொட்டணும். நீங்களே அவளை உங்க பெரிய பையனுக்கு கூட்டிக் கொடுக்கப் பாப்பீங்க. இதெல்லாம் வெளியே யாருக்காவுது தெரிஞ்சா காரித்துப்புவாங்க. இன்னும் எதாவுது பேசினா உங்க பேரை நாறடிச்சுடுவேன் ஜாக்கிரதை"

ஸ்தம்பித்திப் போய் மௌனமானவர் மெல்லிய குரலில், "இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காதது ஒண்ணும் இல்லை"

நான், "அவளுக்கு அதில் சம்மதம் இல்லை. அப்பறம் எதுக்கு அவளை வற்புறுத்தறீங்க?"

சிவராமனின் தாயார், "ஏன்னா? இவனுக்கு பின்னால கல்யாணம் ஆகாம ஒரு பொண்ணு இருக்கே. அவளுக்கு கல்யாணப் பேச்சு வரும்போது குடும்பத்தில் இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்குன்னு யோசிப்பாங்க. அதனாலதான்"

நான், "அதுக்கு அவ என்ன செய்வா?"

சிவராமனின் தாயார், "அதான் மூத்தவன் மூலம் .. "

அதுவரை மௌனம் காத்த மைதிலி, "அத்தை அதுக்கு நான் விஷம் குடிச்சு செத்துப் போறேன். வேணும்ன்னா உங்க பையன் மேல எந்தப் பழியும் வராத மாதிரி எனக்கு குழந்தை பிறக்காததால சாகறேன்னு எழுதி வெச்சுட்டுப் போறேன்"

சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தன.

சிவராமனின் தாயார், "குடும்ப ரத்தத்துக்குள்ளயே இருக்கும்ன்னு சொன்னேன். இவ என்னமோ அவன் இவ பின்னால அலையற மாதிரி பேசறா"

நான், "உங்க மூத்த பையனைப் பத்தி ரொம்ப பெருமைப் படாதீங்க. அவன் ஒரு பொம்பளை பொறுக்கின்னு எனக்கு தெரியும்"

சிவராமனின் தாயார், "சரி, எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்கியே நீயே ஒரு வழி சொல்லு"

நான், "அவளுக்கு குழந்தை பிறக்கணும் அவ்வளவுதானே? நீங்க சொல்லுங்க சிவராமன்"

சிவராமன், "ஆமா .. "

நான், "உங்க அண்ணன்கூட அவளுக்கு விருப்பம் இல்லை. எங்கிட்ட அவ கேக்கலைன்னாலும் நானா சொல்றேன் நான் அவளுக்கு குழந்தை கொடுக்கறேன். அதுக்கப்பறம் அவளுக்கு எந்த விதமான தொந்தரவும் இருக்கக் கூடாது"

சிவராமனின் தாயார், "நான் சொன்னேன் இல்லடா? அவளுக்கு அவ காதலன் கிட்ட ..."



நான் என் கோபத்தை எல்லாம் திரட்டி ஆங்கிலத்தில் menacing என்பது போல குரலை மிகவும் தாழ்த்தி, "போதும். இன்னும் ஒரு வார்த்தை அவளைப் பத்தி பேசுனீங்க அப்பறம் நடக்கறதே வேற"

சிவராமனின் தாயார், "சரிடா சிவா. நாளைக்கு பிறக்கற குழந்தை வேற மாதிரி சாயல்ல இருந்தா எதாவுது சாக்குச் சொல்லி மழுப்பணும். மனசை தேத்திக்கடா எப்படியோ அவ ஒரு குழந்தையை பெத்துக்கட்டும்"

நான், "ஏன் பொறக்கப் போற குழந்தையும் உங்க சின்னப் பையன் மாதிரி கையாலாகாதவனா இருக்கணுமா? இல்லை மூத்த பையன் மாதிரி விந்தி விந்தி நடக்கணுமா? ஒண்ணும் பேசாதீங்க இதுக்கு மேல. நாளைக்கு அவளை ஹாஸ்படிலுக்கு கூட்டிட்டு போறேன்"

சிவராமனின் தாயார், "அதுக்கு ஆஸ்பத்திரி எதுக்கு?"

நான், "கர்ப்பம் தரிக்க சரியான நாளாப் பாக்கறதுக்கு. வேணுங்கற செக்கப் எல்லாம் செய்யறதுக்கு. அவளுக்கு மட்டும் இல்லை. எனக்கும்தான். என் உடம்புக்கு எதுவும் இல்லைன்னு நீங்க நம்பணும் இல்லை?"



No comments:

Post a Comment