Thursday, October 29, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 10

பாவாடை, தாவணியில் பளபளத்த தன்னை ஷிவானி கண்ணாடியை பார்த்து, 'எந்த ஆண் பார்த்தாலும் வளைத்து போடும் வாலிப தேகம்தான்' என்று தன்னை தானே மெச்சி கொண்டாள். கண்ணாடி வழியாக பார்த்தபோது நிரஞ்சன் கன்னத்தில் கை வைத்து கண்ணை மூடி கொண்டு உட்கார்ந்து இருப்பது போல் தோன்ற, தன்னை தானே கடிந்து கொண்டாள். 

'ச்சே, நம்ம புத்தி ஏன் இப்படி அலையுது. ஓ எப்போ பார்த்தாலும் அந்த நிரஞ்சன் ஞாபகம் இருப்பதால, இப்படி தோணுது'பின்னந் தலையை வலது கையால் செல்லமாக தட்டி விட்டு தாவணியை களைந்து, பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.



முகம் கழுவி விட்டு துண்டை எடுத்து கொண்டு முகத்தை துடைத்தவாறே 
'வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் பூபாலனே' என்ற சாகர சங்கமம் (சலங்கை ஒலி) பாடலை முனுமுனுத்தபடி கண்ணாடியை திரும்ப பார்த்தவளுக்கு அதிர்ச்சி. நம்ப முடியவில்லை.திரும்பி பார்க்க அங்கே சேரில் கண்ணை மூடி கொண்டு உட்கார்ந்து இருந்தது, நிரஞ்சன் ராகவ்.

"ராகவ், நீங்களா. நம்பவே முடியலையே" என்று அவள் போட்ட சத்தத்தில் கண்ணயர்ந்து இருந்த நிரஞ்சன் கண்ணை திறக்க,அதற்குள் ஓடோடி வந்து அவனை கட்டி கொண்டாள். அவளின் ஆவேச அணைப்பில் அவன் முகம் அவளின் இரண்டு மார்பகங்களுக்கு நடுவே தஞ்சம் புக, திணறி போனான்.

கண்களில் கண்ணீர் வழிய, "நிரு என்னை மன்னிச்சுடு" என்று கெஞ்சி கொண்டே, அவன் முகத்தை உயர்த்தி முத்த மழை பொழிந்தாள்.நூறுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை தனது வீரத்தால் மிரட்டிய நிப்பு நிரஞ்சன், ஷிவானியின் அந்த இரட்டை தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி போனான்.

முதல் தடவையாக ஒரு இளம்பெண்ணின் சபரிசம் பட அவன் மனம் இன்ப கடலில் ஆழ்ந்தது. அவன் திணறி போய், பேசலாம் என்று வாய் திறக்க, தனது பிஞ்சு இதழ்களால் அவன் முரட்டு உதடுகளை கவ்வி கொண்டு உறிஞ்ச ஆரம்பிக்க, நிரஞ்சனுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன.

அந்த இன்ப வெள்ளத்தில் இருவரும் அடித்து செல்ல, இனியும் பொறுக்க முடியாது என்று உணர்ந்த நிரஞ்சன் திருப்பி தாக்க தொடங்கினான். 

கண்களை மூடி கொண்டு இருவரும் முத்த கடலில் மூழ்ங்க, கடைசியில் 'ஆ' என்று கத்தி கொண்டே, "இப்படியா முரட்டு தனமா கடிக்கிறது. போடா ராஸ்கல்" என்று செல்லமாக திட்டி கொண்டே தனது அதரங்களை விடுவித்து கொண்டாள் ஷிவானி.

ஏற்கனவே சிவந்து இருக்கும் அவள் இதழ்கள், நிரஞ்சனின் முரட்டு முத்தத்தால் மேலும் சிவந்து விட்டன.சிரித்து கொண்டே "Offence is the best form of Defence" என்று சொன்ன நிரஞ்சன், உட்கார்ந்த வாக்கில் அவளை அருகில் இழுத்து அணைத்து அவளின் ஆலிலை போன்ற வயிற்றில் முகத்தை புதைத்து கொண்டான்.

இது இன்பமா இல்லை இன்ப அவஸ்தையா என்று குழம்பி போன ஷிவானி, அவன் தலையை கைகளால் தடவி கொடுத்து, காதுக்குள்"ப்ரொபசர் சார், நீங்க சொல்லி கொடுத்த பாடம் போதும்.ப்ளீஸ் கொஞ்சம் வெளியே போங்க. நான் டிரஸ் மாத்திட்டு வரேன்" என்று கெஞ்ச, அவளை நிமிர்ந்து பார்த்து நெற்றியில் முத்தமிட்டு "ஓகே ஹனி, நான் வெளியே வெயிட் பண்ணுறேன்" என்று கதவை திறந்து வெளியே வந்தான்.

ஹாலில் இருந்த டெக்கான் க்ரோனிகில் பேப்பரை புரட்டி பார்த்து கொண்டு இருக்க, அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஷிவானி,புதியபாவாடை தாவணியில் தரிசனம் கொடுக்க அசந்து போனான்.

அவனை கிறக்கமான பார்வையில் அவள் பார்க்க, மயங்கி போனான். அதற்குள் உள்ளே இருந்து பத்மா வந்து, "என்னடி எப்போ வந்தே?" 

"இப்போதான் அம்மா.இவர் எப்போ வந்தார்."

"அரை மணி நேரம் ஆச்சு. அப்பா ஸ்டேஷன் போய் இருக்கார். இப்போ வந்துடுவார்.அவரை உன்னோட ரூம்ல உட்கார சொன்னார்.ஆமா ரெண்டு பேரும் அங்கேயே பாத்துட்டிங்களா."
"ஆமா அவர் என்னை நல்லா பாத்துட்டார்" என்று முனகியபடி அருகில் இருந்த சேரில் அமர நிரஞ்சன் முகத்தில் புன் சிரிப்பு.

'திருடன் எப்படி சிரிக்கிறான் பாரு.'

"சார், அப்பாவை எப்படி மீட் பண்ணுனீங்க? மங்காபெட்ல இருந்து எங்கே போனீங்க. இந்த மூணு வருஷம் எங்கே இருந்திங்க. சென்னைல எதுக்கு வேலைக்கு சேர்ந்திங்க." கேள்வி கணைகளை ஷிவானி தொடுக்க, நிப்பு நிரஞ்சன் பதில் பேச தொடங்கினான்

மார்ச் 2,2009

லாரி டிரைவருக்கு அருகில் நிரஞ்சன் உட்கார்ந்து இருக்க, டிரைவர் பஞ்சாபி - ஒரு சர்தார்ஜி பேசி கொண்டே வந்தான்.

செல்போன் ஒலிக்கும் ஓசை கேட்ட நிரஞ்சன் ரத்த கரை தோய்ந்த போனை எடுத்து ஆன் செய்தான்.பேசியது டிஜிபி. 

"சாரி, நிப்பு நான் விஷயத்தை கேள்விபட்டேன். மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அந்த இடத்தை நம்ம போலிஸ் முழுக்க வளச்சுட்டாங்க. ஆனால் உங்க அப்பா, அம்மா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகள் உடல் சின்னா பின்னம் ஆகி விட்டது.நீங்களும் இறந்து போய் விட்டதாக வதந்தி பரவி விட்டது. 

எனக்கு கிடைச்ச உளவுதுறை செய்திகளின்படி கேஷவ், ராமையா ஆட்கள் உங்களை தீவிரமாக தேடி கொண்டு இருக்கிறார்கள்.இப்போதான் வீரராஜு போன் பண்ணி நீங்க மும்பை போய் கொண்டு இருப்பதாக சொன்னார். நீங்க மும்பை போங்க, நான் மகாராஷ்டிரா டிஜிபி கிட்ட பேசி இருக்கேன். உங்களுக்கு பாஸ்போர்ட் ரெடி. உங்களோட சிஸ்டர் கூடவும் பேசியாச்சு. இப்போ இருக்கிற நிலைமைல அவங்களும் இங்கே வருவது உசிதம் இல்லை."




"என்ன சார், முட்டாள்தனமா இருக்கு. இவ்வளவு பெரிய போலிஸ் படையால அவங்களை ஒண்ணும் பண்ண முடியாதா?".

"நிப்பு, அதுக்கு கொஞ்ச நாள் பிடிக்கும். அது மட்டும் இல்லை. முதலில் உங்களோட உயிர் முக்கியம். முதல்ல நீங்க யுஎஸ் போங்க.அங்கே இருந்து ஏதாவது வேலைல இருங்க. நான் உங்ககிட்ட தொடர்புள இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு நீங்க திரும்ப வரலாம்.அதுக்கு அப்புறம் என்ன செய்யலாம்னு சொல்றேன்."

"சரி சார்."

அடுத்த இரண்டு நாட்களில், நிரஞ்சன் புதிய பாஸ்போர்ட்டில் யு எஸ் பறக்க, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் வந்து இறங்கினான்.

இறங்கிய அவனை அக்கா டாக்டர் கீதா, அத்தான் தனசேகர், அவர்களின் மூன்று வயது மகன் ரிஷி வரவேற்றனர்.

அவனை கண்டவுடன் கீதா அழ ஆரம்பிக்க, பேசாமல் இறுகி போன முகத்தோடு இருந்தான் நிரஞ்சன்.

"ஏன்டா தம்பி உனக்கு வருத்தமா இல்லையா?"

"அக்கா, நம்ம அம்மா அப்பாவை கொன்ன அந்த பாவிகளை கொன்னாதான் எனக்கு நிம்மதி. அப்போதான் என் கண்ணில கண்ணீர் வரும். அது வரைக்கும் அவங்க நம்ம கூட தான் இருக்காங்கன்னு நான் நினைச்சுக்குவேன்."

கீதா தம்பியை கட்டி அணைத்து கொள்ள, நிரஞ்சன் மனதில் கொஞ்சம் ஆறுதல் பரவியது.

மைக்ரோ சாப்ட் கம்பனியில் வேலை பார்த்து வரும் அத்தான் உதவி செய்ய ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டியில் சோசியாலஜியில் Ph Dசெய்ய அனுமதி கிடைத்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிக்க, தீசிஸ் முடித்து கையில் டாக்டரேட் கிடைத்தபோது மேலும் ஆறு மாதங்கள் கடந்து விட்டன.

அதற்குள் பழைய டிஜிபி மாறி தினேஷ் ரெட்டி புதிய டிஜிபி யாக பதவி ஏற்க அவரிடம் இருந்து நிரஞ்சனுக்கு போன் கால் வந்தது.
"மிஸ்டர் நிரஞ்சன், நான் புது டிஜிபி தினேஷ் ரெட்டி பேசுறேன். பழைய டிஜிபி என் கிட்ட எல்லா விஷயமும் சொல்லிட்டார். அந்த கொலை தாக்குதலுக்கு பிறகு, கேஷவ் ராவ், ராமையா, லக்ஷ்மி எல்லோரும் தலைமறைவா பதிங்கிட்டாங்க. கேஷவ் ராவ் சென்னைல இருப்பதாக தகவல். நீங்க கிளம்பி வந்தா, நிறைய விஷயங்களை கண்டு பிடிக்கலாம்.

ஜாக்கிரதையா செய்யுங்க. ஏற்கனவே நீங்க டாக்டரேட் பண்ணி இருக்கிறதாலே உங்களுக்கு ரெண்டு மூணு காலேஜ்ல இன்டர்வியு ஏற்பாடு பண்ணி இருக்கேன். நீங்க முதல்ல அட்டென்ட் பண்ண வேண்டியது நேரு யுனிவர்சிட்டி."

பேச்சை நிறுத்தி தண்ணீர் எடுத்து குடிக்க, ஷிவானிக்கு ஆர்வம் தாங்கவில்லை. "சீக்கிரம் சொல்லுங்க சார்" என்று கெஞ்சினாள்.


"அதுக்கு அப்புறம் எனக்கு முதல் இன்டர்வியுல வேலை கிடைத்தது. அந்த வேலை மூணு மாசம்தான் இருந்த போதும், என்னோட வேலையை முடிக்க போதுமான காலம்னு நினைச்சு சரி சொல்லிட்டேன்."

"அதுக்கப்புறம் காலேஜ்ல நடந்த விஷயங்கள் ஷிவானிக்கு தெரியும்."

"காலேஜ் போக மீதி நேரங்களில் கேஷவ் ராவ் எங்கே போறான்னு கவனித்து வந்தேன். அவன் மகாபலிபுரம் போற விஷயம் தெரிஞ்சு நானும் அங்கே போனேன். அவனுக்கும் வெடி குண்டு கும்பலுக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடிச்சேன்."

ஷிவானி முகம் சுருங்கி போனது"அப்படின்னா எனக்காக மகாபலிபுரம் வரலையா?"

வாடி போன அவளை பார்த்து"நான் வந்தது உனக்காகவும் தான்" என்று அழுத்தி சொல்ல, அவள் முகம் சிரிப்பாய் மாறியது.

பத்மா இடை மறித்து "அப்புறம் என்ன ஆச்சு. காலேஜ்ல இருந்து எங்கே போனீங்க?" என்று கேட்க, "நான் சொல்றேன்" என்று குரல் கேட்க மூவரும் திரும்பி பார்த்தனர் .அங்கே வீர ராஜு நடந்து வந்து அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.
"நிப்பு உடனே டி ஜி பி க்கு பேசி விபரங்கள் சொன்ன போதும், கேஷவ் ராவ்வை பிடிக்க முடியவில்லை.அவங்க பேசினதில இருந்து,தெலுங்கு புத்தாண்டுல மீண்டும் தாக்குதல் நடத்த நக்சலைட் திட்டம் போட்டு இருப்பதாக தெரிந்தது. டிஜிபி யிடம் பேச அவர் உடனே நிப்புவை வர சொன்னார்."

மீண்டும் இடை மறித்த ஷிவானி"சார் நீங்க பண்ணுனது எல்லாமே பக்கா பிளான் மாதிரி இருக்கு. அதில என்னை பகடைகாயாக உபயோகித்து வந்தீர்கள். அப்படிதானே" என்று பொய் கோபத்தோடு சொல்ல, நிரஞ்சன் வாய் விட்டு சிரிக்க, வீர ராஜு தொடர்ந்தார்.

"அதுக்கு அப்புறம் நிப்பு காலேஜ்ல இருந்து விடை பெற்று ஹைதராபாத் வந்து டிஜிபி யை சந்தித்தார். இருவரும் பல திட்டம் போட்டுOperation Nippu 2 திட்டத்தை நடத்த முடிவு செய்து விட்டார்கள். அதுல கலந்துக்க சொல்லித்தான் எனக்கு அழைப்பு வந்தது. அங்கே போய் பார்த்தபோது நான் அசந்து போனேன்.அங்கே எனக்கு முன்னாலே அண்ணாமலைஇருந்தார்."

"உள்ளே மீடிங்க்ல தான் நிப்புவை சந்தித்தேன். நிப்புவை நான் சந்திப்பேன்னு எனக்கு கட்டாயம் தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் சந்திப்பேன்னு நினைக்கலை"

"நிப்பு, உங்களை சந்தித்தால், எல்லம்மா கோவிலுக்கு மாவிளக்கு போடுவதாக பத்மா வேண்டிகிட்டா. அதை நிறைவேத்த நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்".


"நானும் வரேன்" என்று நிரஞ்சன் எழ, "நீங்க கடந்த மூணு நாளா ரெஸ்ட் இல்லாமல் வேலை பார்த்து இருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க.உங்களை நான் நாளைக்கு கூட்டி போறேன்" என்று சொல்லி விட்டு, "ஷிவானி நீ வரியா" என்று கேட்க, "இல்லைப்பா அவர் கிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கேன்".

"சரி", என்று தலை அசைத்து வீர ராஜு, தன் மனைவியுடன் கோவிலுக்கு கிளம்பினார்.

அப்பாடா கிளம்பிட்டாங்க, என்று சொல்லி கொண்டே, கதவை தாழிட்டு வேகமாக வந்து நிரஞ்சன் அருகில் உட்கார, அந்த ஆரஞ்சு நிற தாவணி அழகில் தேவதை போல் தெரிந்த ஷிவானியை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

"இப்படியா வெட்கமில்லாம இந்த மனுஷன் முறைச்சு பார்ப்பார்"என்று வெட்க சிரிப்போடு நினைத்த ஷிவானி, தலை குனிய அவன் கால்களை கவனித்தாள்.

அதே காயம். இப்போது அவளுக்கு புரிந்தது.தரையில் உட்கார்ந்து அவன் காலை எடுத்து கொண்டு மடியில் வைத்து தடவி கொடுக்க,பதட்டமானான் நிரஞ்சன். 

"ஷிவானி, என்னாம்மா இது. எதுக்கு என் காலை பிடிக்கிற".காயம்பட்ட இடத்தை தடவி கொடுத்தவாறே"நிரு, எனக்கு எங்க அப்பா மேல உயிரு. நான் பல விதத்தில அவர் மாதிரின்னு எங்க சொந்தக்காரங்களும் சொல்லுவாங்க. அவர் மேல குண்டுபட கூடாதுன்னு காப்பாத்தி, உங்க காலில இப்படி காயம் ஆச்சே. உங்களை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு. அதே சமயத்தில உங்க கிட்ட நான் நடந்துகிட்டதை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு.என்னை மன்னிப்பிங்களா?"

கண்களில் கண்ணீர் கலங்கி நிற்க, இரு கரங்களையும் நீட்டி கெஞ்சி நிற்க, மனம் கலங்கி போனான்."ச்சே ச்சே உன் மேல எனக்கு எந்த கோபமும் கிடையாது. உன்னோட கோவத்தை எல்லாம் ஒரு சின்ன குழந்தை கோபப்படுற மாதிரி தான் எனக்கு தெரிஞ்சுது. அது மட்டும் இல்லை. உனக்கு புத்தக அறிவு இருந்த அளவுக்கு உலக அறிவு இல்லை."

"அப்படின்னா என் மேல உங்களுக்கு கோபம் இல்லைன்னு அர்த்தம். அப்படின்னா என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா."

அவளின் தடாலடி கேள்வியால் மிரண்டு போனான் நிரஞ்சன்.
மெதுவாக தன் காலை விடுவித்து"ஷிவானி, இப்போ நான் சொல்றதை நல்ல கேட்டுக்க. நீ சின்ன பொண்ணு, உனக்கும் எனக்கும் எட்டு வயசு வித்யாசம். அது மட்டும் இல்லை, நான் கொலை வெறியோட திருஞ்சுகிட்டு இருக்கிற ஒரு போலிஸ் அதிகாரி. என்னோட உயிர் என் கைல இல்லை. உன்னை நான் முதலில் பார்த்தபோது என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருந்ததுஉண்மைதான். கல்யாணம்னு பண்ணினா உன்னைத்தான் பண்ணிக்கனும்னு என் மனசில எண்ணங்கள் ஓடியது உண்மைதான். 

ஆனால் உனக்கு என்னை பிடிக்காமல் போனதால் நான் விலகி விட்டேன். இப்போ கூட உன்னை பார்க்கும் போது என்னை கட்டுப்படுத்த முடியலை. உன் கிட்ட தவறா நடந்த என்னை மன்னிச்சுடு" என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டான்.

முதுகு குலுங்குவதை வைத்து அவன் அழுகிறான் என்பதை அறிந்த ஷிவானி அவன் முதுகை தொட்டு திருப்பினாள்.


"உங்களுக்கு என் காதல் மேல இன்னும் சந்தேகம் இருக்கு, அப்படிதானே. ஒண்ணு மட்டும் நல்லா புரிஞ்சுக்கங்க. உங்களை பிடிக்காத, அந்த பழைய ஷிவானி செத்து போய்ட்டா. இப்போ உங்க கண் முன்னால இருக்கிறது. உங்களோட காதலி, வருங்கால மனைவி. ஒரு நாள் வாழ்ந்தாலும் என் மனசுக்கு பிடிச்ச உங்களோட தான் வாழ்வேன். இல்லைனா நான் இப்போவே சாகிறேன்". 

அவள் என்ன சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்வதற்குள் ஷிவானி வேகமாக சென்று தனது அறையை மூடி கொள்ள, பதட்டம் அதிகமாக கதவை வேகமாக தட்டினான் நிரஞ்சன்.

கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கை இழந்து ஓடி வந்து கதவை தகர்க்க, உள்ளே தூக்க மாத்திரை பாட்டிலை கையில் வைத்து அதில் இருந்த பத்து மாத்திரைகளை ஷிவானி தன் வாயில் போட, கோபத்தில் அவளை பளார் என்று அறைந்தான். 

அவன் அடித்த அடியில் 'அம்மா' என்று அவள் அலற, வாயில் இருந்த மாத்திரைகள் கீழே கொட்டின.தலை சுற்ற தடுமாறி கட்டிலில் அமர, அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டு, "ஏன் ஷிவானி இப்படி செஞ்ச.உயிரோட மதிப்பு தெரியுமா உனக்கு."

பதில் பேசாமல் அவள் கண்ணீர் வடிக்க, அவள் சிவந்த கன்னத்தை தடவி கொடுத்தான். 

"சாரிடா. தெரியாம அடிச்சுட்டேன். சரி, நான் சொன்னா கேப்பியா."அவள் பதில் பேசாமல் அவன் இடுப்பை கட்டி கொள்ள"என்ன இது சின்ன குழந்தை மாதிரி."

காதில் "நாம ரெண்டு பேரும் முயற்சி பண்ணினா குழந்தை கிடைக்கும். சரியா" என்று கண்ணடிக்க, "ஐயோ சொன்னா கேளு. இது விளையாடுற விஷயம் இல்லை."

அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு"இங்கே பாரு நிரு பையா, சொன்ன பேச்சை கேளு. நீ இல்லைனா நான் உயிரோட இருக்க மாட்டேன். இப்போ நீ காப்பாத்திட்ட, ஆனால் எப்பவுமே எனக்கு பாதுகாப்பா இருக்க முடியுமா? இப்போ என்ன கவலை உனக்கு. ஒரு வேளை நமக்கு கல்யாணம் நடந்த பின்னால இந்த மாதிரி வேலை வந்தா வேணாம்னு சொல்லுவியா. இல்லைதானே.

ஒருத்தனோட பிறப்பு எப்படி கடவுள் கைல இருக்கோ அதுமாதிரி தான் இறப்பும். நம்ம கைல இல்லை. 

ஒண்ணு தெரியுமா, நயாகரா நீர் வீழ்ச்சியில குதிச்சு உயிர் விட்டவங்க நிறைய பேர். ஆனால் ஒரே ஒருத்தன் மாத்திரம் தப்பிச்சான். காலில மட்டும் காயம். மத்தபடி, அவன் உயிர் பிழைச்சுட்டான்.அதே ஆள் சில வருஷம் கழிச்சு வாழைபழ தோல் வழுக்கி விட்டு உயிர் விட்டான்.

என் செல்ல குட்டி, கண்ணு குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோடா. நீ சொல்றதை எல்லாம் நான் கேக்குறேன். உனக்கு நல்ல மனைவியா, நம்ம குழந்தைகளுக்கு நல்ல அம்மாவா இருப்பேன்" அவன் கழுத்தை கட்டி கொண்டு கெஞ்ச,


"என்ன சொன்னாலும் கேப்பியா", என்று குறும்போடு நிரஞ்சன் கேட்க 'அய்யோ' என்று நாக்கை கடித்து கொண்டாள்.

தலை குனிந்து யோசித்து, அவனை நிமிர்ந்து பார்த்து, கண்களை ஊடுருவினாள். கழுத்தை கட்டி கொண்டு "நீரு குட்டி, நீ என்ன சொன்னாலும் ஓகேடா. அதிகம் பட்சம் என்ன கேட்க போற. என்னை தானே. நான் அதுக்கும் ரெடி".

அவளை மெதுவாக நகர்த்தி அருகில் உட்கார வைத்து, "ஷிவானி சும்மா கிண்டலுக்கு தான் அப்படி கேட்டேன். மற்றபடி நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. என்னோட அப்பா, அம்மா என்னை அப்படி வளர்க்கலை."

"நேத்து வரைக்கும் நீ யாருன்னு எனக்கு தெரியாது. ஆனால் இப்போ உன்னோட அந்த களங்கமில்லா அன்பில நான் என்னை மறந்துட்டேன். உண்மைய சொன்னா, உன்னை இனிமே என்னால பிரிஞ்சு இருக்க முடியுமான்னு தெரியலை. "

அவன் குரலில் தெரிந்த அந்த நேர்மை, அவளை கவர்ந்து இழுக்க, "இது தாண்டா உன் கிட்ட எனக்கு பிடிச்சது. தப்பா நடந்துக்க எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும் நீ என்னை ஒரு தடவை கூட தவறா பார்க்கலை. உன்னோட கண்ணியம், புத்திசாலிததனம், நேர்மை, கடமை உணர்ச்சி, சமூக அக்கறை, பாசம், இது எல்லாம் எனக்கு பிடிச்சு இருக்கு. உன்னை மாதிரி ஒருத்தன் எங்க அப்பா அம்மா உலகம் முழுக்க தேடினாலும் கிடைக்காது."

அதற்குள் கதவை தட்டும் ஓசை கேட்க, மனமில்லாமல் அவனை பிரிந்தாள்.

கதவை திறக்க, வீர ராஜு. "என்னம்மா பேசிட்டியா."

அதிர்ந்து போனாள். "என்னாப்பா சொல்லுறீங்க"

வீர ராஜு, "கண்ணா, உன்னை பத்தி தெரியும். உன்னோட நடவடிக்கைகளை நான் கூர்ந்து பார்த்துகிட்டு வரேன்.அவரை நான் கூப்பிட்டு வந்ததுக்கு நீயும் ஒரு காரணம். அவர் எங்கே."

கை காட்ட, வீர ராஜு ஷிவானி படுக்கை அறைக்கு சென்றார். ஷிவானி கை நடுங்க நகத்தை கடித்து கொண்டு வாசல் கதவை பார்த்து கொண்டு இருந்தாள்.

பத்து நிமிடம் கடக்க, ரெண்டு பேரும் சிரித்து கொண்டே வெளியே வந்தனர்.
"பத்மா இங்கே வா" என்று வீர ராஜு சொல்ல, பத்மாவும் 

"சொல்லுங்க".




"நம்ம பெண்ணை கல்யாணம் பண்ணிக்க நிப்புவுக்கு சம்மதம். அவர் அக்காகிட்டயும் பேசிட்டார். அவங்க உடனே கிளம்பி பிளைட் பிடிச்சு ஹைதராபாத் வராங்க. வெள்ளி கிழமை விடி காலைல கனக துர்கா அம்மன் கோவில்ல கல்யாணம். சரியா?"

"என்னங்க பெண்ணை பெத்த அம்மா நான் என்னை ஒரு வார்த்தை கேக்காம நீங்க பாட்டுக்கு முடிவு பண்ணிட்டிங்க" என்று சிணுங்க, 

"சாரி அத்தை. உங்களுக்கு ஓகேன்னாதான் இது எல்லாம். எனக்கு உங்க எல்லோரோட சம்மதமும் முக்கியம்."

"தம்பி, சும்மா விளையாடினேன். என்னடி ஷிவானி உனக்கு சம்மதம் தானே. "

ஷிவானிக்கு நம்ப முடியவில்லை. "அப்பா அம்மா எனக்கு பேச்சு வர மாட்டேங்குது. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று சொல்லி கொண்டு நிரஞ்சன் கைகளை பிடித்து கொண்டாள்.

இந்த கல்யாணத்துக்கு ஒரே ஒரு நிபந்தனை இருக்கு. அதுக்கு ஷிவானி ஒத்துகிட்டா தான் கல்யாணம்.
'என்ன நிபந்தனை?' என்று ஷிவானி கேள்விக்குறியோடு பார்த்தாள்.



No comments:

Post a Comment