Friday, October 16, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 11

மான்சி முகத்தை மூடிக்கொண்டு தன்னை மீறி புலம்பி அழுதபடியே இருக்க, விஜயா பேரனை இறக்கி தரையில் விட்டுவிட்டு எழுந்து மான்சியின் அருகே வந்து, “ மான்சி அழாதம்மா, உன் பிரார்த்தனைகள் எதுவுமே வீன் போகலை, எல்லாம் சேர்ந்துதான் சத்யனோட உயிரைக் காப்பாத்தியிருக்கு, இல்லேன்னா மூக்கு வலியா ரத்தம் வந்து சுயநினைவை சுத்தமா இழந்த பிறகு ஆப்ரேஷன் செய்து சத்யன் பிழைச்சது தெய்வச் செயல் தான் மான்சி, அவன் நிலைமை என்னன்னு தெரிஞ்சிருந்தா, நானும் கடவுளை வேண்டியிருப்பேன் தான், ஆனா எதுவுமே தெரியாம, வெறும் தலைவலி தான்னு நெனைச்சு நீ இவ்வளவு பிரார்த்தனை பண்ணியிருக்கேன்னா உன் வேண்டுதல்கள் தானம்மா என் மகனை என்கிட்ட திருப்பி தந்திருக்கு” என உறுக்கமாக பேசி மான்சியை தன்னோடு அணைத்துக்கொள்ள,



விஜயா கூறிய சத்யனின் அன்றைய நிலைமை மான்சியின் கண் முன்பு படமாக விரிய அய்யோ என்று அலறியது அவள் இதயம், சத்யன் மூக்கில் ரத்தம் வந்ததா? ஆப்ரேஷனுக்கு முன்பே சுயநினைவை இழந்துவிட்டானா? அய்யோ என்ன பயங்கரம், மான்சியால் மேலும் கட்டுப்படுத்த முடியாமல் உடல் நடுங்கியது, அவள் நடுக்கத்தை உணர்ந்த விஜயா பதட்டத்துடன் “ மான்சி இதோ பாரம்மா, இப்போ சத்யனுக்கு ஒன்னுமில்லை நல்லாயிட்டான் ” என்று ஆறுதல் கூறி அவள் நடுக்கத்தை குறைக்கமுயன்றாள்

அதை கவனித்த சத்யன் வேகமாக எழுந்து மான்சியின் அருகே ஓடிவந்து, தன் கை காயத்தின் வலியை கூட உணராது, அவளை தன் தாயின் அணைப்பில் இருந்து தன் நெஞ்சில் சாய்த்து அவள் கூந்தலை வருடி, முதுகைத் தடவி “ மான்சி இனிமேல் எனக்கு ஒன்னுமில்ல, நான் நல்லாருக்கேன் மான்சி, இதோ என்னைப் பாரு மான்சி” என்று அவள் முகத்தை தன் விரல்களால் நிமிர்த்தினான் சத்யன்

அவன் அணைப்பில் நடுக்கம் குறைந்தாலும் உதடுகள் உதறலெடுக்க, “ மொதல்லயே டாக்டரைப் பார்த்திருக்கலாமே?, இவ்வளவு மோசமான நிலைமையிலயா போய் பார்க்கறது?, உங்களுக்கு ஏதாவதுன்னா நான் எங்க இருந்ாலும் அடுத்த நிமிஷமே என் உயிர் போயிருக்கும் தெரியுமா? நீங்க இப்படியிருக்கீங்கன்னு ஏன் முன்னமே சொல்லலை, நான் வேற இது தெரியாம உங்களை நெருப்புல கை வைக்க விட்டுட்டேனே” என்ற மான்சி அவனுடைய கட்டுப்போட்ட கரங்களில் தன் முகத்தை வைத்து “ என்னை மன்னிச்சுடுங்க” என்று வேண்டினாள்

தன் கரங்களில் வென் தாமரையாய் மலர்ந்திருந்த அவள் முகத்தை தன்னருகே இழுத்த சத்யன் “ மன்னிப்பெல்லாம் எதுக்கு மான்சி, நீயும் ரிஷியும் நம்ம வீட்டுக்கு வந்து என்கூட இருந்தாலே போதும்” என்று காதலோடு கூறிவிட்டு அவள் முகத்தை நெருங்கிய சத்யனை நாங்க இங்கேதான் இருக்கோம் என்ற சாமிநாதனின் இருமல் உணர்த்த, மான்சி வெட்கமாக அவனிடமிருந்து விலகி நின்றாள்

“ நீங்க ரெண்டுபேரும் எவ்வளவு உயிருக்குயிரா இருந்திருக்கீங்கன்னு உங்க நடவடிக்கைகளே சொல்லுது, ஆனா சத்யன் சென்னை போறதுக்கு முன்னாடி, நீ காணமல் போறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு நீ சொன்னாதான் மான்சி பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்று சாமிநாதன் கூறியதும்,,

இவ்வளவு நேரம் காதலுடன் சத்யனைவிட்டு சில அங்குலங்கள் விலகியிருந்த மான்சி இப்போது விறைப்புடன் சில அடிகள் தள்ளிப்போனாள், தான் எந்த நிலையில் அவனை விட்டு விலகினோம் என்ற நிதர்சனம் அவள் முகத்தில் அறைந்து அவளை நிதானத்துக்கு கொண்டு வந்தது, சொல்லவேண்டும், எல்லாவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டும், அப்போதுதான் தன் மகனின் லட்சனம் இவர்களுக்கும் தெரியும் என்ற உறுதியுடன் தலையைத் திருப்பி மற்றவர்களை பார்ப்பதை தவிர்த்து சுவற்றை பார்த்தபடி மெதுவாக ஆரம்பித்தாள் மான்சி

“ நான் இவரை என்னோட பதினாலாவது வயசுல இருந்து நேசிச்சேன், ஒவ்வொரு வருஷமும் லீவுக்கு வரும் போதெல்லாம் இவரை மறைஞ்சு மறைஞ்சு பார்த்து ரசிப்பேன், ஆனா இவருக்கு அப்போல்லாம் என்னை பிடிக்கலைப் போல? என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார், இந்த வருஷம் நான் வந்ததும் இவரைத்தான் தேடினேன், அன்னிக்கு நைட்தான் தோட்டத்துக்கு வந்து என்னைப் பார்த்து ‘ ரொம்ப அழகா இருக்க மான்சின்னு சொன்னாரு, அந்த ஒரு வார்த்தையிலயே நான் மயங்கிப் போனேன், அப்புறம் ஒரு வாரமா என்னைப் பார்க்கும்போதெல்லாம் சீண்டிகிட்டே இருந்தார், தொட்டுத்தொட்டு பேசுவார், இவருக்கும் என்மேல் காதல்னு நான் நம்பினேன், அப்புறமா திடீர்னு ஒரு வாரம் என்னை பார்க்கவேயில்லை, ரொம்ப அவாய்ட் பண்ணார், எனக்கு ஒன்னுமே புரியலை, இவரோட புறக்கணிப்பை என்னால தாங்கமுடியாம ஒருநாள் நைட் நானே இவரோட ரூமுக்குப் போனேன்” என்று கூறிவிட்டு நிறுத்திய மான்சி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, தான் பணயமாக பயன்பட்ட அவமானத்தை சொல்ல ஆரம்பித்தாள் 


“ ஏன் பேசலைன்னு கேட்கத்தான் நான் போனேன், ஆனா இவரு என்னனென்னவோ பேசி, கடைசியா....... இவ்வளவு ஆசையை மனசுல வச்சுகிட்டு நான் செத்துட்டா என்ன பண்ணுவன்னு என்னை கேட்டார், அதுக்கப்புறம் வேற வழியில்லாம நான் இவருக்கு பணிஞ்சு போனேன், அப்புறமும் நிறைய நாள் என்னை இதுக்காக தேடினார், நானும் இணங்கினேன், கடைசியா ஒருநாள் ஜானகி ஆச்சியோட பேத்தி கர்பமாயிருக்கான்னு அதைப் பத்தி பேசும்போது தான் எனக்கு என்னோட நிலைமை தெரியும், முதல்ல அழுதாலும் பிறகு சந்தோஷப்பட்டேன், எப்படியும் இவர்கிட்ட சொன்னா சந்தோஷப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்குவாருன்னு பகல் கனவு கண்டேன், அன்னிக்கு நைட் தோட்டத்துல இவரைப் பார்த்து விஷயத்தை சொன்னப்ப, ‘ இவ்வளவு நாளா இதைக்கூட கவனிக்காம இருந்திருக்க, நீயெல்லாம் என்ன பொண்ணுடி அப்படின்னு கோபமா என்னை திட்டினார், ‘ சரி நாளைக்கு காலையில ஆஸ்பிட்டல் போகலாம்னு சொல்லிட்டு போயிட்டார், மறுநாள் காலைல ஆஸ்பிட்டல்க்கு செக்கப்புக்கு கூட்டிட்டுப் போறாருன்னு நெனைச்சுதான் இவர் கூட போனேன், ஆனா அந்த ஆஸ்பத்திரிக்கு இவரு பல பொண்ணுங்களை வயித்துல இவரோட கருவோட கூட்டிட்டுப் போய் ரொம்ப பழக்கம்னு அங்கே போனதும்தான் தெரிஞ்சுது, என் வயித்துல இருந்த கருவை கலைக்க ஆயிரக்கணக்கில் பேரம் பேசினதை நான் என் காதால கேட்டேன், அப்புறம் கதவைத் திறந்து நேரடியாவே இவர்கிட்ட நியாயம் கேட்டப்ப ‘ என்னை காதலிக்கவே இல்லைன்னு சொன்னாரு, அந்த நிமிஷமே நான் நெருங்கிப் போனேன்” என்று கூறிவிட்டு மான்சி முகத்தை மூடிக்கொண்டு கதறி அழ,,

சத்யன் அவளை நெருங்கி தோளில் கைவைத்தான்,, அழுதுகொண்டிருந்த மான்சி வெடுக்கென்று அவன் கையைத் தட்டிவிட்டு “ மீதியையும் கேளுங்க, அப்புறம் எனக்கு கண்டிப்பா அபார்ஷன் பண்ணியே ஆகனும்னு இவர் சொன்னதும், அந்த டாக்டரும் நர்ஸும் என்னை ரூமுக்குள்ள வச்சு பூட்டிட்டு காபி குடிக்க போனாங்க, நான் இன்னொரு கதவு வழியா தப்பிச்சு ரோட்டுக்கு வந்து எதிரில் வந்த பஸ்ஸை நிறுத்தி ஏறிட்டேன், அந்த பஸ்ஸுல தான் ராகினி அக்காவை பார்த்தேன், அவங்க நான் அழுவுறதைப் பார்த்து எவ்வளவோ கேட்டும் எதுவுமே நான் சொல்லலை” எனற மான்சி நிற்கமுடியாமல் தரையில் மண்டியிட்டாள்

உள்ளே இருந்து வந்த ராகினி கண்ணீருடன் மான்சியை தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டு சாமிநாதனைப் பார்த்து “ நான் எவ்வளவோ கேட்டும் இந்த புள்ள பதில் சொல்லலை, சாப்பிடாம அழுதுகிட்டே வந்துச்சு, வழியில பஸ் பஞ்சராகி நின்னுருச்சு, எல்லாரும் இறங்கி வேற பஸ் மாறி போய்ட்டாங்க, ஆனா மான்சி மட்டும் முள்ச் செடி பக்கமா போச்சு, எனக்கு சந்தேகம் வரவே நானும் பின்னாடியே போனேன், இந்தப் புள்ள ரயில் தண்டவாளத்தில் ஏறி நடக்கவும் எனக்கு என்ன நடக்கப் போகுதுன்னு புரிஞ்சுபோச்சு, நான் ஒடுறதுக்கும் ரயில் வரவும் சரியா இருந்தது, நிமிஷத்தில் நான் மான்சியை இழுத்துகிட்டு முள் புதர்ல விழுந்தேன், ஒரு நிமிஷம் தாமதிச்சிருந்தாலும் ரயில்ல விழுந்திருக்கும், அப்புறமா எல்லாத்தையும் விசாரிச்சுட்டு, நான் காப்பாத்துறேன்னு சொல்லி என்கூட இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தேன்” என்ற ராகினி சத்யனிடம் திரும்பி “ ஏன் தம்பி பணம் இருக்குன்னா என்ன வேனாப் பண்ணலாமா? நானே பார்க்கலைன்னா இன்னேரம் இந்த புள்ள செத்து ஒன்றரை வருஷம் ஆகியிருக்கும்” என்று கோபமாக கேட்க.

ஏற்கனவே அதிர்ந்து போயிருந்த சத்யன் ஏதும் சொல்லாது தலைகுனிய... சாமிநானும் விஜயாவும் தன் மகனின் இன்னொரு பக்கம் தெரிந்த அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தனர், சத்யன் மான்சி உறவு தெரிந்தது தான், ஆனால் பல பெண்களை அபார்ஷனுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான் என்ற தகவல் அவர்களை ரொம்பவே பாதித்துவிட்டிருந்தது, சாமிநாதன் அருவருப்புடன் மகனைப் பார்க்க, அய்யோ என்னடா இதெல்லாம், நீயா இப்படி’ என்று ஆத்திரமாய் பார்த்தாள் விஜயா

ராகினியின் தோளில் அழுதுகொண்டிருந்த மான்சி தன்னை கட்டுபடுத்திக் கொண்டு நிமிர்ந்து தன் மகனை தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டு சாமிநாதனை நேராகப் பார்த்து “ நான் வந்த பிறகு உங்க மகனுக்கு என்ன ஆச்சுன்னு நீங்க சொன்னீங்க, நடந்தது மொத்தமும் எனக்கு வேதனையும் கண்ணீரையும் தரக்கூடிய விஷயம் ரொம்ப வருந்தகூடியது, நான் பிரிந்து வர்றதுக்கு முன்னாடி நான் சொன்னவைகள் நடந்தவைகள் மொத்தம் பதினேழு வயசு பொண்ணோட வாழ்க்கையில் நடந்த அவமானங்கள் அசிங்கங்கள், நானே நெனைச்சு பார்க்க விரும்பாத கேவலங்கள், இதுக்கெல்லாம் இவர்தான் காரணம்னு சொல்லி நான் வாதாட விரும்பலை, எனக்கும் முழுக்க முழுக்க பங்கிருக்கிறது, நான் காதல்னு நெனைச்சதை, இவர் வெறும் டைம் பாஸுக்கு பண்ணிருக்கார்னு தெரிஞ்சு போச்சு, காதல் எது, வேஷம் எதுன்னு தெரியாமல் நான் இவரை நம்பியதற்கான தண்டையை இத்தனை நாளா அனுபவிச்சிட்டேன், இப்போ நான் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் இருக்கேன், நான் இப்போ கரஸ்ல டிகிரி படிக்கிறேன், இனிமேல் படிப்புதான் எனக்கு வாழ்க்கை படிக்கனும், நிறைய படிக்கனும், படிச்சு முடிச்சு வேலை செய்து ராகினி அக்காவையும் என் பிள்ளையையும் நல்லபடியா காப்பாத்தனும், இதுதான் என் முடிவு” என்று மான்சி தீர்மானமாக கூற 




அவள் சொல்வதை அமைதியாக கேட்ட சாமிநாதன் மகன் ஏதோ சொல்ல வந்ததை கையமர்த்தி தடுத்துவிட்டு அவரே “ மான்சி நீ படிக்கனும்னு சொல்றது நல்ல விஷயம்தான், படிப்பு பெண்களுக்கு அவசியம், அதனால அதை தடுக்கமாட்டேன், ஆனா எங்கப் பேரனையும் மருமகளையும் காப்பாத்தி கொடுத்த ராகினியை பாத்துக்க வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கு, அதோடு என் பேரன் ரிஷி, அவனுக்கு ஒரு உயர்வான அந்தஸ்தை கொடுக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கு, ஆனா நீ சொல்றதை பார்த்தா எங்ககூட வராமல் எல்லாத்தையும் நீயே பார்த்துக்கிறேன்னு சொல்ற மாதிரி இருக்கே?” என்று கேள்விகுறியுடன் மான்சியை பார்த்தார்

“ ஆமாம் அங்கிள், என்ன நடந்ததுன்னு நான் சொன்னது உங்களுக்கு புரியலையா? உங்க மகனுக்கு நான் மட்டும் பிள்ளையை சுமக்கலை, நிறைய பொண்ணுங்க சுமந்திருக்காங்க. இவரு அவங்களையெல்லாம் ஆஸ்பிட்டல் கூட்டிபோய் அதையெல்லாம் ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்து அபார்ஷனும் பண்ணிருக்காரு, கடைசியா என்னை கூட்டிட்டுப் போனதும் அதுக்காகத்தான், என்ன எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் தப்பிச்சு வந்துட்டேன், ஆக உங்க மகனுக்கு எல்லாரையும் போலத்தான் நானும், அப்படியிருக்க நான் மட்டும் எப்படி காதலி, மனைவி, மருமகள், என்று உரிமை கொண்டாட முடியும்?, ஆப்ரேஷனுக்கு முன்னாடி அவரோட மனநிலை எப்படியிருந்ததுன்னு நான் நேரடியாகவே பார்த்து புரிஞ்சுகிட்டது, அப்படியிருக்க காதலே இல்லாத ஒருத்தர் என்னை வெறும் ஆசையை தீர்த்துக்க மட்டும் பயன் படுத்திய ஒருத்தர், ஆப்ரேஷனுக்கு பிறகு மாறியிருப்பார்ன்னு நீங்க எப்புடி நம்புறீங்க?” என்று சாமிநாதன் முன்பு கனமானதொரு கேள்வியை வைத்தாள் மான்சி.

“ ஏன்மா முடியாது, அவனை நிலைமையை இவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலையா? சத்யன் மறைக்க நினைச்சிருந்தா ஏன் நீ குழந்தை உண்டான விஷயத்தை சொல்லி என் மான்சியும் குழந்தையும் எனக்கு வேனும்னு எல்லார் முன்னாடியும் சொல்லனும்? இதுலயே புரிஞ்சிருக்குமே சத்யனும் உன்னை விரும்பியிருக்கான்னு? இல்ல நாங்க சொல்றது பொய்யின்னு நினைக்கிறயா மான்சி? ” என்று சாமிநாதன் கூறிவிட்டு கூர்மையாக மான்சியைப் பார்க்க


மான்சி மேலும் விறைத்து நிமிர்ந்து “ அய்யோ நீங்க சொல்றதை நான் பொய்யின்னு சொல்லலை அங்கிள், நிச்சயம் அவர் என்னையும் என் வயித்துல இருந்த குழந்தையையும் மட்டுமே நெனைச்சுகிட்டு இருந்திருப்பார்னு நான் நம்புறேன், ஆனா அதுக்கு பெயர் காதல் இல்லை அங்கிள், அவர் என்னை தேடியதற்கான காரணத்தை நான் சொல்றேன் கேளுங்க, அவர் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுறதுக்கு முன்னாடி நடந்தது என்ன? என்னை அபார்ஷனுக்காக கூட்டிட்டுப் போனார், அவரோட எண்ணப்படி என் கருவை கலைக்க முடியலை, அதனால ஆப்ரேஷன் தியேட்டர்ல இருந்த கடைசி நிமிடம் வரை அதே நினைப்புல இருந்திருக்காரு,

" ஆப்ரேஷன் முடிஞ்சதும், நானும் என் வயித்துல இருந்த குழந்தையும், எங்களை தேடச் சொல்லி நியமிச்ச சந்துருவும் மட்டும் இருந்திருக்கோம், மற்றதெல்லாம் மறந்து போச்சு, இவர் என்கிட்ட நேரடியாக சொன்ன இல்லாத காதல் இப்போ வந்திருக்குன்னு இதை மட்டுமே வச்சு எப்புடி அங்கிள் நம்புறீங்க?, கடைசி நிமிஷத்தில் இவரால முடியாத ஒன்னு மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சு இப்போ அரைகுறையுமா வெளியே வந்ததால நீங்க எல்லாரும் அதை உண்மை காதல்னு நம்புறீங்க, ஆனா காதலே இல்லேன்னு இவர் சொன்னதை என் காதால கேட்டவ நான் என்னால இதை நம்ப முடியாது,

" இப்போ உங்க பேச்சை கேட்டு இவர் கூட வந்தால், நாளைக்கு என்றாவது ஒருநாள் இவருக்கு பூரணமா குணமாகி தெளிவடைஞ்சதும், காதல் கொஞ்சம் கூட இல்லாம வெறும் உறவுக்காக பயன் படுத்தின ஒருத்திய நாம கல்யாணம் பண்ணிகிட்டோமே என்று நினைத்து, இதுதான் சமயம்,, பணக்காரன் கிடைச்சுட்டான்னு கல்யாணம் பண்ணிகிட்டயான்னு அருவருப்பாக என்னைப் பார்த்தார்னு வைங்க...... அதை தாங்க கூடிய சக்தி எனக்கு இல்லை அங்கிள், அதைவிட நான் என் மனசுல காதலோட வாழ்ந்துதான் இந்த குழந்தையை பெத்துக்கிட்டேன் என்ற திருப்த்தியோட வாழ்ந்துடுவேன், எனக்கு காதலே இல்லாத வாழ்க்கை வேனாம் அங்கிள், நீங்க உங்க மகனோட கிளம்புங்க ” என்று தனது முடிவை கூறிவிட்டு தரையில் அமர்ந்து மகனை மடியில் போட்டு தட்டி தூங்க வைக்க முயன்றாள் 


மான்சியின் வார்த்தைகள் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியிருந்தது, யாருமே இந்த கோணத்தில் சிந்திக்கவில்லை என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது, சாமிநாதன், விஜயா, ராகினி எல்லோரும் அதிர்ச்சியுடன் மான்சியைப் பார்க்க, சத்யன் மான்சியைப் பார்த்த பார்வையில் நிறைய வித்தியாசம் இருந்தது, அவளையே சிறிதுநேரம் வெறித்தவன் , பிறகு எழுந்து அவளை நெருங்கி எதிரே சம்மணமிட்டு அமர்ந்து, மகனைத் தட்டிய அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு “ மான்சி உன் மனசு எனக்கு புரியுது, நீ பேசினதை நினைச்சு எனக்கு பெருமையாவும் இருக்கு, ஆனா இது நம்ம குழந்தையோட வாழ்க்கை மான்சி, நான் ஒரேயொரு கருத்து சொல்றேன் அதைமட்டும் யோசிச்சுப் பார்த்து உன் முடிவை சொல்லு ப்ளீஸ்” என்று சத்யன் அவள் கண்களைப் பார்த்து பேச..

“ இன்னும் என்ன யோசிக்கனும்னு சொல்றீங்க? சொல்லுங்க யோசிக்கிறேன் ” என்று சலிப்புடன் கூறினாள் மான்சி

கன்னத்தில் இருந்த அவள் கைகளை தன் நெஞ்சில் அழுத்திக்கொண்ட சத்யன் “ உனக்கு அபார்ஷன் பண்றதுக்காக கூட்டிட்டுப் போனேன், அங்க நீ கேட்டப்ப உன்மேல காதலே இல்லேன்னு நான் சொன்னேன் என்பது தானே உன் குற்றச்சாட்டு, ஆனா உன்மேல் இருந்த அளவுகடந்த காதலால் தான் அதெல்லாம் நான் சொ்ல்லியிருப்பேன்னு நீ ஏன் யோசிக்கவேயில்லை மான்சி” என்று சத்யன் கேட்க ...

மான்சி அவனை குழப்பமாக பார்த்தாள், இவன் என்ன சொல்ல வர்றான், அதெப்படி மனசு நிறைய காதலை வச்சுகிட்டு அபார்ஷன் பண்ண கூட்டிட்டுப் போகமுடியும்?. காதலிக்கிற ஒருத்திகிட்ட எப்படி காதலே இல்லைன்னு முகத்திலடித்தாற்போல சொல்ல முடியும்?, இதுல யோசிக்க என்ன இருக்கு? மான்சி யோசித்தாள், குழப்பமாக பார்த்தவளின் முகத்தில் ஆர்வத்தின் அறிகுறி தென்பட......

“ ஆமாம் மான்சி, நல்லா யோசிச்சுப்பாரு, என்னோட தலைவலியின் காரணம் தெரிஞ்ச பிறகுதான் உன்னைய ஆஸ்பிட்டல்க்கு கூட்டிட்டுப் போயிருக்கேன், அதாவது நான் ஆப்ரேஷனுக்கு பிறகு பிழைப்பேனா என்ற பயத்தில், உன்னை இந்தமாதிரி ஒரு நிலைமையில் நிர்கதியா விட்டுட்டுப் போக மனசில்லாமல் கூட உன்னை அபார்ஷனுக்காக கூட்டிட்டுப் போயிருக்கலாமே மான்சி, தான் உயிரா காதலிச்ச ஒருத்தி தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் கூட இதையெல்லாம் நான் செய்திருக்கலாமே மான்சி,, உனக்காக இவ்வளவு யோசிச்சுப் பேசிய நீ, எனக்காக கொஞ்சம் யோசிச்சுப் பாரு மான்சி” என்று சத்யன் வற்புறுத்தலாக கூறியதும்

மான்சியின் முகத்தில் சிந்தனையின் முடிச்சுகள், சாமிநாதன் ஓடிவந்த மகனை எழுப்பி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார், “ என் மகன் தப்பான வழியில போறான்னு தெரியும்டா, அதை நெனைச்சு நான் வேதனைப்படாத நாளே இல்லை, ஆனா இப்போ மான்சி சொன்னதையெல்லாம் கேட்டு இப்படியொரு பிள்ளை நமக்கு தேவையான்னு நினைச்சேன், நீ இப்போ சொன்னதை கேட்டதும் என் மனசுக்கு சந்தோஷமா இருக்குடா மகனே, நிச்சயமா நீ சொன்ன காரணமாகத்தான் இருக்கும்னு என் மனசு சொல்லுதுடா சத்யா, உன் உயிருக்கு உத்ரவாதம் இல்லாத நிலையில மான்சிய இப்படி விட்டுட்டுப் போகக்கூடாதுன்னு தான் நீ இந்த முடிவெடுத்துருப்ப சத்யா, இதை நான் கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணி சொல்வேன், என் மகன் ஒழுக்கமில்லாதவன் தான், ஆனால் ஒரு கொலை பாதகத்தை செய்யும் அளவுக்கு கேடுகெட்டவன் இல்லை,, மான்சியை அங்க கூட்டிட்டுப் போறதுக்கு முன்னாடி நீ எவ்வளவு வேதனைப் பட்டிருப்படா மகனே?” என்றவர் மீண்டும் மகனை அணைத்து கண்ணீர் விட்டார்,

தன் அப்பா தன்னை புரிந்து கொண்டதில் சத்யனுக்கு சந்தோஷம்தான், ஆனால் மான்சி?, தன் ஆயுள் ரேகையை அவள் முகத்தில் தேடிய சத்யனுக்கு அவள் முகத்தில் இன்னும் குழப்ப ரேகைகள்தான் ஓடுகிறது என்பதை பார்த்துவிட்டு, தன் அப்பாவிடமிருந்து விலகி அவள் முன்பு மறுபடியும் மண்டியிட்டு “ என்னை நம்பு மான்சி, நான் பொய்யா நடிச்சதையெல்லாம் நீ நம்பினேன்னு சொன்ன,இப்போ இந்த நிமிஷம் நான் உன்னைய உயிருக்குயிரா லவ்ப் பண்றேன், இதையும் நம்பு மான்சி, இதைமட்டும் நம்பி என்கூட வா மான்சி?” என்று அவள் முன்பு காதல் பிச்சை கேட்டு சத்யன் கையேந்தி நிற்க........... 


அதுவரை அமைதியாக இருந்த விஜயா மகன் இப்படி மண்டியிட்டு கையேந்துவதை காணப்பொறுக்காமல் எழுந்து வந்து, அவனை எழுப்பிவிட்டு அவன் இடத்தில் தான் அமர்ந்து “ மான்சி நானும் கூட உன்னை ஏதேதோ திட்டியிருக்கேன், நீ எவ்வளவு ரோஷக்காரின்னு இப்போ புரியுது, அதையெல்லாம் மனசுல வச்சுகிட்டு என் மகனோட வாழ்க்கையை பழிவாங்கிடாதம்மா, சத்யன் கெட்டுப் போக நானும் ஒரு காரணம், என் அளவுக்கதிகமான செல்லமும், நான் கொடுத்த பணமும் தான் அவனை இப்படி ஆக்கிருச்சு, நீ அங்க வந்துட்டா எல்லாம் நல்லபடியா மாறிடுவான்மா, எனக்கு நம்பிக்கையிருக்கு, நீ நம்ம வீட்டுக்கு வந்து விளக்கேத்தனும் அதுதான் எங்க எல்லோருடைய ஆசையும்” என்று விஜயா தழுதழுத்த குரலில் மாண்யிடம் கைகூப்பி வேண்ட

மான்சி தர்மசங்கடத்துடன் “ என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க? நான் என் மனசுல பட்டத்தை சொன்னேன், யாரையும் காயப்படுத்த நினைக்கலை, உங்க மகன் செய்த எல்லாத்துக்கும் நியாயம் சொல்ற நீங்க, என் மனசை தயவுசெய்து புரிஞ்சுக்கங்க, நான் நல்லது கிடச்சா சாப்பிடனும்னு நெனைக்கிற ஏழைதான், ஆனா எதைவேண்டுமானாலும் தின்னுட்டு உயிர் வாழ நினைக்கிற பிச்சைக்காரி இல்லை, அவர் பல பெண்களோடு பழக்கம் உள்ளவர்னு ஆஸ்பிட்டல்ல சொன்னதை என் காதால கேட்டப்பிறகு நான் எப்படி அவரை இன்னும் காதலிப்பேன்னு எதிர் பார்க்கீறீங்க? எனக்கு அவர்மேல் இருந்த காதல் செத்து வருஷக்கணக்கில் ஆச்சு நான்....... ” என்று மான்சி சொல்லி முடிப்பதற்குள் தன் அப்பா அம்மாவை விலக்கி விட்டு முன்னால் வந்த சத்யன்.....

“ அப்போ நான் தரங்கெட்டவன்?, என்கூட நீ வாழ்ந்தால் எதையோ தின்றதுக்கு சமம் அப்படித்தானே?, என்ன சொன்ன? என்ன சொன்ன? என்மேல் லவ் இல்லையா? இப்போ நான் வந்ததும் உனக்கு ஒரு முத்தம் குடுத்தேனே? , அப்போ மயங்கிப் போய் வாயைத் திறந்து எனக்கு வழிவிட்டு நின்னயே அது லவ் இல்லையா? என்னைத் தவிர வேற எவன் குடுத்தாலும் அப்படித்தான் நிப்பயா? இவ்வளவு நேரமா என் கையில பட்ட காயத்துக்கு உன் கண்ணீரால மருந்து போட்டயே அதுவும் லவ் இல்லையா? ஏய் இதெல்லாம் பெத்தவங்க முன்னாடி நடக்கக்கூடாத விவாதம், ஆனா எனக்கு வேற வழி தெரியலை, நானும் எவ்வளவோ சொல்லி புரியவைக்கப் பாரக்கிறேன் உனக்கு ஏன் புரியலை, உன் மனசாட்சித் தொட்டு சொல்லு உன்னை தொட்டப் பிறகு நான் வேற எவளையாவது தொட்டுருப்பேன்னு நீ நம்புறியா?” என்று சத்யன் கேட்க
சத்யனின் கோபம் மான்சியை விதிர்க்க செய்தது, திகைப்புடன் அவனைப் பார்த்து விழித்தாள், மான்சியின் மவுனம் அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது, சத்யன் அவள் கண்களையே கூர்ந்தான், அவளின் மவுனம் அவனுக்கு ஆயிரம் கதை சொன்னது


“ பொதுவாகவே பெண்களுக்கு....

“ கண் பேசும், கை பேசும், உதடுகள் பேசும்,,

“ உனக்கு மட்டும் எப்படி மவுனம் பேசுகிறது? 

மான்சி அவன் பார்வையை சந்திக்க தெம்பின்றி தலை குனிந்தாள், அவள் மனசாட்சிக்குத் தெரியும் சத்யன் இவளைத் தொட்டப் பிறகு வேறு பெண்ணை நாடியிருக்க மாட்டான் என்று,, அதோடு அன்று அந்த மருத்துவமனையில் ‘ நீங்களும் இப்பல்லாம் யாரையும் கூட்டிட்டு வர்றதில்லை, என்று அந்த டாக்டர் சொன்ன வார்த்தைகள் மான்சியின் காதுகளில் இப்போது ஒலித்தது, அவளையுமறியமால் அவள் தலை அசைந்து இல்லை என்று மறுத்தது, பிறகு மெல்லிய குரலில் “ ஆனா அதுக்காக முன்னாடி நடந்ததெல்லாம் சரின்னு சொல்லமுடியும?” என்றாள்

கையில் இருந்த கட்டோடு மான்சியின் மடியில் தூங்கிய மகனைத் தூக்கி தன் தாயிடம் கொடுத்த சத்யன் அவளை தோள்தொட்டு தூக்கி தன் எதிரே நிறுத்தி “ அதுக்கு நீ என்னை காதலிக்கிறதுக்கு முன்னாடியே நான் உத்தமனா? நல்லவனா? அப்படின்னு விசாரிச்சுட்டு காதலிச்சுருக்கனும்? என்னப் பண்றது மான்சி, உன்னை லவ் பண்ணதுக்கு அப்புறம்தான் நான் திருந்தனும்னு என் தலையில எழுதியிருக்குப் போல, சரி இன்னும் உனக்கு நம்ம லவ் மேல நம்பிக்கை இல்லைன்னா, நாம ரெண்டுபேரும் மறுபடியும் வேனும்னா புதுசா லவ் பண்ணி பிறகு கல்யாணம் பண்ணிக்கலாமா? குழந்தையை வேனும்னா அம்மாவும் அப்பாவும் பார்த்துக்கட்டும்” என்று சத்யன் குறும்புடன் கூறியதும்..

அவன் சொன்ன வார்த்தைகள் அவள் இதயத்துக்குள் நுழைந்து இம்சை செய்ய,, மான்சி அவளையும் அறியாமல் வெட்கத்தில் வழிமூடினாள், சத்யன் தன் விரலால் அவள் இதழ்களைத் தொட்டான், உடனே உடல் சிலிர்க்க விழி திறந்தாள் அந்த காதல் பதுமை,,

“ எல்லா இசை கருவியும் ஏதாவது ஒரு இடத்தில்..

“ மீட்டினால் மட்டுமே இசை வரும்!

“ நான் எந்த இடத்தில் மீட்டினாலும் இசைப்பது...

“ என் காதலி நீ மட்டும் தான்! 


அவர்களின் காதலர்களின் காதல் மவுனத்தை கலைக்கும் விதமாக “ சரி மான்சி பொள்ளாச்சிக்கு பொழுது விடிய கிளம்பனும் தேவையானதை எடுத்து வைம்மா, ராகினி நீயும் எங்ககூட கிளம்பும்மா, இங்க ஏதாவது கொடுக்கல் வாங்கல் இருந்தா சொல்லும்மா எல்லாத்தையும் காலையில செட்டில் பண்ணிரலாம்” என்று சாமிநாதன் தன் மகனின் காதல் வார்த்தைகளையும் பார்வைகளையும் ஓரக்கண்ணால் ரசித்தபடி ராகினியிடம் சொன்னார்

சத்யன் மான்சி இருவரும் சேர்ந்து நிற்பதைப் பார்த்து ராகினிக்கும் சந்தோஷம் தாங்கவில்லை வேகமாக அவர்களிடம் வந்து இருவரின் நெற்றியிலும் விரல்களால் தடவி திருஷ்டி கழித்துவிட்டு “ என் பாப்பாவை இந்த மாதிரி பார்க்கனும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை ” என்று கண்கலங்கியவள் சாமிநாதனின் பக்கம் திரும்பி

“ அய்யா உங்க பெரிய மனசு யாருக்கும் வராது, உங்களைப் போல பணத்தை மதிக்காம, மனுசங்கள மதிக்கிறவங்க இருக்கிறதாலதான் உலகத்துல நல்லது நடக்குது, ஆனா அய்யா என்னால உங்க கூட வரமுடியாது, இந்த ஊர் சனம் என்னையும் ஒரு ஜீவனா மதிச்சு ஆதரிச்சவங்க ,, இந்த சனத்தை பிரிஞ்சு என்னால எங்கயும் வரமுடியாது, அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்து மான்சியையும் ரிஷியையும் பார்க்க அனுமதி குடுத்தா அதுவே போதும், அதுக்கப்புறம் நான் செத்தா என்னை அனாதை பொணமா விடாம ரிஷி கையால எனக்கு கொள்ளி வைக்க நீங்க அனுமதிக்கனும்?” என்று ராகினி உருக்கமாக வேண்டியதும் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்

சத்யன் மான்சியுடன் ராகினியின் காலில் விழுந்து “ எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கக்கா” என்றான்

ராகினி தன் கண்ணீரை அவர்களின் தலையில் உகுத்து, புன்னைகையுடன் ஆசிர்வதித்தாள், மான்சியின் தோள் தொட்டு தூக்கி தன் எதிரில் நிறுத்தி “ மான்சி கண்ணு எனக்கு உன்னை நினைச்சாதான் ரொம்ப பயமாயிருக்கு, முன் கோபத்தோடு முடிவெடுக்குறதை குறைச்சுக்க, நமக்குன்னு ஆண்டவன் எதை விதிக்கிறானோ அதுதான் கிடைக்கும், சில விஷயங்களுக்கு நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க, அப்படி நாம பார்க்க ஆரம்பிச்சா அதுல வெளிய வரமுடியாத அளவுக்கு நம்மலே மாட்டிக்குவோம், நான் எதை சொல்றேன்னு உனக்கு புரியும் பாப்பா, ரிஷியை கவணமா பார்த்துக்க, மாமியார் மாமனார் சொல்பேச்சு கேட்டு நடந்துக்க, புருஷனை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுக்காதே, இனி இவருதான் உன் உலகம், தம்பியோட மனசு கோணாமல் நடந்துக்க மான்சி, ரிஷி பத்திரம் கண்ணு” என்றவள் அதற்கு மேல் பேசமுடியாமல் வாயை முந்தானையால் மூடிக்கொண்டு அழுதாள்

“ அக்கா நீங்களும் எங்ககூட வாங்கக்கா?” என்று மான்சியும் அழ ஆரம்பிக்க, “ வேனாம் கண்ணு, நீ தாய் வீடுன்னு வர ஒரு இடம் இருக்கனும்ல அதுக்கு நான் இங்கேயே இருந்தாத்தான் முடியும், நீ கொஞ்சநேரம் படுத்து தூங்கி பொழுதுவிடிய நம்ம தலைவர் ஜயா வீட்டுல ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பு, நீ நல்லாருக்கனும்னு நெனைச்ச மனுஷன் அவரு” என்ற ராகினி சத்யனிடம் வந்தாள்

சத்யன் ராகினியின் கையைப் பற்றிக்கொண்டு “ கவலையே படாதீங்க அக்கா, உங்க மகளை பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொருப்பு, மாசம் ஒரு முறை கூட்டிட்டு வர்றேன், நீங்களும் மாசாமாசம் வந்துடுங்க, போதுமா?” என்று கேட்க

அவன் கைகளை தன் கண்களில் ஒற்றிக்கொண்டு “ இந்த வார்த்தை போதும் ராசா, ஆனாலும் ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிக்கிறேன் தம்பி, பாப்பா ரொம்ப சின்னப் புள்ளை சூதுவாது தெரியாதவ, இன்னும் அதுக்கு நல்லது கெட்டது பேதம் பிரிக்க தெரியலை,, நீங்க அதுக்கு கண்ணுக்கு கண்ணா இருந்து வழி நடத்தனும், எந்த சூழ்நிலையிலும் கண்ல பட்ட தூசா ஆயிடாதீங்க, அதை அந்த புள்ளையால தாங்க முடியாது, அது இந்த ஒன்றரை வருஷமா பட்ட கஷ்டத்தை நான் நேர்ல பார்த்ததால இவ்வளவும் சொல்ல வேண்டியிருக்கு, தப்பா நெனைக்காதீங்க தம்பி?” என்று ராகினியின் உறுக்கமான பேச்சு சத்யனின் மனதை தொட்டது

“ நிச்சயமா கவனமா பார்த்துக்குவேன் அக்கா, இனிமேல் என் உயிரே அவங்க ரெண்டுபேரும் தான்” என்று சத்யன் ராகினியின் கையிலடித்து கூறினான்
மணி 2 -50 ஆகியிருந்தது பொழு விடிய இன்னும் சற்று நேரமே இருந்ததால் சாமிநாதன் வெளித் திண்ணையில் வந்து காற்றாட படுத்துக்கொள்ள, விஜயா தன் பேரனுக்கு பக்கத்தில் வெறும் பாயில் படுத்து வருடிக்கொண்டே இருந்தாள்,

“ நீங்க ரெண்டுபேரும் தூங்கறதுன்னா தூங்குங்க, இல்லேன்னா தோட்டத்தில் போய் கொஞ்ச நேரம் பேசுங்க, நான் உனக்கும் ரிஷிக்கும் தேவையானதை பொட்டியில் எடுத்து வைக்கிறேன்” என்று ராகினி கூறியதும் ......

சத்யன் மான்சியைப் பார்த்தான், மான்சி எதுவும் பேசாமல் தோட்டத்துக்குப் போக, சத்யன் அவள் பின்னால் போனான், தெரு விளக்கின் வெளிச்சம் தோட்டம் வரை வந்தது, கொய்யா மரத்தடியில் கிடந்த சதுர கல்லில் மான்சி அமர, அவளருகே வந்த சத்யன் அவள் பக்கத்தில் அமர்ந்து ஆவேசமாக அணைத்து மான்சியின் முகத்தில் தனது உதடுகளால் ஈரமானதொரு ஓவியத்தை வரைய ஆரம்பிக்க, மரத்தில் இருந்த இரவுநேர பட்சி ஒன்று இவனுடைய ஆலிங்கனத்தைப் பார்த்து வேற மரம் தேடி பறந்தது

தன் முகத்தை ஈரப் படுத்தியவனின் ஆவேசத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று புரியாமல் திணறித் தவித்து மூச்சுக்கு துடித்த மான்சி அவனை மெதுவாக விலக்கி கலைந்த தனது முந்தானையை சரி செய்துகொண்டு “ என்ன இவ்வளவு அவசரம், நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்” என்று மெதுவாக கூற

அவள் சரி செய்த முந்தானையை மீறி அவளின் வனப்புக்குள் தன் பார்வையால் அத்துமீறி நுழைந்த சத்யன் “ ம் சொல்லு கேட்கிறேன்” என்றான்

அவன் பார்வை நுழைந்த இடங்களை எண்ணி கூசிய மான்சி “ மொதல்ல முகத்தைப் பார்த்து பேசுங்க, அப்பத்தான் சொல்ல வந்ததை சரியா புரிஞ்சுக்க முடியும்” என்றாள் மான்சி, அவள் குரல் வெட்கத்தில் நைந்தபடி வெளி வந்தது

வேண்டாவெறுப்பாக தன் பார்வையை அவள் முகத்துக்கு மாற்றிய சத்யன் “ ம் சொல்லு “ என்றான் சலிப்புடன்

“ இல்ல நீங்க சொன்னது, அங்கிள் சொன்னது உங்க தரப்பில் வேனும்னா சரியா இருக்கலாம், ஆனா என்னால இன்னும் முழு மனசோட ஏத்துக்க முடியலை, அன்னிக்கு என் முகத்துல அடிச்ச மாதிரி ' உன்னை நான் காதலிக்கிறேன்னு எப்பவாவது சொல்லிருக்கேனா, நல்லா யோசிச்சுப் பாருன்னு' சொன்னீங்க, அதையே இத்தனை நாளா நெனைச்சு நெனைச்சு நான் கண்ணீர் விட்டுருக்கேன், இப்போ வந்து அதெல்லாம் காதலியின் மேல் உள்ள அக்கறையாலன்னு சொன்னா என்னால நம்பவும் முடியலை ஏத்துக்கவும் முடியலை, ஏன்னா நான் வாழ்க்கையில் தோத்துட்டதா அழாத நாளில்லை, இனிமேல் புதுசா நீங்க சொன்ன விஷயங்களை என் மனசு ஏத்துக்க எனக்கு கொஞ்சம் டைம் வேனும், நீங்க என்னை காதலால் தான் இவ்வளவும் பண்ணீங்க அப்படின்னு எனக்கு முழுசா புரியனும், அதுவரைக்கும் என்னை விட்டுடுங்க, நாம ஒதுங்கியே இருப்போம், ஏன்னா மறுபடியும் ஒரு அவமானத்தை ஏத்துக்க கூடிய மன தைரியம் எனக்கில்லை " என்று தலைகுனிந்தவாறு மான்சி சொன்ன வார்த்தைகளை தலை நிமிர்ந்து கேட்ட சத்யன்....



" அப்போ நீ இன்னும் என்ன நம்பலை?" என்றான் அவளை துளைக்கும் பார்வையுடன்

அவன் கேட்டதற்கு மான்சியிடம் எந்த பதிலும் இல்லை... கவிழ்ந்த தலையை நிமிராமல் காத்திருந்தாள்

சிறிதுநேரம் அவளையே உற்றுப் பார்த்த சத்யன், பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன் " சரி மான்சி நான் ஒத்துக்குறேன், உன் மனசுக்கு என்னோட காதல் புரியும் வரை நான் காத்திருக்கேன், எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு மான்சி, அது தோற்க நான் விடமாட்டேன் " என்று உறுதியுடன் கூறிவிட்டு அங்கிருந்து பட்டென்று வெளியேறி வீட்டுக்குள் போனான்

அவன் அங்கிருந்து போனதும் மான்சிக்கு நெஞ்சுக்குள் ஏதோவொரு வெற்றிடம் வந்தது, சொல்லிட்டு இங்கயே இருந்தா கடிச்சி தின்னுடுவேனா? அப்படியே உள்ள ஓடுறானே' என்று எரிச்சலுடன் நினைத்த மான்சி அவளும் எழுந்து உள்ளே போனாள்

''யுத்தமிடும் வேகத்தில் இறங்கும் புத்தம்புது பனித்துளிகள்,,
''பூக்களுக்கு சத்தமில்லாமல் முத்தமிடும்,,
அதிகாலை வேலையில் அனைவரும் பொள்ளாச்சிக்கு பயணமானார்கள் 


No comments:

Post a Comment