Thursday, October 15, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 7

மருத்துவமனையின் தோட்டத்தில் அமைதியற்ற மனநிலையோடு சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்த சத்யனுக்கு, சற்று முன் மான்சி பார்த்த பரிதாபமான பார்வை திரும்ப திரும்ப கண்முன் வந்து மனதினை வண்டாக குடைந்தது,
இந்த குழந்தை தன் வயிற்றில் உருவானதற்கு நேற்று அவள் பட்ட சந்தோஷமும், தனக்கு கொடுத்து முத்தங்களும் ஞாபகம் வர தன் கன்னங்களை தடவிப்பார்த்து கண்கலங்கினான், ஆனாலும் வேறு வழியே இல்லையே, இப்படியொரு சூழ்நிலையில் இந்த பிள்ளை அவள் வயிற்றில் இருந்தால் அவள் எதிர்காலமே அல்லவா அழிந்து போகும், ஏற்கனவே தன்னால் சீரழிந்த அவள் வாழ்க்கை இப்போது தான் கொடுத்த கருவாலும் சீரழியவேண்டுமா? என்று இளகிய மனதை அடக்கினான் சத்யன்

பாதுகாப்பின்றி மான்சியிடம் உறவுகொண்ட தன் மடமையை எண்ணி நொந்துகொள்ளும் போதே, அந்த பாதுகாப்பு சாதனம் தன்னிடம் இருந்தும் மான்சியிடம் உறவுகொள்ளும் போது அதை விரும்பாத தன் மனமும் ஞாபகம் வந்து அதிக குடைச்சல்களை கொடுத்தது



கையிலிருந்த சிகரெட் முடிந்துவிட மற்றொரு சிகரெட்டை எடுத்து செத்து சாம்பலான பழைய சிகரெட்டால் புதியதின் தலையை சுட்டான், அதனை உதட்டில் பொறுத்தி இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு மூன்றாவது இழுப்பின் போது முனியம்மா ஓடிவந்தாள் “ தம்பி அந்த பொண்ண காணோம், கதவை தொறந்து வெளிய ஓடி போயிருச்சு” என்று பதட்டமாக சொல்ல

“ அய்யோ மான்சி ” என்று அலறிய பாதி எரிந்த சிகரெட்டை கீழே போட்டு விட்டு அவசரமாக அங்கிருந்து மருத்துவமனைக்கு உள்ளே ஓடினான். அவன் பின்னால் வந்த முனியம்மா “ உள்ள பார்த்தாச்சு தம்பி, அந்த பொண்ணு வெளியதான் ஓடியிருக்கு, அவ பையையும் காணோம்” என்று கூறினாள்

சத்யன் அவளை திரும்பி பார்த்து முறைத்துவிட்டு வெளியே ஓடி நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் தேடினான், சில கனரக வாகனங்களை தவிர வேறு எதையுமே காணமுடியவில்லை, அவன் நெஞ்சு உலர்ந்தது, “ அய்யோ எங்கடி போன” என்று வாய்விட்டு அலறியவன், வேகமாக காரில் ஏறி அசுரவேகத்தில் கிளப்பி முதலில் சாலையின் வலப்புறம் விரட்டினான் கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் வரை பயனித்தும் மான்சி சாலையோரங்களில் தென்படவில்லை என்றதும் மறுபடியும் வந்த வழியே திரும்பி சிறிதுதூரம் போய் தேடினான், மான்சி இல்லை,

ஏதாவது ஆட்டோவில் ஏறி பஸ்ஸ்டாண்டுக்கு போயிருப்பாளோ என்ற எண்ணத்தில் பொள்ளாச்சி பஸ்ஸ்டாண்டுக்கு காரை விரட்டினான், போகும்போதே சில நண்பர்களுக்கு போன் செய்து பஸ்ஸ்டாண்டில் வந்து இருக்குமாறு சொல்லிவிட்டு வேகமெடுத்தான்

அவனுக்கு முன்பே மூன்று நண்பர்கள் அங்கே வந்து தயாராக இருக்க, சத்யன் காரை ஓரங்கட்டிவிட்டு இறங்கவும் அவனை நெருங்கிய நண்பர்களில் ஒருவன் “ என்னாடா மச்சான் இவ்வளவு அவசரமா பஸ்ஸ்டாண்டுக்கு வரச்சொன்ன?” என்று கேட்க

பஸ்ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்களில் தன் பார்வையை பதித்தபடி “ ஒரு பொண்ணை தேடனும்டா மச்சி, எனக்கு தெரியாம வந்துட்டா, உடனே அவளை தேடனும் ரொம்ப அவசரம்” என்று சத்யன் முயன்ற அளவுக்கு பதட்டத்தை தனித்துக்கொண்டு கூறினான் 


“ ஏன்டா மச்சான் பார்ட்டி பணம் பத்தலைன்னு படிய மாட்டேன்னு ஓடி வந்துட்டாளா? விடுடா வேற பார்த்துக்கலாம்” என்று சத்யனின் நண்பன் கூற .
நண்பன் கூறிய வார்த்தைகள் சத்யனின் நெஞ்சை பிளந்தது “ டேய் சந்த்ரூ” என்று கோபமாக நிமிர்ந்த சத்யன் “ அவ அந்த மாதிரி இல்லடா? இது வேற ப்ளீஸ்டா ஹெல்ப் பண்ணுங்க” என்றான் கோபத்தை தனித்து

அவன் முகம் என்ன கதை சொன்னதோ “ சரிடா நீ கவலைபடாதே , ஆள் அடையாளம் மட்டும் சொல்லு தேடிடலாம்” என்றான் சந்த்ரூ ..

சத்யன் மான்சி அணிந்திருந்த உடைகளையும் அவளின் உயரம் மற்றும் நிறம், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, எப்போதோ அவளை தன் மொபைலில் படம் எடுத்தது ஞாபகம் வர, தனது மொபைலை எடுத்து அவள் படத்தை நண்பர்களுக்கு அனுப்பி “ இவதான்டா, வெளியே போற எல்லா பஸ்ஸையும் ஏறி பாருங்கடா, எதையும் மிஸ் பண்ணாதீங்க, நான் என் வீட்டுக்குப் போய் அங்கே வந்திருக்காளான்னு பார்க்கிறேன், நீங்க என்ன தகவலா இருந்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க ” என்று கூறிவிட்டு சத்யன் தன் காரில் ஏறி கிளம்பினான்,

வீட்டில் வந்து காரை நிறுத்திவிட்டு அவசரமாக உள்ளே ஓடினான், வாசுகிதான் சமையலைறையில் இருந்து வந்தாள், “ மான்சி காலேஜ் போய்ட்டாளான்னு பாருங்க வாசுகி?” என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளின் சேரில் அமர்ந்திருந்தான், பதட்டத்தை தணிவிக்க எதிரே இருந்த நீரை பருகினான்,

தோட்டத்தில் இருந்து வந்த வாசுகி “ இன்னும் வரலை தம்பி, எப்பவும் சாயங்காலம் நாலரைக்கு தானே வரும் இப்ப என்ன திடீர்னு கேட்குறீங்க” என்று வாசுகி கேட்டதும் ஒரு கணம் தடுமாறிய சத்யன் “ இல்லக்கா கார்ல வரும்போது அவளை மாதிரியே ஒரு பொண்ணை பார்த்தேன், நேரங்கெட்ட நேரத்தில் இவ வெளிய சுத்துறாளேன்னு தான் கேட்டேன், விடுங்க நான் பார்த்த பொண்ணு வேற யாராவது இருக்கும் ” என்று கூறிய சத்யன் தன் அறைக்கு சோர்வுடன் நடந்தான்

அறைக்கதவை திறந்து கட்டிலில் விழுந்தவனுக்கு வழக்கமாக வரும் தலைவலியின் அறிகுறிகள் தென்பட்டது, வலது பக்கம் பின் மண்டையை கையால் தாங்கியவன், “ மான்சி சீக்கிரமா வந்துடேன், இனிமேல் உன்னை அந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகமாட்டேன் மான்சி” என்று மெல்லிய குரலில் புலம்பியவன், வலி அதிகரித்ததும் தன் பின்னந்தலையை அழுத்தியபடி எழுந்து கம்பியூட்டர் டேபிளின் டிராவை திறந்து தனது மாத்திரைகளை தேடி எடுத்தான்

கலர்க்கலராக பல மாத்திரை அட்டைகள், ஒவ்வொன்றிலும் ஒரு ஒரு மாத்திரைகளை எடுத்தான், மொத்தம் பதிமூன்று மாத்திரைகள், அத்தனையும் அவன் தலைவலியை பத்து சதவிகிதம் கூட குறைக்காது, தண்ணீர் கூஜாவை எடுத்து மாத்திரைகளை விழுங்கினான், அதற்குள் வலி அதிகரிக்க, வேதனையுடன் “ அம்மா” என்று முனங்கியபடி கட்டிலில் விழுந்தான்,

அவனுடைய வேதனை அதிகரிக்கும் முயற்சியாக அவனது மொபைல் அழைக்க, எடுத்து பார்த்தான் , சந்துருதான் , ஆன் செய்த சத்யன் “ சொல்லுடா, ஏதாவது தகவல் தெரிஞ்சதா?” என்று சத்யன் முனங்கலாக கேட்க..


“ என்னடா சத்யா குரல் ஒரு மாதிரியா இருக்கு? மறுபடியும் தலைவலி வந்திருச்சா?” என்று சந்துரு கவலையாக கேட்டான்

“ ம்ம், வலி ரொம்ப சிவியரா இருக்கு,, சரி நீ மொதல்ல தகவலை சொல்லு சந்துரு?” என்றான் சத்யன்

“ இவ்வளவு நேரமா தேடினோம் எந்த பஸ்லயும் இல்லை, அதோட ஆட்டோ ஸ்டான்டுல கூட அடையாளம் சொல்லி விசாரிச்சுட்டோம், எந்த தகவலும் தெரியலைடா, மச்சான், இப்போ என்ன பண்றது ” என்று வருத்தமாக கேட்டான் சந்துரு

சற்றுநேரம் மவுனமாக இருந்த சத்யன் “ சரி சந்துரு உன்னோட டிக்கட்டை கேன்சல் பண்ணிடு, நான் மட்டும் சென்னை போறேன், ஆஸ்பிட்டல்ல செக்கப் முடிச்சுட்டு உனக்கு போன் பண்றேன், நீ இங்கே இன்னும் நாலு ப்ரண்ட்ஸ் வச்சு பக்கத்து ஊர்லே எல்லாம் தேடிப் பாரு, இதைத் தவிர வேறு வழியில்லை, அப்புறம் ஒரு விஷயம், மான்சியை தேடுறது ரகசியமா இருக்கட்டும்” என்று சத்யன் கூறியதும் ..

“ சரிடா மச்சான், நீ பத்திரமா போய்ட்டு வா, நாங்க அந்த பொண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சு வைக்கிறோம், மறக்காம இங்கே டாக்டர்ஸ் கொடுத்த ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் மறக்காம எடுத்துட்டுப் போடா மச்சான், நான் அப்பப்ப உன்க்கு கால் பண்ணி தகவல் கேட்டுக்கிறேன், ஆல் தி பெஸ்ட் சத்யா” என்று கூறி இணைப்பை துண்டித்தான் சந்துரு,

சத்யன் மருந்தின் உதவியோடு கொஞ்சம் குறைந்த தலைவலியை, மான்சியின் நினைவுகளால் மறுபடியும் வரவழைத்தான், இப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுன்னு தானே மான்சி வயித்துல இருந்ததை க்ளீன் பண்ண நினைச்சதே? இப்போ அவளை இந்த நிலைமையில எங்கயோ தொலைச்சுட்டு நான் மட்டும் நிம்மதியா போறேன், அவளுக்கு எந்த சூதும் தெரியாதே, இந்த நிலைமையில எங்கபோய் என்ன பண்றாளோ?’ என்று மறுபடியும் மறுபடியும் யோசித்து மண்டை குழம்பிய சத்யன் எழுந்து ஜன்னலருகே வந்து வழக்கமாக மான்சியை பார்க்கும் இடத்தில் நின்றான்

அவள் அறைக்கதவு மூடியிருந்தது, இனிமேல் என் விஷயத்தில் இந்த கதவைப் போலவே அவள் மனக்கதவும் மூடித்தான் இருக்கும், என்னைப் பார்த்து பார்த்து தலை குனிஞ்சவ இன்னிக்கு காலையிலே எவ்வளவு திட்டிட்டா? அவளுக்கு நான் செய்தது துரோகமா? இல்லையே? நன்மைதானே செய்திருக்கேன், என்னோட நிலையில நான் வேறென்ன பண்ணமுடியும்?, அவளை வயத்துல குழந்தையோட நிராதரவா விட்டுட்டு போறதைவிட அந்த குழந்தையை கலைச்சுட்டு அவ படிச்சு முன்னேறி வேறொரு நல்லவனை கல்யாணம் பண்ணனும்னு தானே நான் இந்த மாதிரி பண்ண துணிஞ்சேன், என்னை மறந்து இன்னொருத்தனை ஏத்துக்குறது கஷ்டம் தான், ஆனா அந்த கஷ்டத்தை காலம் மாத்திடுமே? இது புரியாம எவ்வளவு பேசிட்டா? எனக்கும் அவளுக்கும் கல்யாணமாம், அய்யோ’ என்று நெற்றியில் அறைந்து கொண்டவன் ஓடிச்சென்று கட்டிலில் விழுந்து தலையணையை எடுத்து நெஞ்சோடு அணைத்தான் 



‘ மான்சி, மான்சி, என்று புலம்பியது அவன் உதடுகள், உனக்கும் எனக்கும் கல்யாணமா? நடக்காதே மான்சி? நடக்காதே? என்று புலம்பி தீர்த்தான், நான் ஒரு நோயாளி மான்சி என்னோடு உன் வாழ்வு கேள்வி குறி மான்சி” என்று வாய்விட்டு அலறினான் ,

அப்போது அவனது மொபைல் அலற, எடுத்துப் பார்த்தான், அவனுக்கு ட்ரீட்மெண்ட் செய்யும் கோவை டாக்டர் தான் லைனில் இருந்தார் ,, சத்யன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு மொபைலை ஆன் செய்தான் “ சொல்லுங்க சார்” என்றான்

“ என்ன சத்யன் கிளம்பிட்டீங்களா, மறந்துடாதீங்க இன்னைக்கு நைட் பத்து நாற்பதுக்கு உங்களுக்கு அப்பாயின்மென்ட்” என்றார் டாக்டர்

“ மறக்கலை டாக்டர், இதோ ரெடியாயிட்டேன், ஈவினிங் செவன்த் தேர்ட்டிக்கு பிளைட், இங்கேருந்து ஒரு மணிநேரத்துல கோவை ஏர்போர்ட் போயிடலாம், அதனால இன்னும் நிறைய நேரம் இருக்கு டாக்டர் ” என்று சத்யன் சொல்ல

“ சரி சத்யன், உங்ககூடவே இருக்குறமாதிரி துணைக்கு யாரையாவது கூட்டிட்டு போங்க, முடிந்தவரை அந்த துணை உங்க பேரண்ட்ஸா இருந்தா நல்லது” என்று டாக்டர் கூற

சத்யன் சற்றுநேர மவுனத்திற்கு பிறகு “ இப்போ தனியாத்தான் போறேன் சார், செக்கப் முடிஞ்ச பிறகு தேவையென்றால் என் பேரண்ட்ஸை வரவழைச்சுக்கிறேன்” என்று தீர்மானமாக கூறினான்,

“ சரி உங்க இஷ்டம் சத்யன், நான் நாளைக்கு உங்களை சென்னையில் சந்திக்கிறேன், டேக் கேர் சத்யன்” என்றதும் லைன் கட்டானது,

சத்யன் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு பக்கத்தில் போட்டுவிட்டு, கண்மூடி கட்டிலில் சாய்ந்தான், மான்சிக்கும் தனக்கும் ஏற்பட்ட நெருக்கத்தை மீண்டும் நினைத்துப்பார்க்க ஆசைப்பட்டது அவன் மனம், இதுபோல் பலமுறை ரீவைண்ட் செய்து பார்த்த காட்சிகள் என்றாலும் அவளுக்கும் அவளின் நினைவுகளுக்குமே சத்யனின் தலைவலியை குறைத்து சுகமாக உறங்கச் செய்யும் சக்தியுண்டு, மான்சியை தோட்டத்தில் சந்தித்த அந்த முதல் நாள் அவன் நினைவில் கொண்டு வந்தான்

இரவின் மின்மினிப் போல் விழிகள் படபடக்க அவனைப்பார்த்து விட்டு இரவு ரோஜாவாக தலை கவிழ்ந்த மான்சியைப் பார்த்து முதலில் பிரமித்துப்போனான், எல்லோரையும் பிரம்மன் தான் செதுக்குவான் என்றால், இவளை பிரமனும் மன்மதனும் கூட்டனி அமைத்து செதுக்கி செப்பனிட்டிருந்தார்கள், விரலால் அழுத்தினாலே சிவப்பாளோ எனும்படியான தேகக் கட்டு, ஒரு மஞ்சள் ரோஜாவுக்கு புருவம் செதுக்கி, விழிகள் வரைந்து, மையிட்டு, பொட்டிட்டு, உதடுகள் செதுக்கியது போன்றதொரு முகம்,

பூக்களாலும் பழங்களாலும் ஒரு மாளிகை கட்டினால் அதுதான் மான்சி என்று உறுதியாக கூறுவது போன்ற உடலமைப்பு,, ஆம் அவள் உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் பூக்களுக்கும் பழங்களுக்கும் ஒப்பிடலாம்,, இரவின் ஒலியில் ஜொலிக்கும் அந்த மவுனச் சிற்பத்தை உடனே ஆண்டு அனுபவிக்க வேட்கைதான் எழுந்தது சத்யனுக்கு,

முதலில் அவன் கண்களை கவர்ந்தது, கனிந்தும் கனியாத செங்கனி மார்புகள் தான், கனியாத அந்த கனிகளை தன் பார்வையாலேயே கனியவைக்க ஆசைப்பட்டான், கனி கனியவில்லை, அவள் முகம் கனிந்தது, தங்கக் கோப்பைக்குள் வைரங்களை போட்டு குலுக்கியது போன்றதொரு சிரிப்புடன் அவனை பாராமல் வெட்கத்தை போர்வையாக்கிக் கொண்டு ஓடியது அந்த இளம் பெண்மைத் தோட்டம் 




இரவு நேரத்து வானவிலாய் அவன் மனதில் புதுமையாய் புகுந்தாள் மான்சி, அன்றுமுதல் அந்த உடலை ரசித்து ருசித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் அவனை ஆக்கிரமிக்க, அவளுக்கு தன்மீது இருந்த ஆர்வத்தை பயன்படுத்தி கண்டும் காணாதது போல் இருந்தால் தானாக வந்து விழுவாள் என்று எண்ணமிட்டான், அவன் நினைப்பு சரியானது, மான்சி அவனை தேடினாள், தவித்தாள், துடித்தாள், அதையெல்லாம் மறைந்திருந்து ரசித்தான், இறுதியாக வந்து அவன் அறையில் விழுந்தாள், விழுந்தவளை தன்னுடைய மரணமெனும் வார்த்தையை சொல்லி படுக்கையிலேயே விழவைத்தான்,

சாதரணமாக ஒரு பெண்ணை உறவுகொள்வதாக எண்ணித்தான் சத்யன் அவளை கட்டிலில் வீழ்த்தினான், ஆனால் அவளின் காதலும் அந்த காதலுக்கான எதிர்பார்ப்பற்ற அவளின் அர்ப்பணிப்பும் சத்யனை அன்றே வீழ்த்தியிருக்க வேண்டும், இல்லையென்றால் அவளை தொட்ட பின்பு ஏற்ப்பட்ட சந்தோஷம், நிம்மதி, திருப்தி, இவை எல்லாம் கலந்த புதுமையான தொரு உணர்வில் அவளை முத்தமிட்டு தனது சந்தோஷத்தை அவளிடம் வெளிப்படையாக சொன்னான்

அதன்பிறகு அவன்தான் அவளைத் தேடினான், ஒவ்வொரு நிமிஷமும் அவள் அணைப்பில் கிடக்க மனம் ஏங்கியது, சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவளை கட்டியணைத்தான் முத்தமிட்டான், ஆனால் இவற்றுக்கெல்லாம் அவன் கற்பித்துக் கொண்ட இரண்டு காரணம் மான்சியின் அழகு தன்னை மயக்கிவிட்டது, அவளுக்கும் செக்ஸ் தேவையான ஒன்று, அது தன்னிடம் தீர்த்துக் கொள்கிறாள் என்றுதான்..

அவன் தன்னையே முழுதாக புரிந்துகொண்ட அந்த நாளில் இதேபோல் தான் பயங்கர தலைவலி, பின் மண்டையில் யாரோ கட்டாரியால் பிளப்பது போன்றதொரு பயங்கர வலி, ஒரு பிடிப்பற்று அவன் படுக்கையில் உருளும் போதுதான் வந்தாள் மான்சி, கட்டிலில் அவன் பக்கத்தில் அமர்ந்து உருளும் அவன் தலையை எடுத்து தன் மடியில் இருத்தினாள், அடிவயிற்றோடு அவன் தலையை அழுத்தி பின் மண்டையை மெதுவாக பிடித்துவிட்டு சுகமாக நெற்றியை வருடினாள்

என்ன மாயமோ அவள் விரல்களில், சத்யனுக்கு வலி மறந்தது, சுகமான உறக்கம் வந்து கண்களை தழுவ அவள் இடையை தன் கைகளால் சுற்றி வளைத்து வயிற்றில் முகம் புதைத்து சுகமாக உறங்கினான், மறுபடியும் அவன் கண் விழித்தபோது விடிந்து மணி ஐந்து ஆகியிருந்தது, அதுவரை அவன் தலையை பிடித்துவிட்டுக்கொண்டு உறங்காமல் கிடந்த மான்சியை பார்த்ததும் முதலில் அவன் மனதில் எழுந்த கேள்விகள் ‘ இவளையா செக்ஸ்க்கு அலைகிறாள் என்றேன்?, இது தூய்மையான அன்பின் வெளிப்பாடு அல்லவா?, அப்போ எனக்கும் இவளுக்கும் என்ன? இந்த கேள்விகள் அனைத்திற்கும் அவனுக்கு பதில் தெரிந்தும் அதை ஒத்துக்கொள்ள மறுத்து பிடிவாதம் செய்தது அவனது பல கனிகள் தேடும் புத்தி,

அதன்பிறகு வந்த நாட்களில் சத்யன்தான் மான்சியிடம் விழுந்தான், ஜானகி ஊருக்குப் போன நாளில் அவனுக்கு சொர்கத்தையே அறிமுகம் செய்தாள் மான்சி, அந்த இரண்டு நாளும் தான் சத்யன் தன்னை முழுமையாக உணர்ந்தான், இனி மான்சியில்லாத ஒரு வாழ்க்கை தன்னக்கில்லை என்று உணர்ந்தான்
அவளின் காதலை இவன் ஏற்கும் நிலைபோய், தன்னைப்பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்தால் மான்சி தன்னை ஏற்ப்பாளா என்ற பயம் முதன்முறையாக வந்தது சத்யனுக்கு.... அவளின் தூய்மையான அன்புக முன்பு நான் தோற்றுவிடுவேனோ என்று அஞ்சினான், 


ஆரம்பத்திலேயே அவளை பாதுகாக்க வேண்டும், அலட்சியமின்றி அன்பாக நடந்துகொண்டது, அதைவிட அவளிடம் கொண்ட உறவின் போது இயந்திரத்தனமாக பாதுக்காப்பை தேடாதது, எல்லாம் சத்யனுக்கு புரிந்தது

அவளிடம் தன்னைப்பற்றி சொல்லவேண்டும் என்று சத்யன் முடிவு செய்த அதே நாளில் தான் மறுபடியும் கடுமையான அந்த தலைவலி மறுபடியும் வந்தது, அன்று கார் ஓட்டும்போது இவன் துடித்த துடிப்பை பார்த்து சந்துரு தான் வற்புறுத்தி சத்யனை கோவையில் பிரபலமான நியூரோ நியூராலஜிஸ்ட்டிடம் அழைத்துச்சென்றான்

காலையில் சென்றவனை இரவுவரை பல பரிசோதனைகள் செய்துவிட்டு இறுதியாக அவர் கேட்டது “ சில நாட்களுக்கு முன்பு பின் மண்டை பலமாக மோதும் அளவிற்கு ஏதாவது விபத்து நடந்ததா?” என்று கேட்டார்

சத்யன் யோசிக்கும் போதே சந்துரு முந்திக்கொண்டு “ ஆமாம் சார் போன வருஷம் நாங்க ஆனைமலை பாரஸ்ட்க்கு போயிருந்தோம் அங்கே காட்டுக்குள்ள ஒரு பால்ஸ் இருந்தது அதுல எல்லாரும் குளிக்கும் போது, சத்யன் மட்டும் வழுக்கி விழுந்து பின் மண்டை பாறையில மோதிருச்சு, ஆனா ரத்தகாயம் எதுவும் இல்ல, வீக்கம் மட்டும் இருந்தது, நான்தான் ரூமுக்கு வந்ததும் தைலம் தேய்ச்சு விட்டேன், ஏன் சார்? அதனால இப்ப என்னாச்சு? ” என்று சந்துரு கலவரமாய் கேட்க..

டாக்டர் சத்யனை சங்கடமாக பார்த்ததும் சத்யனுக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்துவிட்டது “ பரவாயில்லை எதுவாயிருந்தாலும் சொல்லுங்க டாக்டர், என் விஷயத்தில் நான் யாரையுமே முடிவெடுக்க அனுமதிப்பதில்லை, அதனால நீங்க தாராளமா சொல்லுங்க ” என்று சத்யன் குரலில் உறுதியுடன் கூறியதும் ..

ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்ட டாக்டர் “ இந்த இருபத்திமூன்று வயசுக்கு உங்க பேச்சுல முதிர்ச்சியும் அனுபவமும் அதிகமா இருக்கு சத்யன்,, அதுவும் நல்லதுதான்” என்றவர் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து “ அன்றைக்கு அடிபட்டதும் அந்த இடத்திலே ப்ளட் க்ளாட் ஆயிருக்கு சத்யன், அது இப்போது பெரிய ப்ளாக்கா மாறி சிக்கலை உண்டு பண்ணிருச்சு, அதை உடனே ரிமூவ் பண்ணியாகனும், அதுக்கான ஸ்பெஷாலிட்டிஸ் இங்கே இல்லை, நீங்க சென்னைக்கு போறதுதான் பெட்டர்” என்ற டாக்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து சத்யனின் தோளில் கைவைத்து “ நீங்க ரொம்ப அபாயக்கட்டத்தில் இருக்கீங்க சத்யன், இம்மீடியட்டா ஆப்ரேஷன் பண்ணி பிளாக்கை ரிமூவ் பண்ணியே ஆகனும், இல்லேன்னா உங்களோட நாட்கள் எண்ணப்படும் சத்யன்” என்று சொல்லிவிட்டு அமைதியாக நின்றார்

சத்யன் முன்னால் இருந்த மேசையில் தலைகவிழ்ந்தான், டாக்டர் சொன்ன செய்தியின் பாதிப்பை விட அவன் மனதில் வேறொன்று தான் அச்சத்துடன் ஓடியது, அது மான்சியை எப்படி வாழவைப்பது என்பதே?, அவளுக்கு என்னைத் தவிர யாருமில்லையே?,

சத்யன் மரணத்தின் வாயிலில் நிற்கும் அந்த தருணம் தான் அவன் காதலின் அளவே அவனுக்கு புரிந்தது, ஓடிச்சென்று மான்சியின் மடியில் கவிந்து படுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை சுனாமியாய் எழுந்து அவனை சுருட்டியது, கவிந்திருந்தவன் கண்களில் கரகரவென்று வழிந்தது


பெரும் அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட சந்துரு சத்யனின் தோளில் கைவைத்து உலுக்க, கண்ணீருடன் நிமிர்ந்த சத்யனைப் பார்த்து சந்துரு, டாக்டர், இருவருமே சத்யன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறான் என்றே நினைத்தார்கள், ஆனால் அவனது பயமெல்லாம் தான் இல்லாமல் ஒருத்தி வாழமாட்டாளே என்ற பயம்தான்

கண்களை துடைத்துக்கொண்டு எழுந்த சத்யன் “ ஓகே சார் நான் என்னைக்கு சென்னைக்குப் போகனும்?” இன்று கேட்க

அவன் தைரியத்தை மெச்சி தலையசைத்த டாக்டர் “ என்னைக்கேட்டால் இன்று இரவே நீங்க சென்னையில் இருக்கறதுதான் நல்லதுன்னு சொல்லுவேன்” என்று டாக்டர் சொல்ல

“ எனக்கு ஒருவாரம் டைம் வேனும் டாக்டர்? சில ஏற்பாடுகள் செய்யனும் ” என்றான் சத்யன்

அந்த ஒரு வாரமும் மான்சியை விட்டு ஒதுங்கி அவள் கவனத்தை படிப்பில் திசைதிருப்ப நினைத்தான், ஆனால் பிரிவு இவன் காதலையும் அவள் தவிப்பையும் அதிகப்படுத்தியது, அவளுக்கு எவ்வளவு புத்திமதி சொல்லியும் அவள் மனம் தன்னைச் சுற்றியே வந்ததை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை சத்யனால், அவளிடம் உண்மையை சொல்லி கலவரப்படுத்தவும் விரும்பவில்லை, செத்துட்டா என்ன பண்ணுவே என்ற கேள்விக்கே அவனுக்கு தன்னையே தந்தவள், உண்மையிலேயே சாவை எதிர்கொண்டுள்ளேன் என்று தெரிந்தால் தன் உயிரையே அல்லவா விட்டுவிடுவாள்?

எதையாவது சொல்லி அவளைத் தவிர்க்க வேண்டும் என்ற நினைப்பில் தான் நேற்று இரவு கீழே வந்தது,ஆனால் அவள் முத்தமிட்ட சந்தோஷம் அடங்குவதற்குள் தான் தாயான விஷயத்தை சொல்லி சத்யனின் நெஞ்சில் இடியை இறக்கினாள் மான்சி, தாயனதை எண்ணி அவள் சந்தோஷப்பட, அதனால் அவள் வாழ்க்கை மேலும் சீரழிந்து போகுமே என்று கலங்கிப்போனான் சத்யன்

நாளைய என் நிலையே உறுதியாக தெரியாத போது என் பிள்ளையை வயிற்றில் வைத்துக்கொண்டு இவள் சீரழியாமல் அதை கலைத்துவிடுவதே சரியானது என்று அவனது இருபத்திமூன்று வயது அனுபவம் சொன்னது
அதை செயல்படுத்த தான் மான்சியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றது, ஆனால் அவளுக்கு உண்மை தெரியாதவாறு எல்லவற்றையும் முடித்துவிட்டு பிறகு சொல்லலாம் என்று எண்ணினான், இந்த சிறு வயதில் அவள் பிள்ளையுடன் சிரமப்படக் கூடாது என்பதில் ரொம்பவே சத்யன் உறுதியாக இருந்தான்,

ஆனால் மான்சிக்கு உண்மை தெரிந்து அவள் கொதித்து குமுறியபோது சத்யனுக்கு அவளைப் பார்த்து ஆச்சரியமாகத்தான் இருந்தது, வேறு ஒரு சூழ்நிலையாக இருந்திருந்தால் அவள் கொதிப்பை தன் உதட்டாலேயே அடக்கி குளிர வைத்திருப்பான், ஆனால் இன்று அவளை சமாதானம் செய்ய வழியின்றி தான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினான், அதைத் தாங்கமுடியாமல் அவள் பரிதாபமாக பார்த்தபோது சத்யன் உயிரையே உருவியது போல் இருந்தது, அவளை மேலும் பார்க்கமுடியாமல் தான் அறையை விட்டு வெளியே வந்தது, ஆனால் மான்சி தப்பித்து போவாள் என்று சத்யன் எதிர்பார்க்கவேயில்லை


சத்யன் கட்டிலில் இருந்து எழுந்து போய் வாஷ் பேஸினில் முகம் கழுவிவிட்டு வந்தான், அவனுக்குள் ஒரு சிறிய சந்தோஷம் மனதின் ஒரு மூலையில், தன் குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது என்று சந்தோஷம் தான் , ஆனால் உலகம் தெரியாத என் மான்சி எங்கேபோய் எப்படி பிழைப்பாள்?, அவள் சொன்னதுபோல் அவளுடன் வந்து காலில் விழுந்து நிலைமை எடுத்துச்சொல்லி கல்யாணத்தை முடித்திருக்கலாம் தான், ஆனால் என் அப்பா சரி, அம்மா? நிச்சயம் என்னுடைய இந்த நிலைமைக்கு மான்சிதான் காரணம் என்று அவள் மீது பழி போடுவாள், அத்துடன் மீண்டும் ஒரு நரக வாழ்க்கை தான் மான்சிக்கு, அவளை நன்றாக வாழவைக்கும் நிலையிலா நான் இருக்கிறேன்?

நேரமாகிவிட்டதை கடிகாரம் உணர்த்த, மான்சியை எப்படியாவது கண்டுபிடித்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சென்னைக்கு கிளம்பினான் சத்யன்,
சென்ற வாரம் வீட்டில் சில பர்னிச்சர்களை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவதற்காக வங்கியிலிருந்து எடுத்து வந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை விஜயா மகனிடம் கொடுத்து லாக்கரில் வைக்கச் சொல்ல, சத்யன் அந்த பணத்தை முன்னேற்பாடாக தனது பீரோவில் வைத்திருந்தான், அந்த பணத்தை எடுத்து சூட்கேசில் வைத்துக்கொண்டான், நண்பனுக்கு திருமணம், அதனால் சென்னைக்கு செல்வதாக சொல்லிவிட்டு, முதன்முறையாக அந்த வீட்டின் பூஜையறையில் கண்மூடி நின்றான்

அவன் மனம் அவனுக்காக வேண்டவில்லை, மான்சிக்காக வேண்டினான், அவள் வயிற்றில் இருக்கும் பிள்ளைக்காக வேண்டினான், நான் உயிர்பிழைத்து வரும்வரை அவர்கள் இருவரும் யாராவது நல்லவரின் பாதுகாப்பில் இருக்கவேண்டும் என்று வேண்டினான்

அன்று இரவு பத்து மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சத்யன் அனுமதிக்கப்பட்டான், விடியவிடிய ஏகப்பட்ட டெஸ்டுகள் எடுக்கப்பட்டு, இறுதியாக அவனிடம் எதுவும் சொல்ல மறுத்தனர் மருத்துவர்கள் அவனுடைய பெற்றோர்கள் கன்டிப்பாக வரவேண்டும் அவர்களிடம் மட்டுமே அவன் நிலையை சொல்லமுடியும் என்று பிடிவாதமாக மறுத்தனர்

வேறு வழியின்றி சத்யன் சாமிநாதனின் போன் நம்பரை மருத்துவக்குழுவிடம் கொடுக்க, மறுநாள் அதிகாலையே மருத்துவமனையில் இருந்து சாமிநாதனுக்கு போன் செய்து உடனடியாக கிளம்பி வருமாறு தகவல் சொன்னார்கள்,
சாமிநாதன் பதட்டத்துடன் சத்யனின் மொபைலுக்கு போன் செய்ய “ ஒன்னுமில்லப்பா மொதல்ல நீங்க கிளம்பி வாங்க, ப்ளீஸ் வேற எதுவும் கேட்காதீங்க” என்று சத்யன் இணைப்பை துண்டிக்க, சாமிநாதன் விஜயாவுடன் அன்று இரவே வந்து சேர்ந்தார்,

ஏசி அறையில் ஏகப்பட்ட வயர்கள் சூழ சுவாசித்த மகனைப் பார்த்து மயக்கமே வந்தது இருவருக்கும், மருத்துவர்கள் சத்யனின் நிலைமையை எடுத்து சொல்லி “ இன்னும் மூன்று நாளில் அவருக்கு ஆப்ரேஷன் பண்ணனும், ரொம்ப அபாயக்கட்டத்தில் இருக்கார்” என்று தலைமை மருத்துவர் கூறியதும் சாமிநாதன் தன் முகத்தை மூடிக்கொண்டு கதறியழ, விஜயா திக்பிரமை பிடித்து அழமுடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்


அழுது ஓய்ந்து சாமிநாதன் மருத்துவர்கள் காட்டிய இடங்களில் கையெழுத்திட்டதும், அவனைப் பற்றிய கசப்புகள் மறந்து மகனை அணைத்தபடியே அமர்ந்திருந்தார் சாமிநாதன், சத்யன் மான்சியைப் பற்றிய உண்மைகளை சொல்லிவிடலாமா என்ற நினைத்தான், ஆனால் மான்சி மீது விஜயாவுக்கு இருந்த வெறுப்பு அவன் வாயை கட்டிப்போட்டது,

ஆப்ரேஷன் செய்தாலும் வெற்றி முப்பது சதவிகிதமே என்ற தலைமை டாக்டரின் வார்த்தையால் நொந்து போயிருந்தார் சாமிநாதன், அப்படி பிழைத்தெழுந்தாலும் மொத்தத்தில் உங்களுக்கு மகனாக மட்டுமே இருப்பான் என்றார் டாக்டர்

எப்படியும் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை சத்யனுக்கு இருந்தது, அப்படி திரும்பியதும் மான்சியுடன் இவர்கள் காலில் விழுந்து, இவள் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லி விடலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தான், அவன் உடல் பலகீனமடைய மனம் மான்சியின் அருகாமைக்கு ஏங்கியது

அப்பா அம்மா இல்லாத நேரம், அல்லது பாத்ரூமில் இருந்து என அடிக்கடி சந்துருவுக்கு போன் செய்து மான்சியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா என்று விசாரித்தான், அவன் இல்லையென்றதும், கண்ணீருடன் மனதையும் அடக்கிக்கொண்டு கிடந்தான் சத்யன்

அடுத்த நாள் முழுவதும் மருந்துகளின் உதவியுடன் தூங்கினாலும், மான்சியுடன் வாழ்ந்த நாட்கள் மட்டுமே அவன் நினைவில் இருந்தது, மறுபடியும் மறுபடியும் அவளுடன் சுகித்த அந்த நிமிடங்களே சத்யனின் மனதை வட்டமிட்டது, அவளைத் தொட்ட இடங்களும், முத்தமிட்ட இடங்களும் ஞாபகத்தில் வந்து சத்யனின் வாழும் ஆசையை தூண்டியது

மறுநாள் அறுவைசிகிச்சை என்று நாள் குறித்தனர் மருத்துவர்கள், ஆனால் முதல் நாள் காலையில் படுத்திருந்த சத்யனின் மூக்கில் இருந்து வழிந்த ஒரு துளி உதிரம் அவன் மிகுந்த அபாயத்தில் இருக்கிறான் என்று அறிவித்தது
அடுத்தடுத்து சத்யன் சுயநினைவை இழப்பதும், மீண்டும் நினைவு வருவதும், அவனை வாழ்வின் கடைசி படியில் நிறுத்தியது, நிரந்தரமாக அவன் கோமாவுக்கு போவதற்கு முன் ஆப்ரேஷன் செய்துவிடுவது நல்லது என்று முடிவாக தீர்மாணிக்கப் பட்டது

சத்யன் தான் எங்கோ போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான், திரும்ப வருவோமா என்ற சந்தேகம் அவனுக்கு தோன்றவேயில்லை, அதைப்பற்றி யோசிக்கும் அளவுக்கு அவன் மூளை வேலை செய்யவில்லை,

மயங்கி வரும் நினைவுகளில் நட்சத்திரத்தின் ஒளியாக மான்சியின் நினைவுகள் மட்டுமே அவனிடம் மிச்சமிருந்தது, அவளை முத்தமிட்ட முதல் நிமிடங்கள், அவளுடன் சத்தமிட்டு உறவு கொண்ட அந்த நிமிடங்கள், உறவுரும் நேரத்தில் அவள் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளின் கலவை, களைப்புடன் கட்டிக்கொண்டு தூங்கியது, என எல்லாமே அவளின் நினைவுகளுடனேயே அவன் நினைவுகள் மங்கியது, அவனின் இள வயது, அவளிடம் கண்ட சுகங்களை மட்டுமே நினைவுகூர்ந்து தன்னிடம் தக்கவைத்துக் கொண்டது

அன்று மான்சியுடன் இருக்கும்போது நடந்தவைகளுக்காக இன்று மயக்கத்தில் புன்னகை செய்தான் சத்யன், அவன் நினைவுகள் மறந்து மங்கிவரும் வேளையில் அந்த புன்னகை பெற்றவர்கள் நெஞ்சில் பெரும் பீதியை உண்டாக்கியது, விஜயாவின் பெற்ற வயிற்றில் நெருப்பு பற்றியதுபோல் எறிந்தது

சத்யன் அழகான கர்லிங் செய்யப்பட்ட கேசம் சுத்தமாக மொட்டையடிக்கப்பட்டு ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச்செல்லப் பட்டான், அதற்க்குமுன் லேசாய் நினைவு திரும்ப, தன்னைச் சுற்றியிருந்த மருத்துவர்களை ஒரு மெலிந்த புன்னகையுடன் பார்த்தான்,, மயக்கம் கொடுக்கும் டாக்டர் சத்யனின் நிலையை பரிசோதித்து, அவன் எந்த மாதிரி மயக்கம் கொடுத்தால் தாங்குவான் என்று தலைமை மருத்துவரிடம் ஆலோசனை செய்தார்,

சத்யன் தலைமை டாக்டரிடம் பார்வையால் எதையோ வேண்ட, அவர் அவன் அருகே வந்து " என்ன சத்யன், ஏதாவது பேசனுமா?" என்றார்



காய்ந்து போன உதடுகளை பிரித்து " என்.......... ப்ரண்ட் கிட்ட..... முக்கியமா பேசனும், செல்போன் வேனும்.......... " என்று சத்யன் திக்கித்திணறி சொல்லிவிட்டு மொபைலுக்காக மெதுவாக கையை நீட்ட.

டாக்டர் சுவிட்ச் ஆப் செய்திருந்த தனது மொபைலை ஆன் செய்து, " நம்பர் ஞாபகம் இருக்கா சத்யன்?" என்று கேட்க

சத்யன் மிக மெதுவாக சந்துருவின் விட்டு விட்டு நம்பரை சொன்னான்,, டாக்டர் அந்த நம்பருக்கு கால் செய்ததும் உடனே சந்துரு எடுக்க, டாக்டர் சத்யனின் காதில் வைத்து " ம் பேசுங்க சத்யன்" என்றார்

சத்யன் முகத்தில் ஒரு ஒளியுடன் " சந்துரு......நான்... சத்யன்...., மான்சி ......கிடைச்சாளா?" என்று ஒவ்வொரு வார்த்தையையும் திணறி கேட்க

" இல்லடா மச்சான் தேடிக்கிட்டுதான் இருக்கோம், ஆமா உனக்கு இப்போ ஆப்ரேஷன்னு அப்பா சொன்னாரே , நீ இப்போ எங்கிருந்து பேசுற?" என்று சந்துரு குழப்பமாக கேட்க

" மான்சி..... கிடைச்சா........... நான் வந்துருவேன்னு சொல்லு சந்து........." சத்யனின் குரல் அதற்கு மேல் பேசமுடியாமல் தேய்ந்தது, கண்கள் நிலை தடுமாறி இறுதியாக விட்டத்தை வெறித்து மான்சி என்ற வார்த்தையுடன் கண்களும் உதடுகளும் மூடிக்கொண்டன

டாக்டர் பரபரப்புடன் மொபைலை ஆப் செய்ய, மயக்க டாக்டர் சத்யனுக்கு மயக்க மருந்தை செலுத்தினார்

மயக்க மருந்தை விரட்டி மான்சியின் நினைவுகளை தக்கவைக்க போராடியது சத்யனின் செயலிழந்து வரும் மூளை, அவளுடன் தோட்டத்தில் உலாவிய நினைவுகளுடன் நின்று போனது சத்யனின் நினைவுகள்

டாக்டர்கள் தங்களின் வேலையை தொடங்கினர் 



No comments:

Post a Comment