Saturday, October 24, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 3

கடிகாரத்தை பார்த்த ராகவ் மணி பத்து ஆக இன்னும் ஐந்து நிமிடமே இருப்பதால் கிளாஸ் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் கிளாஸ் வந்து சேர, எல்லா மாணவர்களும் அவனுக்காக காத்து இருந்தனர்.

வழக்கம் போல முதல் பத்து நிமிடத்தை சுவையான செய்திகளை சொல்ல உபயோகித்து விட்டு பாடத்தின் பக்கம் கவனத்தை செலுத்த,அனைவரும் பிரசன்டேஷன், அதை தொடர்ந்த சம்மரி இவற்றை கவனித்து நோட்ஸ் எடுத்து கொண்டனர்.கிளாஸ் முடிந்தவுடன் ஷிவானியிடம் எப்படி சொல்வது என்று யோசித்த ராகவ் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

கிளம்பும் நேரத்தில் அனுவிடம் தனது அறைக்கு வந்து பார்க்க சொல்லி விட்டு செல்ல, ஷிவானி அனுவை பார்த்து கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

"என்னடி, ப்ரொபசர் உனக்கு ரூட் போடுறாரா?. உனக்கு ஓகேன்னா சொல்லு நான் உங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்குறேன். உன்னோட மிளகாய் பிசினஸ் பார்க்க ப்ரொபசர் மாதிரி ஒரு காரமான ஆள்தான் வேணும். ஒரே ஜாலி தான்" என்று கிண்டல் செய்ய, அனுவோ யோசனையில் ஆழ்ந்தாள்.

'எதற்கு தன்னை அவர் அழைக்க வேண்டும்' என்று யோசிக்க, 'சரிடி நீயும் என் கூட வா, வாசலில் வெயிட் பண்ணு. நான் பேசிட்டு வந்துடுறேன்" என்று சொல்ல, ஷிவானி வேண்டாவெறுப்பாக தலை அசைத்தாள்.



அடுத்த இரண்டு கிளாஸ் முடிந்து லஞ்ச் இடைவேளை வர, அனு ராகவ் ரூமுக்கு விரைந்தாள். பின்னாலே வந்த ஷிவானி உள்ளே போகாமல் வாசலில் போடப்பட்டு இருந்த சேரில் உட்கார்ந்தாள்.

அனு உள்ளே வந்தவுடன் ராகவ், "வாங்க அனு. கிளாஸ் எப்படி போகுது. உங்களுக்கு பாடம் எல்லாம் புரியுதா" என்று கேட்க, அனு'இதற்காகவா தன்னை கூப்பிட்டார்' என்று குழம்பி "என்ன சார் ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு கூப்பிட்டிங்க" என்று இழுக்க,

"அனு, உங்ககிட்ட சில விஷயங்கள் சொல்லணும். முக்கியமா உங்க தோழி ஷிவானியை பற்றி". வெளியே இருந்த ஷிவானி காதில் இந்த வார்த்தைகள் விழ காதை கூர்படுத்தி என்னவாக இருக்கும் என்று கேட்க ஆரம்பித்தாள்.

ஆச்சர்யமானாள் அனு, "யாரை பத்தி, ஷிவானி பத்தியா", என்று கேட்க,

"ஆமா ஷிவானி பத்திதான்".

"ஏன், நீங்க அவள் கிட்டே பேச வேண்டியதுதானே. "

"நீங்க சொல்றது உண்மைதான் அனு. நானே பேசலாம், ஆனால் அவங்களுக்கு என் மேல வெறுப்பு இருக்குன்னு நினைக்கிறேன் அதனால தான்....."


புரிந்து கொண்ட அனு, "சரி சொல்லுங்க சார், என்ன விஷயம்"

தொண்டையை செருமி கொண்டு பேசினான்.

"நீங்க எல்லோரும் நாளைக்கு மாலை மகாபலிபுரம் போறதா கேள்வி பட்டேன்."

ஆமாம்.

"அதுல...." சொல்ல தயங்கினான் ராகவ்.

"கவலைபடாம சொல்லுங்க.சார்"

"பிரணவ் சில திட்டங்கள் போட்டு இருக்கான். உங்க பிரெண்டை நாசமாக்க அவன் முடிவு பண்ணி இருக்கான். இது எனக்கு நம்பகமான இடத்தில் இருந்து கிடைத்த உறுதியான தகவல்."

ராகவ் பேசியதை கேட்ட ஷிவானிக்கு கோபம் தலைக்கு ஏற, கதவை திறந்து கொண்டு புயல் போல உள்ளே வந்து ராகவ் முன்னால் வந்தாள்.


முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க தன் முன்னே நின்ற ஷிவானியை பார்த்து ராகவ் அதிர்ந்து போனான்.

"மிஸ்டர் ராகவ். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நீங்க வரம்பு மீறி போறீங்க. உங்களுக்கு எதுக்கு சார் இந்த வேலை.நான் உங்களை கூப்பிட்டு உதவி கேட்டானா? இல்லை நீங்க எனக்கு சொந்தக்காரனா. எதுக்கு இப்படி தேவை இல்லாம பிரணவ் மேல பழி போடுறிங்க".

ஒரு வழியாக சமாளித்து கொண்ட ராகவ், "ஷிவானி கோபப்படாதிங்க. நான் சொன்னது உண்மையான தகவல். நீங்க கொஞ்சம் கேர் புல்லா இருக்கணும்."

கையை சொடுக்கி, "ஹலோ இங்கே பாருங்க. நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்லை. எனக்கு இருபத்து மூணு வயசு ஆகுது. எது நல்லது, கெட்டதுன்னு எனக்கு தெரியும். அப்படியே பிரணவ் தப்பு பண்ணினா கூட நான் ஒத்துக்கிட்டு போய்டுவேன். உங்களுக்கு எதுக்கு அதை பத்தி கவலை.சொல்லுங்க சார். என்னை பத்தி கவலைபட நீங்க யாரு. எனக்கு அப்பா, அம்மா இருக்காங்க. அவங்களை விட உங்களுக்கு என்ன பெரிய அக்கறை."

கேள்வியை கேட்ட ஷிவானிக்கு என்ன பதில் சொல்லுவது என்று வாயடைத்து போனான்.

அவளோ அவன் பதிலுக்காக காத்து இருந்தாள்.


"ஷிவானி, உங்களை பார்த்த முதல் நாளில் இருந்து எனக்கு உங்களை எங்கயோ பார்த்து இருக்கிற ஞாபகம். உங்களோட கண்கள்,பேச்சு, பழக்க வழக்கங்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி உணர்வு. அதுனால தான் மற்றபடி, ஒரு நல்ல நண்பனா,ஆசிரியரா, எனக்கு தெரிஞ்சதை உங்க கிட்ட பகிர்ந்துகிட்டேன்."

ஷிவானி முகத்தில் கேலி பரவியது. "ஓ அப்படியா" அவள் குரலில் இந்த பேச்சை நம்பவில்லை என்று தெரிந்தது.

"உங்களுக்கு என்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குது அப்படிதானே", முகம் கடுமையாக மாற "ஆனால் எனக்கு உங்களை இதுக்கு முன்னால பார்த்த ஞாபகம் இல்லை. முதல்ல இந்த மாதிரி சில்லறை தனமா பேசுவதை விட்டு விட்டு, ஒரு ப்ரொபசர் மாதிரி நடந்துக்க பாருங்க. இனிமே என்னோட விஷயத்தில தலைஇடாதிங்க. திஸ் இஸ் மை பஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்" சொல்லி விட்டு வேகமாய் கிளம்பி சொல்ல, என்ன சொல்வது என்று தெரியாமல் முகம் அவமானத்தில் சிவக்க வாயடைத்து நின்றான் ராகவ்.

அவமானத்தில் கண் கலங்க உதடுகளை கடித்து அடக்கி கொண்டு வழுகட்டாயமாக புன்னகைக்கமுயல, அனு மனம் பதைத்தது.

"சார், நீங்க கவலை படாதிங்க. நான் அவள் கூட போய்க்கிறேன். எப்படியும் என்னை மீறி அவள் எதுவும் செய்ய மாட்டா."

ராகவ் தலை அசைத்து, "ஷிவானி சொல்றதுல்ல உண்மை இருக்கு. நான் என்னோட லிமிட்டை தாண்டிட்டேன்னு நினைக்கிறேன்.அது மட்டும் இல்லை, நான் சொன்னதை அவங்க நம்பலைன்னு நினைக்கிறேன். இனிமே எக்காரணத்தை முன்னிட்டும் அவங்க விஷயத்தில தலையிட மாட்டேன்" ராகவ் குரலில் வேதனை கலந்த உறுதி தெரிந்தது.

அனு மனது கவலைபட்டது. ராகவ் கண்களில் பொய்தெரியவில்லை. அது மட்டும் இல்லை. ஷிவானியிடம் பிரணவ் பற்றி தவறாக சொல்லி அவனுக்கு என்ன உபயோகம், இதை எல்லாம் சிந்தித்த அவள் ராகவ் நல்ல மனது அவளுக்கு புரியாமல் போனதே என்று வேதனைபட்டாள்.

அனு வெளியேற, ராகவ் தனது செல்போனை எடுத்து ஒரு புதிய எண்ணை டயல் செய்து பேச ஆரம்பித்தான்.

"சொல்லுங்க சார்."
......
"என்னோட வேலை பாதி முடிஞ்சுது.இன்னும் ஒரு மாசத்தில மீதி எல்லா தகவலும் கிடைச்சுடும்."
......
"ஓகே சார், நீங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி அனுப்பிடுறேன்."
......
"இல்லை சார், இங்கே என்னை பத்தி யாருக்கும் தெரியாது. தெரியாம பாத்துக்கிறேன்."
......
பேசி விட்டு போனை வைத்தான்.


அடுத்த நாள் எல்லோரும் பிக்னிக் செல்லும் நேரம் வந்தது. பிரணவ் ராகவை சந்திக்க அவன் ரூமுக்கு வந்தான்.

"என்ன ப்ரொபசர், ஷிவானி என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா.உங்களுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை."

"வேணாம் பிரணவ் சொன்ன பேச்சை கேளு. நீ பணக்கார பையன். ஒரு நல்ல பொண்ணு வாழ்கைல விளையாடாதே."உரக்க சிரித்தான்.

"இங்கே பாருடா. அவளுக்கு இந்த மகாத்மா சப்போர்ட் பண்ணுறதை".
"என்ன சார். ஷிவானி வேணுமா. நான் வேணாம் எல்லாம் முடிச்சுட்டு தரேன். அப்புறம் நீங்க கூட என்ஜாய் பண்ணலாம். என்ன ஒரு தடவை படுத்துட்டா அவள் ஒண்ணும் பத்தினி கிடையாது." உரக்க சிரித்தான்.

ராகவ் முகம் இறுகியது. 'அவனை அப்படியே அடித்து எலும்பை முறிக்கலாமா' என்று யோசிக்க, பிரணவ் மீண்டும் சிரித்தான்.

"ஹலோ ப்ரொபசர் நீங்க இப்பவே என்னை அடிக்கலாம்னு நினைக்கிறீங்க. நீங்க என்னை அடிச்சா எனக்கு தான் நன்மை.ஷிவானிஎன்னை பார்த்து பரிதாபபடுவா. என்னோட வேலை இன்னும் சுலபம் ஆய்டும்.அவளைஈசியா மடக்கலாம்."

ராகவ் புன்முறுவலோடு "டேய் நீ சாதாரண கிரிமினல் கிடையாது. உன்னோட உடம்பு முழுக்க ரத்த திமிர் ஓடிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் உன்னோட பாவத்துக்கு தண்டனை அனுபவிக்க போறே. இப்போதைக்கி தப்பிச்சு போ."

கிண்டலுடன் சிரித்து கொண்டே "சார். நீங்களும் எங்க கூட மகாபலிபுரம் வரலாம்."

'வர மாட்டேன்' என்று ராகவ் தலைஅசைக்க, "இங்கே பாருடா ப்ரொபசர் பயந்துட்டார். யோவ் நீ ஒரு உண்மையான ஆம்பளைனா அங்கே வந்து தடுத்து பார்" என்று சவால் விட்டு வெளியேற, 'அங்கே போக வேண்டுமா, ஷிவானியிடம் அவமானபட வேண்டுமா' என்று யோசிக்க,அவன் இன்னொரு மனமோ, 'யோசிக்காதே ராகவ், இது ஒரு பொண்ணு வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயம். இதில மான,அவமானம் பார்க்க கூடாது' என்று சொல்ல, கடைசியாக போகலாம் என்று முடிவெடுத்தான்.

மாலை நாலு மணிக்கு எல்லோரும் வோல்வோ பஸ்ஸில் போவதாக அனு சொல்ல,ராகவ் நடந்ததை சொல்லி தானும் வருவதாக சொன்னான்.

அனுவால் இதை நம்ப முடியவில்லை. ஷிவானிக்காக இந்த அளவு கஷ்டப்படும் ராகவை பார்த்து ஆச்சர்யபட்டாள். ஷிவானி மீது கொஞ்சம் பொறாமை கூடஎட்டி பார்த்தது.




பஸ் நாலு முப்பதுக்கு கிளம்பி ஆறு மணி அளவில் எல்லோரும் மகாபலிபுரம் வந்து சேர, அவர்களுக்கு முன்னே தனது காரில் வந்து இறங்கினான் ராகவ்.

பிரணவ், ஷிவானி பஸ்ஸில் இருந்து இறங்க அவர்களுடன் கல்லுரி மற்ற நண்பர்களும் வந்தனர். காரில் இருந்து இறங்கிய ராகவை பார்த்து பிரணவ் ஆச்சர்யமானான்.

"ஓ, ஆம்பளைன்னு நிரூபிக்க வந்திட்டான் போலிருக்கு" என்று முனகி கொண்டேநடக்க, பின்னால் நடந்துவந்த ஷிவானி முகத்தில் எரிச்சல்.

அடி குரலில் "என்னடி இந்த ஆள் கொஞ்ச கூட சொரணை இல்லாமல் இங்கே வந்து இருக்கான்" என்று கேட்க, இதை கேட்ட பிரணவ்"ஷிவானி, நாந்தான் சாரை வர சொன்னேன். எங்க ரெண்டு பேருக்கும் இடைல ஒரு டீல். அதுனால தான்" என்று சொல்லி விட்டு சிரிக்க,ராகவ் காதில் வார்த்தைகள் விழுந்து முகம் உயர்த்தி பார்த்தான். அவன் முகம் உணர்ச்சி இல்லாமல் இறுகி போய் இருந்தது.

எல்லோரும் கடற்கரையை ஒட்டி இருந்த ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ் ரிசப்சன் செல்லஷிவானி, அனு ஒரு ரூம் செல்ல பின்னாலே வந்த பிரணவ் ராகவ்விடம் "சார், உங்களுக்கு தனி ரூம் வேணுமா இல்லை என்னோட ஸ்டே பண்ணுறீங்களா" என்று கேட்க, "எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே" என்று ராகவ் பதில் சொன்னான்.

பிரணவுக்கு ராகவை கூட தங்க வைத்தால் பிரச்சனை வரும் என்று யோசித்து, அவனுக்கு தனி ரூம் போட்டு கொடுத்தான்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் டிஸ்கோ பார்ட்டி இருக்க அனைவரும் டான்ஸ் ப்ளோர் வந்து ஆடி கொண்டு இருந்தனர்.
தனது அறையில் தனிமையில் இருந்த ராகவ் என்ன செய்யலாம் என்று யோசித்தான். சரி நாமும் பார்ட்டியில் சென்று கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து வேடிக்கை பார்க்க சென்றான்.

அங்கே அனு மட்டும் தனியே இருக்க, கொஞ்ச தூரத்தில் ட் ஷர்ட், ஜீன்ஸில் இருந்த ஷிவானி பிரணவ் உடன் ஆடி கொண்டு இருந்தாள்.அனுவுக்கு அருகில் இருந்த சேரில் அமர்ந்து ராகவ் பேசி கொண்டு இருந்தான்.

பின்னால் டிஸ்கோ விளக்குகள் மின்ன, உச்ச ஸ்தானியில் ஹிந்தி பட பாடல்கள் அலறி கொண்டு இருந்தன.அந்த பாடல்களின் வேகத்துக்கு தகுந்த மாதிரி ஷிவானி சுழன்று ஆடி கொண்டு இருக்க அந்த டிஸ்கோ மேடை களை கட்டியது. நேரம் போனதே தெரியவில்லை.

அனு தனது கெடிகாரத்தை பார்க்க மணி பத்து. ஷிவானியை அழைக்க, ஷிவானி இன்னும் கொஞ்ச நேரம் ஆடி விட்டு வருவதாக கெஞ்ச,அனு நேரம் ஆகி கொண்டு இருப்பதாக சைகை காட்டினாள்.


நேரம் இன்னும் நகர, இப்போது மணி பத்து முப்பது.

அனு ஷிவானியை திரும்ப அழைக்க, பிரணவ் 'ப்ளீஸ் ஷிவானி இன்னும் கொஞ்ச நேரம்' என்று கெஞ்ச, 'இல்லை பிரணவ் நேரமாகிட்டு இருக்கு. நாளைக்கு மீதி வச்சுக்கலாம்' என்று கொஞ்சியபடி சொல்ல, பிரணவ் 'சரி அவசரபட வேண்டாம் விட்டு பிடிக்கலாம்' என்று முடிவு செய்து, "ஓகே ஹனி. டேக் கேர். குட் நைட்." சொல்லி முத்தமிட சொல்லி கேட்க, அவன் கையில் முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

திரும்பி வந்து அனுவுடன் அவள் ரூமுக்கு சென்று விட்டாள்.தொடர்ந்து பார்ட்டி நடக்க, ராகவ் பிரணவ் நடவடிக்கைகளை கவனித்து கொண்டு இருந்தான்.

மணி பதினொன்று ஆக பீர் மட்டுமே குடித்த ராகவ் தனது அறைக்கு சென்று உறங்கியபோது மணி பதினொன்று முப்பது.

விடிகாலை ஐந்து மணி அளவில் தன் செல்போன் அலற, 'யார் இந்த நேரத்தில் அழைப்பது' என்று யோசித்தவாறே போன் எடுக்க, அடுத்த முனையில் அனு."சார், இப்போதான் வீட்டில இருந்து போன் வந்தது.அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் உடனே கிளம்பனும். பிரெண்ட்ஸ் யாரும் போன் அடிச்சா எடுக்க மாட்டேங்கிறாங்க. If you dont mind, என்னை கோயம்பேடுல ட்ராப் பண்ணுறீங்களா. உங்களை இந்த நேரத்தில தொந்தரவு செய்றதுக்கு மன்னிக்கணும். சாரி" என்று சொல்ல, ராகவ், "அனு டோன்ட் வொர்ரி. அவசரத்துக்கு உதவலைனா அப்புறம் என்ன பிரெண்ட் ஷிப். உடனே ரிசப்சன் வாங்க. நான் கிளம்பி வரேன்".

சட்டையை மாட்டி கொண்டு அங்கே இருந்த தனதுகாரில் கிளம்பி அவளை கோயம்பேடில் இருந்த தனியார் பேருந்து நிலையத்தில் இருந்த வோல்வோ பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டு ஏழு மணி அளவில் திரும்பினான்.

பகல் முழுக்க அனைத்து மாணவர்களும் மகாபலிபுரம் சுற்றி பார்க்க, கூட சென்ற ராகவ் அங்கே இருந்த சிற்பிகளுடன் பேசி கொண்டு இருந்தான். கொஞ்ச நேரத்தில் ஆறு கார்கள் வந்து நிற்க அதில் இருந்து இறங்கிய நபர்களை கண்டு அதிர்ந்து போனான்.

சமாளித்து கொண்டு அருகில் இருந்த மரத்தின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டு தன் பாக்கெட்டில் இருந்த சிறிய கேமராவை எடுத்து காரில் இருந்து இறங்கிய நபர்களை வீடியோ எடுக்க ஆரம்பித்தான். வீடியோவை மெமரி கார்டு மூலம் தனது மொபைலுக்கு மாற்றி மெயிலில் அனுப்பி வைத்து விட்டு போனில் பேசினான்.

"சார், கேஷவ் இங்கே தான் வந்து இருக்கான்."
......"ஓகே சார், நான் அவன் எங்கே தங்கி இருக்கான்னு பார்த்து உங்களுக்கு தகவல் தரேன்."

சொல்லி விட்டு போனை வைத்து, காரில் வந்த நபர்களை கண்காணிக்க தொடங்கினான்.தூரத்தில் தெரிந்த மரங்களை ஒட்டிய குடிசைகளுக்கு அவர்கள் செல்ல, மீண்டும் திரும்ப வருவார்கள் என்று காத்து இருந்தான்.


கிட்ட தட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த நபர்கள் திரும்ப வர, அவர்கள் கையில் பார்சல் இருக்க, அவனுக்கு புரியவில்லை.

கார் அனைத்தும் விரைந்து செல்ல, அங்கே இருந்த ஆட்டோ மூலம் தொடர்ந்து போனான். அவர்கள் சென்னை செல்லும் சாலைக்கு திரும்ப போனில் அழைத்து "சார் அவங்க சென்னை போறாங்கன்னு நினைக்கிறேன். நீங்க உடனே அவங்களை சர்ச் பண்ண ஏற்பாடு பண்ணுங்க".

சொல்லி விட்டு ஆட்டோவில் கிளம்பிய இடத்துக்கு திரும்ப வந்து குடிசையை நோக்கி செல்ல, அங்கே யாரும் இல்லை. உள்ளே பாறையை பிளக்கும் வெடிபொருள்கள் நிரப்ப பட்டு இருந்தன. அவற்றையும் போட்டோ எடுத்து மெயிலில் அனுப்பி விட்டு திரும்ப் ரிசார்ட்ஸ் வந்தபோது மணி மூன்று ஆகி விட்டது.

சாப்பிட்டு விட்டு படுத்து ரெஸ்ட் எடுத்து, ஆறு மணி அளவில் எழுந்தான்.போனை எடுத்து பார்க்க மிஸ்டு கால் இருந்தது.

அந்த எண்ணை கூப்பிட, "சார் சொல்லுங்க, என்ன அந்த கார் எதுவும் வரலையா. சரி சார். நான் கவனமா இருக்கேன்" சொல்லி விட்டு போனை வைத்தான்.

பிறகு முகம் கழுவி விட்டு வெளியே வந்து கடற்கரையில் சென்று வேடிக்கை பார்த்தான்.அதற்குள் அவனுக்கு போன் வர எடுத்து பார்க்க விஜயவாடா கால். "சொல்லுங்க அனு, இப்போ அப்பாவுக்கு எப்படி இருக்கு".
"சார் இப்போ பரவாயில்லை. முதல் அட்டாக் அப்படிங்கற தால இனிமே கவனமா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க. நாளைக்கு டிஸ் சார்ஜ் பண்ணுறேன்னு சொல்லி இருக்காங்க. புதன் கிழமை நான் கிளாஸ் வருவேன்" என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

பிரணவ் தூரத்தில் இருந்து கை ஆட்டியபடி வந்து "என்ன சார், தனிமைல இனிமையா" என்று கிண்டல் செய்து விட்டு," இன்னைக்கு நான் ஷிவானியை எப்படியும் அனுபவிச்சுடுவேன். உங்க கண் முன்னால அது நடக்க போகுது. பொறுத்து இருந்து பாருங்க" என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

ராகவ் அப்படியே யோசனையில் ஆழ்ந்து இருக்க, கொஞ்ச தூரத்தில் இருந்த பிரணவ் ஷிவானியிடம் ராகவை கையை காண்பித்து ஏதோ சொல்ல, ஷிவானி விழுந்து விழுந்து சிரித்தாள்.

வானம் இருட்ட தொடங்க, இனிமேலும் அங்கே இருப்பது வேண்டாம் என்று முடிவு செய்து ராகவ் ரிசார்ட்ஸ் திரும்ப வந்து சாப்பிடும் ஹாலில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பேசி கொண்டு இருந்தான்.

பிரணவ் அவன் நண்பர்கள் மற்றும் ஷிவானி தவிர எல்லோரும் அங்கே இருந்து, அவன் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தனர்.

பார்ட்டி எட்டு மணிக்கு ஆரம்பிக்க ஒவ்வொருவராக செல்ல, அவர்களை தொடர்ந்து ராகவும் பார்ட்டி ஹாலில் நுழைந்தான்.

எல்லோரும் குடியில் மிதக்க ஆரம்பிக்க அங்கே ஆண், பெண் வித்யாசம் குறைந்து கொண்டு வந்தது. அங்கேயே உணவு பரிமாறப்பட,ஒவ்வொரு ஆணும், ஒரு பெண்ணை அழைத்து கொண்டு மெதுவாக நழுவ, ராகவ் ஷிவானியை கண்களால் தேடினான்.

அவனை அடுத்து இருந்த டேபிளில் இருந்த பிரணவ் ஷிவானியிடம் பேசுகின்ற பேச்சு ராகவ் காதில் தெளிவாக இருந்தது.

"ஷிவானி, இது வெறும் காக்டெயில் ஜூஸ் தான். ஒண்ணும் கலக்கல. தைர்யமா குடி. என் மேல நம்பிக்கை இல்லையா."

ஷிவானி கண்கள் மிரண்டு இருக்க சுற்று முற்றும் பார்த்து விட்டு குடிக்க, அதில் மிதமான அளவு மது கலந்து இருக்க தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தாள்.

தொடர்ந்து டிஸ்கோ ஆடி விட்டு திரும்ப குடிக்க, மெதுவாக போதை ஏற தொடங்கியது."பிரணவ் எனக்கு கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்கு. நான் ரூமுக்கு போய் தூங்குறேன். குட் நைட்" சொல்லி விட்டு கிளம்ப, "ஹேய் பார்த்து போ" என்று குரல் கொடுத்தான்.

ஷிவானியை தொடர்ந்து போகலாமா என்று யோசித்த ராகவ், அவளை தொடர்ந்து போக வேண்டாம் என்று முடிவு செய்து, பிரணவை கண்காணிக்க ஆரம்பித்தான்.

பிரணவ் அடுத்த ஐந்து நிமிடத்தில் எழுந்து போக, சுற்றி இருந்த நண்பர்களிடம் கண் காட்டி விட்டு கிளம்பினான்.

ராகவ் அவனை தொடர, அவனை ஐந்து பேர் சுற்றி வளைத்து, "என்ன சார், எதுக்காக பிரணவை பாலோ பண்ணுறீங்க. என்று அவனை சுற்றி வளைத்தனர்.

அதற்குள் ரிசப்சன் வந்த பிரணவ் அங்கே இருந்த மானேஜரிடம் ஐநூறு ருபாய் தாளை கொடுக்க, மாஸ்டர் கீ அவன் கைக்கு மாறியது.சுற்று முற்றும் பார்த்து விட்டு, ஷிவானி யின் ரூமுக்கு வந்து சாவியை போட்டு திறந்தான்.

உள்ளே நுழைந்த பிரணவ் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்.படுக்கையில் அழகு மயிலாக ஷிவானி படுத்து இருக்க, அவளின் மார்பகங்கள் நீண்ட மூச்சில் ஏறி இறங்க, பித்து பிடித்தவன் போல் ஆனான்.

அவளின் டி ஷர்ட்டில் கை வைத்து அதை கிழிக்க முயற்சி செய்ய, ஷிவானி மயக்கத்தில் உளற ஆரம்பித்தாள். கண்களை திறக்க முயற்சி செய்து, முடியாமல் மீண்டும் கண்களை மூடினாள்.

அதற்கு மேல் பிரணவ் பொறுக்க முடியாமல்டி ஷர்ட்டை கிழித்து தூக்கி ஏறிய, அவளது பிங்க் நிற பிரா தெரிய, தனது மொபைல் போன் எடுத்து பல போட்டோக்கள் எடுத்தான்.


பிறகு தனது கையை அவள் பிரா மீது வைக்கஅதற்குள் கதவை திறக்கும் சத்தம் கேட்க, திரும்பி யார் என்று பார்பதற்குள் முகத்தில் சராமாரியாக குத்து விழ நிலை தடுமாறி போனான்.
'கண்கள் இருள யார்?' என்று பார்க்க ஓவர் கோட்டில் இருந்த ராகவ் கண்ணுக்கு தெரிந்தான்.

"ஏய் ராகவ் நீ எப்படி, அந்த அஞ்சு பேரும் உன்னை ஒண்ணும் பண்ணலையா?" என்று கேட்டுக்கொண்டே மயங்கி விழுந்தான்.

ராகவ் சுற்று முற்றும் பார்க்க, படுக்கையில் கிடந்த ஷிவானியை பார்த்து பதைத்து போனான். கண்ணிமைக்கும் நேரத்தில் தனது ஓவர் கோட்டை கழட்டி அவளை தூக்கி அணிவித்து விட்டு என்ன செய்வது என்று யோசித்தான்.

கீழே கிடந்த பிரணவ் முனகும் ஓசை கேட்க, இனிமேல் இருந்தால் பிரச்சனை தான். அடிபட்டு விழுந்த அவன் நண்பர்களும் வந்து விட்டால் தப்புவது கடினம். என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு தனது மனதில் யோசனை தோன்ற அவளை எழுப்ப முயற்சி செய்தான்.

மெல்லிய முனகல் மட்டும் வர, அவள் புரண்டு படுத்தாள். இனியும் தாமதிப்பது சரியல்ல என்று முடிவு செய்து, அவளை அள்ளி தனது தோளில் சாய்த்தபடி ரிசப்சன் வர, யாரும் இல்லை.

தனது காரை திறந்து பின்னால் இருந்த இருக்கையில் அவளை படுக்க வைத்து விட்டு கார் கதவை மூடி வண்டியை விரட்டினான்.

இரவு நேரத்தில் அவளின் ஹாஸ்டல் போனால் தேவை இல்லாத கேள்வி வரும். ஆபத்துக்கு பாவம் இல்லை என்று முடிவு செய்து காரை தனது வீட்டுக்கு விட, யுனிவர்சிட்டி வாசலில் தூங்கி கொண்டு இருந்த செக்யூரிட்டியை தாண்டி சென்று உள்ளே தனது வண்டியை நிறுத்தி பின் கதவை திறந்து ஷிவானியை தூக்கி கொண்டு கதவை திறந்து தனது பெட் ரூமில் கிடத்தினான்.

ஏ சி யை ஆன் செய்து அவளுக்கு போர்வை பொத்தி விட்டு அவளின் முகத்தை பார்த்து அருகில் இருந்த சேரிலே உட்கார்ந்தான்.குழந்தை போன்ற அவள் முகம் பார்த்து மனம் குமிறினான்.

என்ன தான் வளர்ந்து இருந்தாலும் நல்லவனை தேர்ந்தெடுத்து காதலிக்க தெரியவில்லையே என்று வேதனைப்பட்டான்.'பரவாயில்லை,அவளை பேராபத்தில் இருந்து காப்பாற்ற முடிந்ததே என்ற நிம்மதிஅவன் மனதில் பரவியது.

காலையில் எழுந்து நடந்த விஷயம் தெரிந்தால் தன்னை புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில், ஹாலில் இருந்த சோபாவில் உறங்க சென்றான்.


காலை சூர்ய வெளிச்சம் கண்ணில் பட தன் கடிகாரத்தை பார்த்தான். மணி ஏழு. எழுந்து கண்களை கசக்கி கொண்டு, திடீரென்று நினைவுக்கு வர, உள்ளே சென்று பார்த்தான். ஷிவானி இன்னும் உறக்கத்தில் இருந்தாள்.

புன்சிரிப்போடு வாஷ்பேசினில் முகம் கழுவி பல் விலக்க ஆரம்பித்தான். உள்ளே ஷிவானி எழும் ஓசையும், அதை தொடர்ந்து அவள்'வீல்' என்று கத்தும் ஓசையும் கேட்க ஓடி சென்று உள்ளே பார்த்தான்.

உள்ளே ஷிவானி ஓவர் கோட்டை இறுக்கி கொண்டு உட்கார்ந்து இருந்தாள். அவனை பார்த்த உடன் அவள் கண்களில் கோப தீ.



"நான் எப்படி இங்கே வந்தேன். என்னோட டி ஷர்ட் எங்கே. இந்த ஓவர் கோட் போட்டது யாரு. என்னோட பிரணவ் எங்கே.?"ராகவ் முகத்தை பார்த்த உடன் காரி துப்பினாள். "நீ ஒரு மனுசனா. ஏன்டா இப்படி பண்ணே.நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணினேன்."

பதறி போனான். "ஷிவானி நான் ஒண்ணும் பண்ணலை. பிரணவ் உன்னை பலாத்காரம் பண்ணினான். நான் தான் அவனை அடிச்சு உன்னை காப்பாத்தினேன்".

குரல் தழுதழுக்க "உன்னை நான் காப்பாத்தினதுக்கு நீ நன்றி சொல்ல வேண்டாம், அட்லீஸ்ட் என் மேல வீண்பழி போடாம இருக்கலாமே."

படுக்கையில் இருந்து எழுந்த ஷிவானி, "வெட்கம் கெட்ட வேலை பண்ணிட்டு, இப்போ என் பிரணவ் மேல பழி போடுறியா. உன்னை நான் விட போறது இல்லை. வி.சி கிட்ட உன்னை பத்தி புகார் சொல்ல போறேன். அப்போ தெரியும் உன்னோட இந்த அசிங்கமாக இன்னொரு பக்கம்."

சொல்லி விட்டு கடும் கோபத்தோடு அவள் வெளியேற, அவள் சென்ற பாதையை பார்த்தவாறே சிலையென நின்றான் ராகவ்.



No comments:

Post a Comment