Friday, October 23, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 2

தனது கெடிகாரத்தை பார்க்க மணி 10.45கிளாஸ் முடிய இன்னும் பதினைந்து நிமிடம் நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த ராகவ்,பேச்சை ஆரம்பித்தான்.

"டியர் ஸ்டுடண்ட்ஸ், இன்னைக்கு நாம பார்க்க வேண்டிய பாடம் பைனான்சியல் மார்கெட்ஸ் பற்றியது. நம்ம கிளாஸ்ல முப்பது ஸ்டுடண்ட்ஸ் இருக்காங்க, மொத்தம் இருப்பதோ பதினாறு சாப்டர். ரெண்டு பேரா சேர்ந்து ஒரு சாப்டர் எடுத்து பிரசன்டேஷன் கொடுக்கணும். ஒரு சாப்டருக்கு நாலு மணி நேரம். அதை அடுத்து என்னோட சம்மரி ஒரு மணி நேரம். இது மாதிரி நடத்தலாம். ஒரு நூறு கிளாஸ்ல இது முடிஞ்சுடும். "

"

யாருக்காவது ரெபரன்ஸ் மெடேரியல் வேணும்னா என் கிட்ட வாங்கிக்கலாம். இல்லைனா என்னோட மெயில் ஐடிக்கு அனுப்பினா டிடைல்ஸ் அனுப்பி வைப்பேன்."


மூன்றாவது பெஞ்சில் இருந்த மாணவன் கைதூக்க, 

"சொல்லுங்க கோவிந்த்"என்றான் ராகவ்."சார், சர்ப்ரைஸ் டெஸ்ட் சொன்னிங்களே அது எப்படி சார்."

"நல்ல கேள்வி கோவிந்த். யாராவது கேட்பாங்களான்னு எதிர்பார்த்தேன். நீங்க கேட்டிங்க. தாங்க்ஸ்."

"இது ஓபன் புக் டெஸ்ட். டெஸ்ட் நேரம் இருபது நிமிடம். மொத்தம் மார்க் பதினைந்து. நீங்க பத்து மார்க் எடுத்தா போதும், உங்களுக்கு இன்டர்னல் மார்க் நூறு பெர்சன்ட் வழங்கப்படும். டெஸ்ட் நடக்கும் போது நீங்க எத்தனை புஸ்தகம் வேணும்னாலும் ரெபர் பண்ணிக்கலாம். சரியா?."
"ஓகே. கிளாஸ் இப்போதைக்கு முடியுது. நம்ம மதியம் ரெண்டு மணிக்கு மீட் பண்ணலாம். பை."சொல்லி விட்டு ராகவ், வெளியே செல்ல,மாணவர்கள் அனைவரும் பேசி கொள்ள ஆரம்பித்தனர்.

"ஹாய் ஷிவானி, எப்படி இருக்கே. பார்த்து பதினைந்து நாள் ஆச்சு" என்று ஒரு குரல் கேட்க, ஷிவானி முகம் சிரிப்பில் மலர்ந்தது. 

"ஹாய் பிரணவ், என்னடா ஆளை காணமேன்னு பார்த்தேன்".
"நான் இங்கே தான் வழக்கம் போல கடைசி பெஞ்ச். ஹாய் அனு."

"ஹாய்டா, அப்பா பிசினஸ் எப்படி போகுது"

"நல்லபடியா போகுது"
"ஷிவானி, அப்பா தன்னோட மருமகளை பார்க்கணும்னு சொல்லிகிட்டே இருக்காரு. எப்போ ஹைதராபாத் வரப்போற?"ஷிவானி முகம் வெட்கத்தில் சிவந்தது. 

"போதும் பிரணவ். ரொம்ப கிண்டல் பண்ணாதே."


"நான். சும்மா சொல்லல ஷிவானி. உன்னோட போட்டோவை மொபைல்ல காட்டினேன். அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அது மட்டும் இல்லை. நீயும் ரெட்டி. நானும் ரெட்டி."

"பிரணவ். அவசரபடாதே. என் அப்பாகிட்ட நம்மளை பற்றி இன்னும் நான் பேசலை. இந்த மாச கடைசில போறப்ப பேசுறேன்.அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு."

"சாரி. ஷிவானி. அப்புறம் ஒரு விஷயம். அந்த புது professor ராகவ் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ. பார்த்து நடந்துக்க.அழகான பொண்ணுன்னா அவன் வழியிற மாதிரி தெரியுது."


அதற்குள் அடுத்த லெக்சரர் வர, தனது சீட்டுக்கு திரும்ப சென்றான் பிரணவ்.

பிரணவ் பற்றி சில விஷயங்கள். பிரணவ் ரெட்டி. சொந்த ஊர் ஹைதராபாத். அப்பா பெரிய பணக்காரர் வரிசையில் ஒரு இடம்.பிரணவ் படிப்பது அப்பாவின் கட்டாயத்திற்காக, ஷிவானியை காதலிப்பது பொழுது போக்கிற்காக.

அன்றைய நாள் கிளாஸ் முடிந்தவுடன் ஷிவானி, அனு இருவரையும் புரபசர் அழைப்பதாக பியூன் வந்து செல்ல, இருவரும் ராகவ் ரூமுக்கு சென்றனர். 

உள்ளே வந்த இருவரையும் வரவேற்ற ராகவ்"ஷிவானி, அனு நீங்க ரெண்டு பேரும்தான் நாளைக்கு முதல் சாப்டர் ப்ரெசென்ட் பண்ண போறீங்க" என்று சொன்னவுடன், இருவரின் முகத்தில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். 

"என்ன சார் சொல்றிங்க. நாங்க ஒண்ணும் ப்ரிபேர் பண்ணலையே. எப்படி" என்று இழுக்க, "டோன்ட் வொர்ரி. என் கிட்ட சில ரெபரன்ஸ் புக்ஸ் இருக்கு தரேன். எடுத்துட்டு போங்க. வார கடைசில திருப்பபி கொடுத்தா போதும்" என்று சொல்ல, அனு முகத்தில் நிம்மதி.

ஷிவானி, "இல்லை சார், நாங்க ச்மாளிசுக்குவோம்"என்று சொல்லி விட்டு அனுவை இழுத்து சென்று விட்டாள். 

வெளியே வந்த அனுவை ஷிவானி திட்ட தொடங்கினாள்"என்னடி உனக்கு அறிவு இல்லையா. அந்த ஆள் ஏதோ புக் தரானாம். நாம படிச்சு ப்ரெசென்ட் பண்ணணுமாம். ஏன், நமக்கு லைப்ரரில புக் கிடைக்காதா. ரொம்ப தான் வழியிறான்."

"பாத்து பேசுடி, ப்ரொபசர் காதில விழுக போகுது."

"விழுந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை. அந்த ஆளுக்கு நாம பேசுறது புரியாது."

ஷிவானி பேச்சை கேட்ட ராகவ் முகத்தில் மர்மபுன்னகை.




அந்த நேரத்தில் தனது போன் ஒலிக்க யார் என்று பார்த்தால், ஐ எஸ் டி கால். 

போனை எடுத்து ஆன் செய்தபடி,"சொல்லு அக்கா, அத்தான் எப்படி இருக்காரு. குட்டி பையன் சௌக்கியமா?"

......
"சரிக்கா, நான் யார் கிட்டயும் சொல்லலே. இப்படியே ஒரு நாலு மாசம் ஓட்டனும்."

......
"மறக்க முடியாதுக்கா. மறக்கவும் மாட்டேன்"குரலில் உறுதி ஒலித்தது.

போனை வைத்து விட்டு வி சி முத்துசாமியை பார்க்க சென்றான்.

"என்னடி, ப்ரொபசர் மேல எதுக்கு தேவை இல்லாம எரிஞ்சு விழரே. அவர் அப்படி எதுவும் வழியிற மாதிரி தெரியலை. ஒரு வேளை உன்னோட கண்ணோட்டம் தவறா கூட இருக்கலாம்."

"அனு, எனக்கு உன்னோட அட்வைஸ் எதுவும் தேவை இல்லை. பிரணவ் சொன்னா கரெக்டாதான் இருக்கும்."

ஐயோ என்று தலையில் கைவைத்து கொண்டு உட்கார்ந்து விட்டாள் அனு.

"எந்திரிடி முதல்ல லைப்ரரி போகலாம், பூட்டிர போறாங்க."

தனது கையில் இருந்த பேப்பரில் எழுதி இருந்த புத்தகங்களை ஷிவானி தேட, கூட அனுவும் தேட ஆரம்பித்தாள். 

ஒரே ஒரு புக் மாத்திரம் கிடைக்க, லைப்ரரியனிடம் சென்று மற்ற புத்தகங்களை பற்றி விசாரிக்க, அதை ரெட்டி தனது Ph D படிப்பிற்காக எடுத்து சென்று விட்டார் என்று அறிந்ததும் முகத்தில் சோக புன்னகை.

"அனு என்னடி செய்றது இப்போ."

"ஷிவானி, நான் அப்பவே சொன்னேன். நீ தான் அவரை பத்தி தப்பா பேசி புக் வாங்க வேணாம்னு சொல்லிட்ட, சரி நீ வரலைனா பரவாயில்லை.நான் போய் வாங்கிட்டு வரேன்" என்று சொல்ல, ஷிவானி அனு சொன்ன வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்தாள்.

"சாரிடி. நீ சொல்றது சரிதான்டி. ஒருத்தரை பத்தி சரியா தெரியாம குற்றம் சொல்ல கூடாது. நானும் வரேண்டி."

திரும்ப ப்ரொபசர் கேபின் செல்ல, ராகவை காணவில்லை


வாசலில் இருந்த பியூன், "மேடம், சார் இப்போ தான் 20 நிமிஷத்துக்கு முன்னால வி சி யை பார்க்க போனார். அப்படியே ஸ்டாப் குவாட்டர் போறேன்னு சொன்னார்.

"ஸ்டாப் குவாட்டரா"

"ஆமாம் மேடம் அவர், நம்ம யுனிவர்சிட்டி குவாட்டர்ஸ்ல தான் தங்கி இருக்கார்.போய் பாருங்க."

"வீட்டு நம்பர் என்ன?"

"அஞ்சாம் நம்பர்."

"ஓகே சரி"

அங்கே யுனிவர்சிட்டி குவாட்டர்ஸ் அறையில் ராகவ் போனை வைத்து விட்டு, உடைகளை மாற்றி விட்டு இரவு உடைக்கு மாறினான். ஹாலுக்கு வந்தவன் அங்கே இருந்த அம்மா, அப்பா போட்டோவை கண்கலங்க பார்த்து கொண்டு இருந்தான். 

"அப்பா, அம்மா. என் மன நிம்மதி போய் மூணு வருஷம் ஆச்சு.ஒரு பாவமும் செய்யாத உங்களை கொன்ன அந்த பாவிகளை பழி வாங்காம என்னோட மனசு சாந்தி அடையாது. அதற்காக தான் இங்கே வந்து இருக்கேன்"

கண்களில் இருந்து அவனை அறியாமல் கண்ணீர் இறங்கியது.

போட்டோவை தன் கைகளால் தடவி கொடுத்தவன், வாசல் அழைப்பு மணி கேட்டு கண்களை துடைத்து விட்டு கதவை திறக்க, வாசலில் ஷிவானி, அனு.

"வாங்க ப்ளீஸ் உள்ளே வாங்க" என்று அழைத்து கொண்டே கதவை திறந்து இருவரும் வர வழி விட்டான்.

உள்ளே வந்தவர்களுக்கு "என்ன குடிக்கிறிங்க"

"பரவாயில்லை சார் ஒண்ணும் வேண்டாம்" என்று அனு சொல்ல, "நோ ப்ரோப்லம். என் கிட்ட பிரேசில் காபி இருக்கு. ஒரு ரெண்டு நிமிஷத்தில கொண்டு வரேன். ட்ரை பண்ணி பாருங்க." என்று சொல்லி அங்கே இருந்த சோபாவை காண்பிக்க வேறு வழி இல்லாமல் இருவரும் அமர்ந்தனர்.

உள்ளே சென்ற சிவா வர சிறிது நேரம் ஆகும் என்பதால் இருவரும் ஹாலை சுற்றி பார்க்க அங்கே மாலையுடன் இருந்த போட்டோவை பார்த்து அவன் அம்மா, அப்பாவாக இருக்க வேண்டும் என்று கண்டு பிடித்தனர்.


அனு ஷிவானியிடம் "நீ ஒரு விஷயத்தை கவனிச்சியா, கதவை திறந்தபோது அவர் கண்கள் கலங்கி இருந்தது."


"நான் அதெல்லாம் கவனிக்கலைடி. உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை எல்லாம். வந்தோமா புக் வாங்கினோமா, அசைன்மென்ட் முடிச்சோமா, கிளாஸ்ல சப்மிட் பண்ணினோமான்னு இருக்கணும்."

ஷிவானி பேசி முடிக்க கையில் இரண்டு காபி கோப்பைகளுடன் ராகவ் வர, அனு "என்ன சார் உங்களுக்கு இல்லையா" என்று கேட்க"நீங்க எடுத்துக்கோங்க, எனக்கு உள்ளே இருக்கு கொண்டு வரேன்" என்று சொல்லி டேபிளில் வைத்து விட்டு உள்ளே சென்றான்.

திரும்ப வந்தவுடன் காபி குடித்து கொண்டே ராகவ் விசாரிக்க ஆரம்பித்தான். "என்ன விஷயமா இப்போ அவசரமா வந்து இருக்கீங்க. அங்கே காலேஜ்ல கேட்டு இருக்கலாமே."

அனு தயங்கி யோசிக்க, ஷிவானி அதை கவனித்து விட்டு பேச ஆரம்பித்தாள்.

"சார், நாங்க லைப்ரரில போய் தேடி பார்த்தோம். அங்கே ஒரு புத்தகம் மட்டும் தான் கிடைச்சது. அதுனால தான் உங்க கிட்ட வந்தோம். ரெபரன்ஸ் புக் தர முடியுமா?"

மெல்ல சிரித்து கொண்டே "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு ஹாலில் இருந்த கப் போர்டில் இருந்த அந்த மூன்று புத்தங்களை எடுத்து கொண்டு வந்தான். டேபிளில் வைத்து விட்டு முதல் புத்தகத்தை எடுத்து அனுவிடம் பக்கங்களை புரட்டி எந்த சாப்டர் படிக்க வேண்டும் என்று கோடிட்டு காண்பித்தான். மற்ற புத்தகங்களை எடுத்து சுற்றி காட்டியவுடன் அனு கவனமாக கேட்டு கொண்டாள். 

ஷிவானி இதை எல்லாம் கவனிக்காமல் சுற்று முற்றும் வேடிக்கை பார்த்து விட்டு காபி கோப்பைகளை எடுத்து சென்ற ராகவை கவனித்தவள் அதிர்ந்து போனாள்.

அவள் கண் போன திசையை பார்த்து அனுவும் திரும்பி பார்க்க, அவள் முகத்தில் கேள்வி குறி.

திரும்ப வந்த ராகவை பார்த்து "சார், உங்க காலில என்னமோ கருப்பா இருக்கே. அடிபட்ட காயமா?"

குனிந்து பார்த்து "ஆமாம் அடிபட்டதுதான். இன்னும் முழுக்க குணம் ஆகலை".

ஷிவானி, அனுவை "வாடி நாம கிளம்பலாம்" என்று சொல்ல இருவரும் நன்றி சொல்லி விட்டு கிளம்பினர்.

அடுத்த நாள் அனு, ஷிவானி ப்ரெசென்ட் செய்ய, மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு ராகவும் சேர்ந்து பதில் அளித்தான்.எல்லோரும் கைதட்டி வரவேற்றனர்.

அடுத்த சில நாட்களில் வேகமாக பாடங்கள் வளர்ந்து வர, ராகவ் பாடம் நடத்தும் முறை புதிதாக இருந்ததால் அனைவருக்கும் சுலபமாக புரிந்தது.


பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள், பிரணவ் தனது நண்பர்களுடன் பேசி கொண்டு இருக்க, அனைவரும் பாடம் நடத்தும் ஆசிரியர்களை கிண்டல் செய்து சிரித்து கொண்டு இருந்தனர். கூட இருந்த வேல் முருகன் எல்லோர் போலவும் மிமிக்ரி செய்ய, அங்கே வந்த ஷிவானி எரிச்சலானாள். 

"வேலு நீங்க செய்றது சரி இல்லை, என்ன இருந்தாலும் அவங்க எல்லாரும் நமக்கு பாடம் நடத்துற குரு. அவங்களுக்கு உரிய மரியாதை கொடுக்க முடியாட்டினாலும் அவமான படுத்தாதிங்க" என்று பட பட என்று பொரிந்து பேச, பிரணவ் அவளை சமாதானபடுத்தினான். 

"என்ன ஸ்வீடி, சின்ன விஷயம் இதுக்காக கோபப்படலாமா.? சரி இந்த வாரம் நீ விஜயவாடா போறியா" என்று கேட்க, "இல்லை பிரணவ் எதுக்கு கேட்குற", என்று பதிலுக்கு ஷிவானி வினவ, "இல்லை நாங்க எல்லாரும் வெள்ளி கிழமையில் கிளம்பி பாண்டிச்சேரி போறோம், திங்கள் கிழமை திரும்ப வந்துடலாம். நீயும் வரியா" என்று கேட்க, நான் கல்யாணத்துக்கு முன்னால உன் கூடதனியா வர மாட்டேன்"என்றாள்.

"ஷிவானி, நீ கட்டாயம் வரணும். நம்ம கிளாஸ்ல இருக்கிற எல்லா பொண்ணு, பசங்களும் வராங்க. இது ஒரு ஜாலிட்ரிப் தான். டென்சன் ஆகாதே. வேணும்னா உன்னோட பிரெண்ட், அனுபமாவையும் உன் கூட கூட்டிக்கோ" என்று சொல்ல, ஷிவானிக்கு அது நல்ல யோசனையாக தோன்றியது.

இவர்கள் பேசி கொண்டு இருந்தபோது ராகவ் வந்ததை கவனிக்கவில்லை. வேல்முருகன் பார்த்து விட்டு எச்சரிக்கை செய்ய, எல்லோரும் அமைதியாக அவரவர் இடத்துக்கு சென்று உட்கார்ந்தனர்.

வழக்கம் போல் பாடம் முடித்து விட்டு வெளியே வந்த ராகவ், பிரணவ் நண்பர்களில் ஒருத்தனான பரத்தை கூப்பிட்டு "என்னமோ ட்ரிப்புன்னு பேசிட்டு இருந்திங்களே, என்ன ட்ரிப்" என்று விசாரிக்க, "சார் இங்கே சொல்ல முடியாது, கான்டீன் வாங்க" என்று புதிர் போட்டான்.

ராகவ் முகத்தில் குழப்பம். 'சரி என்னதான் சொல்லப் போறான் இந்த பரத், கேட்கலாம்' என்று சிந்தித்து கொண்டே பின்னால் போனான்.

கான்டீன் உள்ளே நுழைந்த "பரத், சார், நான் சொல்ல போற இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லிராதிங்க. குறிப்பா பிரணவ் வுக்கு தெரிஞ்சா என்னை கொன்னு போட்டுடுவான்"என்று பீடிகை போட, "விஷயத்தை சொல்லுங்க பரத்" என்று ராகவ் கேட்க, சுற்று முற்றும் பார்த்து கொண்டே பேச தொடங்கினான் பரத்.

"சார், இங்கே ஹனி மூன் ட்ரிப் அப்படின்னு புது விதமான பழக்கம் பரவிட்டு இருக்கு. அதாவது காதலிக்கிற ஆணும பெண்ணும் இந்த மாதிரி வெளி ஊர் போய் ரெண்டு மூணு நாள் ஹனி மூன் கொண்டாடி வர்றது தான். ஒத்துக்காத பொண்ணுகளை இந்த விஷயம் சொல்லாம காலேஜ் 

ட்ரிப்புன்னு கூட்டி போய் நிறைய பேர பிரணவ் சீரழிச்சு இருக்கான். அதனால எனக்கு இந்த ஷிவானியை நினைச்சா தான் பயமா இருக்கு. இந்த விஷயத்தை அவள் கிட்ட நேரடியா சொன்னா, பிரணவ் கிட்ட விஷயம் போய்டும். அவன் என்னோட கை காலை முரிச்சு போட்டுடுவான்.
அதனால உங்கள் கிட்ட சொன்னால் என்னான்னு தோணிச்சு. சார், நான் சொன்னதா யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று வேண்டி கொண்டு வேகமாக கிளம்பி சென்று விட்டான்.

இந்த விபரீதத்தை எப்படி தடுப்பது என்று யோசித்து குழம்பி போனான் ராகவ்.



No comments:

Post a Comment