Thursday, January 7, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 15

தண்டபாணிக்கு சூடு சுரனை இல்லாவிட்டாலும் அனு இளம்பெண் அல்லவா..... “ ஏய் நொண்டி யார் நானா இவகிட்ட கையேந்தனும்? ... நெவர்” என்றவள் தண்டபாணியிடம் திரும்பி “ டாடி அன்னிக்கே இங்கிருந்து போயிடலாம்னு சொன்னேன் ஆனா நீங்க கேட்கலை... ஆனா இப்போ இவ்வளவு நடந்தபிறகு நான் இங்க இருக்க மாட்டேன்... வாங்க போகலாம் ” என்றவள் அங்கிருந்து செல்ல... மகளை எப்படி சமாதானம் செய்வது என்று அவள் பின்னாடியே ஓடினார்கள் தண்டபாணியும் கோமதியும்....

மான்சி சத்யனை டேபிளின் அருகே அழைத்து செல்ல... சத்யன் அவள் கையை இறுக்கமாக பற்றியிருந்தான்.... அவனது மனதை புரிந்தவள் போல் மான்சி அவன் கையை எடுத்து தனது கன்னங்களில் வைத்து “ அனு சொன்னதையே நினைக்கிறீங்களா? ... விடுங்க அவ சின்னப்பொண்ணு தெரியாம பேசிட்டா... அதான் நான் பதிலடி குடுத்துட்டேனே? ” என்று கனிவுடன் கூறினாள்....



இருவரும் சாப்பிடும்போது தான் மற்ற மூவரும் வந்தனர்... வந்தவுடன் சபாபதி நடந்தவற்றை கூற ராஜா கொதித்துப் போனார்... மனைவியிடம் திரும்பி “ ராஜி இனிமேல் உன் அண்ணன் பேமிலிக்கு இங்கே இடமில்லை.... நானும் எவ்வளவோ பொருத்துப் போயிட்டேன்... இவங்க என் மகனையும் மருமகளையுமே ஏளனமா பேசினப் பிறகு இனிமேல் முடியாது.... போகச்சொல்லு இங்கிருந்து” என்றார்...

ராஜி அமைதியாக சரியென்று தலையசைத்தாள்... சாப்பிட்டு விட்டு சத்யனுடன் வந்த மான்சி.... “ இல்ல மாமா குடும்பம்னு இருந்தா இதுபோல பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.... இத்தனை வருஷமா இருந்தவங்களை இப்போ போகச்சொன்னா என்னாலதான் ஊர் பேசும்... அதனால அவங்க இருக்கட்டும்.... என்னையும் இவரையும் தானே பேசுறாங்க... அதுக்கு நானே பதில் குடுக்கிறேன்... அதைவிட்டு அவங்களைப் போகச்சொல்லி எனக்கு அவப்பெயர் வேணாம் மாமா” என்று மான்சி கூறியதும்....

“ மான்சி சொல்றதுதான் சரி ராஜா... இப்போ போகச்சொன்னா மருமக வந்தநேரம் மச்சானை வீட்டைவிட்டு அனுப்பிட்டார்னு எல்லாரும் சொல்லுவாங்க... இரு அதுக்கொரு நேரம் வரும்... அதுவரைக்கும் மான்சி எதையும் சமாளிப்பா” என்றார் பெரியவர்

அதன்பின் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சத்யனும் மான்சியும் மாடிக்கு போய் விட்டார்கள்... முதல் நாள் மாலைவேளை போலவே அணைப்புடன் கூடிய அமைதியான உறக்கம்... பிறகு மாலை கணவனுடன் அமர்ந்து டிவி பார்த்தாள் மான்சி... சிறிதுநேரம் லாப்டாப்பில் கேம் விளையாட கற்றுக் கொடுத்தான் மான்சிக்கு... இரவு உணவு அறைக்கே வந்தது... இருவரும் சாப்பிட்டு விட்டு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்...

இரவு வந்தது..... நேற்றுபோல் இன்று சத்யனிடம் பதற்றம் இல்லை.... மான்சி கொடுத்த மாத்திரைகளை விழுங்கி விட்டு சரிந்து படுத்தான்.... மான்சி அருகில் படுத்து குழந்தையைப்போல் அவனை அணைத்து உறங்க வைத்தாள்.... நேற்றைக்கும் இன்றும் வித்தியாசம் என்னவென்றால் மான்சிக்கு இன்று தூக்கம் வரவில்லை... அவனின் முரட்டு அணைப்பு அவளை கலங்க வைத்தது... அவனின் ஆண் வாசனை கண்ணீர் விட வைத்தது... அவனது மூச்சுகாற்று இவளை திணறவைத்தது... மான்சி அணைப்பை மாற்றாமல் வெகுநேரம் விழித்துக் கிடந்தாள்...

மறுநாளும் முன்தினம் போலவே போனது சத்யனின் கோபம் வெகுவாக குறைந்திருந்தது.... அவனால் மான்சியிடம் குற்றமோ குறையோ கண்டுபிடித்து கோபப்பட முடியவில்லை... சத்யனிடம் ஒரு தாயாக அன்பு காட்டினாள்... தோழியாக உடனிருந்து தேறுதல் சொன்னாள்... ஒரு தாதி இருந்து பணிவிடை செய்தாள்... ஆனால் ஒரு காதலியாக மட்டும் குறும்பு செய்யவில்லை... அவளிடம் கோபம் காட்டவேண்டும் என்று எண்ணியிருந்த சத்யன்... இப்போது அவள் ஒரு காதலியாக தன்னிடம் குறும்பு செய்து கொஞ்ச மாட்டாளா என்று ஏங்க ஆரம்பித்தான்... 



“ உன் முந்தானை வாசத்தில்.....

“ முரண்டு செய்யும் என் மனதை.....

“ முத்தமிட்டு ஆறுதல் தருவாயா?

“ ஒரு சிங்கமாய் சிலிர்த்துத் திரிந்த நான்...

“ இன்று ஒரு அடைப்புக்குறிக்குள்...

“ சிக்கிய ஆட்டுக்குட்டியாக........ 

ஐந்தாம் நாள் இரவு மரகதமும் சாமிக்கண்ணுவும் ஊருக்கு செல்வதாக அனைவரிடமும் விடை பெற்று சென்றனர்.... சொல்லிக் கொண்டு சத்யனின் அறைக்கு வந்தபோது மான்சி விழிகளில் தேங்கிய நீரை சத்யனுக்குத் தெரியாமல் மறைத்து மரகதத்திடம் வெளிப்படையாக எதுவும் சொல்லமுடியாமல் " பார்த்துக்க அம்மாச்சி " என்று மட்டும் சொல்லியனுப்பினாள்

மரகதம் நம்பிக்கையாய் தலையசைத்து விட்டு " நீ சின்னய்யாவை கவனமாப் பார்த்துக்க கண்ணு.... நான் போய்ட்டு போன் பண்றேன்" என்று கூறிவிட்டு விடைப் பெற்றாள்

அவர்கள் சென்றதும் " என்ன தம்பிய பார்க்கனும்னு தவிப்பா இருக்கா மான்சி?.... நீயும் வேனும்னா தம்மு கூட போயிட்டு வர்றயா? " சத்யனின் குரல் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு வந்தது ...

மான்சிக்கு உணர்ச்சியற்ற அந்த குரலைக்கூட அடையாளம் காண முடிந்தது ... மெதுவாக கட்டிலை நெரிங்கி சத்யனின் அருகில் அமர்ந்து ... " ம்ஹூம் .. அம்மாச்சியும் தாத்தாவும் பார்த்துக்குவாங்க ... பரசு புரிஞ்சுக்குவான்... நான் போகனும்னு அவசியமில்லை" என்றாள்

ஏனோ சத்யனின் முகம் மகழ்ச்சி மலர்ந்தது... பக்கத்தில் இருந்தவளின் இடுப்ப்ல் கைவிட்டு அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்தவன் வலுவாக இறுக்கியணைத்து " நீ என்னை விட்டு போகமாட்டேனு எனக்கு தெரியும் மான்சி " என்றவனின் அணைப்பு இறுகியது ... அவள் காதருகில் குனிந்து " மான்சி என்மேல அப்படியே கால்நீட்டி படுத்துக்கோயேன".சத்யனின் குரல் கெஞ்சியது ...

மான்சிக்கு அழுகைதான் வந்தது ... எவ்வளவு ஆசையும் ஆர்வமும் அந்த குரலில்... அவன் கோபத்தை விட இதுபோன்ற தாபமான வார்த்தைகளை தான் அவளால் தாங்க முடியவில்லை.... ஒரு துடிப்பான இளைஞன் நோயுற்றுப் படுத்தால் அவனுடை கோபமும் தாபமும் எப்படியிருக்கும் என்று ஒவ்வொரு நிமிடமும் மான்சிக்கு உணர்த்திக்கொண்டே இருந்தான் .. அவனது நிலைமையை மான்சியால் சரிவர புரிந்துகொள்ள முடிந்தது

இப்போது அவன் சொல்வதை செய்தால் .. அதன் அடுத்தக்கட்டம்? அது பெரும் வேதனை அல்லவா? மான்சி எதுவுமே பேசாமல் அவன் மார்பில் மட்டும் சரிந்து கிடந்தாள் ..

" ஏன் மான்சி .. நான் கேட்டதை செய்ய மாட்டியா?" சத்யனின் விரல்கள் அவள் இடுப்பை விட்டு மேலேறி ரவிக்கையின அடிப் பக்கத்து விளிம்பை வருடியது...

மான்சி முக்த்தை அவன் நெஞ்சில் அழுத்தமாக பதித்தாள்.. அவளின் கண்கள் கண்ணீரை அவன் நெஞ்சில் வடித்தது...

நெஞ்சில் சுட்ட கண்ணீரை உணர்ந்து அவள் முகத்தை நிமிர்த்திய சத்யன் அழும் மான்சிப் பார்த்து " ஏன் இப்ப அழற மான்சி ? பிடிக்கலைனா எழுந்து போ? " என்றவனின் கரங்கள் தளர்ந்தது

வேகமாக தலையசைத்தாள் மான்சி " ம்ஹூம் கொஞ்சநேரம் இப்படியே இருக்கேனே? போகச் சொல்லாதீங்க ப்ளீஸ்" என்றவள் கண்ணீருடன் அவன் நெஞ்சில் இறுக்கமாக புதைய..... தனது நிலையில் மான்சியை திருமணம் செய்தது பிழையோ என்று முதன்முறையாக சத்யன் எண்ணினான்.... அவளின் இதயத்துடிப்பு அவன் நெஞ்சில் அறைவது போல் இருந்தது... லேசாக கழுத்தை வளைத்து அவள் உச்சந்தலையில் தனது தாடையை வைத்துக்கொண்டான்.... 



இத்தனை நாள் போல் அல்லாமல் இன்று சத்யன் மான்சியை அணைத்து உறங்க வைத்தான்... அவளை தன் நெஞ்சிலிருந்து இறக்கவில்லை... சுகமாக இருந்தது அவளது சுமை... தூங்கிய பின் தனது உதடுகளை அவள் நெற்றியில் பதித்தவன் சத்தமில்லாமல் பல முத்தங்களை பதித்தான்....

காலையிலிருந்து அவனோடு உழன்று வீட்டு வேலைகளையும் கவனிப்பதால் மான்சி கணவனின் அணைப்பில் இதமாக உறங்கினாள்.... சற்றுநேரத்தில் ஏசியின் குளிரில் மான்சியின் உடல் லேசாக நடுங்க.... காலடியில் கிடந்த பெட்சீட்டை எட்டி எடுத்து அவளுக்கு போர்த்த முடியவில்லை... ரொம்பவே தவித்துப் போனான்... அவனால் அசையவும் முடியவில்லை... அயர்ந்து உறங்கும் மான்சியை எழுப்பவும் மனமில்லை...

தனது தலையணைக்கு கீழே இருந்து மொபைலை எடுத்து அம்மாவுக்கு கால் செய்தான்... ராஜா தான் எடுத்தார் இரவு பதினொன்றரை மணி என்றதும் பதற்றத்துடன் “ என்னப்பா.. என்னாச்சு?” என்று கேட்க...

“ ஒன்னுமில்லை டாடி மம்மியை கொஞ்சம் என் ரூமுக்கு அனுபபுங்களேன்” என்றான்.... “ இதோ அனுப்புறேன் சத்யா... ஆனா என்ன பிரச்சன?” என்று கவலையாக கேட்டவரிடம்...

“ அய்யோ ஒரு பிரச்சனையும் இல்லை டாட்... எனக்கு பெட்சீட் வேனும்.. கால்கிட்ட கிடக்கு.. மான்சி நல்லா தூங்குறா... அதான் மம்மிய கூப்பிட்டேன்” என்றான் ...

நிம்மதியாக மூச்சுவிட்ட ராஜா “ சரிசரி இதோ அனுப்புறேன் சத்யா” என்று கட் செய்தார்

சற்றுநேரத்தில் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த ராஜியைப் பார்த்து சிரித்த சத்யன் “ ஸாரி மம்மி தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றான் மெல்லிய குரலில்..

சத்யனின் அகன்ற மார்பில் சிறு புறாக்குஞ்சாய் சுருண்டு உறங்கும் மான்சியைப் பார்த்து புன்னகையுடன் “ பாவம் நல்லா தூங்கிட்டாளா? அவளும் என்னப் பண்ணுவா.. மொத்தப் பொறுப்பையும் அவளே பார்த்துக்கிறாளே?” என்றபடி சத்யனின் காலடியில் கிடந்த பெட்சீட்டை எடுத்து சத்யனையும் மான்சியையும் சேர்த்து மூடிவிட்டு அங்கிருந்து நகர்ந்து கதவருகே போனாள்...

“ அம்மா ” என்று சத்யன் அழைக்க... ராஜி அப்படியேே நின்றாள்.. சத்யன் அம்மா என்று அழைப்பது ரொம்ப குறைவு ... மீண்டும் மகனின் கட்டிலருகே வநதாள்

சத்யன் தனது கையை நீட்ட.. ராஜி அதை வேகமாக பற்றிக்கொண்டு “ என்ன அப்பு?” என்றாள்.. அப்படி கேட்கும்போதே தொண்டை அடைத்தது...

தாயின் கரத்தை எடுத்து தன் நெற்றியில் வைத்தவன் “ என்னை மேரேஜ் பண்ணதால மான்சி பாவமா அம்மா?” என்று கலங்கிய குரலில் கேட்க...

ராஜிக்கு மகன் என்ன கேட்கிறேன் என்று புரிந்தது... உள்ளுக்குள் துடித்தது... “ ஏன் அப்பு அப்படி கேட்குற? அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுதான் மேரேஜ் பண்ணிகிட்டா அப்பு... உன்மேல உயிரையே வச்சிருக்கா அப்பு.. இதுபோல கேட்டு அவ மனசை நோகடிச்சிடாதே” என்றவள் மகனின் நெற்றியை ஆறுதலாக வருடி “ மனசுக்குள்ள எதையும் போட்டு குழப்பிக்காத.. நிம்மதியா தூங்கு அப்பு” என்று குனிந்து மகனின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து சென்றாள்... 

அதன் பின் சத்யன் விடிய விடிய மான்சியை அணைத்ததை விடவேயில்லை... காலையில் மான்சி கண்விழித்த போது சத்யனும் விழித்துக்கொண்டான் ... சத்யனின் அணைப்பில் இருந்து விலகி மான்சி போர்த்தியிருந்த போர்வையை கவணித்து விட்டு “ நைட் நான் பெட்சீட்டை எடுக்கவேயில்லையே யார் போர்த்தி விட்டது” என்று மான்சி கேட்க..

கண்சிமிட்டி சிரித்த சத்யன் “ மேடம் குளிர்ல நடுங்குனீங்க.. நான்தான் அம்மாவுக்கு கால் பண்ணி வரச்சொல்லி பெட்சீட்டை போர்த்த சொன்னேன்” என்றான்

இரவு ரொம்பவே நெருக்கமாக படுத்திருந்தது ஞாபகத்திற்கு வர “ ச்சீ அத்தையை போயா கூப்பிட்டீங்க” என்றவளின் முகச் சிவப்பை ரசித்த சத்யன்...

“ பின்ன வேலுவையா கூப்பிடுறது?... சரி குளிச்சிட்டு போய் சீக்கிரம் பூஜையை முடிச்சிட்டு வா... என் வேலைகளைப் பார்க்கலாம்” என்று சத்யன் கூற...

பூஜை செய்துவிட்டு வருமாறு சத்யனே சொன்னதை ஆச்சர்யமாக பார்த்தவாறு பாத்ரூமுக்குள் சென்றாள்...

அன்று காலை எல்லா வேலையும் முடிந்து இருவரும் டிபன் சாப்பிட கீழே போனார்கள்... அவர்களுக்காக எல்லோரும் காத்திருந்தனர்... சத்யன் புன்னகையுடன் குட்மார்னிங் சொல்லிவிட்டு சாப்பிட தயாரானான்.. அவனது மாற்றங்கள் பெரியவருக்கும் பெற்றவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது...

சாப்பிடும் போது மான்சி மெதுவாக ஆரம்பித்தாள் “ மாமா பெரிய கார்ல இருக்கு பின் சீட்டுகளளை எடுத்துடு சொல்லலாம்னு இருக்கேன்” என்றாள்..

இட்லியை வாயருகே எடுத்துப் போனவர் அப்படியே நிறுத்தி “ ஏன்மா... சீட்டை எதுக்கு கழட்டனும்?” என்று கேட்க...

“ இல்ல மாமா பின்னாடி சீட்டை எடுத்துட்டா அந்த இடத்தில் வீல்சேரை வச்சுக்கலாமே... நானும் இவரும் கார்ல எங்கயாவது போகலாம்னா வசதியா இருக்கும்.. அதான் அந்த மாதிரி ரெடி பண்ணலாம்னு.. அது மட்டுமல்ல ஒருத்தர் தள்ற மாதிரி இந்த வீல்சேர் இனிமேல் வேண்டாம்... இவரே மூவ் பண்ற மாதிரி பிரேக் கியர் எல்லாம் வச்ச வீல்சேர் இருக்குன்னு நேத்து பிஸியோதெரபிஸ்ட் சொன்னாரு... அதை வாங்கிடலாம் மாமா” என்று மான்சி சொல்லிகொண்டே போக...

அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்... சத்யனைத் தவிர... சாப்பிட்டட படி “ நான் இந்த வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் மான்சி” என்றான்...

பட்டென்று திரும்பிய மான்சி “ ஏன் வரமாட்டீங்க? நடக்கவே முடியாதவங்க கால்களை தரையில இழுத்துகிட்டு ஊர்ந்து போய் அவங்களால முடிஞ்ச வேலையை செய்றாங்க... ஆனா உங்களுக்கு சகல வசதியும் இருக்கு... அப்புறம் ஏன் வீட்டுல முடங்கனும்.” என்று கேட்டதும் சத்யன் அமைதியாக இருக்க...

மான்சி தாத்தாவின் பக்கம் திரும்பி “ தாத்தா அது மட்டுமில்லை.. நாளையிலேருந்து இவரும் பேக்டரிக்கு வருவார்... காலையில வந்து மதியம் சாப்பிட வர்றவரை அங்கேதான் இருப்பார்” என்று சொன்னதும்..

அத்தனை பேரும் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர்... சத்யன் அவசரமாக நிமிர்ந்து “ வெளியே போகனும்னு சொன்ன சரி.. போகலாம்.. ஆனா பேக்டரிக்கு எல்லாம் நான் போகமாட்டேன்... ஆண்டுவிழாவுக்கு கூட நான் அங்கே போனதில்லை” என்ற சத்யனின் குரலில் கொஞ்சம் கோபம்.....

மான்சி திரும்பி அவனையே தீர்க்கமாக பார்த்துவிட்டு “ சரி தாத்தா அவர் வரலைன்னா விடுங்க... ஆனா நான் வரப் போறேன்... எனக்கு பேக்டரியை பார்க்கனும்னு ஆசையாயிருக்கு... கிரானைட் பத்தி தெரிஞ்சுக்கனும்.. அதனால நாளைக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போங்க” என்றவள் எழுந்து போய் கைகழுவிவிட்டு வந்து சத்யன் அருகே அமர்ந்தாள்...

சத்யன் அமைதியாக உணவை பிசைந்தான்.... இவ பேக்டரிக்கு போய்ட்டா நான் எப்படி தனியா இருக்குறது? பழைய சத்யனாக இருந்தால் வெறி பிடித்தவன் போல கத்தியிருப்பான் ... இவனால் இப்போது மான்சியின் செயல்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கத்தான் முடிந்தது.. அதில் குறை சொல்லவே குற்றம் சொல்லவோ முடியவில்லை....

“ சரி மான்சி நானும் வர்றேன் போகலாம்” என்று சத்யன் அமைதியாக சொல்ல... மான்சி நன்றியுடன் அவன் கையைப் பற்றிக்கொணடாள்...

எல்லோரும் ஹாலில் அமர்ந்த போது சொக்கலிங்கம் மான்சியிடம் திரும்பி “ மான்சி நானும் இன்னிக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு நெனைச்சேன்... ம்ம் இன்னிக்கு எல்லாமே நல்லாத நடக்குது” என்றவர் தனது மருமகளைப் பார்த்தார்...

ராஜி எழுந்து மான்சியின் அருகில் வந்து அமர்ந்து “ நேத்து நம்ம டாக்டர் கால் பண்ணார் மான்சி... உனக்கு சில டெஸ்டுகள் எடுக்கனுமாம்... அதனால இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னார்... “ என்று மெல்ல சொல்ல...

மான்சியின் உடலில் இனம்புரியாததொரு சிலிர்ப்பு... அவள் காதலனின் குழந்தை என் வயிற்றில்.... நினைத்தபோதே தேகம் சிலிர்த்தது.. ‘ ஆறுபடை முருகா எல்லா டெஸ்டுகளின் ரிசல்ட்டும் சாதகமாகவே வரனும்” மான்சியின் மனம் அவசர அவசரமாக பிரார்த்தனை செய்தது

சத்யனுக்கும் என்னவென்றே புரியாத ஒரு உணர்வு... என் குழந்தை எனக்கு பிடித்த மான்சியின் வயிற்றில்....... குழந்தை என்னோடதா இருந்தாலும் குணமும் அழகும் இவளைப் போலவே இருக்கனும்... சத்யன் நினைத்தானே தவிர தனது பிரார்த்தனையை கடவுளிடம் கொண்டு செல்லவில்லை...

அன்று முழுவதும் மான்சி சத்யன் இருவரிடமும் ஒருவித நெருக்கமான இடைவெளி... உடல்கள் இரண்டும் விலகி... இதயங்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ள பார்வையால் உரசிக்கொள்ளும் நெருக்கமான இடைவெளி..

அன்றைய இரவு உறக்கம் இருவருக்குமே தொலைந்து போனது... ஆனால் மூச்சு முட்டும் அளவுக்கு அணைத்துக் கிடந்தனர்... முதன்முறையாக சத்யனின் உடல் பாகங்கள் மான்சியின் உடலில் தீமூட்டியது... ஆனால் கணவனை நிலையுணர்ந்து தனது கண்ணீரால் அந்த தீயை அனைத்தாள்....

வழக்கம் போல மான்சி விரைவில் உறங்கிவிட... சத்யன் தனது உதடுகள் மரத்துப்போகும் வரை அவள் உச்சியிலும் நெற்றியிலும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்... அவனுக்கு ஆசை தேன் தடவிய அவள் இதழ்களை கவ்விக்கொள்ள... ஆனாலும் ஏதோவொரு தயக்கம் அவனை கட்டிப்போட்டது

மறுநாள் காலை பரபரப்புடன் விடிந்தது ... வீடே ஏதோ விழாவுக்ககு கிளம்புபவர்கள் பரபரபப்புடன் ஓடிக்கொண்டிருந்தனர் ... சத்யன் மட்டும் அமைதியாக இருந்தான் ...

மான்சி வேலுவின் உதவியுடன் சத்யனை தயார் செய்தாள்... பார்மட்ஸ் பேன்ட் சர்டில் சத்யன் தயாராக .... மான்சி அழகிய மஞ்சள் நிற ஷிபான் புடவையில் தயாரானாள் ... .

சத்யனை கீழே அழைத்து வந்தனர் ... அவர்கள் இருவரின் அழகையும் காண கண் கோடி வேண்டும் போல இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தனர்

சத்யன் மான்சியின் அழகை விழிகளால் பருகி இதயம் முழுவதும் நிரப்பினான்.... கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கும் மான்சியைப் பார்த்து அவனுக்கு பசி மறந்து போனது..

அவன் பார்வைகள் மான்சிக்கு புரிந்தது.. ஆனால் வாயைத் திறந்து தன் மனதை வெளிப்படுத்தாமல் இருக்கும் அவன் கர்வம் இவளுக்கு பொய்யாய் கோபத்தை வரவழைத்தது .... " சரியான திருடன்" என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள்

எல்லோரும் அமர்ந்து டிபன் சாப்பிட்டதும் .. அனைவரும் ஹாலுக்கு வர .. சத்யன் மான்சியின் கையைப் பற்றிக் கொண்டு " நல்லா யோசிச்சு சொல்லு மான்சி .... நான் அவசியம் பேக்டரிக்கு போகனுமா?" என்று சங்கடத்துடன் கேட்டான் ......

" ஆமாம் போகத்தான் போறோம்" எனறவள் தனது வழக்கமான டயலாக்கை மறுபடியும் சொன்னாள் " உங்க பிடிக்கலைனா உடனே திரும்பி வந்துடலாம்ங்க" என்றாள் உதட்டில் தவழும் புன்னகையுடன்

இப்போதெல்லாம் சத்யனுக்கு அந்த புன்னகையே போதுமானதாக இருந்தது ..... எப்பவும் போல இப்பவும் ஆப் ஆகிப் போனான் " சரி போகலாம்" என்றான் முழு மனதுடன்

சொக்கலிங்கம் தனது காரை விட்டுவிட்டு சத்யனுக்காக ரெடியான இனோவா காரில் முன் இருக்கையில் ஏறிக்கொள்ள வேலுவின் உதவியுடன் சத்யன் பின் இருக்கையில் ஏற்றப்பட்டான்.. அவனுக்கு இருபுறமும் மான்சியும் வேலுவும் அமர்ந்தனர்.. பின் சீட்டில் சத்யனின் சேர் ஏற்றப் பட்டது

சொக்கலிங்கத்துக்கு மான்சியை நினைத்து பெருமையாக இருந்தது ... கல்லுக்குள்ளும் ஈரம் கசிய வைத்து விட்டாளே?

மூவரும் பேக்டரி சென்று இறங்கிய போது ராஜாவின் ஏற்ப்பாட்டின் படி கமபெனி ஊழியர்கள் மொத்த பேரும் வாயிலில் காத்திருந்தனர்

சத்யனும் மான்சியும் காரிலிருந்து இறங்கியதும் மூத்த நிர்வாகிகள் மலர்ச் சென்டு கொடுத்து அவர்களை வரவேற்னர் ... தொழிலார்கள் அத்தனை பேருக்கும் சத்யன் அங்கே வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது .. எல்லோரும் புன்னகையுடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்

ராஜா தனது அறைக்கு அவர்களை அழைத்து சென்று முதலாளிக்கான இருக்கையில் மகனை அமர வைத்துவிட்டு கண்கலங்கினார் ... எதற்கும் கலங்காத பெரியவரின் கண்கள் கூட சத்யனை எம்டி யின் இருக்கையில் பார்த்து கலங்கி போனது ......

அவர்களைப் பார்த்து சத்யன் சங்கடமாக நெளிந்தபடி ... " நான் எதுவும் செய்யலை தாத்தா ..... எல்லாம் மான்சியால தான்.... இனி நான் எதுக்குமே லாயக்கில்லைனு இருந்தவனை பேக்டரி வரைக்கும் கொண்டு வந்துட்டா... இவளால் என் வாழ்க்கையில் இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரப்போகுதோ" என்று உள்ளார்ந்த சந்சோஷத்தோடு கூறியவன் பெருமையோடு மனைவியை பார்க்க.... அவள் “ ம்ஹூம் ” வெட்கத்தோடு வேறு பக்கம் திரும்பி கொண்டாள் ...



" எனது வெறிச்சோடிய ராத்திரிகளில்...

" இப்போது மலர்களின் வாசனை!!

" எனது வரண்டு போன கனவுகளில்...

" வானவில்லின் வண்ணங்கள்!

" அமைதியாய் உழன்ற என் கூட்டுக்குள்...

" இப்போது கொட்டும் குளிர் அருவியின் சத்தம்!!

" எனது உயிர் மெல்ல மெல்ல வெளியேறி

" உன் கண்மணிகளில் விளையாடும்...

" கருவிழிகளில் கைதாகிப் போனதடி!


No comments:

Post a Comment