Monday, January 11, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 23

சத்யனுக்கும் அழுகை வந்தது... எனக்கு சுகம் வேண்டாம் .. நீ என்கூடவே இருந்தா போதும்னு நினைக்கும் மான்சியின் மனசு சத்யனுக்குப் புரிந்தது... ஆனால் வாழ வேண்டிய வயதில் தன் இளமை வீனாக எனக்காக வாழும் இவளுக்காக என் உயிரை பணையம் வைப்பதில் தவறென்ன? என்று தனக்குத்தானே நியாயம் சொல்லிக்கொண்டான் ...

" மான்சி உன் மனசு புரியுது ... ஆனா என் மனசை நீயும் புரிஞ்சுக்கனும் ... இந்த மாதிரி ரெண்டுபேரும் அணைச்சுகிட்டு படுத்திருக்கதே போதும்னு நீ நினைக்கிற... எனக்கு இது பத்தாது மான்சி.. நான் உனக்கு எல்லா சுகத்தையும் தரனும் மான்சி ... சரி செக்ஸை விடு.. மத்ததெல்லாம் யோசி... நாம வெளி போகும்போது நான் வீல்சேர்லயும் .. நீ நடந்தும் வர்றத விட ... நான் உன் தோள்ல கைப்போட்டு என் தோளோடு அணைச்சிகிட்டு போனா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு யோசிச்சுப் பாரு.... வீல்சேர்ல உட்கார்ந்து ஆபிஸ் போற நான் கோட்சூட் போட்டு நானே காரை டிரைவ் பண்ணி போறதை கற்பனை பண்ணிப் பாரு மான்சி....

நம்ம குழந்தையை என் தோள்ல சுமந்து தோட்டத்துல நடந்தா எப்படியிருக்கும்னு கற்பனைப் பண்ணிப்பாரு மான்சி" சத்யன் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல மான்சியின் கண்முன் படமாக விரிந்தது அந்த காட்சிகள்...

திடுக்கென்று எழுந்து அமர்ந்த மான்சி " நீங்க எல்லாம் சரிதான் ... அதுக்கு நீங்க எனக்கு வேனுமே? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?... நான் கண்களை வித்து ஓவியம் வாங்க தயாரில்லை... எனக்கு இப்ப இருக்குற வாழ்க்கையோ திருப்த்தியா இருக்கு .. உங்களுக்கு இன்னும் பாப்பா வேனும்னா சொல்லுங்க .. இதேபோல பெத்துக்கலாம்... ஆனா நான் உங்களுக்கு ஆப்ரேஷன் செய்ய ஒத்துக்க மாட்டேன் " என்று மான்சி தனது தரப்பில் பிடிவாதமாக இருந்தாள்.....

சத்யனுக்கு எரிச்சலாக வந்தது..... சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றாளே? இவளுக்கு எதை சொல்லி எப்படி புரிய வைப்பது? சலிப்புடன் கண் மூடியவனை இறுக்கமாக அணைத்த மான்சி " எதையும் யோசிக்காம அமைதியா தூங்கு கண்ணா" என்று கூற .. சத்யனும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று உறங்க முயன்றான்...

மறுநாள் காலை ஐந்து மணிக்கே பரசு வந்துவிட ... ராஜா அவனை வரவேற்று பெரியவரின் அறைக்கு அழைத்துச்சென்றார்... தாத்தாவும் ராஜாவும் மொத்த விஷயங்களையும் பரசுவுக்கு தெளிவாக எடுத்துக்கூறினார்கள் ...

பரசு உடனே அழுதுவிட்டான் “ அய்யய்யோ இந்த ஆப்ரேஷனே வேணாம்.. என் மச்சான் இப்படியே இருக்கட்டும்” என்று முகத்தை மூடிக்கொண்டு கதறியவனை ஆறுதல் படுத்துவதற்குள் அப்பாவுக்கும் மகனுக்கும் போதும் போதுமென்றானது....

இருவரும் அவனை சமாதானம் செய்து அவனை அழைத்துக்கொண்டு.. சத்யனின் செல்க்கு போன் செய்துவிடு அவனது அறைக்குள் சென்றார்கள் ...

மான்சி எழுந்து பாத்ரூமுக்கு சென்றுவிட... சத்யன் கண்விழித்து கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தான்... பரசு வேகமாக சென்று சத்யனுக்குப் பக்கத்தில் கட்டிலில் அமர்ந்து அவன் கையைப்பிடித்து “ என்ன மச்சான் இது? அதெல்லாம் வேணாமே” என்று நா தழுதழுக்க கூறியவனின் கையை ஆறுதலாக தட்டிய சத்யன்... “ இவ்வளவு காலையிலயே அதைப்பற்றி பேச வேண்டாம்... மான்சி நைட் பூராவும் அழுதா.. இப்போ மறுபடியும் ஆரம்பிச்சுடுவா” என்று மனைவியின் மேல் உள்ள அக்கரையோடு எச்சரிக்கை செய்தான்...


பாத்ரூமிலிருந்து வெளியே வந்த மான்சி “ நான் அழுவுறேன்னு தெரியுதுள்ள? அப்போ அதைப் பத்தியே பேசாதீங்க” என்று சத்யனிடம் முறைப்புடன் கூறிவிட்டு பரசுவைப் பார்த்து “ பரசு நல்லாருக்கியா? அம்மாச்சி எப்படியிருக்கு?..” என்று விசாரிக்க ஆரம்பித்தாள்....

அதன்பிறகு யாரும் அதைப் பற்றியே பேசவில்லை... ஆனால் சத்யனைத் தவிர மற்றவர்கள் பார்வையால் பேசிக்கொண்டு எல்லோரும் ஒரு கட்சியாக இருந்தார்கள்...

காலை டிபன் முடிந்தது... எல்லோரும் பெரியவரின் அறைக்கு சென்றனர்.... சத்யனே ஆரம்பித்தான்... அவன் சொல்ல ஆரம்பிக்கும்போதே “ அட அதெல்லாம் வேனாம் மச்சான்... நீங்க இப்படியே இருங்க அதுவே எங்களுக்குப் போதும்” என்று பரசு கூறினான்

சத்யன் வியப்புடன் பார்த்தான்... இப்படியொருத்தனை என் அக்கா கல்யாணம் பண்ணிகிட்டாளே என்று கதறிய பரசுவுக்கும்..... ஆப்ரேஷனே வேணாம் நீங்க இப்படி இருந்தா அதுவே போதும்னு நினைக்கிற இந்த பரசுவுக்கும் எவ்வளவு வித்தியாசம்... எதையாவது செய்து என் அக்கா சந்தோஷமா வாழ்ந்தால் போதும்னு நினைக்காம.... மச்சானோட உயிர் இருந்தா போதும்னு நினைக்கும் இவனுக்காகவாவது நான் நிச்சயம் ஆப்ரேஷன் செய்துக்குவேன் என்று உறுதியுடன் எண்ணினான்..

ஆனால் பரசு ஆரம்பித்ததும் மற்றவர்கள் தொடர்ந்தார்கள்... ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்ல... சத்யனின் கோபம் தான் அதிகமானது... தலையைப் பிடித்துக்கொண்டு “ எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா” என்று ஓவென்று கத்தியதும் அனைவரும் உடனே அமைதியானார்கள்,....

சத்யன் தன் அப்பாவைப் பார்த்தான்.... “ டாடி உங்களுக்கு கூடவா என் மனசு புரியலை? இன்னும் எத்தனை நாளைக்கு நான் இந்த வீல்சேர்லயே இருக்கனும்? வேணாம் டாடி நரக வேதனையா இருக்கு எனக்கு?... நான் இப்போ சந்தோஷமா இருக்கேன்னு நீங்கல்லாம் நினைக்கிறீங்க? ஆனா நான் ஒவ்வொரு நைட்டும் செத்துப் பிழைக்கிறேன் டாடி... மான்சியை தூங்க வச்சிட்டு நான் எத்தனை நாள் முழிச்சி கிடந்திருக்கேன் தெரியுமா? என்னால என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலை டாடி ... மான்சியைப் பார்க்க பார்க்க எனக்கு உள்ளுக்குள்ள நெருப்பா எரியுது.. அவளுக்கு வேனும்னா என்னை பார்த்துக்கிட்டே இருந்தாலே போதும்னு இருக்கலாம்.... ஆனா எனக்கு பத்தாது டாடி” என்றவன் முகத்தை தனது இரு கையாலும் பொத்திக்கொண்டு அழ ஆரம்பிக்க... ராஜி வேகமாக அவனை நெருங்கி அவன் முகத்தை தன் வயிற்றோடு அணைத்து “ வேணாம் அப்பு... அழாத அப்பு” என்று அவளும் சேர்ந்து கண்ணீர் சிந்தினாள் ....

“ இல்லம்மா நான் மான்சியை ரொம்ப லவ் பண்றேன்... அந்த லவ்வை நான் எல்லா வகையிலும் நிரூபிக்கனும்... அவளுக்கு ஒரு முழூமையான புருஷனா இருக்கனும்... இப்படி பயன்படாம இருக்குறதை விட... அந்த ஆப்பரேஷனை செய்த பிறகு நான் செத்தா கூட பரவாயில்லை” என்று உணர்ச்சிவசப்பட்டு சத்யன் சொல்ல

“ அய்யய்யோ அந்த வார்த்தையை சொல்லாதீங்களேன்” என்று மான்சி தன் காதுகளை பொத்திக் கொண்டு தரையில் சரிந்தாள்...

சத்யன் தனது சேரை தள்ளியபடி அவளருகே சென்று குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தி “ இல்ல கண்ணம்மா இனிமேல் சொல்லமாட்டேன்... ஆனா நீ நம்புடி நான் உனக்கு முழுசா திரும்பி கிடைப்பேன்னு நீ நம்பனும் மான்சி... உன்னோட நம்பிக்கை என்னை உயிரோட மீட்டு உன்கிட்ட சேர்க்கும் மான்சி ” சத்யனின் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்தது ... 


மான்சியிடம் கூறிவிட்டு ராஜாவின் பக்கம் திரும்பிய சத்யன் .... " டாடி எல்லாருக்கும் நாங்க சிரிக்கிறதும் பேசுறதும் மட்டும் தான் தெரியுது.. ஆனா ஒரு டிவில வர்ற கிஸ் பண்ற சீனைக் கூட பார்த்து ரசிக்க முடியாம் சேனைலை மாத்தி வைக்கிறோம்... என் முன்னாடி போட்டிருக்க டிரஸ் கூட விலககூடாதுன்னு ரொம்ப கவணமா இருக்கா.. ஏன்னா இதனால எல்லாம் எங்களோட உணர்ச்சிகள் தூண்டப்படும்னு பயந்து பயந்து வாழுறோம் டாடி... இது எவ்வளவு கொடுமையானதுனு யோசிச்சுப் பாருங்க... என் ஒய்ப் அழகானவனு பெருமைபட்டு என்ன டாடி பிரயோஜனம்... அந்த அழகு ஒவ்வொரு நாளும் என்னாலயே வீனாப் போகுதே? அழகான மனைவியை பக்கத்துல படுக்க வச்சிகிட்டு தொட்டா பாவம்ங்கற மாதிரியான இந்த வாழ்க்கை... ம்ஹூம் வேணாம் டாடி.... வேணவே வேணாம் இந்த கொடுமை... நான் கட்டாயம் ஆப்ரேஷன் செய்துக்குவேன்... மான்சியோட புருஷனா முழுசா உயிரோட திரும்பி வருவேன் ... எல்லாரும் நல்லதே நினைச்சு என்னை அனுப்புங்க... ப்ளீஸ்" கண்ணில் நீர் வழிய சத்யன் எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு கேட்க...

ராஜா வேகமாக வந்து மகனின் கையைப் பற்றிக் கொண்டார்... " உன் மனசு புரியுது சத்யா... எங்களுக்கும் நீ நல்லாகனும்னு ஆசைதான் சத்யா..... ஆனா......... " ராஜா கலங்கிப் போய் பாதியில் நிறுத்திவிட்டார்...

ராஜி சட்டென முன் வந்து " தயவுசெய்து இனி யாரும் எதுவும் பேசாதீங்க... சத்யனுக்கு குணமாகும்னு மட்டும் நம்பி அனுப்புவோம்.. நல்லதே நடக்கட்டும் மான்சி கும்பிட்ட தெய்வம் எல்லாம் அவளுக்கு தாலி பாக்கியத்தை கொடுக்கும் என் பிள்ளைக்கு நிச்சம் நல்லாகும் " என்று உறுதியுடன் கூறினாள்

" ஆமாம் ராஜா .. சத்யனின் வார்த்தைப் படியே நடக்கட்டும்னு விடு ... அவன் இப்படியே இருந்து கஷ்டப்படுறத விட .. அந்த ஆப்ரேஷனை செஸ்து பார்ப்பது தான் சரின்னு எனக்கு தோனுது... கடவுள் நமக்கு ஒரு வழி காமிச்சிருக்கார் அது நல்ல வழிதான்னு நாம நம்புவோம்" என்று பெரியவரும் தீர்மானமாக கூறினார்...

ஆனால் மான்சியின் கண்ணீர் தான் நின்றபாடில்லை... தங்களின் அறைக்கு சென்றதும் பின்னால் வந்த பரசுவைக் கூட மறந்து சத்யனை கட்டிக்கொண்டாள்... அவள் உடல் நடுங்கியதை உணர்ந்த சத்யனுக்கு கூட இப்படியே இருந்து விடலாமா? என்று தோன்றியது... ஆனால் அவளுடன் வாழப்போகும் வாழ்க்கை நிறைவானதாக இருக்கவேண்டுமே? அதற்காக மான்சியின் கண்ணீரை தாங்கித்தான் ஆகவேண்டும்...

அன்று முழுவதும் பரசுவும் மான்சியும் சத்யன் பக்கத்திலேயே இருந்தனர்... இரவு கிளம்பிய பரவின் முகத்திலும் நம்பிக்கையின் சாயல் ...

மறுநாளில் இருந்து சத்யனுக்கான மருத்துவ பரிசோதனைகள் தயாரானது ... அவன் உடல் அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாக உள்ளது என்றதும் அதன் ரிப்போர்ட்டுகள் லண்டன் மருத்துவமனை டாக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ...

எல்லாம் சரியாக இருந்து சத்யனை அழைத்து வரும்படி அங்கிருந்து பதில் வரும்போது மான்சியின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது... வளைகாப்பின் சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் மான்சி திகிலுடன் இருக்க .. சத்யன் தன்னால் முடிந்த மட்டும் மான்சியை சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துகொண்டான் ...




ஆனால் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் தேதியை மான்சியின் பிரசவம் கழித்து தான் என்று தள்ளி வைத்தான்.... திரும்பி வருவது கேள்விக் குறியான விஷயம் எனும்போது தனது குழந்தையை நேரில் கண்டுவிட்டாவது போகவேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம்... மான்சி இவன் சென்றதும் அழுது அழுதே பிரசவத்தில் ஏதாவது சிக்கல் வந்துவிடக்கூடாது என்ற கவலை மறுபுறம்...

டாக்டர் மான்சிக்கு சொல்லியிருந்த பிரசவ தேதிக்கு ஐந்து நாள் கழித்து சத்யன் லண்டன் கிளம்புவது என தீர்மானிக்கப்பட்டது .. அதற்கேற்றார்ப் போல அணைத்தும் தயார் செய்யப்பட்டது...

மான்சியின் பிரசவ தேதியும் நெருங்கியது... ஒருநாள் முன்பே மதுரையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள் மான்சி... ..

சத்யனும் அவளுடனேயே தங்கிவிட்டான்... மான்சி தன் பிள்ளை பெறுவதற்காக துடிக்கும் துடிப்பை விட சத்யன் இன்னும் ஒரு வாரம் மட்டுமே தன்னுடன் இருப்பான் என்ற ஞாபகமே அதிகமாக துடிக்க வைத்தது.... சத்யனின் நெஞ்சே கதியென்று கிடந்தவளைப் பார்த்து பெரியவர் கூட தவித்துப் போனார்

பரசு அக்காவின் காலடியில் அமர்ந்து லேசாக வீங்கியிருந்த பாதங்களை பிடித்து விட... சத்யன் சாய்ந்து அமர்ந்து அவளை தன் நெஞ்சில் தாங்கி நெற்றியை வருடிக்கொண்டிருந்தான்

அனைவரும் உறங்க ஆரம்பித்த பிறகு நடு இரவில் ஆரம்பித்த வலி விடியும் வரை தொடர்ந்து நீடித்தது ... மான்சியை விட சத்யன் புழுவாய் துடித்தான் ... வலியால் துடிக்கும் தனது அக்காவை காண முடியாமல் பரசு ஒரு மூளையில் நின்று கொண்டு முகத்தை மூடியபடி அழுது கொண்டிருக்க...

வலியால் துடிக்கிம் மருமகளை ஆறுதல் படுத்துவதா... கண்ணீர் விடும் சத்யனையும் பரசுவையும் தேற்றுவதா என்று புரியாமல் மற்றவர்கள் குழம்பி தவித்தனர்...

மான்சிக்கு சுற்றிலும் இருக்கும் யாரும் கண்ணுக்கு தெரியவில்லை... ஒவ்வொரு வலி வரும்போதும் அவள் கைகளும் கண்களும் சத்யனையே தேடியது ... அவன் சட்டை காலரைப் பிடித்துக் கொண்டு தோளில் பற்களைப் பதித்து வலியை தாங்கினாள்....

சத்யனுக்கு கண்ணீர் தான் வந்தது... பிள்ளை பெறுவது எவ்வளவு பயங்கரமானது என்று அவனுக்கு இப்போதுதான் புரிந்தது...தன்னை ஈன்ற தன் தாயின் மீதும்... தன் குழந்தை சுமக்கும் மான்சியின் மீதும் பக்தியே வந்து து சத்யனுக்கு

ஒருவழியாக மான்சியின் வலி பிரசவ வலியாக மாற ... லேபர் வார்டுக்கு அனழைத்துச் செல்லப்பட்டாள் மான்சி ... ஸ்ட்ரெச்சரின் பின்னாலேயே ஓடிய பரசுவை ராஜா தடுத்து தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினார் ....

சத்யன் பரசுவோடு சேர்ந்து எல்லோரின் கண்ணீருக்கும் விடியலாக சரியாக பகல் இரண்டு மணிக்கு பகலிலேயே பூவாய் கொட்டும் மழையுடன் இடி மின்னல் மேளதாளத்துடனும் மான்சியின் செல்வ மகன்... சத்யனின் செல்ல மகன் .... அந்த குடும்பத்தின் இளைய வாரிசு... பரசுவை தாய்மாமனாக பதிவி உயர்வு கொடுத்த இளவரசன் ... தனது கீச்சு குரலால் கத்தியழுது... தன் வருகைக்காக அழுதவர்களின் கண்ணீரை எல்லாம் ஆனந்த கண்ணீராக மாற்றிக் கொண்டு பிறந்தான்


"எத்தனை கவிதைகள்..
" நான் படைத்தாலும்...
" அதில் நீ மட்டும் தான்...
" கைகால் முளைத்த கவிதை....

" அருவாக இருந்த உன்னை
" கருவாக உருச் சுமந்து
" உயிர் சுவாசம் தந்தவள் தான்...
" எனக்கும் உயிர்கொடுத்தாள்....

" உன்னை பிரசவித்தது....
" உன் தாய்க்கு மட்டும்...
" மறுஜென்மமல்ல...
" உன் பிறப்பு எனக்கும்
" மறுஜென்மம் தான் !


மான்சி பிரசவித்த மயக்கத்தில் இருக்க... சுத்தம் செய்து உடை மாற்றி அறைக்கு மாற்றியதும் ராஜி முதலில் சத்யனின் வீல்சேரை தள்ளிக்கொண்டு மான்சியிருந்த அறைக்குள் சென்றாள்... குழந்தை சுத்தம் செய்து மான்சியின் அருகில் கொண்டுவரப்படவில்லை...

மகனை மான்சியின் தலைமாட்டிற்கு அழைத்து வந்த ராஜி கண்மூடிக்கிடக்கும் மருமகளின் நெற்றியை வருடிவிட... சத்யன் மான்சியின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு கலங்கிய கண்களுடன் மான்சி கண்விழிக்க காத்திருந்தான்.. பரசு உள்ளே வந்ததும் கட்டிலின் மறுபுறம் வந்து நின்றுகொண்டு கவலையுடன் மான்சியின் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.......

குழந்தையின் எடையும் வளர்ச்சி சற்று அதிகமாக இருந்ததால்... ரொம்ப சிரமப்பட்டு பிரசவித்த சோர்வு மான்சியை கண்விழிக்க விடவில்லை... குழந்தை சுத்தம் செய்யப்பட்டு எடுத்து வந்து வெண்நிற டவலில் சுற்றப்பட்டு மான்சியின் அருகில் கிடத்தினாள் நர்ஸ்...

முகம் காட்டிய மொட்டவிழ்ந்த ரோஜாப்பூ... மாதுளை விதையின் சிவப்பில் சின்னஞ்சிறிய மலரினும் மென்மையான உதடுகளில் கீழுதட்டை பிதுக்கியபடி... தனதுசிறிய கண்களை புருவம் சுருங்க இழுத்து மூடிக்கொண்டு வீல்லென்று ஒரு குரல் கொடுக்க... மயக்கத்தில் இருந்த மான்சியிடம் பலமானதொரு அசைவு... விழிக்க முடியாமல் விழிகளை உருட்டியவள்.... மகனின் அடுத்த அழைப்புக்கு உடனே கண்விழித்தாள்...

குரல் வந்த திசையில் தன்னருகே பார்த்தாள்.... குட்டியாய் கிடந்த மலர்க்குவியலை பார்த்ததும் முகத்தில் கர்வத்துடன் ஒரு பூரிப்பு... சட்டென்று சத்யனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவனும் அப்போதுதான் தன் மகனிடம் இருந்து பார்வையை மான்சிக்கு திருப்பினான்.. இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டனர்.. கர்வமும் காதலுமாக...

அவன் நெஞ்சில் இருந்த தன் கையை எடுத்து அவன் தாடையை வருடினாள்.. சத்யன் அவள் விரல்களைப் பற்றி தன் உதட்டில் பதித்தான்... இருவரின் கண்ணிலும் தேங்கியிருந்த நீர் சட்டென்று உருண்டு கன்னத்தில் வழிய...

ராஜி தன் மகனின் தோளில் தட்டி “ என்ன அப்பு இப்போ போய் கண்கலங்கி கிட்டு?... சந்தோஷமா அவகிட்ட ஏதாவது பேசுப்பா” என்றாள்

ஆனால் அந்த காதல் ஊமைகளுக்கு பேச்சைவிட விழி வீச்சு தான் பொருத்தம் என்பதுபோல் பார்வையாலேயே பலகதைகள் பேசியபடி இருவரும் ஒரே சமயத்தில் அழும் மகனைப் பார்த்து சிரித்தனர்...

நெஞ்சு முழுக்க சந்தோஷத்தில் திணறி.. அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக விழிகளில் தேங்கிய நீரை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு அவர்களையேப் பார்த்துக்கொண்டிருந்த பரசு “ அடடா இதென்ன கெரகம்... என் மருமகனை அழவிட்டு நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிகிட்டு வேடிக்கைப் பார்க்குறீங்க?” என்று அதட்டியப் படி கட்டிலைச் சுற்றிக்கொண்டு சத்யன் அருகில் வந்து “ மச்சான் இனிமே நான் உங்களுக்கு மாப்பிள்ளை இல்லை.. சம்மந்தி.. அதனால இனிமே மரியாதையா சம்மந்தினு கூப்பிடனும்” என்று அதட்டும் போதே வெளியே இருந்த மற்றவர்களும் அறைக்குள் வந்தனர்...

பெரியவர் தனது கொள்ளுப்பேரனை பார்த்துவிட்டு பூரிப்புடன் தனது மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு “ ம்ம் புலிக்குட்டி மாதிரி பொறந்திருக்கான்” என்றவர் பரசுவின் பக்கம் திரும்பி “ இன்னும் அடின்றதுக்கு பொண்டாட்டியே வரலை இதுல புள்ளைக்குட்டி எத்தனைனானாம்... அதுபோல இருக்கு பரசு உன் கதை... மொதல்ல நீ கல்யாணத்தை பண்ணி ஒரு பொண்ணை பெத்துட்டு அப்புறமா வந்து சம்மந்தி முறை சொல்லு” என்று கேலி செய்ய...

“ எல்லாம் நாங்கலும் கல்யாணம் பண்ணுவோம்ல... அப்புறம் பாருங்க உங்க கொள்ளுப் பேரனைவிட சூப்பரா ஒரு பொண்ணைப் பெத்து இந்த சின்னப் பயல என் மக பின்னாடி அலைய விடலை நான் மான்சியோட தம்பி பரசுராமன் இல்ல இல்ல இல்ல ” பரசு வீரவேசமா சவால் விட்டான் ... 



அந்த அறையில் சிரிப்பு சத்தம் அடங்க சற்றுநேரம் பிடித்தது... குழந்தை மறுபடியும் அழ ஆரம்பித்ததும்... அவர்களின் சிரிப்பு குறைந்து எல்லோரின் கவனமும் குழந்தையிடம் சென்றது...

குழந்தைக்கு பசியாற்ற வேண்டும் என்று எல்லோருக்கும் புரிய ஆண்கள் அனைவரும் வெளியேறினர்... ராஜி மான்சியை ஒருக்களித்துப் படுக்க வைத்து குழந்தைக்கு பால் கொடுக்க உதவினாள் ..




No comments:

Post a Comment