Thursday, January 14, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 29

பஸ்ஸில் ஏறியமர்ந்த பரசுவுக்கு தண்டபாணியின் மாற்றம் மனசுக்குள் கொஞ்சமாக நம்பிக்கையை விதைத்தது .... சீட்டில் படுத்து உறங்கும் வரதனை பார்க்கும் போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது ... தப்பு செய்துவிட்டு தப்பிக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் தப்புகான தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொண்டு இப்படி குத்துயிராக கிடக்கும் வரதனைப் போன்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இனி வரதனின் வாழ்வை மறு சீரமைக்கும் பொருப்பும் தனக்கிருப்பதை உணர்ந்தான் பரசு ....

அன்று நள்ளிரவுதான் பரசுவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் மூவரும்... வந்ததுமேவரதன் படுப்பதற்கு உதவி செய்தான் பரசு....

பரசுவின் குடிசை வீட்டில் வரதனை கவனமாகப் பார்த்துக்கொண்டனர் பரசுவும் அவன் பாட்டியும்... பரசு நடந்தவற்றை தனது பாட்டடிக்குப் புரியும் படியாக சொல்லியிருந்ததால்... பாட்டிக்கு வரதன் மீது அன்பு கலந்த பரிதாபம்...

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து வரதன் எழுந்து நன்றாக நடமாட ஆரம்பித்தான்... பரசுவின் கடையில வந்து அமர்ந்து அவன் கூட வியாபாரத்தை கவனித்தான்.. வரதனுக்கு ஆர்வம் தோட்டக்கலையில் தான் என்பதால் பரசுவின் தென்னந்தோப்பை அடிக்கடி சுற்றி வருவான்... பக்கத்து ஊர் சந்தைகளில் இருந்து விதைகள் வாங்கி வந்து குடிசைக்குப் பினனால் இருந்த காலியிடத்தில் தோட்டமிடுவதில் தனது கவனத்தை செலுத்தினான்...

அவனின் நடவடிக்கைகளை கவனித்த பரசு வரதனுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்....

ஆனால் வரதனின் முகத்தில் இருந்த சந்தோஷமும் அமைதியும் தொலைந்து போயிருந்தது... எப்போதும் ஒரு தேடல் அவன் பார்வையில்... தொலைந்து போன தனது நாணயத்தையும் நேர்மையையும் தேடுகிறான் போல?.....

வரதன் பரசுவிடம் வந்த பத்தாவது நாள் இருவரும் கடையில் அமர்ந்திருந்தனர்... பரசு மெல்ல பேச்சை ஆரம்பித்தான் “ அண்ணே எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் நேத்துதான் தகவல் சொன்னாரு... விழுப்புரத்துல நர்சரி வச்சிருந்த ஒருத்தருக்கு திடீர்னு வெளிநாட்டுல வேலை கிடைச்சதால தன்னோட நர்சரில இருக்கிற செடிகளை மொத்தமா வித்துடப் போறதா சொன்னார்.. அவருக்கு அவசரம்ங்கறதால நாம கேட்ட விலைக்கு குடுத்துடுவாராம்... நாம வேனா நாளைக்குப் போய் பார்ப்போம்... விலை படிஞ்சு வந்தா எல்லாத்தையும் ஒரு லாரில ஏத்திகிட்டு வந்து நம்ம தோப்புலயே ஒரு இடம் ஒதுக்கி நர்சரி வைக்கலாம்.... இது மெயின்ரோடுங்கதால போறவங்க வர்றவங்க பார்வையில் படும்படி வச்சோம்னா செடிகள் மேல ஆர்வம் உள்ளவங்க கண்டிப்பா வாங்கிட்டுப் போவாங்கண்ணே... நீங்க என்ன சொல்றீங்க” என்று பரசு கேட்க ..

வரதன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்... அவனுக்கும் புரிந்தது.. இனி வாழ வழி தேடவேண்டும் என்று... இத்தனை நாள் வேலை செய்து சம்பாதித்தது வரதனின் சேமிப்பாக கொஞ்சம் வங்கியில் இருந்தது... அதை மூலதனமாக வைத்து ஏதாவது சிறு தொழில் தொடங்க எண்ணியிருந்தான்... அவனுக்குப் பிடித்த தொழிளையே பரசுவும் சொன்னதும் அவன் முகத்தில் சிறிது மலர்ச்சி

“ சரி பரசு போய் பார்த்துட்டு வரலாம்...” என்றான்...

மறுநாள் அதி காலையே எழுந்து இருவரும் விழுப்புரம் சென்று அந்த நர்சரியைப் பார்த்தனர்... வரதனுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது... சில அபூர்வ ரக செடிகளும் கூட இருந்தது... அத்தனை செடிகளும் அதில் பூத்திருந்த மலர்களும் உனக்காக நாங்கள் இருக்கிறோம் என்று கூறுவது போல் இருந்தது.. வரதனின் நெஞ்சுக்குள் மீண்டும் ஈரமான நிலவு தோன்றி மறைந்தது...


நர்சரிக்கு சொந்தக்காரர் கூறிய விலை இருவருக்கும் ஒத்துக்கொள்ளும் படியாக இருக்கவே எடுத்துச் சென்ற பணத்தை கொடுத்துவிட்டு... மீதி பணம் நாளை வந்து கொடுத்து விட்டு செடிகளை ஏற்றிச் செல்வதாக கூறிவிட்டு உடனே வேப்பூர் கிளம்பி வந்தனர்...

பரசுவின் தோப்பில் மரங்கள் இல்லாத பகுதியை நர்சரிக்காக ஒதுக்கி அன்றே அதற்கான ஏற்பாட்டை செய்தனர்.... பரசு விற்பனைக்காக வைத்திருந்த தென்னங்கீற்றில் பந்தல் போட்டு இடம் தயாரனதும் மறுநாள் மீதம் கட்டவேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு போய் பணத்தை கட்டி செடிகளை லாரியில் ஏற்றி வந்தனர்.... 


அடுத்த ஒரு வாரமும் செடிகளை பராமரித்து பதப்படுத்தவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது .... இதுவே வரதனின் மனமாற்றத்திற்கு பெரிதும் உதவியது.... ஆனால் இளம் பிஞ்சு செடிகளைப் பார்க்கும் போது அனுவின் ஞாபகம் வந்து போவதை அவனால் தவிர்க்க முடியவில்லை... அனுவின் ஞாபகங்கள் அவன் மனதை அறிக்க ஆரம்பித்தது ...

அவளைத் தொட்டபோதே தன் மனதுக்குள் அவள் புகந்துவிட்டாள் என்று வரதன் உணர்ந்தேயிருந்தான்.... தன்னை அவமானப் படுத்திய. அவளை மானபங்கம் செய்யவேண்டும் என்று ஆரம்பித்து அவளிடம் தன் மனதை பறிகொடுத்துவிட்டதையும் வரதன் உணர்ந்தேயிருந்தான்...

ஆனால் தன்னுடைய காதலை அவனாலேயே ஒத்துக்கொள்ள முடியவில்லை... அனுவை அவ்வளவு அவமானப்படுத்தியப் பிறகு அவளும் சரி ஊர் உலகமும் சரி இவன் நேசத்தை ஏற்றுகொள்ளாது என்று உறுதியாக நம்பினான்...

இரவு நேரத்தில் இறுதியாகப் பார்த்த. அவளின் கண்ணீர் முகம் இவனை சித்திரவதை செய்யும்போது அந்த நேரத்தில் எழுந்து தோட்டத்தில் வேலை செய்து தன் மன உலைச்சலைப் போக்க முயன்றான்...

அரைகுறை உடையணிந்து அலட்சியமாக பேசித் திரிந்த அனுவுக்குள் இப்படியொரு கற்ப்புடைய கன்னிப் பெண் இருப்பாள் என்பது வரதன் முற்றிலும் எதிர்பாராதது .... அது அவனுக்கு சந்தோஷத்தை கொடுப்பதைவிட வலியைதான் அதிகமாக கொடுத்தது ..... அவள் காத்து வந்த ஒன்றை தான் சூரையாடிவிட்ட வலி....

அவன் வளர்த்த செடிகளைப் போலவே அவன் காதலும் படிப்படியாக வளர்ந்தது ... எந்தவொரு சூழ்நிலையிலும் வெளியே சொல்லமுடியாத நேசம்... சொன்னால் பலரின் ஏளனத்திற்கு ஆளாகக்கூடிய நேசம்... அன்று அனுவைத் தொட்டபோது தனக்குள் துளிர்விட்ட நேசம் இன்னு வளர்ந்து மரமானாலும் அதன் கிளைகளை ஒடித்து தனக்குள் போட்டு புதைத்தான் வரதன் ..

“ காமத்திற்கு முன் வரும் காதல்....

“ மீண்டும் காத்தில் வந்து முடியலாம்!

“ காமத்திற்கு பின் வரும் காதல்...

“ காமத்தில் வந்து முடியாது!

“ உடலின் தேவைகள் தனிந்து.....

“ மனதின் தேவையை உணர்த்தும்.
....
“ காதல் காமத்திற்குப் பிறகுதான் துளிர்க்கும்!!



வரதன் தனது கவனத்தையும் ஏக்கத்தையும் தோட்டம் வளர்ப்பில் காட்ட அது நல்ல பலனளித்தது .... செடிகளின் மீது ஆசைப்பட்டவர்களின் வருகை அதிகமாகி வியாபாரம் பெருக நர்சரி நாளுக்கு நாள் பெரிதானது .... பக்கத்தில் இருந்த மற்றொருவரின் இடத்தையும் குத்தகைக்கு வாங்கி நர்சரியை விஸ்தாரமாக்கினார்கள் பரசுவும் வரதனும்....

வேப்பூருக்கு பக்கத்தில் ஒரு இஞ்சினியரிங் கல்லூரி தொடங்கி கட்டுமான வேலைகள் முடியும் தருவாயில் இருக்க... அந்த கல்லூரியில் தோட்டம் அமைக்கும் கான்ட்ராக்ட் ஒருவரின் சிபாரிசு மூலம் வரதன் பரசுவுக்கு கிடைத்தது . இருபது ஆட்களை வேலைக்கு நியமித்து தங்களின் உழைப்பையும் சேர்த்து செலவளித்தனர் இருவரும்... இரண்டே மாதத்தில் அவர்களின் உழைப்பிற்கான பலன் பலமடங்க லாபத்தை கொடுத்தது ...

பரசு அடிக்கடி மான்சிக்கு போன்செய்து நடந்தவற்றை பகிர்ந்து கொண்டாலும் வரதன் மான்சியுடன் பேசுவதற்கு அச்சப்பட்டு ஒதுங்கியே இருந்தான் ... மான்சியின் நலத்தையும் குழந்தையின் நலத்தையும் பரசுவிடம் கேட்டுத்தெரிந்து கொண்டான் ... சத்யனின் உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் விசாரித்துக் கொள்வான் ...

ஆனால் இருவருமே அறியவில்லை ... தங்களின் உயிர் சகோதரியின் வாழ்க்கை தங்களாலேயே அந்தரம் ஆகபோகிறது என்று.......


பரசுவிடம் பேசிய பிறகு ஓரளவுக்கு மனது சமாதானம் ஆன மான்சியின் கவனம் சத்யன் மீது திரும்பியது..... ஓரளவு மயக்கம் தெளிந்து விட்டவனை வெப்கேம் மூலமாக மான்சி பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் ராஜா...

அடுத்த இரண்டு நாட்களும் எந்த மாற்றமும் இன்றி சத்யன் உறங்குவஙதும் விழிப்பதுமாக இருந்தான்.... மூன்றாவது நாள் முனங்கலாக பேசியவன் நான்காம் நாள் ஓரளவு தெளிவாக சிறிதுநேரம் மான்சியிடம் பேசினான்..... மான்சிக்கு இமயத்தையே எட்டிப் பிடித்த சந்தோஷம்....

சத்யனின் பேச்சில் நிறைய தெளிவு வந்தது... மகனைப் பற்றி நிறைய பேசினான்... மான்சியிடம் தனது வலிகளை பகிர்ந்து கொண்டான்.... கட்டிலைவிட்டு எழும் நாளை எண்ணிக்கொண்டிருப்பதாக கூறியவனின் மனதை மான்சியால் புரிந்துகொள்ள முடிந்தது...

ஆனால் வீட்டில் நடந்த குழப்பங்கள் எதுவுமே லண்டனில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை... சத்யனை நார்மல் வார்டுக்கு மாற்றும் போது சொல்லிக்கொள்ளலாம் என்று பெரியவர் காத்திருந்தார்... ராஜாவிடம் கூட விஷயத்தை கூறவில்லை.. ஏதாவதொரு சூழ்நிலையில் அது சத்யனுக்குத் தெரிந்தால் முன்னேறி வரும் அவன் உடல்நிலையில் மாற்றம் வந்துவிடும் என்று பயந்தார்...

ஆறாவது நாள் சத்யனை எழுப்பி உட்கார வைத்ததும் தான் ராஜாவிடம் நடந்தவைகளை கூறினார்... ராஜாவால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை... அனு வரதனால் மானபங்கம் செய்யப்பட்டாள் என்பதே ரொம்ப கொடுமையாக இருந்தது என்றால் அதை ஊரைக்கூட்டி மகளின் வாழ்க்கையை ஏலம் போட்ட தண்டபாணி மற்றும் கோமதி செயல் அதைவிட கொடுமையாக இருந்தது... தன் மகன் மருமகளின் வாழ்க்கையில் வரதனை பொம்மையாக்கி அனு விளையாடினாள் என்றாலும் அதற்காக அனுவை தண்டிக்க வரதனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றே அவருக்கு தோன்றியது... பரசு வரதனை ஜாமீனில் எடுத்தான் என்றதும் ராஜாவுக்கு வருத்தமாக இருந்தது... இதை சத்ய் எப்பி ஏற்றுக்கொள்வான் என்று வேதனைப் பட்டார் ராஜா...

சத்யன் எழுந்து நடமாட ஆரம்பித்ததும் அவனிடம் சொல்லலாம் என்று அப்பாவும் மகனும் முடிவு செய்தனர்... ராஜியாலும் நடந்ததை மன்னிக்க முடியவில்லை.... அனு படங்களை அனுப்பினாலும் மான்சியை எல்லோரும் முழுதாக நம்பும் போது வரதன் செய்த இந்த செயல் கடும் பாதகமாக தோன்றியது... அதிலும் வரதனை பரசு ஜாமீனில் எடுத்தான் என்பதை கேள்விப் பட்டதும் முதன்முறையாக மாமியார் மருமகள் உறவில் விரிசல் விழுந்தது... அந்த விரிசலை பெரிதாக்கும் முயற்சியாக கோமதியும் போன் செய்து தன் மகளின் நிலையைப்பற்றி கூறியவள்... மான்சி பரசு வரதன் மூவரும் சேர்ந்து தங்களை திட்டமிட்டு வஞ்சித்து விட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டாள்..

“ நீங்க கவலை படாதீங்க அண்ணி சத்யன் எழுந்து நடமாடட்டும் அவன் கிட்ட சொல்லி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுறேன் ” என்ற கோபமான வார்த்தைகள்தான் ராஜியிடமிருந்து வந்தது....

கோமதி தினமும் போன் செய்து ராஜியிடம் சத்யனைப் பற்றி அக்கரையாக விசாரித்தாள்... தங்களிடம் இல்லாத வறுமையை இருப்பதாக காட்டிக்கொண்டாள்... ராஜியிடம் பரிதாபத்தை சம்பாதித்தாள்... ராஜியின் பேச்சால் ராஜாவுக்கு கூட வரதன் செய்தது இமாலயத் தவறாக தெரிந்தது... அதற்காக அவனை ஆதரித்த மான்சியும் பரசுவும் கூட குற்றவாளிகள் போல தெரிந்தனர்... மான்சிக்குத் தெரியாமலேயே அவளை வீழ்த்துவதற்கான வியூகம் அமைத்தாள் கோமதி... வாய்மையே வெல்லும் என்பது கோமதி விஷயத்தில் தவறாக வேலை செய்தது...


நாட்கள் ஓடியது சத்யன் எழுந்து அமர்ந்தான்... அடுத்த வாரம் எழுந்து நின்றான்... அதற்கு அடுத்த வாரம் மெல்ல அடியெடுத்து வைத்தான்... இரண்டி வைத்தது நான்கடி ஆனது... ஆப்ரேஷன் முடிந்த ஆறாவது வாரம் மருத்துவமனையின் காரிடரில் ப வடிவில் இருந்த கைத்தடியின் உதவியுடன் மெல்ல நடந்தான்... ஜெயிக்கவேண்டும் என்று சத்யனுக்குள் இருந்த வெறிதான் அவனை சீக்கிரத்திலேயே எழுந்து நடமாட வைத்தது இவை அனைத்தும் உடனுக்குடன் படம்பிடித்து வீட்டுக்கு அனுப்பினார் ராஜா...

மான்சியின் ஆனந்த கண்ணீர்தான் அத்தனைக்கும் பதில்.... சத்யனுடன் பேசிப் பேசியே தன் பொழுதை போக்கினாள்.... மகனின் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படவும்.. சத்யனின் உடல்நிலையில் ஏற்ப்பட்ட முன்னேற்றத்தை எண்ணி மகிழவுமே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது...

இரண்டு மாதம் முழுதாக ஓடியது.... மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் ஆகி வெளிவந்து சிறியதாக ஒரு வீட்டில் வந்து தங்கினார்கள்... பிஸியோதெரபிஸ்ட் மூலமாக சத்யனுக்கு முதுகை வளைக்கவும்.... நிமிரவும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது ...... வாரம் இருமுறை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டான்... பூரணமாக குணமடைந்ததும் இந்தியா திரும்புவது என்று முடிவு செய்யதான்... அங்கே போனதும் மான்சியுடன் வாழப்போகும் வாழ்க்கையில் வலியோ வேதனையோ குறுக்கே வரக்கூடாது என்பது அவன் எண்ணம்.... அதனால் அங்கேயே இருந்து ட்ரீட்மெண்ட்டை தொடர்ந்தான் சத்யன்....

அன்றும் அப்படித்தான்.... பிஸியோதெரபிஸ்ட் வந்து போனதும் சத்யனை விட்டுவிட்டு ராஜாவும் ராஜியும் பேரனுக்கு சில உடைகள் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டனர்... வீட்டுக்குள்ளேயே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவனை அழைத்தது ராஜியின் மொபைல்...

‘ ஓ அம்மா போனை விட்டுட்டு போய்ட்டாங்க போலருக்கு என்று எண்ணியபடி போனை எடுத்தவன் இந்தியாவில் இருந்து போன்கால் என்றதும் ஆன் செய்து காதில் வைத்து “ ஹலோ நான் சத்யன் பேசுறேன்..... அம்மா இல்லை வெளியேப் போயிருக்காங்க” என்றவனிடம் பேசியது கோமதி தான்...



முதலில் அவனைப்பற்றிய நலம் விசாரிப்பில் ஆரம்பித்து.... போகப்போக நடந்தவை எல்லாவற்றையும் இரண்டை நாலாக... நாலை எட்டாக ... எட்டை பதினாறாக... இட்டுக்கட்டி கண்ணீருடன் தனது விஷ குரலில் தேன் கலந்து சத்யனிடம் சொல்ல ஆரம்பித்தாள் கோமதி.....




" என் உயிரை நெய்யாக்கி .....

" அக்னியில் ஒரு வேள்வி செய்து....

" என் காதலுக்கு உரு கொடுத்தேன்....

" இன்று உன் அதிகாரமும் பிடிவாதமும் ...

" என் காதலை அழிக்க நினைத்தால் ...

" நான் அக்னியில் வீழ்ந்து ...

" என் காதலை புனரமைப்பேன் ..

" என்று மட்டும் எண்ணாதே......

" சூழ்சியால் நான் வீழ்ந்தாலும் ..

" பிடிவாதத்தால் நீ சாய்ந்தாலும் ...

" என் காதல் வேள்வி என்றும் தொடரும் !


No comments:

Post a Comment