Monday, January 18, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 33

சத்யன் மான்சியை தோளோடு அணைத்து வெளியே அழைத்து வந்தான்....மகனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி பரசுவிடம் கூறினான்... காரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வர ஏற்பாடு செய்தான்... மகனுக்கும் மனைவிக்கும் முத்தங்களை வாரியிரைத்து வழியணுப்பி வைத்தான்

வழக்கம்போல அனு அறைக்குள் முடங்கிக் கிடக்க.... கோமதியைத் தவிர மற்ற அத்தனை பேரின் கண்ணீர் கையசைப்புடன் மான்சி பரசுவுடன் கிளம்பினாள்

கோமதி மான்சி வெளியேறிய வெற்றிக் களிப்புடன் அனுவின் அறைக்குள் சென்று கட்டிலில் கிடந்த மகளின் அருகில் அமர்ந்து “ அனு கண்ணு அந்த மான்சி வீட்டை விட்டு போயிட்டா” என்று சந்தோஷமாக கூற.....

அனு திகைப்புடன் எழுந்து அமர்ந்து “ ஏன் போனாங்க?..... யார் அனுப்புனது?” என்று கேட்க...



“ சத்யனே தான் அனுப்பிட்டான்.... அவளோட தம்பி கூடவே..... அனு இதுதான் சரியான சந்தர்ப்பம்... அவ மறுபடியும் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது... உன் அத்தையை எப்படியாவது சரிகட்டி சத்யனுக்கு உன்னை ரெண்டாவதா கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்.... சத்யனும் இப்பல்லாம் உன் மேல பிரியமா இருக்கான்... அந்த மான்சியை வீட்டை விட்டு அனுப்புனதே உனக்காகதான் அனு... அதை சத்யன் வாயாலேயே சொன்னான்... அனும்மா இதுபோல படுத்து கிடக்காம ஆகவேண்டியத பாரும்மா” என்று நைசாக பேசினாள்..

அனுவிடம் ஏதாவது ஆயுதம் இருந்திருந்தால் கோமதியை அந்த இடத்திலேயே பிணமாக்கியிருப்பாள்.... ஆனால் இப்போது அதற்கேற்ற உடல்நிலையோ மனநிலையோ இல்லை... அதனால் அருவருப்பான ஒரு பார்வையை மட்டும் தன் தாய் மீது வீசிவிட்டு எழுந்து சத்யனின் அறைக்கு வந்தாள் ...

சத்யன் சோபாவில் அமர்ந்து தனது லேப்டாப்பில் சேகரித்து வைத்திருந்த மான்சி சுமேதன் இருவரின் படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்... கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அனுவை பார்த்ததும் சிறு புன்னகையுடன் “ வா அனு” என்று சற்று நகர்ந்து சோபாவில் அனு அமர இடம் ஒதுக்கினான்..

ஆனால் அனு அவனுக்கு எதிரேயிருந்த மேடாவில் அமர்ந்து “ மான்சி எங்க மாமா?” என்று கேட்க...

“ பரசு கூட அவன் வீட்டுக்கு அனுப்பிருக்கேன்....” என்றான்

“ எதுக்காக அனுப்பினீங்க?” அனுவின் கேள்வியில் கூர்மை..

“ நீ இந்த நிலைமையில் வீட்டில் இருக்குறப்ப மான்சி இங்க இருக்குறது சரியில்லை அனு..... ஏதோவொரு வகையில உன்னோட இந்த நிலைமைக்கு மான்சியும் ஒரு காரணமாயிட்டா... என் மனைவியை குற்றமற்றவளா நிருபிக்க உனக்கு ஒரு நல்லது நடந்தாதான் முடியும்.... அதான் அந்த நல்லது நடக்குற வரைக்கும் மான்சி அவளோட தம்பி வீட்டுலயே இருக்கட்டும்” சத்யனின் குரலில் உறுதி அனுவை கலவரப்படுத்தியது ...


“ நீங்க செய்தது சரியா மாமா? நான் ஏற்கனவே பண்ண கொடுமையால மான்சிக்கு கெட்டபெயர்.. இப்போ அந்த ஆள் இருக்கிற அதே இடத்துக்கு மான்சியை அனுப்பிருக்கீங்க... இதனால பிரச்சனைதான் அதிகமாகும்... எனக்கு நல்லது நடக்கனும்னு அவங்களை மேலும் கேவலப்படுத்துவது சரியில்ல மாமா” அனுவின் குரல் கண்ணீருடன் கலந்து வந்தது....

“ இல்ல அனு.... பரசு எடுத்த ஜாமீன்ல தான அவன் அங்க இருக்கான்... அவன் தப்பு பண்ணது மான்சிக்காகனும் போது இப்போ மான்சி தன்னாலதான் வாழாவெட்டியா வந்துருக்கான்னு தெரியும் போது அவன் என்ன செய்றான்னு பார்க்கனும்” சத்யன் ஆத்திரமாக கூற

அனு அவனை கூர்மையுடன் பார்த்து “ நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?” என கேட்டதும்..

பளிச்சென்று சிரித்த சத்யன் “ வேறன்ன அனு.... அவன் உண்மையான விசுவாசியா இருந்தா பரசு எடுத்திருக்கும் ஜாமீனை வாபஸ் பண்ணிட்டு கோர்ட்ல சரண்டர் ஆகனும்.... அதுக்கப்புறம் நான் யாருன்னு அவனுக்கு காட்டுறேன்” சத்யனின் கண்கள் ஜொலித்தன.....

“ ஓ...................” என்ற அனுவுக்குள் கலவரம் மூண்டது... சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தவள் எழுந்து கொண்டு “ சரி நான் என் ப்ரண்ட்ஸை பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்” என்று கூற..

“ ஆமா அனு போய்ட்டு வா... இப்படியே வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்காதே... உன்னோட இந்த அமைதி நல்லாருக்கு தான்... ஆனா இந்த சோகமான முகம் மாறனும் அனு... அதுக்கு அவன் நிரந்தரமா ஜெயிலுக்குப் போகனும்... அப்புறம் உனக்கு ஒரு நல்லவனாப் பார்த்து மேரேஜ் செய்து வைக்கனும்.. அதுதான் இப்போ எனக்கு முதல் வேலை.. அப்புறமாத்தான் மான்சியை கூட்டிட்டு வருவேன்” என சத்யன் தீர்மானமாக கூறியதும்...

அவனுக்கு ஒரு தலையசைப்பை மட்டுமே பதில் செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியவள் தனது அறைக்குச் சென்று குளித்து விட்டு ஒரு சுடிதாரை அணிந்தாள்... கூந்தலை வாரி கட்டியவள் கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்தாள்.... நான்கு மாதங்கள் முன்பு இவளை பார்த்தவர்கள் இப்போது பார்த்தாள் நிச்சயம் அடையாளம் தெரியாது... அவ்வளவு மாற்றங்கள்....

தனது கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் டைனிங் ஹால் சென்று அமர்ந்து முடிந்த வரை நன்றாக சாப்பிட்டாள்.... செய்யவேண்டிய காரியத்துக்கு நிறைய மனதிடமும் உடல் பலமும் தேவை அல்லவா? நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக சாப்பிட்டவளை மரகதம் ஆதரவோடு பார்த்து அருகிலிருந்து பரிமாறினாள்.... துளிப் புன்னகைக்கும் மரியாதையான வார்த்தைகளுக்கும் எவ்வளவு சக்தி என்று அனுவுக்கு நன்றாக புரிந்தது...

தோழிகளைப் பார்க்கப் போவதாக சொல்லிவிட்டு வெளியேறிய மகளை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் கோமதி... பரவாயில்லை நாம சொன்னத கரெக்டா புரிஞ்சிகிட்டாளே நம்ம மகள் என்ற நிம்மதி...

காரில் ஏறியமர்ந்த அனு டிரைவரிடம் “ அண்ணா திருமங்கலம் கார் ஸ்டான்டில் விடுங்க... நான் டாக்ஸி பிடிச்சு போயிக்கிறேன்” என்று கூற..


‘ஏய் டிரைவர்” என்று அலட்சியமாக கூப்பிடும் அனு முதன்முறையாக தன்னை அண்ணா என்று கூப்பிட்டதும் நெகிழ்ந்து போன டிரைவர் “ நீங்க எங்க போகனும்னு சொல்லுங்கம்மா? நானே கொண்டு போய் விடுறேன்” என்று நட்புடன் கூறினான்...

அனு பதில் சொல்லாமல் தயங்கியதும் டிரைவருக்கு எதுவோ புரிய “ நீங்க எங்க போனீங்கன்னு யார் கேட்டாலும் சொல்ல மாட்டேன்மா” என்று உத்திரவாதம் கொடுத்தான்...

சற்றுப் பொறுத்து “சரிங்கண்ணா.... மதுரை உத்தங்குடில ஐ கோர்ட் கிளைக்கு போகனும்ணா” என்று அனு மெல்லிய குரலில் கூற...

சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்த டிரைவர் முகம் பளிச்சிட “ சரிம்மா போகலாம்” என்றவன் எடுத்த எடுப்பிலேயே காரை விரட்டினான்.......

கோர்ட் வேலைகள் அனைத்தும் முடிந்து அன்று மாலை அனு சத்யன் பங்களாவுக்கு வரும்போது மணி ஏழு ஆகிவிட்டது .... உள்ளே நுழைந்தவளை முதலில் வரவேற்றது கோமதிதான் ...

முகம் கர்ண கொடூரமாய் இருக்கு " ஏன்டி மூதேவி ... எதுக்குடி கேஸை வாபஸ் வாங்கின? இதுக்குதான் அவ்வளவு அவசரமா போனீயா? வக்கீல் இப்பதான் போன் பண்ணி உங்க பொண்ணுக்கு லூசு பிடிச்சிருக்கு மொதல்ல நல்ல டாக்டரா பாருங்கனு சொல்லி காரித்துப்புறான் .... ஏன்டி இப்புடி பண்ண? " என்று கத்தியவளை அலட்சியம் செய்து டைனிங் ஹால் சென்று அமர்ந்தாள் அனு...

மரகதம் மலர்ந்த முகத்தை மறைக்க முயன்றபடி அனுவின் அருகில் வந்து நிற்க ... அனு சிறு புன்னகையுடன் ." பசிக்குது பாட்டிம்மா".... மதியம் சாப்பிடவேயில்லை... என்றதும் மரகதம் அவசரமாக இருந்த உணவை அனுவுக்கு பரிமாறினாள் .....

அனு சாப்பிட்டு வரும்போது மொத்த குடும்பமும் ஹாலில் கூடியிருந்தது .... அனு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தனது அறைக்கு சென்றுவிட ...

சற்று நேரத்தில் சத்யன் தான் ரொம்ப கோபமாக வந்து சேரில் அமர்ந்தான் ... அவனாக கேட்கும் முன் அனு அவனருகில் சென்று அமர்ந்து " உங்ககிட்ட சொல்லாம செய்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க மாமா .... எனக்கு வேற வழி தெரியலை.... நான் செய்த தப்புக்கு வரதன் எனக்கு தண்டனை கொடுத்தாச்சு.... ஆனா வரதன் செய்த தப்புக்கு ஒரு குடும்பமே பாதிக்கப்படுது மாமா.... மான்சி என்ன தப்பு செய்தா உங்களை விட்டு பிரிய? குழந்தை கூடதான் என்ன தவறு செஞ்சது உங்களை பிரிஞ்சிருக்க? நான் வரதனையும் மான்சியையும் போட்டுோஸ் எடுத்து அனுப்பும் போது அந்த படங்களைப் பார்த்து ஆப்ரேஷன் செய்யும் நேரத்துல நீங்க கோபம் அதிகமாகி சாகனும்.. அதை கேட்டு மான்சி இங்கே உயிரை விடனும்.. இதைதான் என் அம்மா சொன்னாங்க ... எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லைனாலும் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்யனும்ங்கறதுதான் என் குறிக்கோளா இருந்தது .... அப்படிப்பட்ட என்னையே ரெண்டு பேரும் மன்னிச்சிட்டீங்க... அதுக்கு நான் ஏதாவது பிராயிசித்தம் செய்ய வேனாமா மாமா? " அனுவின் குரலில் வேதனைதான் மிஞ்சியிருந்தது .




சத்யனின் கோபம் குறையாமல் " அதுக்காக அவனை கேஸ்ல இருந்து விடுவிக்கனுமா அனு? எனக்கு இதுல துளிகூட விருப்பம் இல்லை உன்னை கதற வச்சவனை இப்படி நிம்மதியா விடுறது எனக்கு இஷ்டமில்லை அனு... நீ இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை " வெறுப்புடன் பேசினான்

" இல்ல மாமா..... " அனு ஏதோ சொல்ல வந்து நிறுத்த...

" என்ன இல்லை ?" கோபமாக சத்யன் கேட்க...

சற்று நேரம் தலைகுனிந்து இருந்த அனு மெல்லிய விசும்பலுடன் .... அன்று வரதனுக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதம்.. அவன் லேப்டாப்பை உடைத்தது ... வரதனை தான் கன்னத்தில் அறைந்தது... என எல்லாவற்றையும் கண்ணீருடன் கூறியவள் " ஒரு பொண்ணோட மானத்தோட விளையாடின உனக்கு அதை இழந்தாதான் அதனுடைய அருமை புரியும்னு சொல்லித்தான் வரதன் என்னை நெருங்கினது என்ன கதற வைக்கனும்னு தான் நினைச்சான்... ஆனா அதை செய்ய அவனால முடியலை மாமா... அஞ்சு நிமிஷம் கூட என்னை சித்தயரவதை செய்ய அவனால முடியலை..." என்றவள் மீண்டும் அழ ஆரம்பிக்க...

சத்யன் புருவங்கள் நெறிபட " அப்படின்னா.....?" என்று கேள்வியில் முடிக்க ...

ஆமாம் என்பதுபோல மெல்லியதாக தலையசைத்து " அதுக்குப் பிறகு அவனோட ஒவ்வொரு செயல்லயும் எனக்கு வலிக்க கூடாதுனு நினைச்சான் ..... அவனோட செயல் கேவலமானதா இருந்தாலும் அதுல லவ் இருந்ததை என்னால உணர முடிஞ்சது மாமா... ஆனா அன்னைக்கு கேவலம் ஒரு வேலைக்காரன்ங்கற நினைப்பு என்னை ஆத்திரப்பட வச்சது... அவன் செயலை ஏத்துக்க முடியாம பண்ண வச்சது... " என்றவளை பாதியில் தடுத்த சத்யன் ...

" அப்படின்னா இன்னைக்கு? அவன் மேல உனக்கும் லவ் வந்துருச்சா?" என்று ஏளனமாக கேட்க..

அவனை நிமிர்ந்து பார்த்த அனு “ அவன் மேல லவ் வரலைனாலும் வேலைக்காரன் அப்படிங்குற நினைப்பு இல்லை மாமா... இன்னைக்கும் வரதனோட செயலை நான் ஏத்துக்கலை தான் ... ஆனா அன்னிக்கு இருந்த அனு இப்போ இல்லையே... இந்த அனு எல்லாத்தையும் ஏத்துகிட்டு தான் ஆகனும் ..... எனக்கு வேற வழியே தெரியலை .... ஏன்னா நான் இப்போ வரதனோட குழந்தைக்கு அம்மா " என்றவள் முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தாள்....

சத்யன் அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டான்.... " அனு இதையேன் முன்னாடியே சொல்லலை?" என்று கோபமாக கேட்க

வெடுக்கென்று நிமிர்ந்த அனு " சொல்லியிருந்தா??? சொல்லிருந்தா என் அம்மா உடனே கருவை கலைக்க ஏற்பாடு பண்ணிருப்பாங்க..... அதை என்னால ஒத்துக்க முடியாது .... நாங்க ஒட்டு மொத்தமா செய்த தப்புக்கெல்லாம் தண்டனை நான் ஒரு வேலைக்காரன் மூலமா கற்ப்பழிக்கப்பட்டு அவனோட குழந்தை என் வயித்துல வளர்றது தான் ... இதை நான் தண்டனையா நினைச்சுதான் சுமக்க ஆரம்பிச்சேன்... ஆனா இப்போ இதுதான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன் மாமா” என்று தன் வயிற்றில் கைவைத்து சொல்ல....


சத்யன் என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல் சோபாவில் தொப்பென்று அமர்ந்து தலையில் கைவைக்க...

அவன் காலருகில் அமர்ந்து “ மாமா என்னோட இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? மான்சி தான்... ஒரு பொண்ணு எப்படியிருக்கனும்னு எனக்கு கத்து கொடுத்தது மான்சி தான்... தன்னோட இணையை எப்படியிருந்தாலும் எந்த நிலைமையிலருந்தாலும் நேசிக்கனும்னு கத்துக் கொடுத்தது மான்சி தான்... குடும்பப்பெண் எப்படியிருக்கனும்னு அவளைப் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன்.... ஒரு பொண்ணு எப்படி வாழனும்ங்கறதுக்கு உதாரணம் மான்சி... ஒரு பொண்ணு எப்படி வாழக்கூடாதுங்கறதுக்கு உதாரணம் என் அம்மா... தவறான வளர்ப்பால் புத்தியை தவறா பயன்படுத்தி சீரழிஞ்சு போன நான் சரியான நேரத்துல உதாரணமா மான்சியை எடுத்துக்கிட்டதால இப்போ இவ்வளவு மாற்றங்கள்... நான் மான்சியை போல வாழ முடியாதுன்னாலும் அவள் காலடித்தடத்தை பின்பற்றி வாழ முயற்ச்சிக்கிறேன் மாமா....” அனுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்யனின் மூளைக்கு செல்லாமல் நேரடியாக இதயத்தில் விழ சத்யனின் இதயம் மான்சியின் மேல் உள்ள காதலால் விம்மியது... கர்வத்துடன் நிமிர்ந்தது....

மெல்ல எழுந்தவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் “ இதுபோல ஒரு குழப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை அனு.... யாருக்கும் சொல்லாம நீ இப்படி செய்தது உன்மேல கோபம் வந்தாலும்.. இப்போ அந்த கோபத்தை காட்டுற நிலைமையில நீ இல்லைனு புரியுது... நீ தூங்கி ரெஸ்ட் எடு... காலையில எல்லார்கிட்டயும் பக்குவமா இதைப் பத்தி சொல்லி என்ன செய்யலாம்னு முடிவு செய்றேன்” என்று கூறிவிட்டு கதவருகே சென்றவன் நின்று “ இது எத்தனாவது மாசம் அனு?” என்று கேட்க....

அனுவின் முகம் பட்டென்று சிவக்க தலைகுனிந்து “ அஞ்சாவது மாசம்” என்றாள்...

சத்யன் திகைப்புடன் மனசுக்குள் அவசரமாக கணக்கு போட்டு “ இவ்வளவு நாளா மறைச்சிருக்கியே அனு? உனக்கு ரொம்பத்தான் தைரியம்? ஆனா அனு அல்ட்ரா மார்டனா சுத்திகிட்டு இருந்த உனக்குள்ள இவ்வளவு மாற்றங்களை நான் எதிர்பார்க்கலை...” என்றான் .....

“ நானும்தான் உங்களோட மாற்றங்களை எதிர்பார்க்கலை? ஒன்றரை வருஷம் முன்னாடி இருந்த சத்யனுக்கும் இப்போ இருக்குற மாமாவுக்கும் பல ஆயிரம் வித்தியாசம் இருக்கு .. நீங்க திருந்தி வாழ ஒரு மான்சித் தேவைப்பட்டா.... நான் திருந்த ஒரு தோட்டக்காரன் தேவைப்பட்டிருக்கான்... என்ன அதுக்காக நீங்க குடுத்த விலை ஒன்றரை வருஷமா படுக்கையில் கிடந்தது... நான் குடுத்த விலை என்னோட மானம்” என்று அனு கூற....


சத்யன் புன்னகையுடன் கதவை திறந்துகொண்டு வெளியேறி தனது அறைக்கு சென்றான்... கோமதி தண்டபாணியை திட்டுவது காதில் கேட்டது... காலையில் இவர்களை எப்படி சமாளிப்பது என்று சிந்தனையும்.... இனி அனுவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற யோசனையும் அதிகமாக கிளர்ந்தது... எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு தூங்க முயன்றான்

மான்சி சென்று முழுதாக ஒருநாள் ஆகிவிட்டதை எண்ணியவன்... முதல்நாள் இரவு இதே நேரத்தில் உடைமாற்றும் தடுப்புக்கு பின்னால் கண்ட மான்சியின் உடல் பாகங்கள் அவன் தூக்கத்தை கெடுத்தது.... முத்தமிட நெருங்கும்போது விழிமூடி இதழ்களை பிளந்த மான்சியின் முகம் இம்சித்தது...

மான்சியுடன் இணையப்போகும் அந்த சுகமான தருணத்தை எண்ணியபடி மருந்துகளை உட்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தான்....

மறுநாள் காலை ராஜிதான் பதட்டத்துடன் வந்து அவனை எழுப்பினாள்.... சத்யன் தூக்கம் கலைந்த எரிச்சலுடன் “ என்னம்மா ?” என்று கேட்க...

“ அனுவை காணோம்டா சத்யா” என்றாள் ராஜி

சத்யனின் தூக்கம் முற்றிலும் கலைந்து போக.... “என்னம்மா சொல்றீங்க?” என்று திகைப்புடன் எழுந்து ஹாலுக்கு வந்தான்... மொத்த பேரும் ஹாலில் இருந்தனர்...

சோபாவில் கோமதி அதிர்ந்துபோய் அடிவாங்கிய முகத்துடன் அமர்ந்திருக்க... அவள் கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்தது.... தண்டபாணி தலையை கைகளில் தாங்கி அமர்ந்திருந்தார்.... அவர் தோள்கள் குலுங்குவதிலிருந்து அவரும் அழுகிறார் என்று புரிந்தது.... இருவரின் கையிலும் இரண்டு கடிதங்கள் காற்றில் படபடத்தது... சத்யன் வேகமாக இருவரின்கையிலிருந்த கடிதத்தையும் வாங்கி பார்வையை ஓட்டினான்....... 


அம்மாவுக்கு.....

எனக்கு இவ்வளவு ஆனப்பிறகும் நீ திருந்தலையே அம்மா? உன்னோட தவறான வளர்ப்பும் வழிகாட்டுதலும் தான் என்னோட இன்னைக்கு நிலைமைக்கு காரணம்...... சத்யன் என்னை தங்கை மாதிரின்னு சொன்னப் பிறகும் அவனுக்கும் எனக்கும் முடிச்சிட நினைக்குற நீ ஒரு அம்மாவான்னு கேட்கத் தோனுது... நான் எவ்வளவோ அல்ட்ரா மார்டனா சுத்தினாலும் எனக்குள்ள ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணு இருந்து என்னை பாதை மாறவிடாம என் மானத்தை காப்பாத்தி நல்ல வழியில் நடத்துவா.... என்னால அவளோட வார்த்தையை எந்த சூழ்நிலையிலும் மீற முடியாது.... அப்பல்லாம் இது எப்படினு யோசிப்பேன்... இப்பதான் புரியுது அது என் தகப்பன் வழியில் வந்த இயல்பான குணம்னு... மனுஷன் தவறலாம் தப்பு செய்யலாம்... ஆனா கடவுள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவன் திருந்த வாய்ப்பு குடுப்பாரு... அப்படியொரு சந்தர்பத்தை நம்ம மூனு பேருக்குமே கடவுள் கொடுத்தார்... நானும் அப்பாவும் அதை சரியாப் பயன்படுத்தி நேர் வழியில திரும்பிட்டோம்... ஆனா நீ திருந்தவும் இல்லை,, திரும்பவும் இல்லை... ஒரு தாயா நீ என்ன செய்திருக்கன்னு நல்லா யோசிச்சுப் பாரும்மா... வரதன் என்னை கற்பழிச்சிட்டான்னதும் அவனை பழிவாங்க துடிச்சயேத் தவிர பாதிக்கப்பட்ட என்னைப் பத்தி நீ யோசிக்கவே இல்லை.... நீயும் நானும் கடந்த அஞ்சு மாசமா ஒரே வீட்டுல தான் இருந்தோம்.. ஆனா வரதனால என் வயித்துல உருவான கருவைக் கூட உன்னால கண்டுபிடிக்க முடியலை... மகளின் சோர்வுக்கும் சோகத்துக்கும் காரணம் என்னன்னு ஒருநாளாவது என்கிட்ட கேட்டிருக்கியா அம்மா?.... என் வயித்துல இருக்குற வரதனோட குழந்தைக்கு முழுசா அஞ்சு மாசம் ஆச்சு... இதுலருந்து தெரியுதா நீ எப்படிப்பட்ட தாய்னு? உன் கவனம் முழுக்க அத்தையோட சொத்தை அடையனும்ங்கறதுல தான் இருந்ததே தவிர எனக்கு என்னாச்சு என்பதில் இல்லை..... சொத்துக்காக மேலும் மேலும் தப்பு செய்து என்னையும் தப்புக்கு தூண்டுற.... மகளை வசதியா வாழ வைக்க ஆசைப்படுவது பெத்தவங்க இயல்புதான்... அதுக்காக அந்த வசதியை வேதித்தனம் பண்ணி சம்பாதிக்கக்கூடாது.... என்னை தவறு செய்ய தூண்டுற உன்னைவிட... நான் செய்த தவறை எல்லார் முன்னாடியும் காட்டிக்குடுக்காம செய்த தவறுக்கு தண்டனையும் ஏத்துக்கிட்ட வரதன் எவ்வளவோ மேல்னு நான் நினைச்சதால இப்போ அவரைத் தேடிப் போய்கிட்டு இருக்கேன்... தண்டபாணி கோமதிக்கு மகளா இருக்குறதை விட ஏழையா இருந்தாலும் தன்மானத்தோட வாழ நினைக்கிற வரதனுக்கு மனைவியா இருக்கிறதை தான் விரும்புறேன்.... என்னால ஒரு ஏழை கூட வாழ முடியாதுன்னு நீங்க நினைக்கலாம்... நான் செய்த தவறை எல்லார்கிட்டயும் சொல்லி தப்பிக்க நினைக்காத வரதன் மனசால பெரிய பணக்காரன்... இந்த நாணயம் தான் நிரந்தரமானது.. நீங்க வச்சிருக்கிற நாணயம் நிரந்தரமில்லாதது.... திடீர்னு வரதன் மேல வந்த காதலால் நான் இப்படி பேசுறதா நினைக்காதே... இப்பவும் எனக்கு வரதன் மேல காதல் இல்லை... ஆனா காலப்போக்கில் காதல் வரும்னு நம்பித்தான் நான் போறேன்... வரதனோட நான் வாழப்போகும் வாழ்க்கை எனக்கு சந்தோஷமா இருக்குமா தெரியாது... ஆனா நிச்சயம் உனக்கு தண்டனையா இருக்கும்.... வரதனை அழிக்கனும்னு நீ நினைச்ச.... தன்னோட வலிகளையே உரமாக்கி வளர்ந்து நிக்கிற வரதனைப் பார்த்தாவது புரிஞ்சுக்க........ நாணயத்தைப் போலவே வாழ்க்கைக்கும் இரண்டு பக்கம் உண்டுன்னு........ இனிமேல் உன் பணமோ உன்னோட அறிவுரைகளோ எனக்கு தேவைப்படாது... மீண்டும் மான்சியோட வாழ்க்கையை நாசம் பண்ண முயற்ச்சிக்காதே... ஏன்னா பெத்தவங்க செய்யும் பாவம் பிள்ளைகளைத் தான் பேரும்னு சொல்வாங்க.... நீ செய்த பாவத்துக்காக ஏற்கனவே நான் பெரிசா இழந்துட்டேன்... இனி நீ பாவம் செய்தா இழப்பதற்கு என் உயிர்தான் இருக்கு... நான் வாழனும்னு ஆசைப்படுறேன் ...... அதனால தயவுசெஞ்சு திருந்திடும்மா



அப்பாவுக்கு ...

என்னை எப்படி எப்படியெல்லாமோ வாழ வைக்கனும்னு நீங்க கனவு கண்டீங்க... நானும் பெரிய பெரிய பணக்காரன்களோட தான் என் வாழ்க்கையை கற்பனை செய்து பார்த்தேன்... ஆனால் விதி ஒரு தோட்டக்காரன் தான் உங்களோட மருமகன்னு நிர்ணயம் பண்ணிடுச்சி.... என் வயித்துல வளர்ற அவன் வாரிசுதான் உங்களோட பேரன்னு கடவுள் முடிவு பண்ணிட்டார்.... எனக்கு விதிக்கப்பட்டதை நான் ஏத்துக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்... உங்களால முடிஞ்சா நீங்களும் அதையே ஏத்துக்க முயற்சி பண்ணுங்க...... என் மேல் உள்ள பாசத்தால ஏத்துக்க முயற்சி பண்ணுவீங்கன்னு நம்புறேன் அப்பா... நான் எங்க இருந்தால் எனக்கு கௌரவமோ அங்கப போறேன்பா.... என்னைத் தேடி வர்றதா இருந்தால் வரதனுக்கு மாமனாரா வாங்க... என்னோட அப்பாவா வரவே வராதீங்க... 

                         இப்படிக்கு உங்கள் மகள் அனுரேகா 

படித்து முடித்த சத்யன் கையிலிருந்த கடிதத்தை கோமதியின் முகத்தில் வீசியெறிந்தான்.... “ நான் செத்துப் போகனும் என் மனைவி செத்து போகனும்... இந்த சொத்து உங்க கைக்கு வரனும்னு அனுவை துருப்புச் சீட்டா பயண்படுத்தி வரதன் மான்சியை வச்சு நாடகம் ஆடுனீங்க... இன்னிக்கு அந்த நாடகம் உங்களுக்கு எதிராவே திரும்பிடுச்சு... சொத்து மட்டுமே குறிக்கோள்னு இருந்தீங்க.. அதனால தான் மகள் அஞ்சு மாசம் கர்பமாக இருந்ததை கூட கண்டுபிடிக்க முடியலை.... ச்சே உங்களை மாதிரி ஒரு பொம்பளையை நான் பார்த்ததேயில்லை...... அனு நல்ல பாடம் புகட்டிட்டு போய்ட்டா... இனிமேலாவது திருந்துங்க.... இல்லேன்னா எல்லாரும் சேர்ந்து திருந்த வைப்போம்” என்று மிரட்டலாக கூறிவிட்டு எல்லோருக்கும் கேட்கும்படி அனு தன்னிடம் இரவு பேசியதை கூறினான்....

தாத்தாவிடம் வந்தவன் “ காலையில எல்லார்கிட்டயும் பேசி ஒரு முடிவு செய்யலாம்னு அனு கிட்ட சொன்னேன்... ஆனா அவ அதுக்குள்ள அவசரப்பட்டு கிளம்பிட்டா இப்போ என்ன தாத்தா செய்றது? ” என்று கேட்க....

தாத்தா சற்றுநேர யோசனைக்குப்பின் “ அனு புத்திசாலிப் பொண்ணு... அவ அம்மாவுக்கு பயந்து தான் கிளம்பியிருப்பா... எங்க போகனுமோ அங்க போய்ட்டா.... இப்போ போன் பண்ணி எல்லாரையும் குழப்ப வேண்டாம்.. நைட்டு பரசுவுக்கு கால் பண்ணி என்ன ஏதுன்னு விசாரிச்சுக்கலாம்” என்றவர் தரையில் கிடந்த அனுவின் கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்து விட்டு “ என் பேத்தி அனுவை நெனைச்சு பெருமையா இருக்குடா சத்யா” என்று முதன்முறையாக பெரியவர் அனுவை தனது பேத்தியாக அறிவிக்க தண்டபாணி வேகமாக எழுந்து வந்து பெரியவரின் காலில் விழுந்தார்...

குனிந்த தண்டபாணியை தூக்கிய பெரியவர் “ மாப்ளே நீ ஏன்டா கலங்குற? அருமையான குணவதிடா உன் மக... எவ்வளவு தெளிவா முடிவு பண்ணிருக்காப் பாரு” என்று பெருமையாக கூறிவிட்டு தண்டபாணியை அணைத்துக்கொண்டார்...

தன் மகன் மருமகள் உயிருக்கே உலைவைக்கும் வேலையை கோமதி செய்தாள் என்றதும் ராஜாவும் ராஜியும் கோமதியை அருவருப்புடன் நோக்க... அதைத் தாங்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு கதறினாள் கோமதி... மகளின் வார்த்தைகள் நெஞ்சில் இடியாக இறங்கியிருக்க.. கண்களில் கண்ணீர் மழையாக பொழிந்தது அவள் மாசுகளை கழுவியது....


பரசுவும் மான்சியும் வேப்பூர் சென்று தோப்பு வீட்டுக்குள் நுழையும்போது மதியம் மணி இரண்டு...... வரதன் சாப்பிட்டுக்கொண்டு இருக்க பாட்டி எதிரில் அமர்ந்து பரிமாறிக்கொண்டிருந்தார்....

வரதன் சாதத்தை வாயில் வைத்தபடி நிமிர அவன் எதிரில் பரசுவும் மான்சியும்.... அதிர்ந்துபோய் சோற்றை தொண்டை அடைக்க விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் பார்த்தான்... பரசு இன்று வருவான் என்று தெரியும்... ஆனால் மான்சிம்மா? அதுவும் சின்னய்யா வந்து ஒருநாள் கூட ஆகலையே? ஏதோ விபரீதம் என்று புரிந்தது...

பாதி சாப்பாட்டில் கைகழுவிவிட்டு எழுந்தவன்... மான்சியை நேருக்குநேர் பார்க்க அஞ்சி “ வாங்கம்மா... சின்னய்யா நல்லாருக்காறா?” என்று சன்னமான குரலில் கேட்க..

மான்சி தன் கையிலிருந்த குழந்தையை வரதனுக்கு நேராக நீட்டி “ உன் மருமகன் எப்படியிருக்கான்னு கேட்கவேயில்லையே அண்ணா?” என்றாள்..

அவ்வளவுதான் உடைந்து போனான் வரதன் சட்டென்று மண்டியிட்டு முகத்தை மூடிக்கொண்டவன் “ இந்த பாவியை மன்னிச்சிடுங்க.... ஆத்திரத்துல அறிவிழந்து நான் பண்ண கொடுமையால இப்போ எவ்வளவு சிக்கல்... எல்லாம் என்னாலதான்” என்று தலையிலடித்துக் கொண்டவனை தடுத்தான் பரசு

“ நடந்தது நடந்து போச்சு... இனிமே அதை பத்தி பேசி பிரயோசனம் இல்லை... இப்போ ஆகவேண்டியதை தான் பார்க்கனும் அண்ணே” என்று சமாதானம் செய்தான்...

வரதன் வேதனையுடன் மான்சியைப் பார்த்து “ இப்போ நீங்க ஏன்மா வந்தீங்க? சின்னய்யா வந்து ஒருநாள் கூட ஆகலையே....” என்றவன் சட்டென்று நிதானித்து “ சின்னய்யாவே அனுப்பி வச்சிட்டாரா?” என்று கூர்மையுடன் கேட்க..

மான்சி கண்ணீருடன் ஆம்மென்று தலையசைத்தாள்.... சத்யன் வந்த பிறகு நடந்தது அத்தனையையும் நிதானமாக பரசு கூற.....

“ அய்யோ ... எல்லாம் என்னால தான்... நானே என் தங்கச்சி வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேனே.... என்னோட ஆத்திரத்தால எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்..... நான் ஏன்தான் இன்னும் உயிரோட இருக்கேன்னு தெரியலையே? ” என்று வரதன் தலையிலடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தான்..

அவன் கண்ணீர்ப் பார்த்து மான்சிக்கு தன் துயரம் மறந்தது... வரதன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து “ அழாதீங்க அண்ணா... அவரால என்னை விட்டுட்டு இருக்க முடியாது... சீக்கிரமே வந்து கூட்டிட்டுப் போயிடுவார்... நீங்க அதையே நெனைச்சு வேதனை படாதீங்க அண்ணா” என்று ஆறுதல்படுத்த முயன்றாள் 


வரதன் சமாதானம் ஆக நீண்ட நேரம் ஆனது.... அன்று இரவு உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் நர்சரிக்கு சென்றவன் தோட்டம் முழுவதும் யோசனையுடன் சுற்றி வந்தான்.... நிலவு நன்றாக காய்ந்தது... மலர்ந்து சிரித்த பூக்கள் அத்தனையும் அவன் சோகத்தை போக்க முயன்றன...

சத்யன் ஏன் மான்சியை அனுப்பினான் என்று அவனுக்கு தெளிவாகப் புரிந்தது.... நடந்ததுக்கு பழிவாங்க என்னை தேடாமல்.... நானே அவர்களிடம் சென்று சரணடையும் யுக்தியும் புரிந்தது

வெகுநேரம் நடை பயின்றவன் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக தலைசைத்தபடி தோட்டத்தின் ஓரமாக ஆலோபிளாக் சிமிண்ட் கற்கள் வைத்து கட்டப்பட்ட தனது அறைக்குள் சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டான்.....

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தோட்டத்து கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு பரசுவின் தோப்புக்கு வந்து வீட்டு திண்ணையில் படுத்திருந்த பரசுவை தட்டியெழுப்ப... பரசு உடனே எழுந்து கொண்டான் ..

அந்த நேரத்தில் வரதனை எதிர் பார்க்காமல் “ என்னண்ணே இந்த நேரத்துல?” என்று கேட்க...

திண்ணையின் ஒரம் அமர்ந்த வரதன் “ பரசு நர்சரி பொறுப்பை எல்லாம் கவனமா பார்த்துக்க... செடிகளை எப்படி பராமரிக்கிறதுனு உனக்கு தெரியும்ல.. அதே போல பார்த்துக்க... கூட ஆள் வச்சுக்க பரசு” என்றதும்..

கலவரத்துடன் அவனை ஏறிட்ட பரசு “ நீங்க எங்கண்ணே போறீங்க?” என்று கேட்க....

“ நான் ஜாமீனை கேன்சல் பண்ணிட்டு கோர்ட்ல ஆஜராகப் போறேன்... உடனே என்னை ரிமாண்ட் பண்ணிடுவாங்க... அதோட தண்டனை காலம் முடிஞ்சுதான் நான் வரமுடியும் பரசு...” வரதன் நிதானமாக கூறினான்....

சட்டென்று கோபமான பரசு “ அண்ணே உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இரண்டாவது முறை ஜாமீன் கிடைக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்... எதிர் பார்ட்டி வந்து ஆஜராகி எதிர்ப்பு தெரிவிக்காததால உங்களுக்கு இரண்டாவது முறையும் ஜாமீன் கிடைச்சது... இப்போ அதை நீங்களே நாசம் பண்ணப் போறீங்களா?” என்று சற்று கோபமாக கத்திவிட.. வீட்டுக்குள் இருந்து மான்சி கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்...

“ முட்டாள்தனமா பேசாத பரசு இப்போ எனக்கு ஜாமீன் முக்கியமில்லை... நம்ம மான்சியோட வாழ்க்கை தான்் முக்கியம்” என்றான் வரதன் 


பரசு அக்காவை கண்டதும் “ அக்கா இந்த அண்ணன் சொல்றதை பாரு?... ஜாமீனை கேன்சல் பண்ணிட்டு கோர்ட்ல ஆஜராகப்போறாறாம்... இரண்டாவது முறை ஜாமீன்ல எடுக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று பரசு கூற..

மான்சி பரசுக்கு பதில் கூறவில்லை... வரதனை அமைதியாகப் பார்த்தாள்... வரதன் இதைத்தான் செய்வான் என்று அவள் முன்பே யூகித்தது தான்... வரதன் விஷயத்தில் சத்யனின் கணக்கு தப்பவில்லை... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல்...

“ தப்பு செய்தது அண்ணனாகவே இருந்தாலும் தண்டனை தப்பாது பரசு.... விடு அவர் போகட்டும்....” என்றாள் தீர்மானமாக..

பரசு திகைப்புடன் பார்க்க... வரதன் மான்சியை கைகூப்பி வணங்கி “ என்னை மன்னிச்சிடுங்கம்மா... குழந்தையை ஜாக்கிரதையாப் பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென்று நடந்தான்...



வரதன் மதுரை கோர்ட்டுக்கு வந்தபோது காலை ஒன்பதரை ஆகியிருந்தது... கோர்டில் தனது வக்கீலின் அலுவலகத்தை தேடிச்சென்ற போது அது பூட்டியிருக்க... தனது செல்லில் இருந்து வக்கீலின் நம்பருக்கு அழைத்தான்.... வக்கீல் எடுக்கவில்லை அவரது ஜூனியர் தான் எடுத்து யாரென்று விசாரித்தார்..

வரதன் தான் வந்திருக்கும் விபரம் சொன்னதும்... எதிர்முனையில் இருந்த ஆள் எரிச்சலுடன் கத்த ஆரம்பித்தான் “ யோவ் எதிர் பார்ட்டிகிட்ட சமாதானமா போறதா இருந்தா முன்னாடியே எங்களுக்கு தகவல் சொல்றதில்லையா? நேத்து எதிர் பார்ட்டி வந்து பொசுக்குன்னு கேஸை வாபஸ் வாங்கிட்டு போயிடுச்சு... நீ என்னடான்னா நான் சரண்டர் ஆகப்போறேன் ஜாமீனை கேன்சல் பண்ணுன்னு சொல்ற... ரெண்டு தரப்பும் என்னை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே?” என்று கேட்டான்... அவனுக்கு வருமானம் போய்விட்ட ஆத்திரம்

வரதன் குழம்பிப் போனான்... “ என்னது கேஸை வாபஸ் வாங்கிட்டாங்களா? யார் வாங்கினது?” என்று கேட்க.....

“ யோவ் மொதல்ல கேஸ்கான பணத்தை செட்டில் பண்ணு .. அப்புறமா போய் எதிர் பார்ட்டிகிட்டயே என்னா ஏதுன்னு நேரடியா கேட்டு தெரிஞ்சுக்க” என்று எரிந்து விழுந்தான் ஜூனியர்.....

வரதனுக்கு அவனது கவலை புரிய “ சார் நான் பணம் ஏதும் கொண்டு வரலை... ஊருக்குப்போய் தம்பிகிட்ட பணம் வாங்கிட்டு வந்து தர்றேன் சார்” என்று சமாதானம் செய்து போனை வைத்தான்.....

கோர்ட் சம்பிரதாயங்கள் முடிந்து மீண்டும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தான்... அவனுக்கு இருந்த குழப்பத்தில் பரசுக்கு போன் செய்து தகவல் சொல்லவேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் திகைப்புடனேயே பயணம் செய்தான்.. 





No comments:

Post a Comment