Wednesday, January 6, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 10

மான்சியின் மணிக்கட்டு கன்றி சிவந்தது.. மான்சி வலியை தாங்கிக்கொண்டாள்.... சத்யனின் தூசித்த அனுவை துவசம் செய்யவேண்டும் என்று ஆத்திரம் வந்தாலும் அடக்கிக் கொண்டு “ தாத்தா இவருக்கு சாப்பாட்டுக்கு நேரமாச்சு.. இவரை கூட்டிட்டுப் போகட்டும்.... கையெழுத்தெல்லாம் மாடி ரூம்க்கு போய் வாங்கிக்கலாம்” என்று மெல்லிய குரலில் மான்சி கூறியதும்...
“ பாருடா வருங்கால புருஷனை சொன்னதும் பிச்சைக்கார மேடத்துக்கு கோவம் வருது போலருக்கு?” என்று கேலி பேசும் அனுரேகாவுக்கு இவ்வளவு அழகாக இருக்கும் மான்சி தானாக முன்வந்து சத்யனை திருமணம் செய்துகொள்வதால் வந்த பொறாமை.....

அனுவின் அருகில் சென்ற ராஜி...“ ஏய் அனு என்னடி நானு பார்த்துக்கிட்டே இருக்கேன் வார்த்தைகள் வரம்பு மீறுது?” என்றவள் பொதுவாக திரும்பி நின்று சற்று உரத்த குரலில் “ இது எங்களோட சொத்துக்கள்.. இதை யாருக்கு வேனும்னாலும் கொடுப்போம்... சத்யன் எங்க பிள்ளை... அவனுக்கு யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்குத் தெரியும்...

இனி இந்த வீட்டுல யாரும் இதைப்பற்றி பேசக்கூடாது... அப்படி எங்க நடவடிக்கைகள் பிடிக்காதவங்க இங்கேருந்து தாராளமா போகலாம்.... நான் தடுக்கமாட்டேன்” என்றாள்....

சொக்கலிங்கம் மருமகளைப் பெருமையுடன் பார்க்க.... “ லாயர் சார் சத்யன் எந்த இடத்தில் எல்லாம் சைன் போடனுமோ அங்கெல்லாம் வாங்கிகிட்டு அவனை அனுப்புங்க” என்று பழைய ராஜியாக வக்கீலை அதட்டியதும்.... அவர் டாக்குமெண்ட்களை எடுத்துக்கொண்டு அவசரமாக சத்யனை நெருங்கினார்...

பற்றியிருந்த மான்சியின் கையை விட்டுவிட்டு அவர் காட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்ட சத்யன் இறுதி கையெழுத்துப் போடுவதற்கு முன்பு வக்கீலை நிமிர்ந்து பார்த்து “ இந்த சொத்துக்களோட மொத்த மதிப்பு எவ்வளவு இருக்கும் அங்கிள்?” என்று கூர்மையுடன் கேட்டான்...

“ மான்சியின் பெயருக்கு மாற்றும் சொத்துக்களின் மதிப்பு மொத்தம் கிட்டத்தட்ட ஏழரைக்கோடி ஆகிறது சத்யன்” என்றார்

“ ஓஓஓஓ..................” என்று ஆச்சர்யமாக கூறியவன் பக்கத்தில் இருந்த மான்சியைப் பார்த்து “ ம்ம் பெரிய கோடீஸ்வரி ஆகிட்ட... வாழ்த்துக்கள் மான்சி ” என்றவனின் வாழ்த்தில் உயிர் இல்லை என்பதை மான்சி உற்று கவனித்தாள்....

சத்யன் கையெழுத்துப் போட்டதும் சத்யனைத் தள்ளிக்கொண்டு வேலு புறப்பட... “ எனக்கு சாப்பாடு நீ எடுத்துட்டு வா மான்சி” என்றான் சத்யன்

ராஜியும் கையெழுத்துப் போட்டதும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பிய வக்கீல் “ சத்யன் மான்சி மேரேஜ் ரிஜிஸ்டர் ஆனதும் இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் ரிஜிஸ்டர் பண்ணிடுறேன் சார்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.....

ராஜியும் மான்சியும் சத்யனுக்கான உணவுகளை எடுத்து வைக்க செல்ல... ராஜா வக்கீலை அனுப்ப வாசல் வரை சென்றார்... அனு தனது ஹீல்ஸ் சத்தமிட தோழிகளைப் பார்க்க என்று வெளியே கிளம்பினாள்...

தண்டபாணியும் அவர் மனைவியும் அப்படியே அமர்ந்திருக்க... சொக்கலிங்கம் அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து “ என்ன தண்டபாணி இன்னும் இங்கயே இருக்க? பொட்டி படுக்கையை கட்டிக்கிட்டு கிளம்பலையா?” என்று நக்கலாய் கேட்க...


விரைப்புடன் நிமிர்ந்த தண்டபாணி “ என்ன மாமா என் தங்கச்சியவே எனக்கெதிரா திருப்பிட்ட சந்தோஷமா? நாங்க ஏன் போகனும்... இது என் தங்கச்சியோட சொத்து.... நீங்க என் தங்கச்சியை ஏமாத்தி அந்த பிச்சைகாரிக்கு எழுதிட்டீங்க.... ஆனா ... பார்க்கலாம் மாமா இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு...” என்றவன் மனைவியிடம் திரும்பி “ எழுந்திரு கோமூ நம்ம ரூமுக்கு போகலாம்” என்று மனைவியை அழைத்துக்கொண்டு அவர்களின் அறைக்கு சென்றார்கள்...

அவர்களையே யோசனையுடன் பார்த்தார் பெரியவர்...... இவர்களால் மான்சிக்கு ந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டுமே’ என்ற புதிய கவலையொன்று அவர் மனதில் வந்தமர்ந்தது

சத்யனுக்கன உணவை எடுத்து வைத்த ராஜி “ மான்சி நீ எடுத்துட்டு போறியா? சத்யன் உன்னை எடுத்துட்டு வரச் சொன்னானே ” என்று கேட்க....

ஒரு நிமிடம் கண்மூடித்திறந்த மான்சி குரலில் உறுதியுடன் “ இல்ல அத்தை கல்யாணம் நடக்கும் வரை அவர் ரூமுக்குப் போய் பார்க்கிறதில்லைனு முடிவுப் பண்ணிருக்கேன்.... அவர்கிட்டயும் சொல்லிடுங்க....” என்றாள்....

ராஜி மறுத்து பேசாமல் மான்சியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மரகதத்துடன் உணவை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள்....

கையில் உணவுடன் வந்த அம்மாவைப் பார்த்த சத்யன் “ நான் மான்சியை கொண்டு வரச் சொன்னேனே?” என்று கடுமையான குரலில் கேட்டான்....

மகனைப் பார்த்து புன்னகைத்த ராஜி “ மேரேஜ்க்குப் பிறகுதான் இந்த ரூமுக்குள்ள வருவேன்னு சொல்லிட்டா அப்பு.... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க அப்பு... அப்புறம் மான்சி இந்த ரூம்லயே தான் இருப்பா” என்று மகனை ஆறுதல்படுத்தும் நோக்கில் ராஜி கூறினாள்...

சத்யனுக்குள் ஏதோவொன்று புகைந்தது..... மான்சிக்கு தான் இட்ட முதல் உத்தரவே பிசுபிசுத்துப் போன புகைச்சல் உள்ளுக்குள் மெல்ல கிளம்பியது.... இது அலட்சியமா? வெட்கமா?..... எதுவாயிருந்தாலும் என் வார்த்தை மதிக்கப்பட வில்லை..... தனது முதல் உத்தரவு அவளது காதுகளில் விழுவதற்கு பதிலாக காலில் விழுந்து மிதிப்பட்டதாய் எண்ணினான்

.... எப்போதுமே புகைச்சலை விசிற விசிற அது கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பாக பற்றிக்கொள்ளும்....




“ அவமானம் ஒரு தீ...

“ அதை அணையவிடக் கூடாது!


“ அவமானம் ஒரு உளி...

“ அது நம்மையே செதுக்கும்!


“ அவமானத்தைப் போற்ற வேண்டும்....

“ அது லட்சியத்தின் உந்து சக்தி!


“ அவமானத்தை சேமிக்க வேண்டும்...

“ அது நமது கனவுகளில் சிறகுகள்!


“ அவமானத்தை பொறுத்துக்கொண்டு

“ வாழ்வதை விட...

“ பொத்துக்கொண்டு வெளியே வந்தால்...

“ உணர்ச்சிகளின் விதை வெடிக்கும்! 



மான்சி சத்யன் சாப்பிட்டுவிட்டான் என்று தெரிந்த பிறகு மதிய உணவை முடித்துக்கொண்டு தோட்டத்துப் பக்கமாக நடந்தாள்.... அவள் சிந்தனை எல்லாம் கையெழுத்துப் போடும்போது சத்யன் பார்த்த பார்வையிலும் அவன் கூறிய போலியான வாழ்த்திலுமே இருந்தது .....

சத்யன் அந்த சமயத்தில் என்ன நினைத்திருப்பான் என்று மான்சிக்கு தெளிவாக புரிந்தது... ‘ இந்த சொத்தும் பணமும் தான் இந்த திருமணத்திற்கு என்னை சம்மதிக்க வைத்திருக்கும் என்று எண்ணியிருப்பான்’ முதல் பார்வையிலேயே என்னை தனது தேவைக்காக அழைத்தவன் தானே? இப்போதும் அவன் எண்ணங்கள் தவறாகத்தான் இருக்கும் என்று விரக்தியாக எண்ணினாள்.....

என் மனம் அவனுக்கு எங்கே புரியப் போகிறது?’ என வேதனையோடு நினைக்கும் போதே “ புரியவைப்பேன் ” என்ற வைராக்கியமும் நெஞ்சில் கிளர்ந்தெழுந்தது.... அதுவரை சோர்வுடன் நடந்தவளை அந்த வைராக்கியம் நிமிரவைத்தது

வீட்டின் செயற்கை அருவியின் எதிரில் இருந்த சிறு மூங்கில் பாலத்தின் மீது சுற்றியிருந்த மலர் கொடிகளை அழகாக கத்தரித்து ஒழுங்காக சரியவிட்டுக் கொண்டிருந்தான்...

மான்சி மெல்ல பாலத்தின் மீது ஏறிநின்று கொட்டும் அருவியை ரசித்துவிட்டு செடிகளை ஒழுங்குப்படுத்திய வரதனின் பக்கம் திரும்பிப் பார்த்தாள்... எப்போதும் பார்த்தவுடன் பளிச்சென்று சிரித்து ஏதாவது பேசும் வரதன் இவள் பக்கமே திரும்பாமல் வேலை செய்துகொண்டிருந்தான்

என்னாச்சு இவருக்கு? மான்சிக்கு குழப்பமாக இருந்தது.. அவனிடமே கேட்டாள் “ என்ன அண்ணா டல்லா இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது முடியலையா?”...
வரதனிடம் பதில் இல்லை... வேலையில் கவனமாக இருப்பது போல் காட்டிக்கொண்டிருந்தான்..... அவன் முகம் இறுகிப் போயிருந்தது...

மான்சி எட்டி அவன் கையிலிருந்த கத்திரியைப் பிடுங்கிக்கொண்டு “ கோவம் என்மேல தான? அதுக்கு ஏன் செடியை தாறுமாறா கட்ப் பண்றீங்க?” என்றவள் அவன் வேகமாக கீழே இறங்கியதும் மான்சியும் பின்னோடு இறங்கி “ சொல்லுங்கண்ணா? என்ன கோவம்?” என்று அவன் முன்னால் நின்று கேட்க...

வரதன் தனது நேர்ப்பார்வையுடன் அவளைப்பார்த்து “ நீங்க எதுக்காக சின்னய்யாவை கல்யாணம் செய்துக்கப் போறீங்க?” என்று கேட்க...

அவனை குழப்பத்தோடுப் பார்த்து “ அவரை பிடிச்சிருக்கு அதான்” என்றாள்

“ ஏன்மா அவரை பிடிச்சிருக்குன்னு சொல்றீங்க..... ஆனா அந்த அசிங்கம் பிடிச்ச நாய் சின்னய்யாவை அவ்வளவு கேவலமா பேசுச்சு... அதுக்கு உங்கத் தரப்புல எந்த ரியாக்ஷனையும் காணோமே... இப்பவே இன்னொருத்தியோட வார்த்தைக்கு எங்க சின்னய்யாவோட மரியாதை விட்டுத் தர்றீங்களே.... நீங்க எப்படி காலம்பூராவும் அவரோட மரியாதையை காப்பாத்தப் போறீங்க?” வரதன் வார்த்தை சூடு மான்சியின் காதுகளை சிவக்க வைத்தது...

ஒரு நீண்ட நிம்மதி மூச்சை விட்ட மான்சி அவனையே உற்றுப் பார்த்துவிட்டு “ ஓகோ அண்ணாத்தேக்கு இதுதான் கோபமா? ” என்று மெல்ல இதழ் விரித்தவள் “ ஏன் அண்ணா நான் வந்து பத்து நாள் ஆகுது... ஆனா அனுரேகா அத்தையோட அண்ணன் மகள்... பிறக்கும்போதே உங்க சின்னராசாவை பேசும் உரிமையோடு பிறந்தவள்... அவளை நேத்து வந்த நான் எதிர்ப்பது அத்தைக்கு தான் அவமானம்... அதோட அத்தை அவங்களை அதட்டி பேசும்போது அதுவும் தாத்தா, பெரியய்யா இவங்கல்லாம் இருக்கும்போது நானும் பேசினா அது அவங்களுக்குதான் ரொம்ப மரியாதை குறைவு அண்ணா.. இவங்களுக்கு வார்த்தையால பதில் சொல்வதை விட நாங்க வாழ்ந்து காட்டுறது தான் சரின்னு தோனுச்சு அதான் நான் எதுவுமே பேசலை” என்று தனது நிலையை தெளிவாக எடுத்து சொன்னாள் மான்சி ...

வரதனின் முகம் மலர்ந்த விதத்தில் இருந்தே மான்சியின் பதில் அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது என்று புரிய........ சிரித்தபடி “ என்னண்ணா அனுவை போய் நாய் அது இதுன்னு சொல்றீங்க? அவ சின்னப் பொண்ணு அண்ணா... பணத்துலயே பிறந்து வளர்ந்தவ... அவளோட பேச்சு அப்படித்தான் இருக்கும்.... அதையெல்லாம் பெரிசா எடுத்துக்க கூடாதுன்னா.... நீங்க பேசினது அவ காதுல விழுந்தா வீன் பிரச்சனைதான்” என்று மான்சி சொல்ல...


வரதனின் முகம் சட்டென்று மாறியது “ அவளுக்கு என்ன மரியாதை.... நான் இங்க வேலை செய்றது பெரியவர் ஒருத்தருக்காக தான்... அவர் மட்டும் இல்லேன்னா அடுத்த நிமிஷம் இங்கிருந்து போயிடுவேன்” என்றான்
மான்சி வேறு எதுவும் கேட்கவில்லை.. அமைதியாக அவனுடன் நடந்தபடி... சில செடிகளை இடம் மாற்றி வைக்கும் யோசனையை சொன்னபடி வந்தாள்... இருவரும் சேர்ந்து தொட்டிகளை தூக்கி வரிசை மாற்றி அடுக்கினார்...

பேச்சுவாக்கில் வரதன் ப்ளஸ்டூ முடித்து இரண்டு வருடம் தோட்டக்கலைப் பயிற்சி பெற்றவன் என்றதும் மான்சிக்கு ஆச்சர்யமாக இருந்தது “ இதுகெல்லாம் கூட படிக்கனுமா அண்ணா?” என்று கேட்டவளைப் பார்த்து சிரித்த வரதன்

“ பின்ன இவ்வளவு பெரிய பங்களாவில் சும்மாவா வேலை குடுப்பாங்க? பெரியவர் என்னோட சர்டிபிகேட்டைப் பார்த்துட்டு தான் வேலை குடுத்தார்... அதிகப்படியான வேலை இருந்தால் வெளியே இருந்து ஆட்களை கூட்டி வருவேன்... மத்தபடி எனக்கு இந்த தோட்டம் ரொம்ப பிடிச்சதால ஈடுபாட்டோடு வேலை செய்றேன்” என்றான்...

பேச்சு மெல்ல மெல்ல திசைதிரும்பி மான்சியின் திருமண ஏற்பாட்டில் வந்து நின்றது...“ ஏனம்மா உங்க வீட்டுலேருந்து யாருமே கல்யாணத்துக்கு வரமாட்டாங்கனு சொல்றீங்க? என்ன காரணம்?”

செடிகளை கவனிக்கும் சாக்கில் மெல்ல தலைகுனிந்த மான்சி சத்யனை சந்தித்த சந்தர்பத்தையும் அன்று பரசு சத்யன் கழுத்தில் கத்தி வைத்ததை சொல்லிவிட்டு “ அன்னிக்கே அவ்வளவு கோவப்பட்டவன் இப்போ அவர் கூடயே எனக்கு கல்யாணம்னா எப்படி ஒத்துக்குவான் அண்ணா... பயங்கரமா எதிர்ப்பு தெரிவிப்பான்... அப்புறம் வீனான பிரச்சனைகள் தான் வரும்.... அதான் அவனுக்கு தெரியாமலேயே கல்யாணத்தை முடிச்சிகிட்டு அதுக்குப் பிறகு அவன்கிட்ட சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் அண்ணா... சின்னய்யா பரசு ரெண்டுபேரும் என் கல்யாணத்துக்கு முன்னாடி சந்திக்கறது நல்லதில்லைனு தான் இந்த முடிவு.... இது கொஞ்சம் சுயநலமான முடிவுதான்... ஆனா எனக்கு வேற வழி தெரியலை அண்ணா...” என்று வேதனையுடன் மான்சி கூற...

“ அட விடுங்கம்மா தம்பி வரலைனா என்ன? அண்ணன் நான் இருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்” என்று மான்சியை சந்தோஷப்படுத்த உண்மையான அன்பை சொன்ன வரதனும் சரி.... அதைகேட்டு சந்தோஷமடைந்த மான்சியும் சரி எந்த இடத்தில் நின்று பேசுகிறோம் என்று கவனிக்க மறந்தார்கள்...

ஆமாம் மிகச் சரியாக தண்டபாணியின் அறை ஜன்னல் அருகில் நின்றுதான் பேசிக்கொண்டிருந்தார்கள்.... உள்ளேயிருந்த தண்டபாணி கோமதிக்கு இந்த திருமணத்தை நிறுத்த வழி கிடைத்த சந்தோஷம்....

“ அப்போ இந்த ராப்பிச்சையோட தம்பிகிட்ட விஷயத்தை சொல்லி இங்கே கொண்டு வந்தா இந்த கல்யாணம் நடக்காது போலருக்கே... ம்ம் நமக்கு கஷ்டம் இல்லாம தானா வழி காமிச்சுட்டா இந்த குட்டி... இனி ஆகவேண்டியதைப் பாருங்க நீங்க” என்று கோமதி சொல்ல...

“ ஆமா கோமு நமக்கு வேலை சுலபமா முடிஞ்சு போச்சு... சாமிக்கண்ணோட சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் ஏதோ சொன்னாங்க... இந்த பொண்ணு அதே ஊரா? இல்லை அதுக்குப் பக்கத்துல வேற ஊரான்னு விசாரிக்கனும்... இந்த கெழவன் வேற என்னிக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணப் போறானோ தெரியலை” என்றான் தண்டபாணி

இவர்களுக்கு வழிய சென்று விஷயத்தை கொடுத்தது புரியாமல் மான்சியும் வரதனும் சந்தோஷமாக சிரித்து பேசியபடி அவர்களின் வேலையை கவனித்தனர்... அப்போது ஒரு வேலைக்காரப்பெண் வந்து பெரியவர் அழைப்பதாக கூறி மான்சியை அழைத்துச்சென்றாள்...

மான்சி பெரியவரின் அறைக்குள் நுழைந்த போது காலையில் போலவே எல்லோரும் இருந்தார்கள்... மான்சியைப் பார்த்ததும் சிரித்து வரவேற்ற ராஜி அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது மான்சி... இந்த வாரத்திலேயே கல்யாணத்துக்கு நாள் வச்சுட்டார் மாமா” என்று சந்தோஷத்துடன் சொல்ல...

மான்சியின் மனதில் ஒரு பரபரப்பு சூழ முகம் சிவக்க தலையை கவிழ்ந்தபடி “ அதுக்குள்ளயா?” என்றாள்..


“ வேற என்னப் பண்றது மான்சி சத்யன் ரொம்ப அவசரப்படுறான்... அதுக்கப்புறம் நாளும் நல்லதா அமையலை.. அதான் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் சொல்லிட்டு நம்ம வீட்டுலேயே கல்யாணத்தை செய்துடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்... உனக்கு சம்மதம் தானேம்மா ” என்று சொக்கலிங்கம் சொன்னதும்..

மான்சி தலைகுனிந்த தாமரை காற்றில் போல்அசைவது மெல்ல தலையசைத்து தனது சம்மதத்தை சொன்னாள்....

எல்லோரும் சந்தோஷத்துடன் கல்யாணத்தை பற்றி பிளான் போட ஆரம்பித்தனர்... இன்னும் நான்கு நாட்களே இருக்கிறது என்பதால்.... பெரியவர் ஒவ்வொருவரிடமும் ஒரு ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்....
“ ராஜி நீ மான்சிக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் ரெடி பண்ணிடு... ராஜா நீ முக்கியமான நம்ம சொந்தக்காரங்க..... நம்ம கம்பெனி நிர்வாகிகள் ... தொழில் ரீதியான நண்பர்கள் அப்படின்னு எல்லாரையும் நேர்ல போய் கல்யாணத்துக்கு அழைச்சுடு” என்று மகனுக்கும் மருமகளுக்கும் உத்தரவிட்டவர்... “ சபாபதி சாமி ரெண்டு பேரும் என்கூடவே இருந்து கல்யாண ஏற்ப்பாட்டை கவனிங்க” என்றார்

அந்த நிமிடத்திலிருந்து அந்த பங்களாவுக்கு கல்யாண காய்ச்சல் வந்துவிட்டது... எல்லோர் முதுகிலும் சிறகுகள் முளைத்தது... அனைவரின் பாதங்களும் சக்கரங்களை மாட்டிக்கொண்டது ..... யாராவது ஏதாவது ஒரு மூலையில் இந்த கல்யாணத்தைப் பற்றியே பேச ஆரம்பித்தனர்..

அந்த நான்கு நாட்களில் மான்சியின் அழகு பலமடங்கு ஏறிப்போச்சு.... ராஜி மான்சிக்கு விதவிதமான புடவை கட்டிவிட்டு.. அதற்கேற்ற நகைகளை அணிவித்து அந்த இளையராணியாக அந்த பங்களாவில் உலாவவிட... பங்களா சுவர்களின் மூச்சு கூட சூடாக வந்தது... ஏற்கனவே பொலிவான முகத்தில் புதிதாய் ஒரு தேஜஸ் வந்து ஒட்டிக்கொள்ள.. உண்மையாகவே இளவரசி போல் ஜொலித்தாள் மான்சி...

சத்யனின் அறையில் அவனது கட்டிலில் தோட்டத்து ஜன்னல் அருகே மாற்றப்பட்டது.... கட்டிலில் படுத்து தோட்டத்தையே பார்த்தபடி இருந்தான் சத்யன்... மான்சி அங்கே உலாவரும் தருணங்களை சரியாக கண்டுகொண்டான்.... அந்த நேரத்தில் அவளை காண்பதை தவிர வேறு எந்த தொந்தரவுகளையும் வைத்துக்கொள்ள வில்லை சத்யன்..

அவளின் அழகை பார்க்கும் போதெல்லாம் சத்யனின் மனதில் வெறுமை சூழ ஆரம்பித்தது.... அன்று ஆசையோடு அவளை நெருங்கியபோது அவள் தம்பியின் எதிர்ப்பைவிட அவளின் கண்ணீர்தான் அவனை கட்டிப்போட்டது.. இன்று தொடுவதற்கான உரிமையிருந்தும் தொடமுடியாத தனது நிலையை எண்ணி அவனுக்குள் ஏற்ப்பட்ட வெறுப்பு நேரமாக நேரமாக தனக்கு பயன்படாத மான்சியின் அழகின் மீதே வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது...

இமைக்கொட்டாமல் அவள் அழகை வெறிக்க ஆரம்பித்தான்... மான்சியின் அதிக்கப்படியான அலங்காரம் அவன் உதடுகளை ஏளனத்தில் வளைய வைத்தது,, பெண்களை நிமிடத்தில் தன்வசப்படுத்தி அனுபவித்து பழக்கப்பட்டவனுக்கு... மான்சியின் அன்றைய மறுப்பு அவனுக்குள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரசுவின் வார்த்தைகள் அவன் மனதில் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது... அதுவும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அவன் கூறிய வார்த்தைகள்.....

‘ அவன் அக்காவை தொடுபவன் சாமியாகத்தான் இருக்கனுமாம்..... சத்யனின் உதட்டில் ஏளனச் சிரிப்பு.... “ இனிமே உன் அக்கா கன்னி தெய்வம் தான்... எந்த சாமி என்ன ஆசாமி கூட தொட முடியாத கன்னி தெய்வம்.... எனக்கு பொண்டாட்டி தான் ஆனா என்னாலும் தொட முடியாது... வேறு எவனும் என் அரண்மனைக்குள் நுழைந்து அவளை தொடவும் முடியாது.. இனிமே எப்பவும் இப்படியே கைபடாத ரோஜாவா.. கரை படாத கன்னியாக இருப்பாடா உன் அக்கா....‘ மான்சி ... மான்சி..... மான்சி.... அன்னிக்கு எனக்கு மறுத்தியேடி,, இன்னிக்கு அந்த சுகமே உனக்கு கிடைக்காது.. இதுதான் உனக்கும் உன் தம்பிக்கும் சரியான தண்டனை...

ஒரு பிண்டத்தை கல்யாணம் செய்துகிட்டாளே என் அக்கா என்று உன் தம்பி அழனும்.... எதுக்கும் லாயக்கில்லாம கட்டிலில் கிடக்கும் என்னைப் பார்த்து நீ அழனும்... உங்க ரெண்டு பேரையும் பார்த்து நான் சிரிக்கலேன்னாலும் நிச்சயம் அழமாட்டேன்’ இது சத்யனின் எண்ண ஓட்டம்..... ஆனால் அன்றே அவள் கண்ணீர் தன்னை எவ்வளவு சுட்டது என்று யோசிக்க மறந்தான்... அவளின் கண்ணீர் கண்டு ஏன் பரசுவை கூட விட்டுவிட்டு வந்தோம் என்று யோசிக்க மறந்தான்.... யாருக்குமே அசைந்து கொடுககாத தன்னை இவள் ஏன் எவ்வளவு சிந்திக்க வைக்கிறாள் என்று இவன் சிந்திக்க மறந்தான்..

இன்று இந்த பங்களா பகட்டைப் பார்த்து கல்யாணத்துக்கு சம்மதித்தாலும் என்றாவது தாம்பத்ய சுகம் கிடைக்காமல் மான்சி வேதனைப்படுவாள் என்று எண்ணிய சத்யனுக்கு தெரியவில்லை






“ மான்சியின் காதல் வெறும் சதைக் குவியல் அல்ல...

“ அது சரித்திரத்தின் விதை குவியல் என்று !




No comments:

Post a Comment