Monday, January 18, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 32

" ப்ளீஸ்மா அழாதே ... அதான் எனக்கு எந்த வருத்தமும் இல்லைனு சொல்லிட்டேனே அனு.... " என்று வேதனையுடன் அவளை சமாதானம் செய்தவனின் முகம் சட்டென்று ரௌத்திரமாக " உன்மேல கோபம் இல்லையேத் தவிர உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினவங்க மேல பயங்கர வெறியோட வந்திருக்கேன் அனு..... அவனை யார் வேனும்னாலும் எத்தனை கோடி வேனும்னாலும் செலவு பண்ணி ஜாமீன்ல எடுக்கட்டும்.... ஆனா நான் அவனை அட்ரஸ் இல்லாதவனா ஆக்காம விடமாட்டேன்.... இந்த வீட்டுல ஒரு வேலைக்காரனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுக்க நினைச்சவங்க என் வீட்டுப் பொண்ணோட மானத்தைப் பத்தி யோசிக்கவே இல்லைல? இருக்கட்டும் .... நான் யாருன்னு அவங்களுக்கு காட்டுறேன்" என்று உரத்த குரலில் கத்தினான் ....



சற்றுமுன் அறைக்குள் மான்சியுடன் காதலோடு கலவி செய்ய முயன்ற சத்யன் காணாமல் போய்..... தவறுகளை தட்டி கேட்கும் ஒரு குடும்பத்தலைவனாக பேசினான் சத்யன்

போனவன் வரவில்லை என்றதும் நைட்டியை மாட்டிக்கொண்டு அறையின் கதவருகே வந்து நின்ற மான்சியின் காதுகளில் சத்யனின் வார்த்தைகள் அமிலமாக பாய.... அடிவயிறு சில்லிட கலவரத்துடன் தரையில் அமர்ந்தாள் மான்சி .

மரகத்தத்துடன் தோட்டத்து வாசப்படியில் நின்று பேசிக்கொண்டிருந்த பரசுவின் காதுகளிலும் சத்யனின் வார்த்தைகள் விழுந்தன.... மச்சானின் கோபக் கனல் அக்காவின் வாழ்வை எரித்து விடுமோ என்று பயந்து போய் சத்யனைப் பார்த்தான்
அதே சமயம் சத்யனின் பார்வையும் பரசுவை உரசியது.... அதில் தெரித்த அனலை கண்டு பரசு அதிர்ந்து போனான்....

“ என்ன பரசு பார்க்குற? எனக்கு எல்லாம் தெரியும்.... நீ வேனா உன் அக்காவுக்காக ஒரு தோட்டக்காரனை அண்ணனா ஏத்துகிட்டு அவனுக்கு உதவி செய்யலாம்..... ஆனா நான் யாருக்காகவும் என் வீட்டுப் பெண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன்.... அனு என் தாய்மாமன் மகள், என் அப்பாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது தாய்மாமன் உறவுதான்.... அவங்களையே தலை குனிய வச்ச ஒரு வேலைக்காரனை நீ ஜாமீன்ல எடுத்திருக்க.... அதுக்கு உதவி செய்தது இந்த வீட்டு பெரிய மனுஷன்...” என்றவனின் பார்வை தாத்தாவின் பக்கம் திரும்பியது “ எப்படி தாத்தா உங்களுக்கு மனசு வந்தது? மாமா அத்தை செய்ததை எல்லாம் விடுங்க... இந்த அனு .... இவளும் தானே நம்ம வீட்டுலயே பிறந்து உங்க மடியில வளர்ந்தவ.... அனு செய்தது தப்புதான்... இல்லேன்னு சொல்லலை ஆனா அதுக்கு தண்டனை தரவேண்டியது நானும் மான்சியும் தான்... நானே அந்த படங்களை நம்பலையே? அப்பபடியிருக்க இந்த சின்னப் பொண்ணை தண்டிக்க நீங்க எல்லாரும் செய்தது பயங்கர குற்றமில்லையா?.... குடும்பத்து பெரிய மனுஷனா வரதனுக்கு தண்டனை வாங்கி குடுக்குற வரைக்கும் நீங்க ஓஞ்சிருக்க கூடாது... நீங்க என்ன செய்திருக்கீங்க?.... அவனை ஜாமீன்ல எடுக்க உதவியிருக்கீங்க? இது எவ்வளவு பெரிய தவறுனு உங்களுக்கு புரியலையா தாத்தா ?” என்று சத்யன் சரமாரியாக கேள்விகளை வீச...

பெரியவர் எதுவுமே பேசமுடியாமல் தலைகுனிந்தார்... சத்யன் சொல்வதில் தவறேதும் இல்லையே?... அனு தவறே செய்திருந்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்... தன் மடியில் வளர்ந்தவள் என்ற நினைப்பின்றி பரசுவுக்கு உதவியது தவறுதானே? பெரியவர் எதுவுமே பேசாமல் தன் அறைக்கு செல்ல...

பட்டென்று சோபாவில் இருந்து எழுந்த சத்யன் “ எல்லாரும் போய் படுங்க... காலையில பேசலாம்....” என்றவன் அனுவின் மடியில் உறங்கிய மகனைத் தூக்கிக்கொண்டு “ அனு எந்த குழப்பமும் இல்லாம போய் தூங்கு...” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் செல்ல திரும்பினான்...

வந்த காரியம் தனது திருகு வேலை இல்லாமலேயே கச்சிதமாக முடிந்ததால் ஏற்ப்பட்ட சந்தோஷத்தை முகத்தில் காட்டாமல் மறைத்த கோமதி மகளை அழைத்துக்கொண்டு ஏற்கனவே அவர்கள் இருந்த அறைக்கு சென்றாள்...

ஒவ்வொருவறாக களைந்த செல்ல சத்யன் தனது அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கதவை மூடியவன் அப்போதுதான் கதவின் பக்கத்தில் தரையில் அமர்ந்திருந்த மான்சியைக் கண்டான்.... முழங்காலை கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தவளை கண்டு முகம் இறுக “ நீ கூட எல்லாத்தையும் என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டல்லா?” என்று கேட்க..


மான்சி சட்டென்று அவன் கால்களில் கவிழ்ந்தாள் .. அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டு “ அய்யோ உங்க உடல்நிலையை மனசுல வச்சுதான் நான் எதுவும் சொல்லலைங்க” என்றாள்

“ வாயை மூடுடி.... நான் என்ன ஹார்ட் ஆப்ரேஷனுக்காப் போயிருந்தேன்?.... அப்படியே எதுனா ஆனாதான் என்ன? பாவம்டி அந்த சின்னப் பொண்ணு... அவ முகத்தைப் பார்த்து கூட உனக்கு பரிதாபம் வரலையா? ஒரு பெண்ணோட மானத்தை விட என் உயிர் அவ்வளவு முக்கியமா?.... நான் உன்கிட்ட இதை எதிர் பார்க்கலை மான்சி... மொத்த குடும்ப பொருப்பும் உன்கிட்ட இருக்கும்போது என்னோட ஸ்தானத்தில் நீ இருந்து அனுவோட பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கனும்... நம்ம வீட்டுப் பொண்ணை ஒரு தோட்டக்காரனுக்காக நீ விட்டு குடுத்திருக்க மான்சி..” சத்யனின் வார்த்தைகள் சாட்டையாக வந்து விழ....

மான்சி துடித்துப் போனாள் “ அய்யோ என்னை நம்புங்களேன்?... நானும் அனுவை என் கூடப்பிறந்த தங்கச்சியா நினைச்சேனே? எனக்கு எதுவுமே தெரியாதே.... எல்லாமே நடந்ததுக்குப் பிறகுதான் எனக்கு தெரியும்... ப்ளீஸ் நம்புங்களேன் ” மான்சி தரையில் அமர்ந்தவாறு சத்யனிடம் மன்றாடினாள்.....

குனிந்து அவளை உறுத்து விழித்தவன் “ சரி எல்லாம் நடந்ததுக்கு பிறகுதான் உனக்குத் தெரியவந்தது.... சரி நம்புறேன்... ஆனா அதுக்குப்பிறகு உன்னோட நடவடிக்கை என்ன மான்சி? ” கூர்மையாக கேட்டான்..

சற்றுநேரம் விழித்தவள் பிறகு “ உங்க உடல்நிலை ஒரு காரணம்.... அடுத்து வரதண்ணாவை ஏன் ஜாமீன்ல எடுத்த உன் மச்சானுக்குத் தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவார்னு பரசு கிட்ட கேட்டேன் ....... அதுக்கு அவன் வரதண்ணாவை இன்னும் ஒருநாள் போலீஸ்ல விட்டு வச்சிருந்தா கூட செத்து போயிருவாரு... அந்தளவுக்கு அடிச்சிட்டாங்கன்னு சொன்னான்” மான்சி முழுதாக முடிக்கவில்லை....

“ஏய் நிறுத்துடி” என்று ஆத்திரமாய் கத்தியவன் அவள் கூந்தலைப் பற்றி தூக்கி “ யாருடி அண்ணன்? அந்த தோட்டக்காரனா? என் வீட்டுப் பொண்ணை உன் அண்ணன் ரேப் பண்ணுவான்... அவனை உன் தம்பி ஜாமீன்ல எடுப்பான்.... நீ அதை கிட்டத்தட்ட மூனு மாசமா என்கிட்ட இருந்து மறைச்சு வைப்ப? இது என்ன குடும்பம்னு நெனைச்சீங்களா? இல்லை வேற எதுவும் நினைச்சீங்களா??? ” என்று ஆத்திரமாய் கத்தியவன் அவளின் கண்ணீர் வழிந்த முகத்தை கண்டும் பற்றியிருந்த கையை அப்படியே உதறிவிட்டு “ என்னால எதையும் மன்னிக்கவே முடியலை மான்சி.... உன்னை அறியாம எல்லாத்துக்கும் நீ காரணமாயிட்ட.... குடும்ப பிரச்சனையை ஒதுக்கி வச்சிட்டு எனக்கு என் பொண்டாட்டிதான் முக்கியம்னு என்னால கொண்டாட முடியாது மான்சி ” என்று கூறிவிட்டு கட்டிலுக்கு சென்றவன் குழந்தையை கட்டிலில் கிடத்தி போர்வையால் மூடிவிட்டு தானும் படுத்துக்கொண்டான்....

கதவருகிலேயே அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள் மான்சி... அவளுக்கும் தன் தவறின் அளவு புரிந்தது.... தான் ஒரு குடும்பத் தலைவியாக இருந்து அனுவின் பிரச்சனைக்கு எதுவுமே செய்யவில்லை என்ற குற்றவுணர்வு வாட்டியது.... அனுவைப் பற்றி யோசித்தவளுக்கு சற்றுமுன் அனு தப்பு செய்தாள் என்று சத்யன் சொன்னது ஞாபகம் வர ... அனு என்ன செய்தாள்? என்று யோசித்தபடி எழுந்து கட்டிலை நெருங்கி “ நீங்க சொல்றது சரிதான்... ஒரு குடும்பத் தலைவியா இருந்து நான் என் கடமையிலருந்து தவறிட்டேன் தான்... ஆனா அனு என்ன தப்பு செய்தா?.... ஏதோ படங்கள்னு சொன்னீங்களே என்ன அது?” என்று மான்சி கேட்க..




சத்யனுக்குள் சுருக்கென்றது... இதுவும் கூட மான்சிக்கு தெரியாதா? படுக்கையிலிருந்து எழுந்தவன் தனது லேப்டாப்பை எடுத்து வந்து அனு அனுப்பி வைத்த படங்களை மான்சியிடம் காட்டினான்.....

எல்லாவற்றையும் பார்த்த மான்சி சத்யனை நிமிர்ந்துப் பார்த்து “ இதெல்லாம் அனு அனுப்பியதா?” என்று கேட்க ... சத்யன் ஆம் என்று தலையசைத்தான்.... “ இதையெல்லாம் பார்த்து நீங்க என்மேல சந்தேகப்பட்டீங்களா?” என்று கண்ணீருடன் கேட்க...

சத்யனால் அதற்குமேல் தாங்க முடியவில்லை அவளை இழுத்து அணைத்து “ அடி பைத்தியக்காரி என்னைப் போய் இப்படி நினைச்சிட்டயே? நீ நெருப்பு... அந்த நெருப்பை தீண்ட என்னால மட்டும் தான் முடியும்னு உன் கழுத்துல தாலி கட்டினதுமே நான் புரிஞ்சிக்கிட்டேன்... நான் ஒருபோதும் தவறா நினைக்கலை மான்சி... அதனாலதான் எனக்கு அனுமேல கோபமே வரலை.... ஏதோ விளையாட்டுத் தனமா செய்ததா நெனைச்சு ஒதுக்கிட்டேன்... ஆனா அதுக்காக அவளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ரொம்ப பயங்கரமானது மான்சி” என்றவன் ஏதோ நினைத்து “ அனு உன்னையும் வரதனையும் இதுபோல சம்மந்தப் படுத்தி பேசினதுக்கு அனுவுக்கு இதுதான் சரியான தண்டனைனு நீ நினைக்கிறயா மான்சி?” என்று கேட்க....

அவனை நிமிர்வுடன் பார்த்த மான்சி “ இத்தனை போட்டோக்களையும் பார்த்துட்டு நீங்க என்னை நம்பும்போது நான் ஏன் அனுவை தவறா நினைக்கனும்? இது உங்களோட மனசுல நான் எங்க இருக்கேன்னு புரிஞ்சுக்க எனக்கு ஒரு வாய்ப்ப குடுத்திருக்கா அனு... அதுக்காக அவளுக்கு நான் நன்றிதான் சொல்லனும்... நீங்க என்னை சந்தேகப் பட்டாலும் கூட அதுக்கு உங்களோட நடத்தையை நினைச்சிதான் வருந்துவேனே தவிற அனுமேல கோபப்பட மாட்டேன்... ஏன்னா அப்பவும் உங்களை புரிஞ்சிக்க ஒரு சந்தர்ப்பம்னு தான் நெனைப்பேன்” என்று மான்சி தீர்மானமாக கூறியதும் சத்யன் முகம் இலக அவளை அணைத்துக்கொண்டு சற்றுநேரம் அமைதியாக படுத்திருந்தான் இருந்தான்....

“ மான்சி நீ வரதன் கூட சகோதரனா நினைச்சு பழகுறது தப்பில்லை... ஆனா அதுக்கு ஒரு லிமிட் இருக்கனும்.... நான் முதலாளி தொழிலாளி வித்தியாசம் பார்க்க மாட்டேன்னு பாக்டரில என்ன நடவடிக்கைகளை வச்சு உனக்கும் தெரியும்... ஆனா நீ ஒரு பொண்ணு மான்சி... இப்போ ஒரு பணக்கார குடும்பத்து மருமகள்... ஒரு வசதியான குடும்பத்தில் எப்ப ஏதாவது செய்தி கிடைக்கும்னு அலையிறவங்க ஏராளம்... எத்தனை பணக்கார வீட்டு பெண்களை வேலைக்காரன் கூடயும் ... டிரைவர் கூடயும்.. மேனேஜர் கூடயும் கூசாம சம்மந்தப் படுத்தி பேசுவாங்க தெரியுமா.... அது உண்மையா பொய்யானு கூட தெரியாது... ஆனா அந்த பணக்கார குடும்பத்துப் பொண்ணுங்க மானம் சந்தி சிரிக்கும்.... நாம ஒரு லெவலுக்கு மேல பழைய மாதிரியே இருக்க நெனைக்க கூடாது மான்சி ... இருக்கும் இடத்துக்கு தகுந்த மாதிரி மாறனும்... தொழிலாளர்கள் தோள்ல நட்போட கைப்போடுற நேரத்துல போடனும்.. கண்டிப்பா இருக்கவேண்டிய நேரத்துல கண்டிப்பா இருக்கனும்.... நீ எப்பவுமே வரதன் கூட தோட்டத்துல சுத்தினதோட விளைவு? என்ன கிடைக்கும்னு காத்திருந்தவங்க வாய்க்கு அவலாகி அதனால ஒரு சின்னப் பொண்ணோட வாழ்க்கையே இப்போ கேள்விக்குறி ஆயிடுச்சு... இப்பொ புரியுதா நடந்ததுக்கெல்லாம் மூலம் யார்னு?” சத்யனின் மிகத் தெளிவான பேச்சு மான்சியை திகைக்க வைத்தது ...


பெரும் குற்றம் செய்தவளாக நிமிர்ந்தவள் “ எல்லாத்துக்கும் காரணம் நான்தான்?” என்று கூறிவிட்டு தலையை கவிழ்ந்தாள்.. எல்லாம் புரிந்தது போல் இருந்தது... அனுவின் இந்த நிலைக்கு காரணம் தான்தான் என்று புரிய மான்சியின் உள்ளம் ஊமையாய் அழுதது

சத்யன் எதுவுமே பேசவில்லை மவுனமாக இருந்தான்.... அன்றைய இரவு காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் வரட்சியான வானத்தைப்போல ஒருவித கடமையுணர்வுடன் கழிந்தது....

மறுநாள் காலை உணவு வரை யாரும் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை.... ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது....

சாப்பிட்டு முடித்ததும் பரசு ஊருக்கு கிளம்புவதாக கூறிவிட்டு சத்யனின் அருகில் வந்து “ வரதண்ணாவை குற்றுயிரா போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்ததும் என் மனசு கேட்கமா ஜாமீன்ல எடுத்துட்டேன் மச்சான்... இப்போ நீங்க சொன்னப் பிறகுதான் அனுவை நம்ம குடும்பத்து பொண்ணா யோசிக்காதது எவ்வளவு தப்புன்னு புரியுது மச்சான்... தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க மச்சான்” என்று கெஞ்சுதலாய் கூறினான்...

சத்யனிடமிருந்து பதில் இல்லாமல் போகவே “ சரி மச்சான் நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தவனை சத்யனின் குரல் தடுத்தது... பரசு மீண்டும் சத்யன் அருகில் வர

“ பரசு,, வரதனைத் தவிர வேற யாருமே குற்றவாளிகள் இல்லை எல்லாம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான்..... ஆனா அனுவோட வாழ்க்கைக்கு சரிசெய்ய வேண்டிய கடமை எனக்கிருக்கு... என் வீட்டுப் பொண்ணை இந்த நிலைமையில வச்சுகிட்டு என்னால என் பொண்டாட்டி கூட சந்தோஷமா வாழ முடியாது.... அதனால மான்சியை உன்கூட கூட்டிட்டுப் போயிடு... அனுவோட எல்லா பிரச்சனைகளைத் தீர்த்ததும் நானே வந்து என் பொண்டாட்டியை கூட்டிட்டு வர்றேன்... அதுவரைக்கும் அவளும் குழந்தையும் உன் வீட்டுலயே இருக்கட்டும்” என்று சத்யன் தீர்மானமாக கூற....

பரசு அதிர்ந்து போய் “ மச்சான் வேனாம் மச்சான்...நான் செஞ்ச தப்புக்கு அக்காவை தண்டிக்காதீங்க” என்று கலங்கிய குரலில் கெஞ்சினான்...

“ புரியாம பேசாத பரசு... மான்சி இங்கே இருந்தா அனுவோட வாழ்க்கை நாசமானதுக்கு காரணம் அவதான்னு விரோதம் வளர்ந்துகிட்டே போகும்.... மான்சியை எப்பவுமே என்னால தண்டிக்க முடியாது..... அனு பிரச்சனை சால்வ் ஆனதும் நானே வந்து மான்சியை கூட்டிட்டு வருவேன்” உறுதியுடன் கூறினான் சத்யன்...

ராஜாவும் ராஜியும் ஏதோ சொல்ல வந்தபோது அவர்களை தன் பார்வையாலேயே அடக்கியவன் “ இது எனக்கும் என் மனைவிக்கும் உள்ள பிரச்சனை.... தெரிஞ்சோ தெரியாமலோ மான்சி இந்த பிரச்சனைக்கு காரணமாயிட்டா... அவளால் வந்த பிரச்சனையை தீர்க்க வேண்டியது புருஷன் என் கடமை... அதனால இதுல யாரும் தலையிட வேண்டாம்” என்றவன் “ மான்சி” என்று அழைக்க...

மான்சி அறையிலிருந்து வந்தாள்... அவள் முகம் தெளிவாக இருந்தது.... “ என்ன மான்சி என் முடிவை நீ ஏத்துக்கிறயா?” என்று சத்யன் கேட்க....

“ நீங்கதான் வந்து கூப்பிடுவேன்னு சொன்னீங்களே... அப்படின்னா நான் பரசுக் கூட போகத் தாயார்” என்று மான்சி அறிவிக்க....


அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பெரியவர் “ நீ சொல்றதுல தப்பில்லை சத்யா... கொஞ்சநாள் மான்சி பரசு வீட்டுல இருக்குறதுல தப்பில்லை ஆனா வரதனும் அங்கேதான் இருக்கான்... இப்போ மான்சியை அங்க அனுப்புறதால மறுபடியும் அவங்க ரெண்டு பேரின் பெயருக்கும் களங்கம் தான் வரும்” என்றதும் அவரை புன்னகையுடன் ஏறிட்ட சத்யன்

“ அது வரதனோட பிரச்சனை தாத்தா,, மான்சி அவமானப்பட்டான்னு தெரிஞ்சதும் அவ்வளவு பெரிய குற்றம் செய்தவன் இப்போ தன்னாலதான் மான்சியோட வாழ்க்கை இப்படி ஆனதுனு தெரிஞ்சதும் என்ன செய்றான்னு பார்க்கலாம்” என்று சூட்சுமமாக பேசினான்...

அவனது பேச்சு தாத்தாவையும் மான்சியையும் தவிர வேறு யாருக்கும் புரியவில்லை.... மான்சி அமைதியாக தனது அறைக்கு சென்று தனது உடைமைகளையும் குழந்தைக்கு தேவையானவைகளையும் எடுத்து வைத்தாள்...

சத்யன் அறைக்குள் வந்து மான்சியை அணைத்து “ நானும் அதிகமான ஏக்கத்தோட தான் உன்னை அனுப்புறேன்.... உன்னைப் பிரியறது என் உயிரையே நான் பிரியுற மாதிரி மான்சி... அது உனக்கும் புரியும்.... ஒவ்வொரு நாளும் நான் வருவேன்னு நீ காத்திருக்கனும் மான்சி... நிச்சயம் ரொம்ப சீக்கிரமே நான் வந்து உன்னை கூட்டி வருவேன்” என்று காதலோட பேச... மான்சி கண்ணீரோடு தலையசைத்தாள்

சத்யன் மான்சியை தோளோடு அணைத்து வெளியே அழைத்து வந்தான்....மகனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி பரசுவிடம் கூறினான்... காரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வர ஏற்பாடு செய்தான்... மகனுக்கும் மனைவிக்கும் முத்தங்களை வாரியிரைத்து வழியணுப்பி வைத்தான்

வழக்கம்போல அனு அறைக்குள் முடங்கிக் கிடக்க.... கோமதியைத் தவிர மற்ற அத்தனை பேரின் கண்ணீர் கையசைப்புடன் மான்சி பரசுவுடன் கிளம்பினாள்










இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து

மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ


No comments:

Post a Comment