Monday, January 11, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 24



சற்றுநேரம் கழித்து வந்தவர்களில் சத்யனைத் தவிர அனைவரும் மான்சியிடம் சொல்லிகொண்டு விடைபெற.. மரகதமும் ராஜியும் மட்டும் மான்சியுடன் இருந்தார்கள்... சத்யனையும் மான்சியையும் தனிமையில் விட்டுவிட்டு இருவரின் வெளியே வந்தனர்..

தொட்டிலில் உறங்கும் மகனையேப் பார்த்துக்கொண்டிருந்த சத்யன் மான்சியைப் பார்த்து புன்னகையுடன் “ இவனோட முகம் யாரு மாதிரின்னே தெரியலையே மான்சி?” என்று கேட்க.. “ அய்ய இப்பவே ஒன்னும் தெரியாது.. இன்னும் ஒரு மாசமாவது ஆகனும் அப்பதான் முகம் தெளிவாத் தெரியும்” என்று கணவனுக்கு விளக்கியவள் அவனை நோக்கி கையை நீட்டி பக்கத்தில் வருமாறு அழைக்க.. சத்யன் அவளருகே சென்றான்

சத்யனின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்ட மான்சி “ எதையோ பெரிசா சாதிச்சிட்ட மாதிரி.. பெரிசா எதையோ ஜெயிச்சிட்ட மாதிரி இருக்குள்ள? ” என்று சொல்ல..

“ எனக்கு அப்படியில்லை மான்சி....

பெண்ணுக்கு முழுமை தாய்மை தான்னா.. ஆணுக்கு முழுமை அவன் மனைவியை எல்லா விதத்திலும் திருப்தியாவும் சந்தோஷமாவும் வச்சுக்கிறதுதான்... அதுல நான் இன்னும் ஜெயிக்கலையே? அதனால எனக்கு எதையோ சாதிச்ச மாதிரி எல்லாம் இல்லை... ஆனா மகன் பிறந்துட்டான்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு..... தாய்மையின் அழகோட உன்னைப் பார்க்க ரொம்பவும் இனிமையா இருக்கு... அவ்வளவுதான் மான்சி” என்றவன் குனிந்து மான்சியின் நெற்றியில் முத்தமிட...

மான்சிக்கு சத்யனின் மனம் புரிந்தது... அவனது ஏக்கங்கள் எல்லாம் தீரவேண்டும் தான் ஆனால் அதற்கான விலைதான் படு பயங்கரமாக இருந்தது... அவளால் சத்யனின் வார்த்தையை மறுக்க முடியாமல் அமைதியாக இருந்தாள்......

அந்த மருத்துவமனையில் மான்சி மூன்று நாட்கள் இருந்துவிட்டு மூன்றாம் நாள் மாலை வீட்டுக்கு அழைத்துவரப்பட்டாள்... சில உறவினர்கள் வந்து கூடியிருக்க இளையராணியும் புதிதாய் பிறந்த இளவரசனையும் மேளதாளத்துடன் வரவேற்றனர்...

மான்சியின் மனம் தான் பெற்ற மழலையின் அழகில் கூட மயங்கவில... மனதை இனம்புரியாத இருட்டு சூழ்ந்துகொண்டு ஏதேதோ ஞாபகங்களை அவளுக்குள் விதைக்க... எப்போதும் சத்யனின் அருகாமை வேண்டும் என்பதுபோல் அவன் கைப்பிடியிலேயே இருந்தாள்..

குழந்தை பசியாறும் நேரம் கூட சத்யன் விலகுவதை அனுமதிக்காமல் கலங்கிய விழிகளுடன் நோக்கும் மருமகளை கண்டு ராஜி கூட கலங்கிப் போனாள்.... சத்யன் சென்றவுடன் மான்சி எப்படி இருப்பாள் என்ற பயம் வந்தது....

ஏனென்றால் ராஜியும் ராஜாவும் சத்யனுடன் லண்டன் செல்கிறார்கள்... உயிர் பிழைக்கப் போராடப்போகும் அவனுக்கு துணையாக இருவரும் செல்லவேண்டிய நிர்பந்தம்.. மான்சியை கவனித்துக் கொள்ள மரகதமும்.. மான்சியின் சொந்த பாட்டியும் இருக்கிறார்கள்... ஆனால் சத்யனுக்கு ராஜா ராஜியின் துணை அவசியமாகிறதே...

மான்சி குழந்தையுடன் வீட்டுக்கு வந்ததும் மான்சியும் சத்யனும் தனிமையில் இருக்க விரும்புவதை உணர்ந்து வந்த உறவினர்களை கூட தவிர்த்தாள் ராஜி... சொக்கலிங்கம் கூட மான்சி இனி எப்படி இருப்பாள் என்று உள்ளுக்குள் கவலைபட்டார்... பரசு அந்த இரண்டு பதுமைகளையும் பார்த்துக்கொண்டு மௌனமாக குமுறினான்... அக்காவுக்காகப் பார்ப்பதா? மச்சானின் உடல் குணமாவதைப் பார்ப்பதா? குழப்பத்தையும் தனக்குள் புதைத்தான் பரசு


சத்யன் சிகிச்சைக்காக கிளம்பும் நாட்கள் மணித்துளிகளாக மாற மாற மான்சி மௌனத்தை துணைக்கழைத்துக் கொண்டு கண்மூடி படுத்திருக்க... சத்யன் இருதலைக்கொள்ளி எறும்பைப் போல தவிக்க ஆரம்பித்தான்... அவனுக்குள் இருக்கும் காதல் மான்சியை பிரியக்கூடாது என்று எண்ண வைத்தது... அவனுக்குள் இருக்கும் தாம்பத்திய தாபம் அவனை அறுவை சிகிச்சைக்கு தயாராக வைத்தது...

இரவெல்லாம் விழித்தபடி மான்சியின் அருகில் இருந்தான்... முடிந்த வரை ஆறுதல் வார்த்தைகள் சொல்லி மனைவியை தயார் செய்தான்... குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி பேசி அவள் கவனத்தை திசை திருப்ப முயன்றான்..... ஆனால் மான்சியின் மனம் சத்யனை மட்டுமே சுற்றி சுற்றி வந்தது.. சத்யனால் அவன் தேவதையை அப்படி பார்க்க முடியவில்லை தான்... ஆனால் அதைப் பார்த்தால் அவளுடனான பிற்காலம் கேள்விக் குறியாகி விடுமே என்று மனதை தேற்றிக்கொண்டு மனைவியுடன் சிரித்து சந்தோஷமாக இருந்தான்...

அவனுக்குள்ளும் புதிதாய் ஒரு பயம்... மற்ற மூன்று நோயாளிகளை போல தனக்கும் மரணமோ கோமாவோ வந்துவிட்டால் மான்சி அதை எப்படி தாங்குவாள்? எனக்கு பின் வாழவேண்டும் என்று அவள் யோசிக்கவே மாட்டாளே? பயத்துடன் சத்யன் தாத்தாவைப் பார்த்து பேசினான்

தனக்கு எதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் மான்சியை ரொம்ப கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றான்... அப்படி ஏதாவது ஆனால் மான்சியின் மனநிலை மாறியதும் அவளுக்கு ஒரு நல்லவனை பார்த்து மறு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று சத்யன் சொல்லும்போது தாத்தாவுடன் பரசுவும் இருந்தான்...

பேரனுக்கு பதில் சொல்லமுடியாமல் பெரியவர் கலங்கி கண்ணீர் வடித்தார்.... பரசு வேகமாக சத்யனை நெருங்கி “ வாயை கழுவுங்க மச்சான்... நீங்க இல்லாம என் அக்காவுக்கு இன்னொரு வாழ்க்கையா? அதுக்கு நானே சம்மதிக்கமாட்டேன் அப்புறம் அக்கா எப்படி சம்மதிக்கும்? அக்காகூட சந்தோஷமா வாழனும் அதுக்காக ஆப்ரேஷன் செய்துக்கப் போறேன்னுசொன்னீங்க... உயிருக்கு ஆபத்தானதா இருந்தாலும்கூட உங்க வாதத்தில் நியாயம் இருந்தது.. அதனால நாங்கல்லாம் ஒத்துக்கிட்டோம்.. ஆனா இந்த மாதிரில்லாம் பேசினீங்கன்னா நடக்குறது நடக்கட்டும்னு எல்லா ஏற்பாட்டையும் நிறுத்திடுவேன் ஆமா சொல்லிட்டேன்” என்ற பரசு, சத்யனின் முகத்தில் இருந்த வேதனையை கண்டு “ இதோ பாருங்க மச்சான் நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க... அப்புறம் ஏரப்ளேன் கிளம்பும்போது குறுக்க வந்து படுத்துடுவேன்” என்றதும் சத்யன் கூட லேசாய் சிரித்தான்..

சத்யன் சிரித்ததும் பரசு சத்யனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “ மச்சான் நெருப்புன்னா வாய் சுட்டுடாது மச்சான்... இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க... அப்படி நீங்க திரும்பி வரலைனாலும் இந்த சத்யமூர்த்தியோட பொண்டாட்டியா... இந்த பரசுவுக்கு அக்காவா என் வீட்டுல இருப்பாளே தவிர இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியா போகமாட்டா என் அக்கா... உங்க மேல அக்கா வச்சிருக்க நேசம் அவ்வளவு உசந்தது மச்சான்... அதை யாராலையும் பலி கொடுக்க முடியாது மச்சான்... அப்படி பலி கொடுக்க நெனைச்சா அவ இருக்கமாட்டா மச்சான்... இதை எப்பவுமே மனசுல வச்சுக்கங்க.... என் பொண்டாட்டி உயிர் வாழ நான் உயிரோட ஊர் திரும்பனும்னு நெனைச்சுகிட்டே... மந்திரம் மாதிரி சொல்லிகிட்டே போங்க மச்சான் எல்லாமே சரியா நடக்கும் ” என்றவனின் குரலில் இருந்த அன்பும் ஆறுதலும் சத்யனின் நெஞ்சை உறுக்கிவிட்டது... “ மாப்ள...........” என்று பரசுவின் கைகளில் முகம் கவிழ்ந்தான்.


சத்யன் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் நாளும் வந்தது... இரவு விமானத்தில் மும்பை சென்று அங்கிருந்து லண்டன் பயணமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது...

சத்யனுடன் ராஜா ராஜியும் புறப்படுவதால் அனைத்து ஏற்பாடுகளும் துரித கதியில் நடந்தது .. மொத்தப் பொருப்புகளையும் சொக்கலிங்கம் சுமக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.... 


திருந்திவிட்டோம் என்ற போர்வையில் இருந்த தண்டபாணி பேமிலி கூட சத்யனை வழியனுப்ப வந்திருந்தது... இதில் கொடுமை என்னவென்றால் அண்ணன் குடும்பத்தின் நடிப்பை முழுவதுமாக நம்பியதுதான்...

அவளுக்குப் பாவம் அண்ணன் பாசம் கண்ணை மறைத்தது என்றால் ராஜாவுக்கு வீட்டில் யாருமற்ற சூழ்நிலையில் பாலுக்கு காவலாக பூணையை வைத்துவிட்டு போக எண்ணினார் ... தன் அப்பாவுடன் இருந்து கம்பெணி பொருப்புகளை கவனிக்குமாறு மச்சானிடம் கேட்டுக்கொண்டார்...

சத்யனாலும் மறுக்க முடியவில்லை... ஏனென்றால் வயதான காலத்தில் தாத்தாவால் மொத்த பொறுப்புகளையும் பார்த்துகொள்ள முடியாது என்று எண்ணினான் .. ஜெயில் வரை சென்றவர் நிச்சயம் தவறு செய்யமாட்டார் என்ற நம்பிக்கை தான் காரணம்...

கிளம்புவதற்கு முதல் நாளே கம்பெனி சம்மந்தப்பட்ட அனைத்துப பொறுப்புகளையும் தாத்தாவிடம் ஒப்படைத்தான் ... முக்கிமான ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் பேசி விடைபெற்றான்.. மரகதம் சாமிக்கண்ணு இருவரின் கைகளையும் கால்களாக எண்ணி கண்ணில் ஒற்றிக்கொண்டான்.. தனக்கு வலக்கையாக இத்தனை நாட்களாக இருந்த வேலுவுக்கு நீண்ட விடுமுறையும் கை நிறைய பணமும் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தான் ... சபாபதி வரதன் என அனைவரையும் தனித்தனியே அழைத்துப் பேசி விடை பெற்றான்...

எல்லாம் மறந்து மன்னித்து தண்டபாணி கோமதியிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டான் .... அனுவிடம் உண்மையான அன்போடு பேசி விடைபெற்றான் ...

மறுநாள் மான்சி விமான நிலையம் வரை வரமுடியாது என்பதால் .. அவளிடமும் விடைபெற்றாக வேண்டிய சூழ்நிலை... சத்யனை அறைக்குள் கொண்டு விட்டுவிட்டு பரசு வெளியே வந்துவிட்டான்...

மான்சி கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு பக்கத்தில் கிடக்கும் குழந்தையை வருடியபடி படுத்திருந்தாள் ... சத்யன் அருகில் வந்தது தெரிந்தும் நிமிரவில்லை... எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவளின் மன உலைச்சல் கண்ணீராக வந்தது ...

சத்யன் பரசுவை அழைத்தான்... அவன் வந்ததும் தன்னை கட்டில் அமர்த்துமாறு கேட்டதும் பரசு உடனே சத்யனைத் தூக்கி கட்டிலில் குழந்தையின் மறுபுறம் படுக்க வைத்துவிட்டு வெளியேற... சத்யன் மகனை வருடிய மான்சியின் விரல்களில் தன் விரலை கோர்த்துக் கொண்டான்...

அங்கே வெகுநேரம் அமைதி... ஆனால் கோர்த்த விரல்கள் ஆயிரம் கதைகளை பறிமாறிக்கொண்டது.... சத்யன்தான் முதலில் ஆரம்பித்தான்... " என்னடா.... பேசமாட்டியா? ... நம்மளோட வாழ்க்கை நல்லாருக்கனும்னு தானே நான் போறேன்.?.. நீயே இப்படியிருந்தா நான் எப்படி கண்ணம்மா நிம்மதியா போகமுடியும்? இப்படி அழுதழுது என்ன் கோழை ஆக்காத மான்சி" சத்யனின் வார்த்தைகள் வேதனையோடு வந்தது ...

மான்சி எதுவும் பேசவில்லை... விசும்பிக்கொண்டே சத்யனின் கழுத்தை கையால் வளைத்து தன்னருகே இழுக்க.... " ஏய்,ஏய் நடுவுல என் மகன்டி ... நசுக்கிப்புடாத" என்று கூறிவிட்டு சதயன் சிரிக்க....

" ம்க்கும் " என்று சினுங்கிய மான்சி எழுந்து அமர்ந்து மகனை மெல்ல தூக்கி மறுபுறம் படுக்க வைத்துவிட்டு சத்யனை நெருங்கி இழுத்து அணைத்து தன் காலைத் தூக்கி அவன் மேல் போட்டு தன்னோடு இறுக்கிக்கொள்ள....

சத்யனும் தன் பங்கிற்க்கு வளைத்து இறுக்கினான் ... வழக்கம் போல அவன் முகம் மான்சியின் கழுத்தடியில்... முன்பு வரும் வாசனையோடு சேர்த்து இப்போது பால் வாசனையும் சேர்ந்து கலந்து வந்தது... சத்யன் முகத்தை புரட்டியபடி ஆழமாக மூச்சை இழுத்து சுவாசித்தான்... 




சற்றுப் பொறுத்து நிமிர்நத சத்யன் " இதுக்காத்தான் மான்சி.... இந்த மாதிரி தவிச்சு தவிச்சு வாழ்நாளை கழிக்கறதைவிட ... இந்த ஆப்ரேஷனை செய்து வாழ்வா சாவானு போராடிப் பார்த்துடனும் மான்சி..." என்றான்...

மான்சியின் இறுகிய அணைப்பு அவளது வலியை சொல்ல .. " மான்சி நான் இதுவரை சொல்லாதது ... உனக்கு தெரியாதது ஒரு விஷயம் இருக்கு .. ஒவ்வொரு நாளும் நீ பக்கத்துல இருக்கும் போது நான் உள்ளுக்குள்ள அழறேன் மான்சி... இந்த விரக்திலயே நான் சீக்கிரம் செத்துப் போய்டுவேன் மான்சி ... உன் அழகும்.. அதை அனுபவிக்க முடியாத என் இயலாமையும் என்னை கொஞ்சம் கொஞ்சமா வதைச்சு கொன்னுடும்... நான் அப்படி போறதைவிட .. இதுபோல ஒரு முயற்சி செஞ்சு பார்க்கிறது நல்லதில்லையா... இந்த ஆப்ரேஷன் வெற்றினா அது நமக்கு எவ்வளவு அழகான வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கும்னு நினைச்சுப் பாரு கண்ணம்மா ...... எனக்காகடா ப்ளீஸ் " என்ற சத்யன் அவளை அணைத்து உச்சியில் உதடு பதிக்க ....

மான்சியின் மனது முழுவதுமாக தெளிந்தது... சத்யனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவளை தெளிய வைத்தது... அவன் சொல்வது போல் இயலாமையை விட பெரிய எமன் யார்? அப்படி கிடந்து உருக்குலைந்து போவதைவிட .. இப்படி முயன்றுதான் பார்க்கலாமே ? ....

மெல்ல அவனை விலகி எழுந்து கட்டிலை விட்டு இறங்கியவள்... தனது தலையணைக்கு கீழே இருந்த பரசு கொண்டு வந்த குலதெய்வத்தின் விபூதி பொட்டலத்தை எடுத்து சத்யனின் நெற்றியில் இட்டாள் .. பிறகு தன் நெற்றியிலும் பூசிக்கொண்டு " சந்தோஷமா போய்ட்டு வாங்க... நான் காத்திருக்கேன்" என்றவள் குங்குமத்தை அவனிடம் கொடுத்து தனது தாலி செயினை வெளியே எடுத்து மாங்கல்யத்தை அவனிடம் காட்டி " இதுல குங்குமம் வைங்க " என்று கூற ... சத்யன் மனதுக்குள் பலத்த வேண்டுதலுடன் மாங்கல்யத்தில் குங்குமம் வைத்தான் .. மான்சி முகத்தை காட்ட .. நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தான் ...

சற்றுநேரம் மௌனமாக மனைவியின் முகத்தைப் பார்த்தவன் " புரிஞ்சுகிட்டதுக்கு தாங்க்ஸ் மான்சி" என்றான்.....

இருவரும் வெளியே வந்தனர் .. ராஜி மருமகளிடம் கண்ணீருடன் விடை பெற்றவள் .. மரகதத்தின் கைகளைப் பற்றிக்கொண்டு " அம்மா என் குடும்பத்தோட உயிரையே உங்ககிட்ட ஒப்படைச்சிட்டுப் போறேன்... என் மருமகளையும் பேரனையும் பத்திரமா பாதுகாத்து என்கிட்ட ஒப்படைக்கனும்மா" என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்... மரகதம் ஆறுதல் மொழிகள் கூறி அனுப்பி வைத்தாள்...

காரில் ஏறியமர்ந்த சத்யன் கையை நீட்டி மகனை கேட்க ... மரகதம் குழந்தையை சத்யனின் மடியில் கிடத்தினாள்... குழந்தையின் முகத்தை மென்மையாக விரலால் வருடியவன் நிமிர்ந்த போது அவன் கண்களில் கண்ணீர் ... " மான்சியவும் .குழந்தையும் பத்திரமா பார்த்துக்க தம்மு" என்று சத்யன் கூற மான்சி அவன் கைகளைப் பற்றி .. " எல்லாரையும் நான் பத்திரமா பார்த்துக்கிறேன்... நீங்க நல்லபடியா போய்ட்டு வாங்க " என்றவள் தனது முந்தானையால் அவன் கண்ணீரைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தாள்...

சத்யன் எந்த பிரச்சனையுமின்றி லண்டன் போய் சேர்ந்ததாக தகவல் வந்த பிறகுதான் பரசு ஊருக்கு கிளம்பினான்....

சத்யன் மான்சியிடம் பேசுவதற்கென தங்களது அறையில் ஒரு கம்பியூட்டரை ஏற்பாடு செய்துவிட்டு போயிருந்ததால்... லண்டன் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதுமே மான்சியிடம் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு பேசினான்... 

அதே நிலை தொடர்ந்து நீடித்தது.. சத்யன் அருகில் இல்லை என்ற குறையே தெரியாதளவுக்கு நேரம் கிடைக்கிம் போதெல்லாம் வீடியோ மற்றும் வாய்ஸ் சாட்டில் தொடர்பு கொண்டான்... குழந்தையைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டார்கள் .. குழந்தையின் சிறுசிறு அசைவுகளை கூட சத்யனிடம் உடனே சொன்னாள் மான்சி ... சிலநேரம் வீடியோ எடுத்து சத்யனுக்கு அனுப்பி வைப்பாள்...

சத்யன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறாவது நாள் பல பரிசோதனைகளுக்குப் பிறகு .... முதல் ஆப்ரேஷன் ஆரம்பிக்கப்பட்டது .. சிறிய அறுவைதான் என்பதால் மறுநாளே மான்சியிடம் பேசினான் சத்யன் ...

குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்னு சத்யன் கூறியபோது .. அவன் வந்தபிறகு தான் பெயர் சூட்டு விழா நடத்துவது என்று பெரியவரும் மான்சியும் பிடிவாதமாக மறுத்துவிட்டனர்... சத்யன் வந்தபிறகு தான் குழந்தைக்கு விழா செய்வது என்று முடிவெடுத்தனர்

ஆனாலும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற சத்யன் மான்சியின் தேடல் நடந்தபடியே இருந்தது ... இருவருக்கும் ஒரு மனதாக பிடித்தப் பெயர் சுமேதன்... சுமேதன் என்ற பெயர் புத்தரின் மற்றொரு பெயர் என்பதால் அந்த பெயரையே தேர்வு செய்தனர் தங்களின் மகனுக்கு.....

நாட்கள் சக்கரம் கட்டிக்கொண்டு ஓட... சத்யனுக்கு போதிய இடைவெளி விட்டு அடுத்தடுத்து நான்கு சிறிய ஆப்ரேஷன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு தண்டுவடத்தில் செய்யப்போகும் ஆப்பரேஷனுக்கான நாள் குறிக்கப் பட்டது ..
.
தேதியும் நேரமும் நிர்ணயிக்கப்பட்ட அடுத்த நொடியில் இருந்து அனைவரையும் ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது
...
ஆன்லைன் அத்தனை கதையையும் பேசும் சத்யனும் மான்சியும் கூட வார்த்தைகளை மௌனத்தால் அளந்தார்கள்...

ஏதாவது பேசி மான்சியின் வேதனைப்படுத்தி விடுவொமோ என்ற பயம் சத்யனுக்கு ... என்னசொன்னாலும் அவனிடம் மாற்றம் வரப்போவதில்லை என்ற ஆதங்கம் மான்சிக்கு “ இருவரும் சிறிதுநேரம் குழந்தையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்..




உனக்காக ஒரு கவிதை..


அன்பே என்று ஆரம்பித்தேன்..

அடுத்தது புரியவில்லை..


ஆருயிரே என்று தொடங்கினேன்..

அதேயிடத்தில் நிறுத்தினேன்..


நீலவானில் நிலவு..

நீந்தும் போது தொடங்கி..


சூரியன் கடலில் குளித்து

எழும் வரை முடியவில்லை...


என் அறையெங்கும் கொட்டிக்கிடக்கிறது.

காகிதக் குப்பை..


எதுவும் விளங்கவில்லை..

ஒன்றும் புரியவில்லை..


இறுதியாக எழுதிவிட்டேன் கவிதையை..

உன் பெயர் மட்டும்!

அன்று சத்யனின் மெயிலுக்கு அறிமுகமில்லாத ஐடியில் இருந்து சில படங்கள் வந்திருந்தன... தலைப்பில் ‘உன் மனைவி மான்சியும்... தோட்டக்காரன் வரதனும்’ என்றிருக்க... அதன் கீழே ‘ பார்த்து ரசி சத்யா,, நான் நல்லா ரசிச்சு என்ஜாய் பண்ணேன்... அதான் உனக்கும் அனுப்பிருக்கேன்’.. என்று இருந்தது...

சத்யன் குழப்பத்துடன் அந்த புகைப்படங்களை டவுன்லோட் செய்தான்... ஒவ்வொன்றாக லாப்டாப் திரையில் விரிய... சத்யன் ரத்தம் சூடானது... முதல் படத்தில் வரதன் மான்சியின் கையைப் பற்றி இழுப்பதுபோல் இருந்தது... அடுத்தப் படத்தில் இருவரும் தோள்கள் உரச நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்... அதற்கடுத்து ஒரு மரத்தடியில் இருவரும் நெருக்கமாக அமர்ந்திருந்தனர்.. மற்றொன்றில் மான்சி வரதனின் காலடியில் விழுந்திருந்தாள்.. இப்படி விதவிதமான படங்கள் விதவிதமான போஸில் எடுக்கப்பட்டிருந்தது...

சத்யன் தன் மடியிலிருந்த தலையணையை வீசியெறிய.. ராஜாவும் ராஜியும் திகைப்புடன் அவன் அருகில் ஓடி வந்தனர்... ராஜா அவசரமாக லாப்டாப் திரையைப் பார்க்க.. அதில் மரத்தடியில் மான்சியும் வரதனும் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்... ராஜா அதிர்ச்சியுடன் “ என்ன சத்யா இதெல்லாம்? யார் அனுப்பியது?” என்று கேட்க...

“ தெரியலை டாடி... எவனோ என்கிட்ட விளையாடுறான் ” என்றான் பற்களை கடித்தபடி..

ராஜியும் புகைப்படங்களைப் பார்த்தாள்... திகைப்புடன் “ யாராயிருக்கும் சத்யா... நம்ம மான்சி அதுமாதிரி பொண்ணு கிடையாதே?” என்றாள் கவலையுடன்..

“ இல்லம்மா இப்போ தனித்தனியா இருக்குற இரண்டு போட்டோஸை கிராபிக்ஸ் மூலமா என்னவேனும்னாலும் செய்யலாம்.. அதுமட்டுமில்ல இதுல இருக்குறது உண்மையாவே இருந்தாலும் கூட மான்சி நல்லவிதமாக பழகியதை யாராவது தவறாக பயண்படுத்த நினைச்சிருக்கலாம்....” என்று சத்யன் கூறியதும்..

“ ஆமாம் ராஜி... இப்பல்லாம் இதுபோன்ற போட்டோஸ் வச்சு ப்ளாக்மெயில் பண்றவங்க ஏராளமா இருக்காங்க... அவங்களால ஒரு குடும்பம் சிதையுதேனு நெனைக்காம விளையாட்டுத் தனமா செய்றவங்களும் இருக்காங்க...” என்றவர் “ ஆனா இது யாராயிருக்கும் சத்யா”?” என்று மகனிடமே கேட்டார்

சற்றுநேரம் புருவம் சுருக்கி யோசித்த சத்யன் “ ஏன் இது வரதன் வேலையா கூட இருக்கலாம்.... மான்சியோட அன்பை தவறாக பயண்படுத்தி இந்த வேலையை அவனே செய்திருக்கலாம்... ஒன்னு பணம் ஒரு குறிக்கோளா இருக்கனும்... இல்ல இதை வச்சு மான்சியை பிளாக்மெயில் செய்ய பயண்படுத்தியிருக்கனும்... எதுன்னு உறுதியா சொல்லமுடியலை” என்று குழப்பமாக பேசினான்...

இவர்கள் மூவருக்குமே வேலைக்காரர்கள் பற்றிய புரிந்துணர்வு அதிகம் இல்லாததால் வரதன் இதை செய்திருப்பானா என்று யோசிக்க முடியவில்லை.... வரதனோ அல்லது வேறு யாராவதோ என்று குழப்பத்துடன் யோசித்தபடி இருந்தனர்.. ஆனால் வந்த மெயிலில் பணம் பற்றி எதுவும் இல்லாததால் இது மான்சியின் கற்பை குறிவைத்து நடக்கும் மறைமுக தாக்குதல் என்று ஓரளவுக்கு புரிந்தது..

“ சத்யா நான் சொல்ற மாதிரி செய்யலாம்... இப்போ நாம இங்க இருக்கும் சூழ்நிலையில பெரிதா எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது... அதுவுமில்லாம இது யாருன்னு தெரியாம எதையும் செய்யவும் முடியாது.. வெளிய விஷயம் பரவினா அது மான்சிக்குத்தான் அவமானம்.... அதனால இப்போதைக்கு வரதனை வேலையை விட்டு அனுப்பிட சொல்லலாம்... நாம அங்கே போனதும் ரகசியமா யாருன்னு கண்டுபிடிச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.. அதுவரைக்கும் எதுவும் வெளியே தெரியவேனாம்” என்றார்....

சத்யன் ராஜிக்கும் கூட அதுதான் சரியென்று தோன்றியது.... ராஜா உடனே பெரியவருக்கு கால் செய்து மொத்த விபரங்களையும் கூறி விட்டு... “ அப்பா யாருக்கும் தெரியவேண்டாம்.. மான்சிக்கு கூட தெரியவேண்டாம்... ஒரு வாரத்து நோட்டீஸ் குடுத்து வரதனை வேலையை விட்டு அனுப்பிடுங்க... மத்ததெல்லாம் நாங்க வந்தப் பிறகு பார்த்துக்குறோம்” என்று சொல்ல... எல்லாவற்றையும் கேட்ட பெரியவருக்கு பயங்கர அதிர்ச்சிதான்... ஆனால் ராஜா சொல்வதுபோல் தான் செய்யவேண்டும் என்று எண்ணி சரியென்றார்....

சத்யனுக்கு அந்த முகம் தெரியத நபர் மீது ஆத்திரமாக வந்தது... அதுவும் மான்சியைப் போய் இப்படி நினைக்க எப்படி மனசு வந்தது? துரோகியைக்கூட மன்னிக்கும் மனம் படைத்தவளை இவ்வளவு கீழ்த்தரமாக சித்தரித்த அவன் மட்டும் என் கையில மாட்டுனான்’’ என்று பற்களை கடித்தான்... ஆனால் இன்னும் இரண்டு நாளில் அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது என்பதால் மனதை அடக்கிக்கொண்டு மனைவியின் முகத்தை மனதில் வைத்து அமைதி காத்தான்...

இங்கே பெரியவரின் நிலைமையோ ரொம்ப சிரமமானது... வரதனை துரோகியாக ஒருநாளும் நினைக்கமுடியவில்லை அவரால்... அவரது சந்தேகமெல்லாம் தண்டபாணியின் குடும்பத்து மேல்தான் விழுந்தது.. ஆனால் அதற்கான சாயலே இன்றி அவர்கள் அவரவர் வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்... அதிலும் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்த தண்டபாணியிடம் நிறைய மாற்றங்கள்... ஒருவேளை நடிக்கிறார்களா என்றுகூட கண்டுகொள்ள முடியவில்லை....

எதுவானாலும் இப்போதைக்கு ராஜா சொன்னதுதான் சரி என்ற முடிவில் சபாபதியை அழைத்து வரதனை கூட்டிவரும்படி கூறினார்...

சற்றுநேரத்தில் பெரியவர் முன்பு மரியாதையுடன் வரதன் நின்றிருந்தான்... அவனுடைய அமைதியான முகத்தைப் பார்த்து சொல்ல வந்ததை சொல்லமுடியவில்லை... சற்றுநேரம் அமைதியாக இருந்தவர் ஒரு முடிவுடன் நிமிர்ந்து “ வரதா உன்னை வேலையிலருந்து நீக்கியாச்சு.... ஒரு வாரத்து நோட்டீஸ் குடுத்திருக்கேன்.. அதுக்குள்ள வேற ஒரு நல்ல வேலையை தேடிக்கவேண்டியது உன்னோட பொறுப்பு.... உனக்கு சேரவேண்டிய தொகையை சபாபதி கொடுத்துடுவார்” என்று கூறிவிட்டு தனது கண்ணாடியை கழட்டி துடைக்கும் சாக்கில் தலையை குனிந்து கொண்டார்...

வரதனுக்கு ஒன்றுமே புரியவில்லை... ‘ எதுக்காக என்னை டிஸ்மிஸ் பண்றாங்க?’ என்ற குழப்பத்துடன் பெரியவரைப் பார்த்து “ பெரியய்யா,, எதனாலங்க இப்படி? வேலையில நான் ஏதாவது தவறு செய்துட்டேனா?” என்றவனின் குரலில் கண்ணீர்... அவன் இங்கே வேலைக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.. படிப்பு முடிந்ததும் வேலைக்கு வந்தான்... இப்போது திடீரென்று போகச்சொன்னால் எங்கே போவது? அதுவும் மான்சி தங்கச்சியைவிட்டு நான் எப்படி இருப்பேன்? கலவரம் கண்களில் தெரிய “ ஐயா அமைதியா இருக்கீங்களே? நான் என்னங்க தப்பு செய்தேன்?” என்றவன் குரலில் கண்ணீர்..

பெரியவரால் அவனது துக்கத்தைப் பார்க்கமுடியவில்லை... சபாபதியின் பக்கம் திரும்பி “சபா கொஞ்சம் வெளியே இரு” என்றார்.... “ சரிங்கய்யா” சபாபதி உடனே வெளியேறினார்

வரதனின் பக்கம் திரும்பியவர் சற்றுநேரம் அவன் முகத்தைப் பார்த்துவிட்டு ராஜா தனக்கு போன் செய்து கூறிய தகவல்களை ஒன்றுவிடாமல் கூறினார்... அதனால்தான் இந்த பணிநீக்கம் என்று தெளிவாக கூறியதும் வரதன் அதிர்ச்சியில் உறைந்துபோனான்...
அய்யோ தங்கச்சியைப் போய் எந்த சண்டாளன் இப்படி அசிங்கப்படுத்தினான்?.. மனதின் ஆத்திரம் கண்களில் நீராய் கசிய “ அந்த மெயில் பார்த்து நீங்களும் என்னை சந்தேகப்படுறீங்களா அய்யா?” என்று கேட்க..

பெரியவர் எதுவுமே பேசாமல் இருக்கவும் சட்டென்று அவர் காலில் விழுந்த வரதன் “ அய்யா சின்னம்மா என் தங்கச்சிங்க... அவங்களை போய் இப்படி பண்ணதும் இல்லாம அதை கேட்டு நீங்களும் என்னை சந்தேகப்படுறீங்களே....” என்று வேதனையுடன் கதறியவன் தோள்களைப் பற்றி தூக்கிய பெரியவர்

“ எனக்கு மட்டுமில்ல இந்த வீட்டுல வேற யாருமே மான்சியை சந்தேகப்படமாட்டாங்க... ஆனா பணத்துக்காக யாராவது இதைப் செய்திருந்தா அவங்களால மான்சிக்கு ஏதாவது ஆபத்து வரலாம்ற பயத்தால தான் உன்னை இங்கருந்து அனுப்புறோம்... மத்தபடி உன்னையும் மான்சியையும் சந்தேகப்பட்டு இல்லை... நீ கொஞ்சநாளைக்கு வெளியே எங்கயாவது வேலை தேடிக்கொள் வரதா... ராஜாவும் சத்யனும் வந்ததும் இதைப்பத்தி பேசி அதுக்கப்புறம் உனக்கு போன் பண்றேன்... இப்போ அவங்க ரெண்டுபேரும் இங்கே இல்லாத சூழ்நிலையில் என்னால வேற எதுவும் முடிவு செய்யமுடியாது” என்று தனது முடிவை தெளிவாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட...

வரதனுக்கு அவர் சொல்வது தெளிவாக புரிந்தாலும்... மனம்தான் ஏற்க மறுத்தது... கண்ணீர் தேங்கிய விழிகளுடன் சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்து விட்டு பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான்....

தோட்டத்துக்கு வந்தவனுக்கு அந்த செடிகளையும் பூக்களையும் பார்க்க பார்க்க துக்கம் பீரிட கண்ணீர்தான் வந்தது... ‘ இன்னும் ஒரு வாரத்துல இவைகளை எல்லாம் நான் பிரியனுமா?’ நினைக்க நினைக்க அழுகைதான் வந்தது... தனக்கு பிடித்த மனோரஞ்சிதம் மரத்தின் அடியில் பலமணிநேரம் அமர்ந்திருந்தான்...

யார் இதை செய்திருப்பார்கள்?... சகோதர உறவை கொச்சைப்படுத்திய அந்த குள்ளநரி யார்? அதுவும் சின்னய்யாவுக்கே அனுப்பிருக்காங்களே? தங்கச்சிக்கு தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடுபடும்? இதே கேள்விகள் அவன் மனதை வண்டாய் குடைந்தது...

அன்று மாலை குழந்தைக்கு வெண்ணீர் எடுத்துவர சமையலறைக்கு வந்தாள் மான்சி... அப்போதுதான் சமையல்காரம்மா வள்ளி வரதனை வேலையை விட்டு நீக்கிய விஷயத்தை மான்சியிடம் சொல்ல .. மான்சி அதிர்ந்து போனாள்....

உடனடியாக அவள் கால்கள் தோட்டத்துக்கு தான் விரைந்தது... அதே மரத்தடியில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த வரதனின் எதிரில் மண்டியிட்டு அமர்ந்தவள் “ என்னாச்சு அண்ணா?” என்றதும் வரதன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.... 

கலங்கியிருந்த அவன் கண்களைப் பார்த்ததும் மான்சி கலவரத்துடன் “ அய்யோ என்னண்ணா இது? எவ்வளவு நேரமா அழுதீங்க? எதுக்காக அண்ணா வேலையை விட்டு நிறுத்தினாங்க?” என்று அடுத்தடுத்து கேள்வி கேட்டாள்..

வரதன் எதுவுமே கூறாமல் அமர்ந்திருக்க... மான்சிக்கும் அழுகை வந்தது “ சொல்லுண்ணா? ஏன் நிறுத்தினாங்க?” என்று அழுதபடி கேட்டதும் வரதன் பதறிப் போனான்..

“ அய்யோ குழந்தைப் பிறந்த உடம்போட அழக்கூடாதுன்னு சொல்வாங்களே... அழாதம்மா” என்றவன் “ எதுக்கு நிறுத்தினாங்கன்னு தெரியலைம்மா... பெரியவர் கூப்பிட்டாருன்னு போனேன் .. ஒரு வாரத்து நோட்டீஸோட வேலையை விட்டு நிறுத்தறதா சொன்னாரு,, நானும் சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான் வரதன்..

மான்சி கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக எழுந்தாள் “ நான் போய் தாத்தா கிட்ட கேட்கிறேன்.. ஏன் உங்களை வேலையை விட்டு நிறுத்தினாங்கன்னு நான் கேட்கிறேன்” என்று ஆவேசமாக கிளம்பினாள்

வரதன் திகைப்புடன் அவள் போவதையேப் பார்த்து விட்டு, திடுக்கென்று நிலைமை நெற்றிப் பொட்டில் அடிக்க.. சுதாரித்துக்கொண்டு உடனடியாக எழுந்து ஓடி மான்சியை மறித்து நின்று “ வேணாம்மா எதையும் கேட்காத... பெரியவர் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார்... அவருக்கு தெரியாதது இல்லை... நீ போய் கேட்க வேணாம்மா” என்றவன் சட்டென்று மான்சியின் கையை எடுத்து தன் தலையில் வைத்து “ என்மேல சத்தியம் தங்கச்சி.. இது சம்மந்தம்மா யார்கிட்டயும் எதையும் கேட்ககூடாது” என்று உறுதியாக சொன்னான்..

“ என்ன அண்ணா இப்படி சொல்லிட்ட?” என்றவள் “ சரிண்ணா யார்ட்டயும் எதுவும் கேட்கமாட்டேன் அண்ணா” என்றதும்தான் வரதன் கையை எடுத்தான்.. “ சரிம்மா நீ ரூமுக்குப் போய் குழந்தையை கவனி... எதுவானாலும் பார்த்துக்கலாம்” என்று அவளை அவசரமாக அனுப்பி வைத்தவனின் கண்கள் பக்கவாட்டில் இருந்த அறையின் திறந்திருந்த ஜன்னலை கவனித்தது...

எப்போதும் மூடியே கிடக்கும் ஜன்னல் சமீப காலமாக திறந்து கிடப்பது இப்போது தான் நினைவுக்கு வந்தது... ஒருவேளை? என்று யோசித்தவன் அடுத்து சிந்திப்பதற்கு முன்பு கவனமின்றி மெதுவாக அந்த அறையை கடந்து போவது போல் போனான்..

அவன் கணக்கு தப்பவில்லை திறந்திருந்த ஜன்னலருகே அனுரேகா அமர்ந்திருந்தாள்.. அவள் கையில் செல்போன் இருந்ததையும் கவனித்தபடி அந்த அறையை கடந்தான் வரதன்....

வரதனுக்கு நடந்தவைகள் நொடியில் புரிந்தது... அவனால் மான்சிக்கு அவமானம்... தன்னை வைத்து மான்சியை பழிவாங்கி விட்டது தண்டபாணியின் குடும்பம்... இதில் அனு மட்டும் தான் ஈடு பட்டாளா? அல்லது அவளின் அப்பா அம்மாவும் உடந்தையா? நெஞ்செல்லாம் நெருப்பு பிடித்தது போல் எரிந்தது... அவ்வளவு நேரமாக காரணம் யாரென்று தெரியாமல் கண்ணீர் விட்டவனுக்கு சூத்திரதாரி யாரென்று தெரிந்ததும் கண்ணீர் வரவில்லை கடுமையான ஆத்திரமே வந்தது 

ஒரு கற்புக்கரசியைப் போய் பழி சொன்ன இவளை என்ன செய்யலாம்? என்ன செய்வது? என்ன செய்யமுடியும்? என்னால் முடியும்.... அவளுக்கு பாடம் கற்பிக்காம இங்கிருந்து போகக்கூடாது... உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்தவளை... ஒரு பொண்ணுக்கு பொண்ணா இரக்கம்மில்லாம துரோகம் பண்ணவளுக்கு சரியான பாடம் சொல்லித் தந்துட்டு தான் போகனும்... வரதனின் நெஞ்சில் உறுதியுடன் நிமிர்ந்தது..

அன்று மதிய உணவு சாப்பிடாமல் அழுதுகொண்டிருந்த வரதன்... இப்போது இரவு உணவை கலக்கமோ கலவரமோ இன்றி அமைதியாக சாப்பிட்டு விட்டு வந்தான்...

ஏன் வேலையை விட்டு விலக்கினார்கள் என்ற கேள்விக்கு விரக்தியான சிறு புன்னகையையே பதிலாக தந்துவிட்டு தோட்டத்தில் கொஞ்சநேரம் உலாவினான்.. அவன் புருவமத்தியில் சிந்தனை முடிச்சுகள்... சற்றுநேரம் கழித்து தோட்டத்தில் இருந்த தனது அறைக்கு வந்தான்..... படுக்கையை விரித்து அமைதியாக கண்மூடி படுத்தான்...

மூடிய விழிகளுக்குள் மான்சியின் புன்னகை சிந்தும் முகம் வந்தது ... இப்படியொரு பொண்ணுக்கு அநியாயம் பண்ணிட்டாளே? ..... அதை நினைத்த மாத்திரத்தில் வரதன் மொத்த ரத்தமும் முகத்துக்கு பாய.. முகம் கறுத்து கொடூரமானது..

சட்டென்று எழுந்து அமர்ந்தான்... ஆத்திரத்தில் உடல் விரைக்க எழுந்து தோட்டத்துக்கு வந்தான்... அனுவின் அறை ஜன்னல் கதவு மூடியிருந்தது... உள்ளே பேச்சுக் குரல் கேட்டது ...அருகில் நின்று காதை கூர்மையாக்கினான்...

" அனும்மா எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டயா?" என்றது கோமதியின் குரல்..



" இன்னும் இல்லம்மா... கொஞ்சம் வேலையிருக்கு... நீ போ நான் அனுப்பிட்டு தான் தூங்குவேன்" என்றது அனுவின் குரல்..
.
" நிறைய அனுப்பி வை அனு ... ஆனா அவன் பார்க்க முடியுமான்னு தெரியலை... இன்னும் நாலு மணிநேரத்துல அவனுக்கு ஆப்ரேஷன் தொடங்கப் போறதா அந்த கிழம் சொல்லுச்சு ... அதுக்குள்ள அவன் பார்க்கனும்... நம்ம பொண்டாடியா இப்புடினு மனசு நொந்து அதுலயே பிரஷர் ஏறி ஆப்ரேஷன் பண்ணும் போதே அவன் சாகனும்.. இல்ல கோமாவுக்குப் போகனும்... அதை கேட்டு இவ இங்க துடிச்சி சாகனும் ... நீ இப்போ அனுப்புற போட்டாலதான் நாம நெனைச்சது எல்லாமே நடக்கும் பாறேன்" என்று கோமதியின் வன்மம் நிறைந்த குரல் வரதனின் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தியது...




No comments:

Post a Comment