Saturday, January 2, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 1

மஞ்சளைப் பிசைந்து அதில் ரோஜாக்களை அரைத்து ஊற்றிய இளஞ்சிவப்பு சூரியன் தனது செந்நிற கிரணங்களால் இரவெல்லாம் நிலவுடன் உறவாடிய தன் பூமியைக் காதலியை ஆவேசமாக ஆத்திரமாக தழுவியபடி புலர்ந்தான்....

பறவைகளின் முனங்கல்கள் சோம்பலாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டுக்கொண்டிருக்க..... தோட்டத்து மலர்கள் அனைத்தும் சூரியனின் உக்கிரத்தை தணிவிக்க தங்களையே உதிர்த்து பூமியை குளிர்விக்கும் அழகான காலைப்பொழுது....

மதுரைலிருந்து திருமங்கலம் செல்லும் புறநகர் பகுதி.... தோட்டத்துடன் கூடிய வீட்டை பெரியதாக கட்டிக்கொண்டு வாழப் பிரியப்படும் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியா..... பிரமாண்டத்தை தனது தோற்றத்திலும்.... ஆடம்பரத்தை தனது அலங்காரத்திலும் காட்டிக்கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த பங்களாவில் வசிப்பவர்கள் நிச்சயமாக சொர்க்கத்தை ஒருமுறையாவது பார்த்துவிட்டு வந்து இந்த பங்களாவை உருவாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது....



ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் நடுவே சூரியனுக்கு நிகராக ஜொலிக்க முயன்றது அந்த பங்களா.... நடுவில் வீடும்.... சுற்றிலும் தோட்டமும் கொண்ட அழகிய பணக்குடில் ... வீட்டின் முன்புறம் செயற்கையாக ஒரு நீரூற்று... வீட்டின் பின்புறம் பிரமாண்டமான நீச்சல் குளம்...

தோட்டம் முழுவதும் விதவிதமான மலர் செடிகள்... அழகாக செதுக்கப்பட்ட புல்வெளிகள்...வீட்டின் ஒவ்வொரு படுக்கையறையிலிருந்தும் தோட்டத்துக்கு வர பால்கனி வசதி.... ஆங்காங்கே போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலிகளும் டீபாய்களும்.... ஆடுவதற்கு ஆளில்லை என்றாலும் தோட்டத்தின் நடுவே ஒரு சிறு மண்டபம் அதன் நடுவே பெரிய மர ஊஞ்சல்... சற்றுத்தள்ளி இரண்டு மரங்களுக்கு நடுவே ஹோமக் எனப்படும் வலை ஊஞ்சல்... தோட்டத்தில் ஆங்காங்கே ஸ்டீல் விளக்கு கம்பங்கள் நடப்பட்டு அதில் தொங்கும் நியான் விளக்குளை இரவில் பார்க்க வேண்டும்.. சொர்க்கபுரி இதுதானோ என்று எண்ணவைக்கும்...

தோட்டத்தின் கடைசியாக ஒன்பதடி உயர காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி வரிசையாக சிமிண்ட் சீட் போடப்பட்டு வேலைக்காரர்களுக்கென்று கட்டப்பட்ட சிறிய வீடுகள்... அந்த வீடுகளில் வசிக்கும் வேலைக்காரர்கள் வீட்டினர் எழும்முன் எழுந்து.. உறங்கியபின் உறங்கச்செல்லவது தான் பழக்கம் என்றாலும்... மரகதம் எல்லாரையும் விட சற்று முன்னாதாகவே எழுந்துவிடுவாள்... மரகதம் அந்த வீட்டில் வேலைக்கு வந்து மூன்று தலைமுறை பார்த்துவிட்டாள்... அங்கிருக்கும் பல வேலைக்காரர்களில் இவளும் ஒருத்தி என்றாலும் அந்த வீட்டினர் அனைவரும் மதிக்கக்கூடிய நபர் மரகதம்...

மரகதத்தின் கணவர் சாமிக்கண்ணு அதே வீட்டில் வேலைசெய்வதால் இருவரும் நீண்ட காலமாக அங்கேயே வசிக்கிறார்கள்... அந்த வீட்டின் மூத்த தலைமுறை சொக்கலிங்கம் தாத்தாவுக்கு எடுபிடியாக இருக்கிறார் சாமிக்கண்ணு.... அவர் இல்லையென்றால் தாத்தாவுக்கு பைத்தியமே படித்துவிட்டும்.....

அந்த வீட்டில் பூஜையறை பெரியதாகவும் அழகாகவும் இருக்கும்.. அதில் விக்ரகங்கள் ஏராளமாக இருந்தாலும் அவைகளை வணங்கி வழிபட அங்கே யாருக்கும் நேரமில்லை... அல்லது விருப்பமில்லை.... கிரானைட் தொழிலில் கொட்டும் பணத்தை கணக்குப் பார்த்து எண்ணி வைக்கவே அவர்களுக்கு நேரமில்லை.. பிறகு எங்கிருந்து தெய்வத்தை வணங்க நேரமிருக்கும்... அதனால்தான் அவர்கள் சார்பாக சாமி கும்பிட ஒரு வேலைக்காரியை நியமித்து விட்டார்கள்... மரகதத்துக்கு தினமும் பூக்கள் பறித்து பூஜையறையை சுத்தம் செய்து பூஜை செய்வது மட்டும் தான் வேலை....

குளித்து முடித்து வந்து வீட்டின் தோட்டத்துப் பூக்களை கூடையில் பறித்துப் போட்டுக்கொண்ட மரகதம்... வீட்டுக்குள் சென்று அமர்ந்து பூக்கைத் தொடுத்து பூஜையறையில் முதல்நாள் இரவே சுத்தம் செய்து வைத்த விக்ரகங்களுக்கு மாலையாக போட்டுவிட்டு பூஜையை ஆரம்பித்தாள்... வழக்கம் போல அவளது பிரார்த்தனை அந்த குடும்பத்தில் எல்லோரும் நல்லாருக்கனும் என்பதுதான் ... ஆனாலும் இறுதியாக மனமுருகி ஒரு வேண்டுதல் பெரியவர் உடல்நிலை சீராக இருந்து இன்னும் நிறைய காலம் உயிரோடு இருக்கவேண்டும் என்ற ஸ்பெஷல் பிரார்த்தனையும் உண்டு... 

பெரியவருக்கு மட்டும் ஏனிந்த ஸ்பெஷல் பிரார்த்தனை? அவர் இருப்பதால் மட்டுமே அந்த வீடு கொஞ்சமாவது சீராக உள்ளது... இல்லையென்றால் இந்த பங்களாவே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார் என்றாகிவிடும்....

சொக்கலிங்கத்தின் ஒரே மகன் ராஜலிங்கம்... அப்பா நடத்திய கல்குவாரி தொழிலை கிரானைட் பிஸினஸாக மாற்றி பணத்திலேயே புரள்பவர்... இவர் மனைவி ராஜேஸ்வரி இவளும் ஒரு பணக்கார ஊதாரிக் குடும்பத்தில் பிறந்து இன்னொரு பணக்காரன் ராஜலிங்கத்தின் மனைவியாக மாறியவள்..

ராஜாவுக்கு மனைவி ராஜியின் அழகில் அன்றிலிருந்தே அலாதியான மயக்கம்... தொழிலிலும் மனைவிக்கு சம உரிமையை கொடுத்து தன் அருகிலேயே மனைவியை வைத்துக்கொண்டவர்... அதன் பலன் ராஜியின் அண்ணன் தண்டபாணி தன் மனைவி மகளுடன் வந்து இவர்களுடன் ஒட்டிக்கொண்டார்.... கிட்டத்தட்ட முதலீடு இல்லாத மற்றொரு முதலாளி தண்டபானி....தங்கையின் வீட்டிலேயே இருக்கிறோமே என்ற லஜ்ஜையின்றி கூச்சப்படாமல் காலாட்டியபடி தின்பவர்... வெகு சீக்கிரத்திலேயே இந்த குடும்பத்தில் சம்மந்தியாகப் போகும் கர்வம் வேறு உள்ளது

அடுத்து இந்த வீட்டின் இளைய வாரிசு... அடுத்ததாக இன்னொரு பிள்ளைப் பெற்றால் அழகும் இளமையும் போய்விடும் என்று ராஜி எடுத்த முடிவால் ஒரேயொரு வாரிசாகிப் போனவன் இவன் சத்யன்.....

சத்யன் ராஜலிங்கம்.... குடும்பத்தின் ஒரேயொரு செல்ல வாரிசு... தாத்தா அப்பாவின் சாயல் சிறிதுமின்றி குணத்திலும் அழகிலும் தாயைக்கொண்டு பிறந்தவன்... வயசு இருபத்திநான்கு... படிப்பு எம் பி ஏ.... ஆனால் தொழிலை கவனிக்க ஆர்வமில்லை... நண்பர்களுடன் ஊர் சுற்றவேண்டும்... அப்பா அம்மா சம்பாதிக்கும் பணத்தை நன்றாக செலவு செய்யவேண்டும்... செலவளிக்கவே பிறந்தவன் இவன்...

வெண்மையான நிறத்தில் நெடுநெடுவென்ற உயரத்தில் கழுத்தைத் தாண்டி முதுகுவரை வளர்த்த நீளமான கேசத்தை ஒருநாள் பேன்ட் போட்டு குதிரைவால் போல் கட்டிக்கொள்வான்.. மறுநாள் விரித்து விட்டு பறக்கவிடுவான்... ஒருபக்க காதில் ஒருநாள் பிளாட்டினம் வளையம் இருக்கும் மறுநாள் ஒற்றை வைரக்கல் பதித்த சிறு தோடு இருக்கும்.... இரண்டுபக்க கிருதாவையும் இணைக்கும் மெல்லிய கோடாக இருக்கும் தாடி ஒருவாரம் என்றால்... மறுவாரம் பிரஞ்ச் பேக்... ஒருசில நாட்கள் நாடியின் பள்ளத்தில் நாலே முடிகளை விட்டுவைப்பான்.... சிலநாட்கள் ஒன்றுமேயில்லாமல் மழுங்க சேவ் செய்து மொழுமொழுவென்று இருப்பான்... எல்லாமே ஸ்டைல் இவனுக்கு ....

அவன் அறையில் இருந்தான் என்றால் எப்போதுமே அலறிக்கொண்டிருக்கும் மியூசிக் சிஸ்டம் அவன் இல்லாத நாட்களில் அக்கடான்னு கிடக்கும்... அவன் அறையோடு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையை ஒப்பிட்டால் அது சோபையிழந்துவிடும்... அவன் அறையை பராமரிக்க என்று தனியாக ஒரு வேலைக்காரன்... சத்யன் காலால் இடும் வேலையை தலையால் செய்வான் வேலு... நடு இரவில் போதை போதவில்லை என்று சொன்னால் அந்த இரவில் தேடிப்பிடித்து சத்யனுக்கு போதை ஏற்றுவான்... அந்த போதை மதுவோ மங்கையோ எதுவானாலும் வேலுவால் முடியும்.... இரவு அழைத்துவந்து அதிகாலை பால்கனி வழியாக அனுப்பப்படும் பெண்களிடம் ஏராளமான கமிஷன் கிடைக்கும் வேலுவுக்கு...

சத்யன் கெட்டது அப்பா அம்மாவால் பாதியென்றால் மீதி வேலுவால் தான்... அவனை துரத்த சொக்கலிங்கம் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை... முதல்நாள் இரவு துரத்தப்பட்டான் என்றால் மறுநாள் காலை பெரிய சிபாரிசுடன் வந்துவிடுவான்... அந்த சிபாரிசு வேறு யாருமல்ல ராஜேஸ்வரி தான்... சொக்கலிங்கம் தனது மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவேனும் மருமகளிடம் எதிர்வாதம் செய்வதில்லை...

இப்போதெல்லாம் எல்லாமே தன் கையை மீறிப் போய்விட்டது என்று தனது அறைக்குள்ளேயே முடங்கிப்போனார் சொக்கலிங்கம்... மகனும் மருமகளும் பார்ட்டிகளுக்கும் வெளியூர்களுக்கு உல்லாசப்பயணம் போகும்போதும் மட்டும் கம்பெனிக்கு சென்று கணக்கு வழக்குகளை கவனிப்பார்... இல்லையென்றால் தண்டபாணி விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவானோ என்ற பயம் தான் காரணம்... 




ராஜேஸ்வரி எந்தவகை என்று நிர்ணயிக்க முடியாத பெண்மணி... கணவனை தன் கைப்பாவையாக வைத்துக்கொண்டு இருக்கும் இவளுக்கு கனவுகள் எல்லாமே தனது இளமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான்... ஆமாம் இவளுக்கு வயது நாற்பத்திநான்கு என்று சொன்னால் நம்புவதற்கு இயலாது... நாற்பதுகளின் தொடக்கம் என்று நிர்ணயிக்கலாம்... பார்ட்டிகளில் தொற்றிக்கொண்டு மது பழக்கம் இப்போது வீட்டிலும் தங்களின் அறையில் ஒரு மினி பார் வைத்து குடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது..

ராஜலிங்கமும் சேர்ந்துகொள்வார் மனைவியுடன்.... தொழில் துறையில் லிங்கம் ஒரு சிங்கம் என்று பெயர் வாங்கினாலும் .. பர்ஸனல் விஷயங்களில் சொந்தமாக முடிவெடுக்க தெரியாமல் அவர் மனைவிக்கு தலையசைத்தே பழக்கப்பட்டவர் ..

தனது மகன் பணக்கார இளைஞர்களின் அடையாளம் என்று எண்ணி பெருமைகொள்ளும் பெற்றோர் இவர்கள்.... சத்யனுக்கு வெளியே சரக்கு கிடைக்கவில்லை என்றால் அப்பா அம்மாவின் அறைக்கு வந்து மது பாட்டில்களை எடுத்துச்செல்லும் அளவிற்கு மிகவும் மிகவும் ஒத்துமையான குடும்பம்....

சத்யனுக்கு தனது தாய்மாமன் தண்டபாணியின் மகள் அனுரேகாவிடம் காதல் இருக்கோ இல்லையோ? கவர்ச்சி ஏராளமாக இருக்கிறது.... இவன் தொடுமுன் அவளே வந்து விழுந்து இவனை தொட அனுமதிப்பாள்... ஆனாலும் சத்யனுக்கு தானாக விழும் அவளைத் தொடுவதை விட பணம் கொடுத்து வரவழைக்கும் பெண்களே மேல் என்று எண்ணி சும்மாவேனும் தொடத் தடவி முத்தமிட்ட அவளை உச்சத்தில் நிறுத்தி பிறகு பட்டென்று உதறிவிட்டு செல்வதில் அலாதி விருப்பம்.... அனுரேகாவின் அழகு ஒருநாளும் தன்னை அடிமைப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பான்... இதிலும் கூட தாயைப்போல.....

சத்யன் அனுரேகா இவர்களின் திருமணம் எப்போதோ நிச்சயிக்கப்பட்டு சத்யனின் தலையசைப்புக்காக காத்திருக்கிறது.... சத்யன் இன்னும் கொஞ்சநாள் ஆகட்டுமே என்று அடிக்கடி கூறி தண்டபாணியின் குடும்பத்தின் வயிற்றில் ஆசிட்டை வார்த்துக் கொண்டிருந்தான்.... அவன் பால் வார்க்க மாட்டானா என்று காத்திருந்தனர் தண்டபாணி அன்கோ....

இப்படிப்பட்ட இந்த குடும்பத்தின் நலனுக்காக வேண்டுவதுதான் மரகதத்தின் வேலை....

பாவம் வயதாகி விட்டபடியால் அவளாலும் இப்போதெல்லாம் அவ்வளவு பெரிய பூஜையறையை சுத்தம் செய்து பூஜை செய்ய முடியவில்லை... கூடிய சீக்கிரமே வேறு ஒரு ஆளை நியமிக்க சொல்லி பெரியவரிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியபடி பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தாள்

பூஜையறையில் இருந்து வெளியெ வந்தவளுக்கு பெரும் அதிசயமாக சத்யன் மாடிப்படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தான் அந்த அதிகாலையில்... ஆமாம் சத்யனுக்கு ஒன்பது மணி அதிகாலை என்றால் காலை ஆறுமணி நடுநிசி...

அவ்வளவு காலையில் கையில் ஒரு லெதர் பேக்குடன் இறங்கியவன்.... “ ஓய் தம்மூ சாமி கும்பிட்டயா?... இன்னைக்கு என்ன வேண்டின தம்மூ?” என்ற சத்யனுக்கு மரகதம் தான் தம்மூ... மரகதம் என்ற பெயரை சுருக்கி தினமும் அவளை தம்மடித்தான்....

கையிலிருந்த பூஜை தட்டோடு அவனை நெருங்கிய மரகதம் “ நான் வேறென்ன வேண்டப்போறேன்... என் சின்னராசாவுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகனும் .... அவர் வயித்து புள்ளைய பார்த்துட்டு நான் பரலோகம் போகனும்... இதைத்தவிர வேறென்ன வேண்டுதல் செய்யப்போறேன்” என்று மரகதம் வார்த்தைகள் மூலம் தனது விசுவாசத்தை காட்ட....

உடனே மலர்ந்த புன்னகையுடன் “ அப்போ நீ சாக ரொம்ப நாள் ஆகும் தம்மூ... எனக்கு ஏத்தவ இங்கே எவளும் இல்லை.... இந்த அனுவை கல்யாணம் பண்றதுக்கு பதிலா... ஒரு நீக்ரோ பொண்ணை கட்டலாம்... இவளுக்கு எதாவது எடுப்பா இருக்கா?” என்று சத்யன் எதை குறிப்பிடுகிறான் என்று பாவம் அந்த வயசான கிழவிக்கு புரியாமல்....


“ ஏன் சின்னராசா மூக்கும் முழியுமா அழகாத்தான இருக்கு?” என்றவள் தட்டிலிருந்த விபூதியை எடுத்து சத்யனின் நெத்தியில் இட...

“ அய்ய என்ன இது அசிங்கமா” என்றபடி உடனே நெற்றியை துடைத்துக்கொண்டான் சத்யன்...

தட்டிலிருந்த விபூதியை அள்ளி மரகதம் நெற்றியில் பட்டையாக அடித்துவிட்டு “ நீ கூட இன்னும் அழகாத்தான் இருக்க... நமக்குள்ள இருக்குற நாற்பது வயசு வித்தியாசத்தை பார்க்காம உன்னையே கட்டிக்கலாம்னு பார்த்தா உன் புருஷன் அந்த சாமிக்கண்ணு என்னை வெட்ட வருவானோன்னு பயமாருக்கு தம்மூ” என்றபடி குறும்பு பேசிய சத்யனை பார்த்து கூச்சத்துடன் நெளிந்த மரகதம்....

“ போங்க சின்னராசா... எப்பபார்த்தாலும் இதே குறும்பு” என்று அவள் வெட்கப்பட அந்த அறுபத்தைந்து வயது சுமங்கலிக்கு அந்த வெட்கம் அழகாக இருந்தது...

சத்யனும் அதை ரசித்து “ பாருடா என் மரகதத்துக்கு வெட்கத்தை?....” என்றவன் “ சரி எனக்கு நேரமாச்சு தம்மூ.... மம்மி டாடி எழுந்ததும் நான் ப்ரண்ட்ஸ் கூட சென்னைக்கு போறாதா சொல்லிடு.... வர ஒருவாரம் ஆகுமாம்னு சொல்லிடு...” என்றவன் மரகதத்தை நெருங்கி அவள் மஞ்சள் பூசிய கன்னத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு “ என் செல்லம்ல நீ... தயவுசெஞ்சு தாத்தா கிட்ட நான் ஒரு எக்ஸாம் எழுத சென்னைக்குப் போறதா சொல்லு தம்மு” என்று மரகதத்துக்கு பொய் சொல்ல கற்றுகொடுத்தான்

சத்யனுக்காக மரகதம் பொய் சொல்வாள் தான்.... சத்யனை தனது பேரனாகவே நினைப்பவள்.... சத்யனின் கன்னத்தை தனது விரல்களால் வருடி.... “ ராசுக்கண்ணு அப்புடி இப்புடின்னு சுத்தாதீக ராசா.... நீங்க எதுக்கு போறீகன்னு தெரியும்.... காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிகிட்டா இப்புடி வெளிய தேடி போகவேண்டியிருக்காதே கண்ணு” என்று கலங்கிய கண்களும் கவலை தோய்ந்த குரலுமாக மரகதம் கூற....

“ அய்ய கெழவி ஒருவேளை ருசியா சாப்பிட எவனாவது ஒரு ஹோட்டலையே விலைக்கு வாங்குவானா? ஹோட்டல் ஹோட்டலா தேடிப்போய் விதவிதமா சாப்பிட்டாத்தான் பலதரப்பட்ட டேஸ்ட் தெரியும்” என்றவன்.... தான் சொன்னதின் அர்த்தம் புரியாமல் விழிக்கும் மரகதத்தின் சுருங்கிப்போன கன்னத்தை பற்றிக்கொண்டு “ தம்மூ இதைப்பத்தி பேசக்கூடாதுன்னு உனக்கு நிறைய வாட்டி சொல்லிட்டேன்... வேற யாராவதுன்னா ரெண்டு போட்டு வெளிய அனுப்பிடுவேன்... ஆனா உன்மேல எனக்கு கோபமே வரமாட்டேங்குதே தம்மூ.... சரி நான் கிளம்புறேன்.. நான் சொன்னமாதிரியே எல்லார்ட்டயும் சொல்லிடு ” என்றவன் தனது பேக்கை எடுத்துக்கொண்டு கார் சாவிகள் இருக்கும் இடம் சென்று டொயோட்டா பார்ச்சூனர் காரின் சாவியை எடுத்துக்கொண்டு “ புது வண்டியை எடுத்துட்டு போறேன்னு சொல்லு தம்மூ” என்று கூறிவிட்டு கிளம்பினான்...

அவனது கார் திருப்பரங்குன்றத்தை தாண்டும்போதே தனது ஐபோனை எடுத்து நண்பன் பிருத்விக்கு கால் செய்தான் “ டேய் மச்சான் நான் கிளம்பிட்டேன்... இன்னும் ஒருமணிநேரத்துல உத்தங்குடில இருப்பேன்... நீ மத்தவனுங்களுக்கு கால் பண்ணி அங்க வந்துட சொல்லுடா... அப்புறம் மறக்கமா கவின்கிட்ட நைட் வாங்கி குடுத்தது எல்லாத்தையும் எடுத்துகிட்டு வரச்சொல்லுடா” என்று சத்யன் சொல்ல... எதிர்முனையில் இருந்த பிருத்வி “ நீ வா மச்சி எல்லாம் ரெடியா இருக்கு” என்றான்...

சத்யன் உத்தங்குடி கோர்ட்டை தாண்டியபோது அவன் நண்பர்கள் நால்வரும் ஒரு இனோவாவின் மீது சாய்ந்து நின்றிருந்தனர்... சத்யன் கார் அதற்கு முன்னால் போய் நின்றது.... அவர்கள் நால்வரும் கையில் அட்டைப்பெட்டிகளுடன் சத்யனின் காரை நெருங்க.. சத்யன் ரிமோட் மூலமாக கார் கதவை திறந்துகொண்டு இறங்கினான்... டிரைவர் சீட்டில் பிருத்விராஜ் ஏறியமர்ந்தான்... கவின்ராஜுவும் குருபிரசாத்தும் சென்டர் சீட்டில் அமர... சத்யன் பின் சீட்டின் கதவை திறந்து ஏறிக்கொண்டான். அவனுடன் மார்ட்டினும் ஏறிக்கொள்ள கார் உடனே கிளம்பியது.... 


கார் மேலூரை தாண்டியதும் பின் சீட்டில் ஏற்றப்பட்ட அட்டைப் பெட்டிகளில் ஒன்று பிரிக்கப்பட்டது..... உள்ளேயிருந்து ரெட்லேபிள் ஒரு புல் பாட்டில் எடுத்த சத்யன் சீட்டில் வைத்துவிட்டு ஜந்து யூஸந்த்ரோ டம்ளர்கள் மிக்ஸ் செய்ய நிம்பூஸ் பாட்டில்களையும் தயாராக எடுத்து வைத்துவிட்டு “ டேய் மச்சான் கொஞ்சம் ஸ்லோவா போடா” என்று கூறினான்...

காரின் வேகம் குறை பாட்டிலை ஓபன் செய்து டம்ளர்களில் அளவாக ஊற்றப்பட்டு நிம்பூஸ் குளிர்பானம் கலந்தான் சத்யன்...

இரண்டு டம்ளரை எடுத்து முன் இருக்கையில் இருந்த கவினுக்கும் குருவுக்கும் கொடுத்துவிட்டு “ எல்லாரும் தான்டா குடிக்கிரானுங்க... ஆனா சரக்கோட நிம்பூஸை கலந்து குடிக்கிறதை கண்டுபிடிச்ச பாரு.... நீ ரொம்ப கிரேட் மச்சான்” என்ற மார்ட்டின் தனக்கும் ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டான்...

தன்னுடைய க்ளாஸில் இரண்டாவது ரவுண்டு ஊற்றிய சத்யன் “ டேய்... யாரோ சொன்னாங்க சரக்குல நிம்பூஸ் கலந்து எவ்வளவு அடிச்சாலும் போதை ஏறாது.. ஆனா மிதப்பா இருக்கும்னு... அதான் ஒருநாள் ட்ரைப் பண்ணேன்.. செமையா இருந்துச்சு.. அதை உங்ககிட்ட சொன்னா ஒரேடியா கண்டுபிடிப்புன்னு சொல்றீங்க.. பொத்திக்கிட்டு குடிங்கடா” என்று அதட்டிவிட்டு ஒரே மடக்கில் குடித்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு க்ளாஸில் ஊற்றினான்... அந்த யாரோ தனது அப்பாவும் அம்மாவும் தான் என்று சத்யன் சொல்லவில்லை.. ஒருநாள் அவர்கள் நிம்பூஸ் கலந்து குடிப்பதை பார்த்துதான் இவனே கற்றுக்கொண்டான்.....

கார் ஓட்டிய ப்ருத்வி மூன்றாவது ரவுண்டுக்கு க்ளாஸை நீட்ட .... அவனை முறைத்த சத்யன் “ அடேய் பருப்பு உனக்கு விழுப்புரம் வரை இந்த ரெண்டு ரவுண்டு தான்... அங்க போய் நான் ட்ரைவ் பண்றேன்.. நீ உக்காந்து புல்லா ஏத்திக்க.. அதுவரைக்கும் அடங்குடா” என்றதும் ஏமாற்றத்துடன் டம்ளரை கசக்கி எறிந்தான் ப்ருத்வி....

ஜந்து ரவுண்டு போனதும் மெல்ல போதை ஏற “ ஏன்டா எத்தனைப் பொண்ணுக அங்க வருவாளுகடா? எல்லாம் செம பிகரா இருப்பாளுக.. நம்மளை கூப்பிடிவாளுகளா?” என்று மார்ட்டின் கேட்க...

முன் சீட்டில் இருந்த குரு திரும்பி “ டேய் ஆமாம்டா மாப்ள... எனக்கும் அதே கவலைதான்... எல்லாம் திமிருக்கு வர்றவளுக... காசுக்கு வர்றவளுகளா இருந்தா நம்ம இஷ்டத்துக்கு ஒருத்தியை செலக்ட் பண்ணலாம்... ஆனா இவளுக எல்லாம் பெரிய பெரிய கம்பெனில வேலை செஞ்சு லட்சக்கணக்கில் சம்பாரிக்கிறவளுங்க.... அவளுங்க பார்த்துதான் நம்மளை செலக்ட் பண்ணுவாளுகலாம்... ஆனாலும் நம்ம சத்யன் மச்சானை எவ பார்த்தாலும் கொத்திக்கிட்டுப் போயிடுவாளுக... நாம நாலுபேரும் தான் ஒழுகவிட்டுகிட்டு வேடிக்கைப் பார்க்க வந்துருக்கோம்” என்று போதையான குரலில் சலிப்போடு கூறினான்...

“ இதுக்குத்தான் நான் மொதல்லயே சொன்னேன் ... நம்ம ஊர்லயே ரெண்டு பிகரை தள்ளிக்கிட்டு கொடைக்கானல் போய் குளுகுளுன்னு போட்டு என்ஜாய் பண்ணிட்டு வரலாம்னு... எவனாவது கேட்டாதான... தம்மாத்தூண்டு ***** பாக்க மதுரையிலேருந்து லட்சக்கணக்கில் செலவு பண்ணி சென்னை போகனுமாடா” இது கவின்....

சத்யன் எதுவுமே பேசவில்லை அமைதியாக ஏழாவது ரவுண்டு போனான்....

இன்று இரவு சென்னை நீலாங்கரையில் இருக்கும் பங்களா ஒன்றில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளதான் இவர்கள் செல்கிறார்கள்... அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி என்னவென்றால்..... சென்னையில் பெரிய கம்பெனிகளில் வேலை செய்து பல ஆயிரங்களும் சில லட்சங்களும் சம்பாதிக்கும் கட்டுப்பாடுகள் அற்ற ஒருசில இளைஞர்களும் இளைஞிகளும் கூடும் ஒரு நிகழ்ச்சி... சனி ஞாயிறு என்று இரண்டு நாள் அங்கே தங்கவேண்டும்... இதில் கலந்துகொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பணம் ஒரு பொருட்டேயல்ல.... அவர்களுக்குத் தேவை உடல் சுகம் மட்டுமே...ஒரே ஆணை இரண்டு பெண்கள் தேர்ந்தெடுப்பது... இரண்டு ஆண்களை ஒரு பெண் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் அங்கே சர்வசாதரணமாக நடைபெறும்.... சென்னையில் வசிக்கும் ஒரு நண்பன் கூறியதை வைத்து... ஆர்வம் மேலிட அவனிடமே ஏற்பாடு செய்யச்சொல்லி தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு போகிறான் சத்யன்...


“ விடுங்கடா சத்யன் ஏற்பாடுதான் சரி.... பணத்துக்கு வர்றகிட்ட போய் போய் அழுத்துப் போச்சு... இதுவும் எப்படித்தான் இருக்குன்னு பார்த்துடலாம்” இது பிருத்விராஜ்...

அதன்பின் போதை ஏற ஏற வார்த்தைகள் உளறல்களாக மாற.... வார்த்தைகள் அத்தனையும் அகராதியிலேயே இல்லாத அளவுக்கு கொச்சையாக வந்து விழுந்தது....

கார் சென்னையை நோக்கி சீறிக்கொண்டு போனது... திருச்சியை கடக்கும் போது காரை ஓரங்கட்டி போதையில் மிதந்த நண்பர்களை காருக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு சத்யனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பிரபலமான அசைவ ஹோட்டல் சென்று பிரியாணி வாங்கி வந்தான்....

கார் சமயபுரம் கடந்ததும் சர்வீஸ் ரோட்டில் ஓரங்கட்டி பிரியாணி பார்சல்களை பிரித்து அனைவரும் உண்டுவிட்டு மீண்டும் கிளம்பினார்கள்... போதையோடு அப்படியே சீட்டில் சரிந்து நால்வரும் உறங்க ஆரம்பிக்க.... கார் பெரம்பலூர் கடந்தது... கண்விழித்த சத்யன் “ மச்சான் வயிறு முட்டுதுடா.. எங்கயாவது ஓரங்கட்டு” என்று கூற... ப்ருத்வி காரை ஓரங்கட்டினான்....

கார் நின்றதும் மற்றவர்களும் விழித்துக்கொள்ள... இறங்கிச் சென்று சுமையை இறக்கிவிட்டு மீண்டும் வந்து சீட்டில் சரிந்தனர்... ப்ருத்வி காரை எடுக்க... மற்றவர்கள் மறுபடியும் உறங்க ஆரம்பித்தனர்...

கார் தொழுதூரை நெருங்கியது... சத்யனுக்கு மட்டும் மீண்டும் உறக்கம் வரவில்லை... எல்லோரையும் விட அதிகமாக குடித்திருந்தாலும் அளவான போதையில் இருந்தான்... பிருத்வியிடம் இவர்கள் செல்லும் பார்ட்டிப் பற்றி சென்னை நண்பன் கூறியதைப் பற்றி பேசிக்கொண்டே வந்தான்... பெண்களின் உடல் பாகங்களில் அச்சம் அருவருப்பின்றி இருவரும் அலசி ஆராய்ந்தனர்...

ப்ருத்வியிடம் பேசியதில் சத்யனுக்கு சென்னை எப்போது வரும் இரவு எப்போது வரும் என்று இப்போதே உடல் முறுக்க ஆரம்பித்தது “ பேசாம கூடவே நம்ம ரீனாவை கூட்டி வந்திருக்கலாம்டா மாப்ள.. நல்ல கம்பெனியா இருந்திருக்கும்... வழியில எவளாவது மாட்டுறாளான்னு பாருடா மச்சான்... அப்படியே மெட்ராஸ் வரைக்கும் தள்ளிகிட்டு போயிடலாம் ” என்று சத்யன் கூற.....

அவனைத் திரும்பி பார்த்த ப்ருத்வி “ கொஞ்சம் அடங்குடா மாப்ள... வாலிகண்டபுரத்துல இறங்கிப்போனவன் எய்ட்ஸ் வாங்காம திரும்பி வந்ததா சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை... இன்னும் நாலு மணிநேரம் தான் மாப்ள அடக்கி வைடா ” என்றான்....

காரின் டாஷ்போர்டில் காண்டம் பாக்கெட்டுகள் இருக்கின்றன தான்... இருந்தாலும் நண்பனின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தான்...

கார் வேப்பூரை நெருங்கியதும் “ மச்சான் வேப்பூர் சர்வீஸ் ரோட்டுக்கு மாறுடா... கொஞ்ச தூரம் போன இளநீர் கடை இருக்கும் வாங்கி குடிச்சிட்டுப் போகலாம்” என்றான் சத்யன்



“ சரி மாப்ள” என்றவன் காரை சர்வீஸ் ரோட்டுக்கு திருப்பி இளநீர் கடையைத் தேடியபடி மெதுவாக ஓட்டினான்....

சற்று தொலைவில் இருந்தது இளநீர் கடை.... ஒரு தென்னந்தோப்பின் முகப்பில் தென்னங்கீற்றைப் பந்தலில் ஒருபுறம் மலையென குவிந்துகிடக்கும் மட்டைகளும் மறுபுறம் கொத்துக் கொத்தாக அடுக்கி வைக்கப்பட்ட இளநீர் குலைகளும்...

கார் நின்றதும் சத்யன் கதவைத்திறந்து இறங்கினான்... ப்ருத்வியும் இறங்கினான் “ என்ன மச்சான் உனக்கும் இளநி வேனுமா?” என்று சத்யன் கேட்க

“ எனக்கு வேனாம்டா.. நீபோய் குடிச்சிட்டு வா” என்றான் ப்ருத்வி.... அவனுக்கு சரக்கின் மேலேயே கண்... எல்லோரும் ஏழெட்டு ரவுண்டுகள் எடுத்துக்கொள்ள... இவனுக்கு மட்டும் இரண்டு ரவுண்டு தானா? என்று புகைந்தது... இன்னும் சற்று நேரத்தில் விழுப்புரம் வந்துவிடும்.. அப்புறம்தான் சத்யன் காரை ஓட்டப்போகிறானே என்ற தைரியத்தில் சத்யன் ரோட்டை கடந்து இளநீர் கடைக்கு போகும் வரை காத்திருந்து பிறகு காரின் பின் சீட்டில் ஏறினான் ப்ருத்விராஜ் ....... 



No comments:

Post a Comment